1 month ago
Published By: RAJEEBAN 09 JUL, 2025 | 11:35 AM செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார். வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்;டுள்ளதாவது, செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். ஆம் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து நேரடிப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.கடந்த மாதம் குறித்து பேசினோம். இலங்கையின் பல பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பினை பேணி வருகின்றோம்.அவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் உட்பட ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். எங்களால் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்கு நான் தயார். மனித புதைகுழி விடயத்தில் திறன் தொடர்பான பிரச்சினைகள் உள்ளமை குறித்த புரிந்துணர்வு காணப்படுகின்றது. இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை இதன் காரணமாக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நியாயாதிக்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை. https://www.virakesari.lk/article/219554
1 month ago
1 month ago
அறுகம்பையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு! இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இலங்கை அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம், பொலிஸார் மற்றும் கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. மேலும் முக்கிய சந்திகள், வர்த்தக நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மோப்பநாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருவதோடு, சில இடங்களில் ட்ரோனின் உதவியுடன் வான் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலலை விளையாட்டில் ஈடுபடுபவர்களையும் பாதுகாப்பதற்கென அரச பாதுகாப்புப் படையினர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடும் பாதுகாப்பு கெடுபிடிக்கு மத்தியில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து பொத்துவில் பகுதிக்கு அதிகளவான உல்லாசப்பிரயாணிகள் வருகை தருவதால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இவ்வாறு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438557
1 month ago
வடக்கில் பொலிஸாரின் டிப்பர்களில் மணல் கடத்தல்? வட மாகாணத்தில் இடம்பெற்று வரும் சில சட்ட விரோத மணல் கடத்தல் சம்பவங்களில் பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ம.கபிலன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பிராந்திய பொறியியலாளர்இ வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், ஒப்பந்தகாரர்கள் சங்க நிர்வாகத்தினர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2025/1438573
1 month ago
பாரிய அளவிலான ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மீட்பு! பாரிய அளவிலான ஆயுதங்கள், ஒரு தொகை போதைப்பொருட்கள் என்பவற்றை களனி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு SMG வகை துப்பாக்கிகள், பத்து 9 மில்லி மீட்டர் தோட்டாக்கள் கொண்ட இரு மெகசின்கள், T56 துப்பாக்கி வகை ஆயுத பாகங்கள், 9.24 கிலோ ஹெராயின் மற்றும் 67.57 கிலோ கேரள கஞ்சா உள்ளிட்டவை மீட்கப்பட்ட பொருட்களாகும். கடந்த ஜூலை 03 ஆம் திகதி ராகமையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ‘ஆர்மி உபுல்’ என்ற நபர் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ராகம, படுவத்த மயானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது, அவரது பையில் 09 கிலோ கிராமுக்கு அதிகமான ஹெராயின் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர். விசாரணையில் சந்தேக நபர், ராகமை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தான் வழங்கியதாகவும், அதை தனது தற்காலிக இல்லத்தில் மற்றொரு ஆயுதத்துடன் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து குறித்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன. மேலும் விசாரணையில் 67 கிலோவுக்கு மேல் எடையுள்ள கஞ்சா மற்றும் ஆயுதங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 26 வயதான சந்தேக நபர் பொரளை, பேஸ்லைன் வீதியைச் சேர்ந்தவர் என்பதுடன், தற்போது மேலதிக விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1438594
1 month ago
அண்மைக்காலமாக இலங்கையில் இஸ்ரேலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வது முஸ்லிம் சமூகத்திடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது. கொழும்பில் இஸ்ரேலிய சபாத் இல்லம் அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகவும் தனது கையடக்கத் தொலைபேசியில் இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கரை வைத்திருந்ததாகக் கூறியும் மாவனெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எட்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளமை முஸ்லிம் சமூகத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு முன்னராக, இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கரை ஒட்டிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞரான ருஷ்தி, பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னரே நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த கைதுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது. முஸ்லிம்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்தக் கைது தொடர்பில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை வழங்கியிருந்தனர். உள்ளூராட்சித் தேர்தல் அண்மித்த நிலையில், முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பை சம்பாதிக்கக் கூடாது என்பதற்காக ருஷ்தி அவசர அவசரமாக விடுவிக்கப்பட்டார். எனினும் அதற்கு பல மாதங்களுக்கு முன்னராகவே இதே போன்றதொரு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மாவனெல்லை இளைஞர் சுஹைல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கடந்த வாரம் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தனது முகநூலில் பகிர்ந்த தகவல் மூலமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இவ்வாறான கைதுகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய மத தலங்களைப் பாதுகாப்பதற்கு வழங்கும் முக்கியத்துவத்தை, தனது சொந்தப் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் காண்பிக்கவில்லை என்ற விமர்சனத்தை இந்த சம்பவங்கள் உண்மைப்படுத்துவதாக உள்ளன. ஈஸ்டர் தாக்குதலின் போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது பல வழக்கறிஞர்கள் முன்வந்து அவர்களுக்கு உதவினர். குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்படாதவர்களை முடியுமான அளவு விரைவாக விடுவிப்பதற்கு கூட்டாக இணைந்து செயற்பட்டனர். ஆனால் தற்போது இவ்வாறான கைதுகளின்போது பாதிக்கப்படும் அப்பாவி இளைஞர்களுக்கு உதவ யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுஹைல் விவகாரத்தில் அவரது குடும்பத்தினர் யாரைச் சந்திப்பது? சட்ட உதவிகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தெரியாமலேயே கடந்த 8 மாதங்களைக் கடத்தியுள்ளனர். இந்நிலையில்தான் இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை உடனுக்குடன் ஆவணப்படுத்தி, அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட பொறிமுறை ஒன்று அவசியமாகிறது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில், சூறா சபை உள்ளிட்ட சிவில் அமைப்புகள் கூட்டாக இணைந்து செயற்படுவது பொருத்தமானதாகும். முஸ்லிம் சட்டத்தரணிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடி தேசிய முஸ்லிம் மனித உரிமை நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பது காலத்தின் தேவையாகும். முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இந்த விடயத்தில் விரைந்து செயற்பட்டு சமூகத்தைப் பாதுகாக்கவும் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli https://www.vidivelli.lk/article/19519
1 month ago
அல்தாப் அஹமட் யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியைத் தோண்டத் தோண்ட அதிர்ச்சியூட்டும் அத்தாட்சிகளே வந்தவண்ணமுள்ளன. கடந்த சில நாட்களாக சிறுவர்களின் எலும்புக் கூடுகளும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் எச்சங்களும் மீட்கப்பட்டமை இந்த மனிதப் புதைகுழிகளின் பின்னால் மறைந்திருக்கும் ஈவிரக்கமற்ற அரக்கர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவுள்ளன. கடந்த வாரம் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, ஒரு குழந்தையின் மனித எச்சங்களும், அத்துடன் ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு சப்பாத்து போன்ற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை தொல்லியல் ஆய்வாளர்கள் 38 மண்டை ஓடுகளை அடையாளம் கண்டுள்ளனர். இவற்றுள் குறைந்தது 10 மண்டை ஓடுகள் குழந்தைகள் அல்லது சிறுவர்களுக்கு உரியவை என சந்தேகிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த இடம் குற்றச்சம்பவம் நடந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்பார்வையிடும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, “செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நேற்று முன்தினத்துடன் ஐந்தரை நாட்கள் முடிவடைந்துள்ளன. ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலை புத்தகப்பையோடு இருந்த மனித எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. அகழ்ந்தெடுக்கும் பொழுது சிறு குழந்தையின் எலும்புக் கூட்டுடன் சப்பாத்து, குழந்தை விளையாடும் சிறிய பொம்மை ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையான அகழ்வுப் பணியில் ஐந்து வரையான மனித எலும்புக்கூடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. இதனால் அதில் உள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையை சொல்ல முடியாத குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது” என்றார். தடயவியல் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ அடையாளம் காட்டிய சாத்தியமான புதைகுழிகள் உள்ள இடங்களில் கடந்த திங்கட்கிழமை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் மாணவர்களின் உதவியுடனும், நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடனும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன. பேராசிரியர் சோமதேவவும் யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா பிரணவனும் மே 15 அன்று செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினர். நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் செம்மணி பகுதியில் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை சுத்தம் செய்யும் போது கடந்த பெப்ரவரி 20 அன்று மனித எலும்புக் கூடுகளை கண்டுபிடித்ததை அடுத்து, இந்த மனிதப் புதைகுழிகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தன. செம்மணியின் பின்னணி 1998 ஆம் ஆண்டு இலங்கையில் 18 வயதான தமிழ் பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை நாட்டையே உலுக்கியது. பரீட்சை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர், கொண்டாவிலில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பின்னர், அவரது சிதைந்த சடலம், அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரன் மற்றும் அயலவர் ஆகியோரின் சடலங்களுடன் சேர்த்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பல இராணுவ வீரர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்ச, 1995-1996 இல் இராணுவம் யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான தமிழ் பொதுமக்கள் செம்மணி கிராமத்திற்கு அருகில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்தார். இப் பகுதியில் 300 முதல் 400 சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தை தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார். இதனையடுத்து 1999 ஆம் ஆண்டில், சர்வதேச அழுத்தத்தின் கீழ், அரசாங்கம் செம்மணியில் நீதிமன்றக் கண்காணிப்பில் அகழ்வாராய்ச்சிகளை தொடர அனுமதித்தது. உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்க, மனித உரிமைக் குழுக்கள் கண்காணித்துக் கொண்டிருக்க, செம்மணி நிலம் தனது உண்மையை வெளிப்படுத்தத் தொடங்கியது. பதினைந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு சடலங்கள் 1996 இல் காணாமல் போனவர்களுடையவை என அடையாளம் காணப்பட்டன. ஆதாரங்கள் உறுதியாக இருந்தன. ஏழு இராணுவ வீரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த விசாரணைகள் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டன. கோப்புகள் தூசி படிந்தன. மேலதிக அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படவில்லை. 2006 ஆம் ஆண்டளவில், உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில் செம்மணி விவகாரம் கிட்டத்தட்ட முழுமையாகவே மறக்கப்பட்டது. ஆனால் முதலாவது அகழ்வாராய்ச்சி நடந்து இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஜூன் 2025 இல் மீண்டும் இந்த விவகாரம் பேசுபொருளானது. செம்மணி புதைகுழியில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழ்வாராய்ச்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. அங்கு கண்டுபிடிக்கப்பட்டவை தேசத்தின் மனசாட்சியை மீண்டும் உலுக்கின. மூன்று குழந்தைகள் உட்பட, 19 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களில் ஒருவர் ஒரு வயதுக்கும் குறைவானவர் என்று நம்பப்படுகிறது. செம்மணி ஒரு தனித்து நிற்கும் துயரமல்ல. இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடந்த மனிதப் படுகொலைகளின் சாட்சியாக நம்முன் காட்சியளிக்கிறது. 2013 ஆம் ஆண்டில், மன்னார் நகரில் கட்டுமான நடவடிக்கைகளுக்காக நிலத்தை தோண்டிய போது 11 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் 2018 ஆம் ஆண்டில் மிகப்பெரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 29 குழந்தைகள் உட்பட 346 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தடயவியல் தொல்லியல் நிபுணர்கள் இந்த எச்சங்கள் 30 வருடங்களுக்கு உட்பட்டவை என்பதை உறுதிப்படுத்தினர். ஆனால் தாமதங்கள், அரசியல் தலையீடுகள் மற்றும் நிதிப் பற்றாக்குறை என்பன காரணமாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. தடயப் பொருட்களும் காணாமல் போயின. விஞ்ஞான பரிசோதனைகள் தடைப்பட்டன, காலப்போக்கில் பொது மக்களும் இவற்றை மறந்தனர். எவருக்கும் பொறுப்புக் கூறப்படவில்லை. ஆனால்குடும்பங்கள் தொடர்ந்து நீதிக்காக காத்திருக்கின்றன. 2000 ஆம் ஆண்டில் மிருசுவிலில் எட்டு தமிழ் பொதுமக்கள் இராணுவத்தால் கடத்தப்பட்டனர். ஒருவர் அங்கிருந்து தப்பினார். அவர் மூலமாக, ஏனைய ஏழு சடலங்கள் கண்கள் கட்டப்பட்டும், சுடப்பட்டும் ஆழமற்ற புதைகுழியில் புதைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குக் காரணமான, ஒரு தலைமை பொலிஸ் சார்ஜென்ட், 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2015 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டார். எனினும் எந்தவொரு உயர் அதிகாரியும் விசாரிக்கப்படவில்லை. மட்டக்களப்பில் உள்ள முரக்கொட்டாஞ்சேனை மற்றும் முல்லைத்தீவில் உள்ள கொக்குத்தொடுவாய் ஆகிய இடங்களில், கட்டிட நிர்மாணப் பணிகளின் போது எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. எனினும் அவை மூடி மறைக்கப்பட்டன. குருக்கள்மடம் புதைகுழி தமிழ் மக்கள் மாத்திரமன்றி முஸ்லிம் மக்களும் இவ்வாறு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி இதற்கான சாட்சியாகும். விடுதலைப்புலிகளால் 1990 ஆம் ஆண்டில், கடத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் இப் பகுதியில் உள்ளதாக நம்பப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பு – கல்முனை ெநடுஞ்சாலை வழியாக வாகனங்களில் பயணம் செய்த குறிப்பாக காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் 165 பேர் குருக்கள்மடம் என்னுமிடத்தில் விடுதலைப்புலிகளினால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கடலோரப்பகுதியில் புதைக்கப்பட்டதாக முஸ்லிம்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் சிலர் கடந்த 2014 ஆம் ஆண்டு இப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடுகளை செய்தனர். இதனையடுத்து களுவாஞ்சிக்குடி மஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இப் பகுதியில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்காக சட்ட மருத்துவ நிபுணர், புதை பொருள் மற்றும் மண்ணியல் ஆய்வுத் துறை உட்பட 15 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து சென்று அந்த இடத்தை பார்வையிட்டிருந்தனர். எனினும் புதைகுழிகள் உள்ள இடங்களை அடையாளம் காட்டுவதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இங்கு இதுவரை அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் இவ்வாறு இராணுவத்தினராலும் விடுதலைப் புலிகளாலும் ஏனைய ஆயுதக் குழுக்களாலும் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான மக்களின் எலும்புக் கூடுகள் அவர்களது இறப்புகளுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் இன்னமும் புதையுண்டு கிடக்கின்றன. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்வாறான படுகொலைகளின் பின்னணிகளைக் கண்டறிந்து குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான விசேட பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த தேசத்தில் இவ்வாறான மோசமான அநீதிகள் நிகழாதிருப்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/19561
1 month ago
1 month ago
https://www.youtube.com/watch?v=BypinB-uuAo
1 month ago
https://www.espncricinfo.com/series/england-tour-of-west-indies-2003-04-61746/west-indies-vs-england-4th-test-64080/full-scorecard இதே இங்கிலாந்து டீம்தான் 2005 இல் பதினெட்டு வருடங்களின் பின் ஆஸ்திரேலியாவை ஆஷேஷில் வென்றது. இதுவே ஜிம்பாப்வே தவிர்ந்த வேறு நாட்டுடனான போட்டியென்றால் நிச்சயம் நானூறு அடிக்க எத்தனித்திருப்பார்! இதேபோல் ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லரும் ஒருமுறை டான் பிரட்மனின் சாதனையை முறியடிக்காது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டார்!
1 month ago
இலங்கையுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்களாதேஷுக்கு பரபரப்பான வெற்றி; தொடரையும் சமப்படுத்தியது 05 JUL, 2025 | 10:55 PM (ஆர்.பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (05) நடைபெற்ற இரண்டாவது பகல் இரவு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 16 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் 1 - 1 என சமப்படுத்தியுள்ளது. இந்தத் தொடரின் ஆரம்பப் போட்டியில் அறிமுகமான சுழல்பந்துவீச்சாளர் தன்விர் இஸ்லாம் தனது இரண்டாவது போட்டியில் மிகத் துல்லியமாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். அவரது மிகச் சிறந்த பந்துவீச்சும், தன்விர் ஹொசெய்ன், தௌஹித் ஹிரிதோய் ஆகிய இருவர் குவித்த அரைச் சதங்களும் பங்களாதேஷின் வெற்றியில் பிரதான பங்காற்றின. 249 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இலங்கை இன்னிங்ஸின் கடைசிக் கட்டத்தில் ஜனித் லியனகே தனி ஒருவராக வெற்றியை ஈட்டிக்கொடுக்க முயற்சித்த போதிலும் அது கைகூடாமல் போனது. முதல் போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் பெத்தும் நிஸ்ஸன்க பிரகாசிக்கத் தவறி 5 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர். நிஷான் மதுஷ்க (17) தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக குறைந்த எண்ணிக்கைக்கு ஆட்டம் இழந்ததுடன் அடுத்த போட்டியில் அவருக்கு விளையாட கிடைக்குமா என்ற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் 20 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து, ஆர். பிரேமதாச அரங்கில் அதிவேக அரைச் சதம் குவித்தவர் என்ற சாதனையை நிலைநாட்டினார். பதினொரு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிராக திசர பெரேரா 23 பந்துகளில் பூர்த்திசெய்த அரைச் சதமே இந்த மைதானத்தில் பெறப்பட்ட முந்தைய அதிவேக அரைச் சதமாக இருந்தது. அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த பின்னர் நிதானத்தைக் கடைப்பிடித்த குசல் மெண்டிஸ் அடுத்த 11 பந்துகளில் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபார சதம் குவித்த சரித் அசலன்க இந்தப் போட்டியில் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். மறுபக்கத்தில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அரைகுறை மனதுடன் பந்தை அடித்து பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (126 - 5 விக்.) ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய துனித் வெல்லாலகே 10 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றார். அவரைத் தொடர்ந்து வனிந்து ஹசரங்க 13 ஓட்டங்களுடனும் மஹீஷ் தீக்ஷன 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (170 - 8 விக்.) எவ்வாறாயினும் துணிச்சலை வரவழைத்து புத்திசாதுரியத்துடன் துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே 9ஆவது விக்கெட்டில் துஷ்மன்த சமீரவுடன் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தார். 85 பந்துகளை எதிர்கொண்ட ஜனித் லியனகே 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 78 ஓட்டங்களைப் பெற்றார். துஷ்மன்த சமீர 13 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் தன்விர் இஸ்லாம் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 39 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். தன்ஸிம் ஹசன் சக்கிப் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது. மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் தன்ஸித் ஹசன் (7) களம் விட்டகன்றார். தொடர்ந்து பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களாக இருந்தபோது பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் 67 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் மெஹிதி ஹசன் மிராஸ் (9), ஷமிம் ஹொசெய்ன் (22) ஆகிய இருவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் தௌஹித் ஹிரிதோய், ஜேக்கர் அலி ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஜேக்கர் அலி 24 ஓட்டங்களுடன் வெளியேறினார். மத்திய வரிசையில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தன்ஸிம் ஹசன் சக்கிப் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 22ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அசித்த பெர்னாண்டோ தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை இந்தப் போட்டியில் பதிவுசெய்தார். அவர் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெடக்ளை வீழ்த்தியதுடன் வனிந்து ஹசரங்க 60 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: தன்விர் இஸ்லாம் https://www.virakesari.lk/article/219260
1 month ago
Champions of the U20 T10 Cricket Tournament at the Provincial Schools Games Competition 2025, proudly organised by the Provincial Department of Education, Northern Province! Chulipuram Victoria college runner up St. John’s College 61/8 in 10 overs. Victoria College 60/6 Just lost by 1 run
1 month ago
ஈழத்தமிழர்களிற்கு நீதி கோரி திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப்போராட்டம் - தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன் 09 JUL, 2025 | 10:52 AM சிங்களப் பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதிக் கேட்டு திருச்சி சிறப்பு முகாமில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தோழர் யோகராசா நவநாதன் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! என தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளதாவது. 07.09.1996 அன்று சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் 11 சிங்கள ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா தம்பி பிரணவன் குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கொடூர நிகழ்வால் பெரும் கவலையுற்ற ஈழத்தமிழ் சொந்தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் மகளிர் அமைப்புகளும் சிங்களப் பேரினவாத அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும்இ 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவே செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன. குறிப்பாக 1995–96 ஆம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது. ஐ.நா சபையின் தலையீடு காரணமாக சோமரத்ன ராஜபக்சே அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால் வழக்கம்போல் சிங்களப் பேரினவாத அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது. அதுமட்டுமின்றி 2009 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணைக்கொண்டு 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான முறையான விசாரணையையோ உரிய நீதியையோ இதுவரை பெற முடியாமல் உலகத்தமிழர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவின் பங்கேற்போடு தமிழீழத்தில் பல்வேறு இடங்களில் அகழ்வுப் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. அந்த அகழாய்வில் அரியாலை – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்த புதைகுழியிலிருந்து சிறு குழந்தை உட்படக் கொல்லப்பட்ட 50 மேற்பட்ட தமிழர் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழிகள் என்பது சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலைகளில் ஒரு சிறு துளி மட்டுமே. இதுபோன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. இந்நிலையில் சிங்களப் பேரினவாத அரசால் கொன்றுக் குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மறைவுக்கு நீதி விசாரணைக் கேட்டும் ஈழத்தமிழர்களுக்கான சம உரிமைக் கேட்டும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் யோகராசா நவநாதன் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 4 நாட்களாக அவர் மேற்கொண்ட போராட்டத்தில் நீருக் கூட அருந்தாமல் இருப்பதால் யோகராசா நவநாதன் உடல்நிலை மிகவும் மோசமாகி இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே தோழர் யோகராசா நவநாதனின் கோரிக்கையை ஏற்று சிங்களப் பேரினவாத அரசால் கொன்றொழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் மறைவுக்கு உரிய நீதி விசாரணை நடத்தவும் ஈழத்தமிழர்களுக்கான சம உரிமை கிடைக்கவும் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருச்சி சிறப்பு முகாம் என்கிற கொடூர முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்து அவர்கள் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் மேலும் அவர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கிற ஈழத்தமிழர்களுக்கோ அல்லது ஈழத்தில் வாழுகின்ற தமிழர்களுக்கோ சம உரிமை கிடைக்கவும் சிங்களப் பேரிவாத அரசால் வேட்டையாப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. எனவே உடல்நிலை மிகவும் மோசமடைந்து வரும் நிலையில் தோழர் யோகராசா நவநாதன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. https://www.virakesari.lk/article/219546
1 month ago
செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது! 09 JUL, 2025 | 09:54 AM போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின், மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடங்கும். முன்னர் அடையாளம் காணப்பட்ட நான்காவது பெரிய புதைகுழி, 52 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆகும். நீதிமன்றத்தால் குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கண்டறியப்பட்ட 56 மனித எலும்புக்கூடுகளில், மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 13ஆவது நாளான இன்றைய தினம் (ஜூலை 8) வரையில் 50 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தற்போது புதைகுழியில் மூன்று இடங்களில் இருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மனித எலும்புக்கூடுகள் இன்னும் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்ததை அடுத்து, ஜூன் 2 புதன்கிழமை இரண்டாவது இடத்தில் அகழ்வு ஆரம்பமானது. இதற்கு 'தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 2' என பெயரிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மூன்று என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார். "தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 2 இல் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் 3 எலும்பு எச்சங்கள் இன்னும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை. நாளை அது அகழ்வுக்கு இலக்கமிடப்படும். அதன் பின்னர் அகழ்வு இடம்பெறும்.” அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமான முதல் இடத்திற்கு தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 1 எனவும், வரவிருக்கும் மழைக்காலத்தை சமாளிக்க வாய்க்கால் தோண்டும்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 3 எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக, தடயவியல், மானுடவியல் மற்றும் தடயவியல் தொல்பொருளியல் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற சட்டத்தரணி ரணிதா ஞானராஜா யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். முதல் தடயவியல் அகழாய்வுத்தளத்தில் 20 மீற்றர் தொலைவில் 11 மீற்றர் அகலமும் நீளமும் கொண்ட ஒரு புதிய கான் ஒன்று தோண்டப்பட்டுள்ளது, இது செம்மணி மனித புதைகுழியின் பரந்த தன்மையைப் பற்றிய ஒரு சிந்தனையை ஏற்படுத்திக்கொள்ள முடியுமென மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் ஊடகங்களிடம் தெரிவித்தார். இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு மேலதிகமாக, துணிகள், இரண்டு காலணிகள், ஒரு சிறு குழந்தையினுடையது என நம்பப்படும் இரண்டு வளையல்கள் மற்றும் ஒரு பொம்மை உள்ளிட்ட கருவிகளும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவனின் மேற்பார்வையின் கீழ் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சேமிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய மனித புதைகுழியின் அகழ்வாராய்ச்சி சர்வதேச தரத்திற்கு அமைய பாரபட்சமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் அங்கீகரித்தது. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஜூன் 25 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு அருகில், மனித புதைகுழிகள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டுவர தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் விரிவான, வலுவான விசாரணை தேவை எனக் கூறியிருந்தார். மனித உரிமைகள் ஆணையாளரை மனித புதைகுழியை ஆய்வு செய்ய அனுமதிப்பதாக பகிரங்கமாக உறுதியளித்த அரசாங்கம், அதைத் தடுப்பதற்கான தோல்வியுற்ற, திட்டமிட்ட முயற்சி என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்கொள்கிறது. இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இலங்கையில் மூன்றாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி ஆகும், அங்கு அதே ஆண்டில் 82 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன. ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் மனித புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/219538
1 month ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகெங்கிலும், வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீரியோடோன்டிடிஸ். 4 மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் சுவாசம் புத்துணர்வு இல்லாமல் துர்நாற்றத்துடன் இருப்பதாக கருதி, மற்றவர்களுடன் நெருங்கிச் செல்வதை தவிர்க்கிறீர்களா? கவலை வேண்டாம், இது சாதாரணமான ஒன்றுதான் என்பதுடன் அதற்கு தீர்வுகளும் இருக்கின்றன. பற்களைச் சுத்தமாக வைத்திருப்பது என்பது பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிகளிலும், நாக்கின் பின்பகுதியிலும் தங்கிவிடும் பாக்டீரியாக்களுக்கு எதிரான முடிவில்லாத போராட்டம் போன்றது. இந்த பாக்டீரியாக்களை அகற்றாவிட்டால், அவை அங்கு பெருகி, கடுமையான ஈறு நோய்களை ஏற்படுத்தலாம். ஆனால், இதைத் தடுக்க வழிகள் உள்ளன. வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன? உலகெங்கிலும், வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பீரியோடோன்டிடிஸ், இது ஈறு விலகல் என்றும் அழைக்கப்படுகிறது. "வயது வந்தவர்களில் பாதி பேர் ஏதோ ஒரு வகையில் ஈறு நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்," என இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் பல் மறுசீரமைப்பு மருத்துவத்தின் இணை பேராசிரியரான மருத்துவர் பிரவீன் ஷர்மா, பிபிசியின் வாட்ஸ் அப் டாக்ஸ்? என்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். "துர்நாற்றத்தை, வாய் குழியிலிருந்து வரும் துர்நாற்றமாக நீங்கள் கருதலாம்," என்று அவர் வாயை குறிப்பிட்டு கூறுகிறார். "இது 90% வாய் துர்நாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம்." மீதமுள்ள 10% வாய் துர்நாற்றத்திற்கு வேறு காரணங்கள் உள்ளன. "கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் இருந்தால், ஒரு குறிப்பிட்ட வகையான மூச்சு இருக்கும்," என்கிறார் டாக்டர் ஷர்மா. "வயிற்றுப் பிரச்னைகள், இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் போன்ற பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு ஒரு வகையான புளிப்பான சுவாசம் இருக்கும். எனவே, உடல் முழுவதும் ஏற்படும் நோய்கள் வாய்க்குழியில் வெளிப்படும். இதைப் பற்றி செய்யக்கூடியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல் துலக்கும் போது வலிக்கும் ஈறுகளை துலக்குவதை இயல்பாகவே தவிர்ப்பது நோயாளிகள் செய்யும் ஒரு காரியம். பிரச்னையின் வேரை அடையுங்கள் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இடையே தேங்கும் பாக்டீரியாவை நீங்கள் சுத்தப்படுத்தாவிட்டால், அது நுண்ணிய புண்களை ஏற்படுத்தி அதற்கு பின் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இது ஜின்ஜைவைடிஸ், ஈறு நோயின் ஆரம்ப நிலை, ஆனால் இது சரிசெய்யக் கூடியது என்பது நற்செய்தி. "ஜின்ஜைவைடிஸ் என்பது ஈறுகளில் ஏற்படும் வீக்கம், உங்கள் ஈறுகள் சிவப்பாக வீங்கி, மற்றும் பல் துலக்கும் போது ரத்தம் வடிவதையும் வைத்து நீங்கள் கவனிக்கலாம்," என்கிறார் மருத்துவர் ஷர்மா. "இது மேலும் மோசமடைந்து பீரியோடோன்டைட்டிஸ் ஆக மாறும்." சிவப்பு, வீக்கம் அல்லது பல் துலக்கும் போது ரத்தம் வடிதல் ஆகியவை ஏற்படுகிறதா என் உங்கள் ஈறுகளைப் பரிசோதியுங்கள், ஆனால் நடவடிக்கை எடுக்க அவகாசம் இருக்கிறது என்பதால் அதிகம் கவலைப்பட வேண்டாம். "பல் துலக்கும் போது வலிக்கும் ஈறுகளை துலக்குவதை இயல்பாகவே தவிர்ப்பது நோயாளிகள் செய்யும் ஒரு காரியம். ஏனெனில் 'ஓ, நான் ஏதோ தவறு செய்கிறேன், அதனால்தான் ரத்தம் வடிகிறது, என அவர்கள் நினைக்கிறார்கள் என்கிறார் மருத்துவர் ஷர்மா. "இது கிட்டத்தட்ட தலைகீழாக உள்ளது - ரத்தம் வரும் ஈறுகளை ஒரு அறிகுறியாகக் கருதி, 'ஓ, நான் முன்பு சரியாக துலக்கவில்லை, இனி கொஞ்சம் நன்றாக துலக்க வேண்டும்,' என்று நினைக்க வேண்டும்." என்றார். படக்குறிப்பு, ஆரோக்கியமான பல்லில் ஈறுநோய் எவ்வாறு வளர்கிறது என்பதைக் காட்டும் கிராபிக்ஸ் கவனம் செலுத்தி பல் துலக்குங்கள் சரியாக பல் துலக்குவதற்கு நீங்கள் நேரம் ஒதுக்கவேண்டும் என்கிறார் மருத்துவர் ஷர்மா. "உங்கள் பற்களை துலக்கும் போதோ அல்லது பற்களை சுத்தப்படுத்தும் போதோ, நீங்கள் வேறு ஏதோ செய்து கொண்டிருக்கக் கூடாது," என்கிறார் அவர். நீங்கள் கண்ணாடி முன் நின்று முறையாக கவனம் செலுத்துவது சிறந்தது. வலது கை பழக்கமுள்ள பலர் தங்களை அறியாமலே தங்களது இடதுபுறம் அதிக நேரம் துலக்குகின்றனர், இடது கை பழக்கமுள்ளவர்கள் தங்களது வலதுபுறம் அதிக நேரம் துலக்குகின்றனர். இது குறைவான கவனம் செலுத்தப்படும் பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. நீங்கள் எந்த கையை பயன்படுத்துகிறீர்கள் என்பதை உணர்ந்து இரண்டு புறமும் கவனமாக ஒரே அளவு பல்துலக்குங்கள். பல் துலக்கும் நுட்பத்தை நன்கு தெரிந்துகொள்ளுங்கள் முதலில் பற்களுக்கிடையில் தூய்மைப்படுத்த தொடங்கலாம் என பரிந்துரைக்கிறார் மருத்துவர் ஷர்மா. "பிளேக் (பற்களில் ஏற்படும் படிவு) அகற்றுவதற்கும், ஈறு ஆரோக்கியத்திற்கும் உதவுவதற்கு, பற்களுக்கு இடையில் தூய்மைப்படுத்தும் பிரஷ்களை (இன்டர்டெண்டல் பிரஷ்) பயன்படுத்துவது சிறந்தது," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு பல்லுக்கும் வெளிப்புறம், கடிக்கும் பகுதி மற்றும் உட்புறம் என மூன்று பரப்புகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்டர்டெண்டல் பிரஷை பயன்படுத்திய பின்னர் உங்கள் வாயில் பிரஷை நகர்த்தும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு பல்லுக்கும் வெளிப்புறம், கடிக்கும் பகுதி மற்றும் உட்புறம் என மூன்று பரப்புகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை அனைத்துமே கவனமாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும். பல் துலக்குவதற்குத் தேவையான குறைந்தபட்ச நேரம் இரண்டு நிமிடங்கள் என்பது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். பலரும் பிரஷை பல்லுக்கு 90 டிகிரி கோணத்தில் பிடித்து முன்னும் பின்னும் அழுத்துவதன் மூலம் பல் துலக்குகிறார்கள், ஆனால் இந்த முறை ஈறு பின்னடைவை உண்டாக்கலாம். பிரஷ்ஷை பல்லுக்கு 45 டிகிரி கோணத்தில் பிடித்து மென்மையாக துலக்குங்கள். கீழ் பற்களின் ஈறு வரிசையை நோக்கி பிரஷின் நார்களை வைத்து மேற்பற்களின் ஈறு வரிசையை நோக்கி துலக்குங்கள். இது ஈறுவரிசையின் அடியில் மறைந்திருக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். சரியான நேரத்தில் பல் துலக்குங்கள் உணவுக்குப் பின் பல் துலக்குவது சரியானது என நம்மில் பலருக்கு கற்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது அப்படியல்ல. "காலை உணவுக்கு முன் பற்களை துலக்குவது சிறந்தது," என்கிறார் மருத்துவர் ஷர்மா. "அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொண்ட பிறகு பற்களைத் துலக்குவது பற்களின் கனிம பாகமான எனாமல் மற்றும் டெண்டினை மென்மையாக்கும் தன்மை கொண்டது என்பதால் அதை நீங்கள் செய்யக்கூடாது." உணவில் உள்ள அமிலம் உங்கள் பற்களின் மேல் பாதுகாப்பாக உள்ள எனாமல் மற்றும் அதற்கு கீழ் உள்ள டெண்டினை மென்மையடைய வைக்கிறது. எனவே உணவு உட்கொண்ட உடனே பற்களை துலக்குவது உங்களது எனாமலை பாதிப்படைய வைக்கலாம். "நீங்கள் காலை உணவு உட்கொண்ட பிறகு பல் துலக்குவதை விரும்பினால், உங்கள் காலை உணவுக்கும் பல் துலக்குவதற்கும் இடையில் சிறிது நேர இடைவேளை விடவேண்டும்." என்கிறார் மருத்துவர் ஷர்மா. நீங்கள் உங்கள் வாயைக் கொப்பளித்த பின்னர் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். அதே போல் ஒரு நாளைக்கு இரண்டு முறை இரண்டு நிமிடங்கள் துலக்குவது சிறந்ததென்றாலும், சிலருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை பல் துலக்குவது போதுமானதாக இருக்கும். நீங்கள் தூங்கும்போது எச்சில் சுரப்பது குறைகிறது, இது இரவு நேரத்தில் பாக்டீரியாக்கள் உங்கள் பற்களை அதிக சேதப்படுத்த அனுமதிக்கிறது. எனவே நீங்கள் உங்கள் பற்களை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் முழுமையாக சுத்தப்படுத்தப் போகிறீர்கள் என்றால் அதற்கு இரவு நேரமே சிறந்தது. அடிக்கடி டீ, காபி குடிப்பது உள்பட இந்த 7 பழக்கங்கள் உங்கள் பற்களை பாதிக்கலாம்? ஈறுகளை பராமரிக்காவிட்டால் மரணத்திற்கு வழிவகுக்கும் நோய்கள் கூட ஏற்படலாம் - எச்சரிக்கும் மருத்துவர்கள் திருப்பத்தூர்: ஒரே கிளினிக்கில் பல் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளைத்தொற்றுக்கு பலியானது எப்படி? லான்செட் ஆய்வில் தெரியவந்த உண்மை பல் துலக்கும் பிரஷ்களில் இத்தனை வகைகளா? - பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள் சரியான உபகரணங்களைத் தேர்வு செய்யுங்கள் நடுத்தர விறைப்புள்ள நார்களைக் கொண்ட பிரஷைப் பயன்படுத்துங்கள். பற்பசைகள் விலை உயர்ந்தவையாக இருக்க வேண்டியதில்லை. "அதில் ஃபுளோரைட் இருக்கும்வரை எனக்கு மகிழ்ச்சியே," என்கிறார் மருத்துவர் ஷர்மா. இந்த கனிமம் பல்லின் எனாமலை வலுப்படுத்தி பல் சொத்தையாவதற்கு கூடுதல் எதிர்ப்பை தருகிறது. பல் சொத்தையாவதை தடுக்கும் வகையில் பல் துலக்கிய பின்னர், பற்பசையையும், ஃபுளோரைடையும் துப்புங்கள், ஆனால் வாய் கொப்பளிக்காதீர்கள். ஈறு நோயின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தால், மவுத்வாஷ் உபயோகிப்பதும் பயனுள்ளது, ஏனெனில் இது ப்ளேக் மற்றும் பாக்டீரியா உருவாவதைக் குறைக்க உதவுகிறது. ஆனால், இது பற்பசையில் உள்ள ஃபுளோரைடை நீக்கிவிடக் கூடும் என்பதால் பல் துலக்கிய பிறகு இதைப் பயன்படுத்த வேண்டாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிக அளவிலான சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் பல்சொத்தை ஏற்படுத்தலா. தீவிர ஈறு நோயை கண்டுகொள்ளுங்கள் ஈறு விலகல் (பீரியோடோன்டிடிஸ்) அதிகரித்தால், பற்களுக்கு இடையே இடைவெளிகள் உருவாகத் தொடங்குவதை நீங்கள் பார்க்கலாம், மேலும் பற்களை தாங்கி நிற்கும் எலும்பு அரிக்கப்படும்போது, பற்கள் தளர்ந்து போகலாம். இந்த நிலை கட்டுப்படுத்தப்படாவிட்டால், பற்கள் உதிரும் அளவுக்கு நிலைமை மோசமாகலாம். நீங்கள் நீடித்த துர்நாற்றத்தையும் அனுபவிக்க நேரிடலாம். உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை அணுகவும். இறுதியாக, உங்களது சுவாசத்தைப் புத்துணர்ச்சியுள்ளதாக்க சில குறிப்புகள்: உங்கள் வாய் காய்ந்துபோய் இருந்தால் பாக்டீரியா வளரக்கூடும் என்பதால் நிறைய தண்ணீர் குடியுங்கள். நாக்கு சுத்தப்படுத்தும் கருவியைக் கொண்டு உங்கள் நாக்கை சுத்தப்படுத்துங்கள். இது வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கக் கூடிய உணவுத் துகள்கள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களை அகற்றுகிறது. உங்கள் சுவாசம் எவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருக்கிறது என்பது சரியாக தெரியாவிட்டால் அதை ஒரு நண்பரையோ, குடும்ப உறுப்பினரையோ பரிசோதிக்கவிடுங்கள். ஆனால் யாரிடம் கேட்கப் போகிறீர்கள் என்பதை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள்! 29 ஏப்ரல் 2025 தேதியிட்ட பிபிசி-யின் What's Up Docs? பாட்காஸ்ட் எபிசோடை தழுவி எழுதப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wp9x58p5yo
1 month ago
யாழ். கடுகதி புகையிரதசேவை கல்கிசையில் இருந்து ஆரம்பமாகாமை குறித்து அமைச்சர் பிமல் வருத்தம் - தயாரெனின் மாத்திரம் பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் 09 JUL, 2025 | 09:26 AM (நா.தனுஜா) யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை செவ்வாய்க்கிழமை (08) கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகாததன் காரணமாகவும், அதுகுறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படாததன் விளைவாகவும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமை குறித்து வருத்தமடைவதாகத் தெரிவித்துள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை, சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, உரிய ஆயத்தங்களின் பின்னர் புகையிரதம் கல்கிசையிலிருந்து புறப்படுவதற்குத் தயார்நிலையில் உள்ளபோது மாத்திரம் அதுபற்றி மக்களுக்கு அறிவிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை (இன்டர்சிட்டி) செவ்வாய்க்கிழமை (8) அதிகாலை கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கல்கிசையிலிருந்து ஆரம்பமாகவிருந்த அதிவேக புகையிரதசேவை முன்னறிவிப்பின்றி அதிகாலை 5.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் வகையில் மீள்திருத்தம் செய்யப்பட்டது. அதன் விளைவாக அசௌகரியத்துக்கு உள்ளான பயணி ஒருவர், அவரது பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார், யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு, அதிகாலை 5.25 மணியளவில் வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை வந்தடையும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அது முன்னறிவிப்பு எதுவுமின்றி இரத்துச்செய்யப்பட்டது. வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் காத்திருந்த பயணிகள் வினவியதன் பின்னரே, யாழ் கடுகதி புகையிரதசேவை அதிகாலை 5.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் எனப் பதிலளிக்கப்பட்டது. இதுகுறித்து முன்கூட்டியே ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படாததன் காரணமாக பயணிகள் பலர் அதிகாலையில் மிகச்சொற்ப நேரத்துக்குள் வெள்ளவத்தையில் இருந்து கோட்டை புகையிரத நிலையத்துக்குச் செல்வதற்கு வாகனங்களின்றி மிகுந்த அசௌகரியத்துக்கு உள்ளாகினர். இச்சம்பவம் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கும், குடும்பமாகப் பயணிப்பதற்கு தயாராக வந்திருந்தவர்களுக்கும் அநாவசியமான மனவழுத்தத்தையும், குழப்பத்தையும் தோற்றுவித்தது. அதுமாத்திரமன்றி கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட கடுகதி புகையிரசேவைக்கான டிக்கெட் கட்டணமாக 3,600 ரூபா அறவிடப்படுகின்ற போதிலும், அப்புகையிரதம் இருக்கைகள் உடைந்த நிலையில் சீராகப் பராமரிக்கப்படாமலேயே இருந்தன. இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விசேட கவனம் செலுத்தவேண்டும் எனப் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அப்பயணியின் எக்ஸ் தளப்பதிவின்கீழ் பதிவின்கீழ் பதிலளித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 'இதுகுறித்து நான் புகையிரதத்திணைக்களத்திடம் கேட்டறிந்தேன் அவர்களால் ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை இன்றைய தினம் கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகவில்லை. எனவே அதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும், புகையிரதம் கல்கிசையில் இருந்து புறப்படுவதற்குத் தயார்நிலையில் உள்ளபோது மாத்திரம் அதுபற்றி பொதுமக்களுக்கு அறிவிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். அதுமாத்திரமன்றி இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக பொதுமக்களிடம் மன்னிப்புக்கோரி அறிவிப்பொன்றை வெளியிடுமாறும் அவர்களிடம் வலியுறுத்தினேன். இவ்விடயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அமைச்சின் சார்பில் வருத்தமடைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/219533
1 month ago
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாத சம்பளம் (கழிவுகள் போக) 3 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் ஆகும். இதுக்காகவா தொடர்ந்து கதிரைகளை சூடாக்குகிறார்கள்?!
1 month ago
Published By: VISHNU 09 JUL, 2025 | 01:53 AM வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது. அதிகாலை 4 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி , வசந்தமண்டப பூஜை காலை 07 மணிக்கு இடம்பெற்று, அதனை தொடர்ந்து நாகபூசணி அம்மன் உள்வீதியுலா வந்து , காலை 08.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பர். அதனை தொடர்ந்து காலை 09 மணிக்கு தேரில் வெளிவீதியுலா வந்து காலை 10.30 மணிக்கு தேர் இருப்பிடத்தை அடையும். மாலை 04 மணிக்கு அம்மனுக்கு பச்சை சாத்துதல் இடம்பெறும். நாளை மறுதினம் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி , காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி , 7.30 மணிக்கு தீர்த்தோற்சவத்திற்கு அம்பாள் புறப்பட்டு செல்வார். அதேவேளை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, விசேட படகு சேவைகள் , பேருந்து சேவைகள் இடம்பெற்று வருவதுடன் , சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி படையினர் , சாரணர்கள் , செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/219528
1 month ago
பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது அகழ்வாராய்ச்சி பணிகளுக்கான பகுதியென பிரகடனம்! Published By: VISHNU 09 JUL, 2025 | 01:50 AM செம்மணி மனிதப் புதை குழி அகழ்வின் இரணடாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 50 முழுமையாக அகழ் எடுக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (8) செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே சந்தேகத்திற்கிடமான பகுதி என தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதுவாவினால் அடையாளமிடப்பட்ட பகுதி அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான இரண்டாவது பிரதேசமாக நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே முதலில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அகழ்வாராய்ச்சி பகுதியானது அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான முதலாவது பகுதியாகவும் அடையாளப்படுத்துப்பட்டுள்ளது. அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதியில் 3 மனித என்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டிருக்கிறது. 09ஆம் திகதி புதன்கிழமையிலிருந்து இலக்கமிடல் பணிகள் ஆரம்பமாகும். மனித எலும்புகளுடன் சேர்ந்த துணிகள் மற்றும் சப்பாத்து போன்ற பொருட்கள் அடையாளப்படுத்தப்பட்டு வைத்திருக்கப்பட்டுள்ளன. அவை இன்னமும் நிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படவில்லை. அது பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் மேலதிக தகவல்கள் நாளையதினம் வழங்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/219527
1 month ago
இவர்கள் எல்லோரையும்விட இன்று அதிகமாக அரசியல்வாதிகளாக வருவோருக்கு ஏற்படவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். உதாரணத்திற்கு தற்போதைய உலகநடப்பை ஆராய்ந்தால் அறியலாம்.🫣
Checked
Sun, 08/10/2025 - 09:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed