புதிய பதிவுகள்2

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
இங்கு தரவுகள்தான் உண்மையானது என்று நிறுவுங்கள் அதை விட்டு சுமத்திரன் போல் அங்கு போய் படி இங்கு போய் இத்தனையாம் பக்கம் படி என்று உதார் விடகூடாது Canadian tamil =என் போல் இங்குள்ள யாழ் வாசகர் படிப்பதில்லை யாழில் உங்களின் உண்மையான கருத்துக்கள் வரவேற்க படுகின்றன ......😀

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
வெளிநாடுகளில் உள்நாட்டில் நாங்கள் செய்ததெல்லாம் எந்த பிரிவுக்குள் வரும்? 👇 Father sentenced to five years in prison for 'attempted honour killing' In sentencing a Scarborough man to five years in prison for speeding his minivan into his teenage daughter, her boyfriend and his son-in-law, a Superior Court judge on Tuesday decried the “extremely reprehensible” mindset behind so-called honour crimes. Selvanayagam Selladurai, 47, pleaded guilty last month to three counts of aggravated assault after deliberately ramming his vehicle into the trio at a local park three years ago — an act motivated by the Tamil father’s disapproval of his daughter’s boyfriend, who was of a lower Sri Lankan caste. https://nationalpost.com/posted-toronto/father-sentenced-to-five-years-in-prison-for-attempted-honour-killing/wcm/57140608-98ef-448d-b42c-59813284903b/amp/ just an example 😁

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
ஓம் ஒரே மாதிரியான ஆட்கள் தான். -------------- Satan சொல்லியுள்ளார் இலங்கை பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் எழுதியிருக்கும் என்று ஆனால் இப்போதும் அங்கே ரொப் செய்தி தானாம்.

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
சும்மா சேட்டை விட வேணாம் உதாரணம் காட்டுங்க அதுக்காக வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் வேறு வழி காட்டா வேணாம் .

மயிலம்மா.

3 months 2 weeks ago
தொடருங்கள் சுவி அண்ணா. ஒரே மூச்சில் மயிலிறகு 11 வரை வாசித்து விட்டேன். மயிலிறகு 11 ல் வந்து 5 ஆவது கியரை (Gear)போட்டுள்ளீர்கள். 😂

கனடா விசிட் விசா

3 months 2 weeks ago
இந்தப் பெண் பிள்ளை ஒலிபரப்பாளராக(செய்தி வாசிப்பாளராக) இருக்க வேண்டும்..இவரது தகவல்கள் எப்போதும் இப்படித் தான் ஏற்ற இறங்கம் நிறைந்ததாகவே இருக்கும்.இதை நான் குறையாக சொல்ல வர இல்லை.அவரது இயற்கையான பாணியே இது தான்.

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

3 months 2 weeks ago
சூழல் பிரதான ஒரு காரணம். அன்று நான் பிறந்து வளர்ந்த ஊரிலோ, என் குடும்பத்திலோ கல்வி என்பது என்றும் ஒரு பிரதான விடயமே இல்லை. இன்றும் கூட அப்படித்தான். பணம் வேறு சில வகைகளில் இலகுவாக சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதே அங்கே இருக்கும் பொதுவான மனநிலை. படிப்பு என்பது மிக நீண்ட காலம் எடுக்கும் ஒரு முயற்சி, அதுவும் பெரும் பயனைக் கொடுக்காது என்றே அவர்களில் பலர் இன்றும் சொல்கின்றனர். இந்த சூழல் அமையும் போது, படிப்பின் மீதிருக்கும் ஆர்வம் அதுவாகவே வற்றிவிடும். அமையும் சந்தர்ப்பங்கள் இன்னொரு பிரதான காரணம். ஆசிரியர்களின் பங்கு பெரியது. எனக்கு உயர்தரத்தில் பாடசாலையில் கிடைத்த நான்கு ஆசிரியர்களுமே நிகரில்லாதாவர்கள் - கணேசலிங்கம் மாஸ்டர், சண்முகசுந்தரம் மாஸ்டர், சூரியநாதன் மாஸ்டர் மற்றும் நடராசா மாஸ்டர். இலங்கையில் எந்த ஒரு இடத்திலும், எந்த ஒரு வகுப்பிற்கும் இப்படி ஒரு ஆசிரியர் குழாம் கிடைத்திருக்கவே மாட்டாது. அவர்களே எங்களை உருவாக்கினர். ஆனால், நுவரெலியாவிலோ அல்லது புத்தளத்தில் கூட அந்நாட்களில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு சரியான ஆசிரியர்கள் அமையவில்லை. யாழ் நகரில் அன்றிருந்த தனியார் கல்வி நிலையங்களும், அங்கு கற்பித்த பெயர் பெற்ற ஆசிரியர்களும் யாழ் மாவட்ட மாணாக்கருக்கு பெரும் கொடையே. மாணவர்களுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டி. பெரிய பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே யார் முதலில் வருவது, யார் 100 எடுப்பது, யார் தேசிய மட்டத்தில் பெயர் எடுப்பது என்று போட்டிகள் இருந்தன. இது யாழ், கொழும்பு, குருணாகல், கண்டி போன்ற மாவட்டங்களிலேயே அன்று இருந்தது. பெரும்பாலும் மற்ற மாவட்டங்களில் இந்தப் போட்டி இருக்கவில்லை. இதே அனுபவங்களை இன்றும் கூட நாங்கள் பல இடங்களில் பொருத்திப் பார்க்கலாம் என்றே நான் நினைக்கின்றேன்.

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

3 months 2 weeks ago
அது எவை என்று விளக்கமாக சொல்ல முடியுமா ? இந்தமாதம் தான் புதிய ஐடியில் வந்து இருகிரியல் வந்ததுக்கு நன்றி இனி வரும்போது புதிய ip யில் வாருங்க . March 1

மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு

3 months 2 weeks ago
அனுதாபங்கள். எனது ஊர் காலங்களில் ஓட்டப்போட்டியாளர்களுக்கு குளுக்கோஸ் மாவை கரண்டியில் போட்டு தேசிக்காய் சொட்டுக்களை பிழிந்து கொடுப்பார்கள். மரணங்கள் எதுவும் நடந்ததில்லை. பெரிய விஞ்ஞான விளக்கங்களும் நடந்ததில்லை.

கனடா விசிட் விசா

3 months 2 weeks ago
பதிவிட்ட வைத்தியர், தன் தொழிலிலும் இதே அறிவலட்சியத்தோடு இருக்க மாட்டார் என நம்புவோம்😂. கீழே கனேடிய குடிவரவு தளத்தில் இருப்பதன் படி 2025 பெப்ரவரி வரை கனடாவை விட்டு வெளியேறாமலே வேலை அனுமதிக்கு, தொழில் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்றிருக்கிறது: Ottawa, February 28, 2023—Foreign nationals who are in Canada as visitors and who receive a valid job offer will continue to be able to apply for and receive a work permit without having to leave the country. Visitors applying under this public policy who held a work permit within the last 12 months will also continue to be able to request interim work authorization to begin working for their new employer more quickly. Set to expire today, this COVID-era temporary public policy has been extended by 2 years, until February 28, 2025. https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/news/notices/visit-to-work.html பி.கு: அறிவிப்பாளினியின் பேச்சு ஏன் இப்படி சம்பந்தமில்லாத ஏற்ற இறக்கங்களோடு இருக்கிறது? இந்திய தொலைக்காட்சிகளைப் பின்பற்றுகிறார்களா?

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

3 months 2 weeks ago
நான் சொல்ல வந்தது ஒரு தொகுதி மக்களை கல்வியில் சிறந்தவர்கள் என்றும், இன்னொரு தொகுதி மக்களை கல்வியில் சிறந்தவர்கள் அல்ல என்றும் இலகுவாக சொல்லி விட முடியாது என்பதே. பல புறக் காராணங்களே இந்த வேறுபாட்டை உண்டாக்குகின்றன.

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

3 months 2 weeks ago
ரசோதரன் சொல்வதும், வியாழேந்திரன் கூறுவதும் வேறு வேறான விடயங்கள் என நினைக்கிறேன். பரீட்சைப் பெறு பேறுகள் இலங்கையில் தவிர்க்க முடியாத கல்வி அளவீட்டுக் கருவிகள், எனவே அவை இலங்கையில் கல்வி பற்றிப் பேசப்படும் இடங்களில் பேசப்படுவது முக்கியம். ஆனால், கல்வியை (அது முறை சார் கல்வியோ, முறைசாரா கல்வியோ) நோக்கிய மனப்பாங்கு (attitude) என்பது இன்னொரு விடயம். இந்த மனப்பாங்கு, கலாச்சாரத்தின் பால் பட்ட ஒன்று. உதாரணமாக, முறைசார் கல்விக்கு அமெரிக்காவில் தென்னாசியர்களும், கிழக்காசியர்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை, கறுப்பின மக்கள், ஸ்பானியர்கள் கொடுப்பது குறைவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வெள்ளையின மக்கள், பெரும்பாலும் பண வருவாய் நோக்கியவாறு கல்வியைப் பார்க்கின்றனர் - இதுவும் "learning for the sake of learning" என்ற ஆசிய மனப்பாங்கில் இருந்து வித்தியாசமானது. தற்போது, எங்கள் தென்னாசிய குடியேறிகள் மத்தியிலும் "பணம் சம்பாதிக்க மட்டும் கல்வி" என்ற போக்கு வளர்வதைக் காண்கிறேன், இது நல்லதா கூடாதா என்று முடிவு செய்ய இயலாமல் இருக்கிறேன் இது வரை. இலங்கையைப் பொறுத்த வரையில், தமிழர்களின் முறை சார் கல்வி நோக்கிய மனப்பாங்கு சிங்களவர்களை விட வித்தியாசம் தான். எப்படியாவது மேலே வந்து விட வேண்டும் என்று யோசிக்கும், ஏற்கனவே அடக்கப் பட்ட ஒரு இனம் என்ற வகையில், முறை சார் கல்வி ஈழத்தமிழர்களுக்கு தடைகள் குறைந்த ஒரு பாதை என நினைக்கிறேன். அதைப் பயன்படுத்தி முன்னேற வேண்டுமென வியாழேந்திரன் சொல்வது முற்றிலும் சரியான ஒரு கருத்து!

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

3 months 2 weeks ago
கல்வி என்பது உனக்கானதல்ல உனக்கு அது வராது என்று பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பெரும்பான்மையான மக்களை ஒதுக்கி அவர்களை தாழ்ததிய நிலையில் இருந்து இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களின் னுகூலங்களால் இன்று சற்றே முன்னேறிவருகின்றனர். அது போல் முயற்சியுடன் கல்வி கற்கும் போது எவராலும் முன்னேறிய நிலையை அடைய முடியும். இலங்கையை பொறுத்தவரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களிடன் நல்லுறவை பேணி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வேண்டிய கல்வியை பெற்றுக் கொண்டதன் மூலம் தமது கல்வித்தரத்தை சற்று உயர்ததிக்கொண்டனர். அதை வைத்த தாம் மற்றய இனத்தை விட கல்வியில் சிறந்தவர்களாக தமக்குள் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அது உண்மை அல்ல என்பதை கடந்த 70 ஆண்டுகளில் கண்டோம்.
Checked
Wed, 06/26/2024 - 08:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed