புதிய பதிவுகள்2

விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை

3 months 2 weeks ago
சிறிலங்கா பிரஜைகள் ஆயுதங்களுடனும் ,போதை பொருடகளுடனும் இந்திய புலனாய்வினர் மற்றும் இந்தியா மற்றும் வேறு நாட்டு படைகளினால் கைது செய்யப்பட்டால் அவர்களை இலகுவாக புலிகள் என முத்திரை குத்தி விடுவார்கள்... தற்பொழுது தமிழ்நாட்டில் பிடிபட்டுள்ள (இரண்டு,மூன்று நாட் களுக்கு முதல்) போதை பொருகளுக்கும் ; விழிஞம் கடற்கரையில், 2021 ஆம் ஆண்டு 300 கிலோ போதைப்பொருட்களுடனும் ,ஆயுதங்களுடனும் பிடிபட்ட சிறிலங்கா பிரஜைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் ....இதில் பிடிபட்டவர்கள் தமிழ் பேசுபவர்கள்....திமுக வின் அயலக தொடர்பாளரக்ள்,,,

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

3 months 2 weeks ago
யாழ்ப்பாணத்தில் சாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி! முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து, அன்னாரின் பூதவுடல் நாளை உடுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொது மக்கள்; மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அவரது குடுப்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், தகனக் கிரியைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, சாந்தனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகத்தை முற்றுகையிட்டு நாளை காலை 10 மணிக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி இந்திய – திராவிட கூட்டுச் சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனுக்கு நீதி கோரி யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு “போராட இந்தியத் துரோகத்தை வேரறுக்க தமிழர்களாய் ஒன்றிணைவோம்” எனும் தொனியில் இந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371864

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

3 months 2 weeks ago
நீர்கொழும்பு வைத்தியசாலையில் சாந்தனின் உடல் : மீண்டும் பிரேத பரிசோதனை. சாந்தனின் உடலானது இலங்கையில் மீண்டும் பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சாந்தனின் பூதவுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நீண்ட இழுபறிகளின் பின்னராக நேற்றைய தினம் உறவினரிடம் கையளிக்கப்பட்டது. எனினும் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்துக்கு பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதமாகியுள்ளது. தற்போது பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் பூதவுடல் கையளிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலத்தை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் உறவினர் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1371867

காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது!

3 months 2 weeks ago
காத்தான் குடியில் கைதான 30 பேருக்கு சரீர பிணை : 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு. காத்தான்குடியில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். காத்தான்குடி பாலமுனை பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடாத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையான ஸஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பொலிஸார் கைது செய்தனர். இதன்போது 23 மோட்டார்சைக்கிள்கள் முச்சக்கரவண்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று பொலிஸாரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1371873

தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?

3 months 2 weeks ago
தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் போதை பொருள் கடத்தல் விவகாரம் காரணமாக அவர்கள் கச்சதீவுக்கு வரவில்லையோ தெரியவில்லை..

சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?

3 months 2 weeks ago
தி.மு.க வின் அயலக அணி.....இவையளுக்கு ஒர் நாடு கடந்த அமைப்பு தேவைப்பட்டிருக்கு ? திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஒர் கும்பல் பல வசதிகளுடன் செயல் பட்டிருக்கு அதை அரசு கண்டு கொள்ளவில்லை....இந்த கும்பல் திருச்சி தடுப்பு முகாமிலிருந்து சிறிலங்காவில் சில கொலைகளை செய்துள்ளனர்.... இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இந்த போதை பொருளை இவர்கள் கடத்தியுள்ளனர்...

வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்

3 months 2 weeks ago
இதே போன்ற நிலையை தாயகத்திலும் ஒரு புண்ணியவான் உருவாக்கினால் நாமும் நிம்மதியாக் உறங்கலாம் தாயக மக்கள் அதை விட நிம்மதியாக உறங்கலாம்...

பெங்களூரு உணவகத்தில் நடந்த வெடிப்பு - முதல்வர் சித்தராமையா சொன்னது என்ன?

3 months 2 weeks ago
பெங்களூரு குண்டுவெடிப்பு | சிசிடிவியில் சிக்கிய சந்தேக நபர் 02 MAR, 2024 | 10:39 AM பெங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உணவகமொன்றில் மர்ம நபர் ஒருவர் பையை எடுத்துச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் மிகவும் பிரபலமான உணவமாக ‘ராமேஸ்வரம் கபே’ கடை திகழ்கிறது. திவ்யா ராகவேந்திர ராவ்-ராகவேந்திர ராவ் தம்பதி இந்த கடைகளை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கபே மூலம் மாதம் ரூ.4½ கோடி வருமானம் வருவதாக கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர அப்துல்கலாமின் நினைவாக அவர் பிறந்த ஊரான ராமேஸ்வரம் பெயரை கொண்டு ‘ராமேஸ்வரம் கபே’ என்ற பெயரில் திவ்யா-ராகவேந்தர் தம்பதி உணவகங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூர் குந்தலஹள்ளியில் உள்ள புரூக்பீல்டிலும் ராமேசுவரம் கபே இயங்கி வருகிறது. அந்த உணவகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். சரியாக மதியம் 1 மணி 5 நிமிடத்தில் ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது. இதனால் உணவகம் மொத்தமும் புகை மண்டலமாக மாறியது. இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தரையில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களும் உடைந்து சேதமாகின. ல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள், குண்டுகள் வெடித்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்த உணவுப்பொருட்களை அப்படியே போட்டுவிட்டு, பதறி அடித்து வெளியே ஓடிவிட்டார்கள். சிலிண்டர் வெடித்ததாக பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வெடித்து குண்டு என்பது அதன்பின்னரே அவர்களுக்கு தெரிந்தது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த பெண் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். சாப்பிட வருவது போல வந்த வாடிக்கையாளர் ஒருவர், தான் கையோடு கொண்டு வந்த பையை வைத்து விட்டு சென்றதாகவும், அவர் விட்டு சென்ற பை ஒன்றில் இருந்த பொருள்தான் வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவியில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து உள்ளார். வெடித்தது மிக வீரியமிக்க IED வெடிகுண்டு என போலீசார் கூறுகின்றனர். தீவிர விசாரணை நடந்து வருகின்றது என்று துணை முதல்வர் டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். பையில் இருந்ததைத் தவிர, வளாகத்தில் ஐஇடி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 28 முதல் 30 வயதுடையவர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை கைது செய்தது போலீஸ். வாடிக்கையாளர்போல் வந்து வெடிகுண்டு வைத்தது யார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கைதானவர் யார் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் வெளியாகவில்லை. சந்தேக நபர், முகமூடி, கண்ணாடி மற்றும் தலைக்கு மேல் தொப்பியால் முகத்தை மறைத்து, இட்லி தட்டை எடுத்துச் செல்வது ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் சிக்கியுள்ளது. https://www.virakesari.lk/article/177729

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகள் - மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள்

3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 02 MAR, 2024 | 10:02 AM இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் கடந்தகாலத்தைய தற்போதைய மனித உரிமை மீறல்கள் பொருளாதார குற்றங்கள் தொடர்பி;ல் விசாரணைகளை மேற்கொண்டு வழக்குகளை தாக்கல் செய்வதற்கான நம்பகதன்மை மிக்க பொறுப்புக்கூறல்நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் உலகளாவிய மற்றும் சர்வதேச நியாயதிக்க எல்லைக்கு பொருத்தமான இலக்குவைக்கப்பட்ட நடவடிக்கைகளை இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என நம்பதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/177725

காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய 30 பேர் கைது!

3 months 2 weeks ago
காத்தான்குடியில் சந்தேகத்தில் கைதான 30 பேரும் பிணையில் விடுதலை! 02 MAR, 2024 | 01:12 AM காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (1) மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். காத்தான்குடி பாலமுனை பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடாத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலையான ஸஹ்ரான் காசிமின் சகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை (01) அதிகாலையில் பொலிசார் கைது செய்துள்ளதுடன் 23 மோட்டார்சைக்கிள்கள் ஆட்டோ ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு பொலிசார் சென்று விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையடுத்து பிரதேசத்தில் பெரும் பரபரப்பு எற்பட்டது. இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இவர்களை வெள்ளிக்கிழமை (1) மாலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார். https://www.virakesari.lk/article/177720

கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய

3 months 2 weeks ago
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க கைது Published By: VISHNU 01 MAR, 2024 | 09:58 PM சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக வைத்தியர் சமன் ரத்நாயக்க வெள்ளிக்கிழமை (01) பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்தார். சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177712

கிளிநொச்சி - பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி

3 months 2 weeks ago
02 MAR, 2024 | 10:17 AM கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணியை கைவசப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஆனையிறவுக்கும் இயக்கச்சிக்கும் இடையில் ஏ9 வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள காட்டுப் பகுதியில் இயந்திர உபகரணங்கள் மூலம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் காடுகளை வெட்டி பல ஏக்கர் பரப்பளவில் காணிகளை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரதேசத்துக்கு அருகில் இராணுவ முகாம் ஒன்றும் இருக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், பளை பொலிஸார், கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கும் பொது மக்கள், தாம் சிலர் காடுகளை அழித்து அப்புறப்படுத்துபவர்களிடம் சென்று விசாரித்தபோது அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். எனவே, உரிய தரப்பினர் இக்காடழிப்பு விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/177726

பிளாக்பஸ்டர் பனிப்புயல் கலிபோர்னியாவில் 12 அடி பனிப்பொழிவு சாத்தியம், 100-மைல் வேகத்தில் காற்று வீசுகிறது.

3 months 2 weeks ago
கலிபோர்னியா வெப்பமான பிரதேசம் அல்லவா. அங்கும் குளிரா… கலி முத்திப் போச்சு. 😁

பெங்களூரு உணவகத்தில் நடந்த வெடிப்பு - முதல்வர் சித்தராமையா சொன்னது என்ன?

3 months 2 weeks ago
1 மார்ச் 2024 கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவகத்தில் பயங்கர வெடிச்சத்தத்துடன் மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது. பெங்களூருவின் ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இன்று மதியம் ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. இது குண்டுவெடிப்பா அல்லது சிலிண்டர் வெடிப்பா என போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நடந்தது IED குண்டுவெடிப்பு எனக் கூறப்படுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டி அளித்துள்ளார். சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் உணவகத்திற்கு வந்த ஒருவர் விட்டுச் சென்ற பையில் இருந்து வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்ததாக கர்நாடக டிஜிபி அலோக் மோகன் தெரிவித்தார். சம்பவம் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஒயிட் பீல்டு பகுதி தீயணைப்பு துறையினர் கூறுகையில், தங்களுக்கு சிலிண்டர் வெடித்ததாக அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த வெடிகுண்டு கண்டறிதல் குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். https://www.bbc.com/tamil/articles/cd14deeyel8o

பிளாக்பஸ்டர் பனிப்புயல் கலிபோர்னியாவில் 12 அடி பனிப்பொழிவு சாத்தியம், 100-மைல் வேகத்தில் காற்று வீசுகிறது.

3 months 2 weeks ago
நல்லது சினோ. கொட்டுவதும் புயல் காற்று வீசுவதும். பூமியை சுத்தம் செய்யும்,......அமெரிக்கா வாழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். 🤣. ஜேர்மனியில் இப்படி இல்லையே என்று கவலையளிக்கிறது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!

3 months 2 weeks ago
தனது நலனுக்காக, தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக, குற்றமேதும் செய்யாத தமிழரை ராஜீவ் காந்தியின் கொலையுடன் பயன்படுத்திக்கொல்கிறது இந்தியா. இது தொடரும் .......
Checked
Mon, 06/17/2024 - 07:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed