18 hours 28 minutes ago
படம் பார்க்கவில்லை. ஆனால் ரானா ஒரு தெலுங்கன்…எனவே படம் பார்க்க கூடாது என ஒரு குரூப் சொல்லி திரிகிறது. எனது கருத்து: இந்தியாவில் இருந்து வரும் எந்த படமும், எமது போராட்டத்தில் இந்தியனின் நரித்தனத்தை காட்டாது. இந்தியன் ஆமி, இலங்கை ஆமியை விட மோசமான பாலியல் வல்லுறவாளர் என காட்டாது. காட்ட அவர்களின் இந்திய பாசம் விடாது. அப்படியே காட்டினாலும் சென்சார் விடாது. இந்தியாவின் கோரமுகத்கை காட்டாத எம்மை பற்றிய எந்த படமும், குறிப்பாக 87-90 காலப்பகுதியில் நடந்த கதைகளம் எனில், அது வெள்ளை அடிப்பு என்ற வகையில்தான் அடங்கும். வழமை போல் எம்மை இன, போர் வெறியராக, பயங்கரவாதிகளாக சித்தரிக்காமல் விட்டார்களே என நிம்மதி வேண்டுமானால் அடையலாம்.
18 hours 33 minutes ago
உக்ரேன் கருத்து வெற்றிக்காக அமெரிக்காவும் மேற்குலகும் தெய்வம் என்ற குரல்கள் இன்று அமெரிக்காவையும் திட்டி தீர்க்கின்றன.😎
19 hours 1 minute ago
இதென்ன பிரமாதாம் பொட்டம்மான் என்ன முடியா என கேட்ட தமிழ் தேசியவாதிதான் இந்த சீமான். அண்மையில் ஒரு காணொளியில் தூசண துரைமுருகன் பச்சை தூசணத்தில் மேடையில் பேசி விட்டு… நான் பிரபாகரன் பிள்ளைடா எங்கிட்ட வச்சுகாதே என்கிறார்… தலைவரை இதைவிட வேறு எந்த அமைப்பும் அவமானபடுத்தியதில்லை.
19 hours 2 minutes ago
இந்திய ராணுவத்துக்கு வெள்ளை பெயின்ட அடிச்சு படம் எடுத்திருக்கிறாங்கள்... கல்யாணப் பொம்பளைய இந்திய ராணுவம் வன்புணராமல் விட்டுவைத்ததா🙄😒😏 வரலாற்று திரிபுகள் பல....
19 hours 3 minutes ago
இதிலே பெரியவன் அல்லாஹ்வின் கைவரிசைகள் ஒன்றும் இல்லையா அல்லாகு அக்பர் முழக்கங்கள் கேட்கின்றனவே
19 hours 8 minutes ago
சேரன் எல்லாம் ஒரு ஆளே இல்லை… மகள் சாதி மாறி திருமணம் செய்த விடயத்தில், இயக்குனர் பாலா என்கிற ரவுடியை கூட்டி கொண்டு போய் அராஜகம் பண்ணியவர்தான் இந்த சேரன். பாலா, சேரன், அமிர் எல்லாரும் சீமானை போல சினிமா குட்டையில் ஒன்றாக ஊறிய மட்டைகள்தான். இவர்கள் அனைவரினதும் பிதாமகன் சட்டை மாற்றுவது போல் பெண்களை மாற்றும், தான் 60 வயது தாண்டிய பின் 18 வயதும் ஆகாத மோனிஷாவோடு சேர்ந்து வாழ்ந்த பாலுமகேந்திரா. பாலுமகேந்திராவின் செத்தவீட்டில் கூட அந்த பெண்ணை இழிவுபடுத்திய கூட்டம். இவர்களுக்கு அறம், நேர்மை, தூய்மை, பொதுவாழ்வு பற்றி கதைக்க எந்த அருகதையும் இல்லை.
19 hours 26 minutes ago
இந்த பாண்டே ஒரு தீவிர பிஜேபி பிரசாரகர். H. ராஜா ஷர்மா என்று ஒரு பிஜேபிகாரரும் சீமானை ஆதரித்து பேசி இருக்கின்றார்.சீமானுடைய கொடுக்கபட்ட பணி பெட்டியை வாங்கி கொண்டு தமிழ்நாட்டை குழப்பி அடித்து பிஜேபி தேர்தலில் வெல்வதற்கு வழி அமைத்து கொடுப்பதே . ஆனால் பாண்டே சீமான் Ideologically driven செய்கின்றார் என்று சொல்லி கேலி கூத்தாகிவிட்டார் எங்களை சுயமரியாதையுடன் வாழ கற்று தந்த தலைவன் தந்தை பெரியார். தள்ளாத வயதில் முதுமையின் காரணமாக முதுகு முறிந்த போது கூட எங்களை நிமிர வைத்தவனடா எங்கள் அய்யா என்று மேடையில் கத்தி பேசிவிட்டு இப்போது பெரியார் எனக்கு மண் என்பது தான் அவருடைய கொள்கை பாதை
19 hours 28 minutes ago
தம்பர் வைத்தியசாலையில் அனுமதிப்பு என்கிறன சில எக்ஸ் கணக்குகள்.
20 hours 4 minutes ago
இந்த படத்தைப் பற்றி நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. தியேட்டரில் போய்ப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்காது. எப்போதாவது OTTயில் வெளிவரும் போது பார்க்கலாம்.
20 hours 9 minutes ago
ரசோதரன், உங்களைப் போலத்தான் நானும் எந்த நடிகரின் ரசிகனும் இல்லை. ஒருகாலத்தில் வாத்தியாரை (எம்.ஜி.ஆர்.) ரசித்திருக்கிறேன். இப்போது நல்ல படங்கள் வந்தால் மட்டும் பார்ப்பேன். அதற்கப்பால் நடிகர்கள் மீது எந்தப் பற்றும் இல்லை. நீங்கள் சேரனைப் பற்றிக் குறிப்பிட்டதால், இதைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சினிமா என்ற தளமே இல்லையென்றால், அவர் கருத்துக்களுக்கு ஒரு வெளிச்சமும் கிடையாது. சேரன், விஜய் அளவுக்கு பிரபலமாக இருந்திருந்தால், அவர் பேசும் மொழியும், நிலையும் வேறாக இருந்திருக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமே இல்லை. ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் குறும்படங்களை ஆர்வமாக உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில், பாரிஸில் நடைபெற்ற குறும்பட விழாவுக்கு சேரனுக்கு அழைப்பு சென்றது. தனக்கும் தனது மனேஜருக்கும் பிஸினஸ் கிளாஸ் விமான டிக்கெட், ஸ்டார் ஹொட்டல் தங்குமிடம் வேண்டும் என்றார். அது சாத்தியமில்லை என்று கூறியபோது, தனக்கு மட்டும் அந்த வசதிகள் வேண்டும். மனேஜருக்குப் பரவாயில்லை என்று கொஞ்சம் தளர்வு காட்டினார். ஒருகாலத்தில் தியேட்டரில் டிக்கெட் கிழித்தவர், புகழ் கிடைத்தவுடன் இவ்வளவு எதிர்பார்ப்புகளா? அதே நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட ஓவியர் டிராட்ஸ்கி மருது வந்து நிகழ்ச்சியை சிறப்பித்ததோடு, அவருக்குக் கிடைத்த அன்பளிப்பையும் குறும்பட வளர்ச்சிக்காகத் திருப்பி வழங்கிவிட்டு சென்றார். இதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சேரனின் நிலைப்பாடு எவ்வளவு வெறுமையாக இருக்கிறது என்பது என்னளவிலான தெளிவு. இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். கட்சி தொடங்கி தேர்தலில் நிற்பது அவரது உரிமை. அதை ஏளனமாகக் கேள்வி கேட்பதற்கு முன்னால், பாரம்பரியக் கட்சிகள் ஆண்டாண்டுக்காலமாகச் செய்த ஊழல், சட்ட மீறல்கள் பற்றி திறந்தவெளியில் பேச சேரன் தயாராக இல்லை. ‘புதிய கட்சி வந்து என்ன சாதிக்கும்?’ என்று கேட்பது எளிது. அதே நேரத்தில், ‘பழைய கட்சிகள் தொடர்ந்து இதேபோலச் செயல்பட்டால் பரவாயில்லை’ என்று பொருள்படும் வகையில் பேசுவது பொறுப்பற்ற அணுகுமுறை. உண்மையில், நீங்கள் குறிப்பிடாவிட்டால் சேரன் என்ற பெயரே நினைவுக்கு வராத அளவுக்கு அவர் தாக்கம் குறைந்துவிட்டது என்பதே நிஜம். மேற்கு நாடுகளில் நாடுகளில் அரசியல்வாதிகளின் தகுதி, திறன், பின்னணி ஆகியவை ஆராயப்படும். ஆனால் தெற்காசிய அரசியலில் அது அவ்வளவாகப் பார்க்கப்படுவதில்லை. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். இன்னும் ஒன்று யேர்மனியில் கட்சிகள் தனித்துத்தான் போட்டியிடுகின்றன. தேர்தல் முடிந்தபின் ஆட்சியமைக்க போதிய பலம் இல்லையென்றால் மட்டும்தான் கூட்டு சேர்வார்கள். தமிழ்நாட்டுத் தேர்தலில் வெல்லுமட்டும் ஏதாவது சொல்வார்கள். சில புத்திசாலிகள் மௌனமாக இருப்பார்கள். வென்றபின் ஆளுயர மாலையோடு போய் நிற்பார்கள். “நீங்கள்தான் வெல்லுவீர்கள் என்று எனக்கு அப்பவே தெரியும் என்பார்கள்” எதுவானாலும் இறுதியில் தீர்மானிப்பது மக்கள்.
20 hours 11 minutes ago
தரமான அறிவுசார் விளகங்கள் @vasee 🙏. வரப்போகும் பதில்களுக்கு தயாராகவும்😂.
20 hours 49 minutes ago
Khorramshahr-4 இது ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணை இல்லை என கூறப்பட்டுள்ளது
21 hours 7 minutes ago
https://yarl.com/forum3/topic/309629-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-f-35-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/#findComment-1816788 இந்த திரியில் உள்ள கட்டுரையில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
21 hours 15 minutes ago
பிற ஊதா கதிரியக்க (IIR + EO) மூலம் வழி நடத்தப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையே Passive System என அழைக்கிறார்கள். ரடாரின் மூலம் வழி நடத்தப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை Active system என அழைக்கிறார்கள், விமானத்திலிருந்து விமானத்திற்கு ஏவப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணை விமானத்திலிருந்து வெளியேறும் ராடர் சிக்னலை உள்வாங்கி செயல்படுவதனை semi active system என அழைக்கிறார்கள். ராடர் வழிநடாத்தப்படாத விமான எதிர்ப்பு ஏவுகணைகளை Passive System என அழைக்கிறார்கள். விமானங்களில் உள்ள பாதுகாப்பு பொறிமுறைகள் ராடர் இயக்கப்படுவதனை இனங்காணக்கூடியதாக காணப்படுவதால் நீண்ட குறுந்தூர ராடரில் இயங்கும் விமான எதிர்ப்பு ஏவுகணை செலுத்திகளை விமானங்கள் இலகுவாக இனங்காணுவதாக கூறுகிறார்கள், அத்துடன் F-35 போன்ற உரு மறைப்பு விமானங்கள் அதிக அதிர்வு கொண்ட ராடரிற்கு புலப்படாது ஆனால் VHF வகை ராடரிற்கு புலப்படும் அதிர்வு அலை அகலமாக இருப்பதால் தாக்குதல் துல்லியமாக இருக்காது என்பதால் இரஸ்ஸிய தரப்பு VHF + UHF + L band(microwave) போன்றவற்றின் மூலம் F-35 போன்ற உருமறைப்பு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழிநடத்துகிறார்கள். ஈரான் பாவிக்கும் IIR வகை குறுந்தூர (0.7KM - 8KM) விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விமானம் இனங்காண முன்னரே விமானம் தாக்கப்பட்டுவிடும்.
21 hours 35 minutes ago
இதே போல் சீமானிற்கு திடீரென முளைத்த மகன் ஒருவர் இருக்கிறார்… அவர் யார் என்பதும், அவர் ஏன் பெற்றாரை விட்டு சீமானோடு வாழ்கிறார் என்பதுமே மர்மாக உள்ளது. அவரின் பெயரிலும் சீமானின் இயற்கையான மகன் மாவீரன் பெயரும் விடுபட்டுள்ளது. திமுக, நாதக இருவரும் ஒரே கள்ள கூட்டம்தான். பிள்ளைகள் பெயரில் கள்ள சொத்தை எழுதி வைப்பவனை விட, பிள்ளையிடம் கொடுத்த கடனை, கடன் என எழுதி வைப்பவன் பரவாயில்லை.
21 hours 37 minutes ago
இராக் விமனநிலையத்தில் இரகசியமாக தரித்து இருந்த black hawk என்ற உலங்கு வானூர்தியின் வால் பகுதி காக்கப்பட்டு வால் பகுதி அழிக்கபட்டு இருப்பதாக தகவல். இந்த தாக்குதலின் நோக்கம் ஈராக் விமான நிலையத்தின் குறிப்பிட்ட மிகவும் பாதுகாப்பான பகுதியை தாக்கப்பட முடியும் என்று காட்டுவதற்கு. இது அமெரிக்காவின் ஈராக் green zone இல் தப்பி ஓடுவதற்கான , (வியட்நாம் இல் செய்து வைத்து இருந்தது போன்ற) ஓர் ஏற்பாடு என்றும் தகவல். ஒன்றும் உறுதிபடுத்தப்படவில்லை.
21 hours 44 minutes ago
என்ன அண்ணை மாய்மாலம் போடுறியள்😂. உங்கள் பெயர் செபஸ்டியன் சைமனா என்கிற சீமானா? இல்லைத்தானே? அல்லது சீமான் யாழ் கள உறுப்பினரா? நான் மேலே எழுதியது முழுக்க சீமானை பற்றி. எந்த யாழ்கள உறவையும் பற்றி அல்ல. ஏன் இந்த பொய் பித்தலாட்டம் பெரிய சகோ? புலவர், நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வி சீமானின் 25 ஏக்கர் காணி பற்றிய ஆதாரம் எங்கே என்பது. நான் பதிந்த கபிலன் பதிவில் அதற்கான பத்திரத்தின் கொப்பி உட்பட்ட ஆதாரம் உள்ளது. கபிலன் கருத்துநிலை இங்கே தேவையில்லாதது. சீமான்+மனைவி 25 ஏக்கர் காணி வாங்கியதை நான் நிறுவி உள்ளேன். அதை அவர்களே அபிடேபிட்டில் போட்டுள்ளார்கள். அதை ஏற்க மனம் இல்லை, பதிவு போட்டவரை பற்றி எழுதுகிறீர்கள்😂.
22 hours 11 minutes ago
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : ஏ…..ஏஹேஹே…..ஓ…..ஓஹ்ஹோ…. ராராரா ராராரா ராராரா ராரா ராரா ராரா ராரா ரா ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஆண் : பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ….. ஆண் : பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ….. ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய் ஆண் : காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி இரு கண்களில் மை எழுதி கண்டுக் கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி அவள் கோடியில் ஓர் அழகி ஆண் : தொட்டுத் தொட்டுக் கட்டுக் கதை இட்டுச் செல்லும் பட்டுக் கண்கள் ஓ….. குளு குளு குளு குளு குளு குளு குளு குளு ஹேய் ராரா ராரா ராரா ராரா ரா ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய் ஆண் : நேற்றிரவு நல்ல பால் நிலவு எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு வந்தவள் யார் ஒரு தேவதையோ அவள் வார்த்தைகள் தேன் மழையோ ஆண் : செல்லக் கன்னம் வெல்லம் என்று மெல்ல மெல்ல கிள்ள கிள்ள ஓஹ் கிளுகிளு கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹேய் …….! ...... உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று .....
22 hours 15 minutes ago
அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் ராணுவம் தகவல் டெஹ்ரான்: ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப் படையின் எப் -35 மற்றும் எப்- 15 இ ரக போர் விமானங்களை நேற்று சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு ஆதாரமாக, போர் விமானங்களின் உடைந்த பாகங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. ஆனால் இந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க ராணுவமும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதி செய்யவில்லை. அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது ஒரு விமானி பாராாசூட் மூலம் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. அந்த விமானியை ஈரான் ராணுவம் பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவும் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க விமானி பிடிபட்டது தொடர்பான புகைப்படமோ, வீடியோவோ வெளியிடப்படவில்லை. கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் எப்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம். தற்போது இரண்டாவது எப்-35 ரக போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்று ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.hindutamil.in/news/world/iran-military-says-it-shot-down-us-f-35-and-f-15-jets
22 hours 18 minutes ago
ரேபிஸ் : "தடுப்பூசி இன்றி பிழைத்த வரலாறே இல்லை" - நாய் நகக்கீறலால் 2 மாதங்களுக்குப் பின் சிறுமி மரணம் படக்குறிப்பு,ரேபிஸ் தொற்றால் உயிரிழந்த சிறுமி சுஹாசினி கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 57 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வீட்டில் வளர்த்த நாய் நகத்தால் கீறிய பின்னர், ரேபிஸ் தடுப்பூசி ஏதும் செலுத்திக் கொள்ளாத நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சிறுமியின் தந்தையையும் இதே நாய் கடித்த நிலையில் தடுப்பூசி எடுத்ததால் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் நகக் கீறல் தானே என அலட்சியமாக விட்டதால் சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். சிறுமி ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் என்பதால், அவரது உடல் இதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி அரசு அதிகாரிகள் கண்காணிப்புடன் தகனம் செய்யப்பட்டது. ரேபிஸ் நோயின் தாக்கம் என்ன? சிறு அலட்சியம் கூட எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி 2 மாதம் கழித்து தீவிரமான ரேபிஸ் பாதிப்பு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஆயத்த பின்னலாடை தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி லெட்சுமி. இவர்களது மகள் செல்வசுஹாசினி (14 வயது). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 20-ஆம் தேதி வீட்டில் வளர்த்த நாயுடன், செல்வசுஹாசினி விளையாடும்போது நாய் நகத்தால் கீறியுள்ளது. சிறுமிக்கு எந்த தடுப்பூசியும் கொடுக்கப்படவில்லை. பின்னர், கடந்த 28-ஆம் தேதி செல்வ சுஹாசினிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. "நல்லா பேசிட்டு இருந்த பொண்ணு திடீரென இறந்ததை எங்களால நம்ப முடியவில்லை," என்கிறார் உயிரிழந்த செல்வ சுஹாசினியின் உறவினரான முத்தமிழ் செல்வம் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "செல்வ சுஹாசினி கடந்த மார்ச் 27-ஆம் தேதி மாலை திடீரென உடல் வலி அதிகமாக இருப்பதாக அவரது தந்தையிடம் தெரிவித்தார். மறுநாள் சனிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டதால் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம்." என்கிறார். இரண்டு நாட்களாக உணவு எடுக்காமல் இருந்த சுஹாசினி தண்ணீர் குடிக்க மிகவும் பயந்ததால் ரேபிஸ் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் முத்தமிழ் செல்வம். "நாய் எதுவும் கடித்ததா" எனக் கேட்டதற்கு சுஹாசினி கடந்த ஜனவரி மாதம் வீட்டில் வளர்க்கும் நாய் நகத்தால் கீறியதில் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அதற்காக எந்த தடுப்பூசியும் போட்டு கொள்வில்லை எனத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுஹாசினியின் ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ததில் ரேபிஸ் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உடனடியாக "தூத்துக்குடி அரசு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுஹாசினியை சனிக்கிழமை இரவு அனுமதித்தோம்." என்கிறார் செல்வம். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படபடம் மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை தனிமைப்படுத்தப்பட்ட அறையில் (Quarantine Ward) வைத்தருந்தனர். இருப்பினும் அவ்வப்போது, "எங்களுடன் இயல்பாக பேசி சிரித்து வந்தார் சுஹாசினி," என்கிறார் செல்வம். ஆனால் திடீரென ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் சுஹாசினியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. "எங்களிடம் மோசமாக கத்தி கூச்சலிட்டு பேசி கடுமையாக நடந்து கொண்டார்" என நினைவு கூர்ந்தார் செல்வம். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சுஹாசினியை தனிமைப்படுத்தும் அறையை விட்டு வெளியே வராத அளவு அங்கேயே வைத்திருந்த நிலையில் திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2 மணி அளவில் சுஹாசினி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊர் மக்கள் "அவரது உடலைப் பெற்று மதுரையில் உள்ள ஒரு தகன மேடையில் உடலை தகனம் செய்து விட்டோம். எங்களால் சுஹாசினி இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, பேசி சிரித்துக்கொண்டிருந்த குழந்தை திடீரென உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து இதுவரை அவரது தாய் தந்தை மற்றும் குடும்பத்தினர்களும் வெளியே வர முடியவில்லை," என செல்வம் கூறுகிறார். சுஹாசினி ரேபிஸ் நோயால் உயிரிழந்ததால் அரசு மருத்துவமனையில் புதியம்புத்தூரைச் சேர்ந்த 75 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர். "எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லாரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம்." என கூறும் முத்தமிழ் செல்வம், "சுஹாசினியை நகத்தால் கீறிய நாயை கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வருகிறோம். அது நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய்களில் ஒன்று. எந்த நாய் கடித்தாலும், கீறினாலும் உடனடியாக ஊசி போட்டுக் கொள்ளுங்கள் ஊசி போடுவதை தவிர்த்ததால் இன்று எங்கள் பிள்ளையை நாங்கள் இழந்து விட்டோம்." என்றார். பட மூலாதாரம்,Getty Images தடுப்பூசி செலுத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் நாய் நகத்தால் கீறிய உடனே தடுப்பூசி செலுத்திருந்தால் சிறுமியின் உயிர் போயிருக்காது என்கிறார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் முரளிதரன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர்," செல்வ சுஹாசினியை கடந்த ஜனவரி மாதம் அவரது வீட்டில் வளர்த்த நாய் நகத்தால் காலில் கீறியுள்ளது. அதே நாள் அவரது அப்பாவையும் கடித்துள்ளது. அவரது அப்பா உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் நகம் கீறலுக்காக எந்த மருத்துவ சிகிச்சை எடுக்காததால் அவருக்கு இரண்டு மாதங்களுக்கு பின் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது." என்றார். ரேபிஸ் நோயிக்கு குறிப்பிட்ட சிகிச்சை என்று ஒன்றுமில்லை எனக் கூறும் மருத்துவர் முரளிதரன், "ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த உடனேயே அவருடைய நடவடிக்கைகளை கண்காணித்த நரம்பியல் மருத்துவர் ரேபிஸ் நோயால் சுஹாசினி பாதிக்கப்பட்டு இருப்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்தார்." எனத் தெரிவித்தார் சிறுமி நாய் கீறிய உடனே தடுப்பூசி எடுத்திருந்தால் நிச்சயம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்றும் அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் ரேபிஸ் நோய் தொற்று பாதித்த நாய் நக்கினாலோ, கடித்தாலோ அல்லது நகத்தால் கீறினாலோ ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும். நாய் எச்சில் பட்ட உடனே சோப்பு போட்டு தண்ணீரில் சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர், "60 நாட்களுக்கு முன்பு சிறுமியை நாய் நகத்தால் சிறிய அளவு கீறியதால் நரம்பு மண்டலத்தை உடனடியாக பாதிக்கவில்லை, நாட்கள் செல்லச் செல்ல தடுப்பூசி போடாததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது." "செல்வ சுஹாஷினி ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு வரும்போது ஹைட்ரோபோபியா (hydrophobia) பாதிப்பு அதிகமாக இருந்தது. ஹைட்ரோபோபியா பாதிக்கப்பட்ட நபர் தண்ணீர் குடிக்கவோ அல்லது பார்க்கவோ பயப்படுவார், மேலும் தொண்டையில் கடுமையான வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படும்." என்றார் அதன் அடிப்படையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்கியதால் சிறுமி உயிரிழந்தாக கூறுகிறார் மருத்துவர் முரளிதரன். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... உடலை ஏன் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை? மருத்துவர் முரளிதரன் கூறுகையில், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட உடல்களைக் குடும்பத்தினரிடம் நேரடியாக ஒப்படைக்க கூடாது. எனவே மருத்துவமனை நிர்வாகம் உடலை உரிய மரியாதையுடன் மாநகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைத்தோம். சுகாதார ஆய்வாளர் உடலை முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் ஒப்புதலின் படி அவர்களின் முறைகளை பின்பற்றி தகனம் செய்துள்ளனர். "ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட மாட்டாது. உடலில் இருந்து வெளியாகும் உமிழ்நீர் உள்ளிட்ட திரவங்கள் மற்றவர்கள் மீது படும்போது ரேபிஸ் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் மருத்துவ நடைமுறைப்படி உடல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளிடம் ஒப்படைக்கப்பட்டது," என்கிறார் முரளிதரன். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form வீட்டு நாய்களை பராமரிப்பது எப்படி? வீட்டில் வளர்க்கும் நாய்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராமகிருஷ்ணன் விளக்குகிறார். "வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்துவது அவசியம். மூன்று மாதம் ஆனதிலிருந்து நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் இந்த தடுப்பூசி அருகே உள்ள அனைத்து அரசு கால்நடை மருத்துவமனையிலும் போடப்படும்." "வீட்டில் வளர்க்கும் நாய் தான் என அலட்சியமாக இருக்கக்கூடாது, கவனத்துடன் பழக வேண்டும். நாய் நகத்தால் கீறினாலோ கடித்தாலோ அல்லது நாய் எச்சில் பட்டாலோ உடனடியாக மருத்துவர்களை அணுகி தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். நாய் கடித்ததாக சந்தேகம் ஏற்பட்டாலே உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது." "நாய் எந்த அளவு நம்மளை கடினமாக கடிக்கிறதோ அந்த அடிப்படையில் அதனுடைய பாதிப்பு ஏற்படும். மூளைக்கு அருகே உள்ள பகுதியில் கடித்தால் உடனடி பாதிப்பு ஏற்படும் கால் போன்ற இடங்களில் கடித்தால் அதனுடைய தாக்கம் சற்று குறைவாக இருக்கும் ஆனால் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்," என்கிறார் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராமகிருஷ்ணன். விலங்குகள் கடித்த உடனேயே தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ரேபிஸ் தொற்று உறுதியான ஒருவர் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்கிறார் முன்னாள் பொது சுகாதார துறை இயக்குநரான குழந்தைசாமி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் பாதிப்பில் இருந்து ஒருவர் உயிர் பிழைத்ததாக எந்தவொரு ஆவணமும் இல்லை. கிருமியில் இருந்து வைரஸ் பரவுவதற்கு சராசரியாக 10 நாட்கள் ஆகும், கடி ஏற்பட்ட இடத்தைப் பொருத்து இது மாறுபடும். ரேபிஸ் தடுப்பூசி 7 நாட்களில் வேலை செய்ய துவங்கும். எனவே தாமதமின்று தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் இதற்கு ஒரே வழி," என்றும் தெரிவித்தார். ரேபிஸ் நாய்கள் மட்டுமின்றி பூனைகள், கால்நடைகள் வன விலங்குகள் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கும் பரவக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0wqyk542qo
Checked
Sun, 04/05/2026 - 15:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed