Search the Community
Showing results for tags 'சாவகச்சேரி'.
-
06 JUN, 2024 | 01:19 PM கனடாவில் தொழிற்வாய்ப்பை பெற்றுத்தருவதாக இளைஞர் ஒருவரிடம் 31 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று, மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கனடாவில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரிடம் இருந்து 31 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார். பணத்தை பெற்று நீண்ட நாட்களாகியும், இளைஞரை கனடாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில், இளைஞர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185440
-
Published By: DIGITAL DESK 7 10 MAY, 2024 | 01:20 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொது சந்தையில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால், பொது சந்தையில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பழுதடைந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அதேவேளை, வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183142
-
Published By: DIGITAL DESK 3 06 MAR, 2024 | 11:19 AM யாழ்ப்பாணத்தில் காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர் பகுதி மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது , காலாவதியான குளிர்பான வகைகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த இரண்டு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, இருவரையும் கடுமையாக எச்சரித்த மன்று, ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும், மற்றைய நபருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது. அத்துடன் கைப்பற்றப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178045