9 hours 41 minutes ago
கேலிச்சித்திரம்..... வேறை லெவல். 😂 படத்தில் Second Aid Box என்று எழுதியுள்ளமை... ஓவியரின் கற்பனையின் மணிமகுடம். 🤣
9 hours 42 minutes ago
ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி! உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில், இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு, நமது இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னத குணங்களால் நிரப்பி, ஒரே தாயின் பிள்ளைகளாகப் பேதங்களை மறந்து, இதயத்தால் ஒன்றிணைந்த ஒரே இலங்கை நாட்டின் குடும்பமாக முன்னோக்கிச் செல்வோம்! அதற்காகச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன் உயிர்த்த ஞாயிறு தினத்தை இன்று (05) கொண்டாடுகின்றனர். இது, நம்பிக்கை, புதிய மாற்றம் மற்றும் கருணையின் நித்திய சக்தியை நினைவூட்டுகின்றது. உயிர்த்த ஞாயிறு என்பது ஒரு மத நிகழ்வு என்பதைத் தாண்டி, அது மனிதாபிமானம், அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை மீண்டும் நினைவுபடுத்தும் கிறிஸ்தவர்களின் கலாசார பண்டிகையாகும். மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, உறுதியான சங்கற்பமும் அர்ப்பணிப்பும் இருந்தால் இருளை வென்று ஒளியையும், பயத்தை வென்று நம்பிக்கையையும், வேதனையை வென்று நித்திய மகிழ்ச்சியையும் அடைய முடியும் என்பதைத் தமது வாழ்வின் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டினார். தமக்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவுக்காக ஒன்றிணைந்து நின்ற மக்கள், உலகிற்கு ஒற்றுமையின் நற்செய்தியை வழங்கினர். தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. பகைமையை முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் போருக்குப் பதிலாக, உலக மக்கள் அனைவரும் அமைதியையும் சகவாழ்வையுமே விரும்புகின்றனர். இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தில் அமைதியை நோக்கிய பாதை மலர வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் குறிப்பிட்டுள்ளவாறு, நமது இதயங்களை அன்பு, பொறுமை மற்றும் மன்னிப்பு எனும் உன்னத குணங்களால் நிரப்பி, ஒரே தாயின் பிள்ளைகளாகப் பேதங்களை மறந்து, இதயத்தால் ஒன்றிணைந்த ஒரே இலங்கை நாட்டின் குடும்பமாக முன்னோக்கிச் செல்வோம்! அதற்காகச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம். துயருற்ற மக்களின் இரட்சிப்பிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டதன் பின்னர் மரணத்தின் இருளைத் தோற்கடித்து உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் கிறிஸ்தவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் கருணையும் அமைதியும் நிறைந்த இனிய உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துகள் – என்று கூறியுள்ளார். https://athavannews.com/2026/1470990
9 hours 43 minutes ago
கந்தப்பு வேலைப்பழு காரணமாக போட்டி நடாத்தா விட்டால் என்ன செய்வது.விஜைண்ணாவின் தவெக எத்தனை சதவீதம் எடுக்கும் என்ற உங்கள் கணிப்பைச் சொல்லிவிடுங்கள். விஜைண்ணா இந்தத் தேர்தலில் முதலமைச்சர் கனவில் இருக்கிறார்.நீங்கள் இப்படிச் சொன்னால் எப்படி தேர்தல் முடிவுகளுக்கு அடுத்தநாள் படம் நடிக்க தயாரிப்பாளரைத் தேடுவார்.ஆனால் அவரை வைத்து படம் எடுக்க பலரும் யோசிப்பார்கள்.வடிவேலுவின் நிலைதான்
9 hours 45 minutes ago
டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்! ஹர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணி நேரத்திற்குள் மீண்டும் திறக்க வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (04) விடுத்த எச்சரிக்கையை தெஹ்ரான் நிராகரித்துள்ளது. வொஷிங்டனின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீது சாத்தியமான தாக்குதல்களைத் தொடுப்பதற்குத் தயாராகி வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், இரண்டு அஈமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன அமெரிக்க விமான ஊழியர் ஒருவரை அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகள் தேடி வரும் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் இந்த எச்சரிக்கை வந்தது. இது குறித்து சமூக ஊடகப் பதிவில், அவர்கள் (ஈரான்) மீது கடும் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இன்னும் 48 மணி நேரமே உள்ளது. நேரம் விரைந்து கொண்டிருக்கிறது – என்று எழுதி ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான சாத்தியமான தாக்குதல்கள் உள்ளிட்ட தனது முந்தைய எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார். எனினும், இந்த எச்சரிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே அதனை நிராகரித்த ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி ஜெனரல் அலி அப்தொல்லாஹி அலியாபாடி (Ali Abdollahi Aliabadi), நரகத்தின் வாயில்கள் உங்களுக்காகத் திறக்கப்படும் என்று கடுமையான வார்த்தைகளால் அமெரிக்காவுக்கு பதிலளித்தார். இதனிடையே, நேற்றைய தினமும் வளைகுடா நாடுகள், ஈராக் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் மேலும் பல ஏவுகணைகளை ஏவியது. இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் பல பகுதகிளில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தின. அதன் பின்னர், இஸ்ரேல், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் ஒரே இரவில் மேலும் பல தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1471009
11 hours 1 minute ago
இந்தியாவில் தேர்தல் கணிப்புகள் தாயக் கட்டைகள் உருட்டி விடுவது போல. மக்கள் கருத்து கணிப்புகளை எடுப்பவர்களை உருட்டி விடுகின்றார்கள் என்றும் சொல்லலாம்.............🤣. பிரசாந்த் கிஷோர் இந்தியாவின் மிகப் பிரபலமான தொழில்முறை தேர்தல் ஆலோசனையாளர். கோடி கோடியாகக் கொடுத்து அவரை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. சில தேர்தல்களில் அவர் வெற்றிகளைப் பெற்றும் கொடுத்தார். 'எல் கே ஜீ' என்று ஒரு தமிழ்ப்படம் கூட இந்த கதையுடன் வந்தது. இன்று விஜய்யின் அரசியல், தேர்தல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி இருக்கின்றார். இவருக்கு முன்னால் பிரசாந்து கிஷோரே வருவதாக இருந்தது. இவர் மிகச் சரியாக கணக்கை மாற்றுவார் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. பிரசாந்த் பீஹார் தேர்தலில் அவரே நின்றார். ஒரு கட்சி ஆரம்பித்தார் என்றும் நினைக்கின்றேன். அந்த தேர்தலில் தோற்றால் அரசியலை விட்டே ஒதுங்குகின்றேன் என்று சவால்விட்டார். படு தோல்வி அடைந்தார். அப்படி எல்லாம் அரசியலை விட்டே ஒதுங்க முடியாது, நான் ஏன் ஒதுங்க வேண்டும் என்று பின்னர் கேட்டார். ஆனால் அவர் சொன்னதில் சிரிப்பான விசயம் என்னவென்றால் பாஜக கூட்டணி மக்களுக்கு காசு கொடுத்து வாக்குகளை வாங்கி விட்டது என்பதே.................. அடப்பாவி, உன்னையெல்லாம் ஒரு தேர்தல் வித்தகன் என்று நினைத்து இருந்தார்களே................🤣. அம்பானியே தேவையான பணத்தை இறக்கியதாக கிசுகிசுத்தார்கள். எல்லா கட்சிகளும் பணத்தை இறக்குவார்கள், இது ஒரு விசயமே இல்லை............... எடப்பாடியார் கூட டெல்லியில் அம்பானியை சந்தித்து இருந்தார். தமிழ் நாட்டிலும் பணம் கொட்டப் போகின்றது, அம்பானியின் பணமோ, அதானியின் பணமோ அல்லது செந்தில் பாலாஜியின் பணமோ, இப்படி பல பணங்கள். திமுக -- 40 - 45 அதிமுக -- 30 -35 விஜய் -- 15 சீமான் -- 5 என்று நான் உருட்டிய தாயக் கட்டைகள் சொல்லுகின்றது. விஜய்க்கு 15 வீதம் கிடைத்தால் அது வரலாறு காணாத ஒரு விடயம். இந்த தடவை அவருக்கு ஒரு சீட்டும் கிடைக்கப் போவதில்லை என்று நினைக்கின்றேன், ஆனால் ஐந்து வருடங்களின் பின் அவர் எதிர்பார்க்கும் திமுக எதிர் தவெக என்பது நிஜமாகும். அவர் ஐந்து வருடங்கள் அரசியலில் நிலைத்து இருப்பாரா என்பதே கேள்வி. சீமான் என்றும் இருப்பார்.
11 hours 19 minutes ago
87 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்தியா இராணுவம் பலாலி வீதி,காங்கேசன் துறை வீதி வழியாக செல் தாக்குதல்கள் செய்து கொண்டு வீதிகளில்,வீடுகளில் சென்ற இருந்த அப்பாவி பொதுமக்களை ( உ+ம் உரும்பிராய், கொக்குவில், குளப்பிட்டி சந்தி, யாழ் போதன வைத்தியசாலை) கொன்று குவித்து யாழ் நகரை கைப்பற்றினார்கள். நாங்கள் இணுவில் கந்தசுவாமி கோவிலில் அகதியாக இருந்தோம். தீபாவளி அன்று எங்களை போல அருகில் இருந்த இடங்களில் இருந்து தங்களது வீடுகள் பார்க்க சென்ற சிலர் இந்தியா படையினால் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் நாங்கள் இருந்த கோயிலுக்கு பின்னால் இருந்த பாடசாலை மைதானத்தில் எரியூட்டபட்டது. கிட்டத்தட்ட கோயிலில் 45 நாட்கள் இருந்தோம். இடையில் இருமுறை சில மணித்தியாலங்கள் வீடுகள் பார்க்க மக்களை அனுமதித்தார்கள். வீடுகளில் இருந்த கைக்கடிகாரங்கள், சப்பாத்துக்கள், கமராக்கள் உட்பட விலையுயர்ந்த பொருட்கள் களவாடப்பட்டன. டிசம்பர் மாதத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் வீடுகள் பார்க்க அனுமதித்தார்கள். நாங்கள் இணுவில் கந்தசாமி கோவில் முன்வாசல் வழியாக செல்லும் வீதியூடாக காங்கேசன் துறை வீதி ( KKS Road) நோக்கி சென்று கொண்டிருந்தோம். வரிசையில் மக்கள் நிற்க இரு இந்தியா இராணுவத்தினர் ஒவ்வொரு மக்களையும் ஒவ்வொன்றாக போக விட்டனர். அதில் சிக்கிய இராணுவ வீரர் ஒரு சில இளம் பெண்களின் முன்பக்கத்து உடைகளுக்குள் கை வைத்து குண்டுகள் இருக்குதா என்று தேடி கொண்டு இருந்தார். வரிசையின் கடைசியில் இருந்தவர்கள் கவலையுடன் இருந்தார்கள். அப்பொழுது இரண்டாவதாக நின்ற இராணுவ வீரர் தமிழில் ஏன் இந்த வழியாக வருகிறீர்கள், கோயிலுக்கு வலது பக்கத்தின் வழியாக உள்ள வீதியின் ஊடாகவும் செல்லாம் என்று உரத்து கூறினார். உடனே நாங்கள் உட்பட பலர் வலது பக்க வழியாக உள்ள வீதியுடாக சென்றோம். அந்த வீதியில் ஒரு இராணுவ வீரர்களும் இருக்கவில்லை.
11 hours 26 minutes ago
டிரம்ப் கூறிய கருத்துகளுக்கு பதிலாக, இங்கே பலத்த எதிர்வினைகளும், களத் தளபதிகளின் கடுமையான அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. சில நேரங்களுக்கு முன்பு, காத்தம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தளபதி மேஜர்-ஜெனரல் அலி அப்தொலாஹி கூறியதாவது: ‘அமெரிக்க மற்றும் சயோனிய எதிரி எந்த வகையான தாக்குதலையும் மேற்கொண்டால், அமெரிக்க “தீவிரவாத படை” பயன்படுத்தும் அனைத்து அடிப்படை வசதிகளையும், சயோனிய ஆட்சியின் அடிப்படை வசதிகளையும், எந்த வரம்பும் இன்றி தொடர்ச்சியான மற்றும் கடுமையான தாக்குதல்களுக்கு உட்படுத்துவோம்’ என்றார். அதற்கு முன்பும், காத்தம் அல்-அன்பியாவின் பேச்சாளர் எச்சரித்ததாவது: ‘உங்கள் தாக்குதல் விரிவடைந்தால், முழு பிராந்தியமும் உங்களுக்கு நரகமாக மாறும் என்பதை மறக்காதீர்கள்.’ மேலும், ‘இஸ்லாமிய குடியரசை தோற்கடிக்கலாம் என்ற உங்கள் மாயை, இப்போது நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு சதுப்புநிலமாக மாறியுள்ளது’ என்றார். அதாவது, அவர்கள் அடிப்படையில் அதே வகையான பதிலடி, அதே அளவிலான சேதம், அதே வகை வசதிகளுக்கு எதிரான தாக்குதல்கள்—பிராந்தியத்திலும், இஸ்ரேலிலும்—நடக்கலாம் என்று எச்சரிக்கிறார்கள். ஈரானுக்கு அந்த திறன்கள் உள்ளன, மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு துன்பம் ஏற்படுத்த முடியும் என்பதை தாங்கள் நிரூபித்துள்ளோம் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். Al Jazeera‘We got him’: Trump confirms rescue of missing US officer...Iran says US-Israeli attacks on the Mahshahr Petrochemical Zone have killed five and wounded 170.முன்னாள் ஓமான் ஷூரா கவுன்சில் துணைத் தலைவர் இஷாக் பின் சாலிம் அல்-சியாபி, அமெரிக்கா “தகராறுகளை தீர்த்து, அனைவருக்கும் நீடித்த அமைதியை ஏற்படுத்தும்” பேச்சுவார்த்தைகளில் “துரோகம்” செய்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அரசு “வெளிப்படையான, வெறுப்பூட்டும், அநியாயமான தாக்குதலை குற்றமற்ற மக்கள்மீது நடத்துகிறது; அவர்களின் ஒரே ‘குற்றம்’ — மரியாதையுடனும் அமைதியுடனும் வாழ விரும்புவது!” என்று அவர் கூறியுள்ளார். “இப்போது அனைத்து அமெரிக்கப் பொருட்களுக்கும் தடைகள் விதிக்க பல வலுவான காரணங்கள் உள்ளன!!!” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஈரான் அணு ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஓமான் ஒரு நடுவராக செயல்பட்டது. அதன் பின்னரும் பல முறை நடுவராக செயல்பட்டுள்ளது, ஆனால் இதுவரை அதே அளவிலான வெற்றியைப் பெறவில்லை.
11 hours 30 minutes ago
கவிஞரே, நீங்கள் எந்த நடிகரினதும் ரசிகர் அல்ல என்பது எனக்கு நல்லதொரு விடயம். அதே போலவே நீங்கள் எந்த நாட்டின் தலைவர்களினதும் ரசிகர் இல்லை என்றே நினைக்கின்றேன். ஒருவரின் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடுவது அல்லது விவாதிப்பது எங்கள் தலையை நாங்களே சுவற்றில் மோதுவதற்கு சமம். தொடர்பில் இருக்கும் என்னுடைய நண்பர்களில் நான்கு பேர்கள் விஜய்யை ஆதரிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் நால்வருமே ஏலவே விஜய்யின் சினிமா ரசிகர்கள். கோர்வையாக ஒரு காரணம் சொல்ல முடியாதவர்கள். நானும் அவர்களுடன் விஜய்யின் அரசியல் பற்றி எதையும் விவாதிப்பதில்லை; மெதுவாக சிரித்து மழுப்பி விட்டு ஈரான், உக்ரேன் என்று வேறு எதையாவது பேசிக் கொண்டிருக்கின்றேன். ட்ரம்பின் ரசிகர்கள், புட்டினின் ரசிகர்கள், கொமெய்னிகளின் ரசிகர்கள் என்று அங்கேயும் ஆள் பார்த்து நழுவ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. உங்களின் அனுபவத்திற்கும், தெளிவுக்கும் நீங்கள் விஜய்யிடம் எதையோ காண்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். நான் விஜய்யிடம் அப்படி ஒன்றையும் இதுவரை காணவில்லை. ஏற்கனவே இரு கட்சிகள் தமிழக மக்களின் தலைகளில் குப்பைகளை கொட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மூன்றாவதாக விஜய்யும் அதே குப்பையை, அல்லது அதை விட மோசமான குப்பையை கொட்டுகின்றார் என்றே நான் நினைக்கின்றேன். இவர் ஒரு மாற்று கிடையாது என்பதை விடவும், இப்பொழுது இருப்பதை விடவும் சிறிதாவது நல்லதாக ஒன்று வருவதையும் இவர் இன்னும் நீண்ட காலத்துக்கு தடுத்து விடுவார் என்றே நினைக்கின்றேன். சேரனின் பெயரை நான் தவிர்த்திருக்க வேண்டும். சேரன் பிக்பாஸ் நிகழ்வில் நடந்து கொண்ட விதம் பற்றி அராத்து எழுதியிருந்த ஒரு ஆக்கத்தை நீங்களோ கோஷானோ படிக்கவில்லை போல............ தலைப்பாகை போய் விட்டது, ஆனால் என் தலை தப்பியது................ இங்கு ஒரு தமிழ்ச்சங்கத்தால் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று திட்டமிடப்பட்டது. அவர்கள் எல்லோரும் தமிழ் நாட்டவர்களே. செயற்குழு உறுப்பினர்கள் சிலர் என்னுடைய நண்பர்கள். பின்னர் இளையராஜா கேட்கும் தொகையும், வசதிகளும் எங்களால் முடியவே முடியாது என்று கைவிடப்பட்டது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழர் ஒருவர் இளையராஜாவுக்கு கொடுத்த முன்பணத்தால், அந்த நிகழ்வும் நடக்கவில்லை, வீடிழந்து போன கதையை நான் கேள்விப்பட்டிருந்தேன். அன்றைய சாதாரண பண்ணைபுரத்து ராசையா என்ன இன்று என்ன இப்படி கேட்கின்றாரே என்ற எண்ணம் எனக்கு அன்று வரவில்லை. ஆனால் மனிதர்கள் காட்டும் வெளித் தோற்றத்துக்கும், அகத் தோற்றத்துக்கும் இருக்கும் இடைவெளியை அந்த நிகழ்வு மேலும் உறுதிப்படுத்தியது. சேரன் மற்றும் பலர் பற்றி கீழே கோஷானின் பதிவின் கீழ் தொடர்கின்றேன்........... நீங்கள் சொல்லியிருப்பதும் அவ்வளவும் நடந்தவையே. இவர்களுக்கு அறம் நேர்மை, தூய்மை, பொதுவாழ்வு பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது என்பதும் சரியே என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் நித்தி சொன்னார், ஜக்கி சொன்னார், பிரேமானந்தா சொன்னார், சாயிபாபா சொன்னார் என்று சொல்லும் இந்தச் சாமிகளின் பக்தர்களிடம் எல்லாம் நீங்கள் முன்வைத்திருக்கும் அதே வாதத்தையே நான் இன்றும் முன்வைக்கின்றேன். சினிமா துறையில் இருக்கும் எவரிடமாவது இந்த அருகதைகள் இருக்கின்றதா என்ற கேள்வி அடுத்ததாக வருகின்றது. சினிமாத் துறையில் இருக்கும் எவர் மேலாவது இவை போன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருக்கின்றதா என்றும் கேள்வி இருக்கின்றது. வரி ஏய்ப்பவர்களாக இருக்கின்றார்கள், பல தாரம் மணம் புரிபவர்களாக இருக்கின்றார்கள், பெண்களை ஏமாற்றுபவர்களாக இருக்கின்றார்கள். நடிகர் சிவகுமார் சுத்தமே என்று சொல்ல வந்தாலும், அவர் கூட அந்த ஒரு மனிதனின் கையில் இருந்த அலைபேசியை பறித்து எறிந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது. இப்பொழுது விஜய்க்கு வருவோம். வரி ஏய்ப்பது ஒரு விசயமே இல்லை. அதை எல்லோருமே செய்கின்றார்கள்; விஜய்யும் செய்கின்றார். இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கூட சினிமா மற்றும் அரசியல் உலகில் சாதாரணமே. எம் ஜிஆர், கருணாநிதி, கமல் என்று எல்லோரையும் சொல்லலாம். விஜய்யும் செய்கின்றார். ஆனால், இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து கொண்டு கட்டிய மனைவியை 'வொர்த்தே இல்லை..............' என்று இதற்கு முன் எவரும் சொன்னதில்லை. ஒரு பெண்ணை இப்படி எவரும் இழிவு செய்ததில்லை. அப்படியான விஜய் பொதுவாழ்வில் இருக்கலாமா............... இவரிடம் அறம், நேர்மை, தூய்மை எனபன இருக்கின்றதா.................
13 hours 40 minutes ago
14 hours 5 minutes ago
சில பைத்தியங்கள், நாய் வளர்ப்பதே… அதற்காகத்தான்.
14 hours 10 minutes ago
இந்திய அரசியல்வாதிகள் மாதிரி… அனுதாபம் தேடும் முயற்சியாக இருக்கலாம். ட்ரம்பு… முழு முட்டாள் என்றாலும், நடிகன்(டா)…. 😂 🤣
14 hours 17 minutes ago
பலரின் நாய்கள் மூஞ்சை முகம் வாய் எல்லாமே நக்குவதைக் கண்டுள்ளேன்.
14 hours 29 minutes ago
இருக்கலாம் தோல்வியால் பிபி எகிறி இருக்கலாம்.
15 hours 59 minutes ago
யாழ் இணையத்தின் அகவை இருபத்து எட்டிற்கான வாழ்த்து பாடல் மிக சிறப்பாக உள்ளது. நன்றி, வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!
16 hours 17 minutes ago
ஆசை, தோசை, அப்பளம், வடை. 😁
16 hours 31 minutes ago
சிலதை கவனிக்க தவறுகிறீர்கள். இந்த லோக்போல் அமைப்பு போன வருட பீகார் தேர்தலில் காங்கிரஸ் லாலு கூட்டமைப்பு அதீத வெற்றி என்றது நடந்ததோ அதற்கு சரி எதிராக. இதேபோல்தான் சதீஸ்கர் இன்னும் 2 வட மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டு வெல்லும் என பிழையாக கணித்தத்து இந்த அமைப்பு. இந்தியாவின் first past the post அமைப்பில் சதவீத கணக்கு தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்து தொகுதி பங்கீடு செய்தால் மட்டுமே பலன் கொடுக்கும். தேர்தல் முடிந்த பின் சீட் கணக்குத்தான் செல்லும். இந்த கணிப்பின் படி அதிமுக 42 விஜை 10 எண்டாலும் கூட பெரும்பான்மையை நெருங்க கூட முடியாது. திமுக தனி கட்சியாக மெஜாரிட்டி ஆட்சி அமைக்கும். இந்த கணிப்பு சரியானால். அண்ணனை அடிப்பதில் அப்படி ஒரு அலாதி இன்பம் என வைத்து கொள்ளுங்கள் 😂. கேட்ட ஆதாரம் எல்லாம் தந்தவுடன், பதில் இல்லாமல் புலம்பலுக்கு தாவி விட்டீர்கள் போல் உள்ளது. பிகு சீமானுக்கு மட்டும் ஏன் ஸ்பெசல் டிரீஎட்மெண்ட் என்ற கேள்வி பலதடவை யாழில் கேட்க பட்டு பலதடவை பதில் கொடுக்கப்பட்டுள்ளது. புலவருக்கு கூட முன்னர் இதையிட்டு விரிவாக பதில் எழுதியுள்ளேன். 2nd shy சோதனை எழுதும் போது, past papers வினா விடை கொத்தை படித்து விட்டு வரவும் 😂
17 hours 33 minutes ago
வரும் தேர்தலில் நாதக 4.5 வீதத்துக்கு மேல் கிடைக்காது என்றும் நம்பும் சீமான் எதிர்ப்பாளர்கள் சீமானை கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம் எதற்காக சீமானை விமர்சிக்கிறார்கள் என்று விளங்கவில்லை.0.5 வீத வாக்குகளை வைத்திருப்பவர்களே பதவியையும் பெட்டியையும் தொகுதிகளையும் பெறும்போது வராத கோபம் சீமான் மேல் வருகிறது?சித்தாந்த வேறுபாடுதான் அவர்களை கொமுப்படைய வைக்கிறது.4வீதத்திற்கும் குறைவாகப் பெறும் சீமானால் ஒரு மாற்றமும் வராது அதைதியாக தூங்குங்கள். தமிழக தேர்தலில் கருத்துக்கணிப்பு நடத்திய TV க்களில் CCTV தவிர மற்றயவை எல்லாம் திமுக அமோக வெற்றிபெறும் என்றும் தவெக 20 வீத்ததுக்கு மேல் பெறும் என்றும் எதிர்வு கூறியுள்ளன.1 மாத்தில் எல்லாம் தெரிய வரும்.
17 hours 36 minutes ago
இன்னுமொரு கருத்து கணிப்பு, தவெக 23.9% வாக்குகள் பெறும் கட்சி என எதிர்வு கூறியுள்ளார்கள், தவேக அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் விஜய் துணை முதலமைச்சராக வர வாய்ப்புள்ளது, நாதக எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்பதில்லை எனும் முடிவு இந்த நிகழ்வால் மாற வாய்ப்பில்லை என கருதுகிறேன் அதனால் அதிமுக + த வெ க கூட்டணி ஆட்சியினை பிடிக்க வாய்ப்புள்ளது போல காணப்படுகிறது.
18 hours 14 minutes ago
தமிழ்நாட்டு தேர்தலில் இதுவும் ஒரு முக்கியமான செய்தி.
18 hours 27 minutes ago
வெற்றியும் பலமும் யார்பக்கம் நிற்கின்றதோ அந்தப்பக்கம் நிற்பதே மதில் மேல் பூனைகளின் வழக்கம்
Checked
Sun, 04/05/2026 - 15:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed