புதிய பதிவுகள்2

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

3 weeks 4 days ago
இவர் தமிழ்நாட்டு மக்களை தான் ஏமாற்றுகின்றார் என்று பார்த்தால் ஈழ தமிழர்களையும் சேர்த்து ஒரு வழி பார்க்க வேண்டும் என்று தான் நிற்கின்றார்.

இனி அமெரிக்காவில் வேலை சாத்தியமற்றதா? - எச்1பி கட்டண உயர்வால் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு?

3 weeks 4 days ago
இனி அமெரிக்காவில் வேலை சாத்தியமற்றதா? - எச்1பி கட்டண உயர்வால் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,Getty Images அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை பணிக்கு எடுப்பதற்கான ஹெச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி, வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 19) அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 'பன்மடங்கு விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய மென்பொருள் நிறுவனங்களின் வருவாயில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்' என, தொழில்துறை அமைப்புகள் கூறுகின்றன. 'ஆண்டுதோறும் விசா கட்டணத்தை செலுத்த வேண்டும்' என்ற டிரம்பின் புதிய உத்தரவால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். டிரம்பின் உத்தரவால் இந்திய மென்பொருள் துறைக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பு ஏற்படும்? அமெரிக்காவில் பணிபுரிய வரும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1பி விசாவுக்கான கட்டணம் என்பது 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 88 லட்ச ரூபாய் என்பதால் தனியார் மென்பொருள் நிறுவனங்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர்களைக் கட்டணமாக வழங்குவதற்கு அனைத்துப் பெரிய நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். அமெரிக்கர்களுக்கான வேலையில் வெளிநாட்டவரை அழைத்து வருவதை நிறுத்துமாறு கூறிய லுட்னிக், "அமெரிக்காவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். "ஹெச்1பி விசா பெறும் விண்ணப்பதாரர்களுக்கு நிதி உதவி செய்யக்கூடிய நிறுவனங்கள், 1 லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்மூலம் அவர்கள் கொண்டு வரும் ஊழியர்கள், திறமையானவர்கள் என்பதை உறுதி செய்யப்படும்" என, அமெரிக்க அதிபர் மாளிகையின் பணியாளர் செயலாளர் வில் ஷார்ஃப் கூறியுள்ளார். மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா நடைமுறைகளில் ஒன்றாக ஹெச்1பி விசா உள்ளதாகவும் வில் ஷார்ஃப் தெரிவித்தார். அமெரிக்காவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக உள்ள துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு எடுக்கும் வகையில் ஹெச்1 பி விசா வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்பின் அறிவிப்பின் மூலம் பல்வேறு விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, தொழில்துறையினர் கூறுகின்றனர். 'குழப்பத்தை ஏற்படுத்திய அறிவிப்பு' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா நடைமுறைகளில் ஒன்றாக ஹெச்1பி விசா உள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. பிபிசி தமிழிடம் பேசிய இந்திய வர்த்தம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (FICCI) தமிழ்நாடு தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ராஜாராம், "ஆண்டுதோறும் சுமார் 70 சதவீத ஹெச்1பி விசாக்களை இந்தியர்கள் பெறுகின்றனர். இதில் அதிக விசாக்களை அமேசான் நிறுவனம் எடுக்கிறது. காக்னிசன்ட், டிசிஎஸ், கூகிள், மைக்ராசாஃப்ட், இன்ஃபோஸிஸ், மெட்டா, ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் ஹெச்1பி விசா மூலம் ஆட்களைத் தேர்வு செய்கின்றன" என்கிறார். "ஹெச்1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். அந்தவகையில், மொத்தமாக ஆறு ஆண்டுகளுக்கு விசா வழங்கப்படுகிறது." எனக் கூறுகிறார், ராஜாராம். தற்போது ஆண்டுக்கு 100 ஆயிரம் டாலர்களை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். எந்ததெந்த வகைகளில் பாதிப்பு? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'இந்திய மென்பொருள் நிறுவனங்கள், ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் ஹெச்1 பி விசாக்கள் மூலம் ஆட்களை அனுப்புகின்றன.' "இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பு ஏற்படும்?" என ராஜாராமிடம் பிபிசி தமிழ் கேட்டது. அவர், "இந்திய மென்பொருள் நிறுவனங்கள், ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் ஹெச்1 பி விசாக்கள் மூலம் ஆட்களை அனுப்புகின்றன. இந்த ஊழியர்கள் அமெரிக்கா செல்வதால், வாடிக்கையாளரிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்க முடியும்" என்கிறார். "அமெரிக்காவில் இருந்து சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள புராஜக்ட்களை இந்திய நிறுவனங்கள் கையாள்வதாக இருந்தால் சுமார் 15 சதவீத ஊழியர்களை ஆன்சைட் பணியாக அமெரிக்காவுக்கு அனுப்புகின்றனர். இனி தனி நபருக்கு 100 ஆயிரம் டாலர்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கும்" எனவும் ராஜாராம் கூறுகிறார். "இதன் காரணமாக, மென்பொருள் நிறுவனங்களின் லாபம் என்பது பல மடங்கு குறைந்துவிடும். இது சவாலானதாக இருக்கும்" எனவும் ராஜாராம் குறிப்பிட்டார். விசா கட்டுப்பாடுகளால் இந்திய நிறுவனங்களின் லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் பங்குச் சந்தையில் வரும் நாட்களில் இதன் பாதிப்பு தெரியவரும் எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். 'அமெரிக்காவுக்கும் சிக்கல்' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புதிய விசா நடைமுறையின் மூலம் முதல்முறையாக பணிக்குச் செல்கிறவர்கள் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். "புதிய நடைமுறையால் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மென்பொருள் துறையில் அமெரிக்கர்களின் சம்பளம் என்பது இந்தியர்களைவிட பத்து மடங்கு அதிகமாக உள்ளது. அதனால் தான் வெளிநாட்டினரை அதிகளவில் பணிக்கு எடுக்கின்றனர்" எனக் கூறுகிறார், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக (Chief scientist) பணியாற்றி ஓய்வுபெற்ற சுகி வெங்கட். புதிய விசா நடைமுறையின் மூலம் முதல்முறையாக பணிக்குச் செல்கிறவர்கள், குறைவான அனுபவம் உள்ளவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்வதற்கான வாய்ப்புகளே இல்லை எனக் கூறுகிறார், ராஜாராம். "குறைவான அனுபவம் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரம் டாலர் வரை சம்பளமாக இந்திய நிறுவனங்கள் தருகின்றன. இவர்களுக்கு ஆண்டுக்கு 100 ஆயிரம் டாலர்களை விசா கட்டணமாக செலுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. சம்பளத்தை விடவும் விசா கட்டணம் அதிகமாக உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார். 'தென்னிந்தியாவுக்கு அதிக பாதிப்பு' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2022 அக்டோபர் முதல் செப்டம்பர் 2023 வரையிலான கால கட்டத்தில் ஹெச்1பி விசா பெற்றவர்களில் 72.3 சதவீதம் பேர் இந்தியர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் பட்டியலிட்ட ராஜாராம், "பெங்களூரு, ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் அதிக மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து சுமார் 30 முதல் 35 சதவீதம் பேர் அமெரிக்கா செல்கின்றனர்" என்கிறார். அமெரிக்காவுக்கு ஹெச்1பி விசா மூலம் செல்லும் இந்தியர்கள் குறித்த தரவுகளை கடந்த பிப்ரவரி 6 அன்று மாநிலங்களவையில் இந்திய அரசு தெரிவித்தது. அதன்படி, 2022 அக்டோபர் முதல் செப்டம்பர் 2023 வரையிலான கால கட்டத்தில் ஹெச்1பி விசா பெற்றவர்களில் 72.3 சதவீதம் இந்தியர்கள். இதனை அமெரிக்க அரசின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் வழங்கியுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்திய அரசு தெரிவித்தது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்படும் எனக் கூறுகிறார், ராஜாராம். 'பணத்தைக் கட்டும் வாய்ப்புகள் குறைவு' அமெரிக்க அரசின் புதிய அறிவிப்புக்கு முன்னதாக ஹெச்1பி விசா பெற்றவர்களை 21ஆம் தேதி இரவுக்குள் வருமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. "அவ்வாறு அமெரிக்கா செல்லாவிட்டால் விசா ரத்தாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரிரு நாட்களில் அமெரிக்கா செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" எனக் கூறுகிறார் சுகி வெங்கட். "விசா ரத்து செய்யப்பட்டுவிட்டால் மீண்டும் அதனைப் பெறுவதற்கு 100 ஆயிரம் டாலர்களைக் கட்ட வேண்டும். இவ்வளவு பணத்தை யாரும் கட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு" எனக் கூறும் சுகி வெங்கட், "ஆண்டுதோறும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் ஏற்கெனவே பணி செய்கிறவர்களை இந்தியா வருமாறு அழைக்கலாம்" எனவும் அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு கொடுக்கும் உற்பத்தி காரணமாக இப்படியொரு முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளதாகக் கூறும் ராஜாராம், "இந்தியாவில் இதுதொடர்பான நிறுவனங்களை அதிகளவில் உருவாக்கலாம். அதற்கான மிகப்பெரிய வாய்ப்பாகவும் இருக்கும்" என்கிறார். "மனிதாபிமான விளைவுகள் ஏற்படலாம்" அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து இந்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க H1B விசா திட்டத்தில் முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை இந்திய அரசு பார்த்தது. இந்த நடவடிக்கையின் முழு தாக்கங்களையும் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியா மற்றும் அமெரிக்கா என இருநாடுகளின் தொழில்துறைகளும், புதுமை மற்றும் படைப்பாற்றலில் பங்கு வகிக்கின்றன. சிறந்த பாதையில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறன்சார் தொழிலாளர் பரிமாற்றங்கள் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, பொருளாதார வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் செல்வத்தை உருவாக்க மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளன. எனவே பரஸ்பர நன்மைகளை கணக்கில் கொண்டு கொள்கை வகுப்பாளர்கள் சமீபத்திய நடவடிக்கைகளை மதிப்பிடுவார்கள். இந்த நடவடிக்கை குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் இடையூறு மூலம் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த இடையூறுகளை அமெரிக்க அதிகாரிகளால் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்ய முடியும் என இந்திய அரசு நம்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க H1B விசா திட்டத்தில் முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் கண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் முழு தாக்கங்களையும் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆய்வு செய்து வருகின்றனர், இதில் இந்திய தொழில்துறையும் அடங்கும், இது ஏற்கனவே H1B திட்டம் தொடர்பான சில கருத்துக்களை தெளிவுபடுத்தும் ஆரம்ப பகுப்பாய்வை வெளியிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு BBC News தமிழ்இனி அமெரிக்காவில் வேலை சாத்தியமற்றதா? - H1B கட்டண உயர்வ...அமெரிக்காவில் பணிபுரிய வரும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1 பி விசாவுக்கான கட்டணம் என்பது 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. டிரம்பின் உத்தரவால் இந்திய மென்பொருள் துறைக்கு எந்தெந்த வகைகளில் பாத

ஒரு பயணமும் சில கதைகளும்

3 weeks 4 days ago
யசோதரன் எங்களுக்குப் படம் காட்டப்போகின்றார் என பெரிதாக இந்தக் கதையை வாசிக்காமல் சென்று விட்டேன் இப்போது அப்படி என்ன தான் எழுதுகின்றார் என் ஒரு எட்டு எட்டிப் பார்க்கலாம் என்று வந்தால் ..... மிகுதிக் கதை எப்போது வரும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன் கதையும்..... கதையுடன் சேர்ந்து வரும் செய்திகளும்.... சம்பவங்களும்...... நன்றாக இருக்கின்றது என்பதை விட...... மிகுதி இப்போது வரும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கின்றது தொடருங்கள்

சிந்தனைக்கு சில படங்கள்...

3 weeks 4 days ago
தனது குடும்பம் முழுவதும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிர் தப்பிப்பிழைத்த காசாவின் பிஞ்சொன்று இடம் பெயர்வின் போது சோர்வடைந்து மணலில் தூங்குகிறது.☹️😭

அமெரிக்க படையினர் இஸ்ரேலுக்கான ஆயுத விமானங்களை பறக்க மறுத்ததால் கைது –நீக்கப்படுவதற்கு முன் வீடியோவைப் பாருங்கள்!"

3 weeks 4 days ago
இந்த தளம் பாதுகாப்பானதா என முதலில் சொல்லுங்கள். இணைப்பை சொடுக்குவதால் பின்விளைவு ஒன்றும் இல்லைத்தானே. மேல் படத்தில் உள்ளவரை பார்த்தால் கிட்டார் அடிப்பவர் போல தோன்றுகின்றது. பிளேனும் ஓடுகின்றாரோ?

சர்க்கரையை 10 நாள் அறவே தவிர்த்தால் உடலில் என்ன மாற்றம் நிகழும்?

3 weeks 4 days ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2025, 01:53 GMT இந்தியாவின் நகர்ப்புற குடும்பங்களில் 56% பேர் கேக், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை மாதத்திற்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை உட்கொள்கிறார்கள், இதில் 18% பேர் தினமும் அவற்றை உட்கொள்கிறார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஆய்வில் பங்கேற்ற கணிசமானோர் (55%) இனிப்புகளைத் தவிர்க்க முடியாது என்றும் ஆனால் அதில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கவேண்டுமென விரும்புவதாகவும் கூறியுள்ளனர். இப்போதெல்லாம், எந்த உணவுப் பொருளை எடுத்தாலும் அதில் எவ்வளவு சர்க்கரை அளவு உள்ளது என தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கிறோம். 'அதிக சர்க்கரை' உடலுக்கு கேடு என்பதை பலரும் உணரத் தொடங்கியுள்ளனர். வெள்ளை சர்க்கரை சிறந்ததா அல்லது நாட்டுச் சர்க்கரை சிறந்ததா என்பதைக் கடந்து, அனைத்து வகையான சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களையும் குறிப்பிட்ட நாட்களுக்கு தவிர்ப்பதே சர்க்கரையை தவிர்க்கும் சவால் (Sugar cut challenge) ஆகும். 'சர்க்கரையை 10 நாட்கள் தவிர்த்ததால் முகம் பொலிவு பெறுகிறது', 'எடை குறைந்துவிட்டது' என இணையத்தில் பலரும் இதுகுறித்து பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது. இந்த 'சர்க்கரையை முழுமையாகத் தவிர்ப்பது' குறித்த 6 கேள்வி- பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். நாம் ஏன் சர்க்கரையை குறைக்க அல்லது தவிர்க்க வேண்டும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சேர்க்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது தான் ஆபத்து என பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இந்தக் கேள்விக்கான விடையை தெரிந்துகொள்ளும் முன், இருவகையான சர்க்கரைகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். முதலில், சேர்க்கப்பட்ட சர்க்கரை (Added sugars) என்பது உணவுகள் அல்லது பானங்கள் தயாரிக்கப்படும் போது அல்லது பதப்படுத்தப்படும் போது சேர்க்கப்படும் எந்த வகையான சர்க்கரை அல்லது இனிப்பூட்டியையும் குறிக்கிறது. வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, தேன், வெல்லம், கருப்பட்டி, அதன் மூலம் செய்யப்படும் பிஸ்கட், கேக், குளிர்பானங்கள் என அனைத்தும் இந்த வகையில் வரும். இதில் தேன் போன்றவை இயற்கையாக உருவானாலும் கூட, அவை சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் தான். இந்த சேர்க்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது தான் ஆபத்து என பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மற்றொன்று, பால், பழங்கள் மற்றும் காய்கறிகளில் இயற்கையாகக் காணப்படும் சர்க்கரை. 'இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் 101 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023ஆம் ஆண்டில், 'லான்செட்' வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, இந்தியாவில் 101 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், கோவா (26.4%), புதுச்சேரி (26.3%) மற்றும் கேரளா (25.5%) ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோய் அதிகமாக உள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. "நீரிழிவு நோய் மட்டுமல்ல, சேர்க்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது என்பது பல வழிகளில் மனித உடலுக்கு ஆபத்தானது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் சிந்தியா தினேஷ். டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன் (குறிப்பாக இடுப்பைச் சுற்றி), ஆல்கஹால் அல்லாத ஃபேட்டி லிவர் நோய், இதய நோய், பற் சொத்தை போன்ற பல விளைவுகள் இதனால் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கிறார். 2. நம் உடலுக்கு உண்மையில் சர்க்கரை தேவையா? "நம் உடலுக்கு குளுக்கோஸ் எனப்படும் ஒரு வகை சர்க்கரை நிச்சயம் தேவைப்படுகிறது. குளுக்கோஸ் என்பது மூளையின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமாகும். இது முழு உடலுக்கும் ஒரு முக்கிய ஆற்றல் மூலமாகும்" என அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes of Health) தெரிவிக்கிறது. 'ஆனால் உங்கள் உணவில் குளுக்கோஸை தனியாக சேர்க்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் உங்கள் உடல் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் போன்ற உணவு மூலக்கூறுகளை உடைப்பதன் மூலம் அதற்குத் தேவையான குளுக்கோஸை பெற்றுக் கொள்ளும்' என்றும் அந்நிறுவனம் கூறுகிறது. 3. பழங்களில் இருக்கும் சர்க்கரையையும் தவிர்க்க வேண்டுமா? பட மூலாதாரம், Getty Images "பழங்கள் மற்றும் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் உள்ள அனைத்து உணவுகளிலும் சர்க்கரை என்பது இயற்கையாகவே காணப்படுகிறது. இயற்கை சர்க்கரை உள்ள முழு உணவுகளை உட்கொள்வது ஆபத்தில்லை" என ஹார்வர்ட் மருத்துவப்பள்ளியின் கட்டுரை ஒன்று கூறுகிறது. மேலும், "தாவர உணவுகளிலும் அதிக அளவு நார்ச்சத்து, அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. பால் உணவுகளில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளன." "மனித உடல் இந்த உணவுகளை மெதுவாக ஜீரணிப்பதால், அவற்றில் உள்ள சர்க்கரை நமது செல்களுக்கு நிலையான ஆற்றலை வழங்குகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு, இதய நோய் மற்றும் சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது." என்றும் அந்தக் கட்டுரை கூறுகிறது. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடும்போது, இயற்கை சர்க்கரைகளுடன் சேர்த்து நிறைய ஊட்டச்சத்துகளையும் நார்ச்சத்தையும் பெறுகிறீர்கள். 4. சர்க்கரையை தவிர்க்கத் தொடங்கிய முதல் சில நாட்களில் என்ன நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை தவிர்ப்பது என்பது பெரும்பாலானோருக்கு சிரமமான ஒன்றாக இருக்காது' "சேர்க்கப்பட்ட சர்க்கரையைக் குறைப்பது பல வெளிப்படையான நன்மைகளை அளிக்கிறது. உதாரணத்திற்கு, பற்களின் ஆரோக்கியம் மேம்படுவது மற்றும் கலோரி நுகர்வு குறைவதால் உடல் எடை குறைவது போன்றவை. ஆனால் தொடக்கத்தில் சேர்க்கப்பட்ட சர்க்கரையை தவிர்க்கும்போது, சிலருக்கு தலைவலி, சோர்வு அல்லது மனநிலை மாற்றங்கள் போன்ற சில அறிகுறிகள் தென்படலாம்" என்று கூறுகிறார் மருத்துவர் சிந்தியா. அதே சமயம், "அத்தகைய விளைவுகள் சிலருக்கு வர காரணம் அவர்கள் அதற்கு முன் அதிக சர்க்கரையை உணவில் சேர்த்திருப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு கப் காபியில் 4 முதல் 6 ஸ்பூன் வெள்ளைச் சர்க்கரையை சேர்ப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இத்தகைய சிக்கல்கள் ஏற்படலாம். மற்றபடி, சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை தவிர்ப்பது என்பது பெரும்பாலானோருக்கு சிரமமான ஒன்றாக இருக்காது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். 5. உடலில் எவ்வளவு விரைவாக நன்மைகளை உணரலாம்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பதால், 5 முதல் 6 நாட்களில் நம் செரிமான அமைப்பின் ஆரோக்கியம் மேம்படும்' அமெரிக்காவில் உடல் பருமன் கொண்ட குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் (2015), 10 நாட்களுக்கு சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் அறவே தவிர்ப்பது, உடல் எடையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, கொழுப்பு மற்றும் ரத்த அழுத்த அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டது. "சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பதால், 5 முதல் 6 நாட்களில் நம் செரிமான அமைப்பின் ஆரோக்கியம் மேம்படும். 7 முதல் 8 நாட்களில், மனநிலையில் நல்ல மாற்றங்கள் வரும். 9 முதல் 10 நாட்களில் சருமம் பொலிவடையத் தொடங்கும்." என்கிறார் மருத்துவர் சிந்தியா. அதுவே நீரிழிவு நோயாளிகளுக்கு 3 முதல் 5 நாட்களிலேயே ரத்த சர்க்கரை அளவுகளில் நல்ல மாற்றங்கள் இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். "உடல் எடையில் மாற்றங்கள் தெரிய குறைந்தது ஒரு மாதமாவது சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். அதனுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவு முறையும் இருக்க வேண்டும். ஆனால், அதை உணவியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையுடன் பின்பற்றுவது சிறந்தது" என்று கூறுகிறார் சிந்தியா. 6. தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. "ஒரு நாளைக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகளில், இந்த சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் என்பதன் அளவு 10% மேல் இருக்கக்கூடாது. அதை இன்னும் 5% என குறைப்பது கூடுதல் நன்மைகளை அளிக்கும்" என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (National Health service) பின்வருமாறு பரிந்துரைக்கிறது, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. 7 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 24 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 19 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. 2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 14 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது. "ஆரோக்கியமான அளவு என்பது 25 கிராம் சேர்க்கப்பட்ட சர்க்கரை, அதாவது 6 ஸ்பூன் சர்க்கரை. இதுமட்டுமின்றி, சேர்க்கப்பட்ட சர்க்கரை கலந்த பிஸ்கட், கேக், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்." என்கிறார் சிந்தியா தினேஷ். அதிலும், நீரிழிவு நோயாளிகள் சேர்க்கப்பட்ட சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்று கூறும் சிந்தியா, "ஆப்பிள், கொய்யாக்காய், பால், கேரட் போன்றவற்றை அவர்கள் குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளலாம், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்" என்கிறார். "சேர்க்கப்பட்ட சர்க்கரையைக் குறைப்பது அல்லது தவிர்ப்பதை 10 நாட்கள் அல்லது 30 நாட்கள் என ஒரு இணைய ட்ரெண்டிற்காக பின்பற்றாமல், அதை வாழ்க்கை முழுக்க பின்பற்றுவதே சிறந்த முறையாக இருக்கும்." என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp8jzjm82k7o

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

3 weeks 4 days ago
20 Sep, 2025 | 06:14 PM தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என வலியுறுத்திப் பேசினார். கடலில் மீன்பிடிக்கும் போது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழக மீனவர்களுக்காகக் குரல் கொடுப்பது அவசியம் என்று குறிப்பிட்ட விஜய், "மீனவர்களின் உயிர்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்" என்றார். இலங்கை உட்பட உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஈழத்தமிழர்கள் "தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும்" நிலையில், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும், துணை நிற்பதும் நமது கடமை அல்லவா என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்த உரை, தமிழக அரசியல் மற்றும் சமூக அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/225604

திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

3 weeks 4 days ago
திலீபன் நினைவு ஊர்தி முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டது 20 Sep, 2025 | 05:40 PM தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நினைவு ஊர்திப் பயணமானது வெள்ளிக்கிழமை (19) இரவு வவுனியாவை அடைந்தது. இந்நிலையில் சனிக்கிழமை (20) காலை வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியடியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். இதைவேளை குறித்த ஊர்தி பவனியானது இன்றையதினம் முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டுச்சென்றது. https://www.virakesari.lk/article/225599

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

3 weeks 4 days ago
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் கோட்டாபய ராஜபக்ஷ 20 Sep, 2025 | 11:42 AM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார். தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்ததையடுத்து மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக பல அரசியல்வாதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கால்டன் இல்லத்திற்கு சென்றிருந்தனர். இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் ஒன்றுதிரண்டு கார்ல்டன் இல்லத்திற்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து அவரை வாழ்த்தி தங்களது அன்பை வெளிப்பிடுத்தியிருந்தனர். https://www.virakesari.lk/article/225572

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

3 weeks 4 days ago
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட் 05 மீனவர்களையும தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு Published By: Vishnu 20 Sep, 2025 | 02:47 AM இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் வெள்ளிக்கிழமை [19] வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். கடந்த ஜூன் மாதம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்திய இழுவைப் படகுகளையும் ஒன்றையும் அதிலிருந்து 5 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் குறித்த மீனவர்களையும்,இலுவைப் படகுகளையும் கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் வெள்ளிக்கிழமை (19) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 5 மீனவர்களையும் இம் மாதம் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/225556

விருது கேட்க போன எடப்பாடி பழனிசாமி ஏன் முகத்தை மூடிக்கொண்டு வரணும்?”- சீமான் அட்டாக்!

3 weeks 4 days ago
தமிழ்நாட்டில் வெகு சில அரசியல் தலைவர்களுக்கே நீங்கள் சொல்லியிருக்கும் பேதங்கள் கடந்த ஆதரவு உள்ளது. இந்த தலைவர்கள் ஒரு அடையாளத்துக்குள் உட்படாதவர்கள். விஜய்யும் அவர்களில் ஒருவர் என்று நீங்கள் சொல்லியிருப்பது சரியே. விஜய்யிற்கு நல்லவர் என்ற பிம்பமும் உள்ளது. ஆனால் தமிழக மக்கள் தலைவர்கள் கொஞ்சம் அப்படி இப்படி என்றாலும் ஏற்றுக் கொள்வார்கள், அவர்களுக்கு பிடித்து இருந்தால். உதாரணமாக, திரிஷாவுடன் உண்மையிலேயே ஏதாவது தொடர்புகள் இருந்தால் கூட..................🤣. ஜெயலலிதா மிகக் குறுகிய காலத்தில் மக்கள் மனதில் உண்டாக்கிய மாற்றம் ஆச்சரியமானது. அவர் இருக்கும் போது அவரின் மீது சில விமர்சனங்கள் எனக்கு இருந்தன. இப்பொழுது அவர் இல்லாத போது, அவர் இப்பவும் இருந்திருக்கலாமே என்று தோன்றுகின்றது..................😔.

ஒரு பயணமும் சில கதைகளும்

3 weeks 4 days ago
இது தொடர்பாக ஒன்றையும் ஓரளவு விபரங்களுடன் எழுதலாம் என்று இருக்கின்றேன், அண்ணா. அதனாலேயே சில விபரங்களை இப்பொழுது தவிர்த்திருக்கின்றேன். அங்கு குடியேறிய, குடியேறிக் கொண்டிருக்கும் மக்களிடையே இருக்கும் நம்பிக்கையின்மைகளை, சந்தேகங்களை என் பார்வையில் எழுதலாம் என்று நினைத்துள்ளேன். அவுஸ்திரேலியாவில் மட்டுமே தான் இது காணப்படுகின்றது என்றில்லை. எல்லா மேற்கு நாடுகளிலும் புலம் பெயர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே இந்தப் போக்கு உள்ளது. அமெரிக்காவில் அதிகமாகவே உள்ளது.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 weeks 4 days ago
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : { என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது } (2) பெண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் ஆண் : நான் தர சிற்பம் உன்னோட வெப்பம் நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச பெண் : என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் ஆண் : என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி பெண் : ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் ஆண் : மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச பெண் : எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன் ஆண் : நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச பெண் : நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன் ஆண் : நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா பெண் : கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன் ஆண் : { சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் } (2) பெண் : குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் .......! --- என்ன நினைச்சே என்ன நினைச்சே ---
Checked
Thu, 10/16/2025 - 09:26
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed