புதிய பதிவுகள்2

தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன

3 months 2 weeks ago
மருத்துவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தொடர்ச்சியாக மக்களை அறிவுறுத்தவேண்டும். சமவிகித உணவு, உடலுழைப்பு போன்றவை அருகிவருகிறது.

தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன

3 months 2 weeks ago
புட்டுக்குழல் ஐஸ் கிறீ ம் வந்திட்டுது...வடக்கில் அது சாப்பிட்டால் கெத்து...இனி நீத்துப்பெட்டி ஐஸ் கிறீமும் வரும்....பலூடா வகை வகையாக....அப்ப சீனி வருத்தம் கூடுமோ கூடாதோ..

மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு

3 months 2 weeks ago
இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசிகள் இல்லை தானே அண்ணை? எனக்கும் தம்பிக்கும் நிமோனியா வராதிருக்க தடுப்பூசி போடவேணும் என எமது வைத்தியர் கூறியிருந்தார்.

குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி

3 months 2 weeks ago
அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் - பெரும்பான்மை பெற்றது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கைலா எப்ஸ்டீன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தமது கட்சிகளின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான பிரதிநிதித்துவ பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவைப் பெற்றுள்ளனர். நான்கு மாகாணங்கள், ஒரு அமெரிக்க பிரதேசம் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஜனநாயகக் கட்சியினர் செவ்வாயன்று தங்கள் முதன்மைத் தேர்வுகளை நடத்தினர். இதன் விளைவாக, அமெரிக்க வாக்காளர்கள் எட்டு மாதங்களில் அதிபர் தேர்தலை எதிர்கொள்வார்கள். இந்தக் கோடையில் நடைபெறும் கட்சி மாநாடுகளில் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். கடந்த செவ்வாயன்று 81 வயதான அதிபர் ஜோ பைடன் பேசியபோது, "டிரம்ப் முன்வைக்கும் அச்சுறுத்தல் முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கும் தருணத்தில் வாக்காளர்கள், தான் மீண்டும் போட்டியிடும் முயற்சியை ஆதரிப்பதை கௌரவமாகக் கருதுவதாக" கூறினார். நேர்மறையான பொருளாதாரப் போக்குகளை மேற்கோள் காட்டி, அமெரிக்கா "மீண்டும் வருவதற்கான(பாதையின்) நடுவில்" இருப்பதாக அவர் கூறினார். ஆனால் ஒரு ஜனநாயக நாடாக அதன் எதிர்காலத்திற்கு சவால்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES அத்துடன் கருக்கலைப்பு கட்டுப்பாடுகளை நிறைவேற்றவும் சமூக திட்டங்களைல் குறைக்கவும் முயல்பவர்களிடம் இருந்தும் சவால்களை எதிரக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார். "அமெரிக்க மக்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என பைடன் தனது பிரசாரத்திற்கான தேர்தல் அறிக்கையில் கூறினார். பைடன் தற்போது அதிபர் பதவியில் இருப்பதால், இது அவருக்கு இயல்பாகவே பலத்தைத் தருகிறது. அவர், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வாவதற்கு அவர் கடுமையான சவால்களை எதர்கொள்ளவில்லை. அவர் வயது மூப்பின் காரணமாக, அவர் அதிபர் பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் இருப்பதாக வாக்காளர்களிடம் இருந்து கருத்துகள் வந்தபோதிலும், அவர் சார்ந்திருந்த கட்சி அவருக்கு பக்கபலமாக இருந்தது. இதற்கிடையில், 77 வயதான டிரம்ப், குடியரசுக் கட்சியின் வாக்காளர் தளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். இது அவரை நன்கு நிதியளிக்கப்பட்ட போட்டியாளர்களைவிட அதிக ஆதரவு பெற்று வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறுவதற்கு உந்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப், குற்றங்களுக்கு எதிராகப் போராடவும், உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டு இறக்குமதிக்கு வரி விதிக்கவும், யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், உலக விவகாரங்களில் அமெரிக்காவை முதன்மைப்படுத்தும் அணுகுமுறையை மீண்டும் தொடங்கவும் சபதம் செய்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இருவரும் இதுவரை கட்சியில் நடந்த வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். நவம்பரில் அதிபர் பைடனுக்கும், முன்னாள் அதிபர் டிரம்புக்கும் இடையில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், அமெரிக்கர்கள் அதிருப்தி அடையும் வகையில் சில சமிக்ஞைகள் இருந்தபோதிலும், அவர்கள் மீண்டும் போட்டியிடுவது தீர்மானிக்கப்பட்டதாகவே தோன்றியது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தங்கள் முதன்மை வேட்பாளர் தேர்வு செய்வதற்கான விதிகளில் சிறு வித்தியாசங்கள் இருந்தாலும், செயல்முறை அடிப்படையில் இண்டும் ஒன்றுதான். ஒவ்வொரு மாகாணத்திற்கும் கட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு ஒதுக்கப்படுகிறது, அவை வெற்றிபெறும் வேட்பாளருக்கு ஒட்டுமொத்தமாகவோ அல்லது விகிதாசாரமாகவோ முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும். குடியரசுக் கட்சி வேட்பாளர் தனது அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற முதன்மை சீசனில் குறைந்தபட்சம் கட்சியின் 1,215 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற வேண்டும். அதேநேரம் ஒரு ஜனநாயகக் கட்சி 1,968 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற வேண்டும். செவ்வாயன்று, குடியரசுக் கட்சியினர் மிசிசிப்பி, ஜார்ஜியா மற்றும் வாஷிங்டன் மாகாணத்தில் முதன்மைக் கூட்டங்களையும், ஹவாயில் ஒரு காக்கஸையும் நடத்தினர். ஜனநாயகக் கட்சியினர், இதற்கிடையில், ஜார்ஜியா, வாஷிங்டன் மற்றும் மிசிசிப்பி மாகாணங்களிலும், வடக்கு மரியானா தீவுகளிலும், வெளிநாடுகளில் வாழும் ஜனநாயகக் கட்சியினருக்காகவும் முதன்மைப் போட்டிகளை நடத்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES பைடன் மற்றும் டிரம்பின் முக்கிய போட்டியாளர்கள் செவ்வாய்கிழமை முதன்மை போட்டிகளுக்கு முன்பே வெளியேறிவிட்டனர், எனவே முடிவுகள் அனைத்தும் உறுதியாக இருந்தன. டிரம்பின் கடைசி போட்டியாளரான முன்னாள் ஐநா தூதர் நிக்கி ஹேலி, சூப்பர் செவ்வாய் அன்று டிரம்பிடம் 14 மாகாணங்களை இழந்த பின்னர் இந்த மாதத் தொடக்கத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார். இன்னும் பல மாகாணங்கள் தங்கள் முதன்மைப் போட்டிகளை நடத்தவில்லை என்றாலும், டிரம்ப் மற்றும் பைடனுக்கு தேவைப்படும் பிரதிநிதிகளின் ஆதரவுக்கு மேல் உள்ளது. இதனால், 2024 பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடும் இப்போது திறம்பட நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024 அன்று நடைபெறவுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cnekg3rze2ro

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

3 months 2 weeks ago
ஐ.பி.எல் 2024 தொடர்: பயிற்சியை தொடங்கிய சி.எஸ்.கே கெப்டன் டோனி இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22 ஆம் திகதி தொடங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கெப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் கெப்டன் டோனி தனது பயிற்சியை இன்று தொடங்கியுள்ளார். இது தொடர்பாக புகைப்படத்தை சி.எஸ்.கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு ஒன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி, கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக சர்ச்சை எழுந்ததை ஒட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/295433

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

3 months 2 weeks ago
இது பல ஆண்டுகளாக நடக்கிற "வேஸ்ற் வெற்று" உரையாடல். இதற்கு பதில்கள் சொல்வதை விட கேள்விகள் கேட்டால் கம் மென்று போய் விடுவினம், எங்களுக்கும் நேரம் மிச்சம்! பெருமாள் மேலே சொன்ன சுமந்திரன் கொலை முயற்சி வழக்கு சுமந்திரன் போட்டதல்ல, சுமந்திரனின் முறைப்பாட்டினால் பொலிஸ் போட்டதும் அல்ல! பொலிஸ் புலனாய்வுப் பிரிவு போட்ட கிரிமினல் வழக்கு. இதைச் சுமந்திரன் போட்டதாகச் சொன்ன பெருமாளிடம், அதற்குரிய கோர்ட், பொலிஸ் முறைப்பாட்டு ஆதாரத்தைத் தரும்படி 2 ஆண்டுகள் முன்பு கேட்டிருந்தேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் - ஆள் எதையும் தேடுவதில் கில்லாடி, ஆனால் கண்டு பிடிப்பதில் அவ்வளவு சிறப்பானவர் அல்ல😂!

முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை

3 months 2 weeks ago
முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்: இலங்கை பாஸ்போர்ட் கிடைத்ததும் எங்கே செல்கின்றனர்? பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு இலங்கை அரசின் கடவுச் சீட்டை பெறுவதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன. அவர்கள் எங்கே செல்லவிருக்கிறார்கள்? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் பேரறிவாளனும் நவம்பர் மாதத்தில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள். ஸ்ரீஹரன் என்ற முருகன் (நளினியின் கணவர்), சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சாந்தன் இலங்கை பாஸ்போர்ட் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் இலங்கையின் பாஸ்போர்ட் இருந்தது. ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழகத்திற்கு வந்தவுடன் அகதிகளாகப் பதிவுசெய்து கொண்டவர்கள். ராபர்ட் பயஸின் மைத்துனர்தான் ஜெயக்குமார். உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள் என்பதால் தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், இலங்கை குடிமக்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். பட மூலாதாரம்,STR/AFP VIA GETTY IMAGES முகாமில் இருந்து விடுவித்து தாங்கள் விரும்பும் நாட்டிற்குத் தங்களை அனுப்பி வைக்க வேண்டுமென தொடர்ந்து இவர்கள் கோரி வந்தனர். ஆனால், இவர்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட்கள் இல்லாத காரணத்தால், தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமிலேயே வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சாந்தனுக்கு உடல்நலம் குன்றியது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கான பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன. இருந்தபோதும், அவர் மருத்துவமனையிலேயே காலமானார். அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள மூவருக்கும் பயண ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இந்நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால் தனக்கும் தன் கணவருக்கும் விசாவுக்காக விண்ணப்பித்து இருந்ததாகவும் நேர்காணலுக்காக ஜனவரி 30ஆம் தேதி அழைக்கப்பட்ட நிலையில், தான் மட்டும் நேர்காணலில் கலந்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார். முருகன் சிறப்பு முகாமில் இருந்ததால் நேர்காணலில் கலந்துகொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். திருச்சி சிறப்பு முகாமில் உள்ள மோசமான சூழிலின் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் இறந்துவிட்ட நிலையில், தனது கணவருக்கு எதுவும் நடப்பதற்கு முன்பாக அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனவும் நளினி கோரியிருந்தார். பட மூலாதாரம்,HANDOUT இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் மார்ச் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மூவரின் நேர்காணலுக்காக புதன்கிழமையன்று சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நண்பகல் 12 மணியளவில் அவர்கள் தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களைக் காண்பதற்கு, நளினி, ஜெயக்குமாரின் குடும்பத்தினர், அவர்களது வழக்கறிஞர்கள் ஆகியோர் வந்திருந்தனர். சுமார் 2 மணியளவில் விண்ணப்பிப்பதற்கான பணிகள் முடிந்து அவர்கள் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் எங்கே செல்லவிருக்கின்றனர்? பட மூலாதாரம்,GETTY IMAGES நளினிக்கு இந்திய குடியுரிமை இருப்பதால் விடுதலைக்குப் பிறகு அவர் இங்கேயே வசித்து வருகிறார். நளினி - முருகன் தம்பதியின் மகள் பிரிட்டனில் இருப்பதால், முருகனுக்கு பாஸ்போர்ட் கிடைத்தால் இருவரும் பிரிட்டன் செல்ல விரும்புகின்றனர். இதற்கான விண்ணப்பங்களை நளினி சமர்ப்பித்திருக்கிறார். ஜெயக்குமாரை பொறுத்தவரை அவருடைய மனைவி இந்தியாவை சேர்ந்தவர். அவர் தனது மகன் பார்த்திபன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் சென்னையில்தான் வசித்து வருகிறார். ஆனால், பாஸ்போர்ட் கிடைக்கும் பட்சத்தில் ஜெர்மனியில் உள்ள தனது சகோதரருடன் சென்று வசிக்க ஜெயக்குமார் விரும்புவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ராபர்ட் பயஸை பொறுத்தவரை, அவருடைய உறவினர்கள் நெதர்லாந்தில் வசிக்கின்றனர். ஆகவே அவர் நெதர்லாந்து செல்ல விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேர் தண்டிக்கப்பட்டனர். இதில் 13 பேர் இலங்கைத் தமிழர்கள். உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டபோது ஏழு பேரைத் தவிர மற்ற 19 பேர் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 19 பேரில் 9 பேர் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அகதிகளுக்கான சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர். அவர்களில் பாஸ்போர்ட் வைத்திருந்த, முறையான விசாக்களில் இந்தியா வந்த 3 பேர் உடனடியாக இலங்கைக்குச் சென்றனர். மீதமிருந்தவர்கள் சில நாட்களில் இலங்கையிலும் அதன் பிறகு வெளிநாடுகளிலும் குடியேறினர். https://www.bbc.com/tamil/articles/cy6zdvd6056o

மேய்ப்பன்

3 months 2 weeks ago
மேய்ப்பன் ---------------- ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று நாங்கள் ஊரில் சொல்வதுண்டு. ஒருவர் உருப்படி இல்லாமல் இருக்கின்றார் அல்லது உருப்படவே மாட்டார் என்று தெரிந்தால், அவரின் வீட்டில் குறைந்தது ஒரு ஆமையாவது இருக்க வேண்டும் என்றும் நினைக்கலாமாக்கும். ஒரு தடவை இங்கு ஒரு அயலவரின் வளர்ப்பு ஆமை காணாமல் போய்விட்டது. நேரடியாக என் வீட்டுக் கதவைத் தட்டினார். 'என்னுடைய ஆமை வீட்டை விட்டு ஓடிவிட்டது, உங்கள் வீட்டிற்கு அது வந்ததா?' என்று கேட்டார். அவரின் கேள்வி விளங்க எனக்கு சில விநாடிகள் எடுத்தது. அவரின் ஆமை இரவோடிரவாகவே ஓடியிருக்க வேண்டும் என்றும் சொன்னார். ஒரு ஆமை ஒரு இரவில் எவ்வளவு தூரம் போயிருக்கும் என்று நான் கணக்குப் போடத் தொடங்கினேன். ஆனால் அயலவரோ ஆமை என் வளவிற்குள்ளேயே இருக்கின்றது என்பது போல வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். பலத்த தேடுதலின் பின் ஆமை என் வளவிற்குள் இல்லை என்று முடிவாகியது. நிலையான ஒரு புள்ளியிலிருந்து ஒரு குறித்த மாறாத தூரத்தில் இயங்கும் ஒரு புள்ளியின் ஒழுக்கு வட்டம் என்று மனம் சொல்லிக் கொண்டேயிருக்க, கதவு மீண்டும் தட்டப்பட்டது. இன்னொரு அயலவர் கையில் ஒரு பெரிய ஆமையுடன் வாசலில் நின்றார். 'உங்களின் ஆமை என் வீட்டுக்கு வந்துவிட்டது' என்று ஆமையை என்னிடம் நீட்டினார். ஆமைக்கும், எனக்கும் எக்கச்சக்கமான தொடர்புகள் இருக்க வேண்டும் என்று ஏன் இவர்கள் எல்லோரும் நினைக்கின்றார்கள் என்று நான் நினைத்தேன். ஆமை இறைச்சி கூட இதுவரை சாப்பிட்டதும் இல்லை. அப்பொழுது தான் நான் அந்த ஆமையை முதன்முதலாகப் பார்த்தது. பெரிய ஓட்டு ஆமை. அவர் நீட்டவும், ஆமையும் ஓட்டுக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டியது. 'அடடே, உங்களின் ஆமைக்கு உங்களைத் தெரிகின்றதே' என்று அவர் ஆச்சரியம் காட்டிச் சிரித்தார். இருவருமாக ஆமையை உரியவரிடம் கொடுத்தோம். ஆமையை ஓடவிட்டவர் எனக்கு நன்றி சொன்னார், புதிதாக ஆமை புகுந்த வீட்டுக்காரர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். ஒரு நேரும், ஒரு மறையும் சேர்ந்து ஒன்றுமில்லை என்றாகியது. ஆமை மறந்து, காலம் முயல் போன்று ஓட, இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக, ஏலியன்ஸ் இங்கு வந்திறங்கினால் என்ன சொல்லித் தப்பலாம் என்று வாசலில் நின்று பகலிலேயே வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏலியன்ஸ் ஏன் அமெரிக்காவில் மட்டும் வந்து இறங்குகின்றார்கள் என்று தெரியவில்லை. இதுவரை இங்கு வாழ்ந்த மொத்த காலங்களிலும் சில டோஸ் ஃபைஸர் கோவிட் மருந்து மட்டுமே இலவசமாக கொடுக்கப்பட்ட ஒரே ஒரு பொருளும், நிகழ்வும். ஏலியன்ஸ் அரிசி, பருப்பு, காசு, வீடு இப்படியானவற்றை இலவசமாக வழங்கும் ஒரு நாட்டில் இறங்கினால், அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏதாவது தேறும். அமெரிக்காவில் எதுவும் தேறாது. கழுத்து வலித்து, ஏலியன்ஸை விட்டு பார்வையை கீழே இறக்கினால், அதே ஆமை வீதியைக் கடந்து என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த வீட்டுக்காரர் பாவம், இரவில் தான் ஆமை ஓடுகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். இது 24 மணிகளும் ஓடுகின்ற அதே பழைய ஆமை. இந்தப் பரம்பரை இப்படித்தான் முயலை வென்றது. ஆமையை அங்கேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாலு அடிகள் பாய்ந்து நான் போக, ஆமையும் நானும் நடுரோட்டில் சந்தித்தோம். ஆமை அங்கேயே நடுரோட்டில் படுத்துவிட்டது. இந்தப் பக்கம் என்னுடைய வீடு, அந்தப் பக்கம் ஆமை வாழும் வீடு, நடுரோட்டில் ஆமையும் நானும், அப்பப்ப கார்கள் வந்து போகும் தெரு அது. ஊரில் வாத்து மேய்ப்பது என்பார்கள், சவூதியில் போய் ஒட்டகம் மேய்ப்பது என்பார்கள், அமெரிக்கா போய் ஆமை மேய்க்க வேண்டும் என்று எவரும் சொல்லவேயில்லை.

ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்

3 months 2 weeks ago
உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் – அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின் ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, அணு ஆயுத போரைத்தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். ஆனாலும் நாங்கள் அதற்கு தயாராகவே உள்ளோம். என்றார். அப்போது அவரிடம் உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்து சிந்தித்தது உண்டா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு புதின், அதற்கான அவசியம் இருந்ததில்லை. உக்ரைனில் மாஸ்கோ அதன் இலக்கை அடையும். பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராவே உள்ளோம். என்றார் இவ்வாறு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பாக புதின் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://thinakkural.lk/article/295606

வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.

3 months 2 weeks ago
மனைவி பாவம்தான் ஆனாலும் இறந்தவர் ஒன்றும் பரிதாபத்துக்குரியவர் அல்ல. குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் கூடுமிடம் என்றுகூட பார்க்காது ஒரு ஆலய வளாகத்தில் வாள்வெட்டு நடத்தி யாழின் அமைதியை முதலில் குலைத்தது அவர், அவர்மீது தாக்குதல் நடத்தி யாழின் அமைதியை இரண்டாவது தடவையாக குலைத்தது இவர்கள். கடற்படை இவரை காப்பாற்றியிருந்தாலும் யாழ்நகரில் வாழும்வரை கண்டிப்பாக இவர் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுக்கொண்டே இருந்திருப்பார். ஏனென்றால் இவரும் இவர் எதிரிகளும் வெட்டினால்தான் எதிரிக்கு பயத்தை ஏற்படுத்தலாம் தமக்கு கெளரவம் என்று வாழ்கிறவர்கள். இரு கூட்டம் மீதும் கவலையில்லை, பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாதது மெது மெதுவாக அழியலாம் தப்பில்லை.

கனடா உயர்ஸ்தானிகருக்கும் அநுர குமாரவுக்கும் இடையே சந்திப்பு

3 months 2 weeks ago
கனடா வாழ் புலம்பெயர்ஸ் களைச் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்ய உதவும்படி JVP இங்குள்ள நாகத அரசைக் கேட்டார்களாம் அதற்கு அவர்கள் எங்களுக்கு official request தராமல் ஏது செய்ய முடியாது எனக் கூறப்பட்டதாம். தாங்கள் சந்திக்கவும் மாட்டார்கள் என்றார்களாம். JVP யும் தனது கனடா விஜயத்தில் புலம்பெயர்ஸ் ஐ சந்திப்பதற்கான ஒழுங்குபடுத்துதலை சரியான முறையில் செய்யவில்லை எனக் கேள்வி. 🥺 புலம்பெயர்ஸ் கொடி பிடிக்க ஆட்சேர்க்கும் ஏற்பாட்டை ஆரம்பிக்கலாம்’ 🤣 விசுகரின் கோபம் காரணமாக திருத்தம் செய்துள்ளேன்.

வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.

3 months 2 weeks ago
தமிழ் அரசியல் வாதிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். இது ஒரு பாரதூரமான நிகழ்வு.

தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி

3 months 2 weeks ago
இது புதுசு..........இன்னும் இவர் சொல்லாத எத்தனை திருக்குறள்கள் இருக்குது, அதில் ஏதாவது ஒன்றை எடுத்து விடுவதை விட்டிட்டு, இது என்ன புதுப் பழக்கம். ராதிகா சொல்லித்தான் தான் பாஜகவில் சேர்ந்ததாக சரத்குமார் முந்தாநாள் சொல்லியிருந்தார். ஆகவே மோடிஜி ராதிகாவின் காலில் விழுவதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கின்றது.

டிக்டொக்கினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - முகநூல் பொதுமக்களின் எதிரி - டிரம்ப் கருத்து

3 months 2 weeks ago
ட்ரம்ப் அவர்களே, நாட்டில் இந்த இரண்டையும் நீங்கள் தடை செய்யா விட்டாலும், குறைந்தபட்சம் உங்களின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே இந்த இரண்டையும் நீங்கள் தடை செய்தால், நீங்கள் கனவில் கூட நினைத்திராத ஒரு வாக்கு உங்களுக்கு கிடைக்கும்.....😀 இங்கு டிக்டொக் ஓடுவதே உங்களின் ரசிகர்களினால் தான்.
Checked
Wed, 07/03/2024 - 04:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed