புதிய பதிவுகள்2

மயிலம்மா.

3 months 2 weeks ago
மயிலிறகு......... 12. சில நாட்களாக வாமன் மயிலம்மா வீட்டுப் பக்கம் போகவில்லை.அவனுக்கு அதிகமான வேலைப்பளுவும் ஒரு காரணம்.அன்று அரசு விதானையுடன் சென்று இரு சகோதரர்களுக்கான எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து விட்டு அவர்கள் கோழி அடித்து விருந்து வைக்க சாப்பிட்டுவிட்டு இருவரும் விதானையாரின் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது விதானையார் ஒரு பேரூந்து தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி இந்தாடா வாமு நான் கனநாளாய் உனக்கு காசு தரவில்லை, இப்ப இதை வைத்துக்கொள் பிறகு கணக்கு பார்த்துக் கொள்ளலாம்.இப்பவெல்லாம் நீ தனியாக சென்று வேலைகள் செய்யுமளவு தேறி விட்டாய். அநேகமாய் இந்த வாரத்தில் கூட உனக்கு வேலைக்கு கடிதம் வந்து விடும். நீ தினமும் தபால்காரரை விசாரித்துப் பார்.இப்ப எனக்கு இங்கால சில வேலைகள் இருக்கு, நீ பேரூந்தில் வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டுப் போகிறார். அவன் பேரூந்தை எதிர்பாராமல் வழியில் வரும் சைக்கிள்களிலோ ட்ராக்டர்களிலோ செல்லலாம் என்று நினைத்து நடந்து வருகிறான். அப்படி வரும் வழியில் வட்டி வைத்தி வீட்டை கடக்கையில் ஒரு பெண் ஓடிவந்து அவனை மறித்து அண்ணா உங்களை அம்மா ஒருக்கால் வந்துட்டுப் போகட்டாம் என்று சொல்ல, அவள் அன்று அந்த அம்மா மயங்கி விழுந்த போது ஓடிவந்து ஒத்தாசை செய்த பெண் என்று கண்டு என்ன மோட்டார் வேலை செய்யவில்லையா என்று கேட்கிறான். சீச்சீ அதெலாம் நல்லா வேலை செய்யுது நீங்கள் வாங்கோ என்று சொல்லி முன்னாள் போகிறாள். வீட்டுக்கு வர கேட்டுக்கு அருகில் அஞ்சலா நிக்கிறாள். என்ன பிறகு உன்னை இந்தப் பக்கம் காணேல்ல....சரி....சரி ...உள்ளேவா உனக்கு நன்றி சொல்லத்தான் கூப்பிட்டானான். வேறு ஒன்றுமில்லை என்பதை நமுட்டுச்சிரிப்புடன் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள். எதுக்கு நன்றி......உண்மையிலேயே நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இக்கட்டான நேரத்தில் நீங்கள் செய்த உதவி பேருதவி. (இருவரும் திண்ணையில் அமர்கிறார்கள். அவளின் தாயார் அருகில் கால்களை நீட்டியபடி வெற்றிலை இடித்து கொண்டிருக்கிறார்). அதை விடுடா ....அதெல்லாம் தொழில். நான் ஒன்றும் சும்மா செய்யவில்லை.வட்டிக்குத்தான் தந்தனான்.இன்னும் காணி உறுதி என்னிடம்தான் இருக்கு மறந்திடாத. இது அதில்லை.அண்டைக்கு நீ வரப்பில் மயங்கி விழுந்த என்ர அம்மாவை தகுந்த நேரத்தில் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டதாக இவளும் அம்மாவும் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.அது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா. அது நான் என்ர அம்மாவாய் இருந்தால் செய்ய மாட்டனா, யாராய் இருந்தாலும் அதை செய்திருப்பார்கள். அவள் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்து எடி கவிதா, உள்ளே போய் பால் தேத்தண்ணியும் போட்டுகொண்டு பனங்காய் பணியாரத்தையும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல அவளும் உள்ளே போகிறாள். அம்மா சுகமாக இருக்கிறாவா .....ஓம் இந்த நீரிழிவு வருத்தத்தால கொஞ்சம் கவனமாய் அவவைப் பார்த்துக் கொள்ள வேணும்.ஆனாலும் மனுசி சொல்வழி கேட்கிறேல்ல....ஒளிச்சு வைச்சு இனிப்புகள் சாப்பிடுது. அப்போது வீதியால் ஒரு நாய் போக மோட்டார் சைக்கிள் அருகில் படுத்திருந்த ஜிம்மி ஆக்ரோஷமாய் குரைக்கிறது. ஜிம்மி சும்மா இரு என்று அடக்கிய அஞ்சலா இதுக்கொன்றும் குறைச்சலில்லை அவரைமாதிரி குரைக்கத்தான் தெரியும் ஒரு சதத்துக்கு பிரயோசனமில்லை என்று சொல்ல அது புரிந்ததுபோல் எழுந்து வாலை பின்னங் கால்களுக்குள் மடக்கிக் கொண்டு அப்பால் போகிறது. திண்ணையில் இருந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்த வாமன் நீங்கள் இது ஓட்டுவீங்களா என்று கேட்கிறான்...... இல்லை சைக்கிள் ஓட்டுவன்.அதில்தான் பாடசாலைக்கும் போய் வந்தனான். உன்ர வேலைகள் எல்லாம் எப்படிப் போகுது......இப்பவும் வேலையாலதான் வருகிறேன். விதானையார் என்னை பேரூந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுட்டுப் போகிறார். பஸ்ஸை காணேல்ல வந்தால் மறித்து ஏறுவம் என்றுதான் நடந்து வந்தனான். அப்ப இண்டைக்கு உனக்கு நல்ல விருந்து சாப்பாடும் தண்ணியும் கிடைத்திருக்கும் இல்லையா. ....ம்.....அதெல்லாம் கிடைத்ததுதான், ஆனால் இப்ப சாராயம் குடிக்க வெறுக்குது. சும்மா அவங்களுக்காக கொஞ்சம் எடுத்தனான். பின் அந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்தபடி நீங்கள் இதை விக்கிற எண்ணமிருந்தால் எனக்குத் தருவீங்களா என்று கேட்கிறான். எனக்கு அதை விக்கிற யோசனையில்லை.என்ன இருந்தாலும் அவர் பாவிச்சது.அவற்ர பிள்ளைகளும் இருக்கினம்.அண்டைக்கு ஒருநாள் சரியான மழை அவர் நல்ல வெறியில இந்த சைக்கிளோட சறுக்குப்பட்டு பள்ளத்துக்க விழுந்து எழும்ப முடியாமல் அப்படியே இறந்து போனார்.அப்போது இரவுநேரம் அருகில் யாரும் இல்லை. இதுவும் சேதமாயிட்டுது. பின் உதை அப்படியே கொண்டுவந்து திண்ணையில் விட்டதுதான்.அப்படியே நிக்குது. அதுக்கில்லை ஓரு மோட்டார் சைக்கிள் வாங்கத்தான் பார்த்துத் திரியிறன். ஒன்றும் தோதாக அம்பிடவில்லை. அதுவும் இப்ப வேலையும் அதிகம். அத்துடன் விரைவில் கிராமசேவகர் வேலையும் கிடைத்து விடும்.வெறும் சைக்கிளுடன் அந்த வேலை பார்க்கிறது சிரமம். அதுதான் கேட்டனான். ஓ......இப்பதான் ஞாபகம் வருது, நீ மோட்டார் சைக்கிள் வாங்க வைத்திருந்த காசைத்தான் உன்ர நண்பனுக்கு குடுத்ததாக அக்கா சொன்னவ. உண்மைதான் .....நானும் சுந்துவும் சிறுவயதில் இருந்தே அவ்வளவு பிரியமான நண்பர்கள். அவனளவு எனக்கு வேறு நண்பர்கள் கிடையாது.அப்படித்தான் அவனுக்கும். அவனது படிப்பை விட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பெரிதில்லை. (அப்போது கவிதா மூவருக்கும் பால்தேநீரும் பணியாரத் தட்டையும் கொண்டு வந்து வைத்து சீனி போடாத தேநீரை ஆச்சியின் அருகில் வைத்த விட்டுப் போகிறாள்). சரி...நீ முதல்ல அதை எடுத்து திருத்தி கொஞ்சநாள் ஓடிப்பார். பின்பு உனக்குப் பிடித்திருந்தால் நான் அக்காவிடம் கதைத்து விட்டு பிறகு விலையைப் பேசிக்கொள்ளலாம். அவன் கண்கள் மின்ன இப்பவே எடுக்கவா........ ....ம் பாரேன் அவற்ரை அவசரத்தை...... சரி போய் எடு. அவன் எழுந்து சென்று அந்த ஹோண்டா 200 மொடல் மோட்டார் சைக்கிளை செல்லமாய் வருடிவிட்டு மெதுவாக உருட்டிக்கொண்டு வந்து முற்றத்தில் நிறுத்தி விட்டு சாவியைப் போட்டு பட்டனை அமுக்கினால் அது இயங்கவில்லை. அதை உதைத்துப் பார்த்தும் ம்கூம்..... பின் அவன் அதன் பெட்டியைத் திறந்து பார்க்க அதற்குள் சாராயப்போத்தல்,மிக்ஸர் பைக்கட், ரெண்டு ஜட்டி, ஒரு வேட்டி துவாய் அவற்றின் அடியில் சில சாவிகள் குறடு,திருப்புளியுடன் சில தாள்காசுகள் சில்லறைகள் என்று இருக்கின்றன.அவன் ஆயுதங்களை தவிர்த்து ஏனையவற்றை எடுத்து அவளிடம் தருகிறான். அவளும் அவைகளை வாங்கிக் கொண்டு இன்னும் எந்தெந்தக் கடங்காரங்களின் வீட்டில் ஜட்டிகளும் வேட்டிகளும் கிடக்குதோ தெரியாது என்று சொல்லியபடி அவற்றை வாங்கிக் கொண்டு உள்ளே போகிறாள்........! 🦚 மயில் ஆடும்.............. 12.

யாழில் விமானப்படையின் கண்காட்சி

3 months 2 weeks ago
வானூர்திப்படையில் இணைய யாழில் 250 பேர் விண்ணப்பம் கண்காட்சி ஊடாக ஆட்சேர்ப்பு (ஆதவன்) சிறிலங்கா வானூர்திப் படையில் இணைந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளையோர் 250 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று அரச தலைவர் பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முற்றவெளியில் சிறிலங்கா வான்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கண்காட்சி இடம்பெற்றது. https://newuthayan.com/article/வானூர்திப்படையில்_இணைய_யாழில்_250_பேர்_விண்ணப்பம்

மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?

3 months 2 weeks ago
ஜெயமோகன் செய்த தவறை நானும் செய்திருக்கிறேன் - ஒரு கருத்தைக் களம் மாறி வெளிப்படுத்துவது; 'மஞ்ஞுமல் பாய்ஸ்' பேச வந்த நான் '96' ஐயும் பேசியது. இதனால் '96' ஐக் கொண்டாடியவர்களுக்கு நான் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். உப்பைத் தின்றுவிட்டால் தண்ணீர் குடிக்கக்கத்தானே வேண்டும் ! 'கற்பு' என்றெல்லாம் நான் பேசவேயில்லை. ஒரு காதல் சரி வரவில்லை என்றால் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு மறுகாதல் எனும் கருத்துடைய எனக்கு, 'கற்பு' மட்டுமல்லாமல் சென்ற 'காதலே' புனிதம் கிடையாது. அதனால்தான் '96' ன் பழைய காதலைக் கொண்டாடுவதைப் 'புனிதப் படுத்துதல்' என்றேன். சமூகமாய் வாழ சமூக விலங்காகிய மனித இனம் (அமைதியான வாழ்க்கைக்காக) சமரசம் செய்து கொண்ட பிறகு சில வரையறைக்குள்தான் இயங்க முடியும். தெருவில் இறங்கி மற்றவர்களுடன் பிரச்சினையின்றி நடக்க முடிவெடுத்த பிறகு எல்லைக்கோட்டை மதித்துதானே ஆக வேண்டும் ? பழைய காதலைத் தூக்கியெறிய முடியாவிட்டால், வேறு ஒரு மண வாழ்க்கை என்ற சமூகக் கட்டமைப்பில் சென்று நிற்பது நேர்மையில்லையே ! (புதிய வாழ்க்கையில் கணவனும் குழந்தைகளும் அருமையாக அமைந்ததாய் நாயகியே ஓரிடத்தில் சொன்னதாக நினைவு). பழைய காதலருடன் இரவில் ஊர் சுற்றுவதும், விடுதி அறையில் அருகருகில் குளிர் காய்வதும், அவன் சட்டையின் வாசத்தை சுவாசிப்பதும் அந்தக் காதலை (!!!) ரசிப்பது அல்லது புனிதப்படுத்துவது அன்றி வேறென்ன ? அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லையே, அங்குதான் புனிதம் இருக்கிறது என்பீர்களா ? மனித மனங்களில் விகாரங்கள் வெவ்வேறு வகைகளில் தோன்ற வாய்ப்பு உள்ளது. அவற்றை மனிதன் தனக்குள் வைத்து ரசித்துக் கொள்ள வேண்டும்; முடிந்தால் தவிர்க்க வேண்டும். அத்தனையும் காவியமாக முடியாது. நீங்கள் இதற்கு மேல் எவ்வளவு கேட்டாலும் '96' ஐப் பற்றி விவாதிக்க என்னிடம் வேறெதுவும் கிடையாது. Tailpiece : In a lighter vein or even seriously - அது என்ன 94, 95,97,98 இவற்றையெல்லாம் விட்டு 96 ? அது எனது பார்வையில் உள்ள விரசம் (perversion) அன்றி மற்றபடி தற்செயலான தேர்வுதான் என்பீர்களா? சரி, ஏற்றுக் கொள்கிறேன். 'lighter vein' என நான் அறிவிப்புப் பலகை வைத்ததால், இதனைப் பேசு பொருளாக்கும் எண்ணம் கண்டிப்பாக இல்லை. மற்றபடி உங்கள் சாட்டையைச் சுழற்றலாம்.

ஹெய்ட்டியில் சிறை மீது ஆயுதகும்பல் தாக்குதல் - 3000க்கும் அதிகமானகைதிகள் தப்பியோட்டம்

3 months 2 weeks ago
ஹெய்ட்டியின் தலைநகர் வன்முறை கும்பலின் பிடியில் - இராஜினாமாவை அறிவித்தார் சர்ச்சைக்குரிய பிரதமர் Published By: RAJEEBAN 12 MAR, 2024 | 10:52 AM 2021 இல் ஹெய்ட்டியின் ஜனாதிபதி படுகொலைசெய்யப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய பிரதமர் நாட்டின் பாதுகாப்பின்மையை காரணம் காட்டி கடந்த வருடம் தேர்தலை நடத்த மறுத்துள்ளார். ஹெய்ட்டி வறுமை மற்றும் குழுவன்முறைக்குள் மேலும் சிக்குப்பட்டுள்ளதால் சீற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். ----------------- கடந்த ஒருவாரத்திற்கு மேல் வன்முறையில் சிக்குண்டுள்ள ஹெய்ட்டியின் பிரதமர். தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஹெய்ட்டியில் வன்முறை கும்பல் அரசகட்டிடங்களை தாக்கிவருவதன் காரணமாக சமூக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் ஹெய்ட்டி வீழ்ச்சியடையும் நிலையில் காணப்படுகின்ற ஒரு சூழலில் பிரதமரின் ராஜினாமா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமரின் ஆலோசகர் இதனை உறுதி செய்துள்ளதுடன் புதியபிரதமர் பதவியேற்க்கும் வரை தற்போதைய ஜனாதிபதி பதவியில் நீடிப்பார் என தெரிவித்துள்ளார். நிலைமாற்றுக்கால ஜனாதிபதி பேரவை அறிவிக்கப்பட்டு இடைக்கால பிரதமர் குறித்த அறிவிப்பு வெளியானதும் ஹெய்ட்டி பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என கயானாவின் தலைவரும் கரிபீயன் சமூகம் மற்றும் பொதுவான சந்தைக்கான அமைப்பின் தலைவருமான இர்பான் அலி தெரிவித்துள்ளார். நாட்டில் தேர்தலை நடத்துவதற்காக நிலைமாற்றுக்கால பேரவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த கரீபியன் சமூகம் மற்றும் பொதுவான சந்தைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. அமைதியான அதிகார மாற்றத்திற்கான நிலைமாற்றுக்கால ஆட்சி ஏற்பாடு குறித்து நாங்கள் உறுதியாகயிருக்கின்றோம் என கரீபியன் அமைப்பு தெரிவித்துள்ளது. 2021 இல் ஹெய்ட்டியின் ஜனாதிபதி படுகொலைசெய்யப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய பிரதமர் நாட்டின் பாதுகாப்பின்மையை காரணம் காட்டி கடந்த வருடம் தேர்தலை நடத்த மறுத்துள்ளார். ஹெய்ட்டி வறுமை மற்றும் குழுவன்முறைக்குள் மேலும் சிக்குப்பட்டுள்ளதால் சீற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். ஹெய்டியின் பாதுகாப்பின் மீதான கட்டுப்பாட்டை தான் இழந்துள்ளதால் 1000 கென்யா பொலிஸ் உத்தியோகத்தர்களை ஹெய்ட்டிக்கு வரவழைப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக ஹெய்ட்டி பிரதமர் கென்யா சென்றிருந்த தருணத்தில் கடந்த வாரம் தலைநகரில் வன்முறைகள் வெடித்தன. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுத கும்பல் ஒன்று சட்ட அமுலாக்கல் மற்றும் அரச கட்டிடங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடியுள்ளனர். கடந்த வாரம் ஆயுத குழுக்கள் ஹெய்ட்டியின் மிகப்பெரிய சிறைமீது தாக்குதல் நடத்தி 3500 க்கும் அதிகமான கைதிகளை விடுதலை செய்ததை தொடர்ந்து அரசாங்கம் தலைநகரில் அவசரநிலையை பிரகடனம் செய்திருந்தது. சிறைச்சாலை மீதான தாக்குதலிற்கு உரிமை கோரிய வன்முறை கும்பல் ஒன்றின் தலைவர் ஹென்றி அரசாங்கத்தை பதவிகவிழ்ப்பதற்காகவே இந்த வன்முறை என தெரிவித்துள்ளார். ஏரியல் ஹென்றி பதவி விலகாவிட்டால் அவருக்கு சர்வதேச சமூகம் தொடர்ந்து ஆதரவு வழங்கினால் அவர்கள் எங்களை உள்நாட்டு யுத்தம் இனப்படுகொலையை நோக்கி கொண்டுசெல்வார்கள் வன்முறை கும்பலின் தலைவர் தெரிவித்துள்ளார். ஹெய்ட்டி தலைநகர் தற்போது பெருமளவிற்கு வன்முறை கும்பலின் பிடியில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஐநா ஏனைய பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளில் வன்முறை கும்பல்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஹென்றி வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில் சர்வதேச விமானநிலையத்தை முற்றுகையிட்டுள்ள வன்முறை கும்பல் பிரதமர் நாட்டிற்கு திரும்புவதை தடுத்துள்ளது. இந்த குழப்பநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த குழப்பநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.இதுவரை வன்முறைகள் காரணமாக 300000க்கும் அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். ஹெய்ட்டியில் வன்முறைகள் தீவிரமடைந்துள்ள அதேவேளை அரசியல் வன்முறையும் வரட்சியும் தீவிரமடைந்;துள்ளதால் சுமார் 5.5 மில்லியன் மக்களிற்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றது. https://www.virakesari.lk/article/178500

ஒரே பெயர், தோற்றம் மற்றும் குடும்ப பின்னணி… விமான நிலையத்தில் அனைவரையும் கிறுகிறுக்க வைத்த இருவர்

3 months 2 weeks ago
மார்க் கார்லண்ட் (58) உடன், மார்க் கார்லண்ட் (62) லண்டன் விமான நிலையத்தில் ஒரே முகத்தோற்றம் கொண்ட இருவர், ஒரே பெயருடன், ஒரே விமானத்தில் பயணிக்க வந்த சம்பவம் விமான நிலைய ஊழியர்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் 58 வயதான மார்க் கார்லண்ட் என்பவர் வசித்து வருகிறார். திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ள மார்க், தற்போது தனியாக வசித்து வருகிறார். தாய்லாந்து நாட்டிற்கு அடிக்கடி பயணிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதன் ஒரு பகுதியாக கடந்த 5ம் திகதி தாய்லாந்து செல்வதற்காக லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த விமான நிலைய ஊழியர்கள், அவர் ஏற்கனவே செக் இன் செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் விமான நிலையத்திற்கு உள்ளே சென்றவர் எவ்வாறு வெளியே இருக்கிறார் எனவும் குழம்பியுள்ளனர். அப்போது அதே விமானத்தில் மற்றொரு மார்க் கார்லண்ட் என்பவர் பயணிப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை வெளியே வருமாறு பணியாளர்கள் அழைத்துள்ளனர். வெளியே வந்த மார்க் கார்லாண்டை கண்ட விமான நிலைய ஊழியர்கள் மற்றும் மார்க் கார்லண்ட் என அனைவருமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். இருவரும் பார்ப்பதற்கு ஒரே போல் இருந்ததோடு, இருவரும் தங்களது தலையை மொட்டை அடித்திருந்ததும் தெரிய வந்தது. விசாரணை நடத்திய போது, ஏற்கனவே விமான நிலையத்திற்கு உள்ளே சென்ற மார்க் கார்லண்ட் 62 வயதானவர் என்ற வித்தியாசம் மட்டும் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட போது, இருவருமே லண்டனில் வெவ்வேறு பகுதிகளில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் வசித்து வந்தது தெரிய வந்தது. பல ஆண்டுகளாகவே இருவரும் தாய்லாந்துக்கு அடிக்கடி பயணித்து வந்ததும் தெரிய வந்தது. இதைவிட ஆச்சரியமாக, இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு சம்பவம், இருவருமே திருமணம் ஆகி நான்கு குழந்தைகளுக்கு தந்தையானதும், தற்போது மனைவியை விட்டு தனியாக வசித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரது பாஸ்போர்ட்டுகளையும் சரிபார்த்த அதிகாரிகள் இருவரையும் விமானத்தில் பயணிக்க அனுமதி அளித்தனர். இருவரும் ஒரே விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து தாய்லாந்துக்கு பயணம் செய்தனர். பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த போதும், இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதில்லை எனவும், முதல் முறையாக இந்த குழப்பம் நேர்ந்து தாங்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது ஊழியர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. https://thinakkural.lk/article/295313

96 ஆவது ஒஸ்கர் விருது விழா - 2024

3 months 2 weeks ago
Oscars 2024: “இப்படி ஒரு படத்தை நான் எடுத்திருக்கக்கூடாது!” “ரஷ்யர்கள், எனது சக உக்ரேனியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று வருவதை நிறுத்த வேண்டும்!” – 96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. ஜிம்மி கிம்மல் 4வது முறையாக இவ்விருது விழாவைத் தொகுத்து வழங்கினார். இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கிலியன் மர்ஃபி நடித்துள்ள ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் விருதினை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘புவர் திங்ஸ்’ திரைப்படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது. இதில் உக்ரைன் போரை மையப்படுத்தி எடுத்த ’20 டேஸ் இன் மரியுபோல்’ (20 Days In Mariupol) சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது. இப்படத்திற்கான விருதைப் பெற்றுக்கொண்ட பின் பேசிய படத்தின் இயக்குநர் மிஸ்டிஸ்லாவ் செர்னோவ், “உக்ரைனுக்குக் கிடைத்த முதல் ஆஸ்கர் விருது என்று சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி ஒரு படத்தை எடுக்க எனக்கு விருப்பமில்லை. அதாவது போரை மையமாக வைத்துப் படத்தை எடுக்கக்கூடிய ஒரு சூழல் வந்திருக்கக்கூடாது. இந்த விருதை ரஷ்யாவுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்குப் பதிலாக ரஷ்யர்கள், எனது சக உக்ரேனியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று வருவதை நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி பணயக்கைதிகள், தங்கள் நிலங்களைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள், தற்போது சிறையில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். https://thinakkural.lk/article/295297

தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?

3 months 2 weeks ago
6 மார்ச் இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா எண்ணெய் பறிமுதல் 4 போ் கைது https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Mar/05/இலங்கைக்கு-கடத்தவிருந்த-கஞ்சா-எண்ணெய்-பறிமுதல்-4-போ்-கைது 11 மார்ச் இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த கஞ்சா கைப்பற்றல்! https://king24x7.com/amp/local-news-king/seizure-of-cannabis-that-tried-to-smuggle-to-sri-lanka-330547

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து என பல நாடுகளில் தமிழர்களிடையே இது போன்ற பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. அப்போதெல்லாம் இலங்கைப் பத்திரிகையில் கொட்டை எழுத்தில் செய்தி வரவில்லையே. இவ்வாறான சம்பவங்கள் இனம், பால், வயது வேறுபாறுகளை கடந்தவை பெரும்பாலான சாதாரண மன நிலை உள்ள மக்கள் இதனைப் புரிந்து கொள்வர். இனவாதிகள் அவர்கள் எந்த இனத்தில் இருந்தாலும் தமக்குள் உள்ள இனவாத வக்கிரத்துடன் எல்லாவற்றையும் இனவாதக் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பர்.

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

3 months 2 weeks ago
இப்பொழுது எல்லோரும் படிக்கின்றார்கள் மக்களை உசுப்பேற்றுவதற்கு இப்படியான கருத்துக்களை அரசியல் வாதிகள் கூறுகின்றார்கள். சப்பிதுப்பி படிப்பது படிப்பல்ல‌

10000 பெண்களுடன் மட்டக்களப்பில் கொண்டாடப்பட்ட மகளிர் தின நிகழ்வு

3 months 2 weeks ago
மட்டக்களப்பு - கல்லடி பூங்கா மைதானத்தில் 10,000 பெண்களுடன் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று(11.203.2024) நடைப்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இணை நிறுவனரும் இயக்குனருமான சுசித்ரா எல்ல அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார். விருது வழங்கும் நிகழ்வு இதன்போது கோவிட் காலப்பகுதியில் கோவிட் தடுப்பூசியை கண்டுபிடித்து, 600 மில்லியன் கோவிட் தடுப்பூசிகளை தயாரித்து மக்கள் உயிரை காத்த உன்னத பெண்ணான சுசித்ரா எல்ல ஆளுநரால் கௌரவிக்கபட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு கல்வி துறையில் சாதித்த பெண்கள், Rural development society, பெண்கள் அமைப்புகள் போன்ற பல சாதனைகளை நிலைநாட்டிய பெண்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், அமைச்சர் வியாழேந்திரனினால் சிறப்புரை ஆற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், செய்யட் அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பீ.எஸ். ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல். பீ. மதநாயக்க, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் உட்பட அரச உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://tamilwin.com/article/womens-day-event-with-10000-women-batticaloa-1710182957

தரம் குறைந்த புற்று நோய் மருந்து இறக்குமதி! பல பில்லியன் மோசடி

3 months 2 weeks ago
தரம் குறைந்த புற்று நோய் மருந்து இறக்குமதியின் மூலம் சுமார் நான்கு பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மோசடி மார்பகப் புற்று நோய்க்காக பயன்படுத்தப்படும் மருந்து வகையே இவ்வாறு மோசடியாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளுக்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் தேசிய ஔடதங்கள் அதிகாரசபையின் வழமையான நடைமுறைகளக்கு புறம்பான வகையில் மருந்துப் பொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு மார்பகப் புற்று நோய்கக்காக பயன்படுத்தப்படும் மருந்து வகைக்கு நிகரான எனினும் தரம் குறைந்த மருந்து வகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. அப்போதைய சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரட்ன, அப்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அப்போதைய தலைவர் லால் ஜயகொடி உள்ளிட்ட சிலருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/cancer-pills-fraud-dr-rajitha-1710205394

வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.

3 months 2 weeks ago
யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வாள்வெட்டு சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வாள்வெட்டு தாக்குதல் உயிரிழந்த இளைஞன் காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அத்துடன் முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். https://tamilwin.com/article/one-person-was-killed-in-a-sword-attack-in-jaffna-1710192255

மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு

3 months 2 weeks ago
மரதன் ஓடிய மாணவன் உயிரிழப்பு – கல்வி திணைக்களத்தின் அறிவிப்பு அம்பாறை திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக இடம்பெற்ற மரதன் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இன்றைய தினம் அதிகாரிகளை அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார். பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக நேற்று காலை இடம்பெற்ற மரதன் போட்டியில் பங்கேற்றிருந்த குறித்த மாணவன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்தார். வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தபோக்கு காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியை மறித்து நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக திருக்கோவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பெருந்திரளானோர் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் வழியாக வைத்தியசாலைக்குள் பிரவேசித்தனர். எவ்வாறாயினும், சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/295269
Checked
Wed, 06/26/2024 - 08:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed