Clean Sri Lanka வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்து வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் இந்த ஜனாதிபதி செயலணிக்கு பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பது தமி்ழ் பேசும் மக்களின் அரசியல் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், அநுர அரசாங்கம் இலங்கையர்களாக சிந்திப்போம் என்று கூறுகின்றமையானது, தமிழ் மக்களுக்கு பிரச்சினை இல்லாதது போன்று காட்டும் தந்திரோபாயமாக உள்ளதாக என அரசியல் ஆய்வாளர் திபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
Clean Sri Lanka வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியும் தமிழர்களை அதாள பாதாளத்திற்கு தள்ளுவதாக உள்ளது.தமிழர்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றார்.
https://tamilwin.com/article/clean-sri-lanka-special-gazette-released-anura-1734792198