புதிய பதிவுகள்2

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

3 months 2 weeks ago
நான் சொல்ல வந்தது ஒரு தொகுதி மக்களை கல்வியில் சிறந்தவர்கள் என்றும், இன்னொரு தொகுதி மக்களை கல்வியில் சிறந்தவர்கள் அல்ல என்றும் இலகுவாக சொல்லி விட முடியாது என்பதே. பல புறக் காராணங்களே இந்த வேறுபாட்டை உண்டாக்குகின்றன.

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

3 months 2 weeks ago
ரசோதரன் சொல்வதும், வியாழேந்திரன் கூறுவதும் வேறு வேறான விடயங்கள் என நினைக்கிறேன். பரீட்சைப் பெறு பேறுகள் இலங்கையில் தவிர்க்க முடியாத கல்வி அளவீட்டுக் கருவிகள், எனவே அவை இலங்கையில் கல்வி பற்றிப் பேசப்படும் இடங்களில் பேசப்படுவது முக்கியம். ஆனால், கல்வியை (அது முறை சார் கல்வியோ, முறைசாரா கல்வியோ) நோக்கிய மனப்பாங்கு (attitude) என்பது இன்னொரு விடயம். இந்த மனப்பாங்கு, கலாச்சாரத்தின் பால் பட்ட ஒன்று. உதாரணமாக, முறைசார் கல்விக்கு அமெரிக்காவில் தென்னாசியர்களும், கிழக்காசியர்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை, கறுப்பின மக்கள், ஸ்பானியர்கள் கொடுப்பது குறைவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வெள்ளையின மக்கள், பெரும்பாலும் பண வருவாய் நோக்கியவாறு கல்வியைப் பார்க்கின்றனர் - இதுவும் "learning for the sake of learning" என்ற ஆசிய மனப்பாங்கில் இருந்து வித்தியாசமானது. தற்போது, எங்கள் தென்னாசிய குடியேறிகள் மத்தியிலும் "பணம் சம்பாதிக்க மட்டும் கல்வி" என்ற போக்கு வளர்வதைக் காண்கிறேன், இது நல்லதா கூடாதா என்று முடிவு செய்ய இயலாமல் இருக்கிறேன் இது வரை. இலங்கையைப் பொறுத்த வரையில், தமிழர்களின் முறை சார் கல்வி நோக்கிய மனப்பாங்கு சிங்களவர்களை விட வித்தியாசம் தான். எப்படியாவது மேலே வந்து விட வேண்டும் என்று யோசிக்கும், ஏற்கனவே அடக்கப் பட்ட ஒரு இனம் என்ற வகையில், முறை சார் கல்வி ஈழத்தமிழர்களுக்கு தடைகள் குறைந்த ஒரு பாதை என நினைக்கிறேன். அதைப் பயன்படுத்தி முன்னேற வேண்டுமென வியாழேந்திரன் சொல்வது முற்றிலும் சரியான ஒரு கருத்து!

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன்

3 months 2 weeks ago
கல்வி என்பது உனக்கானதல்ல உனக்கு அது வராது என்று பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பெரும்பான்மையான மக்களை ஒதுக்கி அவர்களை தாழ்ததிய நிலையில் இருந்து இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களின் னுகூலங்களால் இன்று சற்றே முன்னேறிவருகின்றனர். அது போல் முயற்சியுடன் கல்வி கற்கும் போது எவராலும் முன்னேறிய நிலையை அடைய முடியும். இலங்கையை பொறுத்தவரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களிடன் நல்லுறவை பேணி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வேண்டிய கல்வியை பெற்றுக் கொண்டதன் மூலம் தமது கல்வித்தரத்தை சற்று உயர்ததிக்கொண்டனர். அதை வைத்த தாம் மற்றய இனத்தை விட கல்வியில் சிறந்தவர்களாக தமக்குள் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அது உண்மை அல்ல என்பதை கடந்த 70 ஆண்டுகளில் கண்டோம்.

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
இலங்கையின் பூர்வீக குடிகள் அழிக்கப்பட்டதை கிரிபத் எனும் பாரம்பரிய உணவை கொடுத்து வெடி போட்டு கொண்டாடிய இனத்தில் மனிதாபிமானம் இருக்குமா ?

மயிலம்மா.

3 months 2 weeks ago
ம்..இண்டைக்குத் தான் சுய ஆக்கங்கள் பக்கம் வந்து வாசிக்க ஆரம்பித்தால்..இப்படி ஒரு வயதுக்கு வந்தோருக்கான கதை போகிறது. இன்னும் முடிக்கவில்லை, மெதுவாகத் தொடர்கிறேன். மயில், பாம்பு எல்லாம் சதிராடுது😅..!

சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?

3 months 2 weeks ago
அது உண்மைதான். நீங்கள் சொன்ன விடயங்கள் தான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. அந்த ஆயுத முனை நடைமுறைகள் இல்லாததின் விளைவுகளை எம் மண்ணில் கூட கண்ணெதிரே பார்க்கக்கூடியதாகவே உள்ளது. எந்த இனம் மண் சார்ந்தவர்களுக்கு எந்த ஆயுதத்தை தூக்க வேண்டுமோ அதை தூக்கியே ஆகவேண்டும். சட்டம் ஒரு ஆயுதம் இல்லையேல் பிரம்பு இன்னொரு ஆயுதம். உவங்கள் சண்டை பிடிக்காமல் இருந்திருந்தால் எங்கடை பிரச்சனையும் உவ்வளவு அழிவுகளும் வந்திருக்காது எண்டு சொல்லுற ஜாம்பவான்கள் இன்றும் வீதிவலம் வந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். 😂

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 2 weeks ago
எமது இனத்துக்கு நடந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கனடா அரசாங்கத்தை இலங்கை அரசு வறுத்தெடுத்து பாடம் நடத்தியிருக்கும், இலங்கை பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் பிரசுரித்திருக்கும், பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருக்கும். ஆகவே ..... நாமும் கொஞ்சம் கொட்டித்தீர்ப்போம். இயற்கையாகவே இவர்கள் இரத்தத்தில் ஊறிய குணம், அதை மறைக்க போதை, காணொளி விளையாட்டு என்று எதையாவது சேர்க்க வேண்டியது. சொந்த நாட்டிலே கல்வி கற்ற பாடசாலையிலேயே இவர் நன்னடத்தை பிரச்சனையை எதிர் கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, சக மாணவனை கொடூரமாக தாக்கியதாக......

தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?

3 months 2 weeks ago
எல்லை போட்டால் களவு எடுக்க வருவது தெளிவாக தெரிந்து விடும். இப்படியே இருப்பது தான் களவு எடுக்க வசதி. ஏங்களுக்கு உரிமையுள்ள இடங்களில் நாங்கள் மீன பிடிக்க விடுகின்றார்கள் இல்லை என்று சொல்லி கொண்டு தொடர்ந்து களவு எடுக்கலாம்.
Checked
Mon, 07/01/2024 - 07:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed