புதிய பதிவுகள்2

யு ரியூப்பர்களின் காலத்தில் தேசமாகச் சிந்திப்பது! நிலாந்தன்.

3 months 2 weeks ago
வாசிப்புப் பழக்கமே அருகி வருகிறது. குறிப்பாக பத்திரிகை, புத்தகங்கள் வாசிப்பது இளையோரிடம் குறைந்துவிட்டது.

ஐரோப்பாவில் அடுத்தடுத்து தகர்க்கப்படும் அணைகள் - என்ன காரணம்?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 கட்டுரை தகவல் எழுதியவர், லுக்ரேசியா லோசா பதவி, பிபிசி செய்தியாளர் 16 மார்ச் 2024 செயற்கையாக கட்டப்பட்ட அணைகள் நீண்ட காலமாக ஐரோப்பாவின் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த பழைய அணைகள் காலப்போக்கில் பலவீனமடைந்து, தகர்க்கப்படும் போது, ஆறுகள் தாங்கள் இழந்த வழித்தடங்களை அணைத்துக் கொள்கின்றன. ஆறுகளின் வழித்தடங்களை மீட்கும் திட்டங்கள் தற்போது ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தில் உள்ள ஹிடோலான்ஜோகி ஆற்றில் உள்ள அணைகளை கட்டுமானத் தொழிலாளர்கள் இடிக்கத் தொடங்கியபோது, சால்மன் மீன்கள் நீரில் செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட சால்மன் மீன்கள் பல வருடங்களுக்கு பிறகு ஆற்றில் காணப்பட்டன. சுற்றுச்சூழல் மேம்படுவதற்கான ஒரு அறிகுறியாக இதைப் பார்க்கிறார் பாலினா லூஹி. "அதில் பெரிய மீன்கள் மட்டுமல்ல, பல சால்மன் குஞ்சுகளும் இருந்தன," என்று ஃபின்லாந்தின் சூழலியல் நிபுணர் லூஹி ஆர்வத்துடன் கூறுகிறார். "அவை ஏற்கனவே ஆற்றின் ஆழமான பகுதியில் முட்டையிட்டுக் கொண்டிருந்தன. அணையை அகற்றிய பிறகு அந்த இடம் எப்படி இருந்தது என்பதைப் பார்த்தபோது, உண்மையில் என் கண்களில் கண்ணீர் வந்தது." எனக் கூறுகிறார் லூஹி. பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 மீட்கப்படும் நதிகளின் வழித்தடங்கள் லடோகா ஏரியிலிருந்து பின்லாந்துக்கு இடம்பெயரும் நன்னீர் சால்மன் மீன்களுக்கு இந்த நதி ஒரு முக்கிய பாதையாக இருக்கிறது. ஆனால் 1911 மற்றும் 1925க்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று அணைகளின் கட்டுமானம், சால்மன் மீன்கள் மற்றும் அவற்றின் முட்டையிடும் இடங்களுக்கு இடையில் புதிய தடைகளை உருவாக்கியது. சால்மன் மற்றும் பிற மீன்களான பழுப்பு ட்ரவுட் போன்றவை ஆற்றின் மற்றொரு பக்கத்தில் சிக்கிக்கொண்டன. இன்று அணைகள் அகற்றப்பட்ட நிலையில், உயரமான மரங்களால் சூழப்பட்ட புதிதாக கட்டப்பட்ட ரேபிட்கள் வழியாக மீண்டும் தண்ணீர் ஓடுகிறது. ஒவ்வொரு முறை அணை அகற்றப்படும்போதும், சால்மன் மீன்கள் ஆற்றின் புதிய பகுதியை "தழுவிக் கொள்கிறது" என்கிறார் தென் கரேலியன் ரிக்ரியேஷன் ஏரியா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ஹன்னா ஒல்லிகைனென். பழைய அணைகளை கையகப்படுத்தி, அதை சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பயன்படுத்தும் பொறுப்பு இந்த அறக்கட்டளையின் கைகளில் உள்ளது. 2021ஆம் ஆண்டில் முதல் அணை அகற்றப்பட்ட பிறகு, மீன்களின் ஐந்து முட்டையிடும் கூடுகள் நீரில் காணப்பட்டன. ஒரு வருடம் கழித்து, 2022 இலையுதிர் காலத்தில் ஒரு ஏக்கருக்கு 200 சாலமன் மீன்கள் (0.4 ஹெக்டேர்) என்ற சாதனையை எட்டியது. 2023 டிசம்பரில் ரிடகோஸ்கி என்ற மேல் அணையை இடிக்கும் பணி முடிந்ததும், சாலமன் மீன்களால் ஆற்றின் மேல் பகுதிகளுக்கும் அதன் துணை நதிகளுக்கும் செல்ல முடிந்தது. ஆற்றின் ஆரோக்கியம் மட்டுமல்ல, பொருளாதார சூழலையும் கருத்தில் கொண்டு பல பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணியின் விளைவாக மூன்று அணைகளும் அகற்றப்பட்டன என்கிறார் ஒல்லிகைனென். இந்த அணைகளின் பராமரிப்பு செலவுகள் மற்றும் கட்டாய சுற்றுச்சூழல் பாதுகாப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அணைகளால் மின் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு லாபமில்லை என்று மதிப்பீடுகள் முடிவு செய்தன என ஒல்லிகைனென் கூறுகிறார். அதனால் அணைகள் அகற்றப்பட்டன. எவ்வாறாயினும், மூன்று ஃபின்னிஷ் அணைகளின் அகற்றம் என்பது ஒரு தனிப்பட்ட வழக்கு அல்ல. ஐரோப்பா முழுவதும், பல பழைய அணைகள் அவற்றின் முடிவை நெருங்கி வருகின்றன அல்லது அவற்றின் பராமரிப்பு செலவுகள் அவை வழங்கும் லாபத்தை விட அதிகமாக உள்ளன. இது போன்ற பெரிய அணைகள் மட்டுமல்ல, லட்சக்கணக்கான சிறிய அணைகளும் ஐரோப்பிய நதிகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளன. பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 பெரிய அணைகளால் தொடரும் பிரச்னை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற அதிக தொழில்மயமான பகுதிகளில் உள்ள ஆறுகள் பல நூற்றாண்டுகளாக, சாலைகள் கட்டமைத்தல், விவசாயத்திற்கான நீர் எடுத்தல், நீர் ஆலைகள் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் கட்டமைப்புகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்களின் மதிப்பீடுகளின்படி, உலகின் மூன்றில் ஒரு பங்கு ஆறுகள் மட்டுமே அதன் முழு வழித்தடத்தில் 1,000 கிமீக்கும் (621 மைல்கள்) அதிகமான தூரத்திற்கு சுதந்திரமாக பாய்கின்றன. இத்தகைய தடைகள் தொடர் பிரச்னைகளை உருவாக்கியுள்ளன. அவை பல்லுயிர் இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மீன் மற்றும் நுண்ணுயிரிகளை பாதிக்கிறது. மேலும் ஆறுகளின் வளங்கள் மற்றும் வண்டல்கள் கீழ்நோக்கி பாய்வதைத் தடுக்கிறது. இதனால் மீன்வளம் மற்றும் அவற்றைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அணைகள், ஆற்று நீரில் உள்ள வண்டல்களைத் தடுப்பதால், கீழ்நிலை நீரும் அதிக அரிக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது. நதியின் வழித்தடத்தில் ஏற்படும் இந்த துண்டிப்பு, நீர்வாழ் உயிரினங்களை பாதிக்கிறது. ஆற்றின் இயக்கவியல் மற்றும் வெப்பநிலையை மாற்றியமைக்கிறது என சான் பிரான்சிஸ்கோ எஸ்டூரி இன்ஸ்டிடியூட்டில் உள்ள மீள் நிலப்பரப்பு திட்டத்தின் அறிவியல் இயக்குனர் மெலிசா ஃபோலே விளக்குகிறார். பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 அழிவின் விளிம்பில் நன்னீர் மீன் இனங்கள் இனப்பெருக்கம் செய்ய இடம்பெயரும் உயிரினங்களுக்கும் பல தடைகளை உருவாக்குகின்றன அணைகள். குறிப்பாக மீன்களின் எண்ணிக்கையில் ஏற்படும் தாக்கம். ஐநாவின் COP28 காலநிலை மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் 25% நன்னீர் மீன் இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும், மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளான 45% நன்னீர் மீன் இனங்கள் அணைகள் மற்றும் நதியிலிருந்து நீர் எடுப்பதால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றன என தெரிவிக்கப்பட்டது. இது புலம்பெயர்ந்த மீன்களை மட்டுமல்ல, நீர்வழிப்பாதையில் வாழும் சிறிய மீன்களை கூட பாதிக்கிறது. பல்லுயிர் இழப்புக்கான ஐந்து முக்கிய காரணங்களில் பிராக்மெண்டேஷன் (Fragmentation) செயல்முறை கூட உள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 36 ஐரோப்பிய நாடுகளில் குறைந்தது 1.2 மில்லியன் தடைகள் நதி ஓட்டத்தைத் தடுக்கின்றன எனவும், அதில் சுமார் 68 சதவீத தடைகள் 2 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை என ஆராய்ச்சி காட்டுகிறது. "20 செ.மீ அளவுக்கு சிறிய தடைகள் கூட சில உயிரினங்களின் இயக்கத்தை பாதிக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்" என்கிறார் ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் உயிரியலில் பேராசிரியரும், அம்பர் ஒருங்கிணைப்பாளருமான கார்லோஸ் கார்சியா டி லீனிஸ். 2016ஆம் ஆண்டு முதல், ஆம்பர் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கார்சியா டி லீனிஸின் ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஐரோப்பா முழுவதும் 2,000 கிமீ (1,243 மைல்) ஆறுகளின் வழித்தடங்களில் பயணம் செய்து, அவற்றின் துண்டிப்புகளை, தடைகளை வரைபடமாக பதிவுசெய்தது. அவர்கள் அணைகள் மட்டுமல்லாது, மதகுகள், பிற சிறிய தடுப்பணைகளையும் பதிவு செய்துள்ளனர். பயனற்ற 150,000 அணைகள் உண்மையில் ஒரு அணை அல்லது தடையை அகற்றும் போது, பல காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். உரிமம் மற்றும் மாநில சட்டங்கள், பொறியியல் பணிக்கான நிதி மற்றும் சாத்தியக்கூறுகள் வரை. ஐரோப்பாவின் 150,000 நீர்வழித் தடைகள் இப்போது பயனற்றுப் போனதாகக் கருதப்படுகிறது. பழைய அணைகளுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது, மேலும் அவை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. ஐரோப்பாவில் ஆயுட்காலம் முடிந்துவிட்ட, காலாவதியான அணைகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, அவற்றின் பராமரிப்பு செலவுகள் இப்போது ஆற்றல் உற்பத்தியின் நன்மைகளை விட அதிகமாக உள்ளன, 2016 இல் நிறுவப்பட்ட 'ஐரோப்பாவின் அணை அகற்றும் திட்டக் குழுவின்' மேலாளர் பாவோ பெர்னாண்டஸ் கரிடோ விளக்குகிறார். ஐரோப்பாவின் அணை அகற்றும் திட்டக் குழு 2022இல் குறைந்தது 325 தடைகளை அகற்றியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 36% அதிகம். அணைகள் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை ஒப்புக்கொள்வதால், ஆற்றல் உற்பத்தியில் நீர்மின்சாரத்தின் நன்மைகளை புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. "பயன்பாட்டில் உள்ள அணைகளை தகர்க்கவோ அல்லது அகற்றவோ யாரும் நினைப்பதில்லை" என்று கார்சியா டி லீனிஸ் தெளிவுபடுத்துகிறார். "நாங்கள் காலாவதியான அணைகளை அகற்றுவதை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளோம். அதனால் இனி சமூகத்திற்கு எந்த பயனுமில்லை மற்றும் நதியின் ஓட்டத்தை தடுக்கின்றன" நாட்டிற்கு நாடு வேறுபட்டாலும், அணையை அகற்றும் செயல்முறைக்கு சட்டம் உதவும். ஐரோப்பாவில் அணைகளை அகற்றுவதில் ஸ்பெயின் நாடு முன்னணியில் உள்ளது. 2022இல் 133 அணைகள் தகர்க்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் பிரான்ஸும் இதை முன்னெடுக்கின்றன. நதிகள் இணைப்பு என்பது ஐரோப்பிய ஆணையத்தின் இயற்கை மறுசீரமைப்புச் சட்டத்தின் மையப் பொருளாகவும் உள்ளது. நவம்பர் 2023இல், ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தற்காலிக உடன்படிக்கைக்கு முன்வந்தன. 2030க்குள் ஆறுகளுக்கு 25,000 கிமீ (15,530 மைல்கள்) தடைகளற்ற நீர் வழித்தடத்தை சாத்தியமாக்க, மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகளை அகற்றுவதற்கான கடமையும் அடங்கும். இந்தச் சட்டம் பிப்ரவரி 27 அன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. ஐரோப்பாவில் மட்டும் இந்த பணிகள் நடக்கவில்லை. ஐரோப்பாவின் இத்தகைய முயற்சிகளுக்கு அமெரிக்காவில் நடைபெற்று வரும் அணைகள் தகர்ப்பு வேலைகளே முன்னுதாரணம் என பெர்னாண்டஸ் கரிடோ கூறுகிறார். அமெரிக்காவில் சராசரியாக 62 ஆண்டுகள் பழமையான 92,000 அணைகள் உள்ளன. 1999ஆம் ஆண்டு கென்னபெக் ஆற்றின் மீது எட்வர்ட்ஸ் அணை அகற்றப்பட்டதே அமெரிக்காவின் முதல் பெரிய அணை அகற்றப்பட்ட சம்பவம். 1837இல் கட்டப்பட்ட அந்த அணையின் உரிமம் 1997இல் காலாவதியானபோது, ஃபெடரல் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அதை புதுப்பிக்கவில்லை. ஆற்றின் சுற்றுச்சூழல் நன்மைகளுக்கு அது முன்னுரிமை அளித்தது. இதுவரை கிட்டத்தட்ட 2,000 அணைகள் அமெரிக்க நதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. அதாவது எட்வர்ட்ஸ் அணை அகற்றப்பட்டதிலிருந்து 76% அணைகள் அகற்றப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 அணைகள் இடிக்கப்படுவது எப்படி? அணைகள் வெடிப்பொருட்கள் மூலமாக உடனடியாக உடைத்துவிட முடியாது. மாறாக, அணையை அகற்றுதல் என்பது நுட்பமாக திட்டமிடப்பட்ட ஒரு பொறியியல் பணி. ஹைடோலான்ஜோகி ஆற்றில், புல்டோசர்கள் படிப்படியாக கான்கிரீட் சுவர்களை உடைத்தன. இதனால் நீர் மெதுவாக வெளியேற்றப்பட்டது. "அணைக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது செயல்முறையின் ஒரு பகுதியாகும். வண்டல் எங்கே முடிகிறது? வண்டல் அனைத்தும் தோண்டி எடுக்கப்படுகிறதா? பாதிப்பைக் குறைக்கும் உத்திகள் என்ன? என அனைத்தையும் ஆராய்வோம்" என்று ஃபோலி கூறுகிறார். இன்றுவரை மிகப்பெரிய நதி மறுசீரமைப்பு திட்டங்களில் ஒன்று பிரான்ஸின் நார்மண்டியில் உள்ள செலூன் ஆற்றில் நடந்துள்ளது. 2019 மற்றும் 2023க்கு இடையில் இரண்டு பெரிய அணைகள் அகற்றப்பட்டு, ஆற்றின் 60 கிமீ (37 மைல்) நீர்வழித்தடம் திறக்கப்பட்டது. 1920களில் இருந்து செயல்படும் இரண்டு அணைகளும் ஒரு நூற்றாண்டு காலமாக அட்லாண்டிக் சால்மன், லாம்ப்ரேஸ் மற்றும் ஐரோப்பிய ஈல்கள் போன்ற மீன்களின் இடம்பெயர்வை முற்றிலும் தடுத்துவிட்டன. "கனரக பொறியியல் பணிகள் மூலம் நீர் மெதுவாக வெளியேற்றப்பட்டதால், அணையின் பின்புறம் குவிந்திருந்த வண்டல் மண் கரைகளை மீண்டும் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. தாவரங்கள் மிக விரைவாக மீண்டும் வளர்ந்தன, உண்மையில் வண்டல் அதிக வளங்கள் நிறைந்ததாக இருந்தது. தாவரங்கள் கரைகளை உறுதிப்படுத்த உதவியது மற்றும் நிறைய உயிரினங்களுக்கு நிழல் மற்றும் தங்குமிடம் உருவாக்கவும் அது உதவியது" என்று திட்டத்தைக் கண்காணித்து வரும் இன்ரேயில் உள்ள செலூன் அறிவியல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லாரா சொய்சன்ஸ் கூறுகிறார். அணையை அகற்றுவதற்கான இயற்பியல் கூறுகளை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. அணைகள் அமைந்திருக்கும் நிலப்பரப்புகளுடன் உள்ளூர் மக்களுக்கு வலுவான தொடர்புகள் இருக்கும் என்பதால் அணைகள் அகற்றப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணங்களை அவர்களிடம் தெரிவிப்பதும் முக்கியம் என்று செலூன் திட்டம் அறிவுறுத்துகிறது. "இந்த அணைகள் நீண்ட காலமாக இருக்கும் போது, ஒரு நதி சுதந்திரமாக ஓடுவது எப்படி இருக்கும் என்பதை மக்களுக்குக் காண்பிப்பது சவாலாக இருக்கும்" என்கிறார் ஃபோலே. செலூன் ஆற்றில் அணை அகற்றும் பணிக்கு முன்பு, உள்நாட்டில் வசிக்கும் மக்கள் அணைகளுக்குப் பின்னால் உள்ள ஏரிகளை படகு சவாரி மற்றும் மீன்பிடித்தல் போன்ற பல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினர். ஆனால் நீர்த்தேக்கங்களில் நச்சு சயனோபாக்டீரியா வளர்ந்து கொண்டிருந்தது. இறுதியில் அந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. " என இன்ரே செலூன் அறிவியல் திட்டத்தின் ஆராய்ச்சி இயக்குனர் ஜீன்-மார்க் ரூசல் கூறுகிறார். டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மீன் சூழலியல் நிபுணர் கிம் பிர்னி-கௌவின் மற்ற அணைகளை அகற்றும் விஞ்ஞானிகளுடன் செலூன் ஆற்றுக்குச் சென்றபோது, உள்ளூர் மக்கள் மிகுந்த வருத்தமாக இருந்ததைக் கண்டனர். ஆனாலும் கூட, ஒருவருக்கு அதில் சந்தோஷம் இருந்ததாக பிர்னி-கௌவின் நினைவு கூறுகிறார். "அணை கட்டப்பட்டபோது அவரது தாத்தாவுக்கு அதில் ஈடுபாடு இல்லை. அந்த பகுதியின் நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தை அவரது தாத்தா விரும்பவில்லை" என்று பிர்னி-கௌவின் கூறுகிறார். பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 அமெரிக்கா, ஐரோப்பாவில் அடுத்தடுத்து தகர்க்கப்படும் அணைகள் அணைகளை அகற்றுவதால் அட்டகாசமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. செலூனில் தாவரங்கள் மீண்டும் வளர்ந்தது மட்டுமல்லாமல், மீன்கள் கூட மீண்டும் தென்பட்டன. இரண்டாவது அணை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில சால்மன் மீன்கள் ஆற்றின் மேற்பகுதிக்கு வந்தன. இதேபோல், ஐரோப்பிய விலாங்கு மீன்களும் இப்போது முழு நீர்ப்பிடிப்பையும் மீண்டும் ஆக்கிரமித்துள்ளன மற்றும் கடல் லாம்ப்ரே எனப்படும் மீன்களும் புதிய வாழ்விடங்களை முட்டையிடும் இடங்களாகப் பயன்படுத்துகின்றன. மக்களுக்கும் அணையை அகற்றுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நீரின் நச்சுத்தன்மையை நீக்குவதுடன், மீட்டெடுக்கப்பட்ட ஆறுகளால் சுற்றுலா வாய்ப்புகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஹிடோலான்ஜோகி ஆறு ஒரு சுற்றுலாத் தலமாக மாற தயாராக உள்ளது என்று ஒல்லிகைனென் கூறுகிறார். இதேபோல் அமெரிக்காவில் அணைகளை அகற்றுவதால் மக்கள் நதிக் கரைகளுக்குத் திரும்புகின்றனர். மைனே மாநிலத்தில் பெனோப்ஸ்கோட் நதியின் அணை அகற்றப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நீரின் தரம் மற்றும் நீச்சல், படகு சவாரிகள் மற்றும் வனவிலங்குகளைப் கண்டுகளிப்பது போன்ற நடவடிக்கைகளில் அதிகரித்துள்ளதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. மேலும், அணையை அகற்றுவதற்கு ஆதரவான முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான பெனோப்ஸ்கோட் இந்திய தேசத்துடன் ஆற்றின் சுதந்திரமான பாயும் நிலையை மீட்டெடுப்பது பெரும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது . ஆரம்பத்தில் அணையை அகற்றும் திட்டம் சில சந்தேகங்களை ஏற்படுத்தியது என்றும் உள்ளூர் மக்கள் சிலர் கவலை தெரிவித்தனர் என்றும் ஆனால் இப்போது நீர் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது, கயாக் போட்டிகள் நடத்தப்பட்டது. மக்கள் ஆற்றை இன்னும் அதிகமாக நேசிக்கிறார்கள் என்றும் கூறுகிறார் மூத்த விஞ்ஞானி ஜோசுவா ராய்ட். ஐரோப்பாவும் அமெரிக்காவும் நதிகள் இணைப்பை மீட்டெடுக்க அணைகளை அகற்றுவது ஒரு சாத்தியமான வழியாக இருக்கும் என்று நிரூபித்து காட்டினாலும், இதில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அமேசான், காங்கோ மற்றும் மீகாங் படுகை போன்ற முக்கிய நதிகளில் புதிய அணைகள் கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவலைப்படுகின்றனர். இதேபோன்ற கவலைகள் பால்கன் பகுதியிலும் உள்ளது. அங்கு ஏராளமான சிறிய நீர்மின் நிலையங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலகில் வேறு எங்கும் சிறிய, குறைந்த திறன் கொண்ட நீர்மின் அணைகள் கட்டப்பட்டால் ஐரோப்பாவில் உள்ள அணைகளை அகற்றுவதில் அர்த்தமில்லை என்கிறார் கார்சியா டி லீனிஸ். "நாம் சற்று விரிவாக யோசிக்க வேண்டும். சிறிய அணைகள் ஒருபோதும் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யப் போவதில்லை, அவை மேலும் அதிக சேதத்தை ஏற்படுத்தப் போகின்றன. அதற்காக அணைகளே வேண்டாமென்று சொல்லவில்லை, ஆனால் நல்லதை விட சுற்றுச்சூழலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் பழைய அணைகளே எங்கள் இலக்கு" என்கிறார் கார்சியா டி லீனிஸ். https://www.bbc.com/tamil/articles/cndjyxprkw6o

மயிலம்மா.

3 months 2 weeks ago
திருமணமானால் கணவன் மேல் சந்தேகமும் வந்துவிடும் போல?! உங்கள் தொடருக்கு மிக்க நன்றி சுவி அண்ணா.

மயிலம்மா.

3 months 2 weeks ago
மயிலிறகை......... 19. மயிலம்மா வீட்டுப் படுக்கை அறை. கல்யாணக் கலாட்டா எல்லாம் முடிந்து வர நேரமும் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. வாமனும் பொடியலுடன் கொஞ்சம் மதுவும் பாவித்து சாப்பிட்டு விட்டு வந்ததால் அறையில் பால்பழங்கள் எதுவும் அங்கில்லை. புது இடமாய் இருந்த போதிலும் அஞ்சலா கட்டிலில் சிறிதும் அச்சமின்றி அமர்ந்திருக்கிறாள். தலையில் வட்டமாய் கொண்டை போட்டு பின்னலில் சடைநாகமும் குஞ்சமும் வைத்து நிறைய பூக்களால் அலங்காரம் செய்து அனுப்பி இருந்தார்கள். அவள் தனக்குள் இவன் ஒரு தொடை நடுங்கி, இவனால் என்ன பெரிதாய் செய்துவிட முடியும் என்னும் எகத்தாளம் கண்களில் தெரிகின்றது. புத்தம் புது வாலிபனான இவனை நான்தான் சாமர்த்தியமாக வழிக்குக் கொண்டுவர வேண்டும். ஒரேயடியாய் பயப்படுத்தக் கூடாது என்று நினைக்க சிரிப்பும் கூடவே வருகின்றது. அப்போது வாமன் அங்கு நாலுமுழம் வேட்டி கட்டி நாஷனல் சேர்ட்டும் போட்டுகொண்டு கழுத்தில் மைனர் செயினும் கைகளில் மோதிரங்களும் மின்ன உள்ளே வருகிறான். அவன் விதானையல்லவா, இதுநாள்வரை எத்தனை எத்தனையோ பேரின் பொய் மெய் களை அவர்களின் கண்களை பார்த்தே கண்டுபிடித்திருக்கிறான். அதுபோல் அஞ்சலாவின் எண்ண ஓட்டங்களும் அவனுக்குப் புரிகின்றது. மெல்லமாய் நடந்து அவளை நெருங்கி அருகில் நிக்கிறான். அவளும் கொஞ்சம் அரக்கி இருந்து கொண்டு உட்காருடா என்கிறாள். அவனும் அருகில் அமர்கின்றான். அவள் தனக்கு சொல்வதுபோல் அவனுக்கும் சேர்த்து சொல்கிறாள். சே எல்லாம் புஷ்வாணமாய் போச்சுது. எனக்கென்ன தெரியும் அவங்கள் மோட்டார் சைக்கிளுக்காத்தான் அப்படி அலைஞ்சு திரிஞ்சவங்கள் என்று சொல்ல அவனும் எனக்கு அப்படித் தோன்றவில்லை. திருமணங்கள் சொர்க்கத்தில் நிட்சயிக்கப் படிக்கிறது என்பார்கள் அது நிஜமோ பொய்யோ தெரியாது ஆனால் எங்களை பொறுத்தவரை யோகிபாபுவால் தான் நிட்சயிக்கப் பட்டிருக்கு. அதென்னமோ உண்மைதான் என்று அதை அவள் ஆமோதிக்கிறாள். பின் அவன் கையை எடுத்து தன் இடுப்பைச் சுற்றி வைத்துக் கொண்டு மெதுவாக அவன் மார்பில் சாய்கிறாள். அவன் சும்மா இருப்பதைப் பார்த்து என்னடா பயமாய் இருக்கா.....என்னிடம் என்னடா பயம் என்கிறாள். அவனும் ....ம்.....கொஞ்சம் என்று சொன்னவன், அப்படியே அவளை சரித்து மடியில் வளர்த்தி கண்களில் காதல் மின்ன உதடுகளில் முத்தமிடுகிறான். அதை அவள் ரசிக்கிறாள்.கண்கள் கிறங்குகின்றன. அவள் சற்றே அசைந்து அவன் கண்களை நோக்க அதில் காதலுடன் காமமும் ஒளிர்கின்றது. கண்களின் வார்த்தைகளை அவள் புரிந்து கொள்ளும் அடுத்த கனத்தில் இருந்து அவன் அவனாக இல்லை. கொதிக்கக் காய்ச்சிய இரும்பு கொல்லனின் அடியில் வளைந்து நெளிந்து வசமாவதுபோல் அவளும் நெகிழ்ந்து மகிழ்ந்து மலர்ந்து நிக்கிறாள்.மேனி துடிதுடித்து மயங்கி முயங்கி நிலைகுலைகிறாள். இதுநாள்வரை கஞ்சனின் பெட்டிக்குள் பணக் கட்டாய் பஞ்சடைத்து இருந்தவள் இப்போது திருவிழாவில் சிறுவனின் கையில் கிடைத்த சில்லறைகள் போல் சிறகடித்துப் பறக்கிறாள். அவள் மேனியில் ஆடைகள் சில இருந்த போதும் அவை தம் கடமையை மறந்து ஒதுங்கி நின்று ஓரங்க நாடகம் பார்க்கின்றன. சென்றி உடைத்து உட்புகுந்த இராணுவத்திடம் பாதுகாவல் அரண்களும் பதுங்கு குழிகளும் சரண்டர் ஆகின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் கெஞ்சிக் கெஞ்சி கொஞ்சிக் கொஞ்சி அணைக்கும் அவனின் வலிமையான கரங்களை அவளின் வளைக்கரங்கள் தடுக்க முயன்று தோற்று மென்மேலும் இறுக்கித் தழுவிக் கொள்கின்றன. செவ்விதழ்கள் செந்தேனாய் சிந்துகின்றன. தேன்துளிகள் தெறிக்கும் இடமெல்லாம் அவன் ஆதரங்களால் மேய்கிறான். கன்னிமலர் காகிதமாய் கசங்கி போகிறது. மதனநீர் ஒழுக மதம் பிடித்து நின்ற பிடி அங்குசத்துக்கு அடங்கிக் கிடக்கின்றது. அன்று அப்படி இருந்த இவன் இன்று எப்படி இப்படி மாறினான். மனதில் எழும் ஆயிரம் கேள்விகளை உடலின் இன்பவேதனை மறக்கடிக்க அவளும் அவனுடன் மல்லுக்கட்டிக் களைத்து அவனருகில் அயர்ந்து உறங்கி விடுகிறாள். அடுத்தநாள் பகல் பத்து மணிக்குமேல் எழும்பி கைகளை உயர்த்தி உடம்பு முறித்து கதவு திறந்து வெளியே வருகிறாள். மாருதியின் ஓவியம்போல் தலை நிறைய பூக்களுடன் பொலிவாய் உள்ளே போனவள் இப்பொழுது கன்னங்களும் உதடு முகம் எல்லாம் வீங்கி கண்களும் சுருங்கி அரசியல் கார்ட்டூன் போல் அலங்கோலமாய் இருக்கிறாள்.அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க சந்திரபிம்பமாய் இருந்தவள் சந்திரமுகியாய் வெளியே வருகிறாள்.அந்த அலங்கோலத்திலும் அழகு கொட்டிக் கிடக்கு. மயிலம்மாவும் அவளைக் கண்டு சிநேகமாய்ப் புன்னகைத்து அவளைக் குளக்கரைக்குக் கூட்டிப் போகிறாள்.போகும்போது மறக்காமல் அஞ்சலா மாற்றுவதற்காக்க பூவனத்தின் ஆடைகளையும் துவாயையும் எடுத்துக்கொண்டு போகிறாள். பின் சம்பிரதாயமாக என்னம்மா நன்றாகத் தூங்கினாயா என்று கேட்க அவளும் கைகளை உதறி விரல்களை நெட்டி முறித்துக் கொண்டே மயிலம்மாவை நேராகப் பார்க்காமல் எங்கையம்மா உங்களுக்கு பகிடியாய் இருக்கு போல. ஏன் என்ன நடந்தது நேற்றிரவு நடந்த சம்பவத்துக்கு உன்னை கோபித்துக் கொண்டானோ...... அப்படி கோபித்துக் கொண்டால்கூடப் பரவாயில்லை என்று தோன்றுகின்றது. அப்போது இருவரும் குளத்தருகில் வந்து விட்டார்கள். இருவரும் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்து விட்டு குறுக்குக் கட்டிக்கொண்டு குளத்துக்குள் இறங்கி முங்கி முங்கி மூழ்கிக் குளித்து மேலே வருகிறார்கள்.அஞ்சலா கல்லில் இருக்க மயிலம்மா ஒரு சவர்காரத்தை எடுத்து அவளுக்கு முதுகு தேய்த்து விட்டு முகத்துக்கு போடுவதற்கு அவளிடம் தருகிறாள். என்ன முதுகெல்லாம் ஒரே கீறலாயிருக்கு. சே....என்ன பையன் அவன் .....அவன் ஒரு மிருகம். பத்து கைகளும் எட்டுக் கால்களுமாய் என்னை எத்தனை இம்சை செய்தான் தெரியுமா. எனக்கென்ன தெரியும், நீ சொன்னால்தான் தெரியும். அன்று என் வீட்டில் தண்ணிப் பம்பு திருத்தும்போது அப்படிப் பயந்தாங் கொள்ளியாய் இருந்தவன்.... மயிலம்மா இடைமறித்து எப்படி "எலிபிடிக்கப் பழகாத பூனை" என்று என்னவோ சொன்னாயே அப்படியா ....ம்....அன்று நான் சொன்னது உங்களுக்கு கேட்டுட்டுது போல......அதேதான் இந்த சில மாதங்களில் இப்படி ஆகியிருக்கிறான்..... என்ன வேகம் ....ஓடுற முயல்களை விரட்டி வேடடையாடும் புலியாய் இருந்தான். அப்போது இல்லாத வெட்கம் இப்போது என்னை ஆட்கொள்ள டேய் வெட்கமாய் இருக்குடா,லைட்டை அணையடா, லைட்டா அணையடா செல்லம் என்று சொல்கிறேன் அவன் கேட்டால்தானே, நீ என் ஸ்வீட் ஹார்ட் அதுதான் ஹார்ட்டை அணைக்கிறேன் ஹார்ட்டாய் அணைகிறேன் என்று இதயத்துக்குள் இதயத்தைப் புகுத்துவது போல் இம்சை செய்தான். இது எப்படி என்று இவர்கள் கதைக்கும் போது தூரத்தே வாமன் வருகிறான். வரும்போது முற்றத்தில் நின்ற பாம்பை கையில் எடுத்து, கையிலும் தோளிலும் ஊரவிட்டுக் கொண்டே அங்கு வருகிறான். ஐயே பாம்போடு வருகிறான் பயமில்லையா என்று அஞ்சலா வினவ... இல்லை அது சின்னனில் இருந்தே அவனோடு நல்ல பழக்கம் ஒன்றும் செய்யாது. சரி இப்ப அவனிடமே கேட்கிறேன் எப்படிடா உனக்குள் இந்த மாற்றம் என்று.....அப்படியே கேட்கவும் செய்கிறாள். வாமன் இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே பாம்பை கீழே விட அது அப்பால் போகின்றது.பின் நாலுமுழ வேட்டியையும் பனியனையும் கழட்டிக் கரையில் வைத்து விட்டு ஜட்டியுடன் குளத்துக்குள் பாய்கிறான். மயிலம்மா நைசாக நழுவி ஆடைகளை அலம்பும் சாக்கில் அப்பால் போகிறாள். நன்றாக முங்கிக் குளித்து மேலே வந்தவனிடம் அஞ்சலாவும் டே நீ இந்த வித்தையெல்லாம் எங்கு கற்றாய் ..... எந்த வித்தை...... தெரியாத மாதிரி கேட்டியென்றால் கல்லெடுத்து அடிச்சுப்போடுவன் சொல்லடா என்கிறாள். இவர்களின் சண்டையை ரசித்தபடியே இவன் என்ன சொல்லித் துலைக்கப் போறானோ என்னும் பதட்டத்தில் மயிலம்மா ஆடைகளை அலம்பிப் பிழிகிறாள்…. ஓ....அதுவா ....சொல்கிறேன் கேள்.....நீ என்னை அன்று அவமதித்தாய் அல்லவா .. சீ ......நான் ஒன்றும் உன்னை அவமதிக்கவில்லை..... இருக்கட்டும், முதலில் நீ என்னைப் பூனையுடன் ஒப்பிட்டதே தவறு..... பெருந்தவறு ..... அதன் பின்தான் நான் கோயில் தேரில் சிலைகளைப் பார்த்தேன்.....கோபுரத்தில் சிற்பங்கள் பார்த்தேன்..... சோலையில் கிளிகளைப் பார்த்தேன்.....மரங்களில் மந்திகளைப் பார்த்தேன்..... பாதையில் நாய்களைப் பார்த்தேன் .......பட்டிகளில் மாடுகள் பார்த்தேன்.... மலர்களில் வண்டுகள் பார்த்தேன்.....சந்து பொந்துகளில் சர்ப்பங்கள் பார்த்தேன்.... இவைகளும் போதாதென்று சரோஜாதேவியைப் பிடித்தேன் படித்தேன் ...... சரோஜாதேவியா ...... என்னடா சொல்கிறாய் , அஞ்சலா கேட்க, மயிலம்மா வியக்கிறாள்..... ஓம்.......சரோஜாதேவியேதான்......கையடக்கமான ஒரு காவியம்.....கலவிக் கலையின் அத்தனை நுணுக்கங்களும் அதில் அடக்கம்..... எல்லாவற்றையும் எனக்குள் ஒத்திகை பார்த்து வைத்துக் கொண்டேன் .....எதிர்காலத்தில் உதவலாம் என்று..... நேற்றிரவு என் பத்தினி நீ எகத்தாளமாய் மெத்தையில் இருந்தாய். புதுப் பெண்ணுக்குரிய வெட்கம் கிஞ்சித்தும் இல்லை உன்னிடம். அது என்னை சூடேற்ற, பார்த்து வைத்திருந்த ஒத்திகை அத்தனையையும் தத்தை உன்னிடம் மெத்தையில் அரங்கேற்றினேன்..... ஓ....அதுவா விசயம் .....நானும் என்னென்னமோ நினைத்துக் கொண்டேன் என்று மயிலம்மாவை ஓரக்கண்ணால் ஒரு நொடி பார்த்து விட்டு சொல்கிறாள்....மயிலம்மாவும் நிம்மதியாய் ஒரு பெருமூச்சு விடுகிறாள். அது சரி.....நீ எப்படி என்னைப் பத்தினி என்கிறாய். பத்தினிக்கு அர்த்தம் என்னென்று தெரியுமாடா உனக்கு....வட்டிக்காக வட்டிவைத்தி வீட்டில் வெட்டியாய் வாழ்ந்து வந்தவள் நான்.....நான் பத்தினியா..... நீ பத்தினிதான், அதில் என்ன சந்தேகம் உனக்கு.... எப்படி..... இப்படி.....அசோகவனத்தில் ஆண்டு முழுதும் வாழ்ந்த சீதை அக்நியில் குளித்து வந்த பத்தினி..... அக்நியில் பிறந்து ஐவருடன் வாழ்ந்த பாஞ்சாலியும் பத்தினி ..... முனிவன் உருவில் வந்து முயங்கியவனை சாபமிடாமல் சல்லாபித்த அகலிகையும் பத்தினி..... கோவலனை மணந்த கண்ணகியும் பத்தினி..... கணிகையர் குலத்தில் பிறந்தும் அவனோடு மட்டும் வாழ்ந்து பின் தானும் துறவியாகி பெற்ற மகளையும் துறவியாக்கிய மாதவியும் பத்தினி..... படகில் முனிவனுடன் சல்லாபித்து வியாசரைப் பெற்று பின் கன்னியாகி மணமுடித்த சத்யவதியும் பத்தினி.... கணவனின் கருத்துக்கமைய ஆகாயத்தில் சென்ற தேவர்களைக் கூவி அழைத்து குழவிகளைப் பெற்ற குந்திதேவியும் பத்தினி என்றால் என்றால் ..... நீயும் பத்தினியே.....உன்னையும் என்னையும் சேர்த்து மணமுடித்து வைத்து அழகுபார்க்கும் இந்த மயிலம்மாவும் பத்தினிதான். என்றவனைப் கல்லில் இருந்து பாய்ந்து தாவியணைக்கிறாள் அஞ்சலா.... மனதில் இருந்த பாரம் இறங்கிய நிம்மதியில் வாமனின் அறிவை வியந்துகொண்டே பிழிந்த துணிகளை எடுத்துக் கொண்டு பின்னழகு அசைந்து அசைந்து அவனுக்கு நன்றி சொல்ல அன்னம்போல் நடந்து முன்னால் செல்கிறாள் மயிலம்மா.....! சுபம். மது வீட்டுக்கு கேடு.....! யாவும் கற்பனை....! யாழ் அகவை 26 க்காக...... ஆக்கம் சுவி........!

என்னோட சாதி..

3 months 2 weeks ago
சாதி வேரோடு அறுத்தெறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வேள்ளாளர் மட்டும் தான் சாதி பாக்கினமோ எண்டு நான் கேட்டால் நீங்கள் என்னை முழுசி பாக்கக்கூடாது. இனவாதம்,மதவாதம்,மொழிவாதம்,பிரதேசவாதம்,ஊர்வாதம் என்பது போல் சாதிவாதமும் ஒரு வகையானது.

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
இங்கு களத்தில் நீங்களும் நானும் மட்டும் உரையாடவில்லை, பதிவை படித்தோருக்கு விளங்கும். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அது என்னை பாதிக்கப்போவதில்லை. நன்றி!

அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு!

3 months 2 weeks ago
இன நெருக்கடி தீா்வுக்கு தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச தயார் – கிளிநொச்சியில் அநுரகுமார March 17, 2024 தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க நேற்று பகிரங்கமாக தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த மாநாடு நேற்றுக் காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இடம்பெற்றது. அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு – “எமது வரலாற்றை எடுத்துக்கொண்டால், நாங்கள் திருமணம், சமய வழிபாடுகள், கலாசாரம் உள்ளிட்டவற்றில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயற்பட்டோம். நாங்கள் ஒன்றாகவே வாழ்ந்தோம். எமக்குள் இனவாதம், வேறுபாடுகள் இருந்திருக்கவில்லை. கடந்த காலத்தில் பிரிவினை அரசியலே மேற்கொள்ளப்பட்டது. தெற்கிலும், வடக்கிலும் அவ்வாறு பிரிவினை பேச்சுக்களை முன்னெடுத்தே அரசியல் செய்யப்பட்டது. அந்த அரசியல் நிலையிலிருந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். இந்தியா எனும் நாட்டை நாங்கள் பார்க்கவேண்டும். இந்திய தேசியக் கொடியின் கீழ் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ்கின்றார்கள். இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனங்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். அங்கு பல்வேறு வகையான கலை, கலாசாரம் என இருந்தாலும் அவர்கள் இந்தியர்களாக ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். அந்த ஒற்றுமையினால் அப்துல் கலாம் எனும் ஒருவரை ஜனாதிபதியாக கொண்டுவர முடிந்தது. அந்த ஒற்றுமையால் சிறுபான்மை இனமான சீக்கிய இனத்தவர் ஒருவரை பிரதமராகவும் கொண்டுவர முடிந்தது. அந்த ஒற்றுமையானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால், எமது நாட்டில் அதற்கு மாறாக நடந்தது. சுதந்திரம் கிடைக்கப்பெற்ற பின்னர் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. மொழிப் பிரச்னை உருவாகியதை தொடர்ந்து இனப்பிரச்னையும் தொடங்கியது. வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மாநாட்டில் தனிநாடு கோரி சூரியனில் தேர்தலில் போட்டியிட்டனர். தற்கொலை குண்டுதாரிகள் உருவாக்கப்பட்டனர். தொடர்ந்து 2009 இல் யுத்தம் முடிந்தது. நாங்கள் சுதந்திரத்துக்கு பின்னர் சண்டையிட்டே காலம் கடந்தது. அதனால் நாங்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை. இழப்புக்களையும், பகைகளையும், இன ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் வாழ நேர்ந்தது. இவற்றுக்கு முடிவு வேண்டும் என்பதற்காகவே இந்த அரசியல் சூழல் எழுந்துள்ளது. அனைவரும் ஒன்றாகி அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கவேண்டும். நடு நிலையான அரசியல்வாதிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். அடுத்து வரும் நாட்களில் யாழ்ப்பாணத்திலும் தமிழ் அரசியல்வாதிகளுடன் பேசஉள்ளோம். எமது அரசாங்கள் உருவாக்கப்பட்ட சில நாட்களிலேயே பல்வேறு தீர்வுகளை நாங்கள் வழங்கு வோம்” என்றும் அநுர குமார தெரிவித்தாா். https://www.ilakku.org/இன-நெருக்கடி-தீா்வுக்கு/

யு ரியூப்பர்களின் காலத்தில் தேசமாகச் சிந்திப்பது! நிலாந்தன்.

3 months 2 weeks ago
யு ரியூப்பர்களின் காலத்தில் தேசமாகச் சிந்திப்பது! நிலாந்தன். adminMarch 17, 2024 பார்க்க ஆசையா இருக்கு எண்டாலும் மனதில ஒரு கவலை இருக்கு கடத்த ஒன்பதாந் திகதி வெடுக்குநாறி மலையில் சிவ பூசைக்குள் போலீஸ் புகுந்தது. எட்டுப் பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் சிறை வைக்கப்பட்ட அடுத்த நாள், 10ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்ற வெளியில் விமானப்படைக் கண்காட்சியின் கடைசி நாளன்று, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே திரண்டார்கள். அங்கு திரண்ட சனத்தொகை சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வில் திரண்ட தொகைக்குக் கிட்ட வரும் என்று கூறப்பட்டாலும், அது ஒரு மிகை மதிப்பீடு என்று கருதப்படுகின்றது. எனினும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டார்கள் என்பது மட்டும் உண்மை. தமது மரபுரிமைச் சொத்து ஒன்று ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், தமது வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்துவதற்காகவும் வெடுக்குநாறி மலையில் போராடிக் கொண்டிருக்கும் அதே மக்கள் மத்தியில் இருந்துதான் முற்ற வெளிக்கும் ஆட்கள் போனார்கள். இந்த முரண்பாட்டை எப்படி விளங்கிக் கொள்வது? வெடுக்கு நாறி மலைக் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர், முற்றவெளிக்குப் போன மக்களைக் கடுமையாக விமர்சித்தார். 15 ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை மறந்து முற்றவெளிக்குப் போன மக்கள் மீது அவருக்குக் கோபம். அந்தக் கோபம் நியாயமானது. ஆனால் அதைவிட ஆழமான, நியாயமான ஒரு கேள்வி உண்டு. அது என்னவெனில், தமது சொந்த அரசியலின் மீதும் நேரடியான மற்றும் மறைமுக ஒடுக்குமுறைகளின் மீதும் தமிழ் மக்களின் உணர் திறனை விழிப்பை அதிகப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் எந்தக் கட்சியிடம் உண்டு? ஒரு மக்கள் கூட்டத்தின் பொதுப் புத்தி அப்படித்தான் இருக்கும். அது வாழ்க்கையைக் கொண்டாடக் கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் தேடிப் போகும். மக்களுக்கு பொழுது போக வேண்டும். அதுதான் அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பண்ணை வெளிக்கு வருகிறார்கள். யாழ்ப்பாணத்தின் ஏனைய உல்லாசத் தலங்களுக்குப் போகின்றார்கள். வசதி குறைந்தவர்கள் பண்ணைக்கும் ஏனைய சிறு பூங்காக்களுக்கும் போகின்றார்கள். வசதி கூடியவர்கள் யாழ்ப்பாணத்தின் நட்சத்திர அந்தஸ்துடைய விருந்தினர் விடுதிகளுக்கு போகின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்பு வரும்பொழுது தங்கள் சொந்தக்காரர்களின் வீடுகளில் தங்குவதுண்டு. இப்பொழுது கணிசமானவர்கள் விருந்தினர் விடுதிகளில் தங்குகிறார்கள். அதற்காக லட்சக்கணக்கில் செலவழிக்கின்றார்கள். அதாவது சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் இருப்பவர்கள் தங்கள் தங்கள் நிதித் தகமைக்கு ஏற்ப வாழ்க்கையைக் கொண்டாட விரும்புகிறார்கள். குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வாழ்க்கையைக் கொண்டாட விரும்பும் அநேகருக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் ஒரு முன்னுதாரணம். மூன்றாவது புலப்பெயர்ச்சி அலைக்கு அது பிரதான காரணம். இப்படியாக வாழ்க்கையைக் கொண்டாட ஆசைப்படும் ஒரு மக்கள் கூட்டத்தை அவர்களுடைய சொந்த அரசியலின் மீது உணர்திறண் மிக்கவர்களாக மாற்றுவது எப்படி? அதை யார் செய்வது? விமானப்படைக் கண்காட்சிக்கு வந்த ஒரு நோர்வேத் தமிழர் கூறுகிறார் “பார்க்க ஆசையா இருக்கு, எண்டாலும் ஒரு கவலை இருக்கு மனதில ” என்று. ஆசையாக இருக்கிறது என்பது வாழ்க்கையை கொண்டாட ஆசையாக இருக்கிறது என்று பொருள். கவலை இருக்கிறது என்பது இறந்த காலத்தில் தமிழர்கள் பட்ட துயரங்களை நினைக்கும் போது ஏற்படுவது. ஆனால் அது இறந்த காலமல்ல, நிகழ்காலமுந்தான். அதனால்தான் வெடுக்கு நாறி மலையில் போராட வேண்டியிருக்கிறது; மயிலத்தமடுவில், மாதனையில் போராட வேண்டியிருக்கிறது; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்கள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. போர் ஒரு விளைவு மட்டுமே, மூல காரணம் அல்ல. ஒடுக்கு முறைதான் மூல காரணம். அது இப்பொழுதும் உண்டு. எட்டுப் பேர் கைது செய்யப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் முற்றவெளிக்குப் போயிருக்கிறார்கள். அங்கே படையினர் பரசூட்டில் இறங்குவதைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். உலங்கு வானூர்தியில் ஏறுவதற்காக முண்டியடிக்கிறார்கள். அதைப் பெரும்பாலான யு ரியூப்பர்கள் கவர்ச்சியாக விற்கிறார்கள். இது யுடியூப்பர்கள் காலம். வாசிப்பதற்கான பொறுமை குறைந்து வருகின்றது. கேட்பதற்கான தாகம் அதிகரித்து வரும் ஒர் ஊடகச் சூழல். யுடியூப்பர்கள் எத்தனை பேர் தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்? தான் பரப்புவது வதந்தியா செய்தியா என்று எத்தனை யுடியூப்பர்களுக்குத் தெரியும்? எத்தனை யுடியூப்பர்கள் தமிழுக்கு வெளியே போய் வாசிக்கின்றார்கள்? எத்தனை யுடியூப்பர்கள் தாங்கள் வெளியிடும் தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகிறார்கள்? இதை இன்னும் கூர்மையாகக் கேட்டால் ஒரு யுடியூப்பருக்கு என்ன தகைமை இருக்க வேண்டும்? ஒரு நல்ல கமராவும் வேகமான இன்டர்நெற்றும் இருந்தால் மட்டும் போதுமா? தாங்கள் கூறும் விடயத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு எத்தனை யுடியூப்பர்களுக்கு உண்டு? கடந்த சுதந்திர தினத்தன்று, ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அவருடைய வருகைக்கு எதிராக கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் பழைய பூங்கா வீதியில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்த வீதியின் குறுக்கே போலீஸ் ஒரு பேருந்தை நிறுத்தி வைத்திருந்தது. அவ்வாறு பழைய பூங்கா வீதி முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதை எதிர்த்து அந்த வீதி வழியாக காரில் வந்த ஒருவர் போலீசாரோடு முரண்படுகிறார். அது தொடர்பாக ஒரு யுடியூப்பர் செய்தி வெளியிடுகையில் “காரில் வந்த இந்தியர், பார்த்து மிரண்ட இலங்கை போலீஸ்” என்று தலைபிடுகிறார். அக்காணொளி ஆறு லட்சத்து எட்டாயிரம் பேர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் பொலிசாரைக் கேள்வி கேட்கும் நபர் ஒர் இந்தியர் அல்ல. சுயாதீன திருச்சபை ஒன்றின் பாஸ்டர். அவருடைய காரின் “டாஷ் போர்ட்” பகுதியில் இந்திய தேசியக்கொடி காணப்படுகின்றது. அதை வைத்து அவர் ஒரு இந்தியர் என்று யுரியூப்பர் கூறுகிறார். ஆயின்,ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் அந்தப் பொய் சென்று சேர்ந்திருக்கின்றதா? இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்ட பொழுது ஓர் இந்திய யுடியூபர் கூறினார், வெள்ளைக்காரர்கள் வாங்கி வைத்திருக்கும் பாணை உள்ளூர் மக்கள் பறித்துக் கொண்டு ஓடுவதாக. அது ஒரு பொய். பெரும்பாலான யுரியூப்பர்கள் தமது காணொளிகளைப் பார்பவர்களின் தொகையை எப்படி கூட்டுவது என்று தான் சிந்திக்கிறார்கள். பார்ப்பவர்களின் தொகை கூடக்கூட வருமானம் பெருகும். எனவே பெரும்பாலானவர்கள் உழைப்பை எப்படிப் பெருக்குவது என்றுதான் சிந்திக்கின்றார்கள். இது ஓர் ஆபத்தான வளர்ச்சி. யு ரியூப்பர்களின் காலத்தில் உண்மை எது? பொய் எது? ஊடக அறம் எது? உழைப்பு மட்டும்தான் யூரியுப் தர்மமா? சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு, தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு யு ரியூப்பர்ளுக்கு இல்லையா? வாசகரை அல்லது பார்வையாளரை விமர்சனபூர்வமாகச் சிந்திக்கும் விழிப்புடைய பிரஜைகள் ஆக்குவதே தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகவியலாளரின் வேலை. எனவே யுடியூப்பர்களின் காலத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவது எத்தனை சவால்கள் மிக்கது என்பதனை விமானப்படை கண்காட்சி தொடர்பாக வெளிவந்த பெரும்பாலான யுடியூப்கள் மீண்டும் நிரூபித்தன. இது அரசியல் கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பணி மேலும் கடினமாக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இப்படிப்பட்டதோர் ஊடகச் சூழலில், முற்றவெளியில் திரளும் மக்களைத் திட்டித் தீர்ப்பதனால் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது. தமது சொந்த அரசியலின் மீது அந்த மக்களை எப்படி உணர் திறண் மிக்கவர்களாக மாற்றுவது என்று கட்சிகள் சிந்திக்க வேண்டும். அதற்கு வேண்டிய வழிவகைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். தேசியவாத அரசியல் என்பது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது. தேசத்தை கட்டியெழுப்பும் கலையை; பண்பாட்டை; அறிவியலை; தேசத்தைக் கட்டியெழுப்பும் யுடியூப்பர்களை; தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இப்படி எழுதுவதுகூட சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கலாம். ஏனென்றால் வான்படைக் கண்காட்சி தொடர்பாக படித்தவர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களில் அதைக் காண முடிந்தது. எல்லா பிரச்சினைகளும் முடிந்து விட்டன; நாங்கள் இப்பொழுது சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்; கண்டதையும் எழுதிக் குழப்பாதீர்கள்; மக்கள் சந்தோஷமாக இருக்க விரும்புகிறார்கள்; அவர்களை மீண்டும் பலியாடுகள் ஆக்காதீர்கள்… என்று கூறும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. மக்களைத் தமது நிகழ்காலத்தின் மீது உணர் திறண் மிக்கவர்களாக மாற்ற முற்படும் எழுத்துக்களுக்கு வாசிப்பும் வரவேற்பும் குறைந்து வருகிறது. பதிலாக மாயைகளின் மீதும் பொருளற்ற மகிழ்ச்சியின் மீதும் பொய்களின் மீதும் கட்டுக் கதைகளின் மீதும் தாகம் கொள்ளச் செய்யும் ஊடக கலாச்சாரம் மேலெழத் தொடங்கிவிட்டது. வெறுப்பர்கள்-haters-எல்லாவற்றையும் எதிர்மறையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சில மாத கால இடைவெளிக்குள் யாழ்ப்பாணம் முற்ற வெளியில் மக்கள் பெருந்திரளாகக் கூடிய நிகழ்வுகளிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகமும் புத்திஜீவிகளும் கலைஞர்களும் ஊடகங்களும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆழமான வாசிப்புக் குறைந்து, ஆழமான யோசிப்பும் குறைந்து,மேலோட்டமானவைகளை நோக்கி மொய்க்கும் ஒரு ஜன சமுத்திரத்தை புதிய ஊடக மரபு உற்பத்தி செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் புதிய வளர்ச்சிகளின் பின்னணியில் “டீப் ஃபேக்” – deepfake- என்று அழைக்கப்படும் ஆழமான போலி உருவாக்கப்படுகின்றது. அது ஒரு வெகுசனப் பண்பாடாக வளர்க்கப்படுகிறது. ஆழமான பொய்களின் மத்தியில்; மறதி அதிகமுடைய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில்; தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. https://www.nillanthan.com/6615/

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மரபணு நெருக்கம்

3 months 2 weeks ago
இது ஏற்றுக்கொள்ளப்பட்டதா? சிங்களவரில் ஒரு கதை நடக்கிறது அவர்கள் குஜராத் அடி உள்ளவர்கள் என்று. இது ஒரு புறம். மாரு புறம் புத்தர் பிறந்தார் என்று. இன்னொரு புறம், நவீன orientalists, சிங்களத்துடன் சேர்ந்து, சிங்களவர் பருவக்வக்கக் காற்று இரும்பை வார்த்து அரேபியருக்கு விற்றார்கள் என்று (அனால், அரேபியரின் வரலாற்றில் அப்படி இல்லை). (https://www.exeter.ac.uk/research/projects/archaeology/metallurgy/) இதில், இரும்பு விற்கப்பட்டது என்பது பிரச்னை இல்லை - அனால் அராபியர் , மற்றும் உலோக வார்ப்பு வரலாற்றில் Monsoon steel என்று அடையாளப்படுத்தப்படும் வார்ப்பு இரும்பு இல்லை. (உ.ம். , தமிழர் (தான்) உருக்கு இரும்பை வார்க்கும் முறையை தீவுக்கு கி.மு 300 அளவில் கொண்டுவந்தார்கள் என்பதை சொல்லும் , திசைமஹராமாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டை மறைத்து விட்டது. இந்த கட்டவேட்டை பற்றி சிங்களமும், அதனுடன் சேர்ந்த ஜேர்மன் (இவ்ர்கள் சிங்களத்தின் சொல் கேட்க வேண்டும்) புதைபொருள், தொப்பொருள், மானிடவியல் ஆய்வாளர்கள் மூச்சு விடாமல் இருந்தனர், அனால், இரவாதம் மகாதேவனிடம் இது கட்டப்பட்டது (பத்தோடு பலதாக), அவரின் குறிப்புகளில் இருந்தே தெரிந்தது இப்படி ஓர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக. பின்பு அந்த கல்வெட்டை தொல்பொருள் திணைக்களம் அப்படி ஒன்றும் இல்லை என்று மறுத்துவிட்டது, அதாவது மறைத்து விட்டது.) சிங்களத்துக்கு அடையாளப் பிரச்சனை உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருந்தது. அதை ஆரிய வாத orientalists (Wilhelm Geiger முக்கியமானவர்) மகாவம்ச மீட்கை, மற்றும் அவர்களின் சில சரியான, இலங்கைத் தீவில் மொழி பற்றிய பல பிழையான கண்டுபிபிடிப்புகளை அடிப்படையாக வைத்து. இதனால் தன - ஒரு புறம் குஜராத், இராவணனின் அடி, இயக்கர், நாகர், தேவ வழித்தோன்றல்,, இன்னொரு புறம் புத்தர் இலங்கையில் பிறந்தார் என்று பல கதைகள். வரலாற்றை திரிப்பதற்கு காரணம் - பழைய கண்டறிதல்களில், விஞ்ஞான வளர்ச்சியால், தங்கி இருக்க முடியாத நிலை. ஒரு முக்கிய காரணம், மேற்கு வாங்க சாயல் கொண்ட மரபணு ஈழத்தமிழரில் 28%, சிங்களவரில் 25% என்பது, மகாவம்ச கதையை புரட்டி போட்டு இருக்கிறது. (இது பெரும் வேறுபாடு) இன்னுமொன்று, சிங்களளவரில் பெரும்பாலானோருக்கு சிங்கம் புணர்ந்து அவர்கள் உருவாக்கியவர்கள் என்ற கதை மிகவும் சங்கேடனத்தையும், வெட்கத்தையும் உருவாக்குகிறது. அதாவது, காமஇச்சையை மிருகத்திடம் தணித்த இனம் என்று துறை சார் வட்டங்களிலியே சர்வசாதரமாக எள்ளிநகையாடப்படுவது சிங்களத்தினால் பொறுக்க முடியவில்லை. அந்த கதையை எப்படியாவது அவர்களின் வரலாற்றில் இருந்து கழட்டி விட வேண்டும் என்ற முனைவுடன் இருக்கிறது சிங்களம். இன்னுமொன்று, கிந்தியா, சிங்களம் இந்தோ ஆரியன் என்ற பெரிய கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது யதார்த்தமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. இங்கு தனிப்பட்ட ஆய்வாளரை ஒன்றும் குற்றம் சொல்லவில்லை. இதில் மாதிரி எண்ணிக்கை காணும், காணாது என்ற பிரச்னை ஒரு புறம் இருக்க (ஆனல், மாதிரி அளவை நம்பக அளவுக்கு (confidence level by statistical measure) சரி பார்த்து தான் அவர்கள் ஆய்வு செய்து இருப்பார்கள் என்பது அநேகமாக நடந்து இருக்கும்). தரவு சேகரித்தலில் எழுந்தமான தன்மை பெரிய கேள்விக்குறி (தரவு சேகரித்தலின் கட்டுப்பாடு சிங்களத்தின் கைகளிலேயே இருக்கிறது).

தமிழரசுக் கட்சியிடம் இரண்டு யாப்பா??

3 months 2 weeks ago
தமிழரசுக் கட்சியிடம் இரண்டு யாப்பா?? March 16, 2024 — கருணாகரன் — நீதிமன்ற வழக்கை முடித்துக் கொண்டு வெளியேறினாலும் தமிழரசுக் கட்சிக்குப் பிரச்சினைகளும் தலையிடியும் மேலும் மேலும் கூடுமே தவிர, குறைந்து விடாது. அதற்கு உள்ளும் புறமுமாகக் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அணையுமென்றில்லை. அது நீண்ட நாட்களாகத் தொடர்ந்து கனன்று கொண்டிருந்த தணலின் விளைவு. முதலில் அதனுடைய யாப்புத் தொடர்பான பிரச்சினை. “தேர்தல் திணைக்களத்திற்குக் கொடுக்கப்பட்ட – காட்டப்பட்ட – யாப்பு வேறு. கட்சியின் நடைமுறையில் உள்ள யாப்பு வேறு” என்று ஒரு வலிமையான குற்றச்சாட்டு கட்சியின் முக்கியமான உறுப்பினர்களிடையே உண்டு. இதனால் ஏற்பட்ட சிக்கலே இப்பொழுது நீதிமன்றம் வரையில் செல்லும் நிலையை ஏற்படுத்தியது. அதாவது சட்டபூர்வமான யாப்பு ஒன்றாகவும் கட்சியின் நடைமுறைகளின்போது பின்பற்றப்படும் யாப்பு இன்னொன்றாகவும் இருந்துள்ளது என்று இது பொருள்படும். ஏறக்குறைய எழுதப்படாத இரண்டாவது யாப்பின்படியே (நழுவல் யாப்பு) காரியங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதற்கு அண்மைய உதாரணம், மத்திய செயற்குழுவினரும் ஒவ்வொரு தொகுதிக் கிளையிலும் தெரிவு செய்யப்பட்ட ஐந்து உறுப்பினரும் பொதுச்சபை உறுப்பினராவர். இதற்கமைய ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஐந்து உறுப்பினர்களே பொதுச்சபை உறுப்பினர்கள். இதன்படி 25 தொகுதியிலும் 125 உறுப்பினர்கள். மத்திய குழு உறுப்பினர்கள் 41. எனவே மொத்தம் 166 உறுப்பினர்களே பொதுச் சபை அங்கத்தவர்கள் ஆகும். (விதி 07 (ஆ)) ஆனால் தலைவர் தெரிவின்போது 321பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருக்கின்றார்கள். இது எப்படி நடந்தது? இதுதான் தமிழரசுக் கட்சியினுடைய யாப்பின் விசித்திரம். தலைமையின் சிறப்பு. மேலும் சொல்வதென்றால், யாப்பு விதியின்படி தலைவர் தெரிவின் பின்னரான அனைத்துத் தெரிவுகளையும் புதிய தலைவரின் தலைமையில் பொதுச்சபையே தீர்மானித்திருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் மத்தியசெயற்குழு கூட்டப்பட்டு பதவிநிலைகள் தீர்மானிக்கப்படும் என்றோ அதற்கு பொதுச்சபையிடத்தில் அனுமதி பெறும் முறைமையொன்று யாப்பில் கூறப்படவில்லை. ஆனால், இதையெல்லாம் மீறியே செயலாளர் தெரிவு உட்பட ஏனைய விடயங்கள் நடந்தன. ஏறக்குறைய புதிய தலைமை உட்பட நிருவாகத்தெரிவு விடயத்தில் யாப்பைக் கடந்து 15 க்கும் மேற்பட்ட விடயங்களை சென்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “எல்லாத்துக்கும் நாங்கள் யாப்பை வைத்துத்தான் செயற்பட வேண்டுமென்றில்லை” என்று அதனுடைய தலைவர் மாவை சேனாதிராஜா இந்த நெருக்கடிகளின்போது சொன்னதை இங்கே நினைவு கொள்ளலாம். தமிழ் மக்களின் மிகப் பெரிய கட்சி, பாரம்பரியம் மிக்க கட்சியின் நிலைமையையும் நடத்தைச் சிறப்பையும் பார்த்தீர்களா? இப்படிச் சொன்ன மாவைக்கு நீதிமன்றம் தக்க பாடம் படிப்பித்துள்ளது. ஆம், இது போன்ற தவறுகளால் யாப்பு, இப்பொழுது கட்சிக்கே ஆப்பு வைத்துள்ளது. அதாவது யாப்பின் பலவீனங்களும் யாப்பைப் பலவீனப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்ட தலைமை உறுப்பினர்களின் செயல்களும் கட்சியை முடக்கும் நிலைக்குள்ளாக்கியுள்ளன. கட்சியைச் சந்தி சிரிக்க வைத்துள்ளன. யாப்புத் தவறுகளை முன்னிறுத்தியே யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் கட்சிக்கு எதிரான வழக்குகள் யாப்பு விதிகளை வலியுறுத்தும் தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வளவுக்கும் தமிழரசுக் கட்சிக்குள் ஏராளம் சட்டவாளர்கள் உள்ளனர். கட்சியின் உருவாக்குநர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம், திருச்செல்வம், நாகநாதன் தொடக்கம் சம்மந்தன், சுமந்திரன், தவராஜா வரையில் பல சட்டவாளர்கள். இருந்தும் யாப்புக் குழப்பமும் குறைபாடுகளும் நீடிக்கிறது என்றால் பதவியில் குறியாக இருப்பதைப்பற்றியே ஒவ்வொருவரும் சிந்திக்கின்றனரே தவிர, கட்சியின் எதிர்காலத்தையோ மக்கள் நலனையோ அல்ல என்பது தெளிவாகிறது. இந்தத் தவறுகளிலிருந்தும் இந்தப் போக்கிலிருந்தும் தமிழரசுக் கட்சி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அது எளிய விசயமல்ல. அப்படிச் செய்ய வேண்டும் என்றால் கட்சியின் தலைமைப் பதவியிலிருப்போரும் மூத்த தலைவர்களும் தங்களைச் சுய விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும். கூடவே பல நிலைகளில் விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டும். அதாவது தகிடு தத்தங்களைக் கைவிட்டு, கட்சியை நேர்மையாக வழிநடத்த வேண்டும். யாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுவதுடன், அதிலுள்ள குறைபாடுகளும் களையப்பட வேண்டும். இதற்கு யார் தயார்? அடுத்தது, வாய்ப்பேச்சு அரசியலிலிருந்து விடுபட்டுச் செயற்பாட்டு அரசியலில்தமிழரசுக்கட்சி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இதனை “சூனிய அரசியல்” என்று சொல்கிறார், விடுதலை இயக்கமொன்றில் செயற்பட்ட சார்ள்ஸ் என்ற மூத்த போராளி. தமிழரசுக் கட்சியின் அரசியல் போதாமைகளை – அதனுடைய வளர்ச்சியின்மையைப் பார்க்க வேண்டும் என்றால் 1960, 1970 களின் சுதந்திரன் பத்திரிகையையும் இப்பொழுது தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் பேச்சுகளையும் கவனித்தால் இது தெரியும். அன்றும் இன்றும் அது வெறும் பிரகடனங்களை (பீத்தல்களை) வாய்ச்சவடால்களாக அடிப்பதையே தன்னுடைய அரசியல் முறைமையாகக் கொண்டுள்ளது. அது அரசாங்கத்துக்கு 50 ஆண்டுகளாக விடுத்த எந்த எச்சரிக்கையும் கண்டனமும் பதிலடியும் விளைவுகளை உண்டாக்கியதில்லை. பதிலாக அவற்றைக் குறித்து மக்கள் சிரிக்கும் நிலையே உருவாகியது. அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் சிரிப்பதற்கான பகடியாக இருந்தது – இருக்கிறது. என்பதால்தான் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசும்போது சிங்கள உறுப்பினர்கள் அதைப் பொருட்படுத்துவதுமில்லை. அவர்கள் அங்கே இருப்பதுமில்லை. இவர்கள் தமிழ்ப்பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காகவே பேசுகிறார்கள் என்பார் நண்பர் ஒருவர். இதுதுான் இறுதியில் தீபாவளிக்குத் தீர்வு, பொங்கலுக்குத் தீர்வு என்று தலைவர் சம்மந்தன் சொன்னதை வைத்துச் சம்மந்தனையே பகடி செய்யத் தொடங்கினர் சனங்கள். ஆழ்ந்து நோக்கினால் தமிழரசுக் கட்சியின் கையாலாகத்தனத்தை இதில் தெளிவாக உணரலாம். அது வந்து கோமாளித்தனமான தலைவர் தெரிவு வரையில் வந்து சீரழிவில் நிற்கிறது. ஆகவே 75 ஆண்டுகால அரசியற் பயணத்தில் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு எத்தகைய அரசியல் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தது? தமிழ் மக்களுடைய அரசியல், பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்கும் நிலப் பாதுகாப்புக்கும் என்ன வகையிலான பங்களிப்புகளைச் செய்தது? அவற்றின் விளைவுகள் எவ்வாறான நற்பலன்களை விளைத்துள்ளன? போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதேசங்களையும் அது மீள்நிலைப்படுத்தியுள்ளதா? அப்படியென்றால் அதை அது எப்படிச் செய்யது? எங்கே செய்தது? குறைந்த பட்சம் போருக்குப் பிந்திய அரசியலையும் சமூகத்தையும் எப்படிக் கட்டமைத்தது? முன்னெடுத்தது? என்றும் கணக்கிட வேண்டும். கட்சியும் அதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அந்தக் கட்சியை ஆதரிப்போரும் இருக்குப் பதிலளிக்க வேண்டும். அந்தக் கடப்பாடு இன்று தவிர்க்க முடியாமல் உருவாகியுள்ளது. குறைந்த பட்சம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய மறுவாழ்வுப் பணிகளிலும் யுத்த அழிவுப் பிரதேசங்களை மீளுயிர்ப்புச் செய்வதிலும் அது ஆற்றிய பணிகள் என்ன? அதனுடைய பெறுமானங்கள் – அடையாளங்கள் என்ன என்றபது அவசியமாக அது தெளிவுபடுத்த வேண்டும். மூத்தகட்சி, பெரிய கட்சி என்ற அடிப்படைத் தகுதியை அது கொள்வதாக இருந்தால் இன்று உலகமெங்கும் பரவிப் பலமடைந்திருக்கும் புலம்பெயர் மக்களை அது ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். அதைப்போல அது, தன்னுடைய ஒழுங்கமைப்பின் கீழும் ஒருங்கிணைப்பிலும் ஏனைய தமிழ்க்கட்சிகளைச் சேர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், அதற்கு எதிராக, ஏற்கனவே ஒருங்கிணைந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சிதைத்தது. தமிழரசுக் கட்சியின் ஜனநாயக மறுப்பும் எதேச்சாதிகாரப் போக்குமே ஏனைய பங்காளிக் கட்சிகள் விலகிச் செல்லக் காரணமாகின. இதையெல்லாம் யார் மறுக்க முடியும்? இப்படிச் செயற்பாடு எதுவுமே இல்லாமல், எதிர்மறையாக மக்களுக்கும் சமூகத்துக்கும் விளைவுகளை – பாதிப்புகளை உண்டாக்கும் கட்சியை எளிதில் சீராக்க விட முடியாது. அதற்கு மிகப் பெரிய அளவில் மாற்றத்தை உள்ளேயும் வெளியேயும் உருவாக்க வேண்டும். இதற்கு அது தன்னுடைய வெற்றுப் பிரகடனங்களிலிருந்து விடுபட வேண்டும். மக்களையும் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் ஏமாற்றும் அரசியலைக் கைவிட வேண்டும். தன்னை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். உழுத்துப் போன வீட்டை அல்லது கட்டிடத்தை நாம் இடித்துப் புனரமைப்பதில்லையா? அப்படி முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். சொந்த வாழ்க்கையில் நாம் தேவையற்றதையெல்லாம் கழித்து ஒதுக்கி விட்டு, புதியவைகளை வாங்கிக் கொள்கிறோம். அல்லது உருவாக்கிக் கொள்கிறோம். அது வீடாக இருக்கலாம். பொருட்களாக இருக்கலாம். துணிமணிகளாக இருக்கலாம். ஏன், மிகப் பெறுமதியான நகைகளாகக் கூட இருக்கலாம். காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைப்பது அவசியமானது. வேண்டப்படும் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இன்னும் அது தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாகப் பேராதரவோடு இருக்கிறது என்றால்…. தமிழ் மக்களின் அரசியற் தலைவிதியை என்னவென்று சொல்வது? அவர்களுடைய அரசியல் அறிவை, புத்திஜீவித்தனத்தை எப்படிக் கூறுவது? அடுத்தது, தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்துக்கான அரசியலைப் பற்றியது. தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு வகையான அரசியற் போக்குண்டு. 1. சம்மந்தன், சுமந்திரன், குகதாசன் போன்றோர் முன்னெடுக்கின்ற ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற வகையிலான அரசியல். இதற்காக அவர்கள் முஸ்லிம், மலையக, சிங்களத் தரப்பினரோடும் ஒரு மென்னிலை இணக்கப்பாட்டு உறவைப் பேணி வருகின்றனர். கூடவே விடுதலைப் புலிகள் முன்னெடுத்த தீவிர நிலைப்பாட்டை தவிர்க்கின்றனர். இதைப்பற்றி தலைவர் தெரிவு நடைபெற்ற பிறகு ஊடகவியலாளர் சிவராஜாவுக்கு வழங்கிய யுடியூப் நேர்காணலில் திரு சுமந்திரன் தெளிவாகவே சொல்கிறார். தலைவர் தெரிவில் தான் தோற்றிருந்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டை விட்டு விடப் போவதில்லை என. அது சரியானது என்றும் அவர் வாதிடுகிறார். இதனால்தான் அவர் தனியே உலக நாணய நிதியத்தின் நிதிப் பயன்பாடு பற்றிய அரசாங்கத்தின் உரையாடலில் துணிவாகச் சென்று பங்கேற்றுள்ளமையும் நிகழ்ந்திருக்கிறது. 2. சிறிதரன், மாவை, அரியநேத்திரன், சிறிநேசன் போன்றோர் முன்னெடுக்கும் தீவிரத் தமிழ்த்தேசியவாத அரசியல். இதற்கான செயல்வடிவத்துக்கு அப்பால், இவர்கள் விடுதலைப் புலிகளின் தொடர்ச்சி தாமே என்று கருதிக் கொண்டு மேற்கொண்டு வரும் தனியாவர்த்தனம். இதுவரையிலும் கூட இந்த இரண்டு போக்கும் கட்சிக்குள்ளிருந்தன. ஆனால் இப்போதுள்ளதைப்போல அதுவொரு பெரிய வெடிப்பாக வரவில்லை. இந்த இரண்டு போக்குகளையும் பயன்படுத்தி அரசியல் அறுவடையைத் தமிழரசுக் கட்சி செய்து வந்தது. சிறிதரன் புலிக்கொடியை ஏந்துவார். சம்மந்தன் சிங்கக் கொடியைத் தூக்குவார். புலிகளை ஆதரிப்போரின் வாக்குகளும் அதற்குக் கிடைத்தன. அவர்களை எதிர்ப்போரின் வாக்குகளும் கிடைத்தன. இதற்கான முடிவு ஏறக்குறைய வந்துள்ளது எனலாம். அடுத்தது, இப்போதுள்ள நிலையில் சிறிதரன் அணி மீண்டும் (நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு) தலைமையேற்றால் இன்னொரு பிரச்சினை தமிழரசுக் கட்சிக்குண்டு. சிறிதரன் மேற்கொள்கின்ற அதே தீவிர அரசியலையே கஜேந்திரகுமாரின் அணியும் மேற்கொள்கிறது. ஆகவே இரண்டு தரப்பும் களத்தில் நேருக்கு நேர் மறுபடியும் மோதக் கூடிய நிலை ஏற்படக் கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. இது முன்னொரு காலம் அகில கஜேந்திரகுமாரின் பாட்டனாரான ஜீ.ஜீ. பொன்னம்பத்தின் இலங்கைத் தமிழ்க்காங்கிரசும் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மோதியதைப்போன்றிருக்கும். ஆனால் அன்று வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் மோதல் நடந்தது. அதனால் ஜீ.ஜீ. தோற்றார். செல்வநாயகம் வென்றார். இங்கே இருதரப்பும் ஒரே நிலைப்பாட்டில் மோதப் போகிறது. ஆகவே இது மீளவும் தமிழரசுக் கட்சிக்கு இன்னொரு நெருக்கடியாகவே இருக்கும். அதேவேளை அது இந்த நிலைப்பாட்டில் இருந்தால் தமிழ்ச்சமூகம் மேலும் நெருக்கடியைச் சந்திப்பதோடு, நாட்டிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கையை மேலும் கூட்டும். சுமந்திரன் தரப்பு வெற்றியடைந்தால் அதுவும் நெருக்கடியைச் சந்திக்கும். இனப்பிரச்சினையைத் தீர்ப்பது – அரசியற் தீர்வைக் காண்பது தொடக்கம் தமிழ்ச்சமூகத்தை பொருளாதாரம் உட்பட அனைத்துத் தளங்களிலும் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இது எளிதான விசயமல்ல. இதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும். ஆகவே தமிழரசுக் கட்சிக்கு தொடர் நெருக்கடிகளும் தவிர்க்கவே முடியாத கடப்பாடுகளும் (பொறுப்புகளும்) வரலாற்று ரீதியாக வந்து சேர்ந்துள்ளன. இனியும் அதனால் முன்னரைப்போல சுழித்தோட (தப்பியோட) முடியாது. பொறுப்புச் சொல்லியே ஆக வேண்டும். https://arangamnews.com/?p=10549

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

3 months 2 weeks ago
வென்றாலும் கூட தொடர்ந்து நாலு வருடங்களுக்கு ஏற்படும்,.....ஆகவே தோற்று. ஒரு சில நாள்கள் மட்டுமே இரத்தகளரி ஏற்படுவதுடன். .....முடிவுக்கு வரட்டும். 🤣

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
எனது நேரடியான பதிலுக்கு நேர்மையான பதிலை வழங்க முடியாமல் நீங்கள் தடுமாறுவதை ரசித்தேன். 😂 உலகம் முழுவதும் உள்ள எல்லா இனங்களிலும் உள்ள இனவாதிகள் தனிப்பட்ட விடயங்களை அரசியலாக்குவதும் விவாதங்களில் பொய்யுரைப்பதும் வழமையானது தான். உங்களைக் கஷடப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

என்னோட சாதி..

3 months 2 weeks ago
உண்மை. ஆசாரவாதிகள் அவர்கள் நாட்டில் இருந்து புறப்பட்ட காலத்திலேயே உறைந்துவிட்டவர்கள். சமூக முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் மிகவும் குறுகிக்கொண்டுதான் போகின்றனர். காலம் அவர்களைக் காணாமல் போகச் செய்யும். இரண்டாவது காணொளியில் பவனீசனை உற்சாகமாகப் பேசவைக்கும் அளவிற்குத் தமிழர்களில் முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் அதிகமாக உள்ளனர்.

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
உங்கள் கேள்வியென்ன.... அதற்கான எனது பதில் என்ன..... என்பதை ஒருதடவைக்கு மேல் விளக்கியுள்ளேன். இதற்குமேல் என்னால் முடியவில்லை. நீங்கள் சொல்வதை சொல்லி சரியென்று நிறுவுங்கள், அதற்கு நான் பொறுப்பல்ல. நான் எந்தக்குடும்ப விவகாரத்தையும் அலசவில்லை. கபித்தனின் பதிவுக்கே, நாமேதோ ..... என்கிற பதிலை பதிந்தேன். யாராவது முடிந்தால் தயவு செய்து விளங்கப்படுத்துங்கபடுத்துங்களேன். இன்றைக்கு என்னோடு சன்னதமாடுவதென்றே வந்து நிற்கிறார்.
Checked
Fri, 07/05/2024 - 11:33
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed