Search the Community
Showing results for tags 'வெஸ்டர்ன் டொய்லெட்டுகளில் இரண்டு பட்டன்கள் இருப்பதற்கான காரணம் என்ன?'.
-
நாம் பொதுவாக வெஸ்டர்ன் டொய்லெட் பயன்படுத்தி முடித்த பிறகு, தண்ணீர் விட்டு சுத்தம் செய்வதற்காக, இரட்டை பட்டன்களில் ஏதோ ஒன்றை அழுத்துவோம். எந்த பட்டனை அழுத்தினாலும் தண்ணீர் வரும் என்றே இதனை செய்வோம். ஆனால், உண்மையில் இந்த இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. நவீன காலத்திற்கேற்ப வெஸ்டர்ன் டொய்லெட்டுகள் பல வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சிலருக்கு அதனை எப்படி பயன்படுத்து என்பது தெரியாமல் இருக்கிறது. வெஸ்டர்ன் டொய்லெட்டுகள் இரண்டு வகையான ஃப்ளஷ்களுடன் வருகின்றன. ஒன்று மற்றொன்றை விட சிறியதாக இருக்கும். அவை ‘டூயல் ஃப்ளஷ்’ கழிப்பறைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் ஏன் இரண்டு பட்டன்கள் இருக்கின்றன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? டொய்லெட் பயன்படுத்தி முடித்த பிறகு அதனை ஃபிளஸ் செய்ய மேலே ஒரு தண்ணீர் டேங்க் இருக்கும் அதில் இரண்டு பட்டன்கள் இருக்கும். நாம் பொதுவாக டொய்லெட் பயன்படுத்தி முடித்த பிறகு, தண்ணீர் விட்டு சுத்தம் செய்வதற்காக, இரட்டை பட்டன்களில் ஏதோ ஒன்றை அழுத்துவோம். எந்த பட்டனை அழுத்தினாலும் தண்ணீர் வரும் என்றே இதனை செய்வோம். சிலர் பெரிய பட்டன் அழுத்துவதே நன்றாக ஃபிளஸ் செய்யும் என்று எப்போதுமே அதையே பயன்படுத்துவார்கள். ஆனால், உண்மையில் இந்த இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தண்ணீர் டேங்கின் சிறிய பட்டனை அழுத்தும்போது குறைவான தண்ணீர் வரும். பெரிய பட்டனை அழுத்தும்போது நிறைய தண்ணீர் வரும். பொதுவாக சிறுநீர் கழிக்கும் சமயத்தில் ஃப்ளஷ் அவுட் செய்ய குறைவான தண்ணீர் வரும் சிறிய பட்டனை அழுத்துவதே போதுமானது. அதுவே மலம் கழிக்கும் போது அதிக தண்ணீர் விட்டு ஃப்ளஷ் அவுட் செய்ய வேண்டும். அந்த சமயத்தில் பெரிய பட்டனை பயன்படுத்த வேண்டும். பெரிய பட்டன் 6 முதல் 9 லிட்டர் தண்ணீரை வெளியேற்றுகிறது. அதேசமயம் சிறிய பட்டன் 3 முதல் 4.5 லிட்டர் தண்ணீரை வெளியேற்றுகிறது. டூயல் ஃப்ளஷ் கான்செப்ட் என்பது அமெரிக்க தொழில்துறை வடிவமைப்பாளர் விக்டர் பாபனெக்கின் யோசனை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/279225