புதிய பதிவுகள்2

மயிலம்மா.

3 months 2 weeks ago
மயிலிறகு ........... 13. வாமன் அந்த சாவிகளைப் பயன்படுத்தி யந்திரத்தை மூடியிருந்த இருபக்கப் பெட்டிகளையும் கழட்டிவிட்டு அழுக்கேறியிருந்த பில்டர், பிளக் எல்லாவற்றையும் சுத்தமாக்கி மீண்டும் பொருத்தி விடுகிறான்.பின் அதில் சாவிபோட்டு பொத்தானை அமுக்க அது இயங்கத் தொடங்கி விட்டது. சிறிது நேரம் அதை அப்படியே ஓடவிட்டு நிப்பாட்டுகிறான். பின் பக்கத்துப் பெட்டிகளை பூட்டும்போது அதில் ஏதோ நெகிழிப் பையில் சுற்றியபடி இருக்க முதலில் அதை வாகனப் புத்தகம் என்று நினைத்தவன் எதுக்கும் பார்ப்பம் என்று எடுத்துக் பார்க்க அதில் வாகனப் பத்திரத்துடன் தனியாக ஒரு கட்டுப் பணமும் இருக்கு.அதைமட்டும் பூட்டாமல் அருகில் வைத்து விட்டு அருகில் இருந்த குழாயில் தண்ணிர் எடுத்து வண்டியை நன்றாக கழுவித் துடைத்து விடுகிறான். அப்போது அஞ்சலா ஒரு பையுடன் அங்கு வருகிறாள். அஞ்சலா இங்கு கொஞ்சம் வாங்கோ என்று அழைத்து அந்தப் பணக்கட்டை எடுத்து இது இங்கே இருந்தது என்று சொல்லித் தருகிறான். அதை அவள் வாங்கிப் பார்த்துக் கையில் வைத்துக் கொண்டு அது சரி வண்டிக்கு நீ முன்பணம் தரவேண்டும் என்கிறாள்.அவனும் அதுக்கென்ன என்று சொல்லி இப்பதான் விதானையார் சம்பளப்பணம் தந்தவர் என்று அதில் இருந்து ஒரு ஆயிரம் ரூபாவை எண்ணிஎடுத்து மீண்டும் பொக்கட்டில் தேட அவள் என்ன என்று கேட்கிறாள்......அதுவந்து இன்னும் ஒருரூபாய் தேடுகிறேன் என்று சொல்ல அங்கிருந்த ஆச்சி தனது கொட்டப்பெட்டிக்குள் இருந்து ஒரு ரூபா நாணயத்தை எடுத்து அவன் கையில் தர அதை அப்படியே அஞ்சலாவின் கைகளில் தருகிறான். அவளுக்கு அவன் செயல்களைப் பார்க்க சிறுபிள்ளைத்தனமாயும் சிரிப்பாகவும் இருக்கிறது. மேலும், உன்னிடம் யாராவது இந்த சைக்கிள் சம்பந்தமாய் ஏதாவது கேட்டால் நான் அதை திருத்தத் தந்தது என்று சொல்லி அவர்களை என்னிடம் அனுப்பு என்கிறாள். பின் தன் கையில் இருந்த பையை வண்டியின் பக்கப் பெட்டியில் வைத்து விட்டு இதில் கொஞ்சம் வெற்றிலை, தேசிக்காய், மாங்காய் பணியாரம் எல்லாம் இருக்கு கொண்டுபோய் உன் வீட்டுக்கும் மயிலக்கா வீட்டுக்கும் குடு என்கிறாள். அவனும் அவளுக்கு மிகவும் நன்றி சொல்லி விட்டு மோட்டார் சைக்கிளை வீதிக்கு உருட்டிக்கொண்டு வந்து சர் என்று சீறிக்கொண்டு பறக்கிறான். வீட்டுக்கு வர அவன் தாய் தம்பி உனக்கு ஒரு தபால் வந்திருக்கு, அப்பாதான் கையெழுத்துப் போட்டு வாங்கினவர் என்று சொல்லிக் குடுக்கிறா. அதோடு கொஞ்ச நேரத்துக்கு முதல் மயூரியும் வந்திருந்தவ. உன்னை அங்காலுபக்கம் காணேல்லயாம் ஏதும் சுகயீனமோ என்று பார்க்க வந்தவ. ஓமன அம்மா இப்ப கொஞ்சம் வேலைகள் கூட அதுதான் அங்காலுபக்கம் போகேல்ல. எனக்குத் தெரிந்த ஆட்கள் இந்த மோட்டார் சைக்கிளை வச்சு பாவிக்கச்சொல்லி தந்திருக்கினம் என்று சொல்லி விட்டு கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறான். அது அவன் கிராமசேவகர் நியமனத்துக்கான கடிதம். அந்த நல்ல செய்தியை தாய் தகப்பனிடம் சொல்லிவிட்டு நாளைக்கு அரசு விதானையிடம் சென்று அதற்குரிய சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். இனி நான் கிராமசேவகர் அம்மா என்று சொல்லியபடி பக்கப் பெட்டியைத் திறந்து பையை எடுத்து தாய்க்கு அஞ்சலா தந்த பொருட்களை எடுத்துக் குடுக்கும்போது அங்கு அவன் அஞ்சலாவிடம் குடுத்த பணப்பை இருக்கின்றது. அஞ்சலா நான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன் என்று கண்களை மூடி சொல்லிக் கொள்கிறான். சரியம்மா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாறன் என்று சொல்லிவிட்டு நேராக கடைத்தெருவுக்கு செல்கிறான். அங்கு ஒரு கடைக்குள் சென்று தொலைபேசி வாங்கி சுந்துவுக்கு போன் செய்ய சிறிது நேரத்தில் சுந்துவுக்கு தகவல் போய் அவன் வந்து தொடர்பு கொள்கிறான். அவனிடம் வைத்தி வீட்டில் பணம் வாங்கியதில் இருந்து இன்று தனக்கு வேலை கிடைத்தது வரை சொல்கிறான்.சுந்துவும் தான் கல்யாணத்துக்கு ஒரு கிழமைக்கு முன் வருவதாகச் சொல்கிறான். பின் அங்கு ஒரு புடவைக்கு கடைக்கு சென்று சில பல புடவைகள்,வேட்டிகள், காற்சட்டை சேர்ட்டுகள் என்று எல்லோரையும் நினைத்து தனித்தனியாக பார்சல் பண்ணி எடுத்துக் கொள்கிறான். இப்பொழுது கையில் நிறையப் பணம் இருக்கின்றது அத்துடன் வேலையும் கிடைத்திருக்கு.அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி, இன்று யார் முகத்தில் முழித்தேனோ தெரியவில்லை. வெளியே வரும்போது அங்குள்ள பொம்மை அணிந்திருந்த சுடிதாரைப் பார்த்ததும் அஞ்சலாவின் நினைவு வர அவளுக்கு இது மிகவும் அழகாய் இருக்கும் என்று நினைத்து அதோடு அவள் தாய் தந்தைக்கும் சேர்த்து ஆடைகள் வாங்கிக் கொள்கிறான். பின் செருப்புக்கு கடைக்கு சென்று நல்ல நல்ல செருப்புகள் மற்றும் பாட்டா செருப்புகள், இனிப்புகள் சொக்கிலேட் எல்லாம் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்து தாயிடம் சேலைகள் வேட்டிகள் இருக்கும் பார்சலைக் குடுத்து விட்டு அஞ்சலா வீட்டுக்கு வருகிறான். அப்போது அஞ்சலா திண்ணையில் இருந்தவள் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டதும் எதோ நினைவில் வைத்தி என்று நினைத்து ஓடிவந்து கேட்டைத் திறக்கிறாள். அங்கு சைக்கிளுடன் வாமனைக் கண்டதும் ஒரு நிமிடம் தனது செயலை நினைத்து வெட்கம் வருகிறது. வாமனும் சைக்கிளை ஸ்ராண்டில் நிப்பாட்டி விட்டு என்ன சிரிக்கிறீங்கள் என்று கேட்டுக்கொண்டே ஒரு பார்சலைக் கொண்டு வந்து அவளிடம் தருகிறான். அவளும் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு அதை வாங்கி அவன் முன்பே திறந்து பார்க்கிறாள். அதில் வேட்டி சேலைகளுடன் ஒரு அழகான சுடிதாரும் பொன்னிற வாருடன் ஹீல்ஸ் வைத்த செருப்பும் இருக்கிறது. அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன. இப்படி ஒரு பரிசு இதுநாள் வரை எனக்கு யாரும் தந்ததில்லை. நீ எனக்குத் தந்தது பெரிதில்லை என் பெற்றோரையும் நினைத்து வாங்கிக் கொண்டு வந்தது என்னை என்னவோ செய்யிறதெடா ......சீ ....போடா....என்னை கொஞ்சம் தனியா விடுடா....நிறைய அழவேனும் போல் இருக்குடா. அந் நிலையிலும் அவள் உன் பெற்றோருக்கும் உடுப்புகள் எடுத்தனியாடா என்று கேட்க ....வாமனும் ஓம் அவைக்கும் எடுத்து அங்கேயும் குடுத்து விட்டுத்தான் வருகிறேன். பின் அவன் அவளை நெருங்கிச் சென்று அவளது கைகளை எடுத்து சிறிது நேரம் தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்திருந்து விட்டு எதுவும் பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு மயிலம்மா வீட்டுக்கு வருகிறான்........! 🦚..........மயில் ஆடும்.......... 13.

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
காவல்துறையினரின் தகவல் பரிமாற்றதில் முன்னுக்கு பின் முரனான செய்தி பரிமாற்றங்களை பார்க்க முடிந்தது..உதாரணததிற்கு இறந்தவர்களை விட ,மற்றும் 7 பேர் காயப்பட்டுள்ளார்கள் என்ற தகவலைக் கூட செய்தி ஊடகங்களுக்கு வழங்கியருந்தார்கள்.

விரைவில் தேசிய கல்விக் கொள்கை : பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு - விஜயதாச ராஜபக்ஷ

3 months 2 weeks ago
தேசிய கல்விக் கொள்கை விரைவில் தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண சபை பாடசாலைகள் என்ற பாகுபாடின்றி ஒரே வகையான பாடசாலைகளை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “கல்வி சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பில் தேசியப் பாடசாலைகள் மற்றும் மாகாண சபைப் பாடசாலைகள் என்றவாரு இன்றி ஒரே வகையான பாடசாலையே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கண்காணிப்புக் குழு ஆலோசித்து வருகிறது. இது ஒரேயடியாக முடியாது, ஆனால் அது படிப்படியாக, படிப்படியாக சாத்தியமாகும். மாணவர்களுக்கான அனைத்தும் கல்வி சீர்திருத்தங்களுடன் வருகின்றன. வகுப்பறையில், ஒரு பாடத்தின் அலகு முடிந்ததும், ஒரு பயிற்சி செய்யப்படுகிறது. அது புள்ளிகள் வழங்கப்பட்டு முடிக்கப்படும். பல நாடுகள் இப்படித்தான் இயங்குகின்றன. கல்விக் கொள்கை உள்ளது. இது காலப்போக்கில் மாற வேண்டும். அந்த வித்தியாசத்தை நாங்கள் ஏற்படுத்துகிறோம். இது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் செய்யப்படும். அப்போது அமைச்சர் மாறினாலும் திட்டங்கள் மாறாது. மாற்றம் வேண்டும் எனில் அதை மீண்டும் பாராளுமன்றத்திலேயே செய்ய வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/295630

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
6 இலங்கையர்கள் படுகொலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்! கனடாவில் 6 இலங்கையர்களை படுகொலை செய்ய வேட்டையாடும் கத்திக்கு ஒத்த கத்தியையே சந்தேகநபர் பயன்படுத்தியுள்ளதாக ஒட்டாவா பொலிஸ் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இலங்கையர்கள் ஆறு பேரையும் கொலை செய்ய சந்தேகநபர் ஒரு கத்தியினை பயன்படுத்தினாரா அல்லது பல கத்திகள் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படுகொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா எதிர்வரும் வியாழக்கிழமை ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார். இதேவேளை, ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒட்டாவா பொலிஸார் பல தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையை சேர்ந்த தாயும், அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கையரும் கொல்லப்பட்டதுடன் பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இந்நிலையில், இந்த சம்பவத்தை துப்பாக்கிச்சூடு என்று ஒட்டாவா பொலிஸாரால் முதலில் தவறாக தகவல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பொலிஸ் ஊடக சந்திப்பின் போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய சந்தேகநபரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இறந்தவர்களின் பெயர் பட்டியலை மூன்று முறை சரி செய்து, மூன்றாவது மின்னஞ்சல் செய்தியில் இருந்து இறுதி பெயர் பட்டியல் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட ஒட்டாவா பொலிஸார், கொலை விசாரணைகள் மிகவும் சிக்கலானது என்றும், அவ்வப்போது தகவல்கள் மாறுவதாகவும் கூறியுள்ளனர். https://thinakkural.lk/article/295593

பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

3 months 2 weeks ago
தரம் எட்டு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவை கற்கும் வாய்ப்பு தரம் எட்டு மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துடன் (IT) செயற்கை நுண்ணறிவை (AI) கற்க மார்ச் 19 முதல் வாய்ப்பு கிடைக்கிறது. எதிர்காலத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான பின்னணியை ஏற்படுத்திக் கொடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295578

இணையத்தளம் ஊடாக அதிகரிக்கும் குற்றச்செயல்கள்

3 months 2 weeks ago
இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகோல தெரிவித்துள்ளார். “இணையத்தளம் மூலம் ஒன்லைன் வேலைகளை வழங்குவதாகக் கூறி மோசடிகள் அதிகரித்துள்ளன, அதே போல் கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் கிரிப்டோ-கரன்சி மோசடிகள் மற்றும் பிரமிட் மோசடிகள் அதிகரித்துள்ளன. 2023 இல் 1,609 இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் , ஜனவரி மாதத்தில் மாத்திரம் இதுபோன்ற 110 மோசடிகள் பதிவாகியுள்ளன. பெப்ரவரியில் 213 இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன, மார்ச் மாதத்தில் இதுவரை 100 மோசடிகள் பதிவாகியுள்ளன. சில பண மோசடி முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை அளித்து, கணினி குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இணையத்தில் நிகழும் கணினி குற்றங்கள் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இணையத்தளம் ஊடாக நிர்வாண புகைப்படங்கள் வெளியிடப்படும் என விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன. 2023ல் இதுபோன்ற 775 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்தோடு 1609 இணையதள மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடர்பில் 5,188 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குழந்தைகள் சம்பந்தப்பட்ட 98 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், தனிநபர்கள் கணக்குகளுக்குள் ஊடுருவியமை தொடர்பில் 7,499 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ஊடுருவியமை மற்றும் போலி கணக்குகளின் முறைப்பாடுகளே அதிகரித்துள்ளன.” என்றார். https://thinakkural.lk/article/295572

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு !

3 months 2 weeks ago
மே வரை வெப்பமான காலநிலை தொடரும் நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை இந்த ஆண்டு மே மாதம் வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன, வரட்சியான காலநிலை மார்ச் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் இறுதி வரை தொடரும். மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போதுதான் வெப்பமான காலநிலை முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295542

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை இலட்சக்கணக்கில் அதிகரிப்பதில் எந்தளவுக்கு நியாயம் - விமல் வீரவன்ச

3 months 2 weeks ago
ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் கையளிப்பு இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹங்ச அபேரத்னவிடம் கையளித்துள்ளார். இன்று கையளிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சரின் இணக்கப்பாட்டைப் பெறுவது கட்டாயமாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். https://thinakkural.lk/article/295620

வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.

3 months 2 weeks ago
யாழில் இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு பயன்படுத்திய கார் மீட்பு! Published By: DIGITAL DESK 3 13 MAR, 2024 | 02:48 PM யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து திங்கட்கிழமை 23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை (12), யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸாரும் தடயங்களை சேகரித்து வருகின்றனர். குறித்த குடும்பஸ்தர் மீது, காரில் வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாவனையற்ற வீடு ஒன்றிற்கு முன்னால் இருந்து இந்த கார் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரானது நீண்ட காலம் பாவனை இல்லாமல் இருந்தது போல் தூசிபடிந்தவாறு காணப்படுவதுடன், காரின் உள்ளே இரத்தக்கறையும், கொட்டன்களும் காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/178622

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 2 weeks ago
காஸா போர் நிறுத்தத்தை இன்னும் நெருங்கவில்லை: கட்டார் Published By: SETHU 12 MAR, 2024 | 06:09 PM காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் இஸ்ரேலும் ஹமாஸும் இன்னும் நெருங்கிவரவில்லை என பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்ததை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் பலவாரங்களாக முயன்றன. இதற்காக எகிப்திய தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்ததைகள் நடைபெற்றன. புனித ரமழானுக்கு முன்னர் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இணக்கப்பாட்டை நாம் நெருக்கவில்லை என கட்டார் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றபோதிலும், அதற்கான போர்நிறுத்தத்துக்கான காலவரம்பு எதனையும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காஸாவில் யுத்தத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31184 ஆக அதிகரித்துள்ளது என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/178555

ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்

3 months 2 weeks ago
15 பேருடன் பறந்த ரஷ்ய இராணுவ விமானம் தீப்பற்றி வீழ்ந்தது Published By: SETHU 12 MAR, 2024 | 04:40 PM ரஷ்ய இராணுவ சரக்கு விமானமொன்று இன்று தீப்பற்றி வீழ்ந்துள்ளது. இவ்விமானத்தில் 15 பேர் இருந்தனர் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐ.எல்.-76 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில், மொஸ்கோவுக்கு அருகிலுள்ள ஐவானோவா பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/178544

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

3 months 2 weeks ago
தங்களைப் போன்ற சிலரால் அரசியலுக்கு அப்பாற்பட்ட காரணங்களுக்கா சும் வெறுக்கப்படுகிறார் என நம்புவதால் முட்டுக் கொடுக்கிறேன் . போதுமா? 😉

டிக்டொக்கினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - முகநூல் பொதுமக்களின் எதிரி - டிரம்ப் கருத்து

3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 12 MAR, 2024 | 03:06 PM டிக்டொக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முகநூல் மக்களின் எதிரி என குறிப்பிட்டுள்ளார். டிக்டொக்கினால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கருதுவதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் எனினும் இதனை தடை செய்வதை நான் ஆதரிக்கமாட்டேன் ஏன் என்றால் அதனை தடைசெய்தால் மக்களின் எதிரியான முகநூலின் ஆதரவு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். சிஎன்பிசி நேர்காணலில் டிக்டொக் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கே நான் அவ்வாறே நம்புகின்றேன். நாங்கள் அமெரிக்க மக்களின் அந்தரங்கள் மற்றும் தரவு உரிமைகளை பாதுகாக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என டிரம்ப் பதிலளித்துள்ளார். டிக்டொக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வதை டிரம்ப் முதலில் ஆதரித்திருந்தார். எனினும் இதற்கான ஆதரவை தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார். ஏன் டிக்டொக்கினை தடை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு எனது ஆட்சிக்காலத்தில் அதனை தடைசெய்திருக்க முடியும் ஆனால் காங்கிரஸே அதனை செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். டிக்டொக்கினை தடை செய்வது மக்களின் எதிரி என கடுமையாக விமர்சிக்கப்படும் முகநூலிற்கான ஆதரவை அதிகரிக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். டிக்டொக்கினால் நன்மைகளும் உள்ளன தீமைகளும் உள்ளன. ஆனால் டிக்டொக் பிடிக்காத விடயம் என்னவென்றால் டிக்டொக்கினை இல்லாமல் செய்தால் அது முகநூலை பெரிய விடயமாக்கிவிடும் ஏனைய ஊடகங்கள் பலவற்றுடன் நான் முகநூலை மக்களின் எதிரியாக கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் சமூக ஊடகங்களில் முகநூலை டிரம்ப் மக்களின் எதிரி என வர்ணித்திருந்தார். https://www.virakesari.lk/article/178531

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
சரி பாஸ், இதையெல்லாம் பெரிதாக எடுத்தால்? விட்டுத்தள்ளுங்கோ. அடுத்த subject க்குப் போவோம்’ 😀 இது நன்னாருக்கே 😀

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
ஏனைய இனம்களை எங்கு நான் குறைத்து கூறினேன் ? எனது கருத்துக்கள் உங்களால் புரிந்து கொள்ளபட முடியவில்லை என்றால் உங்களில் தான் பிழை பெருமாள் எழுதும் கருத்துக்கள் புரிந்துகொண்டு கருத்து எழுதுவது நல்லது பெருமாள் இப்படித்தான் எழுதுவார் எனவே படிக்காமல் கருத்து போட்டு மொக்கேனை படுவது நீங்கள்தான் . 2௦௦9 ல் நாங்கள் அழியும்போது சிங்களவர்கள் வெடிபோட்டு கிரிபத் உணவை பரிமாறி கொண்டாடிய செய்தி இன்றுவரை நீங்கள் கேள்வி படவில்லை போல் தெரிகிறது .

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

3 months 2 weeks ago
இலங்கையின் நீண்ட வரலாறு தெரிந்தும் கல்வியும்பொருளாதாரத்திலும் மேலோங்கிவிட்டால் இலங்கையை ஆள முடியும் தமிழர்கள் சொல்வதை இலங்கை கேட்கும் என்று எப்படித்தான் இவருக்கு பேச மனம் வந்ததோ தெரியவில்லை, அல்லது தனது சிங்கள அரச ராஜாங்க பதவியை நியாயப்படுத்த தமிழர்களுக்கு அல்வா கொடுக்கிறாரோ தெரியவிலை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் எவ்வளவு உச்சம் போனாலும் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் முஸ்லீம்களால்கூட அவர்கள் சொல்வதை இலங்கையை கேட்க வைக்க முடியாது அவற்றை வைத்து இலங்கையை ஆள முடியாது. ஏனென்றால் இலங்கையை ஆட்சி செய்வது அவை இரண்டுமல்ல முதலில் மதம் பின்பு அரசியல்! கல்வியில் மேல் நிலையில் உள்ளவனும் பொருளாதாரத்தில் நிலைபெற்றவனுக்கும் இலங்கை பணியும் என்றால் இன்றைய வங்குரோத்துக்கு இலங்கை வந்திருக்காது எப்போதோ ஆசியாவின் முதலாவது அபிவிருத்தி அடைந்த நாடு ஆகீருக்கும், 2 முக்கால் கோடி சனத்தை வைச்சுக்கொண்டு 140 கோடி மக்கள் தொகையை கொண்டிருக்கும் சீனாவிடமும் இந்தியாவிடமும் இருந்து அரிசியும் முட்டையும் கடன் வாங்கிகொண்டிருக்காது. 83 கலவரத்தின் பின்னர் தமிழர்களில் பெரும்பான்மையினர் யுத்தத்துடனும் புலம் பெயர்வுடனும் காலத்தை ஓட்டிக்கொள்ள சிங்களவர்கள் கல்வியில் எங்கோ போய்விட்டனர், இன்று புலம்பெயர்நாடுகளுக்கு படையெடுக்கும் சிங்கள மாணவர்களின் தொகையில் தமிழர்களையும் முஸ்லீம்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். இனதொகை ஒப்பீட்டளவில் தமிழர்கள் கல்வியறிவில் மேலோங்கியிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டாலும், அதை வைத்து நாங்கள் சிங்கள தேசம் நாம் சொல்வதை கேட்கும் நிலைக்கு கொண்டுவரமுடியாது , அதை செய்ய சிங்கள அரசியல் அனுமதிக்காது அதையும்மீறி அரசியல் அனுமதித்தாலும் தேரர்கள் அந்த அரசியல்வாதிகளை ஆட்சியைவிட்டே அகற்ற பார்ப்பார்கள். இலங்கையில் சர்வவல்லமை பொருந்திய பெளத்த சிங்கள இனத்தை சேர்ந்த கல்விமான்கள் , பெரும் பணக்காரர்களே கல்வி பணத்தில் உச்சம் தொட்டும் ஆளைவிடுடா சாமியென்று அப்படியே ஆயிரக்கணக்கில் நாட்டை காலி செய்துவிட்டு ஓட்டம்பிடிக்கும்போது இந்த இரண்டும் இருந்தால் நாங்கள் சொல்வதை நாடு கேட்கும் என்று இயம்புவது இந்த நூற்றாண்டின் அதி பயங்கர நகைச்சுவை. ஒருவேளை கல்வியிலும் பொருளாதாரத்திலும் அதி பயங்கரமாக முன்னேறிவிட்டால் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் அதை வைத்து எப்படி மேற்குலகத்தில் நிரந்தரமாக குடியேறலாம் என்பதே அடுத்தகட்டமாக சிந்திக்கிறார்கள், சிந்திப்பார்கள்.
Checked
Wed, 07/03/2024 - 04:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed