புதிய பதிவுகள்2

தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன

3 months 2 weeks ago
சீனி தவிர, நெட்டோ போன்ற பானங்களும் மா உணவுகளின் பாவனை (கொத்துரொட்டி, நூடில்ஸ், இடியப்பம்) அதிகரிப்பும் அதிகம் உடலை அசைத்து வேலை செய்யாமையும் முக்கிய காரணங்கள். இவற்றை விட்டு அப்பாவி பால்மாவுக்குக் கெட்ட பெயர். ஊட்டச் சத்துக் குறைந்த நாடுகளில் பால் இல்லாவிட்டால் பால்மாவை மாற்றீடாகப் பாவிப்பதில் பிரச்சனையில்லை (இதற்காகப் பால்மாவை முழுமையாக ஆதரிக்கவில்லை).

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!

3 months 2 weeks ago
நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறிகளின் விலை நிலவரம் Published By: DIGITAL DESK 3 13 MAR, 2024 | 12:56 PM நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை (13) விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், (முட்டைகோஸ்) கோவா 425 ரூபாவாக விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை நுவரெலியா கரட் கிலோ ஒன்றின் விற்பனை விலை 395 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல லீக்ஸ் 210 ரூபா, ராபு 80 ரூபாய், பீட்ரூட் (இலையுடன்) 220 ரூபாவாகவும், இலை வெட்டப்பட்ட பீட்ரூட் 270 ரூபாவாகவும் மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உருளை கிழங்கு (வெள்ளை) 355 ரூபாவாகவும், உருளை கிழங்கு (சிவப்பு) 375 ரூபாவாகவும், நோக்கோல் 170 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில் அதிக உச்ச விலை கண்ட நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர மரக்கறிகளின் விலைகளும் கணிசமாக சரிவு கண்டுள்ளது. அந்தவகையில் தக்காளி (பச்சை) 800 ரூபாவாகவும், கறிமிளகாய் 555 ரூபாவாக மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், சிவப்பு கோவா 2100 ரூபாவாகவும், காலிஃப்ளவர் (நுவரெலியா) 650 ரூபாவாகவும், புரக்கோலி 550 ரூபாவாகவும் வில்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறிகளின் விலை நிலவரம் | Virakesari.lk

தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன

3 months 2 weeks ago
மேற்குக்கு வந்த எம்மவர்களும் பால் மாவை பாவிக்கிறார்கள். எமது வியாபாரிகளால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன

3 months 2 weeks ago
13 MAR, 2024 | 05:22 PM (எம்.மனோசித்ரா) தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான சீனி மற்றும் பால் மா பாவனையே இதற்கான பிரதான காரணமாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். சீனி இறக்குமதிக்காக 300 மில்லியன் டொலரும், பால் மா இறக்குமதிக்காக 350 - 400 மில்லியன் டொலரும் ஒதுக்கப்படுகிறது. எனவே இவற்றின் பாவனையைக் குறைப்பதன் மூலம் சுகாதாரத்துறைக்கு மாத்திரமின்றி பொருளாதாரத்துக்கும் பாரிய ஒத்துழைப்பினை வழங்க முடியும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார். தேசிய உள்சாட்டு மருத்துவ தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் மக்களுக்கு தொடர்ந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். நாட்டில் சீனியின் பாவனை அதிகமாகக் காணப்படுகின்றமையே நீரிழிவு நோய்க்கான பிரதானமான காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. தாய்ப்பாலில் சீனி கிடையாது. எனினும் குழந்தைகள் பிறந்து சில மாதங்களின் பின்னர் பெற்றோர் குழந்தைகளுக்கு சீனி அடங்கிய உணவுகளை வழங்குகின்றனர். இதன் காரணமாக இன்று நீரிழிவு நோய் மட்டம் பாரியளவில் உயர்வடைந்துள்ளது. தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது. அதிகளவான சீனி பாவனை உடல் நலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மறுபுறம் தேசிய பொருளாதாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. காரணம் சீனி இறக்குமதிக்கு 300 மில்லியன் டொலர் ஒதுக்கப்படுகிறது. இதனைக் குறைத்துக் கொண்டால் எமது பொருளாதாரத்தைக் கூட வலுப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும். அத்தோடு பால் மாவையும் நாம் அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். உலகில் அதிகளவு பால் மாவினைப் பயன்படுத்தும் நாடாக இலங்கை காணப்படுகிறது. எம்மைப் போன்று பால் மாவினால் தயாரிக்கப்படும் பாலை அருந்துபவர்கள் உலகில் வேறு எவரும் இருக்கமாட்டார்கள். இந்தளவுக்கு பால் மாவை உபயோகிக்க வேண்டுமா என்பதை வைத்தியர்கள் தம்மிடம் வரும் நோயாளர்களிடம் கேட்க வேண்டும். இவ்வாறு பால் மா பாவனையைக் குறைத்தால் அது சுகாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் நன்மையாகும். வேறு நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 350 - 400 மில்லியன் டொலரை நாம் பால்மா இறக்குமதிகாக செலவிடுகின்றோம். இந்த தகவல்களை வைத்தியர்களும், ஊடகங்களும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றார். தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன | Virakesari.lk

கனடா உயர்ஸ்தானிகருக்கும் அநுர குமாரவுக்கும் இடையே சந்திப்பு

3 months 2 weeks ago
13 MAR, 2024 | 05:27 PM மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (13) முற்பகல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக விஜித ஹேரத்தும் பங்கேற்றனர். இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி விரிவான உரையாடல் இதன்போது இடம்பெற்றது. அத்தோடு, தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. கனடாவில் வசிக்கின்ற இலங்கையரை சந்திப்பதற்கான அநுர குமார திசாநாயக்கவின் கனடா விஜயத்துக்கு உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்தார். கனடா உயர்ஸ்தானிகருக்கும் அநுர குமாரவுக்கும் இடையே சந்திப்பு | Virakesari.lk

வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.

3 months 2 weeks ago
கடற்படையினருக்கு நாலு போத்தல் சாராயம் வாங்கிக் கொடுத்து இருப்பினம் அந்தக் கும்பல். இலங்கை இராணுவத்தினர் / கடற்படையினர் லீவு காலத்தில் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று செய்யும் வக்கிரமான செயல்கள் பற்றி சிங்கள ஊடகங்களும், சில தமிழ் சமூகவலைத்தளத்தில் இயங்குகின்றவர்களும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் பல, யாழில் பகிரக் கூசும் அளவுக்கான விடயங்கள்.

வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.

3 months 2 weeks ago
முதல் தாக்குதல் எதற்காக இவர் செய்தார்.. ?? (முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல்)

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

3 months 2 weeks ago
இந்தக் கிரிக்கெற் பார்க்கவும், கூட்டத்திற்குப் போகவும் பணம் பெற்றுக் கொண்டது பற்றி ஏதாவது செய்திகள், ஆதாரங்கள் இருக்கின்றனவா? அல்லது கடந்த காலத்தில் ஒரு தமிழ் தரப்பு அமைப்பு பணம் பெற்றுக் கொண்டு மகிந்தவை வெல்ல வைத்தார்கள் என்பது போல ஒரு வதந்தியா? அறிந்து கொள்ளத் தான் கேட்கிறேன்😎.

கனடா செல்ல விரும்பாததால் உயிரை மாய்த்த இளைஞன்!

3 months 2 weeks ago
கனடா செல்ல விரும்பாததால் உயிரை மாய்த்த இளைஞன்! கனடாவுக்குச் செல்ல விரும்பாததால் , மாற்றுத்திறனாளி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் என்ற 32 வயதுடையவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்தவரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வரும் நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது. எனினும் குறித்த நபருக்குக் கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந் நிலையிலேயே அவர் தனது சக்கர நாற்காலியைக் கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு இவ்வாறனதொரு விபரீத முடிவை எடுத்துள்ளார். இதனைதொடர்ந்து அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் நேற்று (12) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373316

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
இது பெயர்களை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட சாதாரண குழப்பத்தினால் விளைந்ததென ஊகிக்கிறேன். இறந்த தாயின் முழுப் பெயரைப் பாருங்கள்: Darshani Banbaranayake Hama Walwwe Darshani Dilanthika Ekanyake சிங்களப் பெயர்கள் பரிச்சயமில்லாத கனேடியர்கள், இது ஒரு பெயர் என்று புரிந்து கொள்ளக் கஷ்டப் படுவர்.

தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி

3 months 2 weeks ago
தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி. தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் பெண்ணின் காலை தொட்டு வணங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், தேசிய படைப்பாளிகள் விருதை இந்திய மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதில் சிறந்த கதை சொல்லிக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்டது. இதன்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் விருதை பெற்றுக்கொண்ட கீர்த்திகா கோவிந்தசாமி, மரியாதை நிமித்தமாக பிரதமர் நரேந்திர மோடியிடன் காலில் விழுந்தபோது, பதிலுக்கு பிரதமரும் கீர்த்திகாவின் காலை தொட்டு வணங்கினார். இக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதேவேளை சமூக மாற்றம், கல்வி, சுற்றுச்சூழல், வேளாண், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் ஆக்கபூர்வமாக சிறந்து விளங்கிய 23 படைப்பாளிகளுக்கு டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி விருதுகளை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373348

மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு

3 months 2 weeks ago
இப்போது முடியும் இந்த வட அமெரிக்க குளிர் கால சீசனில், இன்புழுவன்சா வைரஸ் கொஞ்சம் கூடுதலாக ஆட்களைத் தாக்கியிருக்கிறது, பல இளம் வயதினருக்கு நுரையீரல் அழற்சி வந்திருக்கிறது. எனக்கு, post-viral cough என்ற தொண்டை அழற்சி ஒரு மாதம் வரை இருந்தது. உங்களுக்கும் இன்புழுவன்சா தான் படுத்தியிருக்கிறதென நினைக்கிறேன்.
Checked
Wed, 07/03/2024 - 04:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed