3 weeks 2 days ago
பாலத்தீன நாடு உருவாகாது - நெதன்யாகு
3 weeks 2 days ago
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா, போர்த்துகல் ஆகியன பிரித்தானியாவுடன் இணைவு! Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 10:03 AM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேல் குடியேற்றங்களை விரிவுபடுத்தவும், காசா மீதான போரை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ள நிலையில், பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்த்துகல் ஆகியன ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கனேடிய பிரதமர் மார்க் கார்னி பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஞாயிற்றுக்கிழமை ( செப்டெம்பர் 21) அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளார். மேலும் "பாலஸ்தீன அரசு மற்றும் இஸ்ரேல் அரசு இரண்டிற்கும் அமைதியான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கட்டியெழுப்புவதில் தங்கள் கூட்டாண்மையை" வழங்கியுள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம் "பாலஸ்தீன அரசு உருவாகும் வாய்ப்பை எப்போதும் நிறுவுவதைத் தடுக்கும் முறையாக" செயல்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். "பாலஸ்தீன அதிகார சபையின் தலைமையிலான பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது, அமைதியான சகவாழ்வையும் ஹமாஸின் முடிவையும் விரும்புவோருக்கு அதிகாரம் அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது எந்த வகையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தாது, அதற்கான எந்த வெகுமதியும் அல்ல," எனவும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீன அதிகாரசபை கனடாவிற்கு அதன் ஆட்சியை சீர்திருத்துவதில் "நேரடி உறுதிமொழிகளை" வழங்கியுள்ளது. அதே நேரத்தில், அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகவும் அறிவித்தது. கனடா மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து அவுஸ்திரேலியாவும் அங்கீகரிப்பது இரு நாடு தீர்வுக்கான சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாகும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸ் ஒரு அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/225706
3 weeks 2 days ago
தந்தை அருகில் இருந்த போதே 13 வயது மகனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படை - மேற்கு கரையில் என்ன நடக்கிறது? படக்குறிப்பு, அப்தெல் அஜீஸ் மஜர்மே தனது 13 வயது மகன் இஸ்லாமின் மரணத்தால் துக்கம் அனுஷ்டிக்கிறார். கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர், ஜெனின் 22 செப்டெம்பர் 2025, 05:18 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் நாடுகள் குடிமக்களைப் பாதுகாக்கத்தான் இருக்கின்றன. ஒரு தந்தையும் தனது பிள்ளையைப் பாதுகாக்கவே விரும்புகிறார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமின் நுழைவாயிலில், தனது 13 வயது மகன் இஸ்லாம், இஸ்ரேலியப் படைகளால் இந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அப்தெல் அஜீஸ் மஜர்மே அருகில் நின்றுகொண்டிருந்தார். "என் மகன் தரையில் சரிந்தான். ஒரு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. ஒரு ராணுவ ஜீப் அருகில் வந்து, ஐந்து அல்லது ஆறு வீரர்கள் தங்கள் ஆயுதங்களால் என்னைக் குறிவைத்து, என்னை அங்கிருந்து செல்லும்படி கத்தினர். என் மகன் கொல்லப்பட்டான் என்று கூட எனக்குத் தெரியாது. நான் அவனை இழுத்துச் செல்ல ஆரம்பித்தேன்." ஜனவரி முதல் இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முகாமிற்கு தான் சென்றது, அங்கிருக்கும் தனது வீட்டிலிருந்து குடும்ப ஆவணங்களை எடுக்கத்தான் என்று அப்தெல் அஜீஸ் கூறினார். "நான் யாரிடமும் புகார் அளிக்க முடியாது," என்று அவர் என்னிடம் கூறினார். "அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பாலத்தீன அதிகார சபையால் தங்களையே கூட பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை - அது யூதர்களின் முடிவுகளை மட்டுமே செயல்படுத்துகிறது." ஒரு பாலத்தீனராக, அப்தெல் அஜீஸ் தனது அதிகாரமற்ற நிலையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், ஒரு தந்தையாக அவர் வேதனையில் துடிக்கிறார். "என் மனதிற்குள்ளேயே, அந்த வீரனிடம் நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். ஏன் ஒரு 13 வயது பையனைத் தேர்ந்தெடுத்தாய்? நான் அவனுக்குப் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தேன். என்னைச் சுட்டிருக்கலாம். ஏன் குழந்தைகளைச் சுடுகிறீர்கள்? நான் இங்கே இருக்கிறேன், என்னைச் சுடு." பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, அப்தெல் அஜீஸ் செப்டம்பர் 9-ஆம் தேதி தனது மகன் இஸ்லாமைப் புதைத்தார். சந்தேக நபர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தலைச் சமாளிக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது. அந்தப் பதின்ம வயது சிறுவன் என்ன அச்சுறுத்தலை ஏற்படுத்தினார் என்பதை விளக்க அது மறுத்துவிட்டது. ஜெனின் போன்ற நகரங்கள், இஸ்ரேல்-பாலத்தீன ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்களின் கீழ், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு பாலஸ்தீன அதிகார சபையின் முழு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன. இவை ஒரு அரசு உருவாவதற்கான விதைகளாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. ஆனால், அங்கு வளர்ந்தது பயங்கரவாதம் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஜனவரியில், காஸாவில் கற்றுக்கொண்ட பாடங்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, ஆயுதமேந்திய பாலத்தீன குழுக்களை ஒடுக்க ஜெனின் மற்றும் அண்டை நகரமான துல்கரேமிற்கு அது டாங்கிகளை அனுப்பியது. அப்போதிருந்து, இஸ்ரேலியப் படைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன. இரு நகரங்களிலும் உள்ள அகதிகள் முகாம்களில் பெரும் பகுதிகளை அழித்து, மற்ற பகுதிகளில் கட்டடங்களை இடித்து வருகின்றன. இஸ்ரேலின் கட்டுப்பாடு மேற்கு கரை முழுவதும் பரவும் அதேவேளையில், காஸா போரும் தொடரும் நிலையில், பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. மேலும் பல நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரிக்கத் தயாராகி வருகின்றன. ஜெனின் மேயர் முகமது ஜாரர், இஸ்லாம் சுடப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள முகாம் நுழைவாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் முன்பு சென்றபோது இங்கு நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் இப்போது இல்லை. ஆனால், ஒரு பெரிய மண் திட்டு சாலையைத் தடுத்துள்ளது. இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் வீரர்கள் இன்னும் உயரமான கட்டடங்களிலிருந்து அந்தப் பகுதியை நோட்டமிடுகிறார்கள் என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். ஜெனின் நகரத்தில் சுமார் 40% பகுதி இப்போது இஸ்ரேலியப் படைகளுக்கான ஒரு ராணுவப் பகுதியாக உள்ளது என்றும், முழு முகாமையும் உள்ளடக்கிய சுமார் கால் பகுதி குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் ஜாரர் என்னிடம் கூறினார். "இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை அல்ல, ஒரு பெரிய அரசியல் திட்டம் என்பது தொடக்கத்திலிருந்தே தெளிவாக இருந்தது," என்று அவர் என்னிடம் கூறினார். "இந்த இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கு கரையை இணைக்க விரும்புகிறது. அதற்கான தயாரிப்பாக, அதன் திட்டத்திற்கு எந்த [ஆயுதமேந்திய] எதிர்ப்பும் இல்லாமல் இருக்க அது விரும்புகிறது." ஆசிரியர்கள் மற்றும் காவலர்களுக்கு ஊதியம் வழங்க பாலத்தீன அதிகார சபைக்கு தேவைப்படும் வரி வருவாயைத் தடுத்து, அதை நீண்ட கால பொருளாதார முற்றுகையின் கீழும் இஸ்ரேல் வைத்துள்ளது. கொல்லப்பட்ட பாலத்தீன பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதாக இஸ்ரேல் அதன் மீது குற்றம் சாட்டுகிறது. பாலஸ்தீன அதிகார சபையோ இப்போது அந்த நிதி உதவித் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகக் கூறுகிறது. உள்ளூர் மக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்குவதும், இளைஞர்களை வெளியேறாமல் இருக்கும்படி சமாதானப்படுத்துவதும் கூட இப்போது மிகவும் சவாலான காரியமாக உள்ளது என்று ஜாரர் கூறினார். இந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே 140-க்கும் மேற்பட்ட நாடுகள் பாலத்தீன அரசை அங்கீகரித்திருந்தாலும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் அதை அங்கீகரிப்பது முக்கியமானது என்றார் அவர். "இது, ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தாலும் கூட பாலத்தீன மக்களுக்கு ஒரு அரசு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது," என்று அவர் என்னிடம் கூறினார். "இந்த அங்கீகாரம் மேற்கு கரையில் [அதிகமான] ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அங்கீகாரம் மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அது பாலத்தீன மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். சர்வதேச சமூகம் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அழைக்கப்படும்." பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் ஒரு பாலத்தீன அரசு அங்கீகரிக்கப்படுவது, இஸ்ரேலுக்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் இடையே இந்த விவகாரத்தில் உள்ள அரசியல் பிளவை அங்கீகரிப்பதாகவும் உள்ளது. "ஒரு பாலத்தீன அரசு இருக்காது," என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேற்கு கரையில் குடியேறியவர்களிடம் கடந்த வாரம் கூறினார். "இந்த இடம் எங்களுடையது. எங்கள் பாரம்பரியத்தையும், எங்கள் நிலத்தையும், எங்கள் பாதுகாப்பையும் நாங்கள் கவனித்துக் கொள்வோம்." என்றார் அவர். நெதன்யாகு ஒரு பாலத்தீன அரசைத் தடுப்பதன் மூலமே தனது அரசியல் வாழ்க்கையை உருவாக்கினார். அவரது அரசு மேற்கு கரையில் யூத குடியேற்றங்களை விரிவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவரது தீவிர வலதுசாரி கூட்டாளிகள் அந்த பகுதியை இஸ்ரேலுடன் முறையாக இணைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் சமீபத்தில் மேற்கு கரையில் 82% பகுதியை இணைத்துக்கொள்வதற்கான ஒரு திட்டத்தை கோடிட்டுக் காட்டினார். மீதமுள்ள பாலத்தீன பகுதிகள் ஒன்றிலிருந்து ஒன்று துண்டிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பாலத்தீன அரசை அங்கீகரிப்பதை எதிர்த்தார். அதேநேரத்தில், இஸ்ரேலிய நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. 1967 அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேல் ஜோர்டானிடமிருந்து மேற்கு கரையைப் பிடித்தது. பின்னர் அதை விட்டு வெளியேறவில்லை. ஜெனிவா உடன்படிக்கைகளின்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் குடிமக்களின் குடியிருப்புகளை நிறுவுவது சட்டவிரோதமானது. ஆனால், மேற்கு கரைக்கு ஒரு வரலாற்று யூத உரிமை உள்ளது என்று இஸ்ரேல் வாதிடுகிறது. சுமார் அரை மில்லியன் குடியேற்றம் செய்யப்பட்டு, இப்போது அங்கு வாழ்கின்றனர். குடியேற்ற விரிவாக்கத்தைக் கண்காணிக்கும் இஸ்ரேலிய அமைப்பான 'பீஸ் நௌ' (Peace Now), கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கு கரை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட புதிய புறக்காவல் நிலையங்கள் தோன்றியுள்ளதாகக் கூறுகிறது. தொலைதூர குடியிருப்புகள் சர்வதேச மற்றும் இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை. ஆனால், நெதன்யாகு அரசிடமிருந்து அவை சாலைகள், பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு வடிவில் மறைமுக ஒப்புதலையும் அரசு ஆதரவையும் பெறுகின்றன. இந்த கோடைக்காலத்தின் தொடக்கத்தில், நப்லஸின் தெற்கே தனது வீட்டுக்கு அடுத்துள்ள மலையில் புதியவர்கள் குடியேறியிருப்பதை அய்மான் சூஃபான் கண்டார். தனது ஜன்னலிலிருந்து, அவரும் அவரது பேரக்குழந்தைகளும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அமைத்த எளிய மரக் கூடாரம் மற்றும் தகர கொட்டகையைத் தெளிவாகக் காண முடிகிறது. அவர்கள் அருகிலுள்ள இட்சார் குடியேற்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று அய்மான் கூறுகிறார். படக்குறிப்பு, நப்லஸுக்கு அருகில் சில மாதங்களுக்கு முன்பு இந்த தொலைதூர குடியிருப்பு தோன்றியது. "எங்களை எங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றத்தான் அவர்கள் இங்கு இந்த தொலைத்தூர குடியிருப்பை அமைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு குடியேற்றவாசி வந்து, வீட்டின் கதவை தட்டி, 'வெளியேறு, வெளியேறு!' என்று கத்துகிறான்," என்று அவர் என்னிடம் கூறினார். "அவர்கள் தங்கள் குப்பைகளை எங்கள் வீட்டு வாசலில் எறிகிறார்கள். நான் அதிகாரிகளை அழைக்கிறேன். அவர்களோ, 'நாங்கள் ராணுவத்தை அனுப்புவோம்' என்று கூறுகிறார்கள். ஆனால், ராணுவம் ஒருபோதும் வருவதில்லை. குடியேற்றவாசிகள் தான் ராணுவம், அவர்கள்தான் போலீஸ், அவர்கள்தான் எல்லாம்." 1967-ல் இஸ்ரேல் மேற்கு கரையை ஆக்கிரமித்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, புரின் கிராமத்திற்கு அருகில் அய்மானின் குடும்பம் இந்த வீட்டைக் கட்டியது. படக்குறிப்பு, தனது வீட்டிலிருந்து புதிய தொலைதூர குடியிருப்பை அய்மானால் பார்க்க முடிகிறது. இந்த கிராமப்புற பகுதிகள் போன்ற இடங்கள், ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்களின் கீழ், அங்குள்ள குடியேற்றங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எதிர்கால பாலத்தீன அரசிடம் இறுதியில் ஒப்படைக்கப்படும் என்ற எண்ணத்தில் தற்காலிகமாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டன. ஆனால், அங்கே இஸ்ரேலிய கட்டுப்பாடு நிலைத்துவிட்டது, குடியேற்றங்கள் பெருகியுள்ளன. இஸ்ரேலியப் படைகள் குடியேற்றவாசிகளின் தாக்குதல்களுக்கு அதிக அளவில் ஆதரவளிக்கின்றன என்று மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன. 2003-ல் குடியேற்றவாசிகள் வீட்டிற்குத் தீ வைத்தபோது தனது தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார் என்றும், அதற்குப் பிறகு தனது வீடு பலமுறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்றும் அய்மான் கூறினார். "யார் என்னைப் பாதுகாக்க வேண்டும்," என்று அய்மான் கேட்டார். "பாலத்தீன போலீசா? நகரங்களில் இது நடப்பதைத் தடுக்க கூட அவர்களால் முடியவில்லை, இங்கு எப்படி வருவார்கள்? இங்கே, எனது பாதுகாப்பு, என்னை ஆக்கிரமித்தவர்களின் கைகளில் உள்ளது." களத்தில் எதுவும் மாறாது என்றாலும் ஒரு பாலத்தீன அரசை சர்வதேச ரீதியாக அங்கீகரிப்பது ஒரு நல்ல விஷயம் என்று அவர் கூறுகிறார். "வரப் போவது இன்னும் மோசமானது," என்று அவர் கூறினார். "ஆனால், நான் இந்த வீட்டை விட்டு வெளியேறினால், அது நான் பிணமாக வெளியேற்றப்படும் போதுதான். நான் பிறந்த, வளர்ந்த, என் குழந்தைப் பருவத்தைக் கழித்த இந்த வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு ஒரு நினைவு உள்ளது. நான் எப்படி இதை விட்டு வெளியேற முடியும்?" ஓஸ்லோ ஒப்பந்தங்களுக்குப் பிந்தைய தசாப்தங்களில், இஸ்ரேலிய விவரிப்புகள் கடுமையாகியுள்ளன. ஆயுதமேந்திய பாலஸ்தீன குழுக்கள் வலுப் பெற்றுள்ளன. பாலஸ்தீன அதிகார சபையின் கட்டுப்பாடு குறைந்துவிட்டது. "பாலத்தீனம் ஒருபோதும் அவர்களுக்குச் சொந்தமாக இருந்ததில்லை. ஒருபோதும் இருக்கவும் போவதில்லை," என்று மகனை இழந்த தந்தை அப்தெல் அஜீஸ் மஜர்மே கூறினார். "இன்றோ, நாளையோ, ஒரு ஆண்டிலோ அல்லது இரண்டு ஆண்டுகளிலோ, அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவார்கள். பாலத்தீனம் விடுவிக்கப்படும்." இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் ஆகிய இரண்டு தனிநாடுகள்தான் இங்குள்ள மோதலுக்கான தீர்வு என்ற யோசனையை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆதரிக்கின்றன. பாலத்தீன பிரதேசங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள போதிலும், பாலத்தீன அமைப்புகள் பலவீனமடைந்துள்ள போதிலும் இந்த நிலைப்பாட்டில் அந்நாடுகள் உள்ளன. இப்போது, நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டாளிகள் இணைப்பிற்காக அழுத்தம் கொடுப்பதால், காஸா போர் மற்றும் அதற்குப் பிறகு காஸாவை யார் ஆள்வார்கள் என்ற கேள்விகள் அந்த அரசியல் முட்டுக்கட்டையை வெளிப்படையான மோதலாக மாற்றியுள்ளன. சட்டங்கள் மற்றும் அறிவிப்புகளால் அல்லாமல் அரசும் இறையாண்மையும் களத்தில் உள்ள உண்மைகளால் தீர்மானிக்கப்படும் என்று சில இஸ்ரேலியர்கள் கூறுகின்றனர். தனது ஒப்புதல் இல்லாமல் ஒரு பாலத்தீன அரசு இருக்க முடியாது என்று இஸ்ரேல் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறது. இப்போது, அங்கீகரிப்பை முன்னெடுப்பதன் மூலம், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் இஸ்ரேலால் மட்டும் தனிநாடு உருவாவதை தடுக்க முடியாது என்று சமிக்ஞை செய்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czx0043gnrxo
3 weeks 2 days ago
முன்னரெல்லாம் சிவாஜிக்கு -சி.எஸ்.ஜெயராமன், எம்ஜிஆருக்கு சீர்காழியார் எனப் பாடிக்கொண்டிருந்தார்கள். தூக்குத் தாக்கி படத்ததோடு சிவாஜி, சௌந்தரராஜனோடு ஒன்றிப் போனார். எம்ஜிஆரும் சௌந்தரராஜனை தன் படத்தில் பாடவைத்தாலும் விட்ட குறை தொட்ட குறை என்று அவ்வப்போது சீர்காழியாருக்கும் தன் படத்தில் சந்தர்ப்பம் கொடுத்துக் கொண்டிருந்தார். சபாஸ் மாப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுடன் எம்ஜிஆருடன் உடனிருப்பவர் மாலினி. அன்றைய முன்ணணி நடிகர்களோடு மாலினி நடித்திருந்தோலும் பத்துப் படங்களுக்குள் இவரது திரைப்பயணம் நின்றுவிட்டது. சபாஸ் மீனா படத்தில் சிவஜியுடன் மாலினி இணைந்து நடித்திருப்பார். அந்தப் படத்தில் இடம் பெற்ற “ காணா இன்பம் கனிந்ததேனோ..” பாடல் அன்று அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்ட பாடல்.
3 weeks 2 days ago
Published By: Digital Desk 1 22 Sep, 2025 | 09:59 AM பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரிப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது அரசாங்க கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு, அமைதி மற்றும் இரு - மாநில தீர்வுக்கான சாத்தியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க நாங்கள் செயல்படுகிறோம் என அவர் தமது எக்ஸ் தளத்தில் காணொளி அறிக்கையொன்றினூடாக பதிவிட்டுள்ளார். அவுஸ்திரேலியா, கனடா மற்றும் போர்த்துகல் ஆகியவை பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து பிரான்ஸூம் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக், காசாவில் பணையக் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் சில பழமைவாதிகளிடமிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதற்கு பதிலளித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அரசு "நடக்காது" என ஞாயிற்றுக்கிழமை(21) குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/225704
3 weeks 2 days ago
திலீபனின் 8ஆம் நாள் நினைவேந்தல் நல்லூரில் அனுஷ்டிப்பு 22 Sep, 2025 | 11:18 AM தியாக தீபம் திலீபனின் 8ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/225727
3 weeks 2 days ago
ஜனாதிபதி அநுர இன்று அமெரிக்கா விஜயம் 22 Sep, 2025 | 10:19 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் புதன்கிழமை (செப்டெம்பர் 24) ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாரம் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதற்கமைய ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி இன்று அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். இவ்விஜயத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தும் கலந்துகொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் புதன்கிழமை (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு (இலங்கை நேரப்படி அதிகாலை 12 மணியளவில்) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னர் ஜனாதிபதி ஜப்பானின் ஒசாகாவிற்குச் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.அங்கு சிறப்பு கண்காட்சி 2025 இல் கலந்து கொள்வார். கலாச்சாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் நாட்டின் தனித்துவமான சலுகைகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/225719
3 weeks 2 days ago
3 weeks 2 days ago
மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தீப்பந்தப் போராட்டம்! 22 Sep, 2025 | 09:35 AM மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 21) 50 ஆவது நாளை எட்டிய நிலையில் தீப்பந்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் போது கையில் தீ பந்தத்தை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த தீப்பந்த போராட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், இளையோர், பொது மக்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225712
3 weeks 2 days ago
தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அழிந்து வரும் அரிய வகை பவளப்பாறைகள் https://www.maalaimalar.com/news/state/2020/10/23144019/1996584/Rare-type-Corals-Will-be-destroyed.vpf தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அரிய வகை பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பனைக்குளம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் முதல் தூத்துக்குடி வரையிலான தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றி இதேபோல் ராமேசுவரம் முதல் மண்டபம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியிலும் ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன. மீன்கள் முட்டையிட்ட குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்வதற்கு பவளப்பாறைகள் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பவளப்பாறைகள் அதிகம் உள்ள இடங்களில் மீன்களும் அதிகம் காணப்படும். அழியும் நிலையில் பவளப்பாறைகள்... முடக்கப்படும் மன்னார் வளைகுடா அறக்கட்டளை..! கடல் உயிரினங்களின் சொர்க்கமாகவும், மீனவர்களின் ஆழ்கடல் அட்சய பாத்திரமாகவும் விளங்கி வருவது மன்னார் வளைகுடா கடல் பகுதி. இந்தக் கடல் பகுதியில் உள்ள அரிய வகை உயிரினங்களையும், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. மீன்களையும் அதை நம்பியுள்ள மீனவர்களையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளைக்கு மூடு விழா நடத்த தமிழக அரசு முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடல் உயிரினங்களின் சொர்க்கமாகவும், மீனவர்களின் ஆழ்கடல் அட்சயப் பாத்திரமாகவும் விளங்கி வருவது மன்னார் வளைகுடா பகுதி. இந்தக் கடல் பகுதியில் உள்ள அரியவகை உயிரினங்கள்தான், ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இதுபோன்ற மீன்கள் மற்றும் அதை நம்பியுள்ள மீனவர்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளைக்கு மூடுவிழா நடத்த தமிழக அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் (Mannar biosphere reserve) இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியான ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் அமைந்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற உயிர்க்கோளக் காப்பகம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது. தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் மன்னார் வளைகுடா தேசியப்பூங்காவை உள்ளடக்கி சுமார் 10,500 சதுர கிலோமீட்டரில் பரவியுள்ள இந்தக்காப்பகம், இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகமாக 1989-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மன்னார் வளைகுடாப் பகுதியில் காணப்படும் அழகான பவளப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாகத் திகழ்கிறது. இந்த உயிர்கோளக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong), டால்பின்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள், இந்தப் பகுதியில்தான் காணப்படுகின்றன. முத்துக்கள், சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து இப்பகுதி காணப்படுகிறது. மேலும் கடற்பஞ்சுகள், பவளங்கள், கடல்விசிறிகள், இறால்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் உள்ளன. காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, வாழை தீவு ஆகிய தீவுகளும் மன்னார் வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ளன. இந்தத் தீவுகளைச் சுற்றிலும் மீன்களின் இருப்பிடமாகத் திகழும் பவளப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றில் கடினவகை பவளப் பாறைகளும் அடங்கும். இத்தகைய அரிய பகுதியைப் பாதுகாக்கத் தவறியதோடு, அதற்காகத் துவங்கப்பட்ட உயிர்கோள காப்பகம் எனும் அறக்கட்டளைக்கு மூடுவிழா நடத்தவும் தமிழக அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழக அரசு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியது. இந்த அறக்கட்டளையின் பணி கடல்வாழ் அரிய உயிரினங்கள் மற்றும் தாவரங்களைப் பாதுகாத்தல் மற்றும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல், மீனவர்களின் சமூக மேம்பாட்டை உயர்த்துவது ஆகியவைதான். இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவியுடன் இயங்கி வந்தது. இந்நிலையில், ஐ.நா. உலகளாவிய சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பின் நிதி உதவியானது, கடந்த 2012-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அறக்கட்டளையை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து மேலும் நான்கு ஆண்டுகளுக்குத் திட்டத்தை நீடித்தது. ஆண்டுக்கு ரூ.2.5 கோடி வீதம், நான்காண்டுகளுக்கு ரூபாய் 10 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பணத்தை முழுமையாக ஒதுக்கீடு செய்யாமல் இதுவரை 5.96 கோடி ரூபாய் மட்டுமே அத்திட்டத்துக்காகச் செலவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு 2017-18 நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 0.74 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் அத்திட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று தற்போது, மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தை இதுவரை பராமரித்து வந்த அறக்கட்டளையின் காலம் முடிந்ததாகக் கூறி பணிகளை நிறுத்திவிட்டு, உயிர்க்கோள காப்பகத்தை முழுமையாக தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்புத் துறையின்கீழ் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மன்னார் வளைகுடா கடற்பகுதி வளங்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட பாரம்பர்ய மீனவர்களிடமே அக்கடமையை ஒப்படைப்பதுதான் அறக்கட்டளையின் நோக்கம். ஆனால், அறக்கட்டளை உருவாக்கப்பட்ட 2000-வது ஆண்டு தொடங்கி இன்றுவரை பதினேழு ஆண்டுகளில் அந்த நோக்கத்தை நிறைவேற்றாமல், கண்துடைப்புக்காக சில கூட்டங்களை மீனவர்களை வைத்து நடத்திவிட்டு, அரசின் பணத்துக்கு கணக்கு எழுதிய வேலைதான் நடந்தது. எனவே, அறக்கட்டளையின் செயல்பாடு முடியவில்லை. இன்னும் ஒழுங்குபடுத்தி சிறப்பாக கொண்டுசெல்ல வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள். தமிழகத்தில் மன்னார் வளைகுடாவில் ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான 140 கி.மீ. பரப்பளவில் பவளப்பாறைகள் உள்ளன. அவற்றைக் கடத்திச் செல்லும் சிலர், சென்னையிலிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கடத்திச் செல்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பவளப் பாறைகளுக்கு மனிதர்களால் அழிவு ஏற்படத் தொடங்கி உள்ளது. பவளப்பாறைகள் கடத்தல் மட்டுமின்றி கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தல், புவி வெப்பமயமாதல், தொழிற்சாலைக் கழிவுகளால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் போன்றவற்றாலும் கடல் வளம் பெரிதும் அழிந்து கொண்டிருக்கிறது. கடல் என்பது கழிவுகளைக் கொட்டும் இடம் அல்ல. அது காடுகளைப் போலவே தாவரங்கள், நுண்ணுயிரிகள், பாலூட்டிகள் எனப் பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது. இவற்றில் கடல்வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது பவளப்பாறைகளே. இத்தகைய பவளப்பாறைகள், கடலின் தட்பவெப்பத்தை பேணிக்காக்கவும் கடல் பகுதிகளை இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாக்கவும் அரணாக உள்ளன. எனவே, மீண்டும் தமிழக அரசு மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையை தற்கால சூழலுக்கு ஏற்ப, விதிகளில் மாற்றம் செய்து, மத்திய அரசு மற்றும் ஐ.நா. நிதியுதவியுடன் செயல்படச் செய்ய வேண்டும். இதன் மூலம் மன்னார் வளைகுடா கடற்பகுதி வளங்களை பாதுகாக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளார். https://www.vikatan.com/literature/arts/124980-is-gulf-of-mannar-biosphere-reserve-trust-going-to-be-shutdown
3 weeks 2 days ago
Published By: Vishnu 22 Sep, 2025 | 05:35 AM இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், மார்ச் 25, 2025 நிலவரப்படி 2024 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத பொது அதிகாரிகளின் பட்டியலை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவர்களில் ஒரு முன்னாள் அமைச்சர், நான்கு முன்னாள் மாகாண ஆளுநர்கள், ஆறு முன்னாள் மாநில அமைச்சர்கள், 29 முன்னாள் தூதர்கள் மற்றும் இரண்டு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அடங்குவர். தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத முன்னாள் அமைச்சர் முன்னாள் மீன்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். முன்னாள் ஆளுநர்கள் மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரோஷன் குணதிலகா, செந்தில் தொண்டமான், நவீன் திசாநாயக்க, வில்லியம் கமகே ஆகியோர் தொடர்புடைய தேதிக்குள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை சமர்ப்பிக்கவில்லை. முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான லோகன் ரத்வத்தே, தாரக பாலசூரிய, சாந்த பண்டார, காதர் மஸ்தான், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/225702
3 weeks 2 days ago
49 வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று செத்துப் போனவருக்கு என்ன பிரச்சினை இருந்ததோ? யாரறிவார். நித்தம் சோறின்றி எத்தனை பேர் எத்தனையோ வருடங்கள் வாழ்கிறார்கள். யாரும் அதிசயப் படவில்லை. கொஞ்சம் மில்லியன்களை அந்தப் பக்கமும் திருப்பி விடலாம். சக்கரவர்த்தி திருமகள் படத்தில் என்.எஸ். கிருஸ்ணன் கேட்பார், “ கோவிலை கட்டுவது எதனாலே?" என்று. அதற்கான பதில், “சிற்ப வேலைக்குப் பெருமையுண்டு அதனாலே” என்று வரும். இன்றைய நிலையில் கோவிலைக் கட்டுவது ஒரு வியாபாரத்திற்குத்தான். அதுசரி அநேகமாக பல்லி மேலேதானே இருக்கும். எப்படிக் கீழே வந்தது? அவர் ஏன் மேலே போனார்? புரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரனோடு உங்களுக்கு நல்லா பொழுது போகுது போலே.
3 weeks 2 days ago
3 weeks 2 days ago
cric Universe · Crish gayle Celebrate his birthday with RCB star smriti mandhana ......! 😂
3 weeks 2 days ago
3 weeks 2 days ago
ஆபிரிக்க அன்ரீஸின் ஆதித்ய அடுப்புச் சமையல் ........! 😂
3 weeks 2 days ago
cric Universe · Crish Gayle celebrate with smriti mandhana on his birthday #crishgayle #smritimandhana #rcb #rcbfan #cricketfans அவன் வந்து விட்டான் .......! 😂
3 weeks 2 days ago
Published By: Vishnu 22 Sep, 2025 | 05:11 AM அமைதியாக இருந்தால், அரசாங்கம் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடும். அரசாங்கத்தின் அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து அணிதிரள வேண்டும். அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒரு கட்சி ஆட்சி என்ற எண்ணக்கருவை மக்களால் தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அனுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்தும் எண்ணக்கருவை முன்னெடுத்து வருகின்றது. மரண உதவிச் சங்கம், விவசாயிகள் சங்கம், மீனவர் சங்கம், இளைஞர் கழகம் முதல் மதஸ்தலங்களின் பரிபாலன சபை வரை அனைத்தையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்து வருகின்றனர். சகல சமூக அமைப்புகளினதும் அதிகாரத்தை,கட்டுப்பாட்டை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். தற்போது சுயாதீன சிவில் பாதுகாப்புக் குழுவிற்கும் கூட அரசியல் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். மக்களின் பாதுகாப்பிற்காக சிவில் பாதுகாப்பு குழுக்கள் நிறுவப்பட்டன. சகல கட்சிகளினது உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து இதில் வேலை செய்தனர். இன்று சிவில் பாதுகாப்பு குழுவிற்கான நியமனப் பட்டியல்களை ஜேவிபி எம்.பி.க்களே நியமிக்கின்றனர். கிராமத்தில் நல்லதொரு அமைப்பு இருந்தால் இதுபோன்ற நியாயமற்ற நியமனங்களைத் தடுக்க முடியும். ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட இடத்தில் அரசாங்கத்தின் சூட்சும முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. எனவே, நாம் அமைதியாக இருந்தால், அரசாங்கம் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடும். இந்த அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து அணிதிரள வேண்டும். அது நடந்தால், தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒரு கட்சி ஆட்சி என்ற எண்ணக்கருவை மக்களால் தோற்கடிக்க முடியும் என்றார். https://www.virakesari.lk/article/225700
3 weeks 2 days ago
இந்தியா மீண்டும் வெற்றி: விவாதத்தை கிளப்பிய 'கன்ஷாட்' - தோற்ற பாகிஸ்தானை சீண்டிய சூர்யகுமார் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரைசதம் அடித்த பாகிஸ்தான் வீரர் பர்ஹானின் 'கன்ஷாட்' கொண்டாட்டம் கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 22 செப்டெம்பர் 2025, 01:39 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லீக் சுற்றில் பாகிஸ்தானை படுதோல்வி அடைய செய்த சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்று இந்த தொடரின் முன்னணி அணியாக திகழ்கிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் பலவீனமாக உள்ள சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, முந்தைய தோல்விக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கியது. கைகுலுக்குவதை மீண்டும் தவிர்த்த சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தை போலவே, நேற்றும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் நிகழ்வில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கவில்லை. டாஸ் வென்ற சூரியகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வுசெய்தார். ஆட்டத்துக்கு முந்தைய நாள், துபையில் ஈரப்பதம், பனிப்பொழிவு நிலவியதால், பந்துவீச்சை தேர்வு செய்ததாக தெரிவித்தார். முன்னதாக, துபையில் பனிப்பொழிவு (dew) ஒரு பிரச்னை அல்ல என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குறைவான வேகம் கொண்ட மைதானம் என்பதால், குல்தீப்–அக்சர்–வருண் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் அடங்கிய முதன்மை அணியுடன் இந்தியா களமிறங்கியது. ஓமனுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடிய அர்ஷ்தீப் சிங், ராணா நீக்கப்பட்டு, பும்ரா, வருண் மீண்டும் அணிக்கு திரும்பினர். பட மூலாதாரம், Getty Images யூஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த அக்சர் அணிக்கு திரும்பியது, இந்திய அணியின் சமநிலை குலையாமல் பார்த்துக்கொண்டது. சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணியில், இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆல்ரவுண்டர்கள் பஹீம் அஷ்ரஃப், ஹுசைன் டலாட் ஆகியோர் சேர்க்கப்பட்டு, ஹசன் நவாஸ், குஷ்டில் ஷா நீக்கப்பட்டனர். கடந்த மூன்று ஆட்டங்களில் டக் அவுட்டாகி சொதப்பிய சைம் அயூபிற்குப் பதிலாக பர்ஹானுடன் அனுபவ வீரர் ஃபகார் ஜமான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். கேட்ச்சை தவறவிட்ட அபிஷேக்; அதிருப்தியில் வெளியேறிய ஜமான் ஹார்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே, பர்ஹான் விக்கெட்டை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. தேர்ட்மேன் திசையில் கிடைத்த எளிதான கேட்ச் வாய்ப்பை அபிஷேக் சர்மா தவறவிட்டார். வழக்கம் போல முதல் ஓவரில் மிக மெதுவான தொடக்கத்தை (6 ரன்கள்) பாகிஸ்தான் பெற்றது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில், கால்பக்கம் வீசப்பட்ட பந்தை லெக் சைடில் அழகாக ஃபிலிக் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார் ஜமான். அடுத்த பந்தில் இறங்கிவந்து மிட் ஆஃப் திசையில் மேலும் ஒரு பவுண்டரி விளாசி, பும்ராவுக்கு நெருக்கடி கொடுத்தார். சுழற்பந்து வீச்சாளர்கள் வருவதற்குள் விரைவாக ரன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பாகிஸ்தான் தொடக்க வீரர்களின் திட்டமாக இருந்தது. பும்ராவை திறம்பட எதிர்கொண்ட நம்பிக்கையில், பாண்ட்யாவின் அடுத்த ஓவரில் பாயிண்ட் திசையில் ஒரு அட்டகாசமான பவுண்டரியை ஜமான் விளாசினார். அடுத்த பந்தை பாண்ட்யா கொஞ்சம் குறைவான வேகத்தில் வீச, விக்கெட் கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஜமான் நடையைக் கட்டினார். குறைந்த உயரத்தில் கிடைத்த கேட்ச்சை, மிகத் திறமையாக சாம்சன் பிடித்தார். மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் தனக்கு திருப்தியில்லை என்பதை ஜமான் வெளியேறும் போது வெளிப்படுத்தினார். பட மூலாதாரம், Getty Images ஃபர்ஹானால் தலைநிமிர்ந்த பாகிஸ்தான்; தடுமாறிய பும்ரா மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சைம் அயூப், சந்தித்த இரண்டாவது பந்திலேயே பாண்ட்யா பந்தில் ஒரு புல் ஷாட் அடித்து அசத்தினார். முதல் ஓவரில் பொறுமையாக இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், அடுத்தடுத்த ஓவர்களில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விளாசி, ரன் ரேட்டை தக்கவைத்து கொண்டது. குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பவுன்சர்களை மிகவும் அநாயாசமாக பாகிஸ்தான் பேட்டர்கள் எதிர்கொண்டனர். இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் பும்ரா நோ பால் உடன் சேர்ந்து இரண்டு பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தார். வேகப்பந்து வீச்சு எடுபடாத நிலையில், ஐந்தாவது ஓவரிலேயே வருண் சக்கரவர்த்தியை பந்துவீச அழைத்தார் சூர்யகுமார் யாதவ். வருணும் தன் பங்குக்கு நான்காவது பந்திலேயே விக்கெட் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். வருணின் ஆஃப் ஸ்பின் பந்தில் சைம் அயூப் ஸ்வீப் அடிக்க , அது டாப் எட்ஜ் ஆகி ஷார்ட் பைன் லெக் திசையில் இருந்த குல்தீப் யாதவ் கைகளுக்கு சென்றது. ஆனால், எளிதான கேட்ச் வாய்ப்பை குல்தீப் தவறிவிட்டார். பட மூலாதாரம், Getty Images பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்ற அழுத்தத்தில், இந்திய பீல்டர்கள் கேட்ச் வாய்ப்புகளை பதற்றத்தில் தவறவிடுகிறார்களோ என்று தோன்றியது. வழக்கத்துக்கு மாறாக நோ பால்கள் வீசுவதையும் பார்க்க முடிந்தது. கடந்த ஆட்டங்களைப் போல, தொடக்க கட்டத்திலேயே மூன்று ஓவர்களை வீசிய பும்ரா, பவர்பிளேவின் கடைசி ஓவரில் 13 ரன்களை வாரி இறைத்தார். 6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி, 55 ரன்களை எடுத்தது. இந்த தொடரில், இதுதான் பாகிஸ்தான் அணியின் சிறந்த பவர்பிளே ஸ்கோர் ஆகும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் மோசமான பவர்பிளே பந்துவீச்சு இது. பர்ஹான் 'கன்ஷாட்' கொண்டாட்டம் கடந்த ஆட்டங்களில் கணிசமாக ரன் குவித்தாலும் குறைவான ஸ்ட்ரைக் ரேட் காரணமாக விமர்சிக்கப்பட்ட பர்ஹான், இந்தமுறை புயல் வேகத்தில் விளையாடினார். அடுத்தடுத்த ஓவர்களில் வருண், குல்தீப் பந்துகளில் இறங்கிவந்து லாங் ஆன் திசையில் சிக்சர்களை விளாசினார். கடந்த ஆட்டங்கள் போல ஆபத்தான கிராஸ் பேட் ஷாட்கள் ஆடாமல், முடிந்தவரைக்கும் சுழற்பந்து வீச்சை நேராக எதிர்கொண்டதை பார்க்க முடிந்தது. அக்சர் படேலின் முதல் ஓவரில், லெக் சைடில் அபாரமாக ஒரு சிக்சரை மடக்கியடித்து அரைசதத்தை எட்டினார் சாஹிப்ஜதா பர்ஹான். அரைசதம் அடித்ததும் கன் ஷாட் (Gun shot) முறையில் கொண்டாடி, கவனத்தை ஈர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 91 ரன்கள் குவித்தது. பட மூலாதாரம், Getty Images ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பிய ஷிவம் துபே முன்னணி வீச்சாளர்களின் பந்துவீச்சு பெரிதாக எடுபடாததால், 11–வது ஓவரில் ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவை பந்துவீச அழைத்தார் சூர்யகுமார் யாதவ். கேப்டன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றிய துபே, சைம் அயூப் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். முதல் ஓவரில் கேட்ச் விட்டதற்கு பரிகாரமாக அபாரமாக டைவ் செய்து கேட்ச் பிடித்தார் அபிஷேக் சர்மா. சைம் அயூப் விக்கெட்டுக்கு பிறகு பாகிஸ்தானின் ரன் வேகம் மட்டுப்பட்டது. 21 பந்துகளாக பவுண்டரி இல்லாத நெருக்கடியில், குல்தீப் யாதவ் பிளாட் செய்து வீசிய பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று டாலாட் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால், பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக பெரிய ஷாட்களை முயன்றுகொண்டே இருந்தது. 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த ஃபர்ஹான் விக்கெட்டை ஆஃப் கட்டர் பங்கில் துபே கைப்பற்றினார். ஆறாவது விக்கெட்டுக்கு கேப்டன் சல்மான் அகா களமிறங்கினார். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான், மிடில் ஓவர்களில் இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது. ஒற்றை, இரட்டை ரன்களை எடுக்க இயலாமல் பாகிஸ்தான் பேட்டர்கள் தடுமாறுவதை காண முடிந்தது. பட மூலாதாரம், Getty Images கடைசி கட்டத்தில் மீண்டும் அதிரடி கடைசி 4 ஓவர்களில் மீண்டும் அதிரடியை கையிலெடுத்தது பாகிஸ்தான். குல்தீப் வீசிய 17–வது ஓவரில் சல்மான் அகா சிக்சர் அடிக்க, துபேவின் கடைசி ஓவரில் 18 ரன்களை பாகிஸ்தான் குவித்தது. 19–வது ஓவரில் பும்ரா நன்றாக வீசிய போதும், மீண்டும் ஒரு கேட்ச் வாய்ப்பை இந்தியா (கில்) தவறவிட, முகமது நவாஸ் ரன் அவுட்டான போதும் 11 ரன்கள் கிடைத்தது. நவாஸ் பொறுப்பின்றி ரன் அவுட்டான விதம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் பஹீம் அஷ்ரஃப் சிக்சர், பவுண்டரி விளாச, பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக துபே 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பட மூலாதாரம், Getty Images கில்–அபிஷேக் அபார தொடக்கம்; ஹாரிஸ் ராஃப் வாக்குவாதம் 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, அப்ரிடி வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி தொடக்கம் கொடுத்தார் அபிஷேக் சர்மா. வழக்கமாக முதல் பந்தை முழு நீளத்தில் அல்லது யார்க்கராக வீசும் அப்ரிடி, பவுன்சர் வீசி அதிர்ச்சியளிக்க பார்த்தார். ஆனால், சிரமமின்றி எதிர்கொண்ட அபிஷேக், பைன் லெக் திசையில் சிக்சருக்கு அனுப்பினார். முதல் ஓவரில் இந்திய அணி 9 ரன்கள் எடுத்தது. இரண்டாவது ஓவரை சைம் அயூப் வீச, அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்து தன் கிளாஸ் என்னவென்பதை கில் காட்டினார். சுழற்பந்து வீச்சாளர்கள் தடுமாறும் ஆடுகளத்தில், சைம் அயூபை பவர்பிளேவில் பந்துவீச அழைத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தனது அடுத்த ஓவரில் அப்ரிடி ஷார்ட் பந்தின் மூலம் விக்கெட் வாய்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் மிட் விக்கெட் திசையில் கிடைத்த கடினமான கேட்ச் வாய்ப்பை நவாஸ் தவறவிட்டார். அதே ஓவரில், மிட் ஆஃபிலும் கவர் திசையிலுமாக இரு அட்டகாசமான பவுண்டரிகளை கில் விளாசி பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். நான்காவது ஓவரை இந்த தொடரில் 4 ரன்னுக்கும் குறைவாக எகானமி ரேட் வைத்துள்ள அப்ரார் அஹமது வீச, அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சருமாக அபிஷேக் விரட்டினார். பந்து வீச்சாளர்கள் மாறிய போதும், இந்திய பேட்டர்களின் வாண வேடிக்கை குறையவில்லை. ஹாரிஸ் ராஃப் வீசிய ஓவரில் தொடக்க வீரர்கள் இருவரும் பவுண்டரி அடிக்க, 28 பந்துகளில் கில்–அபிஷேக் ஜோடி 50 ரன்களை கடந்தது. ராஃப், அபிஷேக் இடையிலான வாக்குவாதம், ஆட்டத்துக்கு மேலும் பரபரப்பை கூட்டியது. பட மூலாதாரம், Getty Images இந்தியாவுக்கு செக் வைத்த ஃபஹீம் அஷ்ரஃப், ஹாரிஸ் ராஃப் வேகப்பந்து வீச்சை விரும்பி விளையாடுகிறார்கள் என்று மீண்டும் சைம் அயூபிடம் சல்மான் அகா பந்தை கொடுக்க, அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை கில்–அபிஷேக் ஜோடி அடித்தது. பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 69 ரன்களை குவித்தது. இந்த தொடரில் மீண்டும் ஒருமுறை 30 ரன்களை கடந்த அபிஷேக், பவர்பிளேவுக்கு அடுத்த அப்ரார் அஹமதுவின் ஓவரில் லெக் சைடில் இரு இமாலய சிக்சர்களை விளாசினார். அபிஷேக் சர்மா ஆஃப் சைடில் அதிரிபுதிரியான ஷாட் மூலம் அரைசதத்தை கடக்க, மறுபுறம் அவருக்கு சற்றும் குறைவில்லாமல் பாரம்பரியமான கிரிக்கெட் ஷாட்களின் மூலமே அதே வேகத்தில் ரன்களை குவித்தார் கில். 8.4 ஓவர்களில் இந்திய அணி எவ்வித சிரமமின்றி 100 ரன்களை கடந்தது. துபே பாணியிலான மிதவேகப் பந்துவீச்சு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், 10–வது ஓவரில் ஃபஹீம் அஷ்ரஃபை அழைத்தார் சல்மான் அகா. பட மூலாதாரம், Getty Images சல்மான் அகாவின் நம்பிக்கை, உடனடியாக கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த கில்லை பவுல்டாக்கி பெவிலியன் அனுப்பினார் ஃபஹீம் அஷ்ரஃப். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ராஃப் பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் தனக்கு பிடித்தமான ஷாட் விளையாட முயன்று, லீடிங் எட்ஜாகி தேர்ட்மேன் திசையில் அப்ராரிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த விக்கெட்டுகள் ஆட்டத்தில் மீண்டும் சுறுசுறுப்பை கொண்டுவந்தன. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி ஒருபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த போதும் அபிஷேக் சர்மா அதிரடியை நிறுத்தவில்லை. ஃபஹீம் அஷ்ரஃப் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசியவர், அப்ரார் பந்தில் சிக்சர் அடித்து அசர வைத்தார். ஆனால், அடுத்த பந்திலேயே லாங் ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்த அவர், இந்தியாவுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். டாப் ஆர்டர் வீரரான சஞ்சு சாம்சன் ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். ஃபஹீம் அஷ்ரஃப் பந்தில் அட்டகாசமான கவர் டிரைவ் அடித்த போதும், சாம்சனின் பேட்டிங்கில் வழக்கமான டைமிங் இல்லை. அப்ரிடி ஓவரில் திலக் வர்மா பவுண்டரி அடிக்க, கடைசி ஐந்து ஓவர்களில் இந்திய அணிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பிறகும் இடக்கை சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸ் பந்துவீசவில்லை. இவருக்குதான் பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன், உலகின் தலைசிறந்த டி20 சுழற்பந்துவீச்சாளர் என்று புகழாரம் சூட்டியிருந்தார். வலது–இடது பேட்டர்கள் இருக்கும்படி பேட்டிங் வரிசையை இந்தியா வடிவமைத்தது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியாக அமைந்தது. அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராஃப், தனது கடைசி ஓவரில் சாம்சன் (13) ஸ்டம்புகளை தகர்த்தார். எதிர்கொண்ட முதல் பந்திலேயே பாண்ட்யா பவுண்டரி அடித்தார். திலக் வர்மா சிக்சர், பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைக்க, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பட மூலாதாரம், Getty Images ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற அபிஷேக் சர்மா இந்திய அணி பீல்டிங்கில் சொதப்பிய போதும் கேட்ச்களை தவறவிட்ட போதும் எளிதான வெற்றியை பதிவுசெய்துள்ளது. ராஃப், அஷ்ரஃப் உள்ளிட்ட பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசிய போதும், போதுமான ரன்கள் கைவசம் இல்லாததால் மீண்டும் ஒருமுறை இந்தியாவிடம் மண்ணைக் கவ்வியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு அதிரடி தொடக்கம் கிடைத்த நிலையில், மிடில் ஓவர்களில் அதை அடித்தளமாக கொண்டு பெரிய ஸ்கோரை பதிவுசெய்திருக்க வேண்டும். குறிப்பாக சமீப காலமாக அதிரடியாக பேட்டிங் ஆடிவரும் அப்ரிடியை பேட்டிங் வரிசையில் முன்னதாக கொண்டு வந்திருக்க வேண்டும். கடந்த ஆட்டத்தை போலவே ஆட்டம் முடிந்த பிறகும் இரு அணி வீரர்களும் சம்பிரதாயத்துக்கு கைகுலுக்கவில்லை. அதிரடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியை பெற்றுள்ள இந்தியா, 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 24) வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. நாளை (செப்டம்பர் 23) நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன. பட மூலாதாரம், Getty Images பாகிஸ்தானை சீண்டிய சூர்யகுமார் பாகிஸ்தான் ஒரு வார இடைவெளியில் மீண்டும் வீழ்த்திய மகிழ்ச்சியில் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பை இந்திய கேப்டன் சூர்யகுமார் எதிர்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நீங்கள் அனைவரும் இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பற்றி கேள்விகள் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இரண்டு அணிகள் 15-20 போட்டிகளில் விளையாடி முடிவு 7-7 அல்லது 8-7 என இருந்தால், அதை நீங்கள் நல்ல கிரிக்கெட் என்று அழைக்கலாம், நீங்கள் அதை போட்டி என்று அழைக்கலாம். அது 13-0, 10-1 என இருந்தால், புள்ளிவிவரம் என்னவென்று எனக்கு துல்லியமாக தெரியவில்லை. ஆனால், இது இனி ஒரு போட்டி அல்ல. நாங்கள் அவர்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம், சிறப்பாக பந்து வீசினோம் என்று நினைக்கிறேன்," என்றார். பட மூலாதாரம், Getty Images இந்தியாவிடம் அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவி சொந்த நாட்டில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியினருக்கு சூர்யகுமாரின் கருத்துகள் உவப்பானதாக இருந்திருக்காது. கடந்த 15 ஆண்டுகளில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் சந்தித்த 31 போட்டிகளில் 23 போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. கன்ஷாட் கொண்டாட்டம் பற்றி விமர்சனம் பாகிஸ்தான் வீரர் பர்ஹான் தனது அரைசதத்திற்குப் பிறகு கன்ஷாட் முறையில் கொண்டாடியது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் கேள்வி எழுப்பினார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "சபாஷ் மோடி ஜி! பார்க்க மீதமிருந்த ஒரு விஷயம் இதுதான், இதற்காகத்தான் அவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்களா? அவர் இதை எப்படிச் செய்யத் துணிந்தார்? நரேந்திர மோடி ஒரு பலவீனமான பிரதமர்" என்று எழுதினார். சிவசேனா (UBT) தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், "பிசிசிஐக்கு வாழ்த்துகள். இந்தப் படங்கள் உங்களைப் போதுமான அளவு திருப்திப்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான 'ஒலிம்பிக்' உணர்வைப் பாதிக்காது என்றும் நம்புகிறேன். இது தொந்தரவாக இருக்கிறது. ஆனால் இரத்தத்தில் இருந்து பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருப்பவர்களுக்கு இது பொருந்தாது" என்று எழுதினார். அரசியல்வாதிகளைத் தவிர, பிற சமூக ஊடக பயனர்களும் பர்ஹானின் 'கன்ஷாட்' கொண்டாட்டம் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டதை காண முடிந்தது. ஜிதேஷ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் "சாஹிப்சாதா பர்ஹான் தனது அரை சதத்தைக் கொண்டாடியது இப்படித்தான். மோடி ஜி, இது போர் இல்லையென்றால், என்ன?" என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், கிரிக்கெட் மைதானத்தில் ஒரு வீரர் கன்ஷாட் முறையில் கொண்டாடியது இதுவே முதல் முறை அல்ல. முன்னாள் இந்திய கேப்டன்கள் எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரும் இந்த முறையில் கொண்டாடியுள்ளனர். ஒரு ஐபிஎல் போட்டியின் போது, தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன் ரூஸோவும் பர்ஹானைப் போலவே கொண்டாடினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y88np8evzo
3 weeks 2 days ago
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க அநியாயம் பண்ணுறாங்க . .......! 😍
Checked
Thu, 10/16/2025 - 06:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed