Search the Community
Showing results for tags 'புலிகளின் காவல்துறை'.
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ நிழலரசின்(de-facto-state of Tamil Eelam) கீழ் இயங்கிய தமிழீழக் காவல்துறையின் சீருடைகள் மற்றும் அவர்களால் அணியப்பட்ட அணிகலன்கள் பற்றியே! இதுவே நான் கோராவில் எழுதும் ஈழப்போர் பற்றிய கடைசிக்கு முந்தைய ஆவணமாகும். இன்னும் ஒன்று மட்டுமே எஞ்சியுள்ளது, அது புலிகளின் படைத்துறைச் சீருடை பற்றியது. அதை அடுத்த வாரத்திற்குள் வெளியிடுகிறேன். சரி இவ்வாவணத்தை அவர்களின் சீருடையில் இருந்து ஒவ்வொன்றாகத் தொடங்குவோம்….. சீருடை (Uniform):- தமிழீழக் காவல்துறையின் அதிரடிப்படை தவிர்ந்த ஏனைய பிரிவுகளின் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான நிறம் கொண்ட ஆடையினையே உடுத்தியிருந்தனர். ஆண்:- முழுக் காற்சட்டை (full pant)- கடுநீலம் முழுக்கை & அரைக்கைச் சட்டை - இளநீலம் பெண்:- முழுக் காற்சட்டை - கடுநீலம் முழுக்கை & அரைக்கைச் சட்டை - இளநீலம் → தமிழீழக் காவல்துறையில் யார் முழுக்கைச் சட்டை அணிவார்கள்? யார் அரைக்கைச் சட்டை அணிவார்கள்? என்று எனக்குத் தெரியாது. ← → ஆண்களும் பெண்களும் மேற்சட்டையில் மூன்று தெறிகள்(button) மட்டுமே வெளியில் தெரியுமாறு மேற்சட்டை அணிந்திருந்தனர். → பெண்களினது மேற்சட்டையில் 4 பக்குகள்(pocket) இருந்தன; ஆண்களினது மேற்சட்டையில் 2 பக்குகள் இருந்தன. அவற்றின் நடுவிலே பூட்டுவதற்கு ஒரு தெறி(button) இருந்தது. ->ஆண்களினது முழுக் காற்சட்டையின் பின்பக்கத்தின் பிட்டத்தில் இரு பக்குகள் இருந்தன. அவற்றினைப் பூட்டுவதற்கு பக்கின் மூடியின் கீழ் இரு மூலையிலும் தலா ஒரு தெறி இருந்தது. இவ்விடத்தில் இன்னுமொரு விடையத்தைக் குறிப்பிட விடுர்ம்புகிறேன். அனைத்துக் காவலரும் விசிலினை வைத்திருந்தனர். அதை திரிக்கப்பட்ட கயிற்றில் கட்டி அதை தமது வலது கை தோள்மூட்டில் சுற்றிக் கொளுவியிருந்தனர் (ஏனைய தெற்காசிய நாட்டுக் காவல்துறையினர் போன்று). அக்கயிறு கடுநீல நிறத்தில் (நீளக் காற்சட்டையின் நிறம்) இருந்தது. வெண்கலத்தால் ஆனது விசில். தமிழீழக் காவல்துறையின் ஆண் & பெண் காவலர்கள் அனைவரும் 1996 வரை இருவேறு விதமான தொப்பிகளை(cap) அணிந்திருந்தார்கள். அவை ஆவன ஒரு பக்கக் தொப்பி(one side cap) - பெண்கள் ஆனால் அக்காலத்தில் இவர்களின் உயர் அலுவலர்கள்(higher officers) யாவரும் சுற்றுக்காவல் தொப்பியினையே அணிந்திருந்தனர். முழுக்கை:- 'யாழில் படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள பெண் காவலர்' அரைக்கை:- 'யாழில் SLR கொண்டு படைத்தகையில் ஈடுபட்டுள்ள பெண் காவலர் | வலது பக்க ஓரத்தில் நன்கு உத்துப் பாருங்கள், அரைக்கைச் சட்டையும் குணகு மகுடக்கவியும் அணிந்த இரண்டு ஆண் காவலர்களும் தெரிகின்றனர்' இதன் பக்கவாட்டு நடுப்பகுதி சரியரைவாசியாக பிரிக்கப்பட்டு அதில் ஓர் வில்லை(badge) தைக்கப்பட்டிருக்கும். அது இரு பகுதியாக்கப்பட்டு ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் அதில் பூசப்பட்டிருக்கும். சிவப்பு மேற்பக்கத்திற்கும் மஞ்சள் கீழ்ப்பக்கத்திற்கும் பூசப்பட்டிருக்கும். குணகு மகுடக்கவி(Slouch hat) - ஆண்கள் ஆனால், அக்காலத்தில் இவர்களின் உயர் அலுவலர்கள் யாவரும் சுற்றுக்காவல் தொப்பியினையே அணிந்திருந்தனர். ஆனால், அக்காலத்தில் இவர்கள் அணிந்திருந்த இடைவாரின் நிறம் கறுப்பு ஆகும். முழுக்கை:- 'யாழில் SLR கொண்டு படைத்தகையில் ஈடுபட்டுள்ள ஆண் காவலர்' அரைக்கை:- 'யாழில் SLR கொண்டு படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள ஆண் காவலர்களை உண்ணோட்டமிடும்(inspection) புலித் தலைவர் வே. பிரபாகரன், காவல்துறை பொறுப்பாளர் ப.நடேசன், படைத்துறை கட்டளையாளர்களான அதியரையர்(Brig) ஜெயம்(வ) & அதியரையர்(Brig.) சொர்ணம்(இ) மற்றும் காவல்துறை உயர் அலுவலர்(ஈ)* ' *ஈ- ஈற்று இக்குணகு மகுடக்கவியின் சுண்டிற்கு(bill) அண்டவாக ஓர் வில்லை தைக்கப்பட்டிருக்கும். அது இரு பகுதியாக்கப்பட்டு ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் அதில் பூசப்பட்டிருக்கும். சிவப்பு மேற்பக்கத்திற்கும் மஞ்சள் கீழ்ப்பக்கத்திற்கும் பூசப்பட்டிருக்கும். கடுநீல சுற்றுக்காவல் தொப்பி(patrol cap) 96 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலத்தில் ஆண்காவலரும் பெண்காவலரும் சுற்றுக்காவல் தொப்பிகளையே அணிந்திருந்தார்கள். இவை புலிகளிற்கே உரித்தான தொப்பிகளாகும்(caps) முன் பக்கப் பார்வை: பக்கவாட்டுப் பார்வை 'படத்தில் கொஞ்சம் நிறம் மாறியுள்ளது, தவறாக நினைக்க வேண்டாம். நல்ல படம் கிடைக்கவில்லை' இந்த தொப்பியின் பக்கவாடுகளில் இரு கண்ணிகள் (eyelets) இருக்கும். இவர்களுடைய தொப்பியின் [வரைகவி(Barret) நீங்கலாக] சுண்டிற்கு(bill) நெருக்கமான மேற்புறத்தில் வில்லை ஒன்று சுற்றிவரக் தைக்கப்பட்டிருக்கும். அது மூன்று பகுதியாக்கப்பட்டு மேலும் கீழும் சிவப்பாகவும் நடுவில் ஒக்க வெளிறிய மஞ்சளாகவும் இருந்தது. இந்நிறங்கள் குறித்து நிற்கும் பொருள் பற்றி நான் அறியேன்(unknown). இவை சில வேளை ஈழத்தமிழரின் மஞ்சள் சிவப்பு நிறங்களை குறித்தனவாக இருக்கலாம் என்பது என் துணிபு. இதை தொப்பியின் இரு பக்கவாட்டிலும் இருந்து தொடங்கி பிற்பகுதி முழுதும் மூடிமறைக்கும் விதமாக, தேவைப்பட்ட இடத்தின் அடிப்பகுதியில் இருந்து மேனோக்கி தொப்பியில் 33% கொள்ளும் வகையில் ஓர் துணியானது தைக்கப்பட்டு அது மேன்னோக்கி மடிக்கப்பட்டு தொப்பியூசி(அதான் தொப்பி ஊசி) கொண்டு இருபக்கத்திலும் குத்தப்பட்டிருக்கும். குத்தப்பட்ட இடம் சொண்டு(bill) தொடங்கும் இடமாகும். இதன் சொண்டானது புலிகளின் படைத்துறை சுற்றுக்கவல் தொப்பி(military patrol cap) போல நன்கு தட்டையாகவும் உலகளாவிய சுற்றுக்கவல் தொப்பி போன்றல்லாமல் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கிறது. இதன் பலகம்(panel) மிகவும் விறைத்தது(stiff) ஆகும். கடுநீல வரைகவி(beret) இவ்வகைத் தொப்பியானது கொலுவிருத்தங்களின் போது மட்டும் அணியப்படுவதாகும். இதை காவல்துறை இசைக்குழுவினரும் அணிவர். இவ் வரைகவியில் வில்லையில்லை. வில்லையானது இடது நெற்றிற்கு மேல் இருந்தது. 'கிளி. காவல்துறை நடுவப்பணியகத் திறப்பு விழாவில் கடுநீல 'வரைகவி ' அணிந்து T-56 கொண்டு சீராக நிற்கும் காவலர்' '7- 9- 2003 அன்று தமிழீழக் காவல் துறை நடுவப்பணியக திறப்பு விழாவின் போது காவல்துறை இசுக்குழுவினரும் இவ்வரைகவியை தலையில் அணிந்திருப்பதைக் காணலாம்' வில்லை - Badge பொதுவாக அனைத்துக் தொப்பிகளின் முன்பக்கத்திலும் இந்தப் வில்லையின் மையத்தின் மேற்பகுதியில் கொஞ்சமாக தொடும்படியாக காவல்துறை வில்லையினைக் (badge) குத்தியிருப்பார்கள். அது வெள்ளியால் ஆனது ஆகும். தலைச்சீரா - Helmet போக்குவரத்துக் காவலர்கள் இரு விதமான தலைச்சீராவினை அணிந்திருந்தனர். விதம் - 1 \ விதம் - 2 இந்த வித தலைச்சீராவில் இரு வெவ்வேறு தோற்றமுடைய இலச்சினைகள் பொறிக்கப்பட்டிருந்தன. 1) இந்த தலைச்சீராவின் முன்பகுதியில் 'Police' என்று ஆங்கிலத்தில் கடுநீல நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். அதற்கு மேலே, இதன் தலை முன்பகுதியில் சிவப்பு நிறத்திலான வட்டத்திற்குள் முக்கோணம் இருப்பது போன்ற தோற்றத்திலான ஒரு இலச்சினை உள்ளது. அது குறித்துநிற்கும் பொருள் அறியில்லை. 'இப்படிமத்தில் நீங்கள் காணும் காவலரின் இடுப்புப்பட்டி போன்றே அனைத்துக் காவலரும் கடுநீல நிற இடுப்புப்பட்டி (அண்ணும் பெண்ணும்) அணிந்திருந்தனர்.' 2) இத தலைச்சீராவின் நெற்றிப்பக்கத்தில் கிடைமட்டமான நீளவட்டத்தினுள் மூன்று சுருக்க ஆங்கில எழுத்துக்கள் (U.P.Co) - உபாலி பெரேரா கொம்பனி - எழுதப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்துக்களுடனான வேறு சில காவலர்கள் அணிந்துள்ள தலைச்சீராவில், இந்த ஆங்கில எழுத்துக்களுக்குக்(U.P.Co) கீழே 'Police' என்று கடுநீல நிறத்தில் எழுதப்பட்டுள்ளது. அலகு வில்லை - Unit Badge இருபாலரும் இருபுயத்திலும் அணிந்திருந்தனர். எண் தகடு இதை, →பெண்கள் தங்களின் இடது & வலது தோள்மூட்டில் உள்ள தோள் மணையில் இதைக் குத்தியிருப்பர். →ஆண்கள் வலது மார்பில் பக்கிற்கு(pocket) மேலே குத்தியிருப்பர். ஆண்கள் பெண்களைப் போலல்லாமல் வெறும் எண்களை மட்டுமே குத்தியிருந்தனர். 'பெண்கள் குத்துவது' பதவிக்குறி - Chevrons பதவிக்குறிகளை தமது இடது கையில் குத்திய காவலர்கள் இருக்கும் இரண்டு படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் சிலர் இரண்டு பதவிக்கோடுகளையும் வேறுசிலர் மூன்று பதவிக்கோடுகளையும் குத்தியிருந்ததை காணக்கூடியவாறு உள்ளது. அவை இடது கையில் புயவில்லைக்கு கீழே கீழ்நோக்கி பார்த்தப்படியாக குத்தப்பட்டிருந்தன. அவ்வாறு குத்தப்பட்டிருந்த வில்லைகள் பால் வான்னீல நிறத்தில் இருந்தன. இவற்றை குத்திய காவலர்களின் படங்கள் வேறு கிடைக்காமையால் இது பற்றிய வேறு எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை. காவல்துறை சீக்காயி - Police whistle இருபாலரும் இடது பக்கத் தோளில் காவல்துறைக்கே உரித்தான கயிறுமூலம் அதை கட்டி இடது பக்க பக்கிற்குள்(pocket) வைத்திருப்பர். தோள் மணை - Shoulder board பெண் அலுவலர்கள் தோளில் கடுநீல நிற தோள் மணை அணிந்திருப்பர். ஆண் அலுவலர்கள் ஏதும் அணியார் மேல் அலுவலர்களில்(Superior officers) இருபாலரும் தோள் மணை அணியார். ஆனால் தோள் மணை இருக்கும் இடத்தில் உள்ள துண்டத்தின்(piece of cloth) மேல் ஒன்று, இரண்டு, மூன்று என்று பதவிக்கேற்ப அறுமுக தாரகைகள் குத்தியிருந்தனர். அத்தாரகையின் நடுவே தட்டையான கூம்பு ஒன்று இருந்தது. 'இம் மேல் அலுவலர்களின் தோள் துண்டத்தின் மேல் அறுமுக தாரகைகள் இருப்பதை கவனி. ஒவ்வொருவரின் தோளிலும் அவரவர் பதவிக்கேற்ப அறுமுக தாரகைகளின் எண்ணிக்கை கூடிக்குறைந்திருப்பதை நோக்குக.' கைத்துப்பு தடறு - Pistol Holster இதை உயர் & மேல் அலுவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மட்டுமே அணிந்திருந்தனர். இதை இவர்கள் இடுப்பில் கட்டுவார்கள். இதற்காக ஒரு வார் ஒன்றினை வலது பக்கத் தோளின் துண்டத்தில் இருந்து நெஞ்சிற்குக் குறுக்காக கைச்சுடுகலனின் பிடங்கோடு இணைத்திருப்பர். இடைவார் - Belt 96 வரை: ஆண்கள் - கறுப்பு நிறம் இவர்களின் இடைவாரினை உள்ளுடுத்துவதற்கு குதைகளிற்கு(loop) பகரமாக தெறிகள்(buttons) கொண்ட ஓர் சிறிய துண்டம்(piece of cloth) முழுக் காற்சட்டையின் இடைவார்ப் பகுதியில் தைக்கப்பட்டிருக்கும். அந்த இடைவாரில் இரு கவர்கள்(prong) இருந்தன. அதைத் திறந்து மூடலாம். இவ்வாறுதான் படைத்துறைக்கும் தைக்கப்பட்டிருந்தது. இது புலிகளின் பாணி! பெண்கள் - வெள்ளை நிறம் ஆண்களிற்குத் தைக்கப்பட்டிருந்ததைப் போன்ற துண்டங்கள், பெண்களிற்குத் தைக்கப்படவில்லை, மாறாக குதைகள்(loops) தைக்கப்பட்டிருந்தன. அது பலவாக இல்லாமல் மேற்சட்டையின் இருபக்க சள்ளையிலுமாக(இறைக்கு மேலிருக்கும் பக்கவாட்டு தசை மிகு பகுதி) மொத்தம் இரண்டு தைக்கப்பட்டிருந்தது. இது இடைவாரினை கீழிறங்காமல் உரிய இடத்தில் வைத்திருக்க உதவியது. அந்த இடைவாரில் இரு கவர்கள் இருந்தன. 'யாழில் SLR கொண்டு படைத்தகையில்(parade) ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை உண்ணோட்டமிடும்(inspection) புலித் தலைவர் வே. பிரபாகரன், காவல்துறை பொறுப்பாளர் ப.நடேசன்(இ), படைத்துறை கட்டளையாளரான(Military Commander) சொர்ணம் (வ) மற்றும் காவல்துறை உயர் அலுவலர்(பி) ' 96 இல் இருந்து: ஆண்கள் - கடுநீல நிறம் இவர்களின் இடைவாரினை உள்ளுடுத்துவதற்கு குதைகளிற்கு(loop) பகரமாக தெறிகள்(buttons) கொண்ட ஓர் சிறிய துண்டம்(piece of cloth) முழுக் காற்சட்டையின் இடைவார்ப் பகுதியில் தைக்கப்பட்டிருக்கும். அந்த இடைவாரில் இரு கவர் இருந்தது. அதைத் திறந்து மூடலாம். இவ்வாறுதான் படைத்துறைக்கும் தைக்கப்பட்டிருந்தது. 'போக்குவரத்துக் காவலர் கதுவீ சுடுகலன் (RADAR Gun) கொண்டு வேகத்தை அளவிடும் காட்சி | ' பெண்கள் - வெள்ளை நிறம் & கடுநீல நிறம் →அலுவலர் - வெள்ளை நிறம் →உயர் அலுவலர்(Higher officers) - கடுநீல நிறம் ஆண்களிற்குத் தைக்கப்பட்டிருந்ததைப் போன்ற துண்டங்கள், பெண்களிற்குத் தைக்கப்படவில்லை, மாறாக குதைகள்(loops) தைக்கப்பட்டிருந்தன. அது பலவாக இல்லாமல் மேற்சட்டையின் இருபக்க சள்ளையிலுமாக(இறைக்கு மேலிருக்கும் பக்கவாட்டு தசை மிகு பகுதி) மொத்தம் இரண்டு தைக்கப்பட்டிருந்தது. இது இடைவாரினை கீழிறங்காமல் உரிய இடத்தில் வைத்திருக்க உதவியது. அந்த இடைவாரில் இரு கவர்கள்(prong) இருந்தது. 'பணிக்குச் செல்ல முன் உறுதியேற்கும் பெண் காவலர். இது தமிழீழ காவல்துறை வழக்கம்' உயர் கட்புலன் பாதுகாப்பு கஞ்சுகம் - HIgh Visibility safety vest இது செம்மஞ்சள் நிறத்தில் வீதி போகுவரத்துக் காவலர்களால் அணியப்பட்டது. சப்பாத்து(Shoe): படைத்துறையினைச் சார்ந்தவர்கள் அணியும் சண்டைச் சப்பாத்திற்கு(combat shoe) மாற்றாக சாதாரண சப்பாத்தினை அணிந்திருந்தார்கள். பெண்கைளின் தலைமயிர்: இவர்கள் புலிகளின் படைத்துறையில் இருந்த பெண்களைப் போலல்லாமல் தங்கள் தலைமயிரை வேறுபட்ட விதத்தில் இதோ இப்படித் தூக்கிக் கட்டியிருந்தனர்: ஆண்களின் தலைமயிர்: இவர்களும் புலிகளுக்கே உரித்தான விதத்தில் படைத்துறையில் பணியாற்ற்றும் ஆண்களைப் போலவே மயிர் வெட்டியிருந்தனர். உந்துருளி - Motor bike இவர்கள் வெள்ளை நிற 'கீரோ கொண்டா பாசன்(Hero Honda passion)' உந்துருளியினைப் பயன்படுத்தினர். அவற்றில் காற்றுத்தட்டியும் பொருத்தப்பட்டிருந்தது. 'முகப்பு விளக்கிற்கு மேலே 'தமிழீழ காவல்துறை' என நீல நிறத்தில் எழுதப்பட்டுளதைக் கவனிக்குக | 2006' ''முகப்பு விளக்கிற்கு மேலே 'தமிழீழ காவல்துறை' என நீல நிறத்தில் எழுதப்பட்டுளதைக் கவனிக்குக | 2002'' 'தமிழீழக் காவல்துறை உந்துருளியின் பக்கவாட்டுப் பார்வை | பின் இருக்கைக்கு கீழே ''Police" என நீல நிறத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதைக் கவனிக்குக' ஊர்திகள்: அவை பிக்அப், பஜரோ, கண்டர் என்று பற்பல விதமானவை. இவற்றின் நிறங்கள் வெள்ளை அல்லது கடு நீலத்தில் இருந்தன. போக்குவரத்துக் காவலரின் கைமேசு(Gloves of the TE Traffic Police):- வெள்ளை நிறத்தில் இருந்தது.அதன் உள்ளங்கைப் பகுடியில் ஒரு சிவப்பு நிறத்திலான வட்டம் இருந்தது. புறங்கையில் சத்தாருக்கு இரு பட்டை போன்ற கோடுகள் இருந்தன. கைச்சுடுகலன் (Pistol) உயர் அலுவலர்கள் அனைவரும் கைச்சுடுகலனை வைத்திருந்தனர். வலது கை தோள்மூட்டு தோள்மணையோடு ஒரு இறப்பர் நாடா மூலம் அது பிணைக்கப்பட்டிருந்தது, யாரும் பறித்திடா வண்ணம் பாதுகாக்க. கைச்சுடுகலனை தடறினுள் இட்டு இடது பக்க இடுப்பில் இடுப்புப்பட்டி கொண்டு கட்டியிருந்தனர். 'இக்காவல் அதிகாரி வைத்திருப்பதைக் காண்க' அணிநடையின்போது (During Marchpast) காவல்துறை சிறப்பு அதிரடிப்படை (Police Special Commando) இவர்கள் கீழ்க்கண்ட நிறத்திலான உடையினை அணிந்திருந்தனர் 'படிமப்புரவு: வேசுபுக்கு' 'காவல்துறை சிறப்பு அதிரடிப்படை' 'காவல்துறை சிறப்பு அதிரடிப்படை' காவல்துறை படையணி இப்படையணி 2006ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் இதில் பணியாற்றியுள்ளனர். இவர்கள் பற்றிய மேலதிக குறிப்புகள் ஏதும் என்னிடம் இல்லை. இவர்கள் தமது பயிற்சித் தொடக்கத்தின் போது ஒரு விதமான கடுஞ்சாம்பல் & பச்சை ஆகிய இரு நிறங்களிலான சீருடை அணிந்திருந்தனர். அதே நிறத்திலான சுற்றுக்காவல் தொப்பியும் அணிந்திருந்தனர். சுற்றுக்காவல் தொப்பியில் ஏதோ ஒருவிதமான சதுர அவ்டிவ வில்லையினைப் பொறித்துள்ளனர், ஆனால் அதில் உள்ள சின்னத்தை என்னால் தெளிவாகக் காண இயலவில்லை. பச்சை - ???????? கடுஞ்சாம்பல் போன்ற நிறம் - ????????????? 'பயிற்சித் தொடக்கத்தின் போது எடுக்கப்பட்ட படிமம்.' 'பயிற்சித் தொடக்கத்தின் போது எடுக்கப்பட்ட படிமம்.' ஆனால் நான்காம் ஈழப்போரின் போது (பயிற்சி முடிந்து பணியின் போது) இவர்கள் கடும்பச்சை நிறத்திலான படையணிச் சீருடை ஒன்றை அணிந்திருந்தனர். அதைக் கீழ்க்காணும் 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட படிமத்தில் நீங்கள் காணலாம். இவர்களின் தொப்பியாக புலிகளின்ச் எந்தரப்படுத்தப்பட்ட தொப்பியே பாவிக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் நீட்டுவரிக்காரர் இருவருக்கு நடுவில் நிற்கும் தமிழீழ காவல்துறை படையணிப் போராளியை காணுங்கள் (நான் அவருடைய தொப்பியில் உள்ள வில்லையையும் (badge) அவர் அணிந்துள்ள சீருடையையும் வைத்தே இன்னாரென கண்டுபிடித்தேன்). உசாத்துணை: படங்களை வைத்து சொந்தமாக எழுதியது. அவற்றில் காவல்துறை சிறப்புப்படைக்கான ஆதாரமாக இந்த ஒரு படத்தினை தருகிறேன்: https://www.sundaytimes.lk/020609/columns/sitrep1.html செ.சொ.பே.மு. படிமப்புரவு JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn Stock Photos, Stock Images & Vectors அருச்சுனா புகைப்படக் கலையகம் YouTube http://Thaaraakam.com Log In or Sign Up ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
- 3 replies
-
- ஈழக் காவல் துறை
- தமிழ் ஈழக் காவல்துறை
- (and 10 more)