ஊர்ப்புதினம்

இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்!

3 months ago
flight-1-736x375.jpg இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்!

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700  Bombardier உளவு விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் இரத்மலானை விமான நிலையத்தில் விசேட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் வகையிலும் கடல் எல்லையை கண்காணிப்பது தொடர்பிலும் இதன்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373413

மீன்பிடி துறைக்கு நவீன கப்பல் விரைவில் அறிமுகம்!

3 months ago
Piyal-Nishantha.jpg

மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இதனைத் தெரிவித்தார்.

மீன்பிடி தொழில்துறையின் வளர்ச்சிக்காக, மீன்களின் தரத்தை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக மீனவர்களின் வருமானத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலைமையை தணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன இயக்க முறைகள் கொண்ட புதிய ஆழ்கடல் மீன்பிடிக் கப்பலை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நிபுணர்கள் அடங்கிய குழு திட்டமிட்டு வருகிறது. அதன் பணிகள் முடிந்ததும், புதிய மீன்பிடிக் கப்பல் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்படும். மீன்பிடி உள்ளீடுகளை நிர்வகிப்பதன் மூலம் நிலையான மீன்பிடித் தொழிலைப் பேணுவதே இதன் நோக்கமாகும்.

மேலும், உலக உணவு அமைப்பு பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு புதிய OFRP கப்பல் அறிமுகத்தின் கீழ், உலக உணவு அமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் மாற்று தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்துடன் இணைந்து, மாறும் காலத்திற்கு ஏற்றவாறு ஒரு புதிய கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சோலார் தொழில்நுட்பம் கொண்ட இயந்திர படகுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி  மற்றும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுடன் எமது அமைச்சு கலந்துரையாடியுள்ளது.

மேலும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவின் கீழ், இந்த நாட்டில் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களுக்கு கப்பல் கண்காணிப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை, 2350 ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களில் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது, அடுத்த ஆண்டு முதல் காலாண்டு இறுதிக்குள், 4200 கப்பல்களிலும் கப்பல் கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்படும்.

கப்பல் கண்காணிப்புத் தரவுகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தளங்களை முன்னறிவிப்பதும் தற்போது ஆராய்ச்சி மட்டத்தில் செய்யப்படுகிறது. இது தொடர்பான பகுப்பாய்வு மென்பொருள் தயாரிப்புப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் கப்பல் கண்காணிப்பு அமைப்பு முழுமையாக செயல்படும். அதே நேரத்தில் இந்த மீன் தரை முன்கணிப்பு சேவையை சேர்க்க எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மீன்பிடி சட்டத்தை மறுசீரமைத்து, 1996ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த மீன்பிடி சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்போது காலத்துக்கேற்ற மாற்றங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதைக் கூற வேண்டும். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான சட்டம் இயற்றவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இராஜதந்திர மட்டத்தில் நாடுகளுக்கிடையிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விரிவான திட்டமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், லொரென்சோ புதா – 4 கப்பல் தொடர்பில் கடற்றொழில் திணைக்களம், கடற்படை மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியோர் கலந்துரையாடியுள்ளன. சட்ட நடவடிக்கைகள் சீஷெல்ஸ் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. சீஷெல்ஸ் நாட்டில் சட்ட நடவடிக்கைகளை முடித்து மீனவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி  சட்டமா அதிபர் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளார்  எனவும் அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/295705

ரயில் ஆசன முன்பதிவில் இன்று முதல் புதிய மாற்றம்!

3 months ago
train-co-ba-300x200.jpg

ரயில் இருக்கைகளுக்கான முன்பதிவுகள் இன்று முதல் ஒன்லைன் மூலம் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒன்லைன் மூலம் ரயில் நிலையங்களின் ஊடாக தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார்.

இதன்படி, பயணிகள் பயணிப்பதற்கு 30 நாட்களுக்கு முன்னதாக தமக்கான இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன், இன்று காலை 7 மணிமுதல் அதற்கான பதிவு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/295697

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு 9 இலட்சம் ரூபா கடனாம்!

3 months ago
14 MAR, 2024 | 11:21 AM
image

நவகமுவ பெரஹரவின் நேரடி ஒலிபரப்புக்காக இலங்கை  ரூபவாஹினி   கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட வேண்டிய   9 இலட்சம் ரூபாவை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே செலுத்தத் தவறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற  நவகமு பிரதேச விஹாரை ஒன்றின் 188 ஆவது ரந்தோலி பெரஹராவை நேரடியாக ஒளிபரப்புவதற்காக இந்தத் தொகை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.   

yi.gif

டயானா கமகேவின் வேண்டுகோளுக்கிணங்க ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் நவகமுவ பெரஹராவை  நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.

இந்நிலையில், குறித்த நிலுவைத் தொகை தொடர்பில் ரூபவாஹினி கூடடுத்தாபன   கணக்காளர்  இராஜாங்க அமைச்சரிடம் பலமுறை நினைவூட்டியும் இதுவரை குறித்த  தொகை வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

https://www.virakesari.lk/article/178693

ஒருமித்து குரல் எழுப்புங்கள் ! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

3 months ago
14 MAR, 2024 | 11:15 AM
image

அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்……

நீதிக்கான பொறிமுறைகளை தேடும் நோக்குடன் ஜனநாயக போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போது இந்த நாட்டிலே தமிழ் மக்கள் மேற்கொள்ளும் அறவழியான போராட்டங்களை கூட நசுக்கும் வகையான உத்தரவுகளை வழங்கி  கைது செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இது ஒரு மோசமான நிலையினையே காட்டுகின்றது. 

ஆலயத்தை வழிபடுவதற்கு கூட தமிழர்களுக்கு இன்று உரிமை இல்லை. இப்படியான நாட்டில் இனி நாம் எப்படி வாழமுடியும். 

வெடுக்குநாறி மலை ஆலயத்தில் பூஜை பொருட்கள் கூட சப்பாத்துகால்களால் தட்டிவிடப்பட்டது. அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எனவே இவ்வாறான அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. 

அத்துடன் காணாமல் போனோர் அலுவலகத்தால் மரணச்சான்றிதழ் வழங்கும் விடயத்தை நாம் எப்போதோ நிராகரித்து விட்டோம். இருப்பினும் அப்பாவி மக்களை ஏமாற்றி வலுக்கட்டாயமாக பதியும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. இவ்வாறானா கேவலமான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கின்றனர். இருப்பினும் நாம் சர்வதேச நீதியை கோரி தொடர்ச்சியாக போராடிவருகின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/178679

சாகல ரத்நாயக்கவின் சகோதரர் இலங்கை வங்கியின் தலைவராக நியமனம்

3 months ago
boc.jpg

இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி நேற்று(13) கொழும்பு பங்குச்சந்தைக்கு அறிவித்தது.

இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை தலைவராக செயற்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, நேற்று முதல் அந்த பதவியில் இருந்து விலகுவதாகவும் புதிய தலைவர் நாளை முதல் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சாகல ரத்நாயக்கவின் சகோதரரான காவன் ரத்நாயக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பட்டதாரியாவார்.

https://thinakkural.lk/article/295663

யாழ். பல்கலையின் 38 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 

3 months ago
யாழ். பல்கலையின் 38 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 
 
spacer.png

எழிலன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது. 

பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்தப் பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் 46 தங்கப் பதக்கங்கள், 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.(க)

 

https://newuthayan.com/article/யாழ்._பல்கலையின்_38_ஆவது_பொதுப்_பட்டமளிப்பு_விழா

 

 

சீன இராணுவத்திடமிருந்து வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்கள் அன்பளிப்பு

3 months ago

Published By: DIGITAL DESK 3   14 MAR, 2024 | 11:09 AM

image

(எம்.மனோசித்ரா)

சீன இராணுவ உதவி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சிற்கு வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சென்ஹொங், பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரிடம் குறித்த உபகரணங்கள்  புதன்கிழமை (13) கையளிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளும் ஆவணத்தில் ஜெனரல் கமல் குணரத்தன கையெழுத்திட்தோடு, அவற்றை கையளிக்கும் ஆவணத்தில் சீனத்தூதுவர் கையெழுத்திட்டார்.

இவ்வாறு கைளிக்கப்பட்ட உபகரணத் தொகுதியில் வெடிபொருட்களை இனங்கண்டு அவற்றை செயழிக்கச் செய்யும் REOD 4000 என்ற ரொபோ இயந்திரங்கள் 18, வெடிபொருட்களை ஒரு இடத்திலிருந்து பிரிதொரு இடத்துக்கு கொண்டு செல்லும் இயலுமையுடைய REOD 400 ரக ரோபோக்கள் 18, வெடி பொருட்களிடமிருந்து பாதுகாக்கக் கூடிய 10 பாதுகாப்பு அங்கிகள்,  வெடி பொருட்களிடமிருந்து பாதுகாப்பு பெறக் கூடிய 10 வாயு தாங்கிகள் மற்றும் வெடிபொருட்களை செயழிக்கச் செய்யும் இயந்திரங்கள் என்பன உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-03-14_at_10.07.53.jp

https://www.virakesari.lk/article/178691

அஞ்சல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

3 months ago
 

PHONE-1.jpg

அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி குறுந்தகவலை அனுப்பி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்கள் ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இலங்கை அஞ்சல் மூலம் விநியோகிக்கப்படும் பொதிகளுக்கான கட்டணத்தை செலுத்துமாறு பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்தி அனுப்பி கடனட்டை தரவு திருட்டு மோசடி இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இலங்கை அஞ்சல், இலங்கை அஞ்சல் திணைக்களம், SL POST, Sri Lanka Post போன்றவற்றின் பெயர்களைப் பயன்படுத்தியும் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்தியும் இந்த மோசடி இடம்பெற்று வருகிறது.

இதன்படி, கடனட்டை தொடர்பான தகவல்களை குறுஞ்செய்தி மூலம் விசாரிக்கும் போது அதனை வழங்க வேண்டாம் என்றும், கடனட்டை மூலம் பொதி தொடர்பான எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படாது எனவும் அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களைக் அறிய விரும்பினால், அஞ்சல் திணைக்களத்தின் ஹெல்ப்லைன் 1950, தகவல் தொழில்நுட்பப் பிரிவு 011 2542104, 011 2334728, 0112335978, 011 2687229, 011 2330072 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

https://thinakkural.lk/article/295702

பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனையை கொண்டுவரத் திட்டமிடும் பொதுஜன பெரமுன!

3 months ago
பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனையை கொண்டுவரத் திட்டமிடும் பொதுஜன பெரமுன!
 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பிரிவினரின் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்காக பாராளுமன்றத்தில் யோசனையொன்றை கொண்டுவந்து நிறைவேற்றும் திட்டத்தில் அவர்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதுடன், ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என இவர்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் விடயத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை கூறி வருகின்றனர்.

அத்துடன், பொதுத் தேர்தலின் ஊடாகவே கட்சியை மீள பலமாக கட்டியெழுப்ப முடியும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கு இவர்கள் அழுத்தமும் கொடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்காவிட்டால் பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானமொன்றை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.

 

http://www.samakalam.com/பாராளுமன்றத்தை-கலைக்கு-2/

 

தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன

3 months ago
13 MAR, 2024 | 05:22 PM
image
 

(எம்.மனோசித்ரா)

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான சீனி மற்றும் பால் மா பாவனையே இதற்கான பிரதான காரணமாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

சீனி இறக்குமதிக்காக 300 மில்லியன் டொலரும், பால் மா இறக்குமதிக்காக 350 - 400 மில்லியன் டொலரும் ஒதுக்கப்படுகிறது. எனவே இவற்றின் பாவனையைக் குறைப்பதன் மூலம் சுகாதாரத்துறைக்கு மாத்திரமின்றி பொருளாதாரத்துக்கும் பாரிய ஒத்துழைப்பினை வழங்க முடியும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார்.

தேசிய உள்சாட்டு மருத்துவ தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் மக்களுக்கு தொடர்ந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

நாட்டில் சீனியின் பாவனை அதிகமாகக் காணப்படுகின்றமையே நீரிழிவு நோய்க்கான பிரதானமான காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தாய்ப்பாலில் சீனி கிடையாது. எனினும் குழந்தைகள் பிறந்து சில மாதங்களின் பின்னர் பெற்றோர் குழந்தைகளுக்கு சீனி அடங்கிய உணவுகளை வழங்குகின்றனர். இதன் காரணமாக இன்று நீரிழிவு நோய் மட்டம் பாரியளவில் உயர்வடைந்துள்ளது. தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட்டுள்ளது.

அதிகளவான சீனி பாவனை உடல் நலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மறுபுறம் தேசிய பொருளாதாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. காரணம் சீனி இறக்குமதிக்கு 300 மில்லியன் டொலர் ஒதுக்கப்படுகிறது. இதனைக் குறைத்துக் கொண்டால் எமது பொருளாதாரத்தைக் கூட வலுப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்.

அத்தோடு பால் மாவையும் நாம் அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். உலகில் அதிகளவு பால் மாவினைப் பயன்படுத்தும் நாடாக இலங்கை காணப்படுகிறது. எம்மைப் போன்று பால் மாவினால் தயாரிக்கப்படும் பாலை அருந்துபவர்கள் உலகில் வேறு எவரும் இருக்கமாட்டார்கள். இந்தளவுக்கு பால் மாவை உபயோகிக்க வேண்டுமா என்பதை வைத்தியர்கள் தம்மிடம் வரும் நோயாளர்களிடம் கேட்க வேண்டும்.

இவ்வாறு பால் மா பாவனையைக் குறைத்தால் அது சுகாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் நன்மையாகும். வேறு நாடுகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 350 - 400 மில்லியன் டொலரை நாம் பால்மா இறக்குமதிகாக செலவிடுகின்றோம். இந்த தகவல்களை வைத்தியர்களும், ஊடகங்களும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

தென்னாசிய பிராந்தியத்தில் அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை ; சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம் - ரமேஷ் பத்திரன | Virakesari.lk

கனடா உயர்ஸ்தானிகருக்கும் அநுர குமாரவுக்கும் இடையே சந்திப்பு

3 months ago
13 MAR, 2024 | 05:27 PM
image
 

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய  உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (13) முற்பகல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய  உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக விஜித ஹேரத்தும் பங்கேற்றனர். 

இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி விரிவான உரையாடல் இதன்போது இடம்பெற்றது. 

அத்தோடு, தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. 

கனடாவில் வசிக்கின்ற இலங்கையரை சந்திப்பதற்கான அநுர குமார திசாநாயக்கவின் கனடா விஜயத்துக்கு உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்தார். 

கனடா உயர்ஸ்தானிகருக்கும் அநுர குமாரவுக்கும் இடையே சந்திப்பு  | Virakesari.lk

கனடா செல்ல விரும்பாததால் உயிரை மாய்த்த இளைஞன்!

3 months ago
spacer.png கனடா செல்ல விரும்பாததால் உயிரை மாய்த்த இளைஞன்!

கனடாவுக்குச் செல்ல விரும்பாததால் , மாற்றுத்திறனாளி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் என்ற 32 வயதுடையவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்தவரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வரும் நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது.

எனினும் குறித்த நபருக்குக் கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந் நிலையிலேயே அவர் தனது சக்கர நாற்காலியைக் கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு இவ்வாறனதொரு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இதனைதொடர்ந்து அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் நேற்று (12) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373316

இணையத்தளம் ஊடாக அதிகரிக்கும் குற்றச்செயல்கள்

3 months ago
7-6.jpg

இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகோல தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் மூலம் ஒன்லைன் வேலைகளை வழங்குவதாகக் கூறி மோசடிகள் அதிகரித்துள்ளன, அதே போல் கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாதங்களில் கிரிப்டோ-கரன்சி மோசடிகள் மற்றும் பிரமிட் மோசடிகள் அதிகரித்துள்ளன. 2023 இல் 1,609 இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் , ஜனவரி மாதத்தில் மாத்திரம் இதுபோன்ற 110 மோசடிகள் பதிவாகியுள்ளன. பெப்ரவரியில் 213 இணைய மோசடிகள் பதிவாகியுள்ளன, மார்ச் மாதத்தில் இதுவரை 100 மோசடிகள் பதிவாகியுள்ளன. சில பண மோசடி முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை அளித்து, கணினி குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இணையத்தில் நிகழும் கணினி குற்றங்கள் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இணையத்தளம் ஊடாக நிர்வாண புகைப்படங்கள் வெளியிடப்படும் என விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன. 2023ல் இதுபோன்ற 775 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்தோடு 1609 இணையதள மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடர்பில் 5,188 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குழந்தைகள் சம்பந்தப்பட்ட 98 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், தனிநபர்கள் கணக்குகளுக்குள் ஊடுருவியமை தொடர்பில் 7,499 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ஊடுருவியமை மற்றும் போலி கணக்குகளின் முறைப்பாடுகளே அதிகரித்துள்ளன.” என்றார்.

https://thinakkural.lk/article/295572

இலங்கையில் இராணுவதளமொன்றை உருவாக்க சீனா முயல்கின்றது - அமெரிக்கா

3 months ago

Published By: RAJEEBAN   13 MAR, 2024 | 11:45 AM

image
 

இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தமது சமீபத்தைய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜிபுட்டியில் உள்ள அதன் இராணுவதளத்தையும் கம்போடியாவில் உள்ள அதன் கடற்படை தளத்தையும் மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீனா இதற்கு அப்பால் இலங்கை உட்பட பல நாடுகளில் தனது தளங்களை உருவாக்க முயல்கின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்  என ஐஏன்என்எஸ் தெரிவித்துள்ளது.

சீனா 2035  ஆண்டளவில் முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ படையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துகின்றது 2049ம் ஆண்டுக்குள் சீன இராணுவத்தை உலகதரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன.

இதேகாலப்பகுதியில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது இறையாண்மை பிரதேசம் என கருதும் பகுதிகளை பாதுகாப்பதற்கு சீன இராணுவத்தை பயன்படுத்தவும் பிராந்திய விவகாரங்களி;ல் தனது முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் சர்வதேச அளவில் தனது வலிமையை வெளிப்படுத்தவும் நீரிணை மோதலின் போது அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கவும் எதிர்க்கவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/178603

எங்கள் பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன! -கோவிந்தன் கருணாகரம்

3 months ago
kovinthan-630x375.jpg எங்கள் பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன! -கோவிந்தன் கருணாகரம்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தரன் தனிப்பட்ட ரீதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் எனவே அவர் கூட்டத்திற்கு சென்றதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், இந்த நாடு தற்போதும் பொருளாதார ரீதியில் உலகத்தில் இருந்து அந்நியப்பட்டிருக்கின்றது. எனவே இந்த நாட்டு நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

சிவராத்திரி தினம் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான தினம் சிவபெருமான் இந்துக்களின் முதல் முதல் கடவுள் இந்த நிலையில் சிவராத்திரிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட ஆலைய குரு மற்றும் பக்தர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளதுடன், சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் திணைக்களம் என்ற ரீதியிலே எங்கள் பிரதேசங்கள் பல கபளீகரம் செய்ப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் வெடுக்குநாறி மலையும் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும், வடக்கு கிழக்கில் அமைதியை கொண்டு வரவேண்டும், 13 திருத்த சட்டத்தை அமுல்படுத்தவேண்டும், புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற தமிழ் தனவந்தவர்கள் இலங்கையில் வந்து முதலிடவேண்டும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் வாய்கிழிய கூறிக் கொண்டு, மறைமுக நிகழ்ச்சி நிரலில் வடக்கு கிழக்கில் தமிழினத்தின் கலை கலாச்சாரத்தை ஒழிக்கும் ஒரு வேலைத்திட்டமாக இந்த வெடுக்குநாறி சம்பவத்தை பார்ப்பதாகவும் கோவிந்தன் கருணாகரம்  மேலும் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1373292

மனித உரிமைகள், நல்லிணக்கத்தில் அடையப்பட்ட முன்னேற்றத்தை சவாலுக்கு உட்படுத்தும் சட்ட உருவாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம் - அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்

3 months ago

Published By: DIGITAL DESK 3   13 MAR, 2024 | 08:52 AM

image

(நா.தனுஜா)

சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களைத் தாம் தொடர்ந்து கண்காணிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் கடந்த வாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது இலங்கை பற்றிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கையைத் தொடர்ந்து பிரிட்டன், கனடா, வடமெசிடோனியா, மாலாவி, மொன்டெனேக்ரோ மற்றும் அமெரிக்கா ஆகிய இணையனுசரணை நாடுகளால் இலங்கை நிலைவரம் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது.

அதில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டத்தை உருவாக்க முன்னர் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது அவசியமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய இணையனுசரணை நாடுகள், எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்நிலையில் இணையனுசரணை நாடுகளின் அறிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், 'சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களை நாம் தொடர்ந்து கண்காணிப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணையனுசரணை நாடுகளாலும், ஏனைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் 'நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமானது கருத்து வெளிப்படுத்தலைக் குற்றமாக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும்' என்ற பொதுவான கரிசனை முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/178583

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதமச் செயலாளர்கள் நியமனம்

3 months ago

Published By: VISHNU   13 MAR, 2024 | 02:46 AM

image

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (12) கையளித்தார். 

இலங்கை நிர்வாகச் சேவையின் தலைசிறந்த அதிகாரியான எல்.இளங்கோவன் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர் பதவி வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகும் பணியாற்றியுள்ளார்.

எல்.இளங்கோவன் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக நியமனம் பெறும் வரை, வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/178576

ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன்

3 months ago

இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்த, ஜனாதிபதியின் அழைப்பில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழிவுகள் தொடர்பிலான கலந்துரையாடலில் பங்கேற்ற, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கை தனக்கு கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“எதிர்க்கட்சித் தரப்பில் நான் மட்டும்தான் பிரசன்னமாகியிருந்தேன். சரியான தரவுகள் எங்களுக்கு இல்லாத சூழ்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்க முடியுமா என எங்களால் சொல்ல முடியாது என குறிப்பிட்ட பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவு அறிக்கையை எங்களுக்குத் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். முதலில் எனக்குத் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள்.”

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று (மார்ச் 11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன் | Sumanthiran Attend Imf Meeting

சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட அழைப்பு

 

இந்தக் கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் மாத்திரமே எதிர்க்கட்சிகள் சார்பில் பங்கேற்றிருந்ததோடு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அனுமதியை தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் அவர் பெற்றிருக்கவில்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன் | Sumanthiran Attend Imf Meeting

 

இந்த விடயம் தொடர்பில் வினவியபோதிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். எவ்வாறெனினும் இந்த கூட்டத்தில் பங்கேற்றமை குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தனக்கு கிடைத்த தனிப்பட்ட அழைப்பிற்கு அமைய பங்கேற்றதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதேநேரத்தில், வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பில், யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிவஞானம் சிறீதரன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/sumanthiran-attend-imf-meeting-1710268541

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு - காபன் பரிசோதனைக்கான செலவீனம் தொடர்பில் அவதானம்

3 months ago
12 MAR, 2024 | 09:57 PM
image

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கில் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை 4 மாதங்களில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளை காபன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்க பட்டதாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிறைஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணையானது திங்கட்கிழமை  மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்  CID யினரால் சட்ட வைத்தியர் கேவகேயின் அறிக்கை நான்கு மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றின் ஆஜரான சட்டத்தரணி நிறைஞ்சன் தெரிவித்தார்.   

திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் காபன் பரிசோதனைக்காக  அனுப்பப்பட இருந்த நிலையில் அதற்கான நிதி வசதிகள் மேற்கொள்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் அதற்கான விலை மனு கோரப்பட்டு இருந்ததாகவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்  அதற்கான பதிலை அளிக்க முடியாத நிலை காணப்பட்டமையால் அதற்கு பிரிதொரு தவணையை கோரியதாகவும் தெரிவித்தார். 

அதன் அடிப்படையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை  மீண்டும் மே மாதம் 13 திகதி அழைப்பதற்காக திகதியிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/178556

Checked
Sun, 06/16/2024 - 00:55
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr