ட்ராவலேட்டர் (Travelator)
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு (காமராஜர் முனையம்) முனையத்திற்கும், வெளிநாட்டு (அண்ணா முனையம்) முனையத்திற்கும் இடையேயான தூரத்தை பயணிகள் சிரமமின்றி அடைய 'ட்ராவலேட்டர்' அமைக்கும் பணி பல வருடங்களுக்குப் பின், வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. இவ்வசதி மக்கள் பாவனைக்கு வந்தபின் பயணப்பொதிகளுடன் இறங்கும் பயணிகள், அதிக சிரமமின்றி இரு முனையங்களுக்கும் சென்று வரலாம்..
வெளிநாடுகளில் சர்வதேச விமான நிலையங்கள், பெரும்பாலும் நிலத்தடி தொடருந்துகளை முனையங்களுக்கிடையே இயக்கிவரும் வேளை, ஏழைக்கேற்ற எள்ளுருண்டையான இந்த 'ட்ராவலேட்டர்'களை மத்திய அரசிடமிருந்து சென்னை விமான நிலையம் பெற, பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று..
'ட்ராவலேட்டர்' மாதிரி வடிவமைப்பு
நிறுத்தப்பட்ட 'ட்ராவலேட்டர்'களின் கூண்டுப் பாதை
தற்பொழுது 'ட்ராவலேட்டர்' அமைக்கும் பணி துவக்கம்.