புதிய பதிவுகள்2

பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர தமிழ்நாடு அரசு முடிவு - புதிய கல்வி கொள்கைக்கு திமுக எதிர்ப்பு என்ன ஆகும்?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 17 மார்ச் 2024, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை 2024-2025 கல்வியாண்டுக்குள் தொடங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்து மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் திமுக தலைமையிலான அரசு, அதன் அடிப்படையில் செயல்படும் பி.எம்.ஸ்ரீ மாதிரிப் பள்ளிகள் திட்டத்தில் இணைய விரும்புவது ஏன் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழ்நாடு அரசின் முடிவிற்கு மத்திய கல்வி அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் புதிய கல்விக்கொள்கை 2020ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என மத்திய அரசு கூறுகிறது. இதுதொடர்பாக, மத்திய கல்வித்துறை அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 16) தன் ட்விட்டர் பக்கத்தில், “பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக முக்கிய முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது புதிய கல்விக் கொள்கை-2020இன் படி அமைந்த முன்மாதிரி பள்ளிகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2024-25 கல்வியாண்டுக்குள் தமிழ்நாடு அரசு கையெழுத்திடும் என்றும் தமிழ்நாடு அரசுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கும் இடையேயான இந்த ஒப்பந்தம், வலுவான மத்திய-மாநில உறவுகளைக் குறிப்பதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காக இதைத் தாங்கள் மனமார வரவேற்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மார்ச் 15 அன்று எழுதிய கடிதமும் அப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், “தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வமாக உள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்படும். அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அடுத்த கல்வியாண்டுக்குள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று மற்றும் நான்காம் நிதி தவணைகளை வழங்குமாறும் மத்திய அரசிடம் அதில் கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தேசிய கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் போன்றவற்றை வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES திமுக எதிர்ப்பு மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அப்போது, புதிய கல்விக் கொள்கைக்கு திமுக உட்பட தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கை வேத கலாசாரத்தை திணிப்பதாகவும் சமூக நீதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுகிறது, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்தப் பார்க்கிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விமர்சனம் தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு தயாரித்து வருகிறது. அதை ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு உருவாக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் கல்வியாளர்களைச் சந்தித்திருக்கிறோம். ஆசிரியர்கள், மாணவர்களின் கருத்துகளை அறிந்துதான் மாநில கல்விக் கொள்கையைத் தயாரித்திருக்கிறோம். அதைச் சார்ந்துதான் எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்படும்" என்றார். அதோடு, மத்திய கல்வி அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு மூன்றாவது மற்றும் நான்காவது தவணையான ரூ. 1,200 கோடியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திஇருப்பதாகவும், அப்போது பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என மத்திய அரசு கூறியதாகவும் தெரிவித்த அன்பில் மகேஷ், "முதலமைச்சரிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினோம்" எனக் கூறினார். அவரது கூற்றின்படி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதில் எவற்றையெல்லாம் ஏற்கலாம், ஏற்க வேண்டாம் என்பது குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்படும். "அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் நமக்கு ஏற்காத விஷயங்களை எடுத்து சொல்வோம்," என்றார். மேலும், குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வந்து அவர்களுக்கு மன உளைச்சலைத் தரும் புதிய கல்விக் கொள்கையை திமுக எப்போதும் எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார். பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது என்ன? பட மூலாதாரம்,ANBIL MAHESH POYYAMOZHI படக்குறிப்பு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பி.எம். ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள். இந்தியா முழுவதிலும் 14,500 பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இப்பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றி, அப்பள்ளிகள் அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகளை வழிநடத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பள்ளிகள் இருக்கும் என புதிய கல்விக் கொள்கை-2020இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட மத்திய/மாநில/யூனியன் அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படும். உயர்தர கல்வி, பாதுகாப்பான சூழல், பரவலான கற்றல் அனுபவங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பள்ளிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பள்ளிகளாக உருவாக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பயணடைவார்கள் என, 2022ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரை ஒடிசா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் கையெழுத்திடவில்லை என, பிடிஐ செய்தி முகமையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் என்ன பிரச்னை? படக்குறிப்பு, பிரின்ஸ் கஜேந்திரபாபு இப்பள்ளிகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார். பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் என்ன பிரச்னை என்ற கேள்விக்கு, "எல்லோருக்கும் சமமான கற்றல் வாய்ப்பைத்தான் கொடுக்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் சமத்துவக் கோட்பாட்டைத்தான் பேசுகிறது," என்று பதிலளித்தார். "பிஎம் ஸ்ரீ பள்ளிகள் மட்டும்தான் சிறந்த பள்ளிகளாக இருக்க வேண்டுமா? சிறந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அங்கு மட்டும்தான் இருப்பார்களா? இந்தக் குறிப்பிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் அங்கிருக்கும் அனைத்து வசதிகளையும் அனுபவிப்பார்கள் என்று சொன்னால், மற்ற பள்ளிகளில் இத்தகைய வசதிகள் வேண்டாமா?" "ஒரு சிலருக்கு மட்டும் சிறந்த கல்வி வாய்ப்பைக் கொடுப்பேன் என்று சொன்னால், அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையதா?" என பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வியெழுப்புகிறார். ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளதா? பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கான இணையதளத்தில், அப்பள்ளிகளுக்கென நிர்வாக அமைப்பை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எந்தெந்த பள்ளிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்பதை மாநில அரசு அடையாளம் கண்டு கூற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில படிநிலைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. "ஏற்கெனவே தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த மாதிரிப் பள்ளிகள் 2 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன," என்றார் பிரின்ஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES அதற்கான அமைப்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதன் உறுப்பினர் செயலாளராக உள்ளதாகவும் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார். இந்நிலையில், இப்போது கடைசியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட உள்ளதாக அவர் விமர்சிக்கிறார். "அடுத்த கல்வியாண்டுக்குள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என அரசின் தலைமைச் செயலாளர் கூறுவதை எப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்?" என அவர் கேள்வி எழுப்புகிறார். முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக்கு தான் இத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. அப்படியிருக்கையில், "அமைச்சரவை முடிவு எடுக்காத ஒரு விஷயம் குறித்து தலைமைச் செயலாளர் எப்படி முடிவு எடுத்தார்? இதுகுறித்து முதலமைச்சர் விளக்கம் கூற வேண்டும்" என வலியுறுத்துகிறார். நிதியுதவி அளிக்காமல் நெருக்கடி கொடுக்கின்றனர் என்பது நியாயமான அணுகுமுறை அல்ல என்றும் அவர் கூறுகிறார். "கருணாநிதி சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தார். இப்போது திமுக அரசு கொண்டு வரும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் அரசமைப்பு சட்டத்திற்கு மட்டுமல்ல, கருணாநிதியின் சமச்சீர் கோட்பாட்டுக்கும் எதிரானது," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. தமிழ்நாட்டுக்கென மாநில கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் குழு ஒன்றை 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமைத்தது. இதிலும் தமிழ்நாடு அரசு மீது சர்ச்சை எழுந்தது. தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன் மே, 2023இல் குற்றச்சாட்டு முன்வைத்தார். முதலமைச்சரின் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். எனினும் அக்குற்றச்சாட்டுகளை அந்த நேரத்தில் உதயச்சந்திரன் மறுத்திருந்தார். 'எப்போதும் எதிர்ப்போம்' பட மூலாதாரம்,GETTY IMAGES இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் சல்மா கூறுகையில், ”ஆய்வு செய்து எது தேவையோ அதை மட்டும் செயல்படுத்துவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார். குலக்கல்வியை ஊக்குவிப்பதாக புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சர் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அனைவரும் சமம், எல்லோரும் படிக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதி. அதற்காகத்தான் திமுக குரல் கொடுத்து வருகிறது. அதனால் இதில் சந்தேகங்களுக்கு இடமில்லை,” எனத் தெரிவித்தார். மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு எல்லா வகையிலும் நெருக்கடி அளிப்பதாகவும் நிதியில்தான் முதலில் கை வைப்பதாகவும் அவர் கூறினார். 'திமுக அரசியல் செய்கிறது' திமுக எல்லா விவகாரங்களிலும் இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக பாஜக விமர்சித்துள்ளது. பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "தலைமைச் செயலாளரின் கடிதத்தில், இத்திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் இப்படிச் சொல்கிறார். அப்படியென்றால் திமுக அரசு இதை வைத்து அரசியல் செய்கிறது. இப்படித்தான் நீட் தேர்வு உள்ளிட்ட எல்லா விவகாரங்களிலும் திமுக இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் தொடக்கம் வேண்டும் என்பதால்தான் சில பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளனர்" என்றார். https://www.bbc.com/tamil/articles/c720lexrg49o

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே ஆண் : கைகள் தானாய் கோர்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்தாய் இன்பம் இன்பம் சிங்கார லீலா ஆண் : பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே பெண் : பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு ஆண் : புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே பெண் : உன்னை சேர்ந்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை சொல்லு சொல்லு சிங்கார வேலா பெண் : தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே நூல் இடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்கார தேனீ பெண் : தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திட வா .......! --- இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்---

செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்

3 months 2 weeks ago
இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும் இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை தாக்கியுள்ளோம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தகவல் Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 12:40 PM இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும் இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை இலக்குவைத்துள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும் இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச வர்த்தகத்தின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமாக மாறாலாம். செங்கடலில் மேற்கொண்டுவரும் தாக்குதலிற்கு அப்பால் இந்து சமுத்திரத்திலும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர் என வீடியோ செய்தியொன்றில்தெரிவித்துள்ள அதன் பேச்சாளர் மூன்று இஸ்ரேலிய அமெரிக்க கப்பல்களை இலக்குவைத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்து சமுத்திர தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை இந்த தகவல் உண்மையானதாக காணப்படும் பட்சத்தில் சர்வதேச வர்த்தகம் இதன் காரணமாக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை தொடர்ந்து கப்பல்கட்டணங்கள் அதிகரித்துள்ளன,சில கப்பல் நிறுவனங்கள் தங்கள் பாதைகளை மாற்றியுள்ளன.இதன் காரணமாக கடற்பயண நேரம் அதிகரித்துள்ளது. ஹெளத்திகளின் தாக்குதல்கள் காரணமாக உலகின் மிகவும் மும்முரமான கடற்பாதை மிகமோசமாக பாதிக்கப்படலாம் என்ற கரிசனைகள் எழுந்துள்ளன. எனினும் செங்கடல் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து சந்தைகளில் அச்சநிலை குறைவடைந்துள்ளதுடன் தாமதங்கள் குறித்த அச்சங்களும் நீங்கியுள்ளன. எனினும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் இந்து சமுத்திர பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டமை உண்மை என்றால் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம், கப்பல்களை பாதுகாப்பதற்காக அந்த பகுதிகடற்படையினருக்கு உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள்கள் வெளியாகலாம். https://www.virakesari.lk/article/178932

தோழியை மணமுடித்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

3 months 2 weeks ago
உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம் - தனது நீண்டகால தோழியை மணமுடித்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 01:02 PM அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்ச பெனிவொங் தனது நீண்டகாலதோழி சோபி அல்லோச்சசுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் இந்த ஒருபால் இனத்தவர்கள் திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உட்பட தொழில்கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் இது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ள பெனிவொங் இந்த விசேடமான நாளை எங்களின் பல நண்பர்கள் குடும்பத்தவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தையும் பெனிவொங் வெளியிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் 2007 இல் தனது வாழ்க்கை துணையை சந்தித்தார். இவர்களிற்கு இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். எனினும் இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விடயங்களை மிகவும் இரகசியமாக பேணிவருகின்றனர். https://www.virakesari.lk/article/178934

வல்வெட்டித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகத்துக்கு சீல்!

3 months 2 weeks ago
17 MAR, 2024 | 04:14 PM யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தியமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த பொது சுகாதார பரிசோதகர், வெதுப்பகத்திற்கு சீல் வைக்க கட்டளையிடக் கோரி விண்ணப்பம் செய்துள்ளார் . விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிமன்றம் வெதுப்பகத்தில் திருத்த வேலைகளை முடித்து , சுகாதார பரிசோதகர் அதனை உறுதிப்படுத்தும் வரையில் வெதுப்பகத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178955

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

3 months 2 weeks ago
17 MAR, 2024 | 03:58 PM காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்த்தர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டையில் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வழக்கம் போல் மீன் பிடி தொழிலுக்கு சென்றவர் குளத்தில் மீன் பிடிப்பதற்காக கட்டு வலையினை கட்டிவிட்டு அங்கிருந்த கட்டிலில் உறங்கி கொண்டிருந்த வேளை காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உறிவினர்கள் தெரிவித்துள்ளதுடன் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178954

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
தேர்தல் பத்திரம்: லாட்டரி உரிமையாளர் மார்ட்டினிடம் ரூ.509 கோடி பெற்ற திமுக - என்ன சொல்கிறது? 19 நிமிடங்களுக்கு முன்னர் தேர்தல் பத்திரம் தொடர்பான மேலும் அதிக விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன, எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றன என்ற தகவல்கள் தெரியவந்துள்ளன. பாஜக சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி, அந்தக் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6,987 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மற்ற கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு? தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியிட்டிருந்த நிலையில், இன்று மேலும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 12, 2019-ல் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை அடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நிதி தொடர்பான விவரங்களை சீலிட்ட உறையில் வழங்கின. அவை உறை திறக்கப்படாமலே உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. மார்ச் 15ஆம் தேதி தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து, நீதிமன்ற பதிவுத்துறை அந்த ஆவணங்கள் மற்றும் அதன் டிஜிட்டல் பதிவுகளை எங்களிடம் வழங்கியது. அந்த ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன’’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய தரவுகளில் ஒரு கட்சிக்கு எந்த ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து எந்தத் தேதியில் தேர்தல் பத்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES பாஜக பெற்ற தொகை எவ்வளவு? பாஜக சமர்ப்பித்துள்ள ஆவணங்களின்படி, அந்தக் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6,987 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது மார்ச் 3, 2017 முதல் ஜூலை 10, 2023 வரை பெறப்பட்ட தொகையாகும். 2017 - 18 நிதியாண்டில் ரூ.210 கோடி நிதி பெற்றுள்ள பாஜக, 2023-24 நிதியாண்டில் ரூ. 421 கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ளது. இது நான்கே மாதங்களில் பெறப்பட்ட தொகை என்பது கவனிக்கத்தக்கது. அதிகபட்சமாக 2019-2020 நிதியாண்டில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு அதிகமான தொகையை பாஜக பெற்றுள்ளது. எனினும், யாரிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றோம் என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்தில் அளித்த ஆவணத்தில் பாஜக நேரடியாக குறிப்பிடவில்லை. காங்கிரஸ் பெற்ற தொகை எவ்வளவு? பட மூலாதாரம்,GETTY IMAGES காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரம் மூலமாக ரூ. 1,334 கோடி நிதி பெற்றுள்ளது. இது மார்ச் 13, 2018 முதல் செப்டம்பர் 30,2023 வரை பெறப்பட்ட தொகை. அதிகபட்சமாக 2018 - 2019 நிதியாண்டில் ரூ.383 கோடி காங்கிரஸ் நிதி பெற்றுள்ளது. அதன் பிறகு தேர்தல் பத்திரம் மூலமாக காங்கிரஸுக்கு வந்த நன்கொடை கணிசமாக சரிந்துள்ளது. யாரிடம் எவ்வளவு நிதி பெற்றோம் என்ற விவரம் காங்கிரஸ் அளித்துள்ள ஆவணத்தில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. திமுக எவ்வளவு நிதி பெற்றது? பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக தேர்தல் பத்திரம் மூலமாக ரூ. 656.5 கோடி பெற்றுள்ளது. இதில் பெருந்தொகையை லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான ஃப்யூச்சர் கேமிங் நிறுவனமே வழங்கியுள்ளது. 2019 முதல் நவம்பர் 14, 2023 வரை பல்வேறு கட்டங்களாக இந்த நிறுவனம் ரூ.509 கோடியை திமுகவிற்கு வழங்கி உள்ளது. உச்சபட்சமாக 2021 - 2022 நிதியாண்டில் ரூ. 249 கோடியை இந்த நிறுவனம் வழங்கி உள்ளது. அதிமுக எவ்வளவு நிதி பெற்றது? தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6.05 கோடி நிதி பெற்றுள்ளது. இது ஏப்ரல் 2, 2019 முதல் நவம்பர் 10, 2023 வரை பெறப்பட்ட தொகை. இதில் ரூ.5 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகமே வழங்கியுள்ளது. திமுக மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான ப்யூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து ரூ.509 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதற்காக, திமுக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி, மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது” என தெரிவித்துள்ளார். ஃப்யூச்சர் கேமிங் நிறுவனத்திடம் நிதி பெற்றது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என போராடியது திமுக. அதற்கென வலுவான சட்டத்திற்காக சட்டப் போராட்டை முன்னெடுத்ததும் திமுக. ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்துபவர்கள் ஆளுநரை சென்று பார்த்தனர். அதற்கு அதிமுக சிறிய கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை. திமுக மீது அதிமுக வீண் குற்றச்சாட்டு சுமத்துகிறது” என்றார். மேலும், அந்நிறுவனத்திடமிருந்து நிதி வாங்கியதை திமுக மறுக்கவில்லை என்றும் எனினும் அந்நிறுவனம் ஆதாயம் பெறும் வகையிலான செயலில் திமுக ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார். தேர்தல் பத்திரம் தொடர்பாக பாஜக மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், திமுக மீதான விமர்சனத்தால் நீர்த்துப் போகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தேர்தல் பத்திரங்கள் திட்டமிடப்பட்ட கொள்ளை. ரிசர்வ் வங்கி சட்டம் உட்பட பல்வேறு சட்டங்களை மாற்றியமைத்துதான் இதனை பாஜக கொண்டு வந்தது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. வருமான வரித்துறையோ அல்லது அமலாக்கத்துறையோ சோதனை நடத்திய பிறகு குறிப்பிட்ட நிறுவனங்கள் பாஜகவுக்கு நிதி அளித்திருக்கின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட நிறுவனம் ஆதாயம் பெறும் வகையில் தமிழக அரசு எதுவும் செய்யவில்லை” என்றார். தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? தேர்தல் பத்திர விவகாரம் தேர்தலில் எதிரொலிக்குமா, பாஜக, 'இந்தியா' கூட்டணி இதை எப்படி கையாள்கின்றன என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன். “தேர்தல் நிதி ரகசியமாக இருக்க வேண்டும் என்ற விஷயத்திற்குள் பாஜக சென்றது ஏன்? அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகளுக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு நிதி வழங்கியதையும் பொருத்திப் பார்க்கக் கூடாது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறலாம். ஆனால், இந்த விவகாரத்தில் தேர்தல் பத்திரத்தைக் கொண்டு வந்த பாஜகவுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது” என்றார். மேலும், “மற்ற கட்சிகள் பணம் வாங்கவில்லையா என கேட்கலாம். எல்லா கட்சிகளுக்கும் பணம் வேண்டும். தேர்தல் பத்திரம் தான் ஒரே வழி எனும்போது மற்ற கட்சிகள் எந்த வழியில் நிதியை பெறும்? ஒவ்வொரு தன்னாட்சி பெற்ற நிறுவனங்களும் இந்த ஆட்சியில் நீர்த்துப் போய்விட்டன. அப்படி இந்த விஷயத்தில் பாரத ஸ்டேட் பேங்க் நீர்த்துப் போய்விட்டது. தேர்தலில் இது எப்படி எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c3glj9zg17ro

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு !

3 months 2 weeks ago
நாளை மேலும் அதிகரிக்கும் வெப்பநிலை! Published By: VISHNU 17 MAR, 2024 | 09:12 PM நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை திங்கட்கிழமை (18) கவனத்துக்குரிய மட்டத்துக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்துக்குரிய அளவில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, போதியளவு தண்ணீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் இயன்றவரை ஓய்வெடுத்தல், கடுமையான வெளிச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/178961

தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையில் வடபகுதியை சேர்ந்த அமைச்சர்கள் - வவுனியாவில் அனுரகுமார

3 months 2 weeks ago
மொழிப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என உறுதிமொழி வழங்குகின்றோம்,உங்கள் மொழியில் கருமங்களை ஆற்றுவதற்கான உரிமையை உறுதி செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவருக்கு இதுதான் தமிழரின் தலையாய பிரச்சினை போல் தெரிகிறது...

தம்பி நீ கனடாவோ..?

3 months 2 weeks ago
நன்றி தங்கள் வருகைக்கும் ...கருத்துக்கும்... புங்கையூரன்....நிலாமதி... உண்மை நிலாமதி...என்வீட்டிலேயே இதுதான் நிலமை.. முப்பது வருடங்களாகி போராடி கிடைத்த நிலையை (கனடா வாழ்க்கை ) விசிட் விசாவில் வந்த மூன்று நாட்களில் கிடைக்கும் என எண்ணுகிறர்கள்.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 2 weeks ago
இவ்வளவையும் எம்கெதிராக செய்தவர்களை பலஸ்தீனம் வரவேற்பு மதிப்பு மரியாதை செய்தது. இப்போ யாம் என்ன செய்ய???

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

3 months 2 weeks ago
திராவிடம் தற்போது ஊழல் மிகுந்து செயல் இழந்து காணப்படலாம். ஆனால் தென் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அதன் பங்களிப்பைக் குறைத்து எடைபோட முடியாது.

கோட்டாவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டாவின் வீட்டில் இருந்தார்! - முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார

3 months 2 weeks ago
தமிழர் வரவேற்க வேண்டிய பேச்சு. இனத்துவேசத்தின் உச்சம்

கோட்டாவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டாவின் வீட்டில் இருந்தார்! - முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார

3 months 2 weeks ago
மகிந்தவும் கோட்டபாயவும் அவரின் கும்பலும் முழுக்க முழுக்க கடும் போக்கு இனவாதிகளாகவே பதவிக்கு வரமுதல் இருந்தே இருந்துள்ளார்கள் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்.

தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் அரசாங்கம்? நிலாந்தன்.

3 months 2 weeks ago
தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் அரசாங்கம்? நிலாந்தன். ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை அண்மையில் வெளிவந்தது.அதில் கூறப்பட்ட விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.சில காணொளிகளும் அது தொடர்பாக வெளிவந்தன.அதற்கும் அப்பால் அது பற்றிய உரையாடல் பெரிய அளவில் நடக்கவில்லை. ஏனென்றால் தமிழ் மக்களுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் பல சோலிகள். எத்தனை விடயங்களைப் பற்றி தமிழ் மக்கள் சிந்திப்பது? ஒருபுறம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தீர்வு இல்லை. இன்னொரு புறம் மேய்ச்சல் தரையை மீட்பதற்காக மட்டக்களப்பில் பண்ணையாளர்களும் செயற்பாட்டாளர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒப்பீட்டளவில் புதிய போராட்டம். அதற்கும் தீர்வு இல்லை. இவை தவிர இந்த மாதம் தொடக்கத்தில் சாந்தனின் உடல் நாட்டுக்கு வந்தது. அதன் பின் கடந்த சிவராத்திரி அன்று வெடுக்கு நாறி மலையில் பூசையில் ஈடுபட்டிருந்த மக்கள் மத்தியில் இருந்து எட்டுப் பேரை போலீஸ் கைது செய்தது. இப்படி ஒன்றன்பின் ஒன்றாக ஏதாவது ஒரு புதுப் பிரச்சினை தோன்றிக் கொண்டேயிருக்கிறது. தமிழ் மக்களின் கவனமும் தமிழ் கட்சிகள், அரசியல் செயற்பாட்டாளர்களின் கவனமும், தமிழ் ஊடகங்களின் கவனமும் குறிப்பாக காணொளிக்காரர்களின் கவனம் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிய விடயத்தின் மீது குவிக்கப்படுகின்றது. இது தற்செயலான ஒன்றா? அல்லது திட்டமிட்டு தமிழ் மக்களின் கவனம் அவ்வாறு திருப்பப்படுகின்றதா? இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் பல விடயங்களில் ஒன்று,அரசாங்கம் புதிதாக உருவாக்க முயற்சிக்கும் சட்டங்கள் மற்றும் உருவாக்கிய சட்டங்கள் பற்றியதாகும். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பான சட்டம், சிவில் சமூகங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டமூலம்.. போன்ற சட்டங்கள் மட்டும் சட்டமூலங்கள் தொடர்பாக தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் போதிய உரையாடல்கள் நிகழவில்லை. குறிப்பாக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் ஒரு வழக்கைத் தொடுத்தார்.அந்தச் சட்டம் ஏன் தமிழ் மக்களுக்கும் பாதகமானது என்பதை பற்றி பெரிய அளவில் தமிழ் அரசியல் அரங்கில் விவாதங்கள் நடக்கவில்லை. அது மட்டுமல்ல இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பான சட்டமூலம், அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் போன்றவை தமிழ் மக்களையும் பாதிக்க கூடியவை. ஆனால் அவை தொடர்பாகவும் தமிழ் மக்களின் கவனம் பெரிய அளவில் ஈர்க்கப்படவில்லை. ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு புனர்வாழ்வு அதிகார சபை தொடர்பான ஒரு சட்டத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியபோது அதில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் காணப்பட்டார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்றும் சுட்டிக் காட்டப்பட்டது. அம்பிகா சற்குருநாதன்-முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்,இப்பொழுது ஐநாவில் ஒரு பொறுப்பான பதவியில் உள்ளார்- ஒரு காணொளியில் கருத்துத் தெரிவிக்கும் போது, மேற்படி சட்டங்களை வெள்ளை வானுடன் ஒப்பிடுகிறார். 2009க்கு முன்பு வெள்ளை வான் இருந்தது.அது தமிழ் மக்களை அச்சுறுத்தியது. இப்பொழுது அரசாங்கம் சட்டங்களைக் கொண்டு வருகிறது. அவற்றின் மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்துகின்றது என்று அவர் கூறியுள்ளார். மேற்படி சட்டங்கள், சட்டமூலங்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானவை. அவை தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் போதிய விவாதங்கள் நடக்கவில்லை. இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய சட்டமூலங்கள்,சாந்தனின் விவகாரம்,ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை, கிழக்கில் மேய்ச்சல் தரைக்கான போராட்டம், வடக்கில் மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாப்பதற்கான போராட்டம்.. என்றெல்லாம் பல்வேறு விடயப் பரப்புகளின் மீது தமிழ் மக்கள் கவனத்தைக் குவிக்க வேண்டி இருக்கிறது. மேற்படி விவகாரங்கள் தொடர்பான போராட்டங்களில் சில அரசியல் செயற்பாட்டாளர்களையும் ஒரு சாமியாரையும் தொடர்ந்து எல்லாப் படங்களிலும் காணொளிகளிலும் காணமுடிகிறது.சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்பொழுது அடிக்கடி காணப்படுகிறார்கள். அண்மைக்காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களைக் காண முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவர்கள் மேச்சல் தரைக்காக போராடுவதற்கு என்று மட்டக்களப்புக்கு போனார்கள். திரும்பி வரும் பொழுது போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் வைத்தார்கள். அதன் பின் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களுக்கு வருவது குறைவு என்று ஒரு செயற்பாட்டாளர் சொன்னார். கடந்த சுதந்திர தினத்தன்று கச்சேரிக்கு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றவில்லை. அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் வரவில்லை என்றும் அவர் சொன்னார். சாந்தனின் உடலை யாரிடம் பொறுப்புக் கொடுப்பது. என்ற கேள்வி வந்தபொழுது, முதலில் பல்கலைக்கழக மாணவர்கள் அதற்குத் தயாராக இருந்தார்கள்.ஆனால் பின்னர் அவர்கள் அதைப் பொறுப்பேற்கத் தயங்கினார்கள் என்று ஒரு தகவல் உண்டு. அதனால் தான் அது வேறு அமைப்புக்களிடம் கொடுக்கப்பட்டது என்று நம்ப படுகின்றது.ஒரு கைது நடவடிக்கையோடு பல்கலைக்கழக மாணவர்கள் அச்சப்படும் நிலைமை தோன்றியிருக்கிறதா?ஆனால் இந்தப் போராட்டங்களில் அதிகமாகக் காணப்படும் சாமியார் இதுக்கு முன் கைது செய்யப்பட்டிருக்கிறார்; விசாரணைக்கு அழைக்கப்பட்டுமிருக்கிறார்.அவர் தொடர்ந்து போராட்டங்களில் முன்னணியில் காணப்படுகிறார். ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு இந்த மே மாதத்தோடு 15 ஆண்டுகள் ஆகின்றன.15 ஆண்டுகள் எனப்படுவது பெரிய காலம். இக்காலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சிவில் சமூகங்களோ அல்லது மக்கள் அமைப்புகளோ தோன்றியிருக்கவில்லை. ஒரு குறுகிய காலம் தமிழ் மக்கள் பேரவை நொதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதுவும் பின்னர் இறந்து போய்விட்டது. இப்பொழுது கட்சிகள்தான் அரங்கில் நிற்கின்றன. இக்கட்சிகளும் கூட சிதறிக் கிடக்கின்றன. உள்ளதில் பெரிய கட்சி தமிழரசுக் கட்சி.அது யார் தலைவர் என்பதைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்துக்கு போயிருக்கிறது. இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் ஒடுக்கு முறைகள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டங்கள் இல்லை.தொடர்ச்சியான போராட்டங்களை எப்பொழுது நடத்தலாம் என்றால்,அதற்கு வேண்டிய பொறிமுறைகள் கட்டமைப்புகள் இருக்கும் பொழுதுதான். அப்படிப்பட்ட கட்டமைப்புகளை எப்பொழுது உருவாக்கலாம் என்றால், எல்லாரும் ஒன்றிணையும் போதுதான். ஆனால் ஒன்றிணைவு அல்லது ஐக்கியம் போன்ற விடயங்களைப் பற்றி உரையாடுவதே உள்நோக்கமுடையது என்று வியாக்கியானம் செய்யப்படுகின்றது. தமிழ் சிவில் சமூகங்களை வெளிநாட்டு தூதர்கள் சந்திக்கும் பொழுது அவர்கள் பொதுவாகக் கூறும் விடயங்களில் ஒன்று, உங்களுக்குள் ஐக்கியம் இல்லை என்பது. குறிப்பாக இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்திப்புகளின் போது அதைத் திரும்பத் திரும்பக் கூறுவதுண்டு. அதை வைத்துக்கொண்டு தூதரகங்கள் அதை விரும்புகின்றன,எனவே அதில் ஏதோ சூது இருக்கிறது என்று ஒரு வியாக்கியானம் வேறு வைக்கப்படுகிறது. “முதலில் நீங்கள் ஐக்கியப் படுங்கள் ” என்று கூறுவதன் மூலம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாயை அடைப்பதற்கு தூதரகங்கள் முயற்சிக்கக்கூடும். ஆனால் தூதரகங்கள் கூறுகின்றனவோ இல்லையோ தமிழ் மக்களுக்கு ஐக்கியம் தேவையா இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரதான கேள்வி. கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கு ஐக்கியமின்மையே அடிப்படைக் காரணம் என்பதில் யாருக்காவது சந்தேகம் உண்டா? ஐக்கியம்தான் பலம் என்று பாலர் வகுப்பிலிருந்து தமிழ் மக்கள் படிக்கிறார்கள். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”, “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு ” என்றெல்லாம் அறநெறிகளைப் போதித்து விட்டு, இப்பொழுது ஏன் ஐக்கியப்பட வேண்டும் என்று கேட்கும் ஒரு நிலை. ஐக்கியப்பட முடியவில்லை என்பதால்தான் இப்படிக் கேட்கப்படுகிறது. எங்களால் முடியாத ஒன்றை தேவையா என்று கேட்கும் அரசியல் வங்குரோத்து நிலை. ஐக்கியத்தை ஏற்படுத்தத் தேவையான ஜனவசியம் மிக்க தலைமைகள் அரங்கில் இல்லை.எந்த ஒரு கட்சியும் ஏனைய கட்சிகளை கவர்ந்திழுக்கும் பலத்தோடும் சக்தியோடும் இல்லை. ஒவ்வொரு கட்சியும் தனி ஓட்டம்.கட்சிக்குள்ளேயே பிரமுகர்கள் தனி ஓட்டம். சிவில் சமூகங்களும் தனி ஓட்டம். அரசு சார்பற்ற நிறுவனங்களும் தனியோட்டம். தூதரகங்களைச் சந்திக்கப் போகும்போது தங்களுக்கு இடையே ஒன்று கூடிக் கதைத்து விட்டுப் போகும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மிகக் குறைவு. அவ்வாறு செல்லும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளிநாட்டுத் தூதுவர்கள் முன் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.தங்களுக்கு இடையே முன்கூட்டியே உரையாடி யார்,எதைக் கதைப்பது என்பதனைத் தீர்மானித்து விட்டுச் செல்லும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளிநாட்டுத் தூதுவர்களின் முன்னிலையில் சிறப்பாக கருத்துருவாக்கம் செய்கிறார்கள். அதை அரசியல் கட்சிகளும் பின்பற்றினால் என்ன? கடந்த 15 ஆண்டுகளாக இதைத்தான் தொடர்ந்து எழுத வேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூகங்களும் தாங்களாக ஐக்கியப் படுகின்றனவோ இல்லையோ அரசாங்கம் அவர்களை ஐக்கியப் படுத்துகின்றது என்பது மட்டும் உண்மை. கடந்த வாரம் வெடுக்கு நாறி மலையில் சிவராத்திரி பூஜையில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்ட விடயம் ஒப்பீட்டளவில் கட்சிகளையும் செயற்பாட்டாளர்களையும் ஐக்கியப்படுத்தியிருக்கிறது. அது தற்காலிகமானது. ஆனாலும் எதிர் தரப்புத்தான் தமிழ்க் கட்சிகளை ஐக்கிய படுத்துகின்றது என்பதனை அது மீண்டும் நிரூபித்திருக்கிறது. https://athavannews.com/2024/1373752

என்னோட சாதி..

3 months 2 weeks ago
எமது சமூகத்தில் நான் இன்ன சாதி என்று சொல்லமுடியாத நிலை எல்லோருக்கும் இன்று இருக்கிறது என்றால் அது பலவீனமானது என்று தானே அர்த்தம். எனவே அதை அப்படியே விட்டு விடுவோம். பலப்படுத்த வேண்டாம்.
Checked
Fri, 07/05/2024 - 11:33
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed