புதிய பதிவுகள்2

லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்

1 month ago
லாராவின் சாதனயை நான் குறைத்து மதிக்கவில்லை. ஆனால் விளையாட்டு “போட்டி” என்பதன் அடிப்படையே விட்டு கொடாமல் விளையாடுவதுதான். ஆகவே சாதனையை நான் வேண்டும் என்றே தகர்காமல் விட்டேன் என சொல்லுவது அதிகபிரசங்கிதனமானதும், லாராவை அவமதிப்பதுமாகும். பேட்டிங் அவரேஜ் பார்க்கும் போது அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஓட்டத்துக்கு முழு மதிப்பு, சிம்பாம்பேவுக்கு எதிரான ஓட்டத்துக்கு அரை மதிப்பு என இல்லைத்தானே? அப்படி என்றால் முல்டர் ஏன் சிம்பாப்வேக்கு எதிராக களம் இறங்கினார்? அதே போல் அடுத்த 20 சொச்ச ஓட்டத்துக்குள் இவர் அவுட்டும் ஆகி இருக்கலாம் - ஆகவே நான் விட்டு கொடுத்தேன் என்பது எந்த வகையில் பார்த்தாலும் சுத்த அதிகபிரசங்கிதனமே. மார்க் டைலர் 1998 இல் பாகிஸ்தானில் வைத்து 334 இல் டிக்லேர் பண்ணியது இப்படி அல்ல. அவர் இரெண்டாம் நாள் ஆட்டம் முடியும் போது பிரேட்மனை சமன் செய்து இருந்தார். அப்போ அவர் மனதில் டிக்ளேர் செய்யும் எண்ணமில்லை. கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுத்திருந்தால் கூட பிரேட்மனை முந்தி இருப்பார். ஆனால் அன்றிரவு 2 மணி வரை தூங்கவில்லை எனவும், ஆட்டத்தை வெல்ல, இன்னும் ஒரு அரை மணி நேரம் துடுப்பாட தான் விரும்பியதாயும், ஆனால் அப்படிதான் செய்தால் ( அரை மணியில் அப்போதைய உலக சாதனையான 375 ஐ எட்ட வாய்ப்பில்லை), பிரேட்மனை வெல்ல என தான் இப்படி விளையாடியதாக சொல்லப்படும், எனவே அணி வெல்ல வேண்டும் என்பதால், மறுநாள் காலையில் டிக்ளேர் செய்ததாயும் டெய்லர் கூறியுள்ளார். அத்தோடு பிரேட்மனை சமன் செய்தது தனக்கு பெருமையே எனவும் கூறினார். ஆகவே இரெண்டும் ஒன்றல்ல.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு?

1 month ago
he Hunt - The Rajiv Gandhi Assassination Case Review: ராஜீவ் காந்தி கொலையும் தேடுதல் வேட்டையும்! ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூணூரின் 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' வெப் சீரிஸ். புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய 'Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார் இயக்குநர். The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக சென்னைக்கு அருகிலுள்ள ஶ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தார் ராஜீவ் காந்தி. அப்போது அவர்மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, கொலைக்குக் காரணமான விடுதலைப் புலிகளைச் சேர்ந்த நபர்களைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, சம்பவம் நிகழ்ந்து 90 நாட்களுக்குள் குற்றவாளிகளைக் கண்டறிந்தது. 90 நாட்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு எப்படியான யுக்திகளைக் கையாண்டு அவர்களைப் பிடித்தது என்பதை 7 எபிசோடுகளாக விரித்து இந்த சீரிஸில் கதை சொல்லியிருக்கிறார்கள். சிறப்புப் புலனாய்வுக் குழுவைத் தலைமையேற்று வழிநடத்தும் கார்த்திகேயன் கதாபாத்திரத்திற்குக் கண கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமித் சியால். லாகவமாக யுக்திகளைக் கையாண்டு குற்றவாளிகளிடம் உண்மையைப் பெறுபவராகவும், பணியில் மேலிடத்தில் செய்யப்படும் சூழ்ச்சிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெகுண்டெழுபவராகவும் அமித் வர்மா கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து, நடிகர் சாஹில் வைத் கவனம் ஈர்க்கிறார். இவர்களைத் தாண்டி, ரகோத்மன் கதாபாத்திரத்தில் பகவதி பெருமாள், கேப்டன் ரவீந்திரன் கதாபாத்திரத்தில் வித்யூத் கார்கி ஆகியோரின் நடிப்பும் சிறப்பு! The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review சிவராசன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஷபீக் முஸ்தபா அசுரத்தனமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் வெளிப்படுத்தும் சீரியஸ் டோன் நடிப்பு, ஆழமான தாக்கத்தை உருவாக்கும் லெவலுக்கு அவருடைய கதாபாத்திரத்தை உயர்த்தியிருக்கிறது. நளினியாக அஞ்சனா பாலாஜி, சுபாவாக கெளரி பத்மகுமார், தனுவாக ஷ்ருதி ஜெயன் ஆகியோரும் நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய வெப் சீரிஸுக்கு, நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் திறம்பட மேற்கொண்டிருக்கிறார் இயக்குநர் நாகேஷ் குக்கூனூர்! ஆர்பாட்டமில்லாத ஷாட்கள், பீரியட் உணர்வைக் கொடுக்கும் லைட்டிங் என நேர்த்தியான பணிகளைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சங்கரம் கிரி. இந்த பீரியட் கதைக்குத் தேவைப்படும் அரசியல் மேடை, பதாகைகள், பேனர்கள், வீடுகள் உட்பட அந்தக் கால அரசு அலுவலகங்கள் என ஒளிப்பதிவாளரின் ப்ரேம்களுக்கு சுவை சேர்க்கும் கலை இயக்குநர், 90களின் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் தொடங்கி சில விஷயங்களில் கோட்டைவிட்டிருக்கிறார். The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review எபிசோடுகளுக்கு இடையிடையே ஃப்ளாஷ்பேக் காட்சிகளை அடுக்கி, தெளிவாகக் கதை சொல்கிறார் படத்தொகுப்பாளர் ஃபரூக் ஹந்தேகர். நமக்குத் தெரிந்த கதையாக இருந்தாலும், அதனை முடிந்தவரைத் தொய்வின்றி கொண்டு செல்ல உதவியிருக்கிறார். பீரியட் காலகட்டத்திற்கேற்ப உடைகளை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர்களும் கவனிக்க வைக்கிறார்கள். Also Read ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்புச் சம்பவத்திலிருந்து நிதானமாக சீரிஸ் நகரத் தொடங்குகிறது. அதிலிருந்து விசாரணைக்கு விரியத் தொடங்கும் எபிசோடுகள், திரைக்கதையாசிரியர்கள் ரோகித் ஜி. பானவில்கர், ராஜேஷ் குக்குனூர், ஶ்ரீராம் ராஜன் ஆகியோரின் நுட்பமான எழுத்துப் பணியால் பரபரப்பைக் கூட்டி, தொடர்ந்து 'நெக்ஸ்ட் எபிசோடு' பட்டனை நோக்கி நம்மை நகர வைக்கின்றன. இதுபோன்ற உண்மைச் சம்பவக் கதைகளை மையப்படுத்திய சீரிஸ்களில் சம்பிரதாயமாகப் பயன்படுத்தப்படும் காட்சிகளை விளக்கும் எழுத்துகளைத் தவிர்த்தது குட் ஃபார்முலா! இந்திய வரலாற்றின் மிகச் சிக்கலான விஷயங்களில் ஒன்றான ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த வெப் சீரிஸை, பெரும்பாலும் ஒரு புலனாய்வு த்ரில்லர் கதையாகவே கொண்டு சென்றிருக்கிறது படக்குழு. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடங்கி, முழுமையாக அதிகாரிகளின் கைகள் கட்டப்படும் அரசியலையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது காவல் அதிகாரிகள் செலுத்திய வன்முறை, உண்மைகளை வரவழைக்க அதிகாரிகள் கையாண்ட குரூர வழிமுறைகள் என நாம் படித்துத் தெரிந்த விஷயங்களைத் திரையில் கொண்டு வந்த இயக்குநருக்கு க்ளாப்ஸ்! ஆனாலும், அதிலும் ஒருவித போலீஸ்/அதிகார அனுதாப பார்வை எஞ்சிநிற்பது ஏமாற்றம்! The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் பார்வையை இன்னும் கூட விரிவாகச் சொல்லியிருக்கலாம். அதுபோல, அதிகாரிகள், சிவராசனைப் பிடிக்கச் செல்கையில் ஏற்படும் தடைகள், தாமதங்களுக்கெல்லாம் 'மேல் அதிகாரிகளின் உத்தரவு' என மேம்போக்காக வசனத்தை வைத்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். யார் அந்த மேலிடம், சிவராசன் உயிருடன் பிடிபடுவது குறித்து அவர்கள் அஞ்சுவது ஏன் போன்ற கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்கள் இல்லை. "உண்மை அவர்களுடனே இறந்துவிட்டது" என்ற ஆதங்கம் நிறைந்த வசனம் மட்டுமே இத்தொடர் நடுநிலையாக இருக்க விரும்புகிறது என்பதை எடுத்துரைக்கிறது.!

சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்படும் பெஞ்சமின் நெட்டன்யாகு விமானப்பயணத்திற்காக தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் இத்தாலி கிரேக்கம் அனுமதித்தது ஏன்? ஐநா அதிகாரி கேள்வி

1 month ago
09 JUL, 2025 | 02:48 PM சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார். சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும், அதனை பலவீனப்படுத்தும்,அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை அங்கீகரிக்கும் ரோம் பிரகடனத்தில் அமெரிக்கா கைச்சாத்திடாதது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219580

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month ago
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : 54 எலும்புக்கூடுகள் மீட்பு! 09 JUL, 2025 | 09:01 PM யாழ்ப்பாணம் (ஜூலை 09) : செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான இன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. அந்த வகையில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் (ஜூலை9) 14 வது நாளை எட்டியது. ஏற்கனவே முதலாம் கட்ட அகழ்வு 9 நாட்களில் நிறைவடைந்தது. முதலாம் கட்டம் இரண்டாம் கட்டம் என அகழ்வாய்வு பணிகள் மொத்தமாக 23 நாட்கள் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்று வருகின்றது. இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ள நிலையில், அவற்றில் 54 மனித எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. குறித்த அகழ்வின் போது, இன்று (ஜூலை 09) ஒரு சிறுமியின், ஆடைகள், இறப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வு நாளை தற்காலிகமாக நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது. https://www.virakesari.lk/article/219625

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

1 month ago
கமாண்டோ சலிந்த மற்றும் கெஹெல்பத்தர பத்மே கைது? கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் இன்று (9) மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைதுகள் தொடர்பான தகவல்களை இலங்கை பொலிசார் ஏற்கனவே சர்வதேச பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுள்ளனர். கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகக்குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதாக மன்தினு பத்மசிறி என்ற கெஹேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டனர். கெஹேல்பத்தர பத்மே டுபாயில் இருந்தும், கமாண்டோ சலிந்த மலேசியாவில் இருந்தும் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, குறித்த இரண்டு குற்றவாளிகளுக்கும் சர்வதேச பொலிஸார் ஊடாக பொலிஸார் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmcw1aqft00yhqp4k5rtnruf6

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 08

1 month ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 08 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 08 / 'தீபவம்சம், மகாவம்சம் இரண்டிலும் சிங்கபாகு கதையின் வேறுபாடு' சிங்கபாகு தனது தந்தையான சிங்கத்தை கொன்றதாக தீபவம்சம் கூறவில்லை. அதேவேளை, சிங்கபாகு தன் சகோதரியை தகாத முறையில் திருமணம் செய்து கொண்டார் என்றும் வெளிப்படையாகக் கூறவில்லை. மேலும் விஜயனுக்கு எழுநூறு கூட்டாளிகள் இருந்ததாகவும் கூறவில்லை. தீபவம்சத்தின்படி, 9-10 மற்றும் 9-16, எழுநூறு பேரில் விஜயன், அவனது வேலையாட்கள், அவனது உறவுகள் மற்றும் கூலிக்கு அமர்த்திய வேலையாட்களும் அடங்குவர் என்கிறது. ஆனால், சிங்கபாகு தனது சிங்க தந்தையைக் கொன்றதாகவும், எந்த வருத்தமும் இல்லாமல் தனது சிங்கத் தந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை வெகுமதிக்காக மன்னரிடம் வழங்கினார் என்றும் மகாவம்சம் வெளிப்படையாகக் கூறுகிறது. விஜயனுக்கு, விஜயனைப் போலவே தீய குணங்கள் கொண்ட, அவனைப் பின்பற்றும் எழுநூறு பேர் இருந்தனர் என்றும், தீபவம்சத்தில் கூறப்பட்டுள்ளபடி அவர்கள் அனைவரும் வேலையாட்களோ, கூலிக்கு அமர்த்திய வேலையாட்களோ அல்ல என்றும் அது கூறுகிறது. விஜயன் பிறந்த அதே நாளில் இந்த எழுநூறு ஆண்களும் பிறந்ததாக இராசாவலிய வெளிப்படையாகக் கூறுகிறது. காலப்போக்கில் ஒரு கதை எப்படி திரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் இங்கு பார்க்கலாம். தீபவம்சத்தின்படி, விஜயனும் அவனது ஆட்களும் சென்ற கப்பல், வழி தவறி, முதலில் சுபாரா [Suppara] அடைந்தது, அங்கே, கப்பலில் இருந்த அனைவரையும் சுபாரா மக்கள் விருந்தோம்பல் செய்தனர் என அறிகிறோம். எவ்வாறாயினும், விஜயன் மற்றும் அவரது தோழர்கள் காட்டுமிராண்டித் தனமாக அங்கும் செயல்பட்டனர். எனவே விருந்தோம்பல் வரவேற்பு விரைவில் விரோதமாக மாறியது. அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடி, மீண்டும் பாருகாச்சாவில் [Bharukaccha] இறங்கினர். அவர்கள் மீண்டும் தவறாக நடந்து கொண்டதால் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப் பட்டனர். சுபாரா மற்றும் பருகச்சா ஆகியவை இந்தியாவின் மேற்கு கடற்கரையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள பண்டைய வர்த்தக துறைமுகங்கள் ஆகும். மேலும் அசோகரின் ஆணைகள் இந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. என்றாலும் மகாவம்சம் பருகச்சாவில் இரண்டாவது தரையிறக்கத்தைத் முற்றாகத் தவிர்க்கிறது. மகாவம்சத்தின் 6 ஆம் அத்தியாயம் விஜயனின் பிறப்பு மற்றும் அவரது வருகையைப் பற்றி பேசுகிறது. மகாவம்சத்தின் இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமான கதை தீபவம்சத்தில் இல்லை. மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், 'இது புத்த மதத்தின் பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிக்காக' என்று கூறி முடிக்கிறார். மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை விட, விஜயனின் பிறப்பு மற்றும் திருமணம் பற்றிய விபரங்கள், இன்னும் விரிவாக இராசாவலிய கொண்டுள்ளது. விஜயனும் அவனது கூட்டாளிகளும் வேறு எந்த இடத்திலும் இறங்காமல் நேராக இராசாவலியின்படி இலங்கைக்கு நகர்ந்து, மற்ற இரண்டு நூல்களுக்கு மாறாக, தம்மன்னா-தோட்டாவில் [Tammanna-tota] இறங்கினர். தம்மன்னா-தோட்டா இருந்த இடத்தில் எதுவுமே இல்லை! இலங்கையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள் செப்பு நிறமுடைய மண் அல்ல, ஆனால் சில இடங்களில் சுத்தம் செய்யப்பட்ட மணல் மண்ணாகும். மற்ற இடங்களில் சுத்தமில்லாத மணல் மண்ணாகும். அவர்கள் இறங்கிய இடம் செப்பு நிற மண் என்றும் அந்த இடம் தம்பபாணி [Tambapaṇṇi (copper-palmed)] என்றும் அழைக்கப்பட்டது என்று தீபவம்சம் 9 - 30 கூறுகிறது. அதாவது, தரையின் சிவப்பு நிற தூசி அவர்களின் கைகள் முழுவதையும் மூடியது; அதனால் அந்த இடம் தம்பபண்ணி (செப்பு நிற பூமி / copper coloured earth ) என்று அழைக்கப்பட்டது. அவர்கள் தம்பபாணி என்ற பகுதியில் இறங்கியதாக மகாவம்சம் 6 - 47 கூறுகிறது. அதாவது விஜயன் என்னும் பெயர் பெற்ற வீரனான இளவரசன் இலங்கையில் தம்மபாணி என்றழைக்கப்படும் பகுதியில் கரையேறினன். தகாகதர் [Tathagata] நிர்வாணமடைவதற்காக இரட்டை சால விருட்சங்களிடையே [two twinlike sala-trees] அமர்ந்த அதே நாளில் இது நடந்தது என்கிறது சுபாரா (சோபரா) மற்றும் பாருகாச்சா (Suppara (Sopara) and Bharukaccha (Bharukacha)) ஆகிய இரண்டு இடங்களும் அசோகரின் பேரரசின் பரப்பளவைக் காட்டும் வரைபடத்தில் கீழே காட்டப்பட்டுள்ளது. Part 08 / 'How Sihabahu story in both Dipavamsa & Mahavamsa varies?' The Dipavamsa does not say that Sihabahu killed his lion father. It also does not explicitly say that Sihabahu incestuously married his sister. It also does not say that Vijaya had seven hundred companions. As per the Dipavamsa, 9-10 and 9-16, the seven hundred included Vijaya, his manservants, his relations and hired workmen. The Mahavamsa explicitly says that Sihabahu killed his lion father, and without any remorse presented the severed head of his lion-father to the king for a reward. It also says that Vijaya had seven hundred followers of same character as of Vijaya, and not servants or workmen as stated in the Dipavamsa. The Rajavaliya explicitly says that seven hundred boys were born on the day Vijaya was born. One can see how a story is twisted and turned on and on with the passage of time. The ship on which Vijaya and his men were forced to drift lost her way and bearings reached Suppara first as per Dipavamsa and all in the ship were hospitably welcome by the people of Suppara. Vijay and his companions, however, acted barbarously and the hospitable reception soon turned into hostile reaction. They fled the place, and landed again at Bharukaccha. They misbehaved again and had to leave the place. Suppara and Bharukaccha are ancient trading ports on the western coast of India, in Maharashtra and Gujarat, and Asoka’s edicts are found nearby these places. The Mahavamsa omitted the second landing at Bharukaccha. The chapter 6 of the Mahavamsa deals with the Vijaya’s birth and his arrival. The descriptive narrative given in this chapter of the Mahavamsa is not in the Dipavamsa. Mahanama, author of the Mahavamsa, fabricated a story for the serene joy and emotion of the pious. The Rajavaliya also consist of narrative of Vijaya’s birth and marriage more elaborate than given in the Mahavamsa. Vijaya and his companions drifted straight to Lanka as per the Rajavaliya without landing at any other places, contrary to the other two chronicles, and landed at Tammantota. There is no clue where Tammantota was! Seacoasts around Lanka are not copper coloured soils, but are sandy soils washed clean at some places and not clean at the rest of the places. The Dipavamsa claims that the place they landed was copper coloured soils and the place was called Tambapanni, 9 - 30. The Mahavamsa says that they landed at a region called Tambapanni 6 - 47. See the map below showing the extent of Asoka’s empire in which Suppara (Sopara) and Bharukaccha (Bharukacha) are shown. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 09 தொடரும் / Will Follow

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month ago
லார்ட்ஸ் டெஸ்ட்: வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியில் வெல்லப்போவது யார்? - 4 ஆண்டுக்குப் பின் ஆர்ச்சரை களமிறக்கும் இங்கிலாந்து பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய கேப்டன் ஷுப்மன் கில் கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட சச்சின்-ஆன்டர்ஸன் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்று சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்பார்கள். லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் இந்திய அணி சோபிக்கவில்லை. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்து வீரர்கள் நல்ல முறையில் ரன்களைக் குவித்தனர். அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால், ராகுல், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சதம், அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் கடந்த 2வது டெஸ்டில் ஆகாஷ் தீப், சிராஜ் இருவரும் இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தனர். முதல் டெஸ்டில் பீல்டிங்கில் செய்திருந்த தவறுகளை 2வது போட்டியில் திருத்தி, கேட்ச் வாய்ப்புகளை தவறவிடாமல் இந்திய வீரர்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். முதல் டெஸ்டை விட 2வது போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக 2வது டெஸ்டில் அதிகமான ரன்கள் வித்தியாசத்திலும், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் வெற்றி பெற்று புதிய வரலாற்றையும் இளம் இந்திய அணியினர் படைத்தனர். கடந்த இரு டெஸ்ட் போட்டிகளும் நடந்த ஆடுகளம் தட்டையானது, பேட்டர்களுக்கு வெகுவாக ஒத்துழைக்கக்கூடியதாக இருந்தது. ஆனால், நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆடுகளமாகும். மற்ற மைதானங்களை விட இந்த மைதானத்தில் ஆடுகளம் சற்று தாழ்வாக இருக்கும் என்பதால், பந்து பேட்டரை நோக்கி சீறிக்கொண்டு வரும். ஆதலால், பேட்டர்கள் இங்கு பொறுமை காத்து, நிதானமாக பேட் செய்வது அவசியமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் இந்திய அணியில் கடந்த போட்டியில் களமிறங்காத வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவார். அதேபோல இங்கிலாந்து அணியில் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு ப்ளேயிங் லெவனில் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக ஆர்ச்சர் 2021ம் ஆண்டு ஆமதாபாத்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பங்கேற்றார். அதன்பின் முழங்கால் காயம், முதுகுதண்டுவட சிகிச்சை ஆகியவற்றால் 4 ஆண்டுகளுக்கும் மேலாக அணியில் இடம் பெறாமல் இருந்த ஆர்ச்சர் நாளைதான் களமிறங்க இருக்கிறார். இங்கிலாந்து அணிக்குள் ஆர்ச்சர் வருவது மிகப்பெரிய பலமாகும், பந்துவீச்சாளர் ஜோஸ் டங்கிற்குப் பதிலாக ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார், இதைத்தவிர பெரிதாக எந்த மாற்றத்தையும் இங்கிலாந்து அணி செய்யவில்லை. இந்திய அணியிலும் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார். மற்றவகையில் ப்ளேயிங் லெவனில் பெரிதாக மாற்றத்தையும் இந்திய அணி தரப்பில் செய்யமாட்டார்கள் என்று தெரிகிறது. 'புற்றுநோயுடன் போராடும் அக்காவுக்காக...' - 10 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஆகாஷ் தீப் உருக்கம் கேப்டன்சி, பேட்டிங் அபாரம்: கேப்டனானதும் புதுப்புது நுட்பங்களை வெளிக்காட்டும் சுப்மன் கில் புதிய வரலாறு படைத்த இந்தியா: ஆகாஷ் தீப் அற்புத பந்துவீச்சில் தடம் புரண்ட இங்கிலாந்து சுப்மன் கில்லின் இரட்டை சதம் ஏன் இவ்வளவு சிறப்பானது? ஆர்ச்சர் வருகையால் நம்பிக்கை இங்கிலாந்து அணியில் 2வது டெஸ்டிலேயே ஆர்ச்சர் சேர்க்கப்பட்டாலும் அவருக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை. 2வது போட்டியிலிருந்தே வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்ச்சரை தீவிரமாகக் கண்காணித்த பின், பயிற்சியாளர் மெக்கலம் 3வது டெஸ்ட் போட்டியில் ப்ளேயிங் லெவனில் சேர்த்துள்ளார். இங்கிலாந்து அணியின் தற்போதைய பந்துவீச்சாளர்கள் பெரிதாக அனுபவம் இல்லாதவர்கள். வோக்ஸ், ஸ்டோக்ஸ் தவிர ஜோஸ் டங், கார்ஸ், இருவருமே அனுபவம் குறைந்தவர்கள். ஜோஸ் டங் இரு போட்டிகளில் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியில் முன்னணி விக்கெட் வீழ்த்தியவராக இருந்தாலும், ஓவருக்கு 4.5 ரன்ரேட் வழங்குவது பெரிய கவலையாக இருந்தது. கார்ஸ், வோர்ஸ் இருவரும் இரு போட்டிகளில் சேர்த்து சராசரியாக 70 ஓவர்களுக்கு மேல் பந்துவீசியுள்ளனர். ஆனால், பெரிதாக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை. வேகப்பந்துவீச்சாளர் அட்கின்சன் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர் 3வது மற்றும் 4வது டெஸ்டில் விளையாடமாட்டார். சர்ரே கவுண்டி அணிக்காக ஆட இருப்பதால் கடைசி டெஸ்டில் அட்கின்சன் வருவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆதலால், இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் மட்டுமே மாற்றமாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லார்ட்ஸ் மைதானத்தில் ஆர்ச்சர் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு பந்துவீசுவது இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும். ஆர்ச்சரைப் பொருத்தவரை 2019 ஆஷஸ் தொடரிலிருந்து கடைசியாக 2021ம் ஆண்டுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்ட ஆர்ச்சரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர இங்கிலாந்து நிர்வாகம் மிகவும் மெனக்கெட்டது. அதனால்தான் அவருக்கு 2வது போட்டியில் போதுமான ஓய்வும், பயிற்சியும், கண்காணிப்பும் செய்து அணிக்குள் கொண்டு வருகிறார்கள். இவர் தவிர கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு மார்க்வுட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், கடைசி டெஸ்டில் மார்க்வுட், அட்கின்சன் அணிக்குள் வரலாம் என்று நம்பப்படுகிறது. லார்ட்ஸ் மைதானம் பாரம்பரியமாகவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியது. இந்த மைதானத்தில் ஆர்ச்சர் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு பந்துவீசுவது இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும். கார்ஸ், வோக்ஸ், ஸ்டோக்ஸ் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும் கடந்த 2 போட்டிகளாக இந்திய பேட்டர்களுக்கு பந்துவீசி அவர்களின் பலம், பலவீனத்தை தெரிந்து கொண்டுள்ளனர். ஆதலால், லார்ட்ஸ் மைதானத்தில் இன்னும் எளிதாக இந்திய பேட்டர்களை அணுக முடியும். சுழற்பந்துவீச்சுக்கு பஷீர், அவருக்கு துணையாக 5வது பந்துவீச்சாளராக ஜோ ரூட் பந்துவீசுவார். மற்றவகையில் இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சை முழுமையாக நம்பி இருக்கிறது. பேட்டிங்கில் இங்கிலாந்து வீரர்களில் பென் டக்கெட், ஸ்மித், ப்ரூக் ஆகியோர் கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ளனர். கிராளி, ஆலி போப், ஜோ ரூட், கேப்டன் ஸ்டோக்ஸ் இதுவரை ஃபார்முக்கு வராமல் இருப்பது அந்த அணிக்கு பெரிய கவலையாகும். முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதற்கு டக்கெட்டின் பேட்டிங்கும், ப்ரூக், ஸ்மித்தின் சதமும் முக்கியக் காரணமாக அமைந்தது. ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் இரு போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை, ஆனால், பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகிறார்கள், நல்ல வியூகங்களை வகுக்கிறார். ஜோ ரூட் அனுபவமான பேட்டராக நடுவரிசையில் இருப்பது அந்த அணிக்கு பெரிய பலமாக இருந்தாலும், நிலைத்தன்மை அவரின் பேட்டிங்கில் இல்லை. லாட்ஸ் மைதானத்தில் பென் ஸ்டோக்ஸ், டக்கெட், போப் ஆகிய 3 பேருமே கடந்த காலங்களில் சதம் அடித்திருப்பது பெரிய நம்பிக்கையை அளிக்கும். வோக்ஸ், ஸ்டோக்ஸ் இருவருமே லார்ட்ஸ் மைதானத்தில் 25 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பது பெரிய பலமாகும். அதிலும் 145 கி.மீ வேகத்துக்கு அதிகமாக பந்துவீசும் வோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களை கலங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பும்ராவின் வருகை 2வது டெஸ்ட் போட்டியில் வென்ற அதே இந்திய அணிதான் சிறிய மாற்றத்துடன் 3வது போட்டியில் களமிறங்கும் எனத் தெரிகிறது. பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார். மற்றவகையில் மாற்றம் இருக்காது என கிரிக்இன்போ தளம் தெரிவித்துள்ளது. இந்திய அணியில் கருண் நாயரின் ஃபேட்டிங் ஃபார்ம்தான் கவலைக்குரியதாக இருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்டில் வாய்ப்புக் கிடைத்தும் இரு போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இருப்பினும் அவரை மாற்றாமல்தான் இந்திய அணி களமிறங்கும் எனத் தெரிகிறது. பந்துவீச்சில் பும்ராவுக்குத் துணையாக சிராஜ், ஆகாஷ் தீப் ஆகிய மூவரும் 4வது பந்துவீச்சாளராக நிதிஷ் ரெட்டியும் இருப்பார். சுழற்பந்துவீச்சுக்கு ஜடேஜா, வாஷிங்டன் இருவர் இருக்கிறார்கள். 2வது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை எடுத்து பும்ரா இல்லாத இடத்தை நிறைவு செய்துவிட்டார். சிராஜும் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 3 பந்துவீச்சாளர்களுமே விக்கெட் வீழ்த்தும் ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பெரிய பலமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார். லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பந்துவீச்சாளர்கள் மோதுவதற்கான களமாக இருப்பதால், இரு அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களின் திறனை உரசிப்பார்க்கும் போட்டியாக இருக்கும். இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேரன் காஃப் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "இந்திய அணியில் பும்ரா வருகைக்குப்பின், 3 வேகப்பந்துவீச்சாளர்களுமே விக்கெட் வீழ்த்தும் திறமையுடன் இருப்பது அணிக்கு பெரிய பலமாக இருக்கும். லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் தங்கள் திறனை வெளிப்படுத்தும் களமாக இருப்பது பார்க்க உற்சாகமாக இருக்கும். அதேசமயம், இந்திய பந்துவீச்சாளர்களோடு ஒப்பிடும்போது இங்கிலாந்து பந்துவீச்சு சற்று பின்னடைந்துள்ளது" எனத் தெரிவித்திருந்தார். இந்திய அணி செய்ய வேண்டியது என்ன? பேட்டிங்கைப் பொருத்தவரை ஜெய்ஸ்வால், ராகுல், சுப்மன் கில், ஜடேஜா, ரிஷப் பந்த் என டாப்ஆர்டர் பேட்டர்கள், நடுவரிசை பேட்டர்கள் அரைசதம், சதம், தொடர் சதம் அடித்து வலுவான ஃபார்மில் இருக்கிறார்கள். இதில் கருண் நாயர் பேட்டிங் மட்டுமே கவலையளிப்பதாக உள்ளது. வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டிவரை பேட்டர்கள் இருப்பது இந்திய அணிக்கு பெரிய பலம். ஆனால், கடந்த 2 போட்டிகளில் ரன் குவித்ததைப் போன்று லார்ட்ஸ் மைதானத்தில் எளிதாக ரன்கள் குவிக்க முடியாது. பேட்டர்கள் பொறுமையாக, நிதானமாக செயல்பட்டால்தான் ரன்களை நோக்கி நகர முடியும் என்பதால், பேட்டர்களின் திறனை உரசிப்பார்க்கும் உரைகல்லாக இருக்கும். பேட்டர்களை தவறு செய்ய வைக்கும் வகையில் பந்தில் பவுன்ஸர், ஸ்விங், சீமிங் இருக்கும் என்பதால், பேட்டர்கள் ஏமாந்து வி்க்கெட்டை விடாமல் பேட் செய்வது அவசியமாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2 போட்டிகளில் ரன் குவித்ததைப் போன்று லார்ட்ஸ் மைதானத்தில் எளிதாக ரன்கள் குவிக்க முடியாது. லார்ட்ஸ் மைதானத்தைப் பொருத்தவரை முதலில் சோதனைக்குள்ளாவது டாப்ஆர்டர் பேட்டர்கள்தான். ஆதலால், ராகுல், ஜெய்ஸ்வால் மிகுந்த பொறுமையுடன் முறைப்படியான டெஸ்ட் போட்டியில் பேட் செய்வதைப் போல் பேட் செய்து முதல் செஷனைக் கடந்தால்தான் அடுத்துவரும் பேட்டர்களுக்கு நெருக்கடியில்லாமல் விளையாட முடியும். முதல் செஷனிலேயே விக்கெட்டை இழந்தால், அதன்பின் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆதலால், இந்த மைதானத்தில் முதல் செஷன் ஆட்டம் என்பது மிக மிக முக்கியமானதாகும். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுப்பதுதான் இங்கு சரியான முடிவாக இருக்கும். இங்கு டாஸ் வென்ற அணிதான் 55 சதவீத போட்டிகளில் வென்றுள்ளது. முதல் செஷன் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இந்த முதல் செஷன் வரை இந்திய பேட்டர்கள் விக்கெட்டை விடாமல் பொறுமையாக பேட் செய்விட்டால் நிலைத்துவிடலாம். ஆனால், முதல் செஷனில் புதிய பந்து, காற்றின் வேகம், ஆடுகளம் ஆகியவற்றால் மின்னல் வேகத்தில் பந்து பேட்டரை நோக்கி வரும் என்பதால் விக்கெட்டை காப்பாற்றி பேட்டர்கள் ஆடுவது அவசியமாகும். ஆடுகளம் எப்படி இருக்கும்? கிரிக்கெட்டின் மெக்கா என வர்ணிக்கப்படும் லார்ட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்துவீச்சாளர்களின் சொர்க்கபுரி. இந்த மைதானத்தில் முதல் செஷன் என்பது 5 நாட்களுமே முக்கியமானதாக இருக்கும். ஆடுகளத்தில் புற்கள் இருக்குமாறு பராமரித்துவருவதால், இயல்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கமே இங்கு அதிகமிருக்கும் பேட்டர்கள் சற்று சிரமப்பட்டுதான் பேட் செய்ய வேண்டியதிருக்கும். சிறிய தவறு, தவறான ஷாட் ஆட முயன்றாலும் விக்கெட்ட இழக்க நேரிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லார்ட்ஸ் மைதானம் (ஃபைல் புகைப்படம்) இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 344 ரன்கள்தான் சேஸ் செய்யப்பட்டுள்ளது என்பதால் கடைசி நாளில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியிருக்கும். முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 300 ரன்கள் சேர்ப்பதே கடினம்தான். ஓவருக்கு 2 முதல் 3 ரன்கள் தான் சேர்க்க முடியும் என்பதால் பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும். லார்ட்ஸில் இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் எப்படி உள்ளது? இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 3 போட்டிகளில்தான் வென்றுள்ளது, 12 போட்டிகளில் தோல்வி அடைந்து, 4 போட்டிகளை டிரா செய்துள்ளது. 1932ம் ஆண்டிலிருந்து லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய இந்திய அணி 1986ம் ஆண்டுதான் முதல் வெற்றியை கபில் தேவ் தலைமையில் பெற்றது. அதன்பின் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 2வது வெற்றிக்காக காத்திருந்து தோனி தலைமையில் ஒரு வெற்றியும் 2021ல் விராட் கோலி தலைமையில் ஒரு வெற்றியையும் இந்திய அணி பெற்றது. இந்திய அணியில் இப்போது இருக்கும் வீரர்களில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக சதம் அடித்துள்ளார், ஜடேஜா அரைசதம் அடித்துள்ளார். பந்துவீச்சாளர்களில் பும்ரா ஒரு போட்டியில் ஆடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் இப்போது இருக்கும் பெரும்பாலான வீரர்களுக்கு லார்ட்ஸ் மைதானம் என்பது புதுவிதமான அனுபவமாக இருக்கும். இங்கிலாந்து அணி இந்த மைதானத்தில் 145 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 59 போட்டிகளில் வென்றுள்ளது, 35 போட்டிகளில் தோல்வி அடைந்து 51 போட்டிகளை டிரா செய்திருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் கனவாக இருக்கும். இந்த மைதானத்தில் ஒரு பந்துவீச்சாளர் விக்கெட் எடுத்தாலும், பேட்டர் அரைசதம், சதம் அடித்தாலும் அது அவருக்கு வாழ்நாளில் மிகப்பெரிய நினைவலையாக இருக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vrxdlynlyo

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month ago
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 54 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வு 14ஆம் நாள் 09.07.2025 யாழ்ப்பாணம்.com

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month ago
செம்மணி விவகாரத்தில் பொலிஸ் விசேட குழுவினரின் அறிக்கைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு 09 JUL, 2025 | 04:14 PM யாழ் செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த பின்னர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ். செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி அவசர நிர்மாணிப்பு வேலை இடம்பெற்ற போது ஏற்பட்ட நிலையை அடிப்படையாகக் கொண்டு இந்த சம்பவம் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றது. கடந்த 7ஆம் திகதி வரை மூன்று சந்தர்ப்பங்களிர் 21 நாட்கள் அகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது 44 மனித எழும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனோடு மனித பாவனைப் பொருட்கள் 61 கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. இச்செயற்பாடுகள் யாழ். மாவட்ட நீதிபதி, அவரது கட்டளையின் படி பேராசிரியர் ராஜ். சேவதேவ உள்ளிட்ட குழுவினர், யாழ் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரதாபன் ஆகியோர் தொடர்புபட்டு மேற்கொள்ளப்படுகின்றது. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறும். பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு முன்வைப்பார்கள். என்ன பெறுபேறு என்று நாம் பார்ப்போம். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். குற்றப்புலனாய்வு திணைக்களம் பொலிஸ் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீதிமன்றத்திற்கு உரிய தேவைகளுக்கு ஏற்ப தேவையான விசாரணைகள் அரசினால் முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/219587

செம்மணி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் - சாணக்கியன்..!

1 month ago
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 03:59 PM செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும், இல்லாவிடின் இதற்கான நீதி கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தேன், அதில் சர்ச்சைக்குரிய விடையங்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் போது அவர்களின் நாடாளுமன்ற சிறப்புரிமைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்கவேண்டும். செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதி மறுக்கப்பட்டது என்பது நல்லிணக்கத்திற்கு பாதகமான ஒரு விடயம். பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய விடயமாக உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 300 இற்கும் அதிகமானோர் கொல்லப் பட்டுள்ளனர். 1998/99 காலப்பகுதியில் சோமரட்ன ராஜபக்ஷ எனும் நபர் மொழிந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 15 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இவ் எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் கிளஸ்கோவில் உள்ளதாக அறிகின்றோம். ஏன் இவற்றை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்யவில்லை? DNA பரிசோதனை இலங்கை அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வசதிகள் இல்லாத நிலையில் ஏன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாட தயங்குகின்றது? அரசாங்கம் செய்ய குற்றங்களை அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என ஜனாதிபதி கூறியுள்ளார். இதானாலேயே நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றினை எதிர்பார்க்கின்றோம். அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு விசேட அலுவலகம் ஒன்றினை உருவாக்க யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அலுவலகம் அமைக்கவில்லை? ஆரையம்பதியில் கொல்லப்பட்ட விஜிதா, மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ரிபாயா, பிறேமினி, மனித புதைகுழி உள்ள கொக்குத்தொடுவாய், மாத்தளை, செம்மணி, இன்னும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை ஆகியவற்றின் மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை? சட்டத்தில் இணையவழி (Online) மூலமாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு இயலுமாக இருப்பினும் தற்போது பிள்ளையானுக்கு எதிராக சாட்சி அளிக்க தயாராக உள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலமானது பதிவு செய்யப்படவில்லை. அசாத் மௌலானா தனது வாக்குமூலத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய போதிலும் அவ் அறிக்கையினை இலங்கை அரசாங்கம் இன்றளவிலும் கேட்டுப் பெறவில்லை. 2004ம் ஆண்டிலிருந்து இந் நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினை உருவாக்கியது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே. கலில் (ஓட்டமாவடி) மற்றும் பாயிஸ் (காத்தான்குடி) எனும் அழைக்கப்படும் இருவர் தற்போது வரை இயங்கிக் கொண்டிருக்கின்றனர். கலில் என்பவர் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருவர். இலங்கை அரசாங்கம் இன்று வரை இவர்களிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை. நியாஸ் எனும் ஒருவர் சாய்ந்தமருதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். இவர் நிந்தவூர் “Safe House” இல் இருந்ததாக இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ற போதும் அவரை பிடிக்க முடியவில்லை. ஆனால் இவர் ஒரு முக்கிய சாட்சியாக கருதப்படக்கூடிய ஒருவர். ஆனால் இச் சாட்சியை மூடி மறைத்துள்ளனர். சாரா எனப்படும் புலஸ்தினியினுடைய 3வது DNA அறிக்கையின் பிற்பாடே அவர் இறந்து விட்டார் என மொழியப்பட்டது. இரு தடவைகளும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பிரகாரம் அவரை ஏன் இனங்காண முடியவில்லை? இவருடைய தேசிய அடையாள அட்டை அம்பாறை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சாராவினுடைய அனைத்தும் தீக்கிரையாகி விட்டன என்றால் எவ்வாறு தேசிய அடையாள அட்டை மாத்திரம் கைப்பற்றப்பட்டது? இஸ்லாமிய அடிப்படை வாதத்தை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் தேட நினைக்கும் கட்சிகள் உள்ளன. “மினுவாங்கொட போன்ற இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகளை எரித்ததற்கு பின்புலத்தில் சரத் வீரசேகர என்பவரே உள்ளார்.” என மைத்திரிபால சிறிசேன அவர்களின் குரல் பதிவும் உள்ளது. ஆனால் ஏன் இதுவரை காலமும் சரத் வீரசேகரவிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை? ரொஹான் குணரட்ன என அழைக்கப்படும் விரிவுரையாளர் என்பவர் சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் Security Defence பற்றிய விரிவுரையாளர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பே இக் குற்றங்களுக்கு காரணம் என இவர் இரு மாதங்களுக்கு முன்பே கூறியுள்ளார். அரசாங்க அமைச்சர் பிள்ளையானே இக் குற்றங்களுக்கு பின்னணி சூத்திரதாரி எனக் கூறுகின்றார். ரொஹான் குணரட்ன என்பவர் பொய்யான வாக்குறுதிகளை மொழிதமைக்காக கனடாவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆகவே இது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் ஏறாவூர் பகுதியை சேர்ந்த முஹமட் ரசாக் என்பவரது துப்பாக்கி தொலைந்தது. இத் துப்பாக்கி நுவரெலியாவில் உள்ள ரசாக் என்பவரிடம் இருப்பதாக அவர் கைது செய்யப்பட்டார். இவர் “Islamic Centre” எனும் அமைப்பில் உள்ளார். இத் துப்பாக்கி சபீக் எனப்படுபவரிடமிருந்து ரசாக் என்பவருக்கு விற்கப்பட்டதாகவே தகவல். இத் துப்பாக்கியினையே ரில்வான் சாய்ந்தமருதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது வைத்திருந்தவர் என தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஏன் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. https://www.virakesari.lk/article/219585

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிள்ளையான் முன்பே அறிந்து இருந்ததாகவும், விரைவில் இலங்கை புலனாய்வு துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1 month ago
பிள்ளையானிற்கு உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது - நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 09 JUL, 2025 | 02:17 PM கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்தபோதே அவருக்கு இது குறித்து தெரிந்திருந்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையானிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219576

பிரான்ஸின் மார்சேயில் பாரிய காட்டுத் தீ; 100 பேர் காயம்

1 month ago
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 12:42 PM பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஒன்பது தீயணைப்பு வீரர்கள், 22 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. மார்சேய் பகுதியை சென்று பார்வையிட்ட உள்நாட்டு அமைச்சர் புருனோ ரீடெய்லியூ அங்கு அவர் உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்தார். தற்போது தீயை அணைக்கும் பணியில் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். "கடற்படை தீயணைப்பு வீரர்கள் கையில் குழாய்களுடன் கொரில்லாப் போரை நடத்தி வருகின்றனர்" என மார்சேயின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையை மேற்கோள் காட்டி நகர மேயர் பெனாய்ட் பயான் தெரிவித்துள்ளார். தங்கள் வீடுகளை விட்டு 400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். தீப் பரவல் நிமிடத்திற்கு 1.2 கிலோ மீற்றர் (0.7 மைல்) வேகத்தில் பரவியுள்ளது. காற்று, அடர்ந்த தாவரங்கள் மற்றும் செங்குத்தான சரிவுகளால் தீ வேகமாக பரவி வருவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தீயணைப்பு வீரர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். "காயமடைந்தவர்கள் மற்றும் அனைத்து குடியிருப்பாளர்கள் மீது எங்கள் சிந்தனைகள் உள்ளன" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நண்பகல் முதல் பல மணி நேரம் மூடப்பட்டிருந்த மார்சேய் புரோவென்ஸ் விமான நிலையம் அந்நாட்டு நேரப்படி இரவு 21:30 மணிக்கு (GMT 19:30) பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு சம்பவம் இதற்கு முன்னர் நிகழ்ந்தது இல்லை என விமான நிலையத்தின் தலைவர் ஜூலியன் காஃபினியர் தெரிவித்துள்ளார். மார்சேய்க்கு வடக்கே பென்னஸ்-மிராபியூ அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ, சுமார் 700 ஹெக்டயர் (7 சதுர கி.மீ) பரப்பளவுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்ததால் இந்த காட்டுத் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Bouches-du-Rhône பகுதியில் மே மாதம் 19 ஆம் திகதி முதல் ஒரு சொட்டு மழை கூட பதிவாகவில்லை. இதேவேளை, பிரான்சில் திங்களன்று நார்போன் அருகே மற்றுமொரு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 60 கிலோ மீற்றர் (40 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளதால் சுமார் 2,000 ஹெக்டயர் நிலப்பரப்பளவு எரிந்து நாசமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு ஸ்பெயினின் கட்டலோனியா பகுதி உட்பட ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் காட்டுத்தீ பதிவாகியுள்ளது. கிழக்கு பகுதி தாரகோனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் செவ்வாயன்று 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் தமது வதிவிடங்களுக்குள் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் பலத்த காற்று வீசியதால் தீ அணைப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3,000 ஹெக்டயர் நிலப்பரப்பளவுக்கு தீ பரவியுள்ளது. ஜூன் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகரித்தமையினால் ஸ்பெயினின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன. கிரேக்கத்தில் நாடு முழுவதும் திங்களன்று சுமார் 41 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஏழு காட்டுத் தீ திங்கள் மாலை வரை செயல்பாட்டில் இருந்தன என்று தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் தென் ஐரோப்பாவின் பெரும்பகுதி கோடை கால ஆரம்பத்தில் கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டது, தீ விபத்துக்களினால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். https://www.virakesari.lk/article/219549

செம்மணி மனிதபுதைகுழி - உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்- மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி அவசியம் என தெரிவிப்பு

1 month ago
பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? உமா குமரன் வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி Published By: RAJEEBAN 09 JUL, 2025 | 12:31 PM பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நீங்கள் இறுதியாக இந்த குழுவின் முன்னிலையில் 2024 நவம்பரில் தோன்றியபோது நான் தமிழ் மக்களிற்கான நீதி குறித்து உங்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன். இந்த விடயம் குறித்து நீங்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட அர்ப்பணிப்பிற்காகவும் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழ் சமூகத்திற்கு நீங்க்ள வெளிப்படுத்திய ஆதரவிற்கும் நான் உங்களிற்கு எனது நன்றியை தெரிவிப்பதன் மூலம் எனது உரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன். உங்களிற்கு இது தொடர்பிலான எனது குடும்பத்தின் கதை தெரியும், இலங்கையில் மோதலின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மார்ச் மாதம் பிரிட்டன் தடைகளை அறிவித்தமை குறித்து நான் திருப்தியடைகின்றேன். சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் சட்டத்திற்கு புறம்பான கொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக. இது அந்த சமூகத்திற்கு இந்த தருணத்தில் மிகவும் முக்கியமான விடயம். ஆனால் கவலையளிக்கும் விதத்தில் கடந்த மாதம் இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மற்றுமொரு மனித புதைகுழியை கண்டுபிடித்துள்ளனர். அந்த புதைகுழியில் மூன்று குழந்தைகளின் உடல்களையும் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகளை சர்வதேச தராதரத்தின் கீழ் அகழ்வு செய்வதற்கான போதிய வளங்கள் இலங்கையில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது. பிரிட்டிஸ் அரசாங்கம் இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? https://www.virakesari.lk/article/219562

ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?

1 month ago
ஏமனில் கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு - குடும்பத்தின் தரப்பில் தகவல் கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 8 ஜூலை 2025 ஏமனில் கொலை வழக்கில் சிக்கிய கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய அவரது தாயார் சார்பாக வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்டவருமான சாமுவேல் ஜெரோம், நிமிஷா பிரியாவை காப்பாற்ற இன்னமும் வழியிருப்பதாக கூறியுள்ளார். நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு தொடர்பாக பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. என்ன நடந்தது? ஏமன் நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தற்போது ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிமிஷா பிரியாவை மீட்பதற்கு 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்‌ஷன் கவுன்சில்' என்ற குழுவும், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தனர். பிரேமா குமாரி, இதற்காக இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏமன் சென்றார். ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் இருப்பதால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு 'ப்ளட் மணி (Blood Money)' என்னும் இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் நாட்டு அதிபர் மெஹ்தி அல் மஷாத்(ஹூதி பிரிவு) கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தார். மரண தண்டனை தேதி அறிவிப்பு நிமிஷா பிரியாவை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை அவரது குடும்பத்தினர் எடுத்து வரும் நிலையில், அவரது மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மனித உரிமை ஆர்வலரும், நிமிஷா பிரியாவின் தாயார் சார்பாக வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்டவருமான சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார். மத்திய சிறையின் தலைவர் தொடர்புகொண்டு மரண தண்டனை தேதி முடிவு செய்யப்பட்டது குறித்துத் தனக்குத் தெரிவித்ததாக ஜெரோம் கூறுகிறார். அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நேற்று சிறைத் தலைவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதியன்று நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து சௌதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தெரிவித்துள்ளேன். அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் சனாவில் உள்ள இந்திய அதிகாரிகள் நேரடியாகச் சென்று மரண தண்டனை ஆவணத்தைப் பார்த்து உறுதி செய்துள்ளனர்" என்று தெரிவித்தார். இதனை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. அதோடு, "நான் ஏமனுக்கு பயணித்துக் கொண்டிருக்கிறேன். அங்கு சென்றபிறகு என்ன வாய்ப்புகள் நம் முன் இருக்கின்றன என்பதைப் பார்க்கவுள்ளேன். இன்னமும் இதில் இந்திய அரசு தலையிட முடியும்" என்று சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள ஏமனில், கேரள செவிலியர் நிமிஷா பிரியா ஹூதி பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்களுடன் இந்தியாவுக்கு தூதரக உறவு இல்லை என்பதால், நிமிஷா பிரியா விவகாரத்தை சௌதியில் உள்ள இந்திய தூதரகமே கவனிக்கிறது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற இருக்கும் வழி என்ன? படக்குறிப்பு, நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம் நிமிஷா பிரியா வழக்கை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஜெரோம். பல ஆண்டுகளாக ஏமன் நாட்டில் வானூர்தி ஆலோசகராகப் பணிபுரியும் ஜெரோம், மஹ்தி குடும்பத்தினரின் மன்னிப்பை நிமிஷாவுக்கு பெற்றுத் தருவதற்கான முயற்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறார். கடந்த 2023 டிசம்பரில் பிபிசி தமிழிடம் பேசியபோது, மன்னிப்பு பெறுவதற்கான செயல்முறையில் பணம் பிரதானமல்ல என்று கூறிய ஜெரோம், "ப்ளட் மணி (Blood money) என்பது மன்னிப்புக்கான ஓர் அடையாளம் மட்டுமே. வேறு சில வழக்குகளில் 5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 42 கோடிகள்) கொடுக்க முன்வந்தும்கூட பாதிக்கப்பட்ட ஏமன் குடும்பங்கள் மன்னிப்பு வழங்கவில்லை. எனவேதான் மஹ்தியின் குடும்பத்தாருடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது," என்றார். இந்த மன்னிப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், "மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் அளித்துள்ள ஒப்புதல், அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பிறகு அவர் மரண தண்டனையை நிறைவேற்ற ஆணை பிறப்பிப்பார். அதற்கு முன், மஹ்தியின் குடும்பத்தை அழைத்து 'நிமிஷாவுக்கு தண்டனை வழங்குவதில் ஆட்சேபம் உள்ளதா எனக் கேட்பார்'. அவர்கள் விருப்பமில்லை அல்லது நிமிஷாவை மன்னிக்கலாம் என்று கூறிவிட்டால் உடனே தண்டனை நிறுத்தப்படும்" என்று கூறினார். இப்போதுள்ள சூழலில், கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டு, நிமிஷாவுக்கு மன்னிப்பு வழங்குவதுதான் ஒரே வழி என்றும் அவர் முன்பு கூறியிருந்தார். நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன? படக்குறிப்பு, நிமிஷா பிரியா தனது கணவருடன் உள்ள புகைப்படம் நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி முன்பு பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த வழக்கு குறித்த முழு விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன்படி, கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த 35 வயதான நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு கணவருடன் ஏமன் சென்றார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். செவிலியர் பணியில் குறைந்த ஊதியமே கிடைத்தது என்பதால் நிமிஷாவின் குடும்பம் அங்கு வசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே 2014ஆம் ஆண்டு, தனது மகளுடன் கேரளா திரும்பினார் டோமி தாமஸ். நிமிஷா தொடர்ந்து ஏமனில் பணிபுரிந்தார். "மீண்டும் தனது குடும்பத்தை ஏமனுக்கு அழைத்து வர, நிதி நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதால், அங்கு சொந்தமாக ஒரு சிறிய மருத்துவமனையைத் தொடங்க விரும்பினார் நிமிஷா. ஆனால், ஏமன் நாட்டுச் சட்டப்படி மருத்துவமனை தொடங்க உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கட்டாயம் பங்குதாரராக இருக்க வேண்டும். எனவே 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். இந்த மருத்துவமனைக்காக, நிமிஷா தனது நண்பர்கள், உறவினர்களிடம் 50 லட்சம் வரை கடன் வாங்கினார்" என்று பிரேமா குமாரி தெரிவித்தார். அதன் பிறகு கணவரையும் மகளையும் ஏமன் அழைத்து வருவதற்கான வேலைகளை அவர் தொடங்கிய போதுதான் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. அதனால், அவர்களால் ஏமன் செல்ல முடியவில்லை. 2015இல் ஏமனில் வசித்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை 'ஆபரேஷன் ரஹாத்' என்ற பெயரில் இந்திய அரசு மீட்டது. அப்போது ஏமனில் இருந்து வெளியேறாமல், அங்கேயே தங்க முடிவு செய்த சில இந்தியர்களில் நிமிஷாவும் ஒருவர். மருத்துவமனை தொடங்கப்பட்டு, அது சிறப்பாகச் செயல்படத் தொடங்கியதும் நிமிஷாவுக்கும் உள்ளூர் பங்குதாரர் மஹ்திக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்தன என்றும், இது குறித்துப் பல புகார்களை தொலைபேசியில் பேசும்போது நிமிஷா தெரிவித்தார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். படக்குறிப்பு, நிமிஷாவின் தாயார் பிரேமா, இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏமன் சென்றார் கடந்த வருடம், நிமிஷாவின் தாயாரை ஏமன் அனுப்ப அனுமதி கோரி, 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "மஹ்தி, உடல்ரீதியாக நிமிஷாவை கொடுமைப்படுத்தியதாவும், மருத்துவமனை வருமானம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில், "மஹ்தி, துப்பாக்கியை வைத்து நிமிஷாவை அச்சுறுத்தியதாகவும்" மற்றும் "நிமிஷா நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுக்க அவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாகவும்" அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிமிஷா ஏமன் காவல்துறையிடம் புகார் அளித்தபோது, "மஹ்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நிமிஷாவை ஆறு நாட்கள் சிறையில் அடைத்து வைத்ததாகவும்" கூறப்பட்டுள்ளது. "தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்க, அவருக்கு மயக்க மருந்து செலுத்த நிமிஷா முடிவு செய்தார். ஆனால் தவறுதலாக மயக்க மருந்தின் அளவு கூடியதால், மஹ்தி உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷாவும் பாதிக்கப்பட்டவர்தான். அவரை குற்றவாளியாகக் கருத முடியாது" என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன். கடந்த 2018இல், கேரளாவின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையத்தில் (NRI Commission) நிமிஷா சார்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் கே.எல்.பாலச்சந்திரன். "இந்த வழக்கின் தொடக்கத்தில் நிமிஷாவுக்கு ஏமனில் சட்ட உதவிகள் முறையாகக் கிடைக்கவில்லை. இதனால் அவர் தரப்பு நியாயத்தைக் கூற முடியவில்லை. மொழி தெரியாமல், அவர்கள் காட்டிய ஆவணங்களில் எல்லாம் அப்போது அவர் கையெழுத்திட்டுவிட்டார்" என்று கூறுகிறார் பாலச்சந்திரன். தலோல் அப்டோ மஹ்தி கொலை வழக்கில், 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிமிஷா சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நிமிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏமனின் உச்சநீதிமன்றம் நவம்பர் 2023இல் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்தது. நவம்பர் 2023இல் உறுதி செய்யப்பட்ட தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் மெஹ்தி அல் மஷாத் (ஹூதி பிரிவு) கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தார். ஏமனில் ஷரியத் சட்டம் அமலில் உள்ளதால், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், நிமிஷாவால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg5lvd1mgro

மாதா எழுதிய “முதுமை” சிறுகதை

1 month ago
Posted inStory மாதா எழுதிய “முதுமை” சிறுகதை Posted byBookday07/07/2025No CommentsPosted inStory “முதுமை” சிறுகதை – மாதா அந்த முதியவருக்கு எண்பது வயதாகிறது. அவரது மனைவிக்கு எழுபது. அவர்கள் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் பழுத்த மாம்பழங்கள். ஒரு நாள் திடீரென்று பலத்த காற்று வீசும் போது ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்து விடும். தனது மனைவியை விட தான் வயது மூத்தவர் என்பதால் தார்மீக அடிப்படையில் அவளுக்கு முன்பாகவே தான் காலமாகிவிட வேண்டுமென்று எண்ணினார். ஆனால் கடவுள் அந்த வயது முதிர்ந்தபெண்ணுக்கு அணுக்கமாகவே நடந்து வருகிறார். வயதான காலத்தில் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விரும்பியதை எல்லாம் கடவுள் வழங்கியிருப்பதாகவே நம்பினார்கள். தேவைகள் குறைவாக இருப்பவரே பெரிய செல்வந்தர். நலக்குறைவில்லா வாழ்க்கை. மூதாட்டிக்கு கடவுளிடம் ஒரே ஒரு பிரார்த்தனைதான். நூறு ஆண்டுகள் வரை கணவர் உயிரோடு வாழ வேண்டும். அவருக்கு முன்பு அவள் உயிர் பிரிய வேண்டும். நலமுடன் இருக்கும் போதே கடவுள் அவளை அழைத்துக் கொள்ள வேண்டும். அவரை விட்டால், அவள் யாரிடம் முறையிட முடியும்? தேவைப்படும் நாளில் உதவிக்கரம் கிடைக்காத சூழலில் மனிதன் கடவுளை எண்ணுகிறான், தன்னை மீட்டெடுப்பான் என்று நம்புகிறான். ஆனால் அளவான இறை நம்பிக்கையுள்ள முதியவர் ஆண்டவனிடம் இதுபோன்ற கோரிக்கை வைப்பதில்லை. பக்தர்களை கவனிப்பதை விட கடவுளுக்கு உலகில் ஏராளமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. அவளுடைய வேண்டுகோளை கடவுள் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? இருப்பவர்களுக்கெல்லாம் நீண்ட ஆயுளைக் கொடுத்து தங்கி விட்டால், மற்றவர்களுக்கு பூமியில் இடமில்லாமல் போகுமே… சராசரி அயுளுக்கு மேல் நீணட கால வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை. வாழ்க்கையின் இறுதிப் பகுதி துயரத்தின் வலி மிகுந்ததாகவே இருக்கும். அவர்கள் வசிக்கும் வீடு அந்த மூத்த தம்பதிகளின் வயதை விட பழமையானது. மூன்று தலைமுறையை தாங்கி நிற்கிறது. பழமையான அந்த வீட்டில் பழமையான இரு மனிதர்கள் வசித்து வருகிறார்கள். நூற்றி ஐம்பது ஆண்டு வயதுடைய அந்த வீட்டை மராமத்து செய்யவோ, நவீனப்படுத்தவோ அவர்கள் வரும்பவில்லை. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வந்து தங்காத வீட்டை புதுப்பிக்கவில்லை. பிள்ளைகளின் வாழ்வை கரை சேர்த்துவிட்டு மீண்டும் வாழத்தொடங்கி இருக்கிறார்கள். மூத்த தம்பதிகள் நீண்டகாலம் வாழ்வதால் முதுமைக்கால பிரச்சனைகள் துன்புறுத்தும். அவர்களை பராமரிப்பதற்காக செலவு ஏற்படும். பிள்ளைகள் ஒதுக்கி வைத்ததால் அவர்கள் தங்களிடம் சேர்ந்து கொண்டார்கள் மூத்த தம்பதிகள். முதுமைப் பருவம் என்பது பிறப்பு, இறப்பு எல்லைகளுக்கு இடையிலான விளிம்பு நிலை பருவம். கடந்து சென்ற வாழ்க்கைப் பாதையின் அனைத்து அனுபவங்களையும் அசை போட்டு, அடுத்த தலைமுறைக்கு சுவடுகளை விட்டுச் செல்லுகிற உன்னத பருவம். அவர்கள் ஏற்கனவே நீணட காலம் வாழ்ந்து விட்டார்கள். அந்த ஊரிலேயே அவர்கள்தான் வயதானவர்கள். அவர்கள் வயதையொத்தவர்கள் எல்லாம் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அதனாலேயே அவர்கள் இந்த உலகத்தை விட்டு பிரிய மனதளவில் தயாராகி விட்டார்கள். மரணம் யாரிடமும் அனுமதி கேட்பது இல்லை. மரணத்தை விட்டு ஓட முடியுமா? ஒருவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும். நிறைவான வாழ்க்கையில் மரணம் இருக்காது. கிழவரும், அவருடைய மனைவியும் மரணத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்கிறார்கள். தங்களின் தேவைக்கு யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. தினமும் ஒரு நேரம் மட்டுமே ரேஷன் அரிசியை சமைத்து இரண்டு வேளைக்கு சாப்பிடுகிறார்கள். பல நாட்களில் வயதான வயிறு ஒத்துழைக்க மறுக்கிறது. உண்ட உணவை செரிக்க முடியவில்லை. தினமும் குறைந்த அளவே உண்ணுகிறார்கள். உடலில் உயிரையும், ஆன்மாவையும் வைத்திருப்பதற்காக மட்டுமே சாப்பிடுகிறார்கள். சாப்பாட்டிற்காக அவர்கள் ஏங்கியதே இல்லை. அக்கம், பக்கத்து குடித்தனக்காரர்கள் அவர்களை பொறாமையோடு பார்ப்பார்கள். இந்த வயதான காலத்திலும் எப்படி இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? வெளியூர்களில் வசிக்கும் அவர்களுடைய பிள்ளைகள் தங்களை வந்து பார்க்கவில்லையே, பராமரிக்கவில்லையே எனற கவலைகள் கிடையாது. நீங்கள் எப்போது விரும்பினாலும் இந்த கிராமத்திற்கு வந்து நமது முன்னோர்கள் கட்டிய இந்த வீட்டில் தங்கிச்செல்லலாம் என்று பிள்ளைகளிடம் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு சிறு சிறு நலக்குறைவு ஏற்பட்டாலும் பிள்ளைகளுக்கு தந்தியோ, தகவலோ கொடுப்பதில்லை. ஆனால் கிழவிக்கு முதுமைக்கால புலம்பல்கள் அவ்வப்போது வரும். பெண்கள் எதற்காக குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்? பெற்றோர்களை முதுமைக் காலத்தில் கவனித்து பராமரிப்பதற்குத்தானே…என் பிள்ளைகள் எனக்கு கடிதம் கூட எழுதுவதில்லை. இப்படியான பேச்சு வரும்போதெல்லாம் கிழவர் சட்டென்று சொல்லிவிடுவார்;. எந்த மனிதனும் எவரையும் காப்பாற்ற முடியாது. கடவுள் மட்டுமே நமக்கு நல்லது செய்ய முடியும் என்பார். அவரவர்க்கு ஏராளமான சொந்த பிரச்சனைகள். நமது பிள்ளைகளுக்கும் அப்படித்தான். அவர்கள் நமக்கு கடிதங்கள் எழுதுவதாலேயே நம்முடைய பிரச்சனைகள் மறைந்துவிடுமா? பிள்ளைகளைப் பற்றி தேவையில்லாமல் புலம்பிக்கொண்டிருப்பது தாய்மார்களுக்கு. வாடிக்கையாகிவிட்டது. அவர்களெல்லாம் நம்மைப் பார்க்க வந்து தங்கிவிட்டால், உன்னால் சமாளிக்க முடியாது. பத்துப் பனிரெண்டு தட்டுகளுக்கு உன்னால் சமைத்து பரிமாற முடியுமா? அவர்கள் எப்போது விரும்புகிறர்களோ அப்போது வந்து பார்க்கட்டும். சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது. இதைக் கேட்டதும் பாட்டிக்கு பல்லில்லா வாயில் கனிவான புன்னகை பூக்கும். கண்டிப்பு கலந்த வார்த்தைகளை கணவன் உச்சரித்தாலும் அதில் ஒரு ஈர்ப்புத் தன்மை இருக்கும். சில நேரங்களில் தாய்மை உணர்வை வெளிப்படுத்துவதற்காக அவள் புலம்பினாலும், கணவன் அவளை அதட்டி கட்டுப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த கட்டிடம் பழுதாகி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆண்டுகள் உருண்டோடி, தம்பதிகள் முதுமையாகி தளர்ந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்து வரும் இந்த வீடு பழமையானாலும் கம்பீரமாக நிற்கிறது. பொலிவுடன் தொன்மையான மரபின் அடையாளமாகத் திகழ்கிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஒரு பிரமாண்டத்தை அளிக்கிறது. மனிதருக்கு வீடும், உலகமும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. தனித்துவமாகவும் இருக்கிறது. சிலருக்கு வீட்டிற்கும், உலகிற்கும் பெரிய இடைவெளி உள்ளது. வீடு உங்களை எளிதாக அங்கீகரித்தாலும், உலகம் உங்களை எளிதில் அங்கீகரிக்காது. வீடும் அங்கீகரித்து, உலகமும் அங்கீகரித்து வாழும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை. உலகிலேயே வீடுதான் மனிதனுக்கு பாதுகாப்பானது. வீடு என்பது வெறும் சுவர்கள் அல்ல. அது வாழ்வின் அடையாளம். முதுமையை கழிப்பதற்கு பாதுகாப்பான இடம் வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்களது உடம்பு முதுமையாகி தளர்ந்து விட்டது. முதுமை அவர்களுக்கு சுமையாகிப் போனது. சிரமமும், வேதனையும் தாங்க முடியவில்லை. அவர்கள் தூசிக்குள்ளும், சிலந்தி வலைக்குள்ளும் அடைந்து கிடக்கிறார்கள். இருந்தும் தங்களைத் தாங்களே மென்மையாகப் பாதுகாத்துக்கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள். அண்மைக் காலமாக முதியவர் உடம்பு கூன் விழுந்து பலவீனமாகி, முதுமைக்கால தொந்தரவுகள் அதிகமாகி வருகிறது. கட்டிலில் இருந்து இறங்கக் கூட யாரேனும் கைத்தாங்க வேண்டிய காலத்தில் புரிகிறது அவளுக்கு நானும், எனக்கு அவளும்தான் கடவுள் என்பது. முதலில் பிறந்த மனிதன் பழையது ஆகிறான். பின்னால் பிறந்தவன் புதியவனாகிறான். ஆனால் ஒவ்வொருவரும் பழமையாகி, பயனற்றதாகி விடுகிறார்கள். இந்த முறையும் லீவுக்கு வரமுடியாதுன்னு தபால் வந்திருக்கு. ஒரு தடவையாவது அவன் வந்து பார்க்கக் கூடாதா என்று கிழவி கேட்டதற்கு, கிழவர் அமைதியாய் பதிலளித்தார். ஒருவன் பழையவர்களை அழைத்துச் செல்ல வருவான். யார் அவன்? அவன் புதியவற்றை வளரவிட்டு, பழமையாக்குபவன்;. நம்மை அழைத்துச் செல்ல எப்போது வேண்டுமானாலும் வரட்டும். அவள் நெற்றியைத் தடவிக்கொண்டே கூறினார். லௌகீக வாழ்வுக்கு தேவைப்படும் உதவி எங்கிருந்து கிடைக்கிறதோ அந்தப் பருப்பொருள்தான் கடவுள். ************* எழுதியவர் : ✍🏻 மாதா @ மே-பா மா.தங்கராசு சிஐடியு தேனி மாவட்ட கைத்தறி சங்க செயலாளர் 75- கிழக்குத் தெரு, சக்கம்பட்டி ஆண்டிபட்டி- அஞ்சல் 625512 தேனி- மாவட்டம் https://bookday.in/muthumai-tamil-short-story-written-by-matha/

’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்லுநர்’

1 month ago
சிறப்புக்கட்டுரைகள் ’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்லுநர்’ இரா. தமிழ்க்கனல் Published on: 21 Jun 2025, 2:30 pm Share நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்தப் பின்னணியில் யோகா முறையே தமிழர் மரபு நெறி என்கிற குரலும் வலுத்துவருகிறது. ஓகம் எனத் தமிழில் கூறப்பட்டதே யோகம் என வடமொழியில் திரிக்கப்பட்டுவிட்டது என்றும் சித்த மருத்துவம் ஆயுர்வேதம்போல மாற்றப்பட்டுவிட்டது என்கிற வாதமும் முன்னைவிட வலுவாக முன்வைக்கப்படுகிறது. தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பொழிலனின் ’ஓகம் பயில்வோம்’ எனும் புத்தகம், யோகா தமிழ் மரபு முறைதான் என அடித்துச்சொல்கிறது. பெரியார்கூட யோகா கற்றுக்கொண்டார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், இதைப் பற்றி மருத்துவக் கல்லூரிகள் போன்ற ஆய்வுமட்ட அளவில் துறைசார்ந்த வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்? கர்நாடக மாநிலம், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அருள் அமுதனிடம் பேசினோம். அந்த உரையாடலிலிருந்து... பேராசிரியர் சித்த மருத்துவர் அருள் அமுதன், மணிப்பால் பல்கலைக்கழகம் யோகாவை வடமொழிசார்ந்த- வடக்கத்திய ஒன்றாகவும் இன்னொரு பக்கம் தமிழர் சொத்தாகவும் வேறுவேறாகச் சொல்கிறார்களே? உடலுக்கு வெளியில் இறைவனைத் தேடுபவர்கள், ஒரு வகையினர். மனிதன் முற்பிறவியில் செய்த வினையை முன்னிட்டு பிறக்கிறான்; நோய், துன்பங்கள் வருவது முன்வினைப் பலன் என்பது கர்மா... வேதாந்தம். இப்படிக் கருத்துடைய ஒருவருக்கு, தன்னுடைய பிரச்னையைத் தீர்க்க வேறு வழியே இல்லை; பூசையோ யாகமோ சோதிடப்படி பரிகாரமோ செய்யவேண்டும். இதற்கு அறிவியல் தேவையே இல்லை. வேதாந்திகள் இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவருகிறார்கள். இன்னொரு பக்கம், மக்களுடைய கஷ்டங்களைப் பார்த்து, அவர்களின் நோய்களைத் தீர்க்க முடியும்; அறிவியல்பூர்வமாக எதையும் செய்யவேண்டும் என்று முயன்றவர்கள் சித்தாந்திகள். வேதாந்தம்- சித்தாந்தம் இரண்டும் நேர் மாறானவை. நம் நாட்டில் கௌதம புத்தர், மகாவீரர், கேரளத்தில் நாராயண குரு, தமிழ்நாட்டில் வள்ளலார்... இவர்கள் எல்லாரும் சித்தாந்திகள். வேதாந்தத்துக்கு எதிரானவர்கள்; மெய்ஞானம், விஞ்ஞானம், ஆன்மிகம் எனப் பேசியவர்கள். வேதாந்திகளுக்கு மதம்தான் எல்லாம். கடவுளை வெளியில் தேடினால் வியாபாரம்; உண்மையில் உனக்குள் கடவுளைத் தேடு என்கிறபடி சித்தர்கள் கண்டுபிடித்த வழிமுறைதான் யோகம். புத்த மதம், ஜைன மதம் யோகா தியானத்தைக் கற்பிக்கிறார்கள், செய்கிறார்கள். வேதாத்ரி மகரிஷியின் ’வாழ்க வளமுடன்’ வழியினரும், வள்ளலார் வழியினர் தியானம் செய்கிறார்கள். ஐயா வைகுந்தர் வழியில் ஒரு கண்ணாடி முன் தியானம் செய்யச் சொல்கிறார்கள். அதாவது கண்ணாடி முன்னால் நின்று பார்த்தால் நீதான் இறைவன். இவர்களை ஒரு குடையில் வைத்தால், கடவுளை உனக்குள்ளே தேடு என மனதுக்குள்ளே பயணம் (Inner Journey) செய்யச் சொல்கிறவர்கள், சித்தாந்திகள். இந்த சித்தாந்திகள் யோகாவில் எட்டு வகைப் படிநிலைகளைப் பயிற்சிசெய்து, கடைசியாக சமாதி நிலையை அடையும்போது அவர்களுக்கு எல்லையில்லா அதிசக்தி கிடைக்கிறது. பெரிய மேஜிக்கல் பவர் கிடைக்கிறது. அவர்களுக்குப் பெயர் அஷ்டமகா சித்திகள்... இவர்கள்தான் சித்தர்கள். வட இந்தியா, தென் இந்தியாவில் யோகிகள் எத்தனையோ பேர் இருந்தாலும் கடைசி நிலைக்குப் போய் சித்தர்கள் ஆவதில்லை. கடவுளை அடைய முயல்பவன் பக்தன்; அடைந்தவன் சித்தன். சமாதி என்றால் இறந்துவிடுவார்களா? இல்லை, உயிரோடுதான் இருப்பார்கள். அந்த நிலையில் அவர்களுக்கு அதிதீவிரமான சக்தி கிடைத்திருக்கும். தெளிவாக பிரச்னைக்குத் தீர்வைக் காண அவர்களால் முடியும். அந்த அளவுக்கு மனத் திட்பம் உருவாகியிருக்கும். சித்தர்கள் என்பவர்கள் ஒருபக்கம் மருந்துகளைச் செய்தாலும், காயகற்பம்- அதாவது காயம் என்றால் உடல், கற்பம் என்றால் உடலை கல்லைப் போல வலுவாக வைத்துக்கொள்வது; அதில் உள்ள ஒரு பயிற்சியான யோகாவை உருவாக்கினார்கள். இது முற்காலத்தில் துறவு வாழ்க்கைக்குப் போகிறவர்களுக்கான பயிற்சி, பொது மக்களுக்கானது அல்ல. அதனால்தான் இது எல்லாருக்கும் சொல்லித்தரப்படவில்லை. மரணமில்லாப் பெருவாழ்வு என வாழ முற்படுவோருக்கு, உடல், மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு சித்தர்கள் கண்டுபிடித்ததுதான் காயகற்பம். அதைப் பயிற்சிசெய்ய எண்ணம், சொல், செயல் தூய்மையாக இருக்கவேண்டும்; உணவுக் கட்டுப்பாடு உள்ளது. உன்னையே நீ அறி- நமக்குள்ளேயே பயணம்... தியானம்..அதுதான் யோகா. சரி. ஏராளமானவர்கள் இப்போது யோகா செய்கிறார்கள். முற்காலத்தில் இதன் பயன்பாடு குறைந்த அளவினரிடம் மட்டுமே இருந்ததாகச் சொல்கிறீர்கள். இப்படி என்றால், சித்த மருத்துவத்தின் அங்கமாக யோகா என்னதான் செய்தது? யோகம் நம்முடைய கலைதான்; உடல், உள்ளத்துக்கான ஒரு முறைதான். திருமூலரின் திருமந்திரத்தில் நிறைய பாடல்கள்... இதைப் பற்றி மட்டும் 300 பாடல்கள் இருக்கின்றன. திருமந்திரத்தில் ஒரு அதிகாரம் முழுவதுமே அட்டாங்க யோகம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. போகர் என்ற சித்தரின் நூலில் இருக்கிறது. அகத்தியரின் நூலில் இருக்கிறது. தமிழில் இயற்றப்பட்ட மூலநூல்களில் இருக்கிறது. யோகத்தின் தந்தை எனச் சொல்லப்படக்கூடிய பதஞ்சலி முனிவர், இராமேசுவரத்தில் யோகாவைக் கற்றுக்கொண்டு சமாதி நிலையை அடைந்ததாக நம்முடைய சித்த நூல்கள் சொல்கின்றன. திருமூலர், பதஞ்சலியும் தானும் உட்பட மொத்தம் எட்டு பேர் ஓர் ஆசிரியரிடம் யோகத்தைக் கற்றுக்கொண்டதாக திருமந்திரத்தில் எழுதியுள்ளார். தமிழர் ஆன்மிகத்தில் யோகம் இருக்கிறது. பதஞ்சலி தமிழிலிருந்து கற்றுக்கொண்டு போய் சமஸ்கிருதத்தில் எழுதிவைத்திருக்கிறார். கைகால் நோவு ஏற்படும்போது வர்ம சிகிச்சை அளித்தபிறகு, நோயாளிகளே தங்களின் வர்மப் புள்ளிகளைத் தூண்டிவிடும்வகையிலான வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிதான் இந்த ஆசனங்கள். சித்த மருத்துவர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சில நோயாளிகள் நீண்ட காலம் வாழவேண்டும் என விரும்பிக் கேட்கும்போது சிகிச்சையாக கற்றுத்தருவோம். ஆனால், காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை. எல்லாரையும் கூட்டத்தைக் கூட்டி சொல்லித்தரப்படவில்லை. உடலுக்கும் மனதுக்கும் தெம்பு வேண்டும் என்றால், பூசை, பரிகாரம் செய்ய வேண்டும் என வேதாந்திகள் சொல்லிக்கொண்டு இருந்தபோது, அதற்கு மாற்றாக சித்தர்கள் யோகாவைக் கண்டுபிடித்தார்கள். நியமம், இயமம், யோகம், பிராணயாமம் செய்தால் அவ்வளவு பயன்களும் கிடைக்கும் என்றார்கள். கிடைத்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் அல்லோபதி மருத்துவர். வெளிநாடுகளுக்கெல்லாம் போய்வந்தவர். அவர் யோகத்தை நன்கு அறிந்தவர். நோயாளிகளுக்குக் கற்றுத்தந்து இது நன்றாக இருக்கிறது என ஒரு சிகிச்சையாக மாற்றினார். இன்னொரு பக்கம், இந்த யோகாவை தமிழ்ச் சமூகத்தில் கடவுள் மறுப்பாளர்கள் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; தேவை இல்லை என தள்ளிநிற்கிறார்கள்... கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், பெரியாரியர்கள், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாரும் யோகா செய்யலாம். இவர்களுக்கு இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. எதிர்ப்பக்கம் வேதாந்திகள் இதைத் தவறாகச் சித்திரிக்கிறார்கள். உனக்கு நீதான் கடவுள்- அதை உணர்வதற்குத்தான் யோக மார்க்கம் என்கிறார்கள் சித்தர்கள். ஆனால் வேதாந்திகள் பூசை புனஸ்காரம் செய் என்கிறார்கள். அவர்களே யோகாவையும் வலியுறுத்துவதால் பகுத்தறிவாளர்கள் மதம்சார்ந்த ஒன்றாக ஒதுக்கிவைக்கிறார்கள். புற்றுநோய் வந்த ஒருவரிடம் மருத்துவர், இனி ஒரு மாதம்தான், நீ இறந்துவிடுவாய் எனச் சொல்லிவிட்டார். இனி குழந்தையே பிறக்காது என ஒருவரிடம் சொல்லிவிட்டார்... இவர்களுக்கெல்லாம் ஒரு ஆன்மிகப் பிடிப்பு வேண்டும் அல்லவா? இதற்கு யோகா உதவியாக இருக்கிறது. வேதாந்திகள் சொல்வதை வைத்து இவர்கள் புறக்கணிப்பதால், யோகம் கூடாது எனச் சொல்லிவிட முடியாது. உண்மையில் யோகத்தைக் கற்றுக்கொண்டு பரப்பவேண்டியது, கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்களின் பணி. அப்போதுதான் அறிவியல்பூர்வமாக பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பது நடக்கும். மருத்துவரீதியாக எல்லாவற்றையும் குணப்படுத்த முடியாதபோது, உளவியலாக பணமில்லாத மருத்துவ முறையாக யோகா பயன்படுகிறது! எத்தனையோ பேர் யோகா ஆசிரியர் என விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சரியான பயிற்சியாளரைக் கண்டறிவதே சவாலாக இருக்கிறது. சரியான முறையில் எப்படி இதைக் கற்றுக்கொள்வது? தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் யோகாவுக்கென தனித் துறைகள் உள்ளன. அங்கு யோகத்தைக் கற்றுக்கொள்ள முடியும். நோய் வரும்முன் காப்போம் என்பதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறமுறையில், அந்தக் கல்லூரிகளில் யோகத்தை முறையாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். சென்னை, நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், யோகா கல்லூரிகளில் இதற்கான வாய்ப்பு உண்டு. இதைத் தாண்டி நீங்களே யோகத்தை முறையாகக் கற்றுக்கொண்டு பயிற்சியாளர் ஆகவேண்டுமென்றால், விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையான படிப்புகள் உள்ளன. அப்படிக் கற்றுக்கொண்டவர்கள் தகுதியான ஆசிரியர்கள்தான். மேலும், வாழ்க வளமுடன், பாபாஜி கிரியா யோகா வழியினர் முதலியவர்கள் முறையான யோகப் பயிற்சியைத் தருகிறார்கள். எச்சரிக்கையாக இருக்கவேண்டியது, பணத்துக்காக இதைச் சொல்லித்தரும் கார்ப்பரேட் சாமியார்களிடம்தான். அவர்கள் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் சேர்த்து குழப்பியடிக்கிறார்கள்; அது தவறு. இந்த மாதிரியான இடங்களில்தான் யோகாவை வியாபாரம் ஆக்குவதைப் பார்க்கமுடியும். யோகாவை முறையாகக் கற்காமல், வீடியோவைப் பார்த்து சுயவைத்தியம்போல தானாகச் செய்துகொள்கிறார்கள். அதை அப்படியான பயிற்சி தருவோரும் ஊக்குவிக்கிறார்கள். அதனால் சிக்கல்களும் உண்டாகும் என்கிறார்களே... இப்படியான வீடியோக்களை விழிப்புணர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான். எப்போதும் யோகம் செய்யும்போது உடலில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும். தவறாகச் செய்தால் நிச்சயமாக சிக்கல் வரும். மூச்சுப் பயிற்சியைச் சரியாகச் செய்யாவிட்டால் ஆஸ்துமா, வயிற்றுப்புண் போன்றவை வருகின்றன. கூடுதலான நிலையில் உள்ள பயிற்சிகளில் சிக்கலாகிவிட்டால் மூலநோய் வரலாம். தவறாக யோகா செய்து மனநோய் வந்தவர்களைக்கூட பார்த்திருக்கிறேன். ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மூளையின் பல மையங்களைப் பட்டை தீட்டுவதுதான் யோகத்தின் நோக்கம். இதைத் தவறாகச் செய்தால் மூளையில் பாதிப்புகளை உண்டுபண்ணும். அரிதாக மோசமான பாதிப்புகளும்கூட ஏற்படும். எனவே, நேரடிப் பயிற்சிதான் சரியானதாக இருக்கும். கடைசியாக, நான் சொல்லவருவது, தமிழர்களின் கண்டுபிடிப்பாகிய சித்தர்களின் யோக முறையை இன்னும் ஆராய்ச்சிசெய்து பரப்பவேண்டியது தமிழர்களின் கடமை. Andhimazhai’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்ல...நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்த

சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்!

1 month ago
சீனாவில் தலைமை பொறுப்பை தீர்மானிப்பது, அதில் வரும் பிரகணைகளை தீர்ப்பது இப்படித்த்தான். முதல் 3 தடவை க்ஸி யும், அதுகு முதல் தலைமை பொறுப்பை ஏற்றவர்களும் பகிரங்க அரசாங்க / நிர்வாக தளத்தில் இருந்து விலத்துவது அவ்வப்போது இப்படி நடந்தது. க்ஸி ஊழலை இருப்பதில் முதல் குறி, எனவே க்ஸி உடன் மிகவும் நெருக்கமானவர்கள் என்றாலும், ஊழலை ஒழிக்கும் செயற்குழு நடவடிக்கையில் தலையிடுவதில்லை. (சிலவேளைகளில் அது பிரச்சனைகளை உருவாக்கி இருக்கலாம்) க்ஸி ஊழலை கடுமையாக எதிர்ப்பதன் ஒரு காரணம் , CIA ஊழலை பாவித்து க்ஸி இன் உப தலைமை பொறுப்பு இருந்தபோது, தலைமை பொறுப்பு பீடதில் என்ன நடக்கிறது, எந பேசப்படுகிறது, அலசப்படுகிறது என்பதை நேரடியாக, உடனடியாக உளவு அனுப்புவார்கள் (இவர்கள் அந்த இலாகா நிர்வாகத்தில் தொழில்) மூலம் உடனடியாக அறிந்து கொள்கிறது என்பது, ஈரானில் cia இன் உளவாளிகளோடு தொடர்பு கொள்ளும் முறையை இரான், சீனாவின் துறைசார் மமற்றும் தொழிநுட்ப தேவியை கொண்டு உடைத்தாததால் சீனாவுக்கு தெரியா வந்தது. அதை தொடர்ந்து, 2010 -2012 இல் பல cia உளவாளிகள் சீனாவில் தொடர்சியாக பிடிக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். சீன, ஒரு உதாரணம் காட்டுவதற்கு, அமெரிக்கா தூதரகதுக்கு சென்று விட்டு வெளியே வெளியே வந்த சீனப் பிரஷையானா cia உளவாளி ஒருவர் அந்த இடத்தில குரூரமாக கொல்லப்பட்டார். இது அமெரிக்காவுக்கு, cia க்கு கடும் செய்தியை கொடுப்பது என்ற குறியீடாக செய்யப்பட்டது. மற்றது,சீன மொழி அறிவித்தலை மேட்ற்கு ஊடகங்கள் மொழிபெயர்பதிலும், அவற்றின் சீனா நலிவடைய வேண்டும் என்ற வெளியில் சொல்லப்படாத நோக்கத்தாள் பிறழ்வது. ஆங்கிலத்தில் ஒருவர் சொல்லுவதை அல்லது கருத்தை எப்படி pour cold water on என்பதை பாவித்து நிராகரிப்பது போல, சீன மொழியில் ஏவுககனைகள் வேலை செய்யாது என்பதை சீன நிராரித்தது, என்பதே உண்மையான சீன மொழி செய்தி. ப்ளூம் பெர்க், அந்த செய்தியை, சீன ஏவுகணைகள் குளிர் தண்ணீரால் நிரப்பப்பட்டு இருக்கின்றன என்று மொழிபெயர்த்து கரிபூசிக்கொண்டது. இந்த செய்தி மேட்ற்கு ஊடகங்களில் வந்து, கிட்டத்தட்ட 1 மாதத்தில் சீன பசிபிக் சமுத்திரத்தில் ஏவுகணை குறிபார்த்து ஏவி அடிப்பது 1 மீட்டரறிலும் குறைவான வட்டத்துக்குள் ஏவுகணையாகில் துல்லியமாக இலக்கை அடிக்கும் என்பதை சோதனை செய்து காட்டியது. அனால், இது சிலவேளையில் முன்பே திட்டமிடப்பட்டு இருக்கலாம்.

குட்டிக் கதைகள்.

1 month ago
சண்டையில்லாத குடும்பம் எது ? ஆனால் குடும்ப கூடு மட்டும் கலையக் கூடாது .பெற்ற பிள்ளைகளுக்காக தியாகத்துடன் வாழ்ந்து மடிந்தவர்களேத் தனை பேர் சண்டை என்பது கருத்து வேறுபாடு சற்று நேர உணர்ச்சி கொந்தளிப்பு .
Checked
Sun, 08/10/2025 - 09:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed