இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
Search the Community
Showing results for tags 'the great indian kitchen'.
-
ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் படங்களின் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது “தி இந்தியன் கிச்சன்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் ஜோ பேபி இயக்கத்திற்கு இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் ரீமேக் தான் தமிழில் தற்போது வெளியாகி இருக்கும் படம். மலையாளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தமிழிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என்பதை பார்க்கலாம் வாருங்கள். கதைக்களம் : சாதாரண குடும்பத்தை சேர்ந்த நடன ஆசிரியரான ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளி ஆசிரியரான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்கிறார். திருமணத்திற்கு பிறகு பழமையை சுமந்து கொண்டிருக்கும் தன்னுடைய கணவர் ராகுல் ரவீந்திரனின் வீட்டிற்கு வாழ செல்கிறார். பின்னர் அவரது வீட்டில் தொடர்ந்து சமைப்பது, பாத்திரம் கழுவுவது, சுத்தம் செய்வது என்று ஒரு இயந்திரத்தை போல உழைத்து கொண்டிருக்கும் ஐஷ்வர்யா ராஜேஷ் அந்த வீட்டில் உள்ள ஆணாதிக்க கொடுமைகளில் இருந்து எப்படி விடுபெறுகிறார் என்பதனை கதையாக எடுத்துள்ளனர். எப்போதும் போல ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு இப்படத்திற்கு பெரும்பலம் சேர்க்கிறது அது மட்டும் இல்லாமல் இவரின் முக பாவனைகள், அழுகை, அவமானம், அருவெறுப்பு போன்றவற்றில் சிறப்பாக நடித்து படத்தின் மொத்த பாரத்தையும் தன் மீது தாங்கி கொள்கிறார். அவரை தவிர மற்ற நடிகர்கள் சில படத்திற்கு தேவையான நடிப்பையே வெளிப்படுத்தி இருக்கின்றனர். குடும்ப தலைவராக வரும் ராகுல் ரவீந்திரன் சுமாராகவே நடித்திருக்கிறார். ஒருவேளை கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல நடிப்பை கொடுத்திருக்கலாம். மேலும் இப்படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு மேலும் வலுவூட்டுகிறது. குறிப்பாக “லைட்டை ஆஃப் பண்ணட்டுமா” என்று மட்டுமே கேட்கும் கணவன், கையில் துவை, விறகு அடுப்பில் சமையல் செய் என குறைசொல்லும் மாமனார் அவர்கள் பேசும் வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கிறது. ஐஷ்வர்யா ராஜேஷ் வீட்டில் துவைப்பது, பாத்திரம், கழுவுவது, பெருகுவது மீண்டும் அதனையே திரும்பவும் செய்வது என அன்றாட வாழ்க்கையில் வீட்டு பெண்களுக்கு ஏற்படும் சலிப்பையும், கோபத்தையும் தத்ரூபமாக காட்சியாக்கி இருக்கிறார் இயக்குனர். இப்படத்தில் திரைக்கதையோடு நகரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது. இப்படி நிதானமாக சென்று கொண்டிருந்த திரைக்கதை இரண்டாம் பாதியில் மாறுகிறது. காட்சிகள் எடுக்கப்பட்ட வேகத்தினால் பிரச்சனைகளோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. ஒரே ஒரு வீட்டை மட்டுமே சுற்றி நடக்கும் இந்த படத்தின் திரைக்கதை பார்வையாளர்கள் வெறுக்காத வண்ணம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பாலசுப்பிரமணியம். மேலும் படத்தின் பின்னணி இசையில் வின்சன்ட்டும், ஜெர்ரி சில்வரும் படத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறன்றனர். மேலும் வீட்டில் காய் நறுக்குவது, பாத்திரம் கலுவுவது போன்ற சப்தங்கள் த்தரூபமாக இருக்கிறது. குறை : ஐஸ்வர்யாவை தாவிர மற்றவர்களில் நடிப்பு சுமார் தான். இரண்டாம் பாதி வேகமாக நகர்கிறது.எனவே கவனிக்க முடியவில்லை. படம் ரீமேக் என்றதினால் செயற்கை தனம் லேசாக தெரிகிறது. நிறை : ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பு பிரமாதம். ஒரே வீட்டில் படம் இருந்தாலும், சலிப்படையாத வானம் ஒளிப்பதிவில் கலக்கி இருக்கின்றனர். வசனங்கள் படத்திற்கு வலு சேர்கிறது. மொத்தத்தில் ஒரு குடும்ப தலைவர் இதனை கூட எதிர்பார்க்க கூடாத என்ற கேள்விக்கு “கூடாது” என்று சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது இந்த “தி கிரேட் இந்தியன் கிட்சன்” படம். https://tamil.behindtalkies.com/the-great-indian-kitchen-movie-review/amp/ இந்த திரைப்படம் இதே பெயரில் 2021 ல் எடுக்கப்பட்ட மலையாள திரைப்படத்தின் ரீ மேக். இதை பார்தத கள உறவுகள் இப்படம் குறித்த தமது பார்வையை இங்கு வழங்கினால் நன்று.