புதிய பதிவுகள்2

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

3 months 1 week ago
அதுசரி உங்க அடுத்த ஆள் நாதமுனி இடதுகை இன்னும் கொழும்பில் இருந்து வரவில்லையா ?😀 கையை வெட்டி எடுத்து கொண்டாவது வைத்து கொள்ளாம் முடிந்தவரை ஒரே ip யையாவது மறைத்து இருக்கலாம் உங்களால் முடியலையே நன்றி ரதி அக்கா ..

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

3 months 1 week ago
அலி சப்ரி வெளிநாட்டுக்கு காசை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று காணொளி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அநேகமான முஸ்லிம்கள் படு தூசணத்தால் திட்டி வேலை இல்லாமல் இங்கு என்ன செய்வது என்று திட்டி தீர்த்திருந்தார்கள்.

அது இப்போது எஃகு நதி

3 months 1 week ago
அந்த துறைமுகத்தில் வேலை செய்யும் 2400 பேர்களுக்கு உடனடியாக வேலை இல்லாமல் போகும் என்று ஒரு செய்தியில் இருக்கின்றது. மே மாதத்தின் பின்னர் தான் அவர்கள் மீண்டும் வேலையை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும் என்று சொல்கின்றனர். அந்தக் கடல் பகுதியைச் சுத்தம் செய்ய அவ்வளவு நாட்கள் எடுக்கும் போல. இவர்கள் நாட் சம்பளத்தின் அடிப்படையிலேயே வேலை செய்பவர்கள். ஒரு தொழிற் சங்கம் ஆக இருக்கின்றவர்கள். அரசும், அவர்களின் சங்கமும் அது வரை இவர்களுக்கு உதவி செய்யும் என்று நினைக்கின்றேன். இவர்களைத் தவிர அந்த துறைமுகத்தினூடாக ஏற்றப்படும் மற்றும் இறக்கப்படும் பொருட்களில், உதாரணம் கார், நிலக்கரி, தங்கி இருக்கும் பல தொழில்களில் நேரடியாகவும், இல்லாமலும் வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கானோரின் நிலை பெரும் சிக்கலாகும். சில வருடங்களின் முன், இந்த தொழில் சங்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாங் பீச் துறைமுகங்களில் ஒரு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அந்த நாட்களில் கடல் முழுவதும் கப்பல்கள் வரிசையாக நின்றன, வாகனங்கள் பெரும் தெருவொன்றில் வரிசையில் நிற்பது போல. இங்கும் அதே நிலை சில காலத்துக்கு வரலாம்.

அது இப்போது எஃகு நதி

3 months 1 week ago
நன்றி ... பால்டிமோரின் பிரான்சிஸ் ஸ்காட் கீ பிரிட்ஜ் நீரில் மூழ்கியதால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஒரு "பெரிய பேரழிவு" ஆகும். இது அமெரிக்காவின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் 30,000 வாகனங்களுக்கு மேல் பயணப்படும் இந்த பாலம் முக்கியமானது. அமெரிக்கர்களுக்கான உடனடி விளைவு... வெளிநாட்டிலிருந்து புதிய கார் வருவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரலாம். பால்டிமோர் துறைமுகம் அமெரிக்காவில் உள்ள கார்கள், இலகுரக டிரக்குகளுக்கான நாட்டின் முன்னணி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தளமாக உள்ளது. அத்துடன் பால்டிமோர் துறைமுகம் அமெரிக்காவில் வருடம்தோறும் 15,300க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்குகிறது, மேலும் 140,000 வேலைகள் துறைமுகத்தின் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் விவரத்துக்கு ... நம்புங்கள் இதுவும் கவிதைதான் 😁

'மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது.

3 months 1 week ago
கிளிநொச்சி அழகி போட்டி அழகும் அதன் அரசியலும் – கிளிநொச்சி அழகிப் போட்டி கருத்தியல் நோக்கு:- கருப்புதான் எமக்கு பிடிக்கும் கலரா? நாம் வாழ்கின்ற இந்த உலகில் அரசியல் பற்றி மனிதர்கள் அக்கறையில்லாமல் இருப்பதென்னவோ உண்மைதான். உண்ணும் உணவு, உடுத்துகின்ற உடை, சுவாசிக்கும் காற்று எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. அரசியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை. அழகும் அழகுப் போட்டிகளும் கூட அதற்கு விதிவிலக்கு அல்ல. 2022ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் கிளிநொச்சியில் நடந்த அழகுப்போட்டி அது அழகிப் போட்டியா அல்லது அழகிகளை உருவாக்குபவர்களுக்கான போட்டியா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. இதன் பின்னுள்ள கருத்தியல் தொடர்பானதே இப்பதிவு. கிரேக்க பெண் தெய்வங்களுக்கு இடையே அழகுப்போட்டிகள் இடம்பெற்றதாகவும் அந்தப் போட்டிகளில் வெற்றிபெற அத்தெய்வங்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் புராண இதிகாச கதைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் உண்மையான அழகுப்போட்டி ஆண்டு தோறும் நடைபெறும் எதென்ஸ் விழாவில் ஆண்களுக்குத்தான் நடந்துள்ளது. ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் இங்கிலாந்தில் ஆங்கிலேய மே தினக் கொண்டாட்டங்களில் அரசியைத் தெரிவு செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அமெரிக்க மே தினக் கொண்டாட்டங்களில் இளம் பெண் அழகி ஒருத்தி போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சமூகப் பிரதிநிதியாக்கப்படுவது நடைமுறையாக இருந்து வந்துள்ளது. 1789இல் இளம்பெண்கள் வரிசையாக நின்று அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்கும் முறை உருவானது. இந்த அழகுப் போட்டி தொடர்பாக குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பெரும்பாலும் ஆண்களினால் மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்விமர்சனங்கள் பெரும்பாலும் ஆக்கபூர்வமானவையாக இல்லாமல் அப்போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் மீதான விமர்சனங்களாகவே அமைந்தன. இந்த விமர்சனங்களில் ஒன்று தங்களை அழகாக்கி இப்பெண்கள், ஆண்களை ஏமாற்ற முயல்கின்றனர் என்பது. இது தான் 2022இன் மிகப்பெரிய நகைச்சுவையாக அமையும் என்றால் மிகையல்ல. புலம்பெயர்ந்த ஆண்கள் தங்களுடைய அழகை மட்டுமல்ல, வயது, கல்வி, தொழில், தங்களிடம் உள்ள சொத்துக்கள் என்று பலதிலும் ஏமாற்றி தங்கள் மணப்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வது என்பது ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகவே அன்று இருந்தது. இப்போது இவர்கள் சொல்லும் பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது கொஞ்சம் ஓவர்தான். இந்த புலம்பெயர்ந்த ஆண்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்த போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் இதற்கு பதிலளிக்கின்ற போது ஒட்டுமொத்தமாக புலம்பெயர்ந்தவர்கள் மீது காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளனர். விமர்சனங்களை முன்வைத்த ஆண்களுக்கு பதிலளித்ததோடு அவர்கள் நிறுத்திக்கொண்டிருப்பது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். 1971இல் கதிர்காமத்தைச் சேர்ந்த அழகுராணிப் போட்டியில் வெற்றிபெற்ற பிரேமாவதி மன்னம்பேரி படுகொலைசெய்யப்பட்டார். ஜேவிபி உறுப்பினராக இருந்த அவர் ஜேவிபி கிளர்ச்சியின் போது இலங்கை பாதுகாப்புப் படையால் நிர்வாணமாக்கப்பட்டு தெருக்களில் கொண்டு திரியப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். சென் லுயிஸில் 1905இல் பெண் அழகிகளுக்கான போட்டி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டமை தற்போதுள்ள அழகிப் போட்டிகளுக்கு வித்திட்டது. அப்போது 40,000 பேர் இவ்வழகிப் போட்டிக்கு தங்கள் புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தனர். 1921ஆம் ஆண்டு செப்ரம்பரில் அமெரிக்க அழகி அட்லான்டிக் நகரில் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் நீராடும் அழகிப் போட்டி இடம்பெற்றது. 1951 முதல் உலக அழகிப் போட்டி இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சியில் நடைபெற்ற அழகிப் போட்டி அல்லது அழகு கலைஞர்களுக்கிடையேயான போட்டியும் இந்த உலக அழகுப் போட்டியும் அடிப்படையில் ஒன்றே. இதன் கருத்தியல் தளத்தில் தான் நாம் கவனம் செலுத்தவேண்டுமே அல்லாமல் போர் தின்ற கிளிநொச்சியில் அழகுராணிப் போட்டி அவசியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. வெறும் அடைமொழிகளை வீசி அவ்விளம் பெண்களை குற்றவாளியாக்குவது நியாயமற்ற செயல். ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன அழகு என்பது முக்கியமான அம்சம். ஒவ்வொருவரும் தன்னளவில் தாங்கள் அழகானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வது அவர்களுடைய தனித்துவத்திற்கும் ஆளுமைக்கும் மிகவும் அவசியமானது. அதனால் அவரவர் தங்களை அழகுபடுத்தி வெளிப்படுத்துவது ஆரோக்கியமான விடயமே. அதில் எவ்வித தவறும் கிடையாது. ஆண்களுக்கு அழகு அவசியம் இல்லை என்றால் சிகை அலங்கார நிலையங்கள் எதற்கு? ஆனால் இந்த அழகும் அதற்கான போட்டி என்பதும் சிக்கலான ஒன்று. ஆணழகன் போட்டிகள் இருந்தாலும் அவை பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஏனெனில் அது ஆண்களின் அம்சமாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால் மிஸ்வேர்ல்ட், மிஸ் கிளிநொச்சி என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துவிடுகின்றது. அதற்குக் காரணம் சந்தைப் பொருளாதாரமும் அது ஏற்படுத்திய நுகர்வுக் கலாச்சாரமுமே. பெண்ணியம் சார்ந்த பெண் விடுதலைக்கான அமைப்புகள் இதற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டனர் 1970இல் லண்டன் அல்பேர் ஹோலில் இடம்பெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டிக்குள் நுழைந்த பெண்ணியவாதிகள் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்தனர். 2018 இல் இடம்பெற்ற உலக அழகிப் போட்டியை வழங்கிக்கொண்டிருந்த பொப் ஹோப் “இன்றைய இரவைப் பார்க்க இதுவொரு கன்றுகளின் சந்தையாகத் தெரிகின்றது” எனக் குறிப்பிட்டிருந்தார். பிரித்தானியாவில் கன்றுகள் காட்சிப்படுத்தப்பட்டு ஏல விற்பனை செய்யப்படும் முறையிருப்பதன் பின்னணியில் அவர் இக்கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். இவ்வாறு இந்த உலக அழகிப் போட்டிகளுக்கு எதிரான பல போராட்டங்கள் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வருகின்றது. 2002 இல் நைஜீரியாவின் அபுஜாவில் நடக்கவிருந்த மிஸ் வேர்லட் போட்டி அதுதொடர்பான சர்ச்சையால் அங்கு நடைபெறவில்லை. முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கணிசமான அளவில் வாழ்கின்ற நைஜீரியவில் மிஸ் வேர்ல்ட் ஏற்பாடு செய்யப்பட்டதுமே வாதப் பிரதிவாதங்கள் இரு மதத்தரிப்பினரிடையேயும் உருவானது. அது ஏற்கனவே முரண்பாடுகளோடு இருந்தோரிடையே மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்பின்னணியில் “முகம்மது நபிகள் இன்று இருந்தால் இந்த உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் ஒருவரையே திருமணம் செய்ய விரும்பி இருப்பார்” என்று கிறிஸ்தவ பெண் ஊடகவியலாளர் ஒரு கட்டுரையை எழுதினார். அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் வெடித்த கலவரத்தில் 215 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கட்டுரையாளருக்கு மரண தண்டனை – அறிவிக்கப்பட அவர் தற்போது மேற்கு நாடு ஒன்றில் தற்போதும் தலைமறைவாக வாழ்கின்றார். மீண்டும் நாங்கள் உலக அழகிப் போட்டிக்கு வருவோம், விளையாட்டுப் போட்டிகளை நாங்கள் பார்த்து மகிழ்கின்றோம், குத்துச் சண்டைகளில் யார் வெல்வார்கள் என்று பந்தயம் கட்டுகின்றோம், காளையை அடக்கும் பாட்டிகளை பார்த்து ரசிக்கின்றோம், போட்டிப் பரீட்சைகளில் போட்டி போட்டு கலந்துகொள்கின்றோம் ஆனால் அழகிப் போட்டி மட்டும் ஏன் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றது? என்ற கேள்வி நியாயமானதே. ஏனைய போட்டிகளுக்கும் அழகுப் போட்டிக்கும் உள்ள பிரதான வேறுபாடு தான் இதற்குக் காரணம். ஏனைய போட்டிகளில் ஒருவரின் பலம், திறமை: எழுத்தாற்றல், பேச்சாற்றல், வரையும் ஆற்றல், ஓடும் ஆற்றல் போன்ற பல்வகைப்பட்ட ஆற்றல்கள், சிந்திக்கும் ஆற்றல் என்ற அளவீடு செய்யக்கூடிய சுட்டிகள் போட்டியின் போது மதிப்பீடு செய்யப்படுகின்றது. இது புறநிலையானது பொருள்வகைப்பட்டது. அதற்கு நீங்கள் பரிவர்த்தனை மதிப்பை ஏற்படுத்த முடியும். அதாவது விலை நிர்ணயம் செய்ய முடியும். உதாரணத்திற்கு சீதனச் சந்தையில் ஓஎல் பெயில் விட்டவருக்கும் பட்டதாரிக்கு இடையே உள்ள சந்தைவிலை – சீதனம் ஒன்றல்ல. இதற்கு முற்றிலும் மாறாக அழகு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. அகநிலையானது. அதனை அளவீடு செய்ய முற்படுவதே அடிப்படையில் தவறான அணுகுமுறை. நாங்கள் விரும்புகின்றவர் எங்களுக்கு பேரழகனாகவோ பேரழகியாகவோ தோன்றலாம். ஆனால் எங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு அவ்வாறே தோண்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கறுப்புப் பற்றி வரலாற்றினூடு எங்களுக்கு திணிக்கப்பட்ட தகவல்களால், கறுப்புப் பற்றிய தவறான புரிதலை எங்களை அறியாமலேயே எங்களுக்குள் கொண்டுள்ளோம். அகத்தில் உள்ள இந்தச் சிக்கலை மறைக்க நாங்கள் முகத்தையும் தோலையும் ப்பிளீச் பண்ணி கொஞ்சம் கூடுதலாக வெள்ளையாக்க விரும்புகின்றோம். ஆபிரிக்க பெண்கள் கூட இதனையே செய்ய ஊக்கப்படுத்தப்படுகின்றனர். அழகு என்ற பெயரில். 1500களில் இருந்து ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்தும் அதன் பின் நவகாலனித்துவ ஆதிக்கத்தினாலும் வெள்ளைத்தோல் அழகு, பண்பு, அறிவு ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு பார்க்கப்படலாயிற்று. ஐரோப்பிய வெள்ளையினத்தவர்கள் எம்மை ஆண்டதால் வெள்ளை மீது அல்லது கறுமை குறைந்தவர்கள் மீது எமக்கு காதலுருவாவது ஒன்றும் வியப்பில்லை. மேலும் கறுப்பாடு, கறுப்புப் பணம், கறுப்புச் சந்தை என்ற சொல்லாடல்கள் எல்லாம் கறுப்புப் பற்றிய கீழ்நிலைக் கருத்துருவாக்கத்தை எம்மத்தியில் மிக ஆழமாக பதிவு செய்துள்ளது. வெள்ளை தான் அழகு என்ற உணர்வை இவை ஏற்படுத்தி உள்ளது. மிஸ் வேர்ல்ட் போட்டியும் இதனையே பிரதிபலிக்கின்றது. வெள்ளையினத்தினரைக் கொண்ட நாடுகளும் அவர்களை ஒத்தவர்களுமே பெரும்பாலும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவது இதனையே உறுதி செய்கின்றது. ஆய்வுகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன. இவற்றுக்கு அப்பால் இப்போது வெள்ளையினத்வரல்லாதவர்களும் இந்த அழகுப் போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு ஏற்பட்டு இருப்பது ஒன்றும் வெள்ளையரல்லாதோரை அல்லது கறுப்பை அழகாகக் கருதுவதால் அல்ல. தங்கள் ப்பிளீச் பவுடரையும் தாங்கள் அழகென்று கருதுவதை சந்தைப்படுத்தி தங்கள் சந்தையை விரிவாக்கம் செய்யவே. அதனால் தான் இலகுவில் விலைபோகக்கூடிய உலகின் இரண்டாவது பெரிய சந்தையுடைய இந்தியா மிஸ் வேர்ல்ட் போட்டிகளில் ஆறு தடவைகள் வெற்றி பெற்றதன் ரகசியம். உலகின் மிகப்பெரிய சந்தையையுடைய சீனா தன் சந்தையை சர்வதேசத்துக்கு திறந்துவிடாததால் சீனா 2007 இல் ஒரு தடவை மட்டுமே மிஸ்வேர்ல்ட் போட்டியில் வெற்றிபெற்றது. உயிருள்ள உணர்வுள்ள ஜீவன்களான பெண்கள் சந்தைப் பொருளாதாரத்தின் விற்பனைப் பண்டமாக மாற்றப்படும் தன்மைதான் இந்த அழகுப் போட்டிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. அழகில்லாத ஆணோ அழகில்லாத பெண்ணோ கிடையாது. படைக்கப்படவும் முடியாது. அழகை அவரவர் தமக்கேற்ப மெருகூட்டுவது அவரவர் உரிமை. ஆனால் அதற்கு போட்டி வைத்து தெரிவு செய்கின்ற போது அது தீவிரமான அரசியலாக மாற்றப்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு பெண்ணின் அழகை அளவீடு செய்வதும் அதன் மூலம் அவளை மதிப்பீடு செய்வதும் இந்த நூற்றாண்டின் கருத்தியல் அவலம் என்றே கருதுகிறேன். அவளின் அழகிற்கு அவள் மட்டுமே நிகர். இதற்கு ஒருபடி மேலே சென்று இப்போது க்கீயூட் பேபி கொன்ரெஸ்ட் வேறு நடத்த ஆரம்பித்துவிட்டது பேஸ்புக். லாபமீட்டலாம் என்றால் என்னவும் செய்யலாம் என்பது பல்தேசிய நிறுவனங்களின் கொள்கை. அதற்கு அவர்கள் பார்பி டோலின் இடுப்பை சிறிதாக்கி அதனையும் செக்ஸியாக்கி விற்பனை செய்கிறார்கள். இப்படி எத்தனை போட்டிகளுக்கு எம் எதிர்கால சந்ததியினர் முகம்கொடுக்க வேண்டி வரும் என்பது பல்தேசிய நிறுவனங்களுக்குத் தான் வெளிச்சம். இதில் கிளிநொச்சி இளம்பெண்கள் என்ன பாவம் செய்தார்கள், நீங்கள் சொல்லம்புகளால் அவர்களைத் தைக்க? https://www.thesamnet.co.uk/?tag=கிளிநொச்சி-அழகி-போட்டி

அது இப்போது எஃகு நதி

3 months 1 week ago
இது ஒரு கவிதை ? மன்னிக்கவும் பலகுழுமங்களில் இந்த கவிதை அல்காரிதம் தெரியாமல் வாங்கி கட்டி இருக்கேன் நிறைய சொல்லி உள்ளேன் யாரவாது சொல்லி புரிய வைத்தால் இந்த பூர்வ ஜென்ம பலன் எனக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன் .

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

3 months 1 week ago
அடையாளம் தெரியவரும் என்பதால்… கொழும்பான், தனி, ஏராளன், ஓணாண்டி, இன்னும் எத்தனை பேரை சந்திக்காமல் விட்டேன்….இந்த டிக்கெட் காசுக்காக மாட்டுப்படேலுமே🤣. First class எண்டாலும் பரவாயில்லை. தயவு செய்து இப்படி சொன்னது உங்களை போல அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை என நினைக்கவேண்டாம். நான் புலம்பெயர் சந்தை என சொன்னது அந்த மக்களின் உழைப்பை உறிஞ்சாமல் அவர்களுடன் fair trade செய்வோரையும், நேரடியாக அவர்களிடம் வாங்கி செல்வோரையுமே.

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

3 months 1 week ago
யோவ் என்னையா இது…..ரோதனையா இருக்கு…🤣 நீங்கள் எப்ப இலங்கைக்கு சுற்றுலா போனீர்கள்? அப்படியே போனாலும் கட்டுரை எழுதி தாளிச்சு போடுவியளே🤣. அந்த கொக்கதடி கொமெண்ட் இலங்கை போய் வந்து அனுபவம் எழுதிய வேற ஒருவருக்கு. அது எனக்கும் ஜஸ்டினுக்குமான குழுவுக்குறி. கொக்கதடில மாம்பழம் விழும் எண்டு பார்த்தால்…அணில் எல்லே வந்து கிடந்து உருளுது🤣. நாதம் - ஆள் இல்லாத போது கதைப்பது சரி இல்லை. ஆள் வரட்டும் ஆளை பொரில்கலாம்🤣. இறால் போட்டால் சுறா பிடி படும். திமிங்கிலம்?🤣

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

3 months 1 week ago
கேள்வி பதிலாக மீதி தொடர்கிறதே அண்ணா. இன்னும் சிலதை பிற்சேர்க்கை போல எழுதுகிறேன். உங்கள் ஆச்சரியம்தான் எனக்கும். ஒரு அளவுக்கு மேல் கேட்பது இங்கிதம் இல்லை. அத்தோடு கஸ்டம்தான் நீங்கள் மாசாமாசம் அனுப்புங்கோ எண்டு சொன்னால் கதை கந்தல் ஆகி விடும். ஆனால் கனவில் இல்லை, நிஜமாகவே சமாளிக்கிறார்கள். பலருக்கு சொந்தமாக ஒரு குடிசைதன்னும் இருப்பதால் அந்த செலவு குறைவாக இருக்கும். ஆனால் வியாபாரிகள், சுயதொழில் செய்வோர், முதலீட்டாளர்கள், digital nomads போல creative, IT industry களில் வேலை செய்வோர் நன்றாக உழைக்கிறார்கள்.

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

3 months 1 week ago
இப்படி கேட்பதை விட நேரில நிழலி அல்லது மோகனிடம் யார் இந்த பெருமாள் என்று கேட்டு இருக்கலாம் நானும் வெயிட் பண்ணினேன் உங்களுக்கு திண்ணை இல்லாவிடில் யாழ் இல்லை என்று வெயிட் பண்ணி இருக்கேன் நானும் ரெடியாத்தான் இருக்கேன் .ஸ்டார் மியுக் ௦......😄

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

3 months 1 week ago
நன்றி நிழலி. இதில் இப்போதைக்கு என்பது முக்கியமான சொல். யாழ்பாணம் பொருளாதாரத்தில் முன்னேற நேரடியான வெளி நாட்டு காசு, என்பதை விட வெளிநாட்டு தமிழர் சந்தை என்பது கொஞ்சம் முன்னுக்கு வர தொடங்கியுள்ளது. பனை அபிவிருத்திச் சபை மிக நேர்த்தியாக கற்கண்டு, பனங்கட்டி, இன்னும் பல பொருட்களை பொதி செய்து விற்கிறார்கள். பண்டதரிப்பில் அவர்கள் அலுவலக கட்டிடம் உள்ள கடையில் பலதையும் வாங்க முடிந்தது. சாவகச்சேரியில் ஜப்னா அராக் என பனஞ்சாராயம் அழகிய போத்தலில் 800 ருபாயில் கிடைக்கிறது. மூலைக்கு மூலை மிக்சர் கடைகள். சுண்டல் வண்டிகள் கூட நேர்தியாகவே உள்ளன. ஆனைக்கோட்டை பக்கம் நல்லெண்ணை, எள்ளு பாகு குடும்ப கைத்தொழிலாக பரவலாக நடக்கிறது. குடும்பங்கள் வறுமையிலும் மானத்தோடு வாழ புலம் பெயர் மக்கள் போய், அல்லது இங்கே இருந்தபடி வாங்கும் பொருட்கள் உதவுகிறன. இது அடி மட்டதில் என்றால் மேல் மட்டத்தில் பல கொழும்பு வாழ் யாழ் மக்கள் மீள வந்து முதலீடுகள் செய்துள்ளார்கள். இவ்வளவு ஏன், புறக்கோட்டையில் ஒரு சுண்டல் வியாபாரி பனங்கிழங்கு விற்றார். யார் என பார்த்தால் யாழ்ப்பாணத்தவர். ஒரு காலத்தில் ஆளை சிஐடி அப்படியே அமுக்கி இருக்கும். காலம் மாறி விட்டது.

'மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது.

3 months 1 week ago
சில மாதங்களுக்கு முன்பு கடந்த வருடம் என்று நினைக்கிறேன் நுணாவிலானும், உடையாரும் யாழ்களத்தில் தகவல், வீடியோவும் தந்திருந்தவர்கள். யாழ்பாண மாவட்டம் கிளிநொச்சியில் நடந்தத. 😄 தேடிபார்த்தேன் காணவில்லை பின்பும் நேரம் கிடைக்கின்ற போது தேடிபார்க்கிறேன்.
Checked
Mon, 07/08/2024 - 15:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed