புதிய பதிவுகள்2

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

3 weeks 3 days ago
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை, கனிய மணல் செயல்பாடுகளுக்கு எதிராக வவுனியாவில் இருந்து அணி திரண்ட இளையோர் 21 Sep, 2025 | 08:10 AM மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று சனிக்கிழமை (20) 49 ஆவது நாளாக தொடர்ந்து செல்கின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். குறித்த குழுவினர் சனிக்கிழமை (20) மாலை வருகை தந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளையோர் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு நாளாந்தம் மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கிராம மக்கள்,பொது மற்றும் சிவில் அமைப்புக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்த நிலையிலே இன்றைய தினம் சனிக்கிழமை (20) மாலை வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து தமது ஆதரவை வழங்கி அமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/225628

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர்

3 weeks 3 days ago
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 91 பேர் 21 Sep, 2025 | 11:22 AM இஸ்ரேலியப் படைகள் நேற்றையதினம் காசாவில் 91 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பிரபல வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வடக்கு காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் லொறியில் இருந்த நான்கு பேர் உள்ளிட்டோரும் அடங்குவதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (நேற்று) நடந்த கொலைகள், இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தைக் கைப்பற்றவும், தெற்கில் உள்ள செறிவு மண்டலங்களுக்குள் மக்களைத் தள்ளவும் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்தும் மேற்கொண்டனர். இஸ்ரேலியப் படைகள் குடியிருப்பு வீடுகள், பாடசாலைகள் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட கூடாரங்கள், இராணுவத்தின் உத்தரவின் பேரில் காசா நகரத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற மக்களை ஏற்றிச் சென்ற லொரி ஆகியவற்றின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் சுமார் 76 பேர் கொல்லப்பட்டனர். அதேநேரம், சனிக்கிழமை அதிகாலை, காசா நகரத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையின் பணிப்பாளர் ஒருவரின் குடும்பத்தினர் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது. இது "மருத்துவர்களை நகரத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவதற்காக இயக்கப்பட்ட இரத்தக்களரி பயங்கரவாத செய்தி" என ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225645

தியாக தீபத்திற்கு எம்.ஏ சுமந்திரன் அஞ்சலி

3 weeks 3 days ago
தியாக தீபத்திற்கு எம்.ஏ சுமந்திரன் அஞ்சலி 21 Sep, 2025 | 04:57 PM நல்லூர் பின் வீதியில் தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்ற தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அங்கிருந்த தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தி ஆவண காப்பகத்தினை பார்வையிட்டார். தியாக தீபத்தின் நினைவுகளை தாங்கிய ஆவண காப்பகம் சனிக்கிழமை (20) மாலை திறந்து வைக்கப்பட்ட நிலையில் , ஆவண காப்பகத்திற்கு சென்று தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினார். https://www.virakesari.lk/article/225675

”தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற கட்சிகள் கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும்” - செல்வம் அடைக்கலநாதன்

3 weeks 3 days ago
”தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற கட்சிகள் கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும்” - செல்வம் அடைக்கலநாதன் வடக்கு, கிழக்கு மாகாணசபை மாற்று கட்சிகளின் அதிகாரங்களிற்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை தேர்தலினை நடத்த வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை விடுகின்ற இச்சந்தர்ப்பத்திலே அதிகார பரவலாக்களின் ஊடாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்தியாவும் ஐ.நா சபையிலே கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இதேவேளை மாகாணசபை தேர்தல் நடைபெறும் என்றால் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து குறித்த தேர்தலில் பங்குகொள்ள வேண்டும் என்று இந்திய தூதுவரும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். குறித்த விடயமானது ஒரு நியாயமான விடயமாக நான் பார்க்கின்றேன். எங்களை பொறுத்த வரையில் ஒற்றுமை இன்மையை கடந்த பாராளுமன்ற தேர்தலிலே நாங்கள் அனுபவித்திருந்தோம். குறிப்பாக எமது ஒற்றுமை இன்மையினால் தமிழ் மக்கள் விரக்தியுடன் இருந்தனர். இதன் காரணமாகவே மக்கள் யாருக்கு வாக்கு போடுவது என்ற குழப்பத்தில் இருந்தனர். மேலும் இவ் ஒற்றுமை இன்மையினாலேயே புதிய நபரை புதிய அரசை தெரிவு செய்ய வேண்டும் என்ற ரீதியிலேயே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்திருந்தனர். இதன் காரணமாகவே முன் எப்போதும் இல்லாத வகையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தேசிய கட்சிகளின் பிரதித்துவம் உருவாகியது. இது ஒரு செய்தியாகவே நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக எமது செயற்பாடுகள் வெறுமனவே பேச்சளவில் காணப்படுமேயானால் எமது மாகாணசபை நிச்சயமாக மாற்று கட்சிகளின் அதிகாரங்களுக்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் அவ்வாறு ஏற்பட்டால் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும். எங்களுடைய மக்களுடைய எதிர்காலம், இனப்பிரச்சினை, எமது மண் பறிபோகாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காக போராட வேண்டும். எனவே அதற்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது. அத்தோடு அதற்காக நாங்கள் தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம் என்றாலும் அதற்கான சந்தர்ப்பம் எட்டப்படவில்லை. ஐ.நாவிற்கு கடிதம் எழுதும் போதோ அல்லது ஐநாவிற்கு கையொப்பம் இடுகின்ற சந்தர்ப்பத்தின் போதோ ஒற்றுமையாக இருக்கின்ற தமிழ் கட்சிகள், தேர்தல் காலத்தில் மாத்திரம் ஒற்றுமையாக இருக்காமல் பிரிந்து செல்லுகின்ற அபாய நிலை இருக்கின்றது. எனவே ஒற்றுமையாக மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்கின்ற கட்சிகளாக இருக்க வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/தமிழ்-தேசியத்தை-பற்றி-பே/

கனகசபை ஐயாவின் மறைவு பேரிழப்பாகும்!

3 weeks 3 days ago
கனகசபை ஐயாவின் மறைவு பேரிழப்பாகும்! தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2004, தொடக்கம் 2010, வரை பல நெருக்கடிகள், அச்சுறுத்தல் காலத்தில் கடமையாற்றிய நேர்மையான மனிதர் மறைந்த தன்மன்பிள்ளை கனகசபை அவர்களின் இழப்பு எமக்கு மிகுந்த கவலையை தந்தது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், அவர் காலத்தில் நான் பாராளுமன்றம் செல்லாவிட்டாலும் அவருடைய செயல்பாடுகள் அமைதியான நடத்தை தொடர்பாக நான் அறிந்துள்ளேன். கடந்த 2004, ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள் அதில் கூடிய விருப்புவாக்காக்குகளை அவர் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக கனகசபை ஐயா தெரிவானார், அவருடன் அரியநேத்திரன், ஜெயானந்தமூர்த்தி, தங்கேஷ்வரி ஆகிய நால்வரும் தேசிய பட்டியல் மூலம் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களுமாக வரலாற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் முதல் தடவையாக மட்டக்களப்பில் ஐவர் பாராளுமன்றம் சென்ற வரலாறு அதுவாகும். அந்த தேர்தலில் வடகிழக்கு எட்டு மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளுடைய தலைமையே வேட்பாளர்களை தெரிவு செய்தனர் அதில் ஒரு நிர்வாக அதிகாரியா இருந்த கனகசபை அண்ணரும் தெரிவானார். அந்த காலத்தில்தான் கருணா விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த காலமாகும் கருணா, பிள்ளையான் அச்சுறுத்தல் அதிகரித்த காலம் அந்த காலம்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்குவைத்து கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அதனால் மாமனிதர்களான ஜோசப்பரராசசிங்கம், ரவிராஜ், சிவநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த ஊருக்கோ மாவட்டங்களுக்கோ செல்லாமல் கொழும்பில் முடக்கப்பட்டிருத்தனர். மட்டக்களப்பில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டம் செல்லாமல் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி இருந்தனர். அப்போது 2006, நவம்பர் மாதம் வரவு செலவு திட்டத்திற்கு மகிந்த அரசுக்கு எதிராக வாக்களிக்கவேண்டாம் என கனகசபை, அவர்களுடைய மருமகன், அரியம் அண்ணரின் சகோதரர், ஜெயானந்தமூர்த்தியின் மருமகன், தங்கேஷ்வரி அக்காவின் செயலாளர் ஆரையம்பதி அன்புமணி ஐயா ஆகிய நால்வரையும் கடத்தியபோது கனகசபை ஐயா மிகவும் அச்சத்தால் சோர்ந்து அரசியலே வேண்டாம் என முடிவெடுத்தார். அந்தப்பயம் காரணமாக 2010, தேர்தலில் வேட்பாளராக சம்மதிக்கவில்லை அதற்க்கு பின்னர் அவர் எந்த தேர்தல்களிலும் ஈடுபடவில்லை அன்று அவருக்கு ஏற்பட்ட மனக்கவலை தொடர்ந்தும் பல ஆண்டுகள் நீடித்து இருந்ததை நான் அவருடன் ஒருதடவை கதைக்கும்போது மனம் விட்டு கூறினார். அரசியலுக்கு வருவதற்கு முன்னம் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திணைக்கள பணிப்பாளராகவும் சேவையாற்றி மக்களுடன் நேர்மையாக சிறந்த பணிகளை செய்த ஒருவர் இன்று 86, அகவையில் இறையடி சேர்ந்துள்ளார் அன்னாரின் பிரிவால் துயருற்றுத் தவிக்கும் உற்றார் உறவினர் ஊர்மக்கள் அனைவருடனும் எனது துயரினை பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/கனகசபை-ஐயாவின்-மறைவு-பேர/

ஐ.நா., ஜப்பானுக்கு ஜனாதிபதி அனுர விஜயம்

3 weeks 3 days ago
21 Sep, 2025 | 11:25 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகிய முக்கிய நோக்கங்களுடன், ஐக்கிய நாடுகள் சபைக்கும் (ஐ.நா. பொதுச் சபை) மற்றும் ஜப்பானுக்கும் நாளை திங்கட்கிழமை விஜயம் மேற்கொள்கிறார். இந்த பயணங்கள் இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்களையும், எதிர்கால கொள்கைகளையும் உலக அரங்கில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை வெளிவிவகார அமைச்சர் விஜய ஹேரத்தின் கூற்றுப்படி, 22 ஆம் திகதி திங்கட்கிழமை நியூயார்க்கிற்குப் புறப்பட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்வார். செப்டம்பர் 24 ஆம் திகதி ஜனாதிபதி பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார். ஜனாதிபதி தனது உரையில், இலங்கை அடைந்துள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அதன் வெளிவிவகாரக் கொள்கை ஆகியவற்றைப் பற்றி விளக்கவுள்ளார். மேலும், இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்புகள், இலங்கையின் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் விஜயம்: எக்ஸ்போ 2025 மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் அமெரிக்க விஜயத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானின் ஒசாகா நகருக்குச் சென்று "எக்ஸ்போ 2025" சர்வதேச கண்காட்சியில் பங்கேற்கவுள்ளார். எக்ஸ்போ 2025, உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் கலாசாரம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார பலங்களை வெளிப்படுத்தும் ஒரு மிகப்பெரிய சர்வதேச நிகழ்வாகும். இந்த நிகழ்வில், இலங்கை சார்பில் "இலங்கை தினம்" (Sri Lanka Day) என்ற பெயரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம், இலங்கையின் செழுமையான கலாசார பாரம்பரியம், துடிப்பான சுற்றுலாத் துறை, மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உலகிற்கு காட்சிப்படுத்த இலங்கை திட்டமிட்டுள்ளது. இது இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கும் ஒரு சிறந்த தளமாக அமையும். பிரதமர் மற்றும் பேரரசருடன் சந்திப்பு ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 28 ஆம் திகதி ஞாயிற்று கிழமை முதல் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடங்கவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, அவர் பிரதமர் இஷிபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதுடன், ஜப்பானியப் பேரரசர் நருஹித்தோவையும் சந்திக்கவுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து கவனம் செலுத்தும். ஜப்பானில் உள்ள இலங்கை சமூகத்தினருடன் சந்திப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பயணத்தின்போது, ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரையும் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பு, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அவர்களுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் கலந்துரையாடுவதிலும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. https://www.virakesari.lk/article/225646

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை உள்ளீர்க்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது!

3 weeks 3 days ago
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை உள்ளீர்க்க அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது! adminSeptember 21, 2025 யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்பவும் , யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா பயணிகளை மேலும் உள்ளீர்ப்பதற்கும் தாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மண்டைதீவு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் படகு சவாரி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை ( 21.09.25) நடைபெற்றது. நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்திருந்தனர். நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, யாழ். மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதன் ஓர் அங்கமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும் எமது இலக்காகும். இதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், தனியார் துறையினரும் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் யாழ். படகு சவாரி திட்டம் மண்டைதீவு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான திட்டங்கள் எமது யாழ். மண்ணுக்கு சுற்றுலாப் பயணிகளை மேலும் உள்ளீர்ப்பதற்கு இது உதவும் என நம்புகின்றேன் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/220610/

சாரதிகளுக்கு, அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

3 weeks 3 days ago
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 'பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (20) அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அனுமதிப்பத்திரத்திற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி, பொது போக்குவரத்து சாரதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில், இப்போது சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில பேருந்துகள் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட போதே சீட் பெல்ட்கள் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேருந்துகளை அலங்கரிக்க முடியும் என்றால் ஏன் சீட் பெல்டை பொருத்த முடியாது? இப்போது சில சாரதிகள் என்னையும் பொலிஸாரையும் ஏமாற்ற தங்கள் பிள்ளைகளது பாடசாலை பைகளின் பெல்ட்களை அணிந்து வருகின்றனர். அவ்வாறானவர்களிடம் 50 பயணிகளை ஒப்படைப்பது பொருத்தமானதல்ல. எனவே நாம் ஒரு முடிவை எடுத்துள்ளோம். எனவே,பொதுப் போக்குவரத்தில் ஒவ்வொரு சாரதியும் பொதுப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தைப் பெறுவது கட்டாயமாகும். நாங்கள் இதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம், டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அவர்கள் நிச்சயமாக அந்த அனுமதிப் பத்திரத்தை பெறவேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmft1qwb800jkqplplja0n8o8

இந்திய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்

3 weeks 3 days ago
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று (20) நாட்டிற்கு வந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய இந்திய கப்பலுக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டை வந்தடைந்த போர்க் கப்பலான ‘INS SATPURA’ 142.5 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 403 பணியாளர்களைக் கொண்டுள்ளது. கப்பல் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலத்தில் அதன் பணியாளர்களை இலங்கையின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmft987bi00k8o29n5d59slsa

தமிழ்நாட்டில் ஒருவர் மரணம்: தேனீக்கள் கொட்டினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

3 weeks 3 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 21 செப்டெம்பர் 2025, 08:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். பத்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேனீக்கள் கொட்டினால் ஏன் மரணம் ஏற்படுகிறது? இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுர்கம் அருகே கூத்தக்குடி சிவன் கோவில் பகுதியில் அரச மரம் ஒன்று இருக்கிறது. இந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. இந்த தேன் கூட்டை புதன்கிழமையன்று காலையில் சிலர் கலைத்தனர். அதிலிருந்த தேனீக்கள் அங்கிருந்தவர்களை கொட்டத் தொடங்கின. பத்துக்கும் மேற்பட்டோரை தேனீக்கள் தாக்கியுள்ளன. இதில் அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வீராசாமி என்பவரும் ஒருவர். அவர்கள் அனைவரும் அதே ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த நிலையில் வீட்டில் இருந்த வீராசாமிக்கு அன்று இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவருடைய உறவினர்கள் மீண்டும் வீராசாமியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். இதையடுத்து தேனீக்களால் பாதிக்கப்பட்ட 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். தேன் கூட்டை கலைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, கூத்தக்குடி கிராம மக்கள் கள்ளக்குறிச்சி வேப்பூர் சாலையில் அரை மணி நேரம் சாலை மறியல் செய்தனர். இருப்பினும் சற்று நேரத்தில் வீராசாமி இறந்து போனார். தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 10 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரவக்கம் கிராமத்தில் இதேபோல தேனீக்கள் கொட்டியதில் செந்தில்குமார் என்பவர் பலியானார். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேனீக்கள் கொட்டினால் என்ன நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தேனீக்களின் கொடுக்கில் நச்சுப் பொருட்கள் உண்டு என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப். பொதுவாக ஓரிரு தேனீக்கள் கொட்டுவதில் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் நடப்பதில்லை. தேன் கூட்டை கலைப்பது போன்ற நிகழ்வுகளின் போதுதான் பெரும் எண்ணிக்கையிலான தேனீக்கள் மனிதர்களைக் கொட்டுகின்றன. அதில் ஒரு சிலர் இறக்கவும் நேரிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். "தேனீக்களின் கொடுக்கில் நச்சுப் பொருட்கள் உண்டு. இவற்றில் இரண்டு நச்சுகள்தான் கவனிக்கத்தக்கவை. ஒன்று, மெலிட்டின் (Melittin) என்ற நச்சு. மற்றொன்று, பாஸ்போலைபேஸ் ஏ2 (Phospholipase A2) என்ற நச்சு." என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப். மேலும் "மெலிட்டினைப் பொறுத்தவரை அது ரத்த அணுக்களின் சுவற்றை உடைத்து, உள்ளிருக்கும் பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும்." என்கிறார் அவர் "அதேபோல, தசைச் செல்களையும் உடைத்து, உள்ளே உள்ள பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும். இவை ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தை அடையும்போது சிறுநீரகம் பாதிப்படைந்து, அது வேறு பல உறுப்புகளையும் பாதித்து மரணம் ஏற்படலாம். பாஸ்போலைபேஸ் ஏ2 என்ற நச்சைப் பொறுத்தவரை, அதுவும் இதேபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். கூடுதலாக, நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும்" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப். தேனீக்கள் கடித்துவிட்டால் நிலைமை மோசமாவதை அறிய சில அறிகுறிகள் இருக்கின்றன என்கிறார் நச்சுயியல் (Toxicology) பிரிவில் ஆய்வுகளை மேற்கொண்டவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான மருத்துவர் வி. ராஜேந்திரன். "தேனீக்கள் கொட்டும்போது அனாபிலாக்ஸிஸ் (anaphylaxis) எனப்படும் அதீத ஒவ்வாமை ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். தொண்டை அடைக்கும். மாரடைப்பு ஏற்படுவதைப் போன்ற உணர்வு ஏற்படும். இந்த நிலையில் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேனீக்கள் கொட்டினால், நிச்சயம் மருத்துவமனையில் சேர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் வி. ராஜேந்திரன். எத்தனை தேனீக்கள் கடித்தால் ஆபத்து? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பொதுவாக 100 தேனீக்கள் கொட்டினால், மரணம் ஏற்படும் என மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப் கூறுகிறார். "ஒரு தேனீ கடித்து உயிரிழந்த நிகழ்வுகளும் உண்டு." என விளக்குகிறார் மருத்துவர் அமலோற்பவநாதன். "காரணம், தேனீயால் கொட்டப்பட்ட நபருக்கு மேலே சொன்ன நச்சுப் பொருட்கள் ஒவ்வாமை ஏற்படுத்துபவையாக இருந்தால், இதுபோல அரிதாக நிகழும். மற்றபடி, ஒரே ஒரு தேனீ கொட்டினால் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்." என்கிறார் அவர். மேலும் "கொடுக்கை எடுத்துவிட்டு வலி அதிகம் இருந்தால் வலி நிவாரணிகளைச் சாப்பிட்டால் சரியாகிவிடும். ஆனால், ஒரே ஒரு தேனீ கொட்டியவுடன் தொண்டை இறுகுவது, நாக்கு தடிப்பது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும்" என எச்சரிக்கிறார் அவர். ஆனால், தேன் கூட்டைக் கலைப்பது போன்ற நிகழ்வுகளில் அருகிலிருப்போரை நூற்றுக்கும் அதிகமான தேனீக்கள் கொட்டிவிடுகின்றன. இதுகுறித்து பேசுகையில், "தேன்கூட்டைக் கலைக்கும் போது தேனீக்கள் அருகிலிருப்போரை துரத்தித் துரத்திக் கொட்டும். அதிலிருந்து தப்புவதற்காக ஓடும்போது எவ்வளவு தேனீக்கள் கொட்டின என்பது தெரியாது." எனக் கூறுகிறார். "பொதுவாக 100 தேனீக்கள் கொட்டினால், மரணம் ஏற்படும்." எனக் கூறும் அவர், "ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் 1,000 தேனீக்கள் கொட்டிய நிகழ்வுகளும் உண்டு." என்றார். "ஆகவே, தேன்கூட்டை கலைத்து தேனீக்கள் கொட்டும் நிகழ்வு நடந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும். குறைந்தது ஒரு நாளாவது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்" என்றார் மருத்துவர் அமலோற்பவநாதன். தேனீக்கள் கடித்தால் என்ன சிகிச்சை அளிக்கப்படும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நச்சுக்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். தேனீக்கள் கொட்டினால், நச்சுக்களால் ஏற்படும் ஒவ்வாமைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். "தொண்டை கட்டுவது, நாக்கு வீங்குவது போன்றவை நடக்கும்போது ஸ்டீராய்ட்களைச் செலுத்துவார்கள். அதற்குப் பிறகு அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்" என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன். கடந்த ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஊசிமலை வியூ பாயிண்டில் கேரளா மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 26 வயது சபீர் என்பவர் நூற்றுக்கணக்கான தேனீக்களால் கொட்டப்பட்டு, உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c701xr3wllxo

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

3 weeks 3 days ago
ஆசியக் கிண்ண ரி20 – சூப்பர் 4 சுற்றின் தொடக்கப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் அணி Published By: Vishnu 20 Sep, 2025 | 11:58 PM ஆசிய கிண்ண கிரிக்கெட் ரி20 தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டில் பங்களாதேஷ் அணி இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி லிண்டன் தாஸ் முதலில் பந்துவீச தேர்வு செய்தார், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. தாசுன் ஷனகா 37 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள் எடுத்தார், குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களும், பாதும் நிஸ்ஸங்கா 22 ஓட்டங்களும் எடுத்தார். அதன்படி, துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவரில்தான் 06 விக்கெட்டுகளை இழந்து தனது இலக்கைத் துரத்த முடிந்தது. சைஃப் ஹசன் 66 ஓட்டங்களும், லிண்டன் தாஸ் 23 ஓட்டங்களும் எடுத்தனர், முதல் கட்டத்திலேயே பங்களாதேஷ் அணி தனது துடுப்பாட்டத்தை வலுப்படுத்தியது. ட்ரோஹிட் ஹீத்ரோவும் 58 ஓட்டங்கள் எடுத்தார். அதன்படி, பதில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 06 விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவரில் தனது வெற்றி இலக்கை எட்டியது. https://www.virakesari.lk/article/225616

'ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த நேட்டோ' - ஐரோப்பாவில் என்ன நடக்கிறது?

3 weeks 3 days ago
ஆம், இப்படி நேட்டோவும் செய்வது, ஆனல் அடு ருசியா வான் பறப்பு கட்டுப்பாட்டுக்கு அண்மையில் இருப்பதால், எந்த மேற்கு ஊடகங்களும் ருசியா அறிவிப்பதை சொல்வது இல்லை. மேட்ற்கு, நேட்டோ, us எல்லாமே தங்களுக்கு வரும் போது தான் ஆபத்து என்று அங்கலாய்ப்பது. இதுவரையில் மேட்ற்கு, நேட்டோ, us இதை செய்து வந்தது அனால் மற்றவர்கள் பார்த்து கொண் இருந்தார்கள், இப்போது மற்றவர்களின் இருப்பு பாதுகாப்புக்கு மேட்ற்கு, நேட்டோ, us சவால் விடுவதை பார்த்து கொன்டு இருக்க மாட்றவர்கள் தயார் இல்லை. அண்மையில், அமெரிக்க ராஜாங்க அமைச்சரை அருகில் வைத்து கொன்டு, இஸ்ரேல் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தது, எந்தவொரு மேற்கு ஊடகத்திலும் வரவில்லை. பின்லாந்து வளைகுடாவில் சர்வதேச வான் பரப்பு இருக்கிறது என்றே நினைக்கிறன். இந்த பால்டிக் நடுகல் ருசியா மீது வெறுப்பு கொண்டவை - அது eu வெளியுறவு கொள்கையை வழிநடத்துகிறது. அனால் நேட்டோ, மேற்கு மற்றவவர்களுக்கு போதிப்பது, ஒருவரை இன்னொருவர் வெறுக்க கூடாது என்று. அனால், இஸ்ரேல், பலஸ்தீனியரை வெறுப்பது, பால்டிக் நடுகல் ருசியா மீது வெறுப்பு மேட்ற்கு, நேட்டோ, us எல்லாவற்றுக்கும் இனிமையான அனுபவம்.

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

3 weeks 4 days ago
நாங்கள்… தமன்னாவை பார்க்க, பனை மரத்தில் ஏறினோம். அவர்கள்… விஜயை பார்க்க, வேப்பமரத்தில் ஏறுகின்றார்கள். 😂

விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

3 weeks 4 days ago
ஜெ - தமிழ் நாட்டு முதல்வர்களிலேயே “அதிசயம்” என்றால் அது ஜெ தான். அண்ணாவிற்கு பின் நாவலரை தள்ளிவிட்டு கருணாநிதி வந்ததை விட, எம்ஜிஆர் தனி கட்சி தொடங்கி அடுத்த தேர்தலில் முதல்வரானதை விட… அவர் சாகும் போது, எம் ஜி ஆரால் கட்டம் கட்டப்பட்டு அரசியல் அநாதையாக கிடந்த ஜெ கட்சியை கைப்பற்றி எதிர் கட்சி தலைவி ஆனதும், 91 இல் முதல்வரானதும் பெரியதொரு அதிசயம் (miracle). ஏன் ஜானகி ஒதுங்கி போனார்? ஜெயின் மக்கள் ஆதரவு. அரசியலில் மிக சொற்ப அனுபவமே இருந்த ஜெ யை வெல்ல வைத்த ஒரே சக்தி அவருக்கு தானாக கூடிய மக்கள் கூட்டமும் அது வாக்காக மாறியதும் மட்டுமே. “கருணாநிதி ஒரு தீய சக்தி”, “ஊழல் குடும்ப ஆட்சி”, “சொன்னர்களே செய்தார்களா”, “நான் கேட்கிறேன் நீங்கள் செய்வீர்களா” - விஜையின் வியூகம் பல இடங்களில் எம்ஜிஆரை விட ஜெயை பின்பற்றுவதாகவே எனக்கு படுகிறது. எம்ஜிஆரை விட ஜெ யுடந்தான் விஜையின் அரசியல் வரவை ஒப்பிடுவது பொருத்தமானது என்பது என் பார்வை. அவருக்கு கூட்டம் வாக்காக மாறியது. இவருக்கு?

கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை

3 weeks 4 days ago
போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்க் கட்சிகளுக்கு இனி வேலை இருக்காது போலத் தெரிகிறது. இவ்வளவு நாளும் என்ன வேலை பார்த்தார்கள் என்று கேட்டுத் தொலைக்க வேண்டாம். சுமன், கஜன், சிறி, வைத்தியர் எல்லாரும்தான். ஒரு பிரயோஜனமும் இல்லையே? அநுர செய்கிற விடயங்களை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்றாலும், எதிர்க்கவில்லை என்றே தோன்றுகிறது. கட்சியில் இருந்து விலக்குகிறவர்கள் விலக்கி, நீக்குபவர்கள் நீக்கி, மீதியாய் இருப்பவர்கள் தாமும் எப்போது கடையை மூடுகிறோம் என்று ஒரு முடிவிற்கு வருவதற்குள், அநுர மீண்டும் ஒருமுறை வென்றிருப்பார். சீமான், அவரைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. பேசுவதைக் கேட்கலாம். அதற்கப்பால் எதுவுமில்லை என்னைப்பொறுத்தவரை. தமிழ்நாட்டு மக்களுக்கு அவரை ஆட்சியில் ஏற்ற இதுவரை மனம் வரவில்லை. அது அவர்களுக்குத்தான் தெரியும். எமது பிரச்சினையில்லை.
Checked
Thu, 10/16/2025 - 09:26
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed