பாட்டி வடை சுட்டு, காக்கைக்கு விருந்தளித்ததை படித்தோம்..!
பாட்டி மீன் சுட்டு, விசிறியதை யாழ் களத்தில் கண்டோம்..!!
இன்று நண்பர்கள் தினம்..!
பாட்டியிடம் கேட்டால், "பேரான்டி.. அருமையான பைசூர் பாக் செய்வது எப்படியென சொல்கிறேன்.. நீ உன் நண்பர்களுக்கு செய்து கொடு..!" என்றார்..
நமக்கேது அதற்கு நேரம்..?
அவர் செய்து காட்டிய வழியில், நீங்களும் சுவையான மைசூர் பாக் செய்து நண்பர்களுக்கும், உங்கள் வீட்டிலும் பகிர்ந்து மகிழுங்கள்..!