Jump to content

Search the Community

Showing results for tags 'டி.பி.எஸ்.ஜெயராஜ்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 2 results

  1. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர கொலை தொடர்பில் விசாரணை செய்யுமா ? எதிர்ப்பாளர்களின் பார்வையில், விஜேவீர ஒரு சந்தர்ப்பவாதி, அவர் என். சண்முகதாசனின் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிளவுபடுத்தி, 1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரச அதிகாரத்திற்கு முயற்சித்து தனது சொந்த இராணுவத்தை உருவாக்குவதற்காக அதன் உறுப்பினர்களை இழுத்துக்கொண்டார். சுதந்திரத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட சமூக முறைமையிலிருந்து அவரது அபிமானிகள் மத்தி யில் அவர் ஒரு இலட்சியவாதி, அவர் ஏழை விவசாயிகளையும் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதன் விளிம்புநிலை இளைய பிரிவினரையும் அணிதிரட்டியவர் .” டி .பி .எஸ் . ஜெயராஜ் ஜே.வி.பி யினால் ஏற்பட்ட வன்முறையின் பாரிய தன்மை மற்றும் ஜே.வி.பி தலைவர்ரோஹண விஜேவீர மீது பொலிசார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மத்தியில் கொதித்துக்கொண்டிருந்த கோபம் ஆகியவற்றின் அடிப்படையில்அவர் கொல்லப்பட்டதாகபரவலாக நம்பப்பட்டது அது தொடர்பாக , “உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட உத்தியோகபூர்வமற்ற மரணதண்டனை” என்ற ‘இடக்கரடக்கல்’ சொற்றொடர் பிர யோகப்படுத்தப்பட்டிருந்தது. ரோகண விஜேவீர 35 வருடங்களுக்கு முன்னர் 1989 நவம்பர் 13 இல் கொல்லப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சித் தலைவர் இறக்கும் போது அவருக்கு வயது 46ஆகும் . 1971 மற்றும் 1987 முதல் 89 வரையான இரண்டு இரத்தக்களரி கிளர்ச்சிகளின் மூளையாக செயற்பட் டவராககருதப்பட்டவர் நவம்பர் 12 அன்று கண்டி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். விஜேவீரவின் கைது மற்றும் மரணத்துடன் இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சி படிப்படியாக முடிவுக்கு வந்தது. தமிழில் மக்கள் விடுதலை முன்னணி என்று அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுன வைப் பொறுத்த வரையில் நவம்பர் 13 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திகதி யாகும். 1989 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி ஜே.வி.பி.யின் ஸ்தாபக தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டார். விஜேவீர மற்றும் 1971 மற்றும் 1987-89 ஆகிய இரண்டு கிளர்ச்சிகளில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஜே.வி.பி காரர்களின் வாழ்க்கையை நினைவுகூரும் நிகழ்வை 1994 முதல் ஜே.வி.பி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ” மஹா விரு சமருவ” எனப்படும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வானது உரைகள் மற்றும் பாடல்களின் கலவையாகும். இந்த வருடம் ரோஹண விஜேவீர என அழைக்கப்படும் படபெந்தி டொன் ஜினதாச நந்தசிறி விஜேவீரவின் 35 ஆவது நினைவு தினமாகும் .. ஜே.வி.பி.யின் நினைவேந்தல் நிகழ்வு இந்த வருடம் நவம்பர் 15 ஆம் திகதி நடைபெற்றது. ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரி ல்வின் சில்வா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாரா ளுமன்றத் தேர்தல்களின் மூலம் கட்சி முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியதால், இது ஒரு புனிதமான நிகழ்வாக இருந்தாலும், பண்டிகை உவகை நிலவியது. இந்த நினைவேந்தலில் ரி ல்வின் சில்வா நீண்ட நேரம் உரையாற்றினார். “தியாகி” தலைவர் ரோஹண விஜேவீரவைப் பற்றிய பல பிரகாசமான குறிப்புகளுடன் ஜே.வி.பியின் பரிணாம வளர்ச்சியை அவர் சுருக்கமாகக் கண்டறிந்தார். நசுக்கப்பட்ட இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல் எழுந்த கட்சி மற்றும் அதன் பின்னர் அதன் வெற்றிகரமான அரசியல் மறுமலர்ச்சி பற்றி பேசிய ரி ல்வின், “நாம் காலத்திற்கு ஏற்ப உள்ளீர்த்துக்கொண்ட ஒரு அரசியல் கட்சி… பிடிவாதமானவர்கள் , மாறாதவர்கள் , தப்பிப்பிழைக்க மாட் டார்கள் .”என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அண்மைக் காலங்களில் ரோஹண விஜேவீர மற்றும் ஏனைய ஜே.வி.பி உறுப்பினர்களின் மரணம் மற்றுமொரு தரப்பினராலும் நினைவுகூரப்பட்டது. சிங்களத்தில் பேரதுகாமி சமாஜவாதி கட்சி என்றும் தமிழில் முன்னிலை சோசலிசக் கட்சி என்றும் அழைக்கப்படும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (எவ்எஸ் பி ) ஜே.வி.பி யிலிருந்து பிரிந்த அதிருப்தியாளர்கள் குழுவாகும். ஏப்ரல் 2012ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்டது .அதன் செயலாளர் நாயகம் பிரேமகுமார் குணரத்னம் என்ற நோயல் முதலிகே மற்றும் குமார்/குமார வால் வழிநடத்தப்பட்டது. முன்னணி சோசலிசக் கட்சியும் தனது மறைந்த தலைவர் மற்றும் தோழர்களை ஆண்டுதோறும் “11 மஹா விரு சமருவ” நிகழ்வின் மூலம் நினைவு கூர்கிறது. முன்னிலை சோசலிசகட்சி நவம்பர் 11 அன்று அதன் நினைவேந்தலை நடத்தியது. அதன் செயலாளர் குமார் குணரட் ண ம் இந்த நிகழ்வில் தனது உரையில் ஒரு தெளிவான அழைப்பை விடுத்தார். 1987-1989 கிளர்ச்சியில் உயிர் இழந்த ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு அவர்களின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீர உட்பட நீதி வழங்குமாறு தனது முன்னாள் தோழர் ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்கவிடம் அழைப்பு விடுத்தார். நவம்பர் 12 அன்று “டெய்லி எவ் டி”யில் வெளியிடப்பட்ட செய்தியிலிருந்து சில தொடர்புடைய பகுதிகள் இங்கே: ”கொழும்பில் நேற்று நடைபெற்ற எவ் எஸ் பி யின் வருடாந்த நவம்பர் மாவீரர் நினைவேந்தலில் பேசிய குணரட்ணம், ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கும் ஜேவிபியின் தற்போதைய தலைவரும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 1987-1989 கிளர்ச்சிகாலப்பகுதியில் கொல்லப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்களின் மரணங்களை விசாரிக்கும் கணிசமான பொறுப்பை கட்சி கொண்டுள்ளது. “இன்று 35வதுமகாவீரர் நினைவேந்தலைக் குறிக்கிறது. 1988-1989 காலகட்டத்தில், நீதிக்காக குரல் எழுப்பிய ஒரு முழு தலைமுறையும் கொல்லப்பட்டது. தோழர்கள் ரோஹண விஜேவீர மற்றும் உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட 60,000 க்கும் மேற்பட்ட தோழர்கள் உயிரிழந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் இப்போது அதிகாரத்தை வைத்திருக்கும்தேசிய மக்கள் சக்தியின் பிரதான அரசியல் கட்சியான ஜேவிபியின் இலட்சியத்திற்காக நின்றவர்கள்,” என்று அவர் குறிப்பிட்டார். எனவே, 35வது நினைவேந்தல் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்றார். 1987-1989 கிளர்ச்சியின் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையை உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகுமெனகுறிப்பிட்டு மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக குணரட்னம் ஒப்பிட்டார். “கடுமையான தியாகத்தில் தங்கள் உயிரைக் கொடுத்த அனைவருக்மான நீதிக்காக மக்கள் இன்னும் ஏங்குகிறார்கள். ஜே.வி.பி.யை ஆட்சிக்கு கொண்டு வர தம்மை அர்ப்பணித்த ஜே.வி.பி உறுப்பினர்களின் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இது 1988-89 காலகட்டத்தில் முழுமையான விசாரணையை நடத்துவதற்கும், மனித குலத்திற்கு எதிரான இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பான அனைவரையும் பொறுப்பேற்கச் செய்வதற்கும் முந்தைய நிர்வாகங்களை விட என் பி பி அரசாங்கத்திற்கு அதிக தார்மீகப் பொறுப்பையும் அதிகாரத்தையும் வழங்குகிறது.முன்னிலை சோசலிஸ்ட் கட்சி என்ற வகையில் ஜனாதிபதி திஸாநாயக்க இந்தப் பொறுப்பை ஏற்பார் என நாங்கள் நம்புகிறோம்,” என்ரூ அவர் கூறியிருந்தார். இந்த முயற்சிக்காக தேவையான எந்தவொரு ஆதரவையும் வழங்க எவ் எஸ் பி தயாராக இருப்பதாகவும் குணரட்ண ம் குறிப்பிட்டார். ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த குழுவான குணரட்ண த்தின் கட்சியும் இந்த வார தொடக்கத்தில் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு விடுத்த அறிக்கையில் இதேபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியது. 1988-89 காலப்பகுதியில் அரச அனுமதி பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும், ரோஹண விஜேவீர உட்பட உயிரிழந்த ஜேவிபி மாவீரர்களின் உயிர்களுக்கு நீதி வழங்குமாறும் ஜனாதிபதியிடம் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தில் உயிர்நீத்த ரோஹண விஜேவீர மற்றும் ஏனையோருக்குஎவ் எஸ் பி அஞ்சலி செலுத்தியது, அந்தக் காலப்பகுதியில் “அரச பயங்கரவாதத்தின்” ஊடாக நடத்தப்பட்ட கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போதல்கள் மற்றும் சட்டவிரோத கொலைகளை முன்னிலைப்படுத்தியதுடன் இந்த அட்டூழியங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எவ் எஸ் பி .கோடிட்டுக் காட்டியது. ஜே.வி.பி.யின் தலைவர் தற்போது ஜனாதிபதியாக பதவியில் இருப்பதால், ரோஹண விஜேவீர மற்றும் பிறரின் மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்தி, முன்னுரிமை அளிக்கும் வகையில் விரிவான விசாரணைக்கு முன்னிலை சோசலிசகட்சி வலியுறுத்தியுள்ளது. பொதுவாக ஜே.வி.பி காரர்களின் மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் மற்றும் குறிப்பாக ரோஹண விஜேவீர உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களின் மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மு.ச.க தலைவர் குமார் குணரட்ணம் கூறியிருப்பது, ஜே.வி.பி.யின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களின் இதயங்களிலும் பதிலுக்கான தாக்கத்தை கொடுக்கும். இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சிநசுக்கப்பட்டபோது தப்பிய அநு ரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத் மற்றும் ரி ல்வின் சில்வா போன்ற மூத்தவர்களுக்கு இது நிச்சயமாக எதிரொலிக்கும். மேலும், அரச முகவர்களால் மனித குலத்திற்கு எதிரான அந்த கொடூரமான குற்றங்களை நேரில் பார்த்தவர்கள், அந்த காலத்தில் ஜே.வி.பி.யும் பல அட்டூழியங்களுக்கு காரணமாக இருந்த போதிலும், உண்மை வெளிவர வேண்டும் என்று விரும்புகிகிறார்கள். ஜே.வி.பி இப்போது ஆட்சியில் உள்ளது, எனவே கடந்த கால சம்பவங்களை ஆராய்வதற்கான சரியான பொறிமுறையை அமைக்க முடியும் என்ற குமார் குணரட்ண த்தின் கருத்து தர்க்கரீதியானது. மேலும் தனிப்பட்ட கோணத்திலும் அதனைபார்க்க முடியும் , ஏனெனில் அந்த இருண்ட நாட்களில் “காணாமல் போனதாக” அறிவிக்கப்பட்ட பல இளைஞர்களில் பிரேம் குமாரின் மூத்த சகோதரர் ரஞ்சிதன் குணரட்ண மும் இருக்கிறார். ரி ல்வின் சில்வா உண்மை வெளிவருவதற்கு ஜே.வி.பியின் கண்ணோட்டத்தில் இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. 16 நவம்பர் 2024 இன் “தி இந்து” நாளிதழில் வெளியான ஜேவிபிபொதுச்செயலாளர் ரி ல் வின் சில்வாவுடனான நேர்காணலில், பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீநிவாசன் பின்வருமாறு எழுதினார்: “இருப்பினும், . சில்வா கட்சியின் வரலாற்றை சூழலுடன் மீண்டும் கூற வேண்டும் என்று வாதிட்டார். “எ ம்மை தோற்கடித்தவர்களால், வெற்றி பெற்றவர்களால் எழுதப்பட்டதே எ மது வரலாறு என்பதால் தவறான கருத்து உள்ளது. எங்கள் பாதை விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கப்படவில்லை, அது எங்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்டது. ஜே.வி.பி எதிர்கொள்ளும் மிருகத்தனமான வன்முறை குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி, அவர் மேலும் கூறியதாவது: “இது [எங்கள்] நடவடிக்கை அல்ல, மாறாக எங்கள் முடிவில் இருந்து வந்த எதிர்வினை. [அரசின்] அடக்குமுறை ஆயுதம் ஏந்தியிருந்தால், [எங்கள்] பதிலும் அவ்வாறே இருந்தது. அவரது (ரி ல்வின்) பார்வையில், இலங்கையின் தற்போதைய அரசியல் தருணம், “சிலரை காரணமின்றி ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் என்று சித்தரிக்காமல்” கட்சி மட்டுமல்ல, நாட்டின் கதையையும் மீண்டும் எழுதுவதற்கான இடத்தைத் திறந்துள்ளது. “ஆனால் நாங்கள் இந்த கதையை வார்த்தைகளால் அல்ல, ஆனால் எங்கள் செயலால் சொல்ல விரும்புகிறோம். தற்போதைய சூழல் அதற்கான வாய்ப்பை அளிக்கிறது. உண்மை எ ம்மை விடுவிக்கும் ஜே.வி.பி.யின் கண்ணோட்டத்தில் வரலாறு முன்வைக்கப்படுவது குறித்து ரி ல்வின் சில்வா உண்மையிலேயே தீவிரமானவராக இருந்தால் மற்றும் ஜே.வி.பி.யின் உண்மைக் கதையில் கட்சியின் பொதுச் செயலாளருக்கு உண்மையான ஆர்வம் இருந்தால், விஜேவீர மற்றும் ஏனைய ஜே.வி.பி.காரர்களின் கொலைகள் தொடர்பில் தீவிர விசாரணை மிகவும் அவசியமாகும். ஜே.வி.பி.யை வெள்ளையடிக்கவோ, அரசின் பிரதிமையை கெடுக்கவோ முயலாமல் உண்மையை வெளிக்கொணரும் வகையில் விசாரணை சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும். அது உண்மையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் இறுதியில் உண்மை மட்டுமே “எ ம் அனைவரையும் விடுவிக்கும்” இந்தப் பின்னணியில்தான், ஜே.வி.பி.யின் ஸ்தாபக தலைவர் விஜேவீர இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கொல்லப்பட்டதை முந்தைய எழுத்துக்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் உதவியுடன் இந்தப் பத்தி கவனம் செலுத்துகிறது. ரோகண விஜேவீர 35 வருடங்களுக்கு முன்னர் 1989 நவம்பர் 13 இல் கொல்லப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சித் தலைவர் இறக்கும் போது அவருக்கு வயது 46. 1971 மற்றும் 1987 முதல் 89 வரையான இரண்டு இரத்தக்களரி கிளர்ச்சிகளின் மூளையாக இருந்தவர் நவம்பர் 12 அன்று கண்டி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். விஜேவீரவின் பிடி மற்றும் மரணத்துடன் இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சி படிப்படியாக வெளியேறி முடிவுக்கு வந்தது. சுமார் மூன்று வருடங்களாக நீடித்த ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் ஜே.வி.பி மற்றும் பொலிஸ், துணை இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய எதிர் கிளர்ச்சிப் படைகளால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இத்தனை குழப்பங்களும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், ஜே.வி.பி.யின் அதியுயர் புரட்சித் தலைவர், நிமல் கீர்த்திசிறி அத்தநாயக்க என்ற தோட்டக்காரராகக்தன்னை காட்டிக் கொண்டு கண்டி உலப்பனையில் தனது குடும்பம் மற்றும் இரண்டு வேலையாட்களுடன் வசதியாக வாழ்ந்து வந்தார். “உத்தியோக பூர்வ மாக அனுமதிக்கப்பட்ட அதிகாரபூர்வமற்ற மரணதண்டனை” ஜே.வி.பி யினால் ஏற்பட்ட வன்முறையின் பாரிய தன்மை மற்றும் ஜே.வி.பி தலைவர்ரோஹண விஜேவீர மீது பொலிசார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மத்தியில் கொதித்துக்கொண்டிருந்த கோபம் ஆகியவற்றின் அடிப்படையில்அவர் கொல்லப்பட்டதாகபரவலாக நம்பப்பட்டது அது தொடர்பாக , “உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட உத்தியோகபூர்வமற்ற மரணதண்டனை” என்ற ‘இடக்கரடக்கல்’ சொற்றொடர் பிர யோ கப்படுத்தப்பட்டிருந்தது. உத்தியோகபூர்வ பதிவானது , விஜேவீர மற்றும் மற்றொரு சிரேஷ்ட ஜே.வி.பி தலைவர் எச்.பி. ஹேரத் ஆகிய இருவரும் சில ஆவணங்களைத் தேடி ஜே.வி.பியின் இரகசிய அலுவலகமாகப் பயன்படுத்தப்பட் ட கொழும்பின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர் . ஹேரத் சில ஆவணங்களை எடுப்பது போல் பாசாங்கு செய்து விஜேவீரவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது பாதுகாப்புப் படையினர் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். பின்னர் அவை தகனம் செய்யப்பட்டன. ஜே.வி.பி.யின் வன்முறை மற்றும் எதிர் வன்முறைச் சூழலில் இலங்கை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது விஜேவீரவின் மரணச் செய்தியில் பெரிதும் நிம்மதியடைந்தது. அப்போது நிலவிய சூழ்நிலையில், உத்தியோகபூர்வ பதிவுடன் அமைதியாக செல்வதற்கு நாடு மிகவும் தயாராக இருந்தது. தனிப்பட்ட ரீதியில் வெகு சிலரேஅதனை நம்பினர். இவ்வாறான சூழ்நிலைகளில் வழமை போல் வதந்திகள் அதிக காலம் வேலை செய்தன மற்றும் ரோஹண விஜேவீரவின்இறுதிக்கட்டம் பற்றிய பல கதைகள் பரவ ஆரம்பித்தன. விஜேவீர கொழும்பு கோல்ப் மைதான வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தியாகும் . ஜே.வி.பி.யால் குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்,சிரேஷ்ட ராணுவ அதிகாரிகள் பார்த்துக்கொண்டிருக்க துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், இருவரது உடல்களும் மயானத்தில் இரவில் எரிக்கப்பட்டன. இந்த கொடூரமான தகனத்தின் போது விஜேவீர முழுமையாக இறக்கவில்லை என்ற கதை இந்த பதிப்பில் ஒரு பயங்கரமான திருப்பமாக இருந்தது. சரத் முனசிங்கவின் பதிவு ரோஹண விஜேவீரவின் இறுதிக் கட்டம் குறித்து உத்தியோகபூர்வமாக நேரில் கண்ட சாட்சியங்கள் எதுவும் இல்லை. ரோஹண விஜேவீரவின் வாழ்வில் பொது வெளியில் அவர் இறப்பதற்கு முந்தைய சில மணிநேரங்கள் தொடர்பான உண்மையான பதிவு ஒன்று உள்ளது. மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தனது சுயசரிதை நூலான “ஒரு சிப்பாயின் கதை”யில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய பகுதிகள் கீழே மீண்டும் உருவாக்கப்படுகின்றன: “நேரம் 11.30 மணி. நாங்கள் (லயனல் பலகல்ல மற்றும் சரத் முனசிங்க) ‘நடவடிக்கை க்கான கூட்டு த் தலைமையகத்தின் ’ வளாகத்தை அடைந்தோம். ரோஹண விஜேவீர அமர்ந்திருந்த மாநாட்டு மேசைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எனக்கு மேசைக்கு குறுக்காக விஜேவீரவுக்கு எதிரே ஒரு நாற்காலி வழங்கப்பட்டது. நான் அவருடன் உரையாடத் தொடங்கினேன். நான் ரோஹண விஜேவீரவிடம் நீண்ட நேரம் பேசினேன். “நான் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டபோதெல்லாம் அவர் சிங்களத்தில் பதிலளித்தார். உண்மையில், எனக்கு ரஷ்ய மொழி தெரியுமா என்று கேட்டார். நான் இல்லையென பதிலளித்தேன். ரோஹண விஜேவீர தனது இரண்டாவது மொழி ரஷ்ய மொழி என்று என்னிடம் கூறினார். ஆரம்பத்தில் பண்டாரவளையிலும் பின்னர் கண்டி உலப்பனையிலும் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி என்னிடம் கூறினார். ஜே.வி.பி.யின் செயற்பாடுகள் குறித்து பேசுவதற்கு அவர் தயங்கினார்”. “நள்ளிரவுக்குப் பிறகு, பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ரஞ்சன் விஜேரத்ன உள்ளே சென்று மாநாட்டு மேசையின் தலைமைநாற்காலியில் அமர்ந்தார். ஜெனரல் விஜேரத்ன சில கேள்விகளைக் கேட்டார், ஆனால் ரோஹண விஜேவீர பதிலளிக்கவில்லை. “நாங்கள் எங்கள் உரையாடலைத் தொடர்ந்தோம். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பல கோப்பை சாதாரண தேநீர் பருகினோம் . வன்முறையில் ஈடுபடாமல் இருக்குமாறு அவரது உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு ரோஹண விஜேவீரவிடம் கோரிக்கை விடுத்தேன். வற்புறுத்தலுக்குப் பிறகு ஒப்புக்கொண்டார். எனவே அவரது வார்த்தைகளையும் அவரது படத்தையும் க மராவில் பதிவு செய்ய முடிந்தது. “நேரம் 1989 நவம்பர் 13 அதிகாலை 3.45 மணி. விசாரணையை முடித்துக்கொண்டு ரோஹண விஜேவீரவை கீழே அழைத்துச் செல்லுமாறு எனக்குத் தெரிவிக்கப்பட்டது. கீழே ஒன்றாக நாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகநடந்து சென்றோம் . விஜேவீர என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘கடைசித் தருணத்திலும் உங்களைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இனி வாழாமல் இருக்கலாம். தயவு செய்து எனது செய்தியை என் மனைவிக்கு தெரிவிக்கவும்என்று கூறினார் ரோஹண விஜேவீரவின் செய்தியில் ஐந்து முக்கிய விடயங்கள் அடங்கியிருந்தன. அவை அனைத்தும் அவரது குடும்பத்தைப் பற்றிய தனிப்பட்ட விட யங்கள். “சில நிமிடங்களுக்குப் பிறகு, விஜேவீர கண்கல் கட்டப்பட்டு பச்சை பஜேரோவின் பின் இருக்கையில் ஏற உதயளிக்கப்பட்டது . விஜேவீரவின் இருபுறமும் இருவர் அமர்ந்திருந்தனர். காரின் பின்பகுதியில் மற்றவர்கள் இருந்தனர். பஜெரோ புறப்பட்டது. நடவடிக்கை கூட்டுதலைமையக கட்டிடத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நின்றிருந்த கேணல் லயனல் பலகல்லவுடன் நான் சேர்ந்தேன். நல்ல தூக்கத்தை நினைத்துக்கொண்டு வீட்டுக்குப் போனோம். “காலையில் விஜேவீரவின் புகைப்படத்தை அச்சிடுவதில் நான் மும்முரமாக இருந்தேன். தாடி இல்லாமல் விஜேவீரவை யாரும் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள். எனவே நான் உதவியை நாட வேண்டியிருந்தது மற்றும் விஜேவீரவின் புகைப்படத்தில் தாடியை சேர்க்க வேண்டியிருந்தது. அது மிகவும் சிறப்பாக செய்யப்பட்டது. பிற்பகலில் கூட்டு நடவடிக்கைக் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “விஜேவீர மற்றும் எச்.பி. ஹேரத் [மற்றொரு ஜே.வி.பி தலைவர்] கொழும்பிற்கு வெளியே உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு ஜே.வி.பி. அவர்களின் பொக்கிஷத்தின் ஒரு பகுதியை மறைத்து வைத்திருந்தது. தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்த போது, ஹேரத் துப்பாக்கியை எடுத்து விஜேவீரவை சுட்டுக் கொன்றார்.என்று அமைச்சர் மேலும் விவரங்களைத் தெரிவித்தார். விஜேவீரவின் கொலையைத் தொடர்ந்து, ஜே.வி.பியின் வன்முறைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனையபகுதியில் அமைதி நிலவியது. ஜெனரல் முனசிங்கவின் பதிவு , விஜேவீரவின் வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களை ஓரளவு விவரிக்கிறது, ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய விவரங்களை வெளியிடுவதில் அமைச்சர் விஜேரத்னவின் செய்தியாளர் மாநாட்டைச் சார்ந்திருக்கிறது. முனசிங்க அந்தப் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடாத காரணத்தினால், விஜேவீர எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது பற்றிய தகவல்களும் குறைவாகவே உள்ளன. உலப்பன வில் ரோகண கைதானார் ரோஹண விஜேவீர பிடிபடுவதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் பற்றிய சுருக்கமான ஆனால் துல்லியமான விளக்கத்தை ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சி.ஏ. சந்திரபெரும வின் “இலங்கை :பயங்கரமானஆண்டுகள் – 1987-1989ஜே. வி . பி கிளர்ச்சி ” என்ற புத்தகத்தில்உள்ள தொடர்புடைய பகுதிகள் வருமாறு : “பியதாச ரணசிங்க மற்றும் எச் பி ஹேரத் ஆகியோர் கலஹாவில் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு ஜே.வி.பி தலைவர்களும் ரோஹண விஜேவீரவை அடிக்கடி சந்தித்தனர். சிறிது நேர விசாரணையின் பின்னர் விஜேவீரவின் இருப்பிடத்தை ஹேரத் தெரிவித்திருந்தார். சில மணித்தியாலங்களின் பின்னர், கண்டி உலப்பன வில், விஜேவீர, அத்தநாயக்க என்ற பெயரில் தோட்டஉரிமையாளராக மாறுவேடமிட்டு, அவர் வசித்த தோட்ட பங்களாவில் கைது செய்யப்பட்டார். “பிற்பகல் 2 மணியளவில் தரப்பினர் சென்றபோது போது, விஜேவீர சவரம் செய்துகொண்டிருந்தார் . இராணுவக் குழு ஒரு வாசலில் ஏறி வீட்டைச் சுற்றி வளைத்தது. விஜேவீர, “நான் அத்தநாயக்க, இங்கு வர உங்களுக்கு உரிமையில்லை. நான் அமைதியை விரும்பும் மனிதன்.” என்றுகூறினார் “விஜேவீரவின் நம்பிக்கையானகூற்றினால் கேர்ணல் .ஜானக பெரேரா குழம்பிப்போய், அவர்கள் தவறான இடத்திற்கு வந்துவிட்டதாக நினைத்தார். அப்போதும் அவர் தனது கைத்துப்பாக்கியை மெல்ல மெல்ல அத்தநாயக்கவின் தலையில் வைத்துவிட்டு, “ஓயா விஜேவீர?” என்று கேட்டார். “அத்தநாயக்க”, கேர்ணல் சுட்டு விடுவார் என்று பயந்து, தான் விஜேவீர என்று ஒப்புக்கொண்டார், மேலும் “நான் உங்களுடன் வருவேன், ஆனால் என் குடும்பத்திற்கு தீங்கு செய்யவேண்டாம்”என்றுகூறினார் ர் . வீட்டில் விஜேவீரவின் மனைவியைத் தவிர இரண்டு பெண் வேலைக்காரர்கள் இருந்தார்கள், விஜேவீர வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது எல்லாப் பெண்களும் புலம்பத் தொடங்கினர். பின்னர் ரோஹண விஜேவீர கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஜே.வி.பி தலைமையிலான-என்.பி.பி அரசாங்கம் விஜேவீரவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடுவார் மற்றும் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றிய நம்பகமான தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2004 ஆம் ஆண்டு ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீரவின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு,ரெஜி சிறிவர்தனவினால்”இரங்கல் செய்தியாளர்களின்இளவரசர்” என்று வர்ணிக்கப்பட்டபிரபல ஊடகவியலாளர் அஜித் சமரநாயக்க எழுதிய அவரது ஞாயிற்று க்கிழமை கட்டுரையின் ஒரு பகுதியுடன் நிறைவு செய்கிறேன் . அஜித் சமரநாயக்க வின் கட்டுரை “ரோஹண விஜேவீர 46 வயதில் கொல்லப்பட்டபோது, நாட்டின் வாழ்வில் அவரது வகிபாகம் பற்றி இலங்கையில் எந்த வொரு அரசியல் தலைவரும் இவ்வளவுக்கு கூர்மையான மற்றும் முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கவில்லை. நடைமுறை நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகஇலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான உயரடுக்குதாங்கள் முதலாளித்துவவாதியாக , தாராளவாதியாக அல்லது மார்க்சியவாதியாகஇருந்தாலும்நடைமுறை நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்காக கருத்தொருமைப்பாட்டை கொண்டிருந்த நிலையில் அவரது சொந்தக் கண்ணோட்டத்தில் விஜேவீர கவனமாக திட்டம் தீட்டி குழப்ப முயன்றார். “வலது மற்றும் மரபுவழி இடது இரண்டிற்கும் அவர் பிசாசாக அவதாரம் எடுத்தார், ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் ஒரு கடவுள். விஜேவீரவே இந்த பாத்திரத்தில் மிகவும் மகிழ்ந்தார். தாடியுடன், அவரது அனல்கக்கும் பேச்சுக்களுடன், அவர் காலத்தின் அரசியல் பரப்பின் ஒரு பகுதியாக இருந்தார், இலங்கையின் வளம்குன்றிய அரசியல் அரங்கில் தீங்கான காரணத்திற்காக வாதாடுபவர் முதல் ஜனாதிபதி வேட்பாளர் வரையிலான அனைத்து பாத்திரங்களையும் வகித்தார். “அவரது எதிர்ப்பாளர்களின் பார்வையில், விஜேவீர ஒரு சந்தர்ப்பவாதி, அவர் என். சண்முகதாசனின் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிளவுபடுத்தி, 1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரச அதிகாரத்திற்கு முயற்சித்து தனது சொந்த இராணுவத்தை உருவாக்குவதற்காக அதன் உறுப்பினர்களை இழுத்துக்கொண்டார். சுதந்திரத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட சமூக முறைமையிலிருந்து அவரது அபிமானிகள் மத்தி யில் அவர் ஒரு இலட்சியவாதி, அவர் ஏழை விவசாயிகளையும் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதன் விளிம்புநிலை இளைய பிரிவினரையும் அணிதிரட்டியவர் .” எந்தக் கருத்து யதார்த்தத்துக்கு அதிகளவுக்கு ஏறத்தாழ பொருந்தும் ? ”சிலசமயம் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையிலும் சந்தர்ப்பவாதத்தின் ஒரு அம்சம் இருக்கலாம் மற்றும் அரசியல் என்பது சந்தர்ப்பவாதம் மற்றும் இலட்சியவாதத்தின் கலவையாகும். பாராளுமன்ற தேர்தல் மார்க்கத்தினூடாக மட்டுமே இலக்கை அடைவதற்கான திருக்குருதிக்கலத்தை [இயேசுநாதர் இறுதிஉணவு வட்டில் ]கொண்டுசெல்வதென சுதந்திரத்துக்கு பின்னரான காலகட்டத்தில் இடது சாரிகளுக்கும் வலதுசாரிகளுக்குமிடையிலான கருத்தொருமைப்பா ட்டு அரணினால் பாதுகாக்கப்பட்ட இலங்கை அரசின்மீது மூன்று தசாப் தத்திற்குள் இருதடவை தாக்குதல் நடத்தியதன் அ டிப்படையில் அவரது காலகட்டத்தில் ரோஹண விஜேவீர அதிகளவுக்கு துணிச்சலான அரசியல் வாதி என கூறப்பட்டது பினான்சியல் டைம்ஸ் https://thinakkural.lk/article/313010
  2. மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம் February 11, 2024 — டி.பி.எஸ்.ஜெயராஜ் — கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார். தமிழரசு கட்சி 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள சகல ஐந்து மாவட்டங்களிலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் ஒரேயொரு தமிழ்க் கட்சியாக தமிழரசு கட்சியே விளங்குகிறது. ‘சமத்துவமான கட்சிகளில் முதலாவது ‘ என்ற அந்தஸ்தை அனுபவித்துவந்த போதிலும், அந்த கட்சி அண்மைக்காலமாக நகைப்புக்கிடமானதாக மாறிவிட்டது. இந்த நிலைக்கு சேனாதிராஜாவின் சுயநல நடத்தை பெருமளவுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறது. மாவை சேனாதிராஜா மொத்தமாக ஒரு ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார். பிறகு 20 பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவாகி 20 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் மொத்தமாக 25 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். 2014 தொடக்கம் 2024 வரை பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவர் பதவியையும் அவர் வகித்தார். அதற்கு முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார். தமிழரசு கட்சியின் தலைவர்கள் இரு பதவிக் காலங்களுக்கும் அதிகமாக பதவியில் தொடர்ந்து இருக்காத ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் தலைவராக வந்த முதுபெரும் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறங்கினார். அவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா 2014 ஆம் ஆண்டு் தலைவரானார். இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் தலைவர் பதவியில் இருந்து அவர் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு செய்யவில்லை. 2014 — 2024 காலப்பகுதியில் அவர் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தார். தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ச்சியாக பத்து வருடங்களாக நீடித்த ஒரே அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவே ஆவார். கட்சியின் தாபகத் தலைவரான மதிப்புக்குரிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ( தந்தை செல்வா ) கூட அவ்வாறு பல வருடங்கள் தலைவராக இருந்ததில்லை. தமிழரசு கட்சியின் மகாநாடு : =================== சுமார் ஒரு தசாப்தகாலமாக “நல்ல வழியோ, கெட்ட வழியோ எப்படியாவது” மாவை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்துவிட்டார். புதிய ஒரு தலைவர் கட்சியின் பொது மகாநாட்டில் வைத்து பொதுச் சபையினாலும் மத்திய செயற்குழுவினாலும் தெரிவுசெய்யப்படுவதும் இரு வருடங்களுக்கு ஒரு முறை மகாநாடு நடத்தப்படுவதும் வழமை. ஆனால், 2014 மகாநாட்டில் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பிறகு அடுத்த மகாநாடு 2019 ஆண்டில் மாத்திரமே நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலும் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவான பிறகு இன்னொரு ஐந்து வருடங்களாக 2024 வரை அவரால் மகாநாட்டை ஒத்திவைக்கக்கூடியதாக இருந்தது. 2024 ஜனவரியில் மகாநாட்டை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோது தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு உட்கட்சித் தேர்தல் ஒன்று நடக்கப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தமிழரசு கட்சி தேர்தலைத் தவிர்த்து கருத்தொருமிப்பின் அடிப்படையிலான நடைமுறை ஒன்றே பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த நிலையில் தலைவர் தெரிவுக்கு உட்கட்சி தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை. போட்டித் தேர்தல் கட்சியைச் சிதறடித்துவிடும் என்ற அச்சம் கட்சி வட்டாரங்களில் நிலவியது. அந்த அச்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இந்த அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டிய மாவை சேனாதிராஜா இடைக்காலத் தலைவராக தானே பதவியில் தொடர்ந்துகொண்டு மகாநாட்டை காலவரையறையின்றி ஒத்திவைக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். அவரின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால் அவரது யோசனையை ஏற்பதற்கு எவரும் இருக்கவில்லை. அதனால் தி்ட்டமிட்டபடி ஜனவரி 21 தமிழரசு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இன்னொரு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை சிவஞானம் சிறிதரன் 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். அதற்குப் பிறகு புதிய மத்திய செயற்குழுவும் கட்சியின் புதிய நிருவாக உறுப்பினர்களும் ஜனவரி 27 ஆம் திகதி தெரிவு செய்யப்படவிருந்தனர். மறுநாள் மகாநாட்டின் பொதுகூட்ட்டத்தில் பழைய தலைவர் சம்பிரதாயபூர்வமாக பதவியில் இருந்து இறங்கவும் புதிய தலைவர் பொறுப்பை ஏற்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது. பொதுச்செயலாளர் உட்பட புதிய நிருவாகிகளும் அன்னறயதினம் அறிமுகம் செய்யப்படவிருந்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டவுடன் பழைய தலைவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் தன்னியல்பாகவே புதிய தலைவராகிவிடுவார். அடுத்த நாள் மகாநாட்டில் முறைப்படி பதவிப்பொறுப்பைக் கையளிப்பது என்பது வெறுமனே அடையாளபூர்வமான ஒரு சம்பிரதாய நிகழ்வு மாத்திரமே. ஆனால், ஜனவரி 27 தமிழரசு கட்சிக்குள் குழப்பம் மூண்டது. ஆரம்பத்தில் சிறிதரன் சுமந்திரனுக்கு நேசக்கரம் நீட்டி இருவரும் சேர்ந்து பணியாற்றும் நிலை தோன்றியது. ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டது. அடுத்து 2024 — 2026 காலப்பகுதிக்கான கட்சியின் புதிய நிருவாகிகள் பட்டியலும் இறுதிசெய்யப்பட்டது. பொதுச்செயலாளர் : ============= இந்த நிருவாகிகளில் முக்கியமான செயலாளர் பதவியும் அடங்குகிறது. 16 நிருவாக உறுப்பினர்கள் பட்டியலும் மத்திய செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பட்டியல் பொதுச்சபைக்கு ஒரு தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. புதிய தலைவர் சிறிதரனின் முன்மொழிவை குழு உறுப்பினரான பீட்டர் இளஞ்செழியன் வழிமொழிந்தார். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து சில கலந்தாலோசனைக்கு பிறகு பொதுச்சபையும் அதை அங்கீகரித்தது. தலைவர்,செயலாளர் என்ற முக்கிய பதவிகளை வடக்கையும் கிழக்கையும் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொள்வது தமிழரசு கட்சியில் ஒரு நடைமுறையாகப் பின்பற்றுப்பட்டு வருகிறது. வட மகாணத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருந்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். கிழக்கு மாகாணத்தவர் தலைவராக இருந்தால் வட மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். சிறிதரன் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் செயலாளர் கிழக்கு மாகாணத்தவராக இருக்கவேண்டும். சிறிதரனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் செயலாளர் பதவி மீது கண்வைத்திருந்தார். ஆனால் அவருடன் சிறிதரன் பேசி திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சி தலைவரான சண்முகம் குகதாசன் செயலாளராகுவதற்கு வழிவிட இணங்கவைத்தார். மதிய உணவுக்கு பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியபோது மனமாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டது போன்று தெரிந்தது. தானே செயலாளராக வரவேண்டும் என்று தனது நலன் விரும்பிகள் விரும்புவதால் குகதாசனை செயலாளராக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சிறீநேசன் கூறினார். சுமந்திரனின் ஆதரவாளராக குகதாசன் தவறாக கருதப்பட்டதால் சிறிதரனின் பல ஆதரவாளர்களும் அவரை கண்டனம் செய்ததுடன் செயலாளராக அவரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறினர். பொதுச்செயலாளர் உட்பட முழு நிருவாகிகள் பட்டியலும் ஏற்கெனவே மத்திய செயற்குழுவினாலும் பொதுச்சபையினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததனால் இப்போது அதை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ‘தேர்தலை’ நடத்திவைக்குமாறு பதவி விலகும் தலைலர் சேனாதிராஜாவும் புதிய தலைவர் சிறிதரனும் சுமந்திரனைக் கேட்டு்க்கொண்டனர். பட்டியலை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை பொதுச்சபை உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தி வாக்களிப்பதன் மூலம் தெரிவிக்கலாம் என்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார். ‘ஆம்’ என்ற வாக்குகளும் ‘இல்லை’ என்ற வாக்குகளும் வரிசை வரிசையாக எண்ணப்பட்டன. சுமந்திரன் கைகளை எண்ணிக்கொண்டிருந்தபோது சிறிதரனின் உறுதியான ஆதரவாளரான நாவலனும் தனியாக கணக்கெடுத்தார். இருவரதும் எண்ணிக்கைகள் ஒன்றாகவே இருந்தன. சண்முகம் குகதாசன் : ===========•== செயலாளர் சண்முகம் குகதாசன் உட்பட நிருவாகிகள் பட்டியலுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதன் மூலமாக தமிழரசு கட்சியின் புதிய செயலாளர் குகதாசன் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது. தமிழரசு கட்சியின் மகாநாடு மறுநாள் நடக்கவிருந்தது. புதிய தலைவரும் செயலாளரும் நிருவாகிகளும் பொதுமக்கள் முன்னிலையில் வைபவரீதியாக பதவிகளை ஏற்றுக்கொள்ளவிருந்தனர். தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கலைந்து சென்றுகொண்டிருக்கையில், பொதுச்சபை உறுப்பினர்களில் ஒரு குழுவினர் மாவை சேனாதிராஜாவை அணுகி குகதாசனை செயலாளராக தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். புதிய தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் ஜனவரி 28 கட்சியின் மகாநாடு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினர். சேனாதிராஜா அப்போது “விசித்திரமான” முறையில் நடந்துகொண்டார். புதிய தலைவர் சிறிதரனைக் கலந்தாலோசிக்காமல் முன்னாள் தலைவர் மாவை அடுத்த நாள் நடைபெறவிருந்த மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். செயலாளர் பதவி தொடர்பில் தகராறு ஒன்று இருப்பதால் புதிய தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்குப் பிறகு மாத்திரமே மகாநாடு நடைபெறும் என்றும் அவர் கூறினார். இன்னமும் கூட தானே கட்சியின் தலைவர் என்ற மாயையில் மாவை இருக்கிறார் போன்று தெரிந்தது. மாகாநாட்டில் மாத்திரமே சிறிதரன் உத்தியோகபூர்வமாக பதவியேற்பார் என்று மாவை நினைத்தார் போன்று தோன்றியது. அதனால் மகாநாட்டை ஒத்திவைத்ததன் மூலம் அவர் தனது தலைவர் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படுவதாக நினைத்தார். சிறிதரனும் சுமந்திரனும் : =============== சிறிதரனும் சுமந்திரனும் ஜனவரி 28 சேனாதிராஜாவை சந்தித்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் உண்மை நிலைவரம் என்ன என்பதை ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் அந்த சந்திப்பில் சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தினார். ஜனவரி 27 மத்திய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு சேனாதிராஜா தலைவர் பதவியில் இல்லாமற்போய்விட்டார் என்று சுமந்திரன் சுட்டாக்காட்டினார். மகாநாடு நடத்தப்படுமோ இல்லையோ சிறிதரன் தான் இப்போது கட்சியின் தலைவர். அதனால் சேனாதிராஜாவினால் ஒருதலைப்பட்சமாக மகாநாடு ஒத்திவைக்கப்பட்டது செல்லுபடியாகாது. பொதுச் செயலாளராக குகதாசனின் தெரிவும் சட்டத்தில் செல்லுபடியாகும் என்றும் சுமந்திரன் வலியுறுத்திக்கூறினார். மத்திய செயற்குழு அதை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது. பொதுச்சபையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதனால், புதிய செயலாளரைத் தெரிவுசெய்யவேண்டியிருக்கிறது என்ற சாக்குப்போக்கில் மகாநாட்டை சேனாதிராஜா ஒத்திவைத்தது சரியானதல்ல. சுமந்திரனின் விளக்கத்தை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. தானே இன்னமும் கட்சியின் தலைவர் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தார். தனது மகனின் திருமணத்துக்காக சிங்கப்பூர் செல்வதாகவும் பெப்ரவரி 10 ஆம் திகதியே நாடு திரும்பவிருப்பதாகவும் அவர் கூறினார். நாடு திரும்பியதும் பொதுச்சபையைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் கூறியது சிறிதரனுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிறீநேசனை ஆதரிக்கும் தனது ஆதரவாளர்களின் நெருக்குதலின் கீழ் சிறிதரன் இருந்தார். சேனாதிராஜாவின் யோசனை தமிழரசு கட்சியின் யாப்புக்கு முரணானது என்று சுமந்திரன் அப்போது கூறினார். அதற்கு சேனாதிராஜா “கட்சியின் யாப்பின் பிரகாரம் எல்லாவேளையிலும் நடக்கவேண்டும் என்றில்லை” என்று பதிலளித்தார். கட்சியின் யாப்பை மீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அதனால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படலாம் என்றும் சுமந்திரன் கூறிவைத்தார். வார்த்தைகளில் கூறாமல் சிறிதரன் குறிப்பால் உணர்த்திய ஆதரவுடன் மாவை சுமந்திரனின் ஆலோசனையை அலட்சியம் செய்துவிட்டு சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார். சட்டரீதியான நிலைப்பாடு =============== அதைத் தொடர்ந்து தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய சட்டரீதியான நிலைப்பாட்டை விளக்கி சுமந்திரன் சிறிதரனுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். சிறிதரனே தற்போது தலைவர் என்றும் சாத்தியமானளவு விரைவாக அவர் வைபவரீதியாகப் பதவியை ஏற்கவேண்டும் என்றும் சுமந்திரன் கடிதத்தில் வலியுறுத்தினார். கடிதம் ஊடகங்களுக்கும் வெளியிடப்பட்டது. தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜாவுக்கு சுமந்திரன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றையும் வழங்கினார். ‘நெற்றிக்கண்’ அலைவரிசையில் ஒளிபரப்பான அந்த நேர்காணலில் அவர் தமிழரசு கட்சியின் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் சட்டரீதியான நிலைப்பாட்டை மிகவும் விரிவாக விளக்கினார். அடிப்படை தமிழ் மொழியறிவும் கொஞ்சமேனும் பொது அறிவும் இருக்கும் எவரும் சுமந்திரனின் கடிதத்தையும் வாசித்து தொலைக்காட்சி நேர்காணலையும் பார்த்தால் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவு தொடர்பிலான தற்போதைய சட்ட அடிப்படையிலான நிலைப்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்ளமுடியும். ஆனால் மாவை அநாவசியமாக பிரச்சினையைத் தேடிக்கொண்டார் போன்று தெரிகிறது. செயலாளர் பதவி தொடர்பிலான தகராறு நீண்ட ஒரு காலத்துக்கு தானே தலைவர் பதவியில் தொடருவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற மருட்சியில் அவர் இருக்கிறார். சாத்தியமானளவு காலத்துக்கு கட்சியின் அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதில் மாவைக்கு இருக்கும் பேராசையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவரது நடத்தை கண்டிக்கத்தக்கது என்றாலும் விளங்கிக் கொள்ளக்கூடியதே. ஒருதலைப்பட்சமான தனது நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகளை சேனாதிராஜா புரிந்துகொள்ளவில்லை. சட்டரீதியான தலைவராக இல்லாதபோது தமிழரசு கட்சியின் தலைவரின் அதிகாரங்களையும் கடமைப் பொறுப்புக்களையும் கையகப்படுத்துவது சாதாரண விடயம் அல்ல. தமிழரசு கட்சியின் யாப்பை மீறுவதற்கு தயாராயிருப்பது போன்று பேசுவது மேலும் மோசமானதாகும். இந்த கட்டத்தில் பெரிதாக ஊகங்களைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனால் சேனாதிராஜா பெரும்்ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். மகாநாட்டை திடீரென்று ஒத்திவைத்ததன் விளைவாக ஏற்கெனவே கட்சிக்கு பெரும் பணவிரயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரம் இல்லாமல் மகாநாட்டை சட்டவிரோதமாக ஒத்திவைத்ததன் மூலமாக ஏற்பட்ட இழப்புக்களை பொறுப்பேற்கவேண்டிய நிலைக்கு மாவை தள்ளப்படலாம். மேலும் தலைவர் தெரிவு உட்பட கட்சியின் தேர்தல் முழுவதுமே செல்லுபடியற்றது என்று பிரகடனம் செய்யப்படக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் அதற்கு மாவையே பிரதான காரணம். ஜனவரி 21 கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றபோது சேனாதிராஜாவே தலைவராக இருந்தார். மத்திய செயற்குழுவுக்கு மேலும் 18 உறுப்பினர்களை நியமிப்பதற்கு அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார். அது கட்சியின் யாப்புக்கு எதிரானது. ஆனால் கட்சி யாப்பின் விதிமுறைகளை பின்பற்றுவதில் நம்பிக்கை இல்லாத சேனாதிராஜா அந்த நியமனங்களை தன்னெண்ணப்படி அடாத்தாகச் செய்தார். மகன் கலையமுதன் : ============= மத்திய செயற்குழுவுக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களில் சேனாதிராஜாவின் மகன் கலையமுதனும் அவரது மாமியார் சசிகலா ரவிராஜும் அடங்குவர். சசிகலா கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியாவார். அவர்களின் மகள் பிரவீனாவையே கலையமுதன் மணம் முடித்திருக்கிறார். இரு முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகனுக்கும் மகளுக்கும் இடையிலான பந்தம் குடும்பத்தாருக்கு ஆதரவும் சலுகையும் அளிப்பதாக மாவைக்கு எதிராக குற்றச்சாட்டு கிளம்புவதற்கு வழிவகுத்திருக்கிறது. புதிய ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக சேனாதிராஜா தனது மகனை அரசியலில் ஊக்குவிக்கிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினராக கலையமுதன் தெரிவுசெய்யப்பட்டார். அந்த பிரதேச சபையின் தலைவராக அவரைத் தெரிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக கலையமுதனை கொண்டுவருவதற்கான இன்னொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டன. சேனாதிராஜாவும் சசிகலாவும் 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடனர் எனினும் வெற்றிபெறவில்லை. கலையமுதன் வலிகாமம் வடக்கில் வீதியொன்றுக்கு தனது பெயரைச் சூட்டவைத்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. அரசியலில் சேனாதிராஜாவின் சுயநலச் செயல்களுக்கு பல சம்பவங்களைக் கூறமுடியும். 2020 பாராளுமன்ற தேர்தலில் உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவனுடன் அணிசேர்ந்துகொண்டு தமிழரசு கட்சியின் சகபாடி வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தது அவற்றில் ஒன்று. ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு தனது சொந்த தமிழரசு கட்சியின் நலன்களுக்கு எதிராக சேனாதிராஜா அடிக்கடி துரோகத்தனமாகச் செயற்பட்டிருக்கிறார். இன்பதுன்பம் கலந்த நீண்டகால அரசியல் வாழ்வொன்றில் சேனாதிராஜாவுக்கு நிலையான நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. ஆனால், ஒரு சுயநலத்துடன் கூடிய நிலையான நலன்கள் இருக்கின்றன. மாவையின் கடந்த காலம் ========= தமிழரசு கட்சியில் மாவை சேனாதிராஜாவின் கடந்தகாலத்தை இரு பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது பகுதி அவரின் வாழ்வின் தொடக்ககாலத்துடன் தொடர்புடையது. இளைஞனாக பல போராட்டங்களில் பங்கேற்று அரசியல் காரணங்களுக்காக சிறைசென்ற அவர் கணிசமான தியாகங்களைச் செய்திருக்கிறார். இந்தியாவில் சுய அஞ்ஞாதவாசம் செய்த காலப்பகுதி பல்வேறு வழிகளில் கடுமையான இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. அதை நான் நேரடியாக கண்டேன். அவரது வாழ்வின் இரண்டாவது பகுதி வித்தியாசமானது. இந்த பகுதியில் சேனாதிராஜா பழைய காலத்து இலட்சியவாதியாக நடந்துகொள்ளவில்லை. அரசியலில் உயர்மட்டத்தில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு சுயநல அரசியல்வாதியாக மாறினார். அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்தை அடுத்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு தரவேண்டும் என்று கோரியது தொடக்கம் 2020 தேர்தல் தோல்விக்கு பிறகு தேசியப்பட்டியல் உறுப்பினராக வருவதற்கு அருவருக்கத்தக்க முறையில் மேற்கொண்ட முயற்சி வரை அரசியல் பதவியைப் பெறவதில் தனக்கு இருக்கும் சுயநல வேட்கையை சேனாதிராஜா வெளிக்காட்டினார். அவர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு கட்சியும் கட்சி உறுப்பினர்களும் ஏன் இடங்கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொறுத்துக் கொள்ளமுடியாத சுயநலத்தை ஏன் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்? அதற்கு பதில் சேனாதிராஜாவின் கடந்த காலமே. தியாகங்கள் நிறைந்த அவரின் இளமைக்காலப் போராட்ட வாழ்வை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை கண்டிக்கவோ விமர்சனம் செய்யவோ தயங்குகிறார்கள். தற்போது அவர் எவ்வாறு நடந்துகொண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடந்த காலத்தைப் பற்றியே நினைக்கும் அவர்கள் தொடர்ந்தும் அவர் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். இந்த கட்டுரையாளரும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை வரும்வரை “சேனாதி அண்ணை” மீது அன்புகொண்டிருந்தவர்களில் ஒருவரே! https://arangamnews.com/?p=10461
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.