Search the Community
Showing results for tags 'விளம்பர தடுப்பான்களுக்கு தடை..'.
-
யூடியூப்பில் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க! "மொத்தமா தூக்கிடுவாங்க!" பெரிய முடிவை எடுக்கும் யூடியூப் வாஷிங்டன்: யூடியூப் அதன் தளத்தில் விளம்பரத்தில் விளம்பரத்தைத் தடுக்கும் வகையில் ad blockingஐ பயன்படுத்துவோரைத் தடுக்க முக்கிய அதிரடி நடவடிக்கையை எடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகப் பெரிய வீடியோ ஷேரிங் நிறுவனமாக இருக்கும் யூடியூப் தளத்தில் இரண்டு வகை இருக்கிறது. இலவசமாக யூடியூப்பை பயன்படுத்த வேண்டும் என்றால் அனைவரும் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். இப்போது வீடியோவின் தொடக்கத்தில் சில விளம்பரங்களும் இடையில் சில விளம்பரங்களும் வருகிறது. யூடியூப் தளத்தில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டே செல்கிறது. ஒரு வீடியோவை பார்க்கக் குறைந்தது 4, 5 விளம்பரங்களை இப்போது பார்க்க வேண்டி இருக்கிறது. உங்களுக்கு விளம்பரங்களைப் பார்க்க வேண்டாம் என்றால் அதற்கு நீங்கள் பிரீமியம் சந்தா செலுத்த வேண்டும். இதற்குத் தனியாக மாதம் 130 ரூபாயைச் செலுத்த வேண்டும். இருப்பினும், சிலர் முறைகேடாக வீடியோ செலுத்தாமல் பார்க்க ad blocking சாப்ட்வேர்களை பயன்படுத்துகிறார்கள். யூடியூப் விளம்பரங்களைத் தடுக்கவே தனியாகச் செயலிகளும் லேப்டாப்பில் எக்ஸ்டென்ஷன்களும் இருக்கவே செய்கிறது. இவை ஊறரிந்த ரகசியம் போலவே இருந்து வந்துள்ளது. இதற்கிடையே ஒரு வழியாக இப்போது இதுபோல முறைகேடுகளைச் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக யூடியூப் தளம் அறிவித்துள்ளது. இது எதோ வெறும் எச்சரிக்கை செய்யும் செயல் மட்டும் இல்லை. யூடியூப்பை பயன்படுத்தும் ஒருவர் ad blocking சாப்ட்வேர்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மெசேஞ் வரும். அதாவது உங்களுக்கு, "நீங்கள் ad blockerஐ பயன்படுத்துகிறீர்கள்.. இதை ரிமூவ் செய்யவில்லை என்றால் வீடியோ பிளே ஆகாது" என மெசேஞ் வரும். இப்போதே நீங்கள் ad blockerஐ உடனடியாக தூக்கிவிட வேண்டும். இல்லையென்றால் மூன்று வீடியோக்கள் வரை பார்ப்பார்கள். அதன் பின்னரும் ad blocker இருப்பது உறுதியானால், உங்களை யூடியூப் தளத்தில் இருந்தே பிளாக் செய்துவிடுவார்கள். அதன் பிறகு யூடியூபில் வீடியோவை பார்க்கவே முடியாது எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இது நிரந்தர தடையாக இருக்குமா அல்லது ad blockerஐ தூக்கியவுடன் மீண்டும் பார்க்கும் வகையில் இருக்குமா என்பது குறித்துத் தெளிவாகத் தகவல்கள் இல்லை. அதேநேரம் இப்போது வரை இதை யூடியூப் டெஸ்ட் செய்து வருவதாகவே தெரிகிறது. இதை இன்னும் முழுமையாக அமல்படுத்தவில்லை. நெட்டிசன்கள் பலரும் தாங்கள் ad blockerஐ பயன்படுத்துவதாகவும் இருப்பினும் தங்களது கணக்குகள் எதுவும் பிளாக் ஆகவில்லை என்றே கூறி வருகின்றனர். மேலும், எந்த மாதிரியான ad blockerகள் பிளாக் செய்யப்படும் என்பது பற்றிய தகவல்களும் துல்லியமாக இல்லை. யூடியூப் நிறுவனத்திற்கு அதன் முக்கிய வருவாயாக விளம்பரங்கள் தான் இருக்கிறது. கொஞ்ச காலத்திற்கு முன்பு அவர்களும் ஓடிடி போல மாற சந்தா முறையைக் கொண்டு வரப் பார்த்தார்கள். இருப்பினும், யாருமே அதில் ஆர்வம் காட்டவில்லை. பல ஆண்டுகளாக யூடியூப் தளத்தை இலவசமாகப் பார்த்துப் பழகிய மக்கள் இப்போது அதற்குச் சந்தா செலுத்த மறுக்கிறார்கள். இதன் காரணமாகவே மீண்டும் யூடியூப் இப்போது மீண்டும் விளம்பரங்களை முன்னிறுத்த ஆரம்பித்துள்ளது. வீடியோவுக்கு முன்பு இப்போது 2 விளம்பரங்கள் வரும் நிலையில், 4 விளம்பரங்களைக் கொண்டு வருவது குறித்தெல்லாம் டெஸ்டிங் நடந்தது. இந்தச் சூழலில் தான் விளம்பரங்களில் இருந்து தப்பிக்கும் சாப்ட்வேரை கிடுக்கு பிடியாகத் தடுக்கும் நடவடிக்கையில் யூடியூப் இறங்கியுள்ளது. https://tamil.oneindia.com/news/washington/what-is-the-youtube-plan-of-three-strikes-policy-for-stopping-ad-blocking-software-519115.html