Search the Community
Showing results for tags '4k resolution'.
-
4K என்றால் என்ன? ஒருவர் 'கேமரா வாங்க வேண்டும்' என்று நினைக்கும் நேரத்தில், நண்பர்கள் "மாப்பிள்ளை 4K கேமரா வாங்கு.. அதுதான் எதிர்காலம்" என்று போகிற போக்கில் தட்டிவிடுகிறார்கள். சொல்பவர்களுக்கு 'அது என்ன?' என்றே தெரியாமலிருக்கும், ஆனால் மற்றவர்களுக்கு ஜடியா சொல்வார்கள், இதனால் நம் கலைஞர்களிடையே ஒரு வித குழப்பம் நிலவுகிறது, 4K என்றால் என்ன..?, அதை எந்த சாஃப்ட்வேரில் எடிட் செய்வது..?, அதை எந்த ரூபத்தில் கஸ்டமர்களுக்கு கொடுப்பது..? போன்ற கேள்விகளை 4K பொருட்களை விற்கும் கம்பெனி பிரதிநிதிகளை கேளுங்கள், பதில் கிடைக்காது. அவர்களுக்கு விற்க மட்டுமே தெரியும். இது போன்று பல வியாபாரிகள் விற்கும் பொருளின் தொழில் நுட்பம் தெரியாமலே. அதை மிகைப்படுத்தி நம்மிடையே விற்கிறார்கள்.இது தான் நிதர்சனமான உண்மை. 4K பற்றி எழத வேண்டும் என்றால் நிறைய பக்கங்கள் வேண்டும். 4K RESOLUTION 4096 X 2160 /24p (24 FRAMES) இது சினிமா சைஸ் UHD (Ultra High Definition) 3840 X 2160 /50p ( 50 FRAME PROGRESSIVE ) 2K RESOLUTION 2048 X 1536 /50p ( 50 FRAME PROGRESSIVE ) சாதாரண 4K கேமராக்களில் அவுட்புட் HDMI 1.4 VERSION மட்டுமே இருக்கும். இதை மிக்ஸிங் போர்ட்களில் உபயோகபடுத்த முடியாது. மிக்ஸிங் போர்ட்களில் உபயோகபடுத்தபடும் SDI- OUT உள்ள Sony PMW-F55 CineAlta 4K இந்த கேமராவின் விலை 20 லட்சம். 4K மிக்ஸிங் யூனிட் போடுவதற்கு ( 2 கேமரா சேர்த்து ) ஒரு கோடி வேண்டும். 4K டி.வி. வாங்கும் போது கூட கவனமாக இருக்க வேண்டும்.காரணம் 4K என்று போட்டிருப்பார்கள், ஆனால் நாம் அதன் RESOLUTION 4096 X 2160 இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 4K பைல்களை எந்த சாஃப்ட்வேரில் எடிட்செய்வது. EDIUS PRO 7.4 அல்லது ADOBE PREMIRER CC இவற்றில்தான் எடிட் செய்ய முடியும். ஆனால் மினிமம் சிஸ்டத்தின் விலை 3 லட்சம். சரி இதை கஸ்டமர்களுக்கு எப்படி கொடுப்பது, USB 3,0 PORTABLE HARD DISK இதில்தான் கொடுக்க முடியும். அதே நேரத்தில் கஸ்டமர்களின் 4K டி.வி.களில் USB 3,0 INPUT இருக்க வேண்டும்.அல்லது HDMI 2.0 OUT உள்ள HARD DISK MEDIA PLAYER வேண்டும். இதன் முலம் ப்ளே செய்ய வேண்டும் என்றால் டி.வி.களில் HDMI 2.0 INPUT இருக்க வேண்டும். சிலர் கேட்பார்கள் நான் 4K யில் எடுத்து அதை புளுரேயாக(BlueRay) கன்வெர்ட் செய்து கொடுக்கலாமே? என்பார்கள். இதனால் குவாலிட்டி கூடிவிடும் என்று நினைத்தால் அது நிஜம் அல்ல. இரண்டாவது 4K ஃபைலை எடிட் செய்ய சிஸ்டம் ஹெவியாக இருக்க வேண்டும். 4K கேமராக்களை வாங்க வேண்டாம் என்று சொல்லவிலை. 4K கேமராக்கள் முலம் HD யாகவும் எடுக்க முடியும். 4K யில் எடுத்து 4K யில் கொடுப்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம். Tamil Talkies