Search the Community
Showing results for tags 'ஐநா சிறப்பு தூதர்'.
-
தினுசாக உருட்டும் நித்தியானந்தா சிஷ்யை..! ஐநா சபையில் வெளுத்து வாங்கிய இந்த அழகி யார்? நித்தியானாந்தா கைலாசா நாட்டின் பிரதிநிதிகளாக ஐநா நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான விஜயபிரியா பற்றி தெரியுமா? வாங்க பார்க்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை விவாதக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதை பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான (CESCR) குழு தான் ஒருங்கிணைத்தது. அப்போது நித்யானந்தாவின் கைலாசா எனும் நாட்டின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அதில் ஒருவர் தான் விஜயபிரியா. பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட பிறகு இந்தியாவை விட்டு வெளியேறிய நித்யானந்தாவால் நிறுவப்பட்ட புதிய நாடு தான் கைலாசம். ஆன்மீகம் எனும் பிம்பத்தில் சிறுவர், சிறுமிகள், நடிகைகளை சீடர்களாக ஆக்கி கொண்டு பாலியல் வல்லுறவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தேடப்படும் குற்றவாளிதான் நித்தியானந்தா. ஆனால் இந்த ஐநா சபை கூட்டத்தில் பேசிய விஜயபிரியா, 'இந்து மதத்தின் தலைசிறந்த தேசபக்தருக்கு' பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். அதாவது நித்யானந்தவிற்கு தான் அவர் பாதுகாப்பு கோருகிறார் அதுமட்டுமா சொன்னார் விஜயபிரியா? "இந்து மதத்தின் உயர்மதத் தலைவரான நித்யானந்தா, இந்து மதத்தின் பூர்வீக மரபுகள், வாழ்க்கை முறைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் கடுமையான அச்சுறுத்தல், மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளார். அவர் கற்பிக்க தடை விதிக்கப்பட்டு, பிறந்த நாட்டிலிருந்து ( இந்தியா ) நாடு கடத்தப்பட்டார்"என அதிரடியாக அக்கூட்டத்தில் விஜயபிரியா புகார்களை அடுக்கினார். சரி.. யார் இந்த விஜயப்ரியா ..? அவரது முகநூல் கணக்கில் அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. ஆனால் தன் பக்கம் முழுக்க நித்யானந்தாவின் புகைப்படத்தை நிரப்பிவைத்துள்ளார். 'என் அன்புக்குரிய நித்யானந்தா பரமசிவத்திற்கு' என அவரைக் குறித்து உருகி கவிதை கூட எழுதியுள்ளார். நித்யானந்தாவை சிவன், விநாயகர் ஆகிய அவதாரங்களாக சித்தரித்து பேஸ்புக்கில் பகிர்ந்து நித்யானந்தாவை கொண்டாடிவருகிறார். நித்யானந்தா மீது கொண்ட ஈர்ப்பினால் என்னவோ.. அவர் சாமியாராக மாலையோடு குலுங்கி சிரிக்க, இவர் பளிச்சென ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் அணிந்து மெல்லிய புன்னகையுடன் செல்ஃபி எடுத்து 'ஐ லவ் ஸ்வாமிஜி' என்று கூறியிருக்கிறார். ஒருபக்கம் தன்னை கைலாசத்தில் வசிப்பவராக காட்டிக் கொள்ளும் விஜயப்ரியா, ரூத்ராட்சம், சேலை என மினுமினுப்பாக இருக்கிறார். மற்றொரு பக்கம், வாஷிங்டனில் வெஸ்டர்ன் ஆடைகளில் இருக்கும் புகைப்படங்களையும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். லிங்கிடின் அக்கவுண்டில் அவரை பற்றி தேடினால் சில தகவல்கள் கிடைத்தன. லிங்க்டின் (LinkedIn) தகவலின்படி, விஜயப்ரியா 2014ஆம் ஆண்டு கனடாவின் மனிடோபா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலில் இளங்கலை அறிவியல் முடித்திருக்கிறார். இவருக்கு ஆங்கிலம், பிரஞ்சு, கிரியோல், பிட்ஜின்களில் புலமை உள்ளது. 2022ஆம் ஆண்டு நித்தியானந்தா விஜயபிரியாவை கைலாசாவின் ஐநாவுக்கான தூதராக நியமித்து சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.asianetnews.com/gallery/life-style/who-is-vijayapriya-nithyananda-kailasa-rqucma#image7