அடிப்பியா..? அப்பன் மவனே.. சிங்கம்டா!
1940ல் வெளிவந்த 'சகுந்தலை' படத்தில் வரும் இந்த நகைச்சுவை காட்சி திரையுலகில் சாகாவரம் பெற்ற மிகவும் முக்கியமான காட்சியாக இன்றளவும் பேசப்படுகிறது.
இரண்டு செம்படவர்கள் ஒரு மீனுக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரை அடிக்க ஆரம்பிக்கிறார். அடிபட்டவர் திருப்பித் தாக்காமல் "அடிப்பியா, அப்பன் மவனே, சிங்கம்டா..!" என்று தனது வீரத்தைப் பறை சாற்றுவார். முதலாமவர் மறுபடியும் அடிப்பார். அப்போதும் பதிலாக இதே வசனம்தான். ஆனால் அடிபட்டவரின் குரல்பாவத்தில் வேறுபாடு. இப்படி அடிப்பவர் அடித்துக்கொண்டே இருக்க அடிபடுபவர் மறுபடியும், மறுபடியும் இதே பதிலை வேறுவேறு பாணியில் சொல்ல, கடைசியில் அது அழுதுகொண்டே சொல்வதுபோல் முடியும்.
இலங்கை வானொலியில் இந்த ஒலிச்சித்திரத்தை அடிக்கடி கேட்டுள்ளேன்.. என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி.எஸ்.துரைராஜ் நடித்த இக்காட்சி அருமையான நகைச்சுவை யாழ் உறவுகளுக்காக..!