பார்திபன் கனவு
எங்கள் பார்திபனுக்கும் ஒரு கனவிருந்தது,
அவன் மனதில் அனல் குடி இருந்தது.
உறையூரான் கனவு சோழத்தை ஒட்டியது,
எங்கள் ஊரெழுவான் கனவு ஈழத்தை பற்றியது.
சோழப் பார்தீபன் கனவு வளர்த்தது வம்சத்தை,
எங்கள் ஈழப் பார்தீபன் நகர்வு,
சிதைத்தது பாரத வஞ்சத்தை.
பழுவேட்டையர்கள் உடம்பு பல தழும்புகள் கொண்டதாம்.
போங்கடா போங்கள், எங்கள் பார்தீபன் உடம்பே தழும்பில்தான் இருந்தது.
அவனுக்கு பொருத்தப் பட்டது ஆட்டு ஈரலாம்.
இருக்கட்டும்,
அவன் இதயம் வேங்கையினது.
அவன் ஒரு சாரம் கட்டிய பொடியன்.
ஆனால்,
பாரதத்துக்கே காந்திய சாரம் புகட்டிய வலியன்.
மருத்துவனாய் வந்திருக்கவேண்டியவன்,
இனத்தின் ரணத்திற்கு தானே மருந்தாய் வந்தான். முடிவில் மருத்துவகல்விக்கு உடலை விருந்தாயும் தந்தான்.
தடை போடலாம் அவன் நிகழ்வுகளுக்கு,
எம் மனதில் தினம் ஏந்தும் நினைவுகளுக்கு?
பார்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான். அவன் கனவும் .....
—கோஷான்—