Jump to content

Search the Community

Showing results for tags 'கலாநிதி ஜெஹான் பெரேரா'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 10 results

  1. நம்பிக்கை வைப்பதற்கான ஒரு நேரம்; காப்பாற்றுவதற்கு ஒரு உறுதிமொழி! December 9, 2024 — கலாநிதி ஜெகான்பெரேரா — செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலையும் நவம்பர் பாராளுமன்ற தேர்தலையும் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அண்மைய அரசியல் நிலைமாறுதல் “பாகுபாடு காட்டுகின்ற போக்கின் விளைவாக தோன்றிய ஆழமான பிரச்சினைகளை” கையாளுவதற்கு ஒரு திருப்புமுனை வாய்ப்பை தருகிறது. பத்தாவது பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க இலங்கையில் இனவாதத்தையும் மதத் தீவிரவாதத்தையும் தடுப்பதில் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அழுத்திக் கூறினார். இனவாத அரசியலும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுப்பதற்கு தனது அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிய அவர் அச்சமும் சந்தேகமும் இல்லாத ஜனநாயக அரசொன்றை நிறுவப்போவதாக சூளுரைத்தார். சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி சட்டத்திற்கு மேலானவர் என்று எந்தவொரு தனிநபருமோ அல்லது அரசியல்வாதியுமோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் குறிப்பிட்டார். சர்ச்சைக்குரிய குற்றச்செயல்களை விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதுடன் சட்டமுறைமை மீதான நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பப்போவதாக அவர் தனதுரையில் உறுதியளித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பகிரங்க முகம் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்க எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டார். அரசாங்கத்தின் முதன்மையான தொடர்பாடல்காரராக அவர் விளங்குகிறார். மக்கள் மத்தியிலான தனது ஆரம்ப வாழ்வையோ அல்லது கொள்கைகளையோ அவர் மறந்து விடவில்லை. அவரது உடைநடையில் அதை தெளிவாகக் காணமுடியும். இனவாதமும் இனவெறுப்பும் நாட்டில் மீண்டும் வேர்விடுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்ற ஜனாதிபதியின் சூளுரை அவர் வளர்ந்துவந்த பண்புமுறைமைக்கு இன்னொரு சான்றாகும். சிங்கள பௌத்த இராச்சியங்களின் மையப் பிராந்தியமாக ஒரு காலத்தில் விளங்கிய வடமத்திய மாகாணத்தின் விவசாய வலயங்களில் ஜனாதிபதியின் தோற்றுவாயும் வறுமையுடனான அவரது தனிப்பட்ட போராட்டமும் இலங்கையின் முன்னைய அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக நலன்புரி திட்டங்களின் உதவியுடன் அந்த போராட்டத்தை வெற்றிகொண்ட விதமும் இலங்கையின் வெற்றிக் கதையின் முழுநிறைவான ஒரு எடுத்துக்காட்டாக அவரை விளங்க வைத்திருக்கிறது. பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையின் இன்னொரு தலைவர், ” வெறுப்பை வெறுப்பினால் ஒழிக்கமுடியாது. அன்பினாலேயே ஒழிக்கமுடியும்” என்று பௌத்த போதனையை மேற்கோள் காட்டினார். அந்த வார்த்தைகளை கொழும்பில் உள்ள தற்போதைய ஜப்பானிய தூதுவர் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அண்மையில் நிகழ்த்திய வரவேற்புரையில் நினைவுபடுத்தினார். இரண்டாவது உலக மகாயுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பிறகு இழப்பீட்டைச் செலுத்தவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதில் இருந்து ஜப்பானைப் பாதுகாக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவும் இதே வார்த்தைகளைப் பேசினார். இந்த வார்த்தைகள் உலகில் எந்தளவுக்கு நடைமுறையில் பின்பற்றப்படுகிறது என்பதே முக்கியமான கேள்வி. ஜனாதிபதி ஜெயவர்தன உலகிற்கு தான் பேசிய அந்த வார்த்தைகளை தனது சொந்த நாட்டில் நடைமுறையில் கடைப்பிடிக்கத் தவறியது துரதிர்ஷ்ட வசமானதாகும். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. )வும் விடுதலை புலிகளும் முன்னெடுத்த கிளர்ச்சிகளில் எளிதில் கையாளமுடியாத எதிரிகளுக்கு முகங்கொடுத்தபோது ஜெயவர்தன மூர்க்கத்தனமான அரச வன்முறையை கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டார். இறந்தவர்களை நினைவுகூருதல் : =========== ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தான் பேசுகின்ற பண்புகளின் பிரகாரம் இதுவரையில் வாழ்ந்தும் நடந்தும் வருகின்றார் என்று தோன்றுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்று இரு மாதங்களே கடந்திருக்கும் நிலையில், நிச்சயமாக எதையும் கூறுவது தற்போதைய தருணத்தில் பொருத்தமில்லாததாக இருக்கக்கூடும். ஆனால், அவரது சொல்லிலும் செயலிலும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் காண்பிக்கின்ற அக்கறையிலும் நேர்மையின் அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன. சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னைய அரசாங்கம் இணங்கிக்கொண்ட நடைமுறைச் சாத்தியமான பொருளாதாரக் கொள்கைகளை தேசிய மக்கள் சக்தியின் மையக்கட்சியான ஜே.வி.பி. ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அதை வழிநடத்திய முறையில் இதை காணக்கூடியதாக இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் விளைவாக மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்ற போதிலும், தற்போதைய தருணத்தில் நடைமுறைச் சாத்தியமான மாற்றுவழி எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்கள் தாங்கள் அதிகாரத்துக்கு வந்திருந்தாலும் கூட வேறு விதமாகச் செயற்படுவதற்கான வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் சிலவேளை தங்களுக்கு தேவையானதை அவர்கள் எடுத்திருக்கக்கூடும். அதனால் தான் அவர்களை மக்கள் நிராகரித்தார்கள். போரில் உயிர்துறந்தவர்களின் உறவினர்கள் மாவீரர்கள் தினம் என்று அறியப்பட்ட தினத்தில் நினைவேந்தலைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் அரசாங்கத்தின் அணுகுமுறை ஜனாதிபதியும் அவரது நிருவாகமும் தங்களது பண்புகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை காண்பிக்கும் இன்னொரு சந்தர்ப்பமாகும். மாண்டுபோன தங்கள் பிள்ளைகளுக்கு நினைவேந்தல் செய்ய விரும்புகிறவர்கள் ஒரு சுமூகமான, அமைதியான முறையில் நினைவு கூருவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இது உண்மையில் இழப்பீட்டுக்கான அலுவலகச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அந்த சட்டத்தின் 27 வது பிரிவு தனிநபர்களும் குழுக்களும் நினைவேந்தலைச் செய்ய அனுமதிக்கிறது. கொழும்பில் உள்ளவர்களுக்கு மாத்திரமல்ல கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு நல்வாழ்வு வேண்டும் என்பதற்காக சமூகத்தை மாற்றுவதற்கு போராடிய தங்கள் தியாகிகளை ஜே.வி.பி. யினர் நீண்டகாலமாக நினைவுகூர்ந்து வருகிறார்கள். தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் உயர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. போரில் உயிரிழந்த தங்களது இரு மகன்களை நினைவு கூருவதற்கு யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கும் ( முன்பு மயானமாக இருந்த) இடத்துக்குச் சென்ற ரி. செல்லத்துரை என்பவரும் அவரது மனைவியும் இப்போது இராணுவ முகாம் ஒன்றில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இராணுவ முகாமுக்கு எதிரே இருக்கும் தனியாருக்கு சொந்தமான சிறிய துண்டு நிலத்தில் அடையாளபூர்வமான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “எமது மகன்களை நினைவு கூருவதற்கு நாம் விரும்புகிறோம். அதற்காக அவர்களுக்கு விருப்பமான உணவுடன் பிரார்த்தனை செய்வதற்காக வந்தோம் ” என்று அந்த தம்பதியர் கூறினார்கள். உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம், ஆனால் அவர்கள் சார்ந்திருந்த இயக்கத்தை நினைவுகூர முடியாது என்பதே இந்த சந்தர்ப்பத்தில் அரசாஙகத்தின் நிலைப்பாடாக இருக்கிறது. யாழ்ப்பாணம் இணுவிலில் 29 வயது இளைஞன் ஒருவன் இந்த வாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக இன்னொரு செய்தி கூறியது. மாவீரர்தின நிகழ்வுகளின்போது சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்து கொண்டமை தொடர்பாகவே அந்த இளைஞன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜே.வி.பி.யின் முன்னைய தலைவர்களின் படங்களை மறைக்காமல் விடுவதைப் போன்று எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர்களின் படங்களையும் பொலிசார் மறைக்காமல் இருக்கக்கூடும். விடுதலை புலிகளை நினைவுகூருவதற்கு அனுமதித்ததாக அரசாங்கத்தை எதிரணி அரசியல்வாதிகள் கடுமையாக கண்டனம் செய்கிறார்கள். இனத்துவ தேசியவாத சக்திக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்படக்கூடிய சாத்தியங்களை குறைத்து மதிப்பிட முடியாது. வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்பட்டது ஒன்றும் புதியது அல்ல. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை வகித்த முன்னைய அரசாங்கங்களினால் இதே போன்ற அனுமதி வழங்கப்பட்டது. இனவாதமற்ற இலங்கை ஒன்றை உருவாக்குவதற்கான அந்த அணுகுமுறை பாராட்டப்பட வேண்டியதேயாகும். முன்னாள் ஜனாதிபதி இலங்கைச் சமுதாயப் போட்டித் தேசியவாதங்களினால் கிரமமாக திணறடிக்கப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், அந்த சமுதாயத்தின் பல்லின — பன்முகத்தன்மையை நீண்டகாலமாக பிரதிநிதித்துவம் செய்து வந்திருக்கிறார். இந்த சிந்தனைக்கு நெருக்கமானதாகவே பாரம்பரியமாக ஜே.வி.பி. இருந்து வந்திருக்கிறது. இதன் காரணத்தினாலேயே இன்றைய நேர்மறையான மாற்றத்துக்கான பெருமை பெருமளவுக்கு ஜனாதிபதி திசாநாயக்கவை சேருகிறது. முஸ்லிம் புறக்கணிப்பு: ============== ஆட்சிமுறையில் இனவாதமற்ற போக்கு கடைப்பிடிக்கப்படும் என்று அளித்த உறுதிமொழிக்கு இணங்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் முதலாவது அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரைச் சேர்த்துக்கொள்ளாமல் விட்ட தவறை சீர்செய்வதற்கு இடையறாது முயற்சியை மேற்கொண்டு வருகிறது. முதற்தடவையாக அரசாங்கத்தின் அதியுயர் மட்டத்தில் தீர்மானங்களை எடுக்கும் செயன்முறைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதை முஸ்லிம் சமுதாயம் காண்கிறது. முஸ்லிம் ஒருவரை பிரதி சபாநாயகராகவும் இன்னொரு முஸ்லிமை பிரதியமைச்சராகவும் நியமித்ததன் மூலம் நிலைவரத்தை சீர்செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்திருக்கின்ற போதிலும் கூட, புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வேதனை உணர்வு முஸ்லிம் சமுதாயத்தை விசேடமாக அரசாங்கத்துக்கு வாக்களித்த கணிசமான எண்ணிக்கையான முஸ்லிம்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆனால், கடந்த காலத்தில் பல முஸ்லிம் அமைச்சர்களைக் கொண்டிருந்த அரசாங்கங்கள் அதிகாரத்தில் இருந்த வேளைகளில் கூட, முஸ்லிம் சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதிகளை தடுக்க முடியவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு தேசியவாத குழுக்களின் பிரதான இலக்காக முஸ்லிம் சமுதாயம் இருந்து வந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரமான கலவரங்களில் அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு நிர்மூலம் செய்யப்பட்டதுடன் சிலர் கொல்லப்பட்ட அதேவேளை அந்த அட்டூழியங்களைச் செய்தவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவையில் பல முஸ்லிம்கள் இருந்தும் அந்த அக்கிரமங்களை தடுக்க முடியவில்லை. கடன்பொறி ஒன்றில் நாடு சிக்கிக் கொள்ளவதற்கு வெகு முன்னதாக, ஊழல் தலைவிரித்தாடும் நாடாக இலங்கை மாறுவதற்கு முன்னதாகவும் கூட, நாட்டின் ஐக்கிய உணர்வைச் சிதைத்த இனப்பிளவு ஒன்று இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற கையோடு இந்திய வம்சாவளி தமிழர்களின் (மலையக தமிழர்கள்) குடியுரிமையும் அதன் வழியாக வாக்குரிமையும் பறிக்கப்பட்டு அவர்கள் அரசியல் சமுதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்கள். அதை தொடர்ந்து தனிச்சிங்களக் கொள்கையின் மூலமாக சகல தமிழ்பேசும் மக்களினதும் சமத்துவமான மொழியுரிமைகள் மறுக்கப்பட்டன. அதுவே இலங்கையின் குடிமக்களில் பெருமளவானவர்கள் நாட்டை விட்டு வெளியேற வழிவகுத்தது. அந்த நேரத்தில் மிகவும் படித்த சமூகத்தவர்களாக விளங்கிய பறங்கியர் சமூகம் வெளிநாடுகளுக்கு சென்றது. இன்று நாட்டின் நாலாபுறங்களிலும் உள்ள மக்களும் மத்திய பகுதியில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்துக்காக, ஐக்கியத்துக்காக, ஒரு புதிய தொடக்கத்துக்காக வாக்களித்திருக்கிறார்கள். இது தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருக்கும் ஒப்பற்ற ஒரு வாய்ப்பாகும். வாக்குறுதிகள் காப்பாற்றப்பட வேண்டும். https://arangamnews.com/?p=11518
  2. நல்லிணக்கத்தை சாத்தியமாக்குவதற்கான உணர்வுநிலை March 13, 2023 Photo, @PMDNewsGov மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து கடந்த சில தினங்களாக பிரதானமாக மதத் தலைவர்களுடனும் அடுத்து அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனும் தங்களது நண்பர்கள், உறவினர்களுடனும் தொடர்ச்சியான பல சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சந்திப்புக்களில் முக்கியமானது பௌத்த மதத் தலைவர்களுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அவர்கள் நடத்திய சந்திப்புக்களாகும். அவற்றுக்கு உயர்ந்தளவு சாதகமான வரவேற்பு கிடைத்தது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னர் இலங்கைக்கு வந்திருந்தால் அவர்கள் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டு சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கக்கூடிய காலம் ஒன்று இருந்தது. இந்தத் தடவை அவர்கள் உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) என்ற அமைப்பின் பிரதிநிதிகளாக வந்திருக்கிறார்கள். இந்தப் பேரவை இலங்கையில் முதலில் 2014ஆம் ஆண்டிலும் பிறகு 2021ஆம் ஆண்டிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இரு தடவைகளிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பொறுப்பேற்று முடங்கிப்போய்க்கிடந்த சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்த வேளைகளிலேயே தடைகள் நீக்கப்பட்டன. உலகத் தமிழர் பேரவையின் தூதுக்குழுவின் வருகையும் அதற்கு கிடைத்த பிரசித்தமும் மேற்கு நாடுகளில் உள்ள அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த சில குழுக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளாகிய நாம், சிங்கள பௌத்த மதத்தலைவர்களில் ஒரு பிரிவினரும் தென்னிலங்கை சிவில் சமூகத்தவர்களும் முன்னெடுத்திருக்கும் ஒரு முயற்சி குறித்து ஊடக வட்டாரங்கள் மூலமாக அறிகின்றோம். இந்தக் குழுக்கள் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளில் தெரிந்தெடுத்த குறிப்பிட்ட சில பிரதிநிதிகளுடன் குறிப்பாக அந்தச் சமூகத்தின் ஒரு சில நபர்களை மாத்திரம் இப்போது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உலகத் தமிழர் பேரவையுடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகள் எமது சமூகத்தை கூட்டாக பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் ஒருமித்த குரல்களை முழுமையாக பிரதிபலிப்பவை அல்ல. உலகத் தமிழர் பேரவைக்கு முன்னர் இருந்த பிரதிநிதித்துவம் இப்போது இல்லை என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதாகும்” என்று அந்தக் குழுக்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றன. உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் இலங்கையில் சென்ற இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு இருந்ததாக அவர்களது விஜயத்தின் உள்நாட்டு ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். கண்டியில் அவர்கள் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பௌத்த உயர்பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்ததுடன் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான புனித தலதா மாளிகைக்கும் சென்று வழிபட்டார்கள். அடுத்த ஓரிரு தினங்களில் அவர்கள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் ஏனைய மதங்களின் தலைவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தினா்கள். சிவில் சமூகத்துடனான அவர்களின் சந்திப்புக்களில் பதற்றமோ, சந்தேகமோ அல்லது அவர்களை வெறுத்து ஒதுக்கும் உணர்வோ காணப்படவில்லை. நாம் எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்று எமது தேசிய கீதம் கூறுவதைப் போன்று இது இவ்வாறுதான் அமையவேண்டும். பொருத்தமான தருணம் உறுதியானதும் நிலைபேறானதுமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் நல்லிணக்கச் செயன்முறை ஒன்றை முடுக்கிவிடுவதற்கு தற்போதைய தருணமே பொருத்தமானதாகும். மக்களை இடர்பாடுகளுக்கு உள்ளாக்கிய படுபோசமான பொருளாதார நெருக்கடி இனநெருக்கடி அல்ல, நாட்டை பொருளாதார ஊழலில் இருந்தும் சூறையாடலில் இருந்தும் விடுவிப்பதே முன்னுரிமைக்குரியது என்று அவர்களை உணரவைத்திருக்கிறது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களினால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல்கள் தற்போது நிரம்பி வழிகின்றன. தங்களது நண்பர்களையும் உறவினர்களையும் சந்திப்பதற்காக அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கிறார்கள். உணவகங்களுக்கும் அவர்கள் படையெடுக்கிறார்கள். சாதாரண இலங்கை உழைப்பாளியினால் இந்த உணவகங்களுக்குச் சென்று அங்குள்ள விலையுயர்ந்த உணவு வகைகளை சாப்பிடக் கட்டுப்படியாகாது. புலம்பெயர் சமூகத்தில் இருந்து வந்திருக்கும் தங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் இந்த உணவகங்களுக்கு வந்து அவர்களும் உணவு வகைகளை ருசிபார்க்கிறார்கள். உலகத் தமிழர் பேரவை ஒரு வருடகாலமாக உயர்மட்ட பௌத்த மதகுருமாருடன் ஊடாட்டங்களை செய்துவந்திருப்பதே அவர்களுடைய இலங்கை விஜயத்தில் தற்போதுள்ள பிரத்தியேகமான அம்சமாகும். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்காக பிரசாரத்தை முன்னெடுத்த முக்கியமான புலம்பெயர் தமிழ்ச் சமூக அமைப்பாக உலகத் தமிழர் பேரவை இருக்கின்ற போதிலும், அதன் உறுப்பினர்கள் இரு பிரதான பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் தலதா மாளிகைக்கும் சென்றார்கள். பௌத்த மதகுருமாருடன் சேர்ந்து அவர்கள் விடுத்த அறிக்கையில் “இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்கள் மத்தியிலும் புரிந்துணர்வையும் அமைதி சமாதானத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் நாம் கடந்த சுமார் ஒரு வருடகாலமாக பேச்சுவார்த்தைகளை நடத்திவந்திருக்கிறோம். 2023 ஏப்ரலில் நேபாள நாட்டின் நாகார்கோட் நகரில் நடத்திய கட்டமைப்பு ரீதியான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் பரஸ்பரம் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கும் அதன் வழியாக இந்தத் தேசிய கலந்துரையாடலுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது. இலங்கை மற்றும் புலம்பெயர் சமூகங்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற இத்தகைய முதல் முயற்சியை தொடருவதற்கு வழிகாட்ட நாம் ‘இமாலய பிரகடனத்தை’ செய்துகொண்டோம்” என்று கூறப்பட்டிருக்கிறது. இது இரு தரப்புகளுக்கும் இடையிலான ஒரு இணக்கப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய ஆவணமாகும். ஆறு அம்ச கூட்டறிக்கை உலகத் தமிழர் பேரவைக்கும் பௌத்த மதகுருமாருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை அடுத்து வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கை நன்கு தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு ஆவணமாகும். நீதி மற்றும் நல்லிணக்கத்தின் ஊடாக இலங்கையை ஐக்கியப்பட்ட ஒரு கட்டத்துக்குக் கொண்டுவருவதற்கு செய்யவேண்டியவற்றை பிரதிபலிப்பதாக அது அமைந்திருக்கிறது. நேபாளத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற இடத்தை குறிக்குமுகமாக ‘இமாலயப் பிரகடனம்’ என்ற மகுடத்தில் அமைந்திருக்கும் கூட்டறிக்கை கீழ்வரும் ஆறு அம்சங்களை வலியுறுத்துகிறது. * எந்தவொரு சமூகமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவோ, அதன் அடையாளத்தையும் பெருமையையும் இழந்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சாத வகையில் நாட்டின் பன்முகத்தன்மையை பேணிக்காத்து மேம்படுத்துதல்; * பொருளாதார நெருக்கடியை வெற்றிகொண்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களினதும் மற்றையவர்களினதும் ஈடுபாட்டுக்கும் முதலீடுகளுக்கும் வசதியாக அமையக்கூடியதாக உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் உகந்த பொருளாதார வகைமாதிரியை தெரிவுசெய்வதுடன் இலங்கையை உறுதியான ஒரு மத்தியதர வருமானமுடைய நாடாக முன்னேற்றும் பாதையில் பயணம் செய்வதை உறுதிப்படுத்துதல்; * தனிப்பட்ட உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் உத்தரவாதம் செய்து சகல மக்கள் மத்தியிலும் சமத்துவத்தை மேம்படுத்தக்கூடியதும் நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி மாகாணங்களுக்குப் போதுமான அதிகாரங்களை உத்தரவாதம் செய்யக்கூடியதுமான புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைதல். அதுவரை அதிகாரப்பகிர்வு தொடர்பில் தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளை நம்பகமான முறையில் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துதல்; * ஐக்கியப்பட்டதும் பிளவுபடாததுமான நாட்டுக்குள் மக்களின் மத, கலாசார மற்றும் அடையாளங்களை ஏற்றுக்கொண்டு மதித்து அதிகாரங்களைப் பரவலாக்கி இனக்குழுக்களுக்கும் மதக்குழுக்களுக்கும் இடையில் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதை நோக்கி பாடுபடுதல்; * மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை வளர்க்கக்கூடியதும் கடந்தகால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்வதில் பற்றுறுதியுடன் கடந்தகால அவலங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறைகளைக் கொண்டதுமான இலங்கையை உருவாக்கும் நோக்குடன் செயற்படுதல்; * இரு தரப்பு மற்றும் பல்தரப்பு சர்வதேச உடன்படிக்கைகளின் கடப்பாடுகளை மதித்து சுதந்திரமானதும் உரமும் ஊக்கமும் நிறைந்த வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து உலகில் சமாதானமும் வளமும் கொண்ட நாடுகள் மத்தியில் பெருமைக்குரிய ஒரு இடத்தை இலங்கை பிடிப்பதை உறுதிசெய்தல். உலகத் தமிழர் பேரவையுடனான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமைதாங்கிய பௌத்த மதகுருமாரில் வண. பேராசிரியர் பள்ளேகந்த ரத்னசார மற்றும் வண. மாதம்பகம அஸ்ஸஜி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் கொவிட் பெருந்தொற்று காலத்தில் இறந்த முஸ்லிம்களின் பலவந்தமாக சடலங்களை தகனம் செய்வதற்குப் பிறரது உணர்ச்சிகளை மதிக்காத முறையில் எந்தவிதமான விஞ்ஞான அடிப்படையற்ற தீர்மானத்தை அன்றைய அரசாங்கம் எடுத்தபோது இஸ்லாமிய மதத்தவர்களின் உரிமைகளுக்காக உறுதியாகக் குரல்கொடுத்தவர்கள். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான வண. களுபஹன பியரத்ன தேரரும் இந்த பிக்குமார் குழுவில் அடங்குவார். உலகளாவிய 1000 சமாதானப் பெண்கள் என்ற குழுவின் ஒரு உறுப்பினராக 2005 நோபல் சமாதானப் பரிசுக்காக நியமிக்கப்பட்ட விசாகா தர்மதாச நேபாளப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணையாக செயற்பட்டார். அவரின் பங்களிப்பு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் குழுவுக்கும் பௌத்த மதத் தலைவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வுடன் பொதுநிலைப்பாடு ஏற்படுவதற்கு பெரிதும் உதவியது. முரண்பாடான சான்றுகள் உலகத் தமிழர் பேரவையின் தூதுக்குழுவின் விஜயத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வு என்றால் அது அவர்களும் பௌத்த மதத்தலைவர்களும் சேர்ந்து ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பேயாகும். இதற்கு ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தை கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்குமான அவர்களின் முயற்சிகளுக்கு தனது ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி தங்களது பணிகளுக்கு நாட்டின் அதியுயர் அதிகார பீடத்தின் ஆசீர்வாதங்கள் கிடைக்கிறது என்பதால் உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகளும் பௌத்த மதத் தலைவர்களும் மாத்திரமல்ல அவர்களைப் போன்று இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கும் நம்பிக்கையுடன் செயற்படுவதற்கு ஊக்கத்தை கொடுத்திருக்கும். ஆனால், இந்த முயற்சிகளுக்கு தோள்கொடுப்பதில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை அரசியல் தலைவர்கள் தட்டிக்கழிக்கமுடியாது. மலை உச்சியை நோக்கி பாறாங்கல்லை நகர்த்துவதைப் போன்ற இந்த முயற்சிகளை மற்றவர்கள் செய்யட்டும் என்று அரசியல் தலைவர்கள் வாளாவிருக்கமுடியாது. அரச அதிகார நிறுவனங்களை அமைப்பதற்கும் சட்டத்தில் உறைந்துகிடக்கும் நீதியை உறுதிசெய்வதற்கான வழிவகைகளை வகுப்பதற்கும் அரசியல் தலைமத்துவத்தை அரசாங்கம் கொடுக்கவேண்டியது அவசியமானதாகும். மட்டக்களப்பில் உள்ள விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் தங்களது மேய்ச்சல் தரையை சிங்கள குடியேற்றவாசிகள் சோளப் பயிர்ச்செய்கைக்காக அபகரித்துவருவதாக கடந்த மூன்று வருடங்களாக முறைப்பாடு செய்துவருகிறார்கள். இந்த மேய்ச்சல் தரை 2011ஆம் ஆண்டில் அமைச்சரவை தீர்மானம் ஒன்றின் மூலமாக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தத் தரையில் 2020ஆம் ஆண்டு முதல் பொலன்னறுவையைச் சேர்ந்து சிங்கள குடியேற்றவாசிகள் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவருகிறார்கள். முரண்பாடான இந்த அனுமதிகள் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கின்றன. இரு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்த பிறகு எண்பதுக்கும் அதிகமான கால்நடைகள் களவாடப்பட்டு, இறைச்சிக்காக கொல்லப்பட்டு அல்லது மின்சாரம் தாக்கி பலியாகயிருப்பதாக தமிழ் விவசாயிகளுக்காக தற்போது வாதாடும் சடடத்தரணியான கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் ரி.ஜெயசிங்கம் உறுதிசெய்திருக்கிறார். விவசாயிகள் சுமார் 160 கால்நடைகளை இழந்திருப்பதாக கூறப்படுகிறது. மட்டக்களப்புக்கு ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக 2023 அக்டோபர் 7ஆம் திகதியளவில் இரு பொலிஸ் காவல் நிலைகள் அமைக்கப்பட்ட பின்னரும் கூட இந்த நியாயமற்ற நிலைவரம் தொடருகிறது. அது மாத்திரமல்ல, செங்கலடியில் உள்ள இந்த மக்களுக்கு நீதி வழங்குவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க 2023 அக்டோபர் 8ஆம் திகதி அறிவித்தார் என்பதும் குறி்பிடத்தக்கது மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்தவர்களில் சிலரை (13 பேர்) வெளியேற்றுமாறு 2013 நவம்பரில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவோ அல்லது சகல ஆக்கிரமிப்பாளர்களையும் அப்புறப்படுத்துவதாக 2022 ஜூலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மகாவலி அதிகார சபையினால் வழங்கப்பட்ட உறுதிமொழியோ இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று பேராசிரியர் ஜெயசிங்கம் கூறியிருக்கிறார். “எதுவுமே உருப்படியாக நடைபெறவில்லை. இது ஆட்சிமுறையினதும் நிருவாகத்தினதும் அலட்சியத்தை அல்லது தகுதியீனத்தை அல்லது சிறுபான்மை இனத்தவர்களுக்கு நீதிவழங்குவதில் கடைப்பிடிக்கப்படும் அதன் கொள்கையையே வெளிக்காட்டுகிறது” என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் அதியுயர் அதிகாரமுடைய ஜனாதிபதியின் சொல்லுக்கு மதிப்பளித்து களத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் பெரும்பாலும் ஆட்சிமுறைமையில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். மேலும், நீதிமன்ற உத்தரவுகளும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்போது மக்கள் முற்றாகவே நம்பிக்கை இழந்துவிடுவார்கள். இத்தகைய சூழ்நிலைகளில்தான் வன்முறைகள் மூள்கின்றன. சொல்லுக்குப் பிறகு செயல்வேண்டும். அல்லாவிட்டால் தற்போது உணரக்கூடியதாக இருக்கின்ற நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்க உணர்வுகள் சமூகத்தின் அடிமட்டத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கொண்டுவரப்போவதில்லை. 2011 அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் மேய்ச்சல் தரை குறித்து வர்த்தமானி மூலம் ஜனாதிபதி உத்தரவை பிறப்பித்தால் அது நல்லிணக்கத்துக்கான ஒரு தொடக்கமாக அமையலாம். கலாநிதி ஜெகான் பெரேரா https://maatram.org/?p=11178
  3. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்காக ஏன் உண்மை ஆணைக்குழு இல்லை? Photo, Gemunu Amarasinghe/AP, NPR.ORG மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கூட கண்டிராத வகையிலான அதிர்ச்சியிலும் பயங்கரத்திலும் முழு நாட்டையும் ஆழ்த்திய 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு மூன்று ஈஸ்டர் ஞாயிறுகள் கடந்துவிட்டன. மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஆடம்பர ஹோட்டல்களிலும் பத்து தற்கொலைக் குண்டுதாரிகளினால் ஏககாலத்தில் ஒருங்கிசைவான முறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 272 பேர் கொல்லப்பட்டதுடன் 500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இவர்களில் முழு குடும்பங்களும் பெற்றோருடன் பிள்ளைகளும் இலங்கையின் அன்பையும் நட்பிணக்கத்தையும் அனுபவிக்க வந்த வெளிநாட்டவர்களும் அடங்குவர். இரு மாதங்களாக நாடு முடங்கிப்போய்க் கிடந்தது. அப்போது பரவிய வதந்திகளினால் பீதியடைந்த மக்கள் சந்தடிமிக்க பகுதிகளுக்கு வரத் தயங்கினர். உள்நாட்டில் முன்னைய முரண்நிலை வரலாற்றைக் கொண்டிராத ஒரு சிறுபான்மை மதக்குழு இன்னொரு சிறுபான்மை மதக்குழுவுக்கு எதிராக மேற்கொண்ட அந்த குண்டுத் தாக்குதல்களுக்கு எந்தவிதமான தர்க்க நியாயமும் கிடையாது. இந்தத் தாக்குதல்கள் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்கப் பணிகள் சகலதையும் கெடுத்துவிட்டன. குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு நிலவிய குழப்பநிலை மற்றும் ஊகங்களுக்கு மத்தியில் முழு நாடும் அச்சத்தில் உறைந்திருந்தது. ஆனால், சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அத்தகைய அச்சவுணர்வை வெளிக்காட்டவில்லை. தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு அவலம் நிறைந்ததாக காட்சி தந்த இடங்களுக்கு முதலில் வந்தவர்களில் ஒருவர் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. அப்போது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் விருப்பத்தைக் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ எதிர்க்கட்சியில் இருந்து அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் என்று உடனடியாகவே தன்னை அறிவித்ததை காணக்கூடியதாக இருந்தது. ஒரு தசாப்தத்துக்கு முன்னதாக விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்ததைப் போன்று தேசிய பாதுகாப்பை மீண்டும் நிலைநாட்டுவதாக அவர் உறுதியளித்தார். பீதியில் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டு மக்கள் மத்தியில் அவரது உறுதிமொழி எடுபட்டது. 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஒரு மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவுசெய்தனர். ஆனால், அடுத்தடுத்து பதவிக்கு வந்த மூன்று ஜனாதிபதிகளின் கீழான அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்ற உண்மையை வெளிப்படுத்தவில்லை. இதுவரையில் அது விடயத்தில் உயர்நீதிமன்றம் மாத்திரமே சிறந்த பணியை செய்திருக்கிறது எனலாம். சட்டரீதியான நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் உகந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் கத்தோலிக்க திருச்சபையும் வேறு குடிமக்களும் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீறல் வழக்கொன்றை அடுத்தே அது நடந்தது. விசாரணை அறிக்கைகளை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நான்கு சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொறுப்பை அலட்சியம் செய்ததாக அவர்களை குற்றவாளிகளாகக் கண்டது. அவர்களுக்கு எதிராக கோடிக்கணக்கான ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய சூத்திரதாரிகளை உயர்நீதிமன்றம் அடையாளம் காணவில்லை. அதனால், உண்மையைக் கண்டறிவதற்கு தேடுதல் தொடருகிறது. இதுவரையான அரசாங்க விசாரணைகள் திருப்தியானவையாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகவும் அமையவில்லை என்று கார்டினல் மல்கம் ரஞ்சித் அண்மையில் ஊடக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். “உத்தியோகபூர்வ நீதி வழிமுறைகள் எம்மைப் பொறுத்தவரை நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. ஈஸ்டர் தாக்குதல்கள், அவற்றுக்கான காரணிகள், அதில் பங்கேற்றவர்கள், சூத்திரதாரிகள் மற்றும் ஏனைய சக்திகள் தொடர்பில் அக்கறையும் அர்ப்பணிப்பும் கொண்ட விசாரணை ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை” என்று அவர் சொன்னார். தற்போதைய ஜனாதிபதிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு இருப்பதால் அவர் பதவியில் இருந்து விலகியதும் எதிர்காலத்தில் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை செய்த கார்டினல் ஜனாதிபதி எல்லாக் காலத்திலும் அந்தப் பதவியில் இருக்கப்போவதில்லை. ஆனால், கத்தோலிக்க திருச்சபை தொடர்ந்து இருக்கும். அவருக்குப் பிறகு வருபவர்களும் நடவடிக்கைகளை தொடரவேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டினார். உண்மை ஆணைக்குழு உண்மை வெளிப்படாத பட்சத்தில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான சர்ச்சைக்கு முடிவு கிடைக்காது. சந்தேகங்கள் மாத்திரமே ஆழமாக தொடரும். கார்டினல் மல்கம் ரஞ்சித் தனது மிகவும் அண்மைய அறிக்கைகளிலும் உரைகளிலும் முன்னரை விடவும் கூடுதலான அளவுக்கு வெளிப்படையாக கருத்துக்களைத் தெரிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. “ஈஸ்டர் தாக்குதல்கள் இடம்பெற்று இப்போது எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன. நான்கு வருடங்கள். இன்னமும் நீதி கிடைக்கவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியவில்லை. பல விடயங்களை ஆட்கள் பேசுகிறார்கள். நாம் நீதிக்காகவும் உண்மைக்காகவும் போராடவேண்டியது முக்கியமானதாகும். அது தான் கிறிஸ்தவம்” என்று அவர் கொழும்பில் ஈஸ்டர் நள்ளிரவு ஆராதனையில் கூறினார். நீதியைப் பெறுவதில் திருச்சபைக்கு இருக்கும் ஊசலாட்டமில்லாத உறுதிப்பாட்டை வெளிக்காட்டுவதற்கு அப்பால் இது 1979ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்துவரும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் பெருமளவு துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுத்த கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் கூட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை எவ்வாறு தடுக்கத் தவறியது என்பதற்கு தெளிவான ஒரு உதாரணமாகவும் விளங்குகிறது. இந்த படிப்பினையை மறந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விடவும் மிகவும் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஒன்றை முன்வைத்திருப்பது வேதனைக்குரியதாகும். மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின்போது நடந்தவற்றை ஆராய்ந்து தேசிய நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கு உண்மை ஆணைக்குழுவொன்றை அமைக்கப்போவதாக அரசாங்கம் செய்திருக்கும் அறிவிப்பு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை கையாளப்போவதில்லை. பதிலாக 1983 ஜூலை 24 தொடக்கம் 2009 மே 18 வரையான காலப்பகுதியையே உத்தேச ஆணைக்குழு ஆராயவிருக்கிறது. விளக்கமாக கூறப்படாவிட்டாலும், இது கெரில்லா போரில் தங்களது போராட்டத்தைத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களினால் முன்னெடுக்கப்பட்ட பிரிவினைவாத கிளர்ச்சிக் காலப்பகுதியேயாகும். மோதலின்போது ஆட்களுக்கு அல்லது சொத்துக்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சேதம் அல்லது தீங்கு தொடர்பில் உண்மையான, துல்லியமான, பக்கச்சார்பற்ற, முழுமைவாய்ந்த பதிவுகளை நிறுவுவதன் மூலம் இலங்கை மக்கள் மத்தியில் தேசிய ஐக்கியம், சமாதானம், சட்டத்தின் ஆட்சி, சகவாழ்வு, சமத்துவத்துடனான சகிப்புத்தன்மை, பல்வகைமையை மதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே ஆணைக்குழுவின் ஆணையாக இருக்கும். விசாரணைக்கான காலப்பகுதியை 1983 ஜூலை 24 இற்கும் 2009 மே 18 இற்கும் இடைப்பட்டதாக மட்டுப்படுத்துவது ஆணைக்குழுவின் ஆணை மட்டுப்படுத்தப்படுவதன் ஒரு அறிகுறியாகும். விடுதலைப் புலிகள் ஆதிக்கம் கொண்ட தமிழ் தீவிரவாத இயக்கமாக இருந்த காலப்பகுதியை மாத்திரமே ஆணைக்குழு கவனத்தில் எடுக்கும். ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட பெருமளவு மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெற்றன. போரின் முடிவக்குப் பின்னரான நாட்களில் பல பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் காணாமல் போயினர். கம்பி வேலிகளினால் சூழப்பட்ட முகாம்களில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான குடிமக்கள் ஆறு மாதங்களுக்கும் கூடுதலான காலமாக அடைத்துவைக்கப்பட்டனர். அவர்களில் பலர் காணாமல் போயினர். சிலர் அதிகாரிகளுக்குப் பணத்தைக் கொடுத்து வெளியே சென்றனர். மற்றவர்கள் பாதுகாப்புப் படைகளினால் அழைத்துச் செல்லப்பட்டனர். உண்மை ஆணைக்குழுவின் ஆணையின் தொடக்க திகதிக்கு முன்னதாகவே நீண்டகாலமாக இனப்பிரச்சினை இருந்துவந்தது. முடிவுத் திகதிக்குப் பின்னரும் அந்தப் பிரச்சினை தொடருகிறது. அதனால், ஆணை போதுமான ஒன்று அல்ல. குறிப்பிட்ட திகதிகள் விசேடப்படுத்தப்படுவது இனப்போர் மாத்திரம் தான் உண்மை ஆணைக்குழுவினால் ஆராயப்படுமா அல்லது 1987 – 1989 காலப்பகுதியில் இடம்பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கிளர்ச்சியும் விசாரணை செய்யப்படுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இனப்பிரச்சினையில் இருந்து வேறுபட்டதான அந்தக் கிளர்ச்சியின்போது பெரும் எண்ணிக்கையான மக்கள் உயிரிழந்தார்கள். உண்மை ஆணைக்குழுவின் நிபந்தனைகளும் வரைமுறைகளும் வகுக்கப்படுகின்ற செயன்முறை பகிரங்கமான ஒன்றாக இல்லாமல் பெருமளவுக்கு இரகசியமானதாக இருப்பது சந்தேகங்களை கிளப்புகிறது. ஆனால், உதவியைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் நாடுகின்ற தென்னாபிரிக்காவில் நடந்தது முற்றிலும் வேறுபட்டதாகும். தனது நோக்கங்கள் எவை என்பதை வரும் நாட்களில் அரசாங்கம் தெரியப்படுத்தக்கூடும். ஆனால், தற்போதைக்கு அது இந்த செயன்முறையை தொடருவதற்குத் தீர்மானித்திருக்கிறது போன்று தெரிகிறது. ஜனாதிபதியின் உறுதிமொழி ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களும் அவற்றின் விளைவுகளும் உத்தேச உண்மை ஆணைக்குழுவின் ஆணையின் அங்கமாக இருக்கப்போவதில்லை என்பது தெளிவானது. அந்த ஆணை போரின் கடைசித் திகதியான 2009 மே 18 வரை மாத்திரமே நீட்டிக்கப்படும். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் போர் முடிவுக்கு வந்து ஒரு தசாப்த காலத்துக்குப் பிறகு இடம்பெற்றதை காரணம் காட்டி அவற்றை ஆணைக்குழுவின் ஆணைக்குள் உள்ளடக்காதமைக்கு நியாயம் கற்பிக்கப்படலாம். ஈஸ்டர் தாக்குதல்கள், மிகவும் நீண்டகாலமாக தொடர்ந்த போரைப் போலன்றி, தனியொரு சம்பவம் மாத்திரமே. ஆனால், ஈஸ்டர் தாக்குதல்களை உண்மை ஆணைக்குழு விசாரணை செய்யவேண்டிய தேவையை அலட்சியம் செய்ய முடியாது. ஏனென்றால், என்ன நடந்தது என்ற உண்மை தொடர்ந்து மூடி மறைக்கப்படுகிறது. அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான நோக்கமும் அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதும் இன்று வரை புதிராகவே இருந்துவருகிறது. வழமைக்கு மாறான அரசியல் நிகழ்ச்சித் திட்டத்துக்காக கிறிஸ்தவ பக்தர்கள் பலிக்கடாவாக்கப்படடார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தான் உண்மையை கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் கார்டினல் மல்கம் ரஞ்சித் மிகவும் உறுதியாக இருக்கிறார் என்று தோன்றுகிறது. இறந்து போனவர்களினால் நீதி கோரி குரலெழுப்பமுடியாது. அதனால் உண்மையைக் கண்டறியவேண்டியது உயிருடன் இருப்பவர்களின் கடமை. கடந்த காலத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்வுகளை விசாரணை செய்வதற்கு உண்மை ஆணைக்குழுக்களுக்கு உலகளாவிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கான காரணங்களில் இது ஒன்று. பொறுப்புக்கூறலுக்கும் நீதிக்குமாக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்குப் பதிலாக அரசாங்கத் தலைவர்கள் இதுவரை ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறுவதை உறுதிசெய்வதில் கொஞ்சமேனும் அக்கறை காட்டவில்லை. துரதிர்ஷ்டவசமாக இது தற்போதைய பொருளாதார நெருக்கடியைப் பொறுத்தவரையிலும் கூட வேறுபட்டதாக இல்லை. பொருளாதார நெருக்கடி எவ்வாறு உருவானது என்பதை ஆராய்ந்து அந்த நெருக்கடியை கையாளத் தவறிய அரசாங்கத்தின் தவறுகளுக்கு பொறுப்புக்கூற வைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. பொருளாதாரத்தை சீர்குலைத்தவர்கள் தொடர்ந்தும் அதிகாரப் பதவிகளில் இருக்கிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட ஈஸ்டர் செய்தியை நோக்கும்போது கார்டினல் மல்கம் ரஞ்சித்தின் உணர்வுகளை அவர் நன்கு புரிந்துகொண்டு சாந்தப்படுத்த முயற்சித்திருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது. “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் விளைவாக ஏற்பட்ட கடுமையான வேதனையை நான் நன்கு அறிவேன். அந்த வேதனையை நான் பகர்ந்துகொள்கிறேன். அந்த கொடுமையான சம்பவத்துடன் தொடர்புபட்ட சட்ட செயன்முறைகள் எந்த விதமான செல்வாக்கிற்கும் உட்படாத முறையில் சுதந்திரமாகவும் பக்கச்சார்பு இல்லாமலும் முன்னெடுக்கப்படும் என்று நான் உறுதிகூறுகிறேன். பாதிக்கப்பட்ட சகலருக்கும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அடிப்படை வேலைகள் மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஈஸ்டர் தாக்குதல்களைப் போன்ற நீசத்தனமான செயல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதன் மூலம் எமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாத பற்றுறுதியை நான் கொண்டிருக்கிறேன்” என்று ஜனாதிபதி செய்தியில் கூறினார். தனது இந்த பற்றுறுதியை மீளவும் உறுதிப்படுத்தியதற்கு மேலதிகமாக ஜனாதிபதி கடந்த காலத்தில் கிறிமினல் குற்றங்களாக இருந்தாலென்ன பொருளாதாரக் குற்றங்களாக இருந்தாலென்ன அவற்றை செய்தவர்களை உயர் பதவிகளில் இருந்து விலக்குவதன் மூலம் தனது நம்பகத்தன்மையை வலுப்படுத்திக்கொள்ளமுடியும். கலாநிதி ஜெகான் பெரேரா https://maatram.org/?p=10816
  4. புதிய ஆணையைப் பெறுவது தவிர்க்கமுடியாத தேவை! Photo, THE AUSTRALIAN பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் தற்போதைக்கு பயனளிக்கும் அறிகுறிளைக் காட்டுகின்றன. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கவிருப்பது உறுதியாகியிருக்கின்றது. அதன் முதல்கட்ட கடன்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. இது தற்போதைய பொருளாதார இடர்பாடுகளை சமாளிக்க வேறு கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உதவும். பழைய கடன்களையும் புதிய கடன்களையும் திருப்பிச்செலுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை உறுதிசெய்வதே சவாலாக அமையும். இதற்காக அரசாங்கம் அதன் புதிய வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இந்தக் கொள்கை வரிகள் இல்லாமலேயே விலைவாசி உயர்வின் காரணமாக ஏற்கெனவே வாழ்க்கையைச் சமாளிக்க முடியாமல் இருந்த வருவாயை சம்பாதிப்போருக்கு கணிசமான வரிச்சுமையை அதிகரிக்கிறது. அரசாங்க சேவையாளர்களிலும் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களிலும் குறைப்புச்செய்வதற்கான அதன் திட்டங்கள் குறித்தும் அரசாங்கம் அறிகுறிகளைக் காட்டுகின்றது. இவை பட்ஜெட்டை சமநிலைப்படுத்துவதற்கு அவசியமான சீர்திருத்தங்களாக இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து அரசாங்கத்துக்கு இவை ஆதரவைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய சாத்தியமில்லை. சனத்தொகையில் 40 சதவீதமானோர் தினமும் 225 ரூபாவையும் விட குறைவான பணத்துடன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் பலர் வறுமைக்கோட்டின் கீழ் விழக்கூடிய ஆபத்து இருப்பதாக உலக வங்கி எச்சரிக்கை செய்திருக்கிறது. பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் வரவேற்பைப் பெறக்கூடியவையாக இல்லை என்பதே அரசாங்கத்தின் பிரசசினையாகும். அந்க்த கொள்கைகள் அரசியல் ரீதியிலும் சிக்கலானவையாக இருக்கின்றன. கடந்த காலத்தை ஆராய்ந்து பார்க்கத் தவறுவது எமது தோல்விகள் அல்லது தவறுகளுக்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவுவதில்லை. ஆட்சிமுறைமையை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு அல்லது நேர்மையற்ற முறையில் சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதும் உதவப்போவதில்லை. நிதி வளத்தைப் பொறுத்தவரை நாட்டை ஒப்பேறக்கூடியதாக்குவதற்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பொருளாதார மறுசீரமைப்பின் செலவுச்சுமை நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அவர்களுக்குக் கீழ் உள்ளவர்கள் மீதே விகிதப் பொருத்தமில்லாத அளவுக்கு கடுமையாக விழப்போகிறது. வாழ்க்கைச் செலவு வானளாவ உயர்ந்துகொண்டிருக்கும் ஒரு நேரத்தில், நிலையான வருமானத்தைப் பெறுகின்றவர்களைப் பொறுத்தவரை உயர்ந்த மட்டங்களிலான வரிகளினால் இருமடங்கு சுமையைத் தாங்கவேண்டியவர்களாக இருப்பதால் அவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். செலவு அதிகரிப்புக்களை தங்களது வாடிக்கையாளர்கள் மீது சுமத்திவிடக்கூடிய நிலையில் இருக்கும் வர்த்தக சமூகத்தினர் மற்றும் சுயாதீன துறைசார் நிபுணத்துவ பிரிவினரைப் போலன்றி, இந்த நிலையான வருமானத்தைப் பெறும் பிரிவினர் வாழ்க்கையைச் சமாளிப்பதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். 12 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் அல்லது சனத்தொகையில் ஐந்து சதவீதமானவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக கடந்தவருடம் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதாக குடியகல்வு புள்ளிவிபரங்கள் காடடுகின்றன. மக்கள் அனுபவிக்கின்ற பொருளாதார இடர்பாடுகள் பாரம்பரிய தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் அமைப்புக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களுக்கு வழிவகுத்திருக்கின்றன. தங்களுக்குப் பாதிப்பாக அமையக்கூடிய முறையில் வருவாய் பெருக்கத்தில் ஈடுபடும் அரசாங்கத்துக்கு எதிராக இவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறா்கள். அடையாள வேலைநிறுத்தம் என்று வர்ணிக்கப்பட்ட கடந்த வாரத்தைய வேலைநிறுத்தம் இணக்கமான ஒரு பிரதிபலிப்பை வெளிப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தும் அளவுக்கு வெற்றிகரமானதாக அமைந்தது. ஜனாதிபதிக்கு நெருக்கமான அரசாங்க உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தியதைப் போன்று தொழில்களை இழக்கவேண்டிவரும் என்பது மாத்திரமல்ல, சொத்துக்களும் சுவீகரிக்கப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக போலும் பல ஊழியர்கள் வேலைக்கு வராமல் இருக்கவில்லை. இதற்கு ஒரு முன்னுதாரணம் இருக்கிறது. 1980 ஜூலை வேலைநிறுத்தின்போது ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அன்றைய அரசாங்கம் எச்சரித்தது. அந்த எச்சரிக்கையை நடைமுறைப்படுத்திய அரசாங்கம் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அரச ஊழியர்களை வேலைநீக்கம் செய்தது. அந்த ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் பல வருடங்களாக பெரும் கஷ்டப்படவேண்டியேற்பட்டது. அன்றைய அரசாங்கம் மக்களின் அமோக ஆணையைக் கொண்ட அரசாங்கமாக இருந்த காரணத்தினால் சமூகத்தின் ஏனைய பிரிவினர் அடக்குமுறைக்கு எதிராக எதையும் செய்யமுடியவில்லை. தற்காலிக ஓய்வு தங்களது பொருளாதாரக் கஷ்டங்களையும் மனக்குறைகளையும் பரிசீலனைக்கு எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வந்திருப்பதன் விளைவாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக Determination தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. பல்வேறு துறைகளையும் சேர்ந்த நாற்பதுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்தன. தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதனாலேயே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவை விளக்கமளித்தன. வேலைநிறுத்தத்தின் விளைவாக சுகாதாரம், தபால் மற்றும் ரயில் போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டன. கல்வி, துறைமுகம், நீர்விநியோகம், பெற்றோலியம், வீதி அபிவிருத்தி, மின்சாரம் மற்றும் வங்கிச்சேவைகள் உட்பட ஏனைய துறைகளையும் சேர்ந்த ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். தங்களது பிரச்சினைகள் மற்றும் அக்கறைகள் குறித்து ஆராய முன்வருவதாக ஜனாதிபதி செய்த அறிவிப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் பேசவிருப்பதாக கூறிய வேலைநிறுத்தம் செய்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கின்றன. இது அரசாங்கம் அதன் தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும். 1980 பதவியில் இருந்த அரசாங்கத்தைப் போலன்றி தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடையாது. கடந்த வருடத்தைய மக்கள் போராட்ட இயக்கத்துக்குப் பிறகு இன்றைய அரசாங்கத்துக்கு ஒரு சட்ட ஆணை மாத்திரமே இருக்கிறது. மக்களின் விரக்திக்கும் வெறுப்புக்கும் மத்தியில் அரசாங்கம் இதுவரையில் விட்டுக்கொடுக்காமல் இருந்துவருகிறது. மக்கள் போராட்டம் அடக்கியொடுக்கப்பட்டிருக்கிறது. போராட்ட இயக்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டருக்கிறார்கள். திட்டமிடப்பட்டபடி பொருட்களின் விலைகளும் வரிகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் உறுதிப்பாட்டுக்கும் நிதி வளங்கள் பெருக்கத்துக்கும் அவசியமான பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை கொடுப்பது என்ற அடிப்படையில் அரசாங்கம் தான் எடுக்கும் மிகவும் கடுமையான நிலைப்பாடுகளை நியாயப்படுத்திக்கொண்டுவருகிறது. ஆனால், மக்களின் அபிப்பிராயத்தை செவிமடுக்க மறுப்பதன் மூலமாக அரசாங்கம் தன்னை தொழிற்சங்கங்களாக இருந்தாலென்ன அரசியல் கட்சிகளாக இருந்தாலென்ன ஒழுங்கமைக்கப்பட்ட சக்திகளுடன் ஒரு மோதல் போக்கிற்கே கொண்டுசெல்கிறது. சமூகத்தின் ஏனைய பிரிவுகள் ஒப்பீட்டளவில் பாதிக்கப்படாமல் இருந்தாலும் கூட பொருளாதார சுமையின் கடுமை பரந்தளவு பிரிவினரை பெரிதும் பாதிக்கிறது. இது ஒரு பெரும் அநீதி என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. அதை நிச்சயம் அகற்றவேண்டும். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலான அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வதும் தற்போதைய சூழ்நிலையில் சமாதானத்தை ஏற்படுத்தும் சைகைகளாக அமையமுடியும். மறபுறத்தில், சட்டத்தின் பிரகாரம் நடத்தவேண்டியிருப்பதும் ஏற்கெனவே இரு தடவைகள் தேர்தல் ஆணைக்குழுவினால் திகதி நிர்ணயிக்கப்பட்டதுமான உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக காட்டிவருகின்ற மறுப்பு அரசியல் நெருக்கடியை மோசமாக்குகிறது. தேர்தல்களுக்குத் தேவையான நிதி வளங்களை திறைசேரி விடுவிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளுக்கு முரணாகவும் எடுத்திருக்கும் நிலைப்பாட்டினால் அரசாங்கம் அதற்கான எதிர்ப்பை தொடர்ந்து விரிவடையச்செய்துகொண்டே போகிறது. மக்களின் ஆதரவைப் பெறுவதில் தனக்கு இருக்கும் ஆற்றல் தொடர்பில் அரசாங்கத்துக்கு இருக்கும் அச்சவுணர்வே அது உள்ளூராட்சி தேர்தல்களை குழப்புவதற்குக் கொண்டிருக்கும் திடசங்கற்பத்துக்குக் காரணமாகும். எதிரணி கட்சிகளையும் விட மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே அரசாங்கக் கட்சிகளின் மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஜனாதிபதி விக்கிரமசிங்கவைத் தவிர மற்றும்படி ஒரு வருடத்துக்கு முன்னர் மக்கள் இயக்கத்தின் சீற்றத்துக்கு முகங்கொடுக்கமுடியாமல் அபகீர்த்திக்குள்ளாகி பதவியில் இருந்து விலகிய அதே அரசியல் கட்சிகளினதும் அரசாங்கத்தினதும் உறுப்பினர்களையே தற்போதைய அரசாங்கம் கொண்டிருக்கிறது. ஜனாதிபதியின் தெரிவுகள் அரசாங்கம் இதுவரையில் அதற்கு இருக்கக்கூடிய நெருக்குதல்களுக்கு பொலிஸ் நடவடிக்கைகளின் மூலமாக போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதன் மூலமே பதிலளித்துவருகிறது. வீதிப்போராட்டங்களை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளத் தயாராயில்லை. அத்துடன், சட்டத்தைப் பொருட்படுத்தாமல் அரசாங்க நிறுவனங்கள் தனது விருப்புக்கேற்ப செயற்படவேண்டும் என்று அவை மீது அரசாங்கம் நெருக்குதலையும் பிரயோகிக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்களுக்கான திகதிகளை நிர்ணயிப்பதில் தேர்தல் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் ஒரு தடவை அவமதிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தேர்தல்களை மீண்டும் ஒத்திவைக்கவேண்டியிருக்கிறது போன்று இப்போது தோன்றுகிறது. அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதற்கு தன்னாலியன்றவரை சிறப்பாக சுயாதீனமாக செயற்பட்டுவரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அமைச்சர்களுக்கு விடுக்கின்ற அழைப்பாணைகளையும் அரசாங்கம் அவமதிக்கிறது. தேர்தல் நோக்கங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை நிறுத்திவைப்பதற்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை மதித்துச் செயற்படுவதற்கு அரசாங்கம் மறுப்பது நீண்டகால நோக்கில் நாட்டுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் தாக்கமாகும். இவையெல்லாம் எதிர்காலத்தில் தகராறுகளையும் சட்டம் ஒழுங்கு இன்மையையும் கொண்டுவரக்கூடிய எதிர்மறையான போக்குகளாகும். இவை நீண்டகாலத்துக்கு நாட்டின் அபிவிருத்திக்கும் விழுமியங்களுக்கும் பாரிய பாதக விளைவுகளைக் கொண்டுவரக்கூடியவையாகும். நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை விளங்கிக்கொள்ளக்கூடியவராக ஜனாதிபதி விக்கிரமசிங்க இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பிரச்சினைகள் தொடர்பில் நெருக்குதல்கள் அதிகரிப்பது தவிர்க்கப்படவேண்டும். அனுபவமிக்க ஒரு அரசியல் தலைவராகவும் சிறந்த வாசிப்பு பழக்கத்தைக் கொண்ட சர்வதேச அரசியல் மாணவராகவும் இருக்கும் ஜனாதிபதி அரசாங்கத்தின் மூன்று கிளைகளுக்கும் இடையில் ஏற்படக்கூடிய ஒரு மோதல் கொண்டுவரக்கூடிய ஆபத்துக்களை நன்கு அறிவார். நீதித்துறையுடனான ஒரு மோதல் அல்லது நீதித்துறையின் தீர்மானங்களை மறுதலிக்கும் செயல் சட்டமுறைமை முழுமையின் மீதுமான நம்பிக்கையை அரித்துச்சென்றுவிடும்; அரசியல் சமுதாயத்தின் உறுதிப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது அதற்கு இருக்கவேண்டிய பற்றுறுதியில் முதலீட்டாளர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நம்பிக்கையை இல்லாமல் செய்துவிடும். உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தவேண்டிய தேவை குறித்த அமெரிக்கத் தூதுவரின் வலியுறுத்தல் இந்த உண்மையை உணர்த்தியிருக்கும். உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் அமெரிக்காவைப் போன்றே ஏனைய மேற்குலக நாடுகளும் ஜப்பானும் அதே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை போன்ற நிதிச்சலுகைகள் மற்றும் பயன்களின் வடிவில் உலகின் மிகவும் பெரிய தனவந்த நாடுகளான இவற்றின் இலங்கை அதன் பொருளாதார உயிர்வாழ்வு, வர்த்தகம் மற்றும் உதவிகளுக்காக தங்கியிருக்கிறது. அதனால் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திடமிருந்தும் வருகின்ற இந்த நெருக்குதல்கள் தேர்தல்களின் திசையில் அரசாங்கத்தை உந்தித்தள்ளி மக்களிடமிருந்து புதிய ஆணையப் பெற நாட்டம் கொள்ளவைக்கக்கூடும். உருப்படியான முறையில் ஆட்சி செய்வதற்கு அரசாங்கத்தின் நியாயப்பாட்டை வலுப்படுத்தவும் தேசிய நலன்களுக்காக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் தேர்தல் ஆணையொன்று தேவை. வேண்டப்படும் ஆணை உள்ளூராட்சி மட்டத்தில் இல்லாமல் இருக்கலாம். அங்கு அரசாங்கம் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதை கருத்துக்கணிப்புக்கள் காட்டுகின்றன. ஆனால், ஜனாதிபதி தனது தற்துணிபை பிரயோகிக்கக்கூடிய தேசிய மட்டத்தில் அந்த ஆணை வரக்கூடும். கலாநிதி ஜெகான் பெரேரா https://maatram.org/?p=10765
  5. தேர்தல்கள் ஒத்திவைப்பு; முறைமை மாற்றத்துக்கான தேவையை தடுத்துவிடாது! Dr. Jehan Perera on March 2, 2023 Photo, THE HINDU உள்ளூராட்சி தேர்தல்கள் மிகவும் சாதுரியமான முறையில் ஒத்திவைக்கப்பட்டுவிட்டதாக அரசாங்க ஆதரவாளர்கள் திருப்திப்படுகிறார்கள் போன்று தெரிகிறது. ஒத்திவைக்கப்படுவதற்கு தேர்தல் ஒன்று இருக்கவேண்டும், அவ்வாறு எதுவும் இல்லை என்று அவர்கள் நிராகரிக்கிறார்கள். உள்ளூராட்சி தேர்தல்கள் தினமாக மார்ச் 9ஆம் திகதியை அறிவித்த கடிதத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களும் கைச்சாத்திட்டிருக்கின்ற போதிலும் கூட அந்தத் திகதி குறித்து தீர்மானிப்பதற்கு கூட்டப்பட்ட கூட்டத்தின் பதிவுகளை வைத்திருக்கவில்லை என்றும் கூட்டத்தில் குறைந்தபட்ச நிறை எண் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்றும் அரசாங்க ஆதரவாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவை குறைகூறுகிறார்கள். தேர்தல் செலவினங்களுக்கு ஒதுக்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று இரண்டாவது வாதம் ஒன்றும் முன்வைக்கப்படுகிறது. இருக்கின்ற சொற்ப பணத்தை ஒதுக்குவதற்கான அத்தியாவசிய சேவைகள் என்று குறிப்பிட்டு சில சேவைகளை அரசாங்கம் பிரகடனம் செய்திருக்கிறது. அவற்றில் ஒன்றாக உள்ளூராட்சி தேர்தல்கள் இல்லை. வங்குரோத்து நிலையில் இருக்கும்போது தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுப்பது நாட்டுக்கு கட்டுப்படியாகாது என்று அரசாங்கம் வாதிட்டுக்கொண்டிருக்கிறது. இந்த இரு வாதங்களும் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டியவைதான் என்று மக்களில் பெரும்பான்மையானவர்களை நம்பவைக்கப்போதுமானவை என்று அரசாங்கம் நம்பிக்கைகொள்ளக்கூடும். உள்ளூராட்சி தேர்தல்கள் திட்டமிட்டபடி மார்ச் 9 நடத்தப்பட்டால் அரசாங்கக் கட்சிகள் படுமோசமான தோல்வியைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த வருடம் நாடு சந்தித்த பொருளாதார வீழ்ச்சி மற்றும் மக்களில் அதிகப் பெரும்பாலானவர்களை மோசமாகப் பாதிக்கின்ற வகையில் ஏற்றத்தாழ்வாக செய்யப்படுகின்ற நிதி ஒதுக்கீடுகளுக்கு பிறகு அரசாங்கத்தின் செல்வாக்கு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துகொண்டே வந்திருக்கிறது. அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்றின் பிரகாரம் அந்த வீழ்ச்சி பத்து சதவீதத்துக்கும் அதிகமானதாகும். தங்களது மக்கள் செல்வாக்கு தாழ்ந்த நிலையில் இருக்கிறது என்பதை அரசாங்கத் தலைவர்கள் அறிவார்கள். கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு அப்பால் புலனாய்வு சேவைகளிடம் இருந்தும் அவர்களுக்கு அறிக்கைகள் கிடைத்துக்கொண்டிருக்கும். அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கு எந்தளவுக்கு குறைந்துகொண்டுபோகிறதோ அந்தளவுக்கு அது பாதுகாப்பு படைகளில் தங்கியிருக்கும் போக்கும் அதிகரிக்கும். அதன் விளைவாக, தேர்தல்களை ஒத்திவைப்பதில் அரசாங்கம் கண்ட வெற்றி அதற்காக அது மேற்கொண்ட முயற்சிகளுக்கு தகுதியானதல்ல. அரசாங்கத்தின் நம்பகத்தன்மைக்குப் பெரும் பாதிப்பைக் கொண்டுவரக்கூடியது எனலாம். தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தவறியதை எதிர்த்து எதிரணி கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பது சாத்தியம். ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கைகளின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் தேர்தல்களை நடத்துவதற்கு காட்டும் எதிர்ப்பு பற்றிய சர்வதேச ஊடகங்களின் பார்வை அனுகூலமானதாக இல்லை. “வங்குரோத்து அடைந்த இலங்கை தேர்தல்களை ஒத்திவைக்கிறது” என்பதே சர்வதேச ஊடகங்கள் பலவற்றின் செய்திகளின் தலைப்பாக இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்காக அரசாங்கம் தொடர்ந்து காத்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால், அது தொடர்ந்து பிற்போடப்பட்டுக்கொண்டே போகிறது. இந்த நிலைமை நாட்டின் உறுதிப்பாடு குறித்து பொதுவில் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் குறிப்பாக சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியிலும் நம்பிக்கையை தோற்றுவிக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி அரசாங்கத்தின் அடக்குமுறை அதிகரித்துக்கொண்டுபோகும் நிலையில் தீவிர போக்குடைய கட்சிகளுக்கே மக்களின் ஆதரவு அதிகரிக்கும். தற்போது ஒத்திவைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் பெருமளவில் வெற்றியைப் பெறக்கூடிய சாத்தியத்தைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி வீதிப் போராட்டங்களில் இறங்கியிருக்கின்றது. அவர்களது ஆர்ப்பாட்டங்களை பொலிஸார் தடுத்து தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் மக்களின் தனிப்பட்ட கைத்தொலைபேசிகளிலும் வேதனைதரும் காட்சிகள் வந்துகொண்டிருக்கின்றன. முதலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக செல்வதற்கு தெரிந்தெடுக்கும் வீதிகளுக்கு குறுக்கே பெரும் எண்ணிக்கையில் பொலிஸார் குவிந்து நிற்கிறார்கள். பிறகு கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் நீ்ர்ப்பீரங்கி தாக்குதல்களையும் நடத்துகிறார்கள். இறுதியாக தடியடி நடத்தும் பொலிஸார் துரதிர்ஷ்டவசமாக பிடிபடும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்து குண்டுக்கட்டாக வாகனங்களில் ஏற்றுகிறார்கள். மக்கள் கிளர்ச்சியும் பயங்கரவாதமும் கலந்த போராட்ட முறை மூலமாக கடந்த காலத்தில் இரு தடவைகள் அரசாங்கத்தை எதிர்கொண்ட வரலாற்றையுடைய ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)இன் அவதாரமான தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கணிசமானளவு தப்பெண்ணங்கள் தொடருகின்றன. அந்த இரு கிளர்ச்சிக் காலகட்டங்களிலும் அரசாங்க சொத்துக்கள் தீக்கிரையாகின. அரசாங்கமும் கிளர்ச்சிக்காரர்களும் படுமோசமான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பவர்கள் – அரசாங்கமும் எதிர்க்கட்சியும் – கடந்தகால பயங்கரங்களை சாத்தியமானளவுக்கு நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமைதிவழி போராட்டங்களைச் செய்பவர்களுக்கு எதிரான கடந்த பல மாதகால பொலிஸாரினதும் பாதுகாப்புப் படைகளினதும் தாக்குதல்களின் காட்சிகள் மக்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்துகின்றன. மகாத்மா காந்தி இன்று உயிருடன் இருப்பாரேயானால் முதலில் கைதுசெய்யப்படுபவர்களில் ஒருவராக அவரும் இருப்பார். அவர் மக்களின் சீற்றத்தை தூண்டியிருப்பார். அடக்குமுறையாளர்களின் மனச்சாட்சியை தட்டியெழுப்பவும் அவர் முயன்றிருப்பார். தேசிய மக்கள் சக்தி இன்று அத்தகைய ஒரு பாத்திரத்தையே வகிக்கிறது. ஜனநாயகத்துக்கான போராட்டம் அகிம்சை வழியிலானதாக இருக்கவேண்டியது முக்கியமானதாகும். நாட்டு மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை அரசாங்கம் இழந்துகொண்டுபோவது இலங்கையின் ஜனநாயகத்துக்கோ அல்லது அதன் பொருளாதார நலனுக்கோ உதவப்போவதில்லை. தினமும் காலை வேளையில் பாடசாலைக்குச் செல்லும் வழியில் தனது மூன்று சிறிய பிள்ளைகளுக்கு ஒரு பக்கெட் மாரி பிஸ்கட்டையும் ஒரு பக்கெட் பாலையும் வாங்குவதற்கு தான் படுகின்ற பாட்டைப் பற்றி முச்சக்கரவண்டி சாரதியொருவர் வெளிப்படுத்திய ஆதங்கத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். இப்போது அந்தப் பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்திருக்கும் அதேவேளை அவரது வருமானத்தில் எந்த முன்னேற்றமும் கிடையாது. அதனால் அவர் மூன்று பிள்ளைகளுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு பக்கெட் பிஸ்கட்டையும் பாலையும் இப்போது வாங்கிக்கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை. அவர்களில் பெரிய பிள்ளையினால் பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியும். மற்றைய இரு பிள்ளைகளும் நிலைமையை விளங்கிக்கொள்ளக்கூடியவர்கள் இல்லை. அந்தத் தந்தை அரசாங்கத் தலைவர்களை சபித்தார். இது ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். இப்போது அவரை நான் சந்தித்தால், வறியவர்களுக்கான மின்சாரக்கட்டணம் மூன்று மடங்கிற்கு அதிகமாகவும் பணவசதியுடையவர்களுக்கான மின்சாரக்கட்டணம் சுமார் 50 சதவீதத்தினால் மாத்திரமும் அதிகரித்திருக்கும் நிலையில் அவர் அரசாங்கத் தலைலர்களை மேலும் கூடுதலாக சபிப்பார் என்பது நிச்சயம். ஒத்திவைப்பை மீளாய்வு செய்க அந்த முச்சக்கர வண்டிச்சாரதி போன்ற மக்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்கள் யாருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதைப் பொறுத்தவரை எந்தக் கேள்விக்கும் இடமில்லை.கடந்த வார இறுதியில் நான் இரத்தினபுரியில் இருந்தேன். ஊழல்தனமான உள்ளூர் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக நான் சந்தித்த சமூகத்தலைவர்கள் கூறினார்கள். இத்தகைய அபிப்பிராயத்தை வடக்கில் சமூக மட்ட ஆய்வுகளைச் செய்கின்ற ஒரு கல்விமானிடம் இருந்தும் நான் கேட்டேன். பழையவர்களை அகற்றிவிட்டு புதியவர்களைக் கொண்டுவருவதற்கு மக்கள் தேர்தலை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார். வடக்கிலும் தெற்கிலும் உள்ளூர் மட்டத்தில் எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையிலான இந்த சங்கமத்தை நான் கண்டேன். அவர்கள் மார்ச் 9 உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது குறித்து நிச்சயம் வெறுப்பும் விரக்தியும் அடைவார்கள். வடக்கிலும் தெற்கிலும் தங்களது உள்ளூர் மட்டங்களில் இருந்து முறைமை மாற்றத்தைத் தொடங்க மக்கள் விரும்புகிறாரகள். கடந்தகால ஜே.வி.பி. கிளர்ச்சிகளுக்கும் தற்போது வீதிப்போராட்டங்களில் இறங்கியிருக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டங்களுக்கு வருகின்ற இளைஞர் யுவதிகளில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த காலத்துடன் நேரடித் தொடர்பு கிடையாது. அவர்கள் ஒரு முறைமை மாற்றத்துக்காக (System Change) – பிரதானமாக கடந்த நான்கு தசாப்தகாலமாக ஆட்சிமுறையை உருவகப்படுத்தி நிற்கும் ஊழலுக்கும் தண்டனையின்மைக்கும் ஒரு முடிவைக் கட்டுவதற்காக அவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களை அவர்கள் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான செயன்முறையின் ஒரு அங்கமாக பார்க்கிறார்கள். முறைமை மாற்றம் பல மட்டங்களில் இருக்கலாம். அத்தகைய மாற்றத்தை விரும்பாதவர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட்டுவருகின்றன. தேசிய மக்கள் சக்தியின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசியல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையிலான அவர்கள் மீதான அண்மைய பொலிஸ் தாக்குதல்களை கண்டனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டதை காணக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில், உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டியது அவசியமாகும். உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான பணத்தை அரசாங்கம் தேடிக்கொடுக்கும் என்று மக்களுக்கு உறுதியளிப்பதன் மூலமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதிர்ச்சியும் விவேகமும் உடைய ஒரு மதிப்பார்ந்த அரசியல் தலைவராக தன்னை காட்டிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் துடிப்பான ஆதரவை வழங்கவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் மீட்டெடுக்கமுடியும். உள்ளூராட்சி தேர்தல்களுக்கான புதிய திகதியொன்றை மார்ச் 3ஆம் திகதி தருவதாக தேர்தல் ஆணைக்குழு கூறியிருக்கிறது. அவ்வாறு அறிவிக்கப்படக்கூடிய திகதியே உண்மையில் அந்தத் தேர்தல்கள் நடைபெறுகின்ற திகதியாக இருக்கவேண்டியது தேசிய நலன்களுக்கு உகந்ததாகும். சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களே ஜனநாயகத்தின் அடித்தளமாகும். அதை பேணிப்பாதுகாத்து போற்றுவதன் மூலம் அரசாங்கத்தின் ஜனநாயக சான்றாதாரங்களை வலுப்படுத்தமுடியும். அதன் மூலமாக சர்வதேச சமூகம் அதன் ஒருமைப்பாட்டையும் பணத்தையும் இலங்கையில் முதலீடு செய்யக்கூடியதாக நம்பிக்கையை கட்டியெழுப்பமுடியும். கலாநிதி ஜெகான் பெரேரா https://maatram.org/?p=10717
  6. இலங்கை மக்களின் இதயத்தைத் தொடாத சுதந்திர தினக் கொண்டாட்டம்! February 6, 2018 Photo, Ishara S. Kodikara/ AFP, THE EDITION இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் 75ஆவது வருட நிறைவை அரசாங்கம் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டாடியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் ஒரு உரையை நிகழ்த்தவில்லை. தயாரிக்கப்பட்ட உரை சிறப்பானதாக இருந்தது. ஆனால், அது பின்னரே விநியோகிக்கப்பட்டது. இராணுவ அணிவகுப்பு நடைபெற்ற கொழும்பு காலிமுகத்திடலில் பொது மக்களின் பங்கேற்பு தவிர்க்கப்பட்டமை சுதந்திர தின நிகழ்வில் அவதானிக்கக்கூடியதாக இருந்த இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். வழமையான சூழ்நிலைகளில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது காலிமுகத்திடலில் கரையோரக் காற்றையும் விரிந்து பரந்த பசுமையான மைதானத்தையும் ரசிக்க மக்கள் கூட்டம் நிரம்பிவழியும். மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தால் கண்கவரும் இராணுவ அணிவகுப்பையும் விமானப்படையின் சாகசங்களையும் கண்டு ரசிக்க அவர்கள் தவறியிருக்கமாட்டார்கள். ஆனால், பாதுகாப்பின்மை உணர்வுடன் இருக்கும் அரசாங்கம் நிலைவரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது என்பது தெளிவாகத் தெரிந்தது. அதனால், பெருமளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது. மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்களில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சிய காரணத்தினாலேயே பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. முதல்நாள் இரவு பெரும்பாலும் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சத்தியாக்கிரகத்தை தண்ணீர்ப் பீரங்கித் தாக்குதல் நடத்தி பலவந்தமாக கலைத்தனர். நாட்டு மக்கள் கொண்டாடுவதற்கு பெரிதாக எதுவும் இல்லாத ஒரு நேரத்தில் சுதந்திர தின நிகழ்வுக்காக பெருமளவு நிதி வீணாக ஒதுக்கப்பட்டதை ஆட்சேபித்தே இளைஞர்கள் அந்த சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தனர். பெருமளவு பாதுகாப்புப் படையின் பிரசன்னம் இருந்தபோதிலும் அமைதியான முறையில் போராட்டத்தைச் செய்தவர்கள் குண்டர் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்காகினர். சத்தியாக்கிரகிகள் பொலிஸாரின் நடவடிக்கையை எதிர்த்து நின்றபோது அவர்கள் தாக்கப்பட்டு விரட்டப்பட்டதுடன் கைதுசெய்யப்பட்டனர். எந்தவித குழப்பமும் இன்றி சுதந்திர தின கொண்டாட்டங்களை நடத்துவதில் அரசாங்கம் குறியாக இருந்ததே தவிர மக்களின் மனங்களை வென்றெடுப்பதில் அக்கறை காட்டவில்லை. கொண்டாட்ட அரங்கில் பொதுமக்களின் பங்கேற்பு இல்லாமல் வீதியெங்கும் பொலிஸாரும் படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட விதம் கடந்த தசாப்தங்களில் நாடு முகங்கொடுத்த போர்க்காலத்தை நினைவுபடுத்தியது. அந்த நாட்களில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கடுமையான பாதுகாப்பின் கீழ் இடம்பெற்ற அதேவேளை விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பதையே விரும்பினார்கள். மக்களின் வாழ்வில் பெரும் அவலங்களை ஏற்படுத்தியிருக்கும் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்குப் பல வருட காலப்போர் பெருமளவில் காரணமாக இருந்ததால் அந்த கடந்த காலத்தை மீட்டுப்பார்ப்பது இன்று பொருத்தமானதேயாகும். சனத்தொகையில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்திருப்பதுடன் 40 சதவீதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இனநெருக்கடிக்கும் பொருளாதார அபிவிருத்தியின்மைக்கும் இடையிலான தொடர்பை ஏற்றுக்கொண்டவராக ஜனாதிபதி விக்கிரமசிங்க இனநெருக்கடிக்கு தாமதமின்றி அரசியல் தீர்வொன்றைக் காணும் முயற்சிகளுக்கு முன்னுரிமையைக் கொடுத்திருக்கிறார். மக்களின் கோபம் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தலைநகர் கொழும்பில் மாத்திரம் தான் இடம்பெற்றன என்றில்லை. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குறிப்பாக வடக்கிலும் இடம்பெற்றன. பிரதான தமிழ் கட்சியும் சிறிய கட்சிகளும் சுதந்திர தின நிகழ்வுகளைப் பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுத்தன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஹர்த்தாலைப் பிரகடனம் செய்து கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டனர். ஆனால், பெரும்பாலான மக்கள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களிலோ அல்லது அதற்கு எதிரான போராட்டங்களிலோ அக்கறை காட்டவில்லை. தன்னியல்பான முறையில் மக்கள் தேசியக்கொடிகளைப் பறக்கவிடவும் இல்லை. அரசாங்கமும் அவ்வாறு செய்யுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கவுமில்லை. அரசாங்கம் ஏதோ தனக்காக சுதந்திர தினத்தைக் கொண்டாடியது போன்று தோன்றியது. பொலிஸாரின் பாதுகாப்புடன் பளபளக்கும் வாகனங்களில் வந்திறங்கிய ஆளுநர்களும் அமைச்சர்களும் ஏனைய விருந்தினர்களும் காலிமுகத்திடல் சுதந்திரதின கொண்டாட்ட அரங்கில் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பந்தல்களில் அமர்ந்ததை தேசிய தொலைக்காட்சிகள் காட்டின. ஆனால், தங்களது தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னால் இருந்து அவற்றைப் பார்த்த மக்கள் ஆடம்பர வாகன வரிசைகளைக் கண்டு ஆத்திரமடைந்திருப்பார்கள். ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்துக்கு முன்னர், தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வங்குரோத்துநிலை பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து வீதிக்கு இறங்கி மக்கள் செய்த கிளர்ச்சிக்கு மத்தியில் இதே அரசியல் தலைவர்கள் பதுங்கியிருந்தார்கள். பொதுப் போராட்டங்களில் ஒருபோதுமே பங்கேற்காத மக்களும் வீதிகளுக்கு இறங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது. நாட்டின் செல்வத்தைச் சூறையாடி தங்களை பிச்சைக்காரர்களாக்கிவிட்ட அரசாங்கத் தலைவர்கள் வெளியேறவேண்டுமென்று கோருவதற்கு குழந்தைகளுடன் தாய்மார், வயோதிபர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என்று சமூகத்தின் பல பிரிவினரும் தொலைதூர இடங்களில்இருந்தும் போராட்டக்களங்களுக்கு திரண்டு வந்தார்கள். அதே மக்கள் தாங்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே திணறிக்கொண்டிருக்கும்போது அதே அரசியல்வாதிகள் ஆடம்பர வாகனங்களில் வந்து சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதை தொலைக்காட்சிகளில் பார்த்து கொதிப்படைந்திருப்பார்கள். ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் செய்துவிட்டு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தண்டனை எதுவும் இன்றி சுதந்திரமாக ஆடம்பர வாழ்க்கையை நடத்தும் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும் என்றே அரசாங்கத்தை மக்கள் கோருகிறார்கள். ஆனால், அதை அரசாங்கம் செய்யத்தயங்குகிறது போன்று தெரிகிறது. இத்தகைய பின்புலத்தில் சுதந்திர தினம் இந்த வகையாக யாருக்காகக் கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. பொருளாதாரம் படுமோசமாக வீழ்ச்சியடைந்திருக்கும் நிலைவரத்துக்கு மத்தியில் கற்பனை செய்துப்பார்த்திருக்க முடியாத முறையில் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டிருக்கிறது. நிகழ்வுக்கான செலவு தொடர்பில் மக்களின் ஆட்சேபத்தை கருத்தில் எடுக்க அரசாங்கம் முயற்சித்து இராணுவ அணிவகுப்பின் அளவைக் குறைத்தது. வாழ்வின் அழகியல் பக்கத்தைப் பிரதிபலிக்கும் கலாச்சார அணிவகுப்புக்களும் நிறுத்தப்பட்டன. சுதந்திரதினம் வேறுபட்ட முறையில் அதாவது அரசியல் தலைவர்களுக்காகவோ சர்வதேச சமூகத்துக்காகவோ அன்றி மக்களுக்காக கொண்டாடப்பட்டிருக்கவேண்டும். இந்த நிகழ்வு பெருமளவுக்கு சர்வதேச கவனத்தைப் பெறவில்லை. எம்மை உலகம் பார்க்கின்ற முறையை அது மாற்றவில்லை. அது இலங்கை மக்களின் இதயங்களையும் தொடவில்லை. சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு அவர்கள் நிச்சயமாக தங்களது நலன்களுக்கு உதவாத அந்தச் செலவினங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்திருப்பார்கள். துணிச்சலான உறுதிமொழிகள் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை வேறுபட்ட முறையில் நடத்தியிருக்கமுடியும். மக்களின் வாழ்வைப் பாழ்படுத்தியிருக்கும் வறுமையை அரசாங்கம் உணர்ந்து நடந்துகொண்டிருக்க முடியும். மக்கள் மீது அக்கறை காட்டும் பண்புகளை வெளிக்காட்டக்கூடிய முறையில் சுதந்திர தின நிகழ்வை அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்க முடியும். நாடு பூராவும் இருந்து சகல இனங்களையும் மதங்களையும் சாதிகளையும் சேர்ந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாடசாலை சிறார்களை அழைத்துவந்து பாடசாலைப் புத்தகங்களையும் சீருடைகளையும் ஒரு அடையாளபூர்வமாக அன்பளிப்புச் செய்து நாட்டின் சிறுவர்களில் முதலீடு செய்வதில் அரசாங்கத்துக்கு இருக்கும் கடப்பாட்டை வெளிக்காட்டியிருக்கலாம். இது அரசாங்கம் தவறவிட்ட – அதற்குப் பெரும் பாதகமாக அமையக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகும். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் இதன் தாக்கத்தை உணரக்கூடியதாக இருக்கும். 2048ஆம் ஆண்டில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க கொண்டிருக்கும் திட்டம் அன்றாட வாழ்க்கையை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் கவனத்தைப் பெறவில்லை. “ஒரு தாயின் பிள்ளைகள் போன்று ஐக்கியப்படுவதற்கு எங்களை நாம் அர்ப்பணிப்போம். சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடப்போகும் 2048ஆம் ஆண்டளவில் உலகின் மிகவும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கு எம்மை அர்ப்பணிப்போம்” என்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் முன்னுரிமை கொடுக்கின்ற விவகாரங்கள் குறித்து கண்டன விமர்சனங்கள் இருக்கின்ற போதிலும், தேசிய நலன்களுக்கு உகந்த முறையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஜனாதிபதி வெற்றிகாண்பார் என்று தொடர்ந்து நம்பிக்கை வைப்பவர்களும் இருக்கிறார்கள். ஜனாதிபதியின் துணிச்சலான சூளுரைகளில் ஒன்று மூன்று தசாப்த கால உள்நாட்டுப்போருக்கு வழிவகுத்த இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் கண்டு 75ஆவது சுதந்திர தினத்தில் தேசிய நல்லிணக்கத்தை எட்டி ஒரு தாய் மக்கள் போன்று ஐக்கியப்படுவதாகும். இந்தப் பணி தொடர்பில் மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர் முதலில் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியபோது சுதந்திர தினத்துக்கு முன்னதாகக்கூட அந்தப் பணி நிறைவேற்றப்பட்டுவிடக்கூடும் என்று ஒருவகை எதிர்பார்ப்பு இருந்தது. பணி நிறைவேற்றம் குறித்து சுதந்திரதின சுபவேளையிலேயே அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு அமையவில்லை. முதல் அடி கூட இன்னும் எடுத்துவைக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து பெப்ரவரி 8 ஜனாதிபதி நிகழ்த்தவிருக்கும் கொள்கை விளக்க உரை மீது இப்போது கவனம் திரும்பியிருக்கிறது. இன அடிப்படையில் பிளவுபட்ட சமுதாயம் ஒன்றில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதென்பது எளிதான காரியம் அல்ல. பல துறைகளையும் சேர்ந்த பல பிரிவினரின் ஆதரவு அதற்கு தேவை. இது தொடர்பில் ஜனாதிபதியின் உறுதிப்பாட்டின் அறிகுறி சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் மூலம் வெளிப்பட்டது. நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு இவ்வாறு நடைபெற்றிருக்கிறது. கடந்த காலப் பிளவுகளை வெற்றிகொள்வதில் ஜனாதிபதிக்கு இருக்கும் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. பல தசாப்தங்களுக்கு பிறகு சுதந்திர தினத்தன்று தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த 2015 – 2019 காலப்பகுதியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிவில் சமூகத்திடமிருந்து ஆதரவை வேண்டிநிற்கும் அம்சங்கள் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் இருக்கின்றன. கடந்த கால தவறுகளின் மரபை நாம் வெற்றிகொண்டு படிப்பினைகளைப் பெற்று தவறுகள் மீண்டும் இழைக்கப்படாத ஒரு எதிர்காலத்தை நோக்கி நாம் பயணத்தை தொடங்கவேண்டியது அவசியமாகும். கலாநிதி ஜெகான் பெரேரா https://maatram.org/?p=10631
  7. தனது முயற்சிகளுக்கு முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தயாராகும் ஜனாதிபதி February 2, 2023 —- கலாநிதி ஜெகான் பெரேரா —- பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைத்திருப்பதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவியின் அதிகாரத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவில் நாட்டுக்கும் நினைவுபடுத்தியிருக்கிறார். பாராளுமன்ற கூட்டத்தொடரை திடீரென்று ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதிக்கு வெளிப்படையான காரணம் எதுவுமில்லை. பொது நிதி, அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான முக்கியமான குழுக்கள் உட்பட 40 க்கும் அதிகமான பாராளுமன்ற குழுக்கள் செயலிழந்துவிட்டன. பெப்ரவரி 4 இலங்கையின் 75 வது சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கு பிறகு பெப்ரவரி 8 பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது 2048 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் வரை நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் புதிய கொள்கைகள் மற்றும் சட்டங்கள் பற்றி ஜனாதிபதி அறிவிப்பார் என்று அவரது அலுவலகம் அறிவித்திருக்கிறது. ஒப்பீட்டளவில் வளர்ச்சியடையாத வறுமைப்பட்ட விவசாய சமுதாயமாக இருந்த சிங்கப்பூரை பிரதமர் லீ குவான் யூ 25 வருடங்களில் உலகின் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக மாற்றிக்காட்டினார். அதே போன்று இலங்கையையும் 25 வருடங்களில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்கை ஜனாதிபதி கொண்டிருக்கிறார். நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க முனைப்புடன் செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அண்மையில் முஸ்லிம் மதத் தலைவர்களின் மகாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் சமூகம் நவீனமயமாக வேண்டும் என்றும் அதே போன்றே மத நடைமுறைகளும் நவீனமயமாக வேண்டிய தேவை இருக்கிறது என்று உறுதிபட கருத்து தெரிவித்தார். பொருளாதாரத்தை மீட்டெடுத்து பிரச்சினைகளை தீர்த்துவைப்பது தொடர்பிலும் தனது நிலைப்பாடுகளை வலுவான முறையில் அழுத்திக் கூறினார். வரியிறுப்பாளர்களின் கொள்வனவு ஆற்றலை பலவீனப்படுத்தியிருக்கும் கடுமையான வரி அதிகரிப்புகளுக்கு பரந்தளவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. முதலில் வரியிறுப்பாளர்கள் பணவீக்கத்தின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. வெளிநாட்டு கடன்களை மீளச்செலுத்தக்கூடிய நிலையில் இல்லையென்று கூறி அரசாங்கம் வங்குரோத்து நிலையைப்பிரகடனம் செய்தபோது பணவீக்கம் 80 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டது. தற்போது வரிகள் 36 சதவீதம் உயர்ந்ததை அடுத்து வரியிறுப்பாளர்கள் தங்களது மெய்யான வருமானம் பெருமளவுக்கு குறைந்துவிட்டதை காண்கிறார்கள். ஆனால் அரசாங்கம் நெகிழ்வுப்போக்கை காட்டுவதாக இல்லை. நிதியமைச்சை தனது பொறுப்பில் வைத்திருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க வரிகள் தொடர்பான விவகாரத்தில் பொதுமக்கள் மத்தியில் காணப்படும் உணர்வுகளுக்கு எதிராகவே செயற்படுகின்றார். அரசாங்க செலவினங்கள் மற்றும் அபிவிருத்தி நோக்கங்களுக்கு பெருமளவில் வரி விதிப்புக்களை தவிர்த்து மானியங்களை மக்களுக்கு வழங்கிய பல தசாப்த கால அரசாங்கங்களின் கொள்கைகளில் இருந்து விடுபடுவதற்கு நாட்டை நிர்ப்பந்திப்பதற்கு அவர் உறுதிபூண்டிருக்கிறார் போன்று தெரிகிறது. இலங்கையில் வரி அறவீடுகள் மூலம் அரசாங்கம் பெறுகின்ற வருமானம் 8 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் அதேவேளை மற்றயை நாடுகளின் வரி வருமானம் 20 — 25 சதவீதமாக காணப்படுகிறது. உள்நாட்டில் வரி அறவீடுகளின் மூலமாக வளங்களைப் பெருக்குவதை விடுத்து வெளிநாட்டு கடன்கள் மூலமாக செலவினங்களை சமாளிப்பதன் விளைவாக நீண்டகாலமாக பொருளாதாரம் மந்த வளர்ச்சியில் இருந்துவருகிறது. பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னரும் கூட இதுவே நிலைமை. 13 வது திருத்தம் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருக்கும் இன்னொரு விவகாரம் இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளாகும். இனத்துவ தேசியவாதத்துக்கு பணிந்துபோன அரசாங்கங்களினாலும் அரசியல் தலைவர்களினாலும் நீண்டகாலமாக இனநெருக்கடியை தீர்க்க முடியாமல் போய்விட்டது. இலங்கையின் இன, மத பிளவுகளின் பின்னணியில் இனத்துவ தேசியவாதியாக காட்டிக்கொள்வது அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, வாக்குகளைப் பெற்று தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு நிச்சயமான ஒரு வசதியாக இருந்து வந்திருக்கிறது. விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் காணப்பட்ட தீர்வுத்திட்டக்களை இது காலவரையில் இலங்கையில் எந்தவொரு தலைவரினாலும் நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது. இறுதியாக வந்த தீர்வுத்திட்டம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமாகும். அதற்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட 1957 பண்டாரநாயக்க — செல்வநாயகம் ஒப்பந்தம், 1965 டட்லிசேனநாயக்க — செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான தொடக்க முயற்சிகளைக்கூட முன்னெடுக்கமுடியாமல் போய்விட்டது. இனநெருக்கடி மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் ஆராய்வதற்கு கூட்டிய சர்வகட்சி மகாநாட்டில் அந்த முயற்சிகளை எதிர்ப்பவர்களை மடக்குவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க துணிச்சலை வெளிப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு தனக்கு இருக்கக்கூடிய நியாயப்பாட்டை சவாலுக்கு உட்படுத்துவதில் நாட்டம் காட்டிய இனத்துவ தேசியவாத பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “தற்போதைய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற முறையால் எனது பொறுப்பாகும். சுமார் 37 வருடங்களாக 13 வது திருத்தம் அரசியலமைப்பின் அங்கமாக இருந்துவருகிறது. நான் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது யாராவது அரசியலமைப்புக்கான 22 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலமாக கொண்டுவந்து அதை ஒழிக்கவேண்டும். அத்தகைய ஒரு சட்டமூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளினால் தோற்கடிக்கப்படுமாக இருந்தால் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டியிருக்கும். அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதுமில்லை, ஒழிக்கப்போவதுமில்லை என்று இரண்டும் இடைநடுவில் நாம் நிற்கமுடியாது” என்று அவர் கூறினார். 1987 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட காலம் தொட்டு 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுதப்படாமல் இருந்து வருகிறது. ஜனாதிபதி விக்கிரமசிங்க அமைச்சராகவும் பிரதமராகவும் இருந்த அரசாங்கங்கள் உட்பட பல அரசாங்கங்கள் அந்த திருத்தத்தை கணிசமான அளவுக்கு குறிப்பாக காணி அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் உள்ளடங்கலாக அதிகாரப்பகிர்வுக்கு உள்ளாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு தவறிவிட்டன. கூட்டத்தொடர் ஒத்திவைப்பிற்கு பிறகு பாராளுமன்றம் மீண்டும் பெப்ரவரி 8 கூடும்போது முன்னோக்கிச் செல்வதற்கான வழிவகைகள் குறித்து பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் உரையாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு வாய்ப்பு கிடைக்கும். தனது தற்துணிபின் அடிப்படையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கு தனக்கிருக்கும் அதிகாரத்தை வெளிக்காட்டிய ஜனாதிபதி இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கான தனது நோக்கையும் தேசிய நல்லிணக்கத்துக்கு பின்பற்றவேண்டிய பாதை வரைபடத்தையும் முன்வைக்கக்கூடியதாக இருக்கும். முரண்நகையான கடும் நடவடிக்கை தற்துணிபின் அடிப்படையில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி பெப்ரவரி 20 பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற கூட்டத்தொடரை திடீரென்று ஒத்திவைத்ததன் மூலம் அதே போன்று திடீரென்று அதை கலைப்பதற்கான அதிகாரத்தையும் விரைவில் பெறப்போகும் செய்தியை ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டுக்கும் கூறியிருக்கிறார். தற்போதைய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு பெப்ரவரி 20 சரியாக இரண்டரை வருடங்கள் நிறைவடைகின்றது. இரண்டரை வருடங்களுக்கு பிறகு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரத்தை அரசியலமைப்புக்கான 20 வது திருத்தம் ஜனாதிபதிக்கு வழங்குகிறது. ஆளும் கட்சியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் சென்று வாக்கு கேட்டு பிரசாரம் செய்யக்கூடிய நிலையில் இல்லை. இத்தகைய இடர்மிகு சூழ்நிலையில் அவர்கள் ஜனாதிபதிக்கு சவால் விடுக்கவோ அல்லது 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அவரின் உறுதிப்பாட்டை எதிர்க்கவோ விரும்பமாட்டார்கள். மறுபுறத்தில், ஜனாதிபதி பாராளுமன்றத்தை வழிக்கு கொண்டுவந்தாலும் கூட அதனால், இனநெருக்கடியில் விட்டுக்கொடுப்பைச் செய்து நிலைபேறான அரசியல் தீர்வொன்று காணப்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதில் வெற்றியை உறுதிசெய்யமுடியும் என்று கூறுவதற்கில்லை. இனநெருக்கடி வேறுபட்ட இன, மத சமூகங்கள் மத்தியில் புராதன உணர்வுகளைத் தூண்டுகிறது. அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் பல தசாப்தகால இனநெருக்கடிக்கும் போருக்கும் வழிவகுத்த வில்லன்களாக நோக்கப்படுகிறார்கள். ஆனால் நாட்டில் உள்ள நெருக்கடி அரசியல் கட்சிகளுக்கும் முந்தியதாகும். இலங்கையின் சமூகத் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் 1928 ஆம் ஆண்டு சுயாட்சிக்கு நாடு தயாராக இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள ஆணைக்குழுவொன்றை அனுப்பினார்கள். அதன் மதிப்பீடு எதிர்மறையானதாக இருந்தது. பெரிய சமூகத்தின் பிரதிநிதிகள் தங்களது நலன் தேசிய நலன் என்ற நிலைப்பாட்டை கொண்டவர்களாக இருந்தார்கள் என்றும் தங்களுக்குள் முரண்பாடுகளைக் கொண்ட சிறிய சமூகங்கள் சகலதினதும் பிரதிநிதிகள் பெரிய சமூகத்துக்கு எதிராக ஐக்கியப்பட்டவர்களாக இருந்தார்கள் என்று டொனமூர் ஆணைக்குழு அதன் அறிக்கையில் எழுதியது. அதனால், காலங்காலமாக நீடித்துவந்த பிரிவினை உணர்வுகளுக்கு இரையாகாமல் இருப்பது சிவில் சமூகத்தின் முக்கிய பொறுப்பாகும். இனநெருக்கடிக்கான தீர்வு மற்றும் 13 வது திருத்தம் சாத்தியமாக்குகின்ற வகையிலான இனங்களுக்கிடையிலான அதிகாரப்பரவலாக்கலின் அவசியம் குறித்து மக்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு சிவில் சமூகத்தில் அறிவார்ந்த தலைவர்கள் பற்றுறுதியுடன் பாடுபடவேண்டும். இதற்கான அறிகுறிகளை அறகலய போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது காணக்கூடியதாக இருந்தது. அந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய இளைஞர் யுவதிகள் இனம், மதம், சாதி அடிப்படையில் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி சகலரும் சமத்துவமான குடிமக்களாக இருக்கவேண்டும் என்று பகிரங்கமாக முழக்கத்தை எழுப்பினார்கள். குறுகிய தேர்தல் நோக்கங்களுக்காக இனத்துவ தேசியவாத அரசியல்வாதிகள் மேற்கொள்கின்ற சூழ்ச்சித்தனமான நடவடிக்கைகளுக்கு இரையாகாமல் இருப்பதற்கு அந்த இளைஞர்களும் யுவதிகளும் உறுதிபூண்டார்கள். அறிவுபூர்வமாக சிந்திக்கும் அந்த இளம் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி பொது மன்னிப்பொன்றை வழங்கி பிரச்சினைகளுக்கான தீர்வின் பங்காளிகளாக மாற்றுவதற்கு பதிலாக அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கொடுமையான நடவடிக்கைகளை எடுப்பது ஒரு முரண்நகையாகும். கலாநிதி ஜெகான் பெரேரா https://arangamnews.com/?p=8641
  8. இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு இருக்கும் காலஎல்லை இதுவே January 26, 2023 — கலாநிதி ஜெகான் பெரேரா — பெருமளவு தாமதத்துக்கு பிறகு இறுதியில் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி தேர்தல்கள் மார்ச் 9 நடத்தப்படும் என்று தீர்மானித்திருக்கிறது. இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம் ஏற்கெனவே ஒரு வருடத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. ஒரு வருடத்துக்கும் அப்பால் தேர்தல்களை ஒத்திவைத்தால் அது சட்டவிரோதமான ஆட்சிமுறைச் சிக்கலுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதுடன் அதன் விளைவாக சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கும். நாடு இப்போது தேர்தல் திசை நோக்கி நகர்த்தப்படுகிறது. இது ஒன்றும் அரசாங்கத்தின் விருப்பம் அல்ல. தங்களது வெற்றி வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கும் எதிர்க்கட்சிகளினதும் அவற்றின் வேட்பாளர்களினதும் தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதில் அக்கறைகொண்ட சிவில் சமூக தேர்தல் கண்காணிப்பு குழுக்களினதும் விருப்பமாகும். மக்களினால் தெரிவுசெய்யப்படும் பதவிகளைக் கைப்பற்றுவதற்கு அரசியல்வாதிகள் வாய்ப்புக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக பாடுபடுகின்ற சிவில் சமூக அமைப்புக்களை பொறுத்தவரை, அவை முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும், ஜனநாயக பொறிமுறைகள் தொடர்ந்து செயற்படுவதை உறுதிசெய்யவதில் நாட்டம் கொண்டிருக்கின்றன. உள்ளூராட்சி தேர்தல்களை மார்ச் 9 நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருக்கின்ற போதிலும் உண்மையில் அந்த நேரத்தில் அவை நடைபெறுமா என்ற சந்தேகம் தொடருகிறது. தேர்தல்களை நடத்துவதற்கு திறைசேரியில் பணமில்லை என்று அரசாங்க பேச்சாளர்கள் கூறுகிறார்கள். இதை அரசாங்கம் உயர் நீதிமன்றத்திலும் கூறியிருக்கிறது. பொருளாதாரம் மீட்சிபெறும் வரை நாட்டுக்கு அரசியல் உறுதிப்பாடு தேவைப்படுகிறது என்று ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் வேறு பேச்சாளர்கள் வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புதுமையான வாதமும் முன்வைக்கப்படுகிறது. அதாவது தேர்தல் திகதி குறித்த தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு எடுத்தபோது அதன் ஐந்து உறுப்பினர்களில் இருவர் மாத்திரமே பிரசன்னமாகியிருந்ததால் அந்த தீர்மானம் கேள்விக்குரியதாம். ஏனைய மூன்று உறுப்பினர்களும் மெய்நிகர் காட்சி வழியாக கூட்டத்தில் பங்கேற்றதாக ஆணைக்குழு பதிலளிக்கவேண்டியேற்பட்டது. உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகள் வெற்றி பெறலாம் அல்லது வெற்றி பெறாமல் போகலாம். ஆனால், அது எவ்வாறு அமைந்தாலும் விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும். தேர்தல் ஆணைக்குழுவினால் திகதி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் கூட ஏதாவது வழியில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமாக இருந்தால் அதை எதிரணி கட்சிகள் கடுமையாக எதிர்க்கும். அவை நிவாரணம் பெற நீதிமன்றங்களை நாடும். சிவில் சமூக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் இதில் இணைந்துகொள்ளும். அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிர்ப்பந்தங்களை கவனத்தில் எடுப்பதா அல்லது நேரடியாக சட்டத்தின் பிரயோகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்பதே நீதிமன்றம் எதிர்நோக்கக்கூடிய கேள்வியாக இருக்கும். அண்மைய வழக்குதளில், மிகவும் குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பெரிதும் விரும்பப்படுகின்ற ‘முறைமை மாற்றத்தை’ சட்ட முறைப்படியான வழிமுறைகளின் மூலம் கொண்டுவருவதற்கு நாட்டத்தைக் காட்டியிருக்கிறது. போராட்ட இயக்கம் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று கோரி வீதிப்போராட்டங்களில் இறங்கவேண்டும் என்று பெருமளவு நெருக்குதல்கள் அரசியல் கட்சிகள் மீது பிரயோகிக்கப்படுகின்றன. அவ்வாறு செய்வதற்கு எதிரணி கட்சிகள் துணிச்சல் கொள்ளலாம் ஏனென்றால் மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் தேர்தல் தோல்விக்கு அரசாங்கம் அஞ்சுகிறது என்று அவை ஒரு மதிப்பீட்டை செய்யக்கூடும். முறைகேடாக சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறியிருக்கும் நிலையில், பொருளாதாரத்தைப் பாதுகாக்கவேண்டிய தேவை குறித்த அரசாங்கத்தின் கருத்தை பெருமளவுக்கு கவனத்தில் எடுக்கக்கூடிய நிலையில் மக்கள் இல்லை. நேர்மைக்கேடான முறையில் வர்த்தகக் குழுக்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கின்ற பணம் 53 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாக செய்திகள்வெளியாகியிருக்கின்றன. இந்த தொகை இலங்கையின் கடன்களை தீர்க்கப் போதுமானவை. கடுமையான வரிகளினாலும் பணவீக்கத்தினாலும் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் இதனால் பெரும் ஆத்திரமடைந்திருக்கிறார்கள். அந்த பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இந்த கம்பனிகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை. மக்களின் ஆதரவு மோசமாக குறைந்து போயிருக்கும் பின்னணியில் போராட்ட இயக்கத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கத்தின் ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத — ஜனநாயக தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்கு தயங்குகி்ன்ற ஒரு அரசாங்கத்தின் சார்பில் நடவடிக்கைகளில் இறங்குவதனால் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் குறித்து பாதுகாப்புபடைகளும் அக்கறை கொள்ளக்கூடும். மக்களின் ஒரு பகுதியான ஆயுதப்படைகள் அவர்களுக்காக அவர்களுடன் நிற்கவேண்டும் என்று உணரக்கூடும். சர்வதேச மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் இரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக கனடா அரசாங்கம் விதித்த தடைகள் பாதுகாப்பு படைகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும். அவர்கள் இருவருக்கும் நேர்ந்த கதி தங்களுக்கும் நேரலாம் என்று படையினர் உணரக்கூடும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் போராட்ட இயக்கத்தை எதிர்கொள்வதில் பாதுகாப்பு்படைகள் மிகுந்த கட்டுப்பாடான முறையில் நடந்துகொண்டதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுடுத்த வேண்டியிருக்கிறது. தனது ஆணையை இழந்துவிட்டதாக தோன்றிய ஒருஜனாதிபதிக்கு ஆதரவாக — மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்பட பாதுகாப்பு படைகள்விரும்பவில்லை. மறுபுறத்தில், அரசாங்கம் தேர்தலை நடத்தவிடுவதற்கு தீர்மானித்தால் அதன் அச்சங்களையும் நடைமுறையில் காண நேரிடலாம். பொருளாதாரத்தை இயக்கநிலைக்கு கொண்டுவருவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் இயலாமை அதன் தேர்தல் வாய்ப்புக்களுக்கு பாதகமாக அமையும். பொருளாதார உறுதிப்பாடு போன்ற ஒரு தோற்றப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் இல்லாமலும் நீண்ட நேர மின்வெட்டு இல்லாமலும் இருக்கின்ற அதேவேளை பொருளாதாரம் அதிகப் பெரும்பான்மையான மக்களுக்கு சிறிய வருமானத்தையே கொடுக்கிறது. அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் பொருளாதாரம் 8 சதவீதத்தினால் சுருங்கிய அதேவேளை இவ்வருடம் 4 சதவீதத்தினால் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்க்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இன்னமும் கிட்டாத நிலையில் பொருளாதார வளர்ச்சி நோக்கங்களுக்கான சர்வதேச கடனுதவிகளை அரசாங்கத்தினால் பெறமுடியாமல் இருக்கிறது. உறுதிமொழி உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு குறிப்பிடத்தக்க ஒரு தோல்வி அல்லது முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் நிலை கூட ஏற்பட்டால், அதன் நியாயப்பாடு மேலும் குறைந்துவிடும். தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு தீர்மானங்களை எடுப்பதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் ஆற்றலில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். 2020 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் பெற்ற ஆணையை வைத்துக்கொண்டு தற்போது அரசாங்கம் பதவியில் இருப்பதற்கு நியாயப்பாடு இருப்பதாக உரிமை கோரக்கூடியதாக இருக்கிறது. அந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்தான லெற்றி கிடைத்தது. இப்போது கூட 225 ஆசனங்களில் 134 ஆசனங்களை அது கொண்டிருக்கிறது. ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகவைப்பதில் கடந்த வருடம் போராட்ட இயக்கம் கண்ட வெற்றி முன்னைய அந்த ஆணையின் நியாயப்பாட்டை வலுவிழக்கச் செய்துவிட்டது. அவருக்கு பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் மற்றும் இராணுவ பலத்தை மிகவும் சாதுரியமான முறையில் பிரயோகித்து போராட்ட இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதில் வெற்றிகண்டார். ஆனால் உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஏற்படக்கூடிய ஒரு தோல்வி பயனுடைய முறையில் ஆட்சியைத் தொடருவதில் அரசாங்கத்தின் ஆற்றலை பலவீனப்படுத்திவிடும். உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றனவோ இல்லையோ, அடுத்த கட்டப் போராட்ட இயக்கம் பிரதான அரசியல் எதிரணிக் கட்சிகளின் தலைமயிலேயே முன்னெடுக்கப்படும். அது ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தலைமைத்துவம் இல்லாமல் தன்னியல்பாக மூண்ட முதல் கட்டபோராட்டத்தைப் போன்று இருக்காது. கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் பதவிவிலகியபோது போராட்ட இயக்கத்தினால் சொந்த தலைமைத்துவத்தின் மூலம் அதை பதிலீடு செய்யக்கூடியதாக இருக்கவில்லை. ஆனால் இனிமேல் போராட்ட இயக்கத்துக்கு பிரதான எதிரணி கட்சிகளே தலைமைதாங்கி வழிநடத்தும். பொதுத்தேர்தலை நடத்தவேண்டும் என்பதே அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கும். பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தில் இரண்டரை வருடங்கள் நிறைவடைந்து அதை எந்த நேரத்திலும் கலைக்கக்கூடிய அதிகாரத்தை ஜனாதிபதி பெறும் தருணத்துடன் சமாந்தரமானதாக அந்த கோரிக்கை அமையும். இத்தகைய சூழ்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக உறுதியளித்துவரும் அரசியல் சீர்திருத்தங்களை ஜனாதிபதி முன்னெடுப்பதற்கான கால எல்லை சுருங்கிப்போகும். நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நீடித்துவருகின்ற சிக்லான இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி இன மற்றும் மத சிறுபான்மையினங்கள் மத்தியில் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் பெரும் நம்பிக்கையை தோற்றுவித்திருக்கிறது. ஜனாதிபதியும் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையான தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் பிரச்சினைகளை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எந்தவிதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படாமலும் கூட பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்தல், பயங்கரவாதத்தை ரத்துச் செய்தல், சொத்துக்குரியவர்களின் உரிமைகளைக் கருத்தில் எடுக்காமல் இராணுவத்தினாலும் தொல்பொருளியல் திணைக்களத்தினாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், கடந்தகால மனித உரிமை மீறல்களை விசாரணை செய்து மனக் காயங்களை குணப்படுத்துவதற்கான வழிவகைகளை முன்வைப்பதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைத்தல் என்பனவே அவையாகும். ஜனாதிபதி விக்கிரமசிங்க நினைத்தால் நாட்டில் தேசிய ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கு குறுக்கே நிற்கும் தடைகளை அகற்றி, நோபல் சமாதானப் பரிசு கமிட்டியினால் பரிசீலிக்கப்படக்கூடிய முன்னுதாரணத்தை உலகிற்கு காட்டிய ஒரு தலைவராக இலங்கையின் வரலாற்றில் தனது முத்திரையைப் பதிக்கமுடியும். https://arangamnews.com/?p=8610
  9. தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் Photo, AP/ Eranga Jayawardena via Yahoo News இதுகாலவரை தங்களது அதிகாரம், மதிப்பு மற்றும் சட்ட விலக்கு ஆகியவை காரணமாக தீண்டப்படமுடியாதவர்களாகக் கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் மூவரை நேரடியாக பாதித்த கடந்த வாரத்தைய எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகள், தீர்க்கப்படாமல் இருக்கும் போர்க்கால மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாளுவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் யோசனைக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும். முதலாவது, முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்‌ஷவும் கோட்டபாய ராஜபக்‌ஷவும் பதவியில் இருந்த காலப்பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக அவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படுவதாக கனடா அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பாகும். கனடாவில் அவர்களுக்கு இருக்கக்கூடிய எந்தவொரு சொத்தும் முடக்கப்படமுடியும். அவர்கள் கனடாவுக்கு பயணம் செய்வதும் தடைசெய்யப்படும். முன்னர் மனித உரிமை மீறல்களைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவே குறிப்பாக அமெரிக்காவினால் மட்டுப்படுத்தப்பட்ட பயணத்தடைகள் விதிக்கப்பட்டன. இரண்டாவது எதிர்பார்க்கப்படாத நிகழ்வு 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதின்றம் வழங்கிய தீர்ப்பாகும். அந்தத் தாக்குதல்கள் இடம்பெற்ற நேரத்தில் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த உயர்மட்ட உறுப்பினர்கள் விழிப்புடன் செயற்படவில்லை என்று குற்றஞ்சாட்டி பாதிக்கப்பட்ட குழுக்கள் தங்கள் சார்பிலும் பாதிக்கப்பட்ட ஏனைய மக்கள் சார்பிலும் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தன. அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட உறுப்பினர்களும் தனிப்பட்ட முறையில் இந்த இழப்பீட்டை வழங்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள். இந்த இழப்பீட்டுத்தொகை இலங்கையின் தராதரங்களின் பிரகாரம் நோக்கும்போது மிகவும் அதிவிசேடமானதாகும். ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கும் இந்தத் தீர்ப்பு தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் அரச அதிகாரிகள் நீதித்துறையின் நடவடிக்கைக்கு உட்படவேண்டியவர்களாகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. எதிர்வரும் நாட்களிலும் மாதங்களிலும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பொறுப்புக்கூறல் செயன்முறைகள் மேலும் உத்வேகம் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கனடாவின் தீர்மானம் அந்த நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் அந்நாட்டு அரசாங்கம் காட்டிய அக்கறையின் விளைவானதாகவே இருந்திருக்கிறது எனலாம். புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதியொருவர் கனடா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார். ஏனைய மேற்கு நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்கள் இதேபோன்ற நடவடிக்கைகளை தங்களது அரசாங்கங்கள் எடுக்கக்கூடியதாக செல்வாக்கு செலுத்துமளவுக்கு பெருவாரியானவர்களாகவோ அல்லது செல்வாக்கு கொண்டவர்களாகவே இல்லை. ஆனால், சகல மேற்கு நாடுகளும் சர்வதேச நியாயாதிக்கக் கோட்பாட்டை ஆதரிக்கின்றன. இதன் மூலம் உலகின் எந்தப்பகுதியிலும் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் (அவற்றைச் செய்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும்) அந்த நாடுகளின் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட முடியும். அந்த நாடுகளின் பிரசைகள் தனிப்பட்ட முறையில் தங்களது முறைப்பாடுகளின் நம்பகத்தன்மைக்கான பூர்வாங்க சான்றாக கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பயன்படுத்தி வழக்குகளைத் தொடரமுடியும் என்பதே இதன் அர்த்தமாகும். இத்தகைய நாடுகளின் வரிசையில் இறுதியாக சேர்ந்திருக்கிறது அமெரிக்கா. உக்ரெய்ன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து தோன்றிய சூழ்நிலைகளில், மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் பாதுகாப்பாக தங்கியிருக்கக்கூடிய ஒரு நாடாக அமெரிக்கா நோக்கப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் சர்வதேச சட்டத்துக்கு இசைவான முறையில் தனது சட்டக்கோவையை வாஷிங்டன் கொண்டுவந்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடன் இந்த மாதம் புதிய சட்டம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறார். சர்வதேச மனித உரிமைகளை மீறியதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அமெரிக்காவில் இருந்தால் – அவர்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்த மீறல்கள் எந்த நாட்டில் இடம்பெற்றிருந்தாலும் – சமஷ்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இந்த சட்டம் அமெரிக்க அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கிறது. இலங்கையின் பல தலைவர்களின் குடும்பங்கள் அமெரிக்காவில் இருக்கின்றன. நிதிச் சொத்துக்களையும் அங்கு அவர்கள் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்புலத்தில் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட சட்டமாற்றத்தினால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று இந்தத் தலைவர்கள் கவலைப்படுவார்கள். முன்னாள் ஜனாதிபதிகளை இலக்குவைத்து கனடா அரசாங்கம் விதித்திருக்கும் தடைகளில் ஒப்பீட்டளவில் கீழ்மட்டத்தில் உள்ள இரு இராணுவ அதிகாரிகளும் உள்ளடக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும். மனித உரிமைகளை மீறியிருக்கக்கூடிய பரந்தளவு பிரிவினரை இந்தத் தடைகள் இலக்காகக் கொண்டுள்ன என்பதே இதன் அர்த்தமாகும். அந்த உரிமை மீறல்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களும் சம்பந்தப்படாதவர்களும் இதில் உள்ளடங்கியிருக்கலாம். ஆனால், உத்தரவுகளை வழங்குகின்ற தொடர் கட்டளை பொறுப்புக்களில் அவர்கள் இருந்திருக்கலாம். இதனால் இலங்கையின் பாதுகாப்புப் படைகளில் உள்ளவர்கள் அல்லது பாதுகாப்பு நிறுவனத்தில் உள்ளவர்கள் மனதில் ஒரு பாதுகாப்பின்மை உணர்வு தோன்றும். சர்வதேச நியாயாதிக்கத்தின் அடிப்படையில் வழக்குகளைத் தொடுப்பதற்கு அனுமதிக்கின்ற நாடுகளில் வழக்குகளை எதிர்நோக்குவதில் இருந்து தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் உணருவார்கள். தற்போது கூட போர்க்காலத்தில் படையணிகளில் சேவையாற்றிய ஆனால் எந்த விதமான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத நற்பெயரைக் கொண்ட இராணுவ அதிகாரிகள் மனித உரிமைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக தங்களுக்கு பயிற்சிக்கான சர்வதேச வாய்ப்புக்களையோ அல்லது சர்வதேச சேவைகளில் பணியாற்றக்கூடிய வாய்ப்புக்களையோ பெறமுடியாதவர்களாக இருக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது கத்தோலிக்க திருச்சபையோ இழப்பீட்டு மட்டத்துடன் அல்லது உயர் நீதிமன்றத்தின் மட்டுப்படுத்தப்பட்ட முடிவுகளுடனோ திருப்திப்படக்கூடிய சாத்தியம் இல்லை. குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இருந்திருக்கக்கூடியவர்கள் பற்றிய உண்மையை அறிய அவர்கள் விருப்புவார்கள். அத்துடன், எந்தளவு இழப்பீட்டை கொடுத்தாலும் அது மாண்டுபோன தங்கள் அன்புக்குரியவர்களின் உயிரின் மதிப்புக்கு ஈடாகாது என்று அவர்கள் கூறுவார்கள். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து திருப்தியடைவதாக கத்தோலிக்க திருச்சபை ஏற்கெனவே கூறியிருக்கின்ற போதிலும், குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை அது தனது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. “உயர்நீதிமன்றத்தினால் வியாழக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருக்கக்கூடிய உண்மையை கண்டறிவதில் மேலும் வெற்றிகளுக்கு வழிவகுக்கும் என்று நாம் நம்புகிறோம். தாக்குதல்கள் மீதான விசாரணைகள் தொடர்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைக் காண நாம் விரும்புகிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஸ்கொட்லண்ட் யார்ட்டின் உதவியுடன் புதிய விசாரணையொன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தற்போதைய ஜனாதிபதியும் கூறினார். ஆனால், எதுவும் நடக்கவில்லை” என்று கார்டினல் மல்கம் ரஞ்சித் கூறினார். இதேபோன்ற நிலைமையே மூன்று தசாப்தகால இனப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரையிலும் காணப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை போரில் இழந்தார்கள். இந்த இழப்பு ஒரு இனத்துக்கு மாத்திரம் மட்டுப்பட்டதாக இல்லாமல் சகல சமூகங்களும் பாதிக்கப்பட்டன. ஆனால், தமிழர்களே கூடுதல் இழப்புகளைச் சந்தித்தார்கள். இவற்றில் சில சம்பவங்கள் விசாரிக்கப்பட்டன. இராணுவ நீதிமன்றங்களினால் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் குற்றச்செயல்களுக்காக இராணுவ அதிகாரிகள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிவில் நீதிமன்றங்களினால் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார். அதனால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கவலைகொண்டுள்ளார்கள். போர்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கங்கள் அக்கறையில்லாத மனோபாவத்தையே வெளிக்காட்டி வந்திருப்பதுடன் அந்த பிரச்சினைகள் வேண்டிநிற்கும் கவனத்தையோ முன்னுரிமையையோ கொடுக்கத் தவறிவிட்டன. தேசிய பொறிமுறைகள் முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக கனடா அரசாங்கம் விதித்திருக்கும் தடைகள் மனித உரிமை மீறல்கள் விவகாரம் எந்தளவு பரந்த வீச்செல்லையக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் உரியமுறையில் கையாளப்படவேண்டிய தேவையை அவை சுட்டிக்காட்டுகின்றன. அந்தப் பிரச்சினைகளை அலட்சியம் செய்யவோ நிராகரிக்கவோ முடியாது. அவை கிளப்பப்பட்ட பிறகு காணாமல் போய்விடாது. இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது (1983 – 2009) திட்டமிட்ட முறையில் முழு அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக கனடா அரசாங்கம் விளக்கம் அளித்திருக்கிறது. இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களுக்கு திட்டமிட்ட முறையில் சட்ட விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போக்கு தொடருவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளளில் முன்னேற்றம் ஏற்படமுடியாமல் இருப்பதுடன் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளும் ஆபத்துக்குள்ளாகியிருக்கின்றன. அரசியல் தலையீட்டின் விளைவாக – குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டபாய ராஜபக்‌ஷவினதும் மஹிந்த ராஜபக்‌ஷவினதும் காலங்களில் – போர்க்குற்றங்களைச் செய்ததாக நம்பகமாகக் கூறப்பட்ட பெருவாரியான முன்னாள் மற்றும் தற்போதைய அரச அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வேண்டுமென்றே கைவிடப்பட்டன அல்லது குற்றவாளியாகக் காணப்பட்டவர்களுக்கு எதிரான தீர்ப்புகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன என்று கனடா கூறியிருக்கிறது. உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அரசாங்கம் அதன் உள்ளகப் பொறிமுறைகள் வலிமைவாய்ந்தவை என்றும் சர்வதேச தராதரங்களுக்கு இசைவானவை என்றும் காண்பிக்கவேண்டிய தேவை இருக்கிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இலங்கையின் நீதித்துறை சுயாதீனமானது என்றும் செயலூக்கம் உடையது என்றும் சர்வதேச சமூகம் நம்புவதற்கு ஓரளவுக்கு உதவும். பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளையும் விசாரணைக்கு எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் இணங்கியிருக்கிறது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதி கூட்டத்தொடரில் பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. தவறான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் ஊழல் மோசடிகள் நாடு எதிர்நோக்கும் பாரதூரமான பிரச்சினைகள். அவற்றுக்காக புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையோ எதிர்க்கட்சிகளையோ குற்றஞ்சாட்ட முடியாது. இறுதியாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை படுமோசமான தோல்வியைச் சந்தித்தது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். நிதி முறைகேடுகளுக்காகவும் தவறான பொருளாதார முகாமைத்துவத்துக்காகவும் குற்றஞ்சாட்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, முன்னாள் நிதியமைச்சர்கள் மஹிந்த ராஜபக்‌ஷ, பசில் ராஜபக்‌ஷ மற்றும் 36 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது முக்கியமான ஒரு திருப்புமுனையாகும். இந்த வழக்குகள் ட்ரான்ஸ்பேரென்சி இன்டர்நஷனல் இலங்கைப் பிரிவினாலும் வேறுபலராலும் தொடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை 203 ரூபாவாக நிர்ணயிப்பதற்கு நாணய சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்கள், சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுவதில் காட்டிய தாமதம், வெளிநாட்டு செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி 18 ஜனவரி 2022ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அரசாங்க பிணைமுறியை செலுத்தியமை ஆகியவை தொடர்பில் கணக்காய்வு செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கணக்காய்வாளர் நாயகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பொருளாதாரக் குற்றங்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் ஒரு முன்னோடியான நடவடிக்கையை எடுக்குமேயானால் ஆட்சிமுறையில் பொறுப்பக்கூறலை நாடிநிற்கின்ற நாடுகளின் முன்னரங்கத்தில் இலங்கையும் இடம்பெறக்கூடிய சூழ்நிலை தோன்றும். அதன் மூலம் நாட்டின் நிர்வாக மற்றும் அரசியல் பதவிகளை மனமுவந்து முன்வந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய தலைமுறையொன்று உருவாகி போராட்ட இயக்கம் நாடிநின்ற ‘முறைமை மாற்றத்துக்கு’ வழிவகுக்கக்கூடியதாக இருக்கும். அத்தகைய சாதகமான மாற்றங்கள் மீண்டும் சர்வதேச ஆதரவு பெருமளவில் கிடைக்கவும் கடந்த பல தசாப்தங்களாக தாழ்ந்த மட்டத்துக்குச் சென்ற முதலீடுகள் வந்து குவியவும் வழிவகுக்கும். கலாநிதி ஜெகான் பெரேரா https://maatram.org/?p=10596
  10. சமூகத்தின் சகல தரப்புகளையும் அரசின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் அரவணைப்பதே உண்மையான நல்லிணக்கம் Photo, Eranga Jayawardena/AP மனித உரிமைகளில் அக்கறைகொண்ட பல அமைப்புகள் கடந்த வாரத்தை பல நிகழ்வுகளை நடத்துவதற்கு அர்ப்பணித்தன. குறிப்பாக, போராட்ட இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகு மனித உரிமைகள் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறிவிட்டது. தேசிய பாதுகாப்புக்கும் உறுதிப்பாட்டுக்கும் முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் நீதிக்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகிறது. பொருளாதாரம் சீர்குலைந்துபோன பின்புலத்தில் நீதி தொடர்பான பிரச்சினை முன்னரங்கத்துக்கு வந்திருக்கிறது. பொருளாதார சீர்குலைவு சில பிரிவினரை பெருமளவுக்கு பாதிக்காமல் இருக்கக்கூடும் என்ற போதிலும் சனத்தொகையின் மிகப்பெரிய பெரும்பான்மையை பாரதூரமாகப் பாதிக்கின்றது. பொருளாதாரம் மேலும் கீழ் நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், அந்த அவலத்துக்கு பெருமளவுக்கு பொறுப்பானவர்கள் இன்னமும் அதிகாரத்தில் இருப்பது மாத்திரமல்ல, தங்களது செயற்பாடுகள் கடந்தகாலத்திலும் சமகாலத்திலும் மக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்களை அலட்சியம் செய்து தங்களது ஆட்களை மேலும் அதிகாரப்பதவிகளுக்குக் கொண்டுவருவதை காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைந்த கடைசி காலாண்டில் பொருளாதாரம் 11.8 சதவீதத்தினால் சுருங்கிவிட்டது என்ற பொருளாதாரத் தகவல் வரவிருக்கும் ஆபத்தின் முன்னறிகுறியாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டின் இடர்மிக்க ஆனால் அதேவேளை புரட்சிகரமான நிகழ்வுகள் அவற்றுக்குப் பின்னர் இடம்பெற்ற அரச அடக்குமுறையினால் மறுதலையாக்கப்படவில்லை என்பதை இது காட்டுகிறது. போராட்ட இயக்கம் மீதான அரசியல் அடக்குமுறை பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முதலீடுகளைக் கவரும் வகையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பது வெளிப்படையானது. மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கடந்தவாரம் நான் பங்கேற்ற மூன்று நிகழ்வுகளில் இது பிரதிபலித்தது. இரு நிகழ்வுகள் உயிர்வாழ்வுக்கான கூட்மைப்பு, போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கம் என்று சிவில் சமூக அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மூன்றாவது நிகழ்வை அரச நிறுவனமான தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்தது. குறிப்பாக, மூன்றாவது நிகழ்வு இலங்கைச் சமூகத்தின் பல்வகைமையையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கக்கூடிய முறையில் அமைந்த காரணத்தினால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மெச்சக்கூடியதாகவும் அமைந்தது. இவ்வாறு அமைவது மிக அரிதாகும். மனித உரிமைகள் ஆணைக்குழு பல்வேறு காரணங்களுக்காக அண்மைக்கால நிகழ்வுப்போக்குகளில் கணிசமானளவுக்கு கவனத்தைச் செலுத்தியது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்போதைய உறுப்பினர்கள் (பதவியில் இருக்கும் ஜனாதிபதி தான் விரும்பிய எவரையும் நியமிப்பதற்கான தற்துணிபு அதிகாரத்தை அவருக்கு வழங்குகின்ற) அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்டவர்கள். அந்த திருத்தம் ஜனாதிபதியின் கைகளில் மட்டுமீறிய அதிகாரங்களைக் குவிக்கும் நோக்குடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் ஆரம்ப காலப்பகுதியில் கொண்டுவரப்பட்டது. ஆணைக்குழு தரங்குறைப்பு 20ஆவது அரசியலமைப்பு திருத்தமும் சுயாதீனமான நிறுவனங்களைப் பலவீனப்படுத்திய செயல்களும் மனித உரிமைகள் விவகாரங்கள் மீது கவனத்தைச் செலுத்துகின்ற சிவில் சமூக அமைப்புகளினதும் சர்வதேச சமூகத்தினதும் கடுமையான கண்டனத்துக்குள்ளாகின. இதன் துரதிர்ஷ்டவசமான விளைவாக சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ‘ஏ’ அந்தஸ்தில் இருந்து ‘பி ‘ அந்தஸ்துக்கு தரமிறக்கப்பட்டது. இதனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அவதானிப்புகளும் அபிப்பிராயங்களும் கூடுதலான அளவுக்கு எச்சரிக்கையுடன் நோக்கப்பட்டதுடன் கனதி குறைந்தவையாகவும் கருதப்பட்டன. இது உலகில் நல்லாட்சியை மேம்படுத்துவதற்கான ஆணையைக்கொண்ட சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கக்கூடிய பொருளாதார மற்றும் நிறுவன ரீதியான ஆதரவின் மட்டத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். மனித உரிமைகள் ஆணைக்குழு தரங்குறைப்பு சர்வதேச கூட்டுப்பங்காண்மையின் ஊடாக பெறப்பட்டிருக்கக்கூடிய டொலர்கள் வருகையை குறைத்ததன் மூலம் தேசிய பொருளாதாரத்தை மறைமுகமாக பாதித்திருக்கிறது. அது நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சர்வதேசத்தின் மத்தியில் தாழ்ந்த எண்ணம் உருவாகுவதற்கும் வழிவகுத்தது. இதன் விளைவுகளில் ஒன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ரத்துச் செய்வது உட்பட பெருமளவு மனித உரிமைகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறக்கூடிய சாத்தியம் குறித்து இலங்கையை எச்சரிக்கை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளக்கூடிய தீர்மானமாகும். 20ஆவது திருத்தத்தின் விளைவாக இலங்கையின் நீதிப் பொறிமுறையின் நம்பகத்தன்மை பலவீனப்படுத்தப்பட்டமை கடந்த அக்டோபரில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதிக் கூட்டத்தொடரில் நாட்டுக்கு எதிராக கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் பங்களிப்புச் செய்தது. அரசாங்கம் கொண்டுவந்த 21ஆவது அரசிலமைப்பு திருத்தம் பொதுவில் வரவேற்கப்பட்டது என்றாலும் அதன் மூலமாக 20ஆவது திருத்தத்தை ரத்துச் செய்யும் பணி முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை. உதாரணமாக, நாடாளுமன்றத்தின் ஐந்து வருட பதவிக்காலத்தில் இரண்டரை வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தனது தற்துணிபின் அடிப்படையில் அதைக் கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி இன்னமும் கொண்டிருக்கும் அதேவேளை தனது கட்டுப்பாட்டில் பல அமைச்சுக்களை அவரால் வைத்திருக்கவும் முடியும். தான் விரும்புகின்ற எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் அமைச்சராக நியமிக்கக்கூடிய தற்துணிபு அதிகாரத்தையும் ஜனாதிபதி கொண்டிருக்கிறார். ஆனால், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் விவகாரத்தைப் பொறுத்தவரை, தன்னெண்ணப்படி செயற்படுவதற்கு ஜனாதிபதிக்கு 20ஆவது திருத்தத்தின் கீழ் இருந்த அதிகாரம் புதிய திருத்தத்தின் மூலம் பறிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்க நபர்கள் நியமிக்கப்படக்கூடிய பெருமளவு சாத்தியத்துக்கு வழிபிறக்கும். ஆணைக்குழுக்களை மீள அமைத்தல் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை மீள நியமிப்பதற்கான ஏற்பாடுகளையும் 21ஆவது திருத்தம் கொண்டிருக்கிறது. தற்போதைய தருணத்தில் அரசாங்கத்தின் கொள்கையுடன் இணங்கிப்போகாத சுயாதீனமான நிலைப்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் எடுத்திருப்பதால் அவற்றுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம் தெரிவித்திருக்கிறார். சர்ச்சைக்குரிய பல விவகாரங்களில் இவ்விரு ஆணைக்குழுக்களும் எடுத்திருக்கும் நிலைப்பாடுகளை சிவில் சமூகத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டியிருக்கும் நிலையில் அதன் உறுப்பினர்களை அரசாங்கம் மாற்றினால் அது துரதிர்ஷ்டவசமானது. அரசாங்கத்தின் அதிருப்தியை சம்பாதிக்கவேண்டிய ஆபத்து இருக்கின்றபோதிலும் கூட, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் இலட்சியங்களுக்காக குரல் கொடுக்கின்ற ஒரு அரச நிறுவனத்துக்கு ஒருமைப்பாட்டை காண்பிக்கவேண்டும் என்ற எனது விருப்பமே மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் பங்கேற்கவேண்டும் என்று என்னைத் தூண்டியது. அந்த நிகழ்வு நாட்டைப் பாதிக்கின்ற மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமானதும் அழுத்தமானதுமான அணுகுமுறையொன்றை கடைப்பிடித்ததால் எடுத்துக்காட்டாக அமைந்தது. அடிப்படை மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் உள்ளடங்கியிருக்கும் அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் உரிமைகள் மீதே தற்போது கவனம் குவிந்திருக்கிறது. ஒன்றுகூடுவதற்கான உரிமையும் சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையும் இயங்குநிலை ஜனநாயகம் ஒன்றுக்கு அடிப்படையாகும். போராட்ட இயக்கம் ஒடுக்கப்பட்டிருப்பதன் விளைவாக இந்த உரிமைகள் அரசாங்கத்தினால் மட்டுப்படுத்தப்பட்டும் குறுக்கப்பட்டும் இருக்கும் சூழ்நிலையை காணக்கூடியதாக இருக்கிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வழிசெய்யக்கூடிய அரசியல் உறுதிப்பாடே தற்போதைய தருணத்தின் தேவை என்பது அரசாங்கமும் வர்த்தக சம்மேளனங்களும் கற்பிக்கின்ற நியாயமாக இருக்கிறது. இந்த வாதம் சகல தரப்பினரையும் அரவணைத்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அலட்சியம் செய்கிறது. அவ்வாறு செய்ததனாலேயே இன்றைய கவலைக்குரிய நிலை நாட்டுக்கு ஏற்பட்டது. கடந்த காலாண்டில் மட்டமான பொருளாதார செயற்பாடுகள் சகல தரப்பினரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய அணுகுமுறையை அரசாங்கத்தின் கொள்கைக்குள் உள்ளடக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. மக்களின் உரிமைகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக அரசாங்கமும் வர்த்தக சமூகமும் அடைய நினைக்கின்ற போலி உறுதிப்பாடு நாட்டுக்கு எந்தவிதமான அனுகூலத்தையும் கொண்டுவராது. அகல் விரிவான நல்லிணக்கம் தேசிய நல்லிணக்கச் செயன்முறையை துரிதப்படுத்த ஜனாதிபதி விக்கிரமசிங்க உறுதிபூண்டிருக்கிறார். நாட்டின் இன,மத சிறுபான்மைச் சமூகங்களை அரவணைக்கத் தவறியமையே பல தசாப்தகால பாரபட்சத்துக்கும் அன்னியப்படுத்தலுக்கும் இறுதியில் பயங்கரவாதம் மற்றும் போருக்கும் வழிவகுத்தது. ஆனால் சகல தரப்பினரையும் உள்வாங்கி அரவணைக்கும் உண்மையான செயற்பாடுகள் இன, மத பல்வகைமை எல்லைகளுக்கு அப்பால் செல்லவேண்டியதாக இருக்கும். அது இன, மத பிளவுகளுக்கு அப்பால் விரிந்திருக்கும் இலங்கைச் சமூகத்தின் பல்வகைமை மற்றும் பன்முகத்தன்மையின் ஏனைய அம்சங்களையும் கருத்தில் எடுத்ததாக இருக்கவேண்டும். சனத்தொகையின் பெருமளவு பிரிவினரை தங்களது மனித உரிமைகளை அனுபவிப்பதில் இருந்தும் சமூக மற்றும் பொருளாதார வாழ்வுப் பொதுநீரோட்டத்தில் பங்கேற்பதில் இருந்தும் விலக்கிவைக்கும் சாதி, மதம், பிரதேசம், பால்வேறுபாடு, உடல் ஊனம் மற்றும் தொழில்கள் தொடர்பிலான பிரச்சினைகளும் இருக்கின்றன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிகழ்வு தேசிய சமூகத்தின் விளிம்புநிலை பிரிவுகளுக்கு அதன் பரந்தளவிலான சேவைகளின் அவசியத்தை உணர்த்தும் ஒன்றாக அமைந்தது. அந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் தொழிலாளர்கள், பால் சிறுபான்மையினர், சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்கள், அரசியலில் உள்ள பெண்கள், எயிட்ஸ் நோயாளிகள் மற்றும் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் உட்பட குறைந்தது இருபது பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் சார்பில் பிரச்சினைகள் எடுத்துக்கூறப்பட்டன. உயரம் குறைந்த குள்ளமான தாயொருவர் தன்னைப் போன்றே உருவம் கொண்ட மகன் சமுதாயத்தினால் இரக்கமோ கண்ணியமோ இன்றி நடத்தப்படுவதைப் பற்றி கூறியதை கேட்டபோது மனம் நெகிழ்ந்தது. வங்கிக்கு அந்த மகன் சென்றால் அங்கு அவனை விடவும் உயரம் கூடிய கருமபீடத்தில் அலுவல்களைச் செய்வித்துக்கொள்ளமுடியாமல் இருப்பதாகவும் தாய் கூறிக் கவலைப்பட்டார். தங்களால் குரலெழுப்பவும் போராடவும் முடியும். ஆனால், தங்களது கோரிக்கைகள் செவிமடுக்கப்படமாட்டாது என்பதே அங்கு பேசிய பலர் வெளிப்படுத்திய மனக்குறையாக இருந்தது. உறுதிமொழிகள் தரப்படுகின்றன. ஆனால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் முறையிட்டார்கள். சமுதாயத்தில் அவர்கள் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறார்கள், எத்தகைய அந்தஸ்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் சகலரினதும் குரல்களை செவிமடுப்பதே பன்முகத்தன்மைக்கான ஒரு மதிப்பாகும். அடுத்த சுதந்திர தினம் அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க உறுதியளிக்கும்போது கண்ணுக்குப் புலப்படக்கூடிய – அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினரையே அவர் மனதில் கொண்டிருக்கிறார். கண்ணுக்கு புலப்படாத – அங்கீகரிக்கப்படாத சிறுபான்மையினரையும் பாதுகாத்து பராமரிக்கும் போதுதான் இலங்கை அரசு மீதான நம்பிக்கை கட்டியெழுப்பப்படும். கலாநிதி ஜெகான் பெரேரா https://maatram.org/?p=10548
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.