புதிய பதிவுகள்2

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

1 month ago
பாரைக் கருவாடு "வாசம்" வீசாதா? முழு சாப் பாட்டுச் சாமான்களையும் கட்டிக் கொண்டு வந்து விட் டீர்கள்.( எக்ஸ்ட்ரா லக்கேஜை )😃

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

1 month ago
https://www.vikatan.com/government-and-politics/governance/special-story-about-tiruppuvanam-ajithkumar-lockup-death31 கொடூரங்கள்! - முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை! எஸ்.மகேஷ்ந.பொன்குமரகுருபரன் 7 Min Read “கடந்த நான்கு ஆண்டுகளில், 31 காவல் மரணங்கள் நடந்திருக்கின்றன. 2021-ம் ஆண்டில் 4 பேரும், 2022-ம் ஆண்டில் 11 பேரும், 2023-ல் ஒருவரும், 2024-ல் 10 பேரும், 2025-ம் ஆண்டில் இதுவரை 5 பேர் என மொத்தம் 31 பேர் காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் உயிரிழந்திருக்கிறார்கள். Published:Today at 1 AMUpdated:Today at 1 AM ஸ்டாலின் Join Our Channel 67Comments Share 31 கொடூரங்கள்! - முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை! Listen to Vikatan stories on our AI-assisted audio player “உடலில் ஒரு இடம்கூட விடாமல் அடித்திருக்கின்றனர். வாயில் மிளகாய்ப்பொடி தூவியிருக்கின்றனர். வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர். ஒருவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இந்த அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியிருக்க மாட்டார்கள். காயங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. மாநில அரசே, தன் குடிமகனைக் கொலைசெய்திருக்கிறது...” - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சமீபத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கில், ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள்தான் இவை! போலீஸ் அத்துமீறல்களால், வன்முறைகளால் மரணங்கள் ஏற்படுவது இது முதன்முறையல்ல. அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடிவரும் எதிர்க்கட்சிகள், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன. ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களிலோ, 31 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. ‘யாருக்கும் கட்டுப்படாத காவலர்கள், ஒழுங்கீனம் பெருகிப்போன காவல்துறைக் கட்டமைப்பு, அடியாட்களாக மாறிப்போன தனிப்படை, அவர்களைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத உயரதிகாரிகள்’ எனக் காவல்துறை மீது தொடர்ந்து பொதுமக்களால், மனித உரிமை அமைப்புகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வளவு நடந்தும், காவல்துறையில் எந்த மாற்றமும் நிகழாதிருப்பதால், ‘தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா..?’ என்கிற சந்தேகக் கேள்வியை எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், மனித உரிமை ஆர்வலர்களும். அஜித்குமாரின் மரணத்தில் என்ன நடந்தது... காவல் மரணங்கள் ஏன் தொடர்ந்து நிகழ்கின்றன... காவல்துறையைக் கட்டுப்படுத்த ஏன் தவறுகிறார் முதல்வர்..? இந்தக் கேள்விகளுக்கு விடைதேடிக் களமிறங்கினோம். அஜித்குமார் “நான் திருடவே இல்லை சார்..!” சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில், தற்காலிகக் காவல் ஊழியராகப் பணிபுரிந்துவந்தவர் அஜித்குமார். கடந்த ஜூன் 27-ம் தேதி, கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண், காரில் வைத்திருந்த தன் அம்மா சிவகாமியின் ஒன்பதரை பவுன் நகைகளையும் 2,600 ரூபாய் பணத்தையும் காணவில்லை’ என்றும், காரின் சாவியை அஜித்குமாரிடம்தான் கொடுத்ததாகவும்’ திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தச் சமயத்தில் நகையைப் பறிகொடுத்ததற்கு வெறும் சி.எஸ்.ஆர் மட்டுமே போடப்பட்டிருந்தது. எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை. அடுத்த ஒரு சில மணி நேரத்தில் நடந்ததுதான், ஒரு பெரும் கொடூரத்துக்கே தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கிறது. மடப்புரம் சுற்றுவட்டாரப் பொதுமக்களும், மனசாட்சியுள்ள காவலர்கள் சிலரும் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளைக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார்கள். “தான் எதிர்பார்த்ததுபோல தன் புகார்மீது திருப்புவனம் காவல்துறையினர் ‘அதிரடியாக’ எதுவும் செய்யவில்லை என்றதும், யாரோ ஒரு சீனியர் அதிகாரிக்கு போனில் தகவல் தெரிவித்திருக்கிறார் நிகிதா. அந்த சீனியர் அதிகாரி கொடுத்த உத்தரவில் வியர்த்துப்போன மானாமதுரை டி.எஸ்.பி-யாக இருந்த சண்முகசுந்தரம், உடனடியாகத் தன்னுடைய தனிப்படை போலீஸாரை விசாரணைக்கு அனுப்பியிருக்கிறார். தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் விடுப்பு என்பதால், ஏட்டு கண்ணன் தலைமையில் காவலர்கள் பிரபு, ராஜா, சங்கர மணிகண்டன், ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேரும் ஜூன் 27-ம் தேதி, இரவு 8:30 மணிக்கே அஜித்குமாரிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். விசாரணை என்றால், வாயால் அல்ல. ஒரு தோப்புக்கு அஜித்குமாரை அழைத்துச் சென்ற தனிப்படை, அவரை அடித்து உதைத்திருக்கிறது. திருடிய நகையை ஒப்படைக்கச் சொல்லி கொடுமைப்படுத்தியிருக்கிறது. ‘நான் திருடவே இல்லை சார்...’ என அஜித்குமார் எவ்வளவோ கதறியும் விடாத காவலர்கள், அன்றைய தினம் அவரோடு தொடர்பிலிருந்த தினகரன், அருண், லோகேஸ்வரன் எனப் பலரையும் தூக்கிக்கொண்டு வந்து கண்டபடி அடித்திருக்கிறார்கள். அஜித்குமாரின் வீட்டை எந்தவித வாரன்ட்டும் இல்லாமல் சோதனை செய்தவர்கள், அவருடைய தம்பி நவீன்குமாரையும் அழைத்துவந்து அடித்திருக்கிறார்கள். ஒரு விடுதிக்குப் பின்புறம், பேருந்து டெப்போவுக்கு அருகில், ஆற்றோரமிருக்கும் ஒத்தையடிப் பாதையில் எனப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்திருக்கிறது தனிப்படை. அதற்குள் விடிந்துவிட்டது. அஜித்குமார் மீது தாக்குதல் அடித்தே கொல்லப்பட்ட அஜித்குமார்... தாண்டவமாடிய ‘சைக்கோ’ தனிப்படை! பல மணி நேரம் அடித்தும், யாருக்குமே நகை பற்றிய தகவல் தெரியவில்லை என்றதும், காவலர்கள் ‘சைக்கோ’போல மாறத் தொடங்கியிருக்கிறார்கள். மற்றவர்களை அனுப்பிவிட்டு, அஜித்குமாரிடம் மட்டும் தொடர்ந்து விசாரித்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் காவலர்களின் அடியைத் தாங்கிக்கொள்ள முடியாத அஜித்குமார், ‘மடப்புரம் காளி கோயிலுக்குப் பின்புறம் இருக்குற மாட்டுக் கொட்டகையில நகை இருக்கு சார்...’ என்றிருக்கிறார். கோயிலுக்கு அருகில் சென்றுவிட்டால், ஊர் மக்கள் எப்படியும் தன்னைக் காப்பாற்றிவிடுவார்கள் என நம்பி அப்படிச் சொல்லியிருக்கிறார். ஆனால், அங்கு வந்து தேடியவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றதும் ஆத்திரமாகி, பி.வி.சி பைப்பை எடுத்து அஜித்குமாரைச் சகட்டுமேனிக்குத் தாக்கியிருக்கிறார்கள். அஜித்குமார் அழுது புரண்டும் ‘சைக்கோ’ காவலர்கள் அவரை விடவில்லை. அஜித்குமாரின் அலறல் சத்தம், சுற்றியிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் பலரையும் குலைநடுங்கச் செய்திருக்கிறது. எட்டிப்பார்க்கப் போனவர்களையும் மிரட்டி விரட்டியிருக்கிறது தனிப்படை. தண்ணீர் கேட்ட அஜித்குமாருக்கு, மிளகாய்ப்பொடியை வாயில் போட்டு தண்ணீரை ஊற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து தனிப்படை காட்டிய மிருகத்தனத்தால், மாலை 6 மணிக்கு மேல் நிலைகுலைந்துபோன அஜித்குமார், மாட்டுக் கொட்டகையிலேயே சரிந்து விழுந்திருக்கிறார். சிறுநீருடன் ரத்தமும் மலமும் வெளியேறி யிருக்கின்றன. அப்போதுதான் அடிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள். திடீரென நிசப்தமானவுடன், ஓடிப்போன பொதுமக்கள் அஜித்குமாரை ஆட்டோவில் தூக்கிப்போட்டு கிளினிக்குக்குக் கொண்டு செல்ல, உடன் தனிப்படையும் சென்றிருக்கிறது. ஆனால், ஆட்டோவிலேயே அஜித்குமாரின் உயிர் பிரிந்துவிட்டது. சிறிது நேரத்தில், போலீஸ் தாக்குதலில் அஜித்குமார் இறந்துவிட்ட தகவல் கசிய, மடப்புரம் வியாபாரிகளும் பொதுமக்களும் கொதித்துப் போய்விட்டார்கள். உடனே, கோயிலைச் சுற்றி யிருந்த அத்தனை கடைகளும் அடைக்கப்பட்டன. திருப்புவனம் காவல் நிலையம் முன்பாக பொது மக்கள் கூடிவிட்டனர். அப்போது, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அஜித்குமாரின் உடலை வைத்திருந்தால் பிரச்னை பெரிதாகும் எனக் கருதி, மதுரை இராசாசி அரசு மருத்து வமனைக்கு உடலைக் கொண்டுபோய்விட்டது தனிப்படை. ஸ்டாலின் சென்னையிலிருந்து வந்த உத்தரவு ஆளாய் பறந்த அரசு இயந்திரம்! போலீஸ் அராஜகத்தில் ஓர் உயிர் பலியானது எவ்வளவு கொடூரமானதோ, அதைவிடக் கொடூரமானது இந்த விவகாரத்தை மூடி மறைக்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தி.மு.க-வும் செய்த அடாவடிகள். 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றே அஜித்குமாரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து எரித்துவிட, படாத பாடுபட்டது காவல்துறை. ‘விடிந்தால் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் முறையிடப்படும். பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டி வரும். அதற்குள்ளாக உடலை எரித்துவிடுங்கள்...’ என்று சென்னையிலிருந்து பறந்துவந்த உத்தரவை நிறைவேற்ற, ஆளாய் பறந்தது அரசு இயந்திரம். அஜித்குமாரின் குடும்பத்தினரிடம், தி.மு.க-வின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறனும், அவரின் அடிப்பொடிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களோடு சேர்ந்து டி.எஸ்.பி சண்முகசுந்தரமும் கடுமையாக அழுத்தம் கொடுத்திருக்கிறார். அந்தக் குடும்பம் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறது. அதற்குள்ளாக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் அஜித்குமாரின் காவல் கொலையைக் கண்டித்துவிட்டன. விவகாரமும் பெரிதாகிக்கொண்டே போனது. அஜித்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், ரொம்பவும் ஜாக்கிரதையாக உடலிலிருந்த 44 காயங்களையும் ஆவணப்படுத்தி விட்டனர். இரவு 10 மணிக்கெல்லாம் உடலை திருப்புவனத்துக்குக் கொண்டுவந்து, கையோடு இருந்து உடல் எரிந்த பிறகுதான் கிளம்பியது போலீஸ்” என்று நடந்த சம்பவங்களை விரிவாகச் சொன்னார்கள். பிரஷர் கொடுத்த சீனியர் அதிகாரி யார்? இந்தக் காவல் கொலை குறித்த செய்திகள் அனைத்தும் இப்போது வெட்டவெளிக்கு வந்துவிட்டன. இதில், காவல்துறையின் அலட்சியம், அதிகாரம், அத்துமீறல், திமிர், வன்முறை குறித்து ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. ‘போலீஸ் தாக்குதலில் மகன் கொல்லப்பட்டதாக’ அஜித்குமாரின் தாயார் மாலதி அளித்த புகாரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத காவல்துறை, கொலை செய்த தனிப்படைக்குத் தலைமை தாங்கிய காவலர் கண்ணன் அளித்த புகாரை மட்டும் பதிவுசெய்தது ஏன்... விசாரணையின்போது தப்பியோடப் பார்த்தார். தவறி விழுந்தவருக்கு வலிப்பு வந்துவிட்டது; அதில் இறந்துவிட்டார்’ எனக் கூசாமல் எப்படிப் பொய் சொன்னது போலீஸ்... நிகிதாவின் புகார் உண்மையானதா என்பதை விசாரிக்காமல், அவர் புகாரில் எஃப்.ஐ.ஆரும் போடாமல், அவசர அவசரமாகத் தனிப்படை விசாரிக்கச் சென்றது ஏன்... அவர்களுக்கு பிரஷர் கொடுத்த சீனியர் அதிகாரி யார்... அஜித்குமார் மீது குற்றப் பின்னணியோ, ஆதாரமோ இல்லாத நிலையில், இவ்வளவு கொடூரமாக அவரைத் தாக்கும் துணிச்சல் போலீஸுக்கு எப்படி வந்தது... இன்னும் கேள்விகள் வரிசைகட்டுகின்றன. ஆனால், யாரிடமும் பதில்தான் இல்லை. “அரசு, தன் குடிமகனைக் கொலை செய்திருக்கிறது!” அஜித்குமாரின் மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஜூலை 1-ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளீட் ஆகியோரின் அமர்வில், அஜித்குமாருக்கு நடந்த போலீஸ் சித்ரவதைகள் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்படவும், கொதித்தெழுந்துவிட்டனர் நீதிபதிகள். குறிப்பாக, தமிழக அரசையும் காவல்துறையையும் விளாசியெடுத்துவிட்டார் நீதிபதி சுப்பிரமணியம். “தனிப்படை போலீஸாருக்கு ஆர்டர் போட்டது யார்..?” என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்ட நீதிபதி சுப்பிரமணியம், அரசு, தன் குடிமகனையே கொலை செய்திருக்கிறது” எனக் கொதித்தார். பதற்றமான அரசுத் தரப்பு, காவலர்கள் சஸ்பெண்ட் விவரங்களைக் குறிப்பிட்டதோடு, “சி.பி.ஐ விசாரணைக்கும் நாங்கள் தயார்” என்றது. ஆனாலும் சாந்தமடையாத நீதிபதி, “இதைச் சாதாரண கொலை வழக்குப்போல விசாரிக்க முடியாது. மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் வழக்கின் விசாரணையை ஒப்படைக்கிறோம். அஜித்குமார் காவல் மரணம் குறித்து அவர் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும். ஜூலை 8-ல் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தன்னுடைய விசாரணையைத் தொடங்கியிருக்கிறார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ். இதற்கிடையே, அஜித்குமார் காவல் மரண வழக்கை, சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு. 31 கொடூரங்கள்... எண்ணிக்கையற்ற வன்முறைகள்! அஜித்குமாரின் காவல் மரணம் குறித்து, ‘மக்கள் கண்காணிப்பக’த்தின் இயக்குநர் ஹென்றி திபேனிடம் பேசினோம். “கடந்த நான்கு ஆண்டுகளில், 31 காவல் மரணங்கள் நடந்திருக்கின்றன. 2021-ம் ஆண்டில் 4 பேரும், 2022-ம் ஆண்டில் 11 பேரும், 2023-ல் ஒருவரும், 2024-ல் 10 பேரும், 2025-ம் ஆண்டில் இதுவரை 5 பேர் என மொத்தம் 31 பேர் காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், இந்த உயிரிழப்புகளை தமிழக காவல்துறையும் சிறைத்துறையும் ஒப்புக்கொள்வதில்லை. நாங்கள் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்துத்தான் இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறோம். ‘31 மரணங்கள்’ என்று சொல்வதைவிட, அவற்றை ‘31 கொடூரங்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும். காவல் மரணங்களின் எண்ணிக்கை இவ்வளவு என்றால், காவல்துறையால் கை கால்கள் உடைக்கப்பட்டவர்கள்...கண்கள், பற்களை இழந்தவர்கள்... உடல்நலம், மனநலம் குன்றியவர்களின் பட்டியலை எடுக்க முற்பட்டால், அதைக் கணக்கிட பல ஆண்டுகள் ஆகும். இந்திய சட்டப்படி, ‘டார்ச்சர்’ என்கிற செயலுக்குத் தண்டனை வழங்க, சட்டப் பிரிவுகள் இல்லை. அதனால்தான், காவல்துறையினரின் டார்ச்சரால் உயிரிழப்புகள் நடந்தால், அவை `கொலை’ என்கிற சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகின்றன. ‘லாக்கப் டெத்’ தொடர்பாகப் பதிவுசெய்யப்படும் வழக்குகளின் விசாரணை இழுத்தடிக்கப் படுகின்றன. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை விசாரித்த நீதிபதிகளில் மூன்று பேர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 252 நாள்கள் மட்டுமே விசாரணை நடந்திருக்கிறது. இவ்வாறு விசாரணை இழுத்தடிக்கப்படுவதால்தான், நீதி கிடைக்க, காலதாமதம் ஆகிறது. அஜித்குமாரின் மரணத்தில் அதிக அளவு அக்கறை காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் நிலைய சித்ரவதைகளைத் தடுப்பது தொடர்பாகப் புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும், மாநில உரிமை ஆணையத்துக்கும் வரும் வழக்குகளின் விசாரணையையும் அரசு துரிதப்படுத்த வேண்டும்” என்றார். ஸ்டாலின் கிடப்பில் 14,000 வழக்குகள்... சிக்காத உயரதிகாரிகள்! ‘காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்க’த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதத்திடம் பேசினோம். “ஏப்ரல் 18, 2022-ல், சென்னை தலைமைச் செயலகக் காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவர் ‘லாக்கப் டெத்’தில் உயிரிழந்தார். அந்தக் காவல் மரணத்தைத் தவறான தகவலுடன் சட்டமன்றத்தில் பதிவுசெய்தார் முதல்வர் ஸ்டாலின். அடுத்த நாளே, மாற்றிப் பேசினார். அப்போதே, தனக்குத் தவறான தகவலை அளித்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படியான கொடூரங்கள் தொடர்ந்திருக்காது. ஏப்ரல் 2024-ல் மட்டுமே நான்கு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வுப் பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. `கஸ்டடி டெத்’களுக்குக் காரணமாக இருக்கும் உயரதிகாரிகள் எந்தச் சம்பவத்திலும் சிக்குவதில்லை. அப்படியே சிக்கினாலும் அவர்கள் காப்பாற்றப்பட்டுவிடுகின்றனர். உதாரணமாக, விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய குற்றச்சாட்டில் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர்சீங் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆனாலும், அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க நிர்வாகி வளையாபதி தொடர்புடைய வழக்கில், மாநில மனித உரிமை ஆணையமே ஏ.எஸ்.பி உதயகுமாருக்கு எதிராக உத்தரவிட்டது. அதன் பின்னரும், கொங்கு மண்டலத்தில் அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், மாநில மனித உரிமை ஆணையத்தில் 14,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன. ‘கஸ்டடி மரணங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை இருக்கும்’ என்ற பயம் இருந்தால் மட்டுமே, காவலர்களுக்கு அச்சம் வரும். இது போன்ற குற்றங்களும் நடக்காது” என்றார். தி.மு.க ஆட்சியில் நடந்த காவல் சித்ரவதைகள்..! கடந்த நான்கு ஆண்டுக்கால தி.மு.க ஆட்சியில், 24 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகச் சொல்கின்றன எதிர்க்கட்சிகள். ‘31 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன’ என அடித்துச் சொல்கிறார் வழக்கறிஞர் ஹென்றி திபேன். ஆனால், காவல்துறை தரப்பிலிருந்து முதல்வருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில், ‘2021-ல் இரண்டு மரணங்களும், 2022-ல் ஒரு மரணமும், 2023, 2024 ஆண்டுகளில் எந்த மரணமும் நிகழவில்லை. 2025-ல் இப்போதுதான் அஜித்குமார் மரணம் நிகழ்ந்திருக்கிறது’ எனக் கூறியிருக்கிறார்கள். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தால் பரவாயில்லை, பூசணிக்காய்த் தோட்டத்தையே சோற்றில் மறைக்கப் பார்க்கிறது காவல்துறை. திருட்டு வழக்கின் விசாரணைக்காக அழைத்துச் சென்று, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் இடது காலை இரும்பு ராடால் அடித்து உடைத்தது ஊட்டி ஊரகக் காவல்துறை. மணல் கடத்தலைத் தடுக்க முற்பட்ட இளைஞர் விஜய்யை, கண்மூடித்தனமாகத் தாக்கிய புகாரில் சிக்கினார் வேலூர் மாவட்டம், விருத்தம்பட்டு காவல் நிலைய எஸ்.ஐ ஆதர்ஷ். புதுக்கோட்டை பெரியார் நகரில், போதை ஊசி பயன்படுத்தியதாக விக்னேஷ்வரன் என்ற இளைஞரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், பிணமாகத்தான் அவரை திருப்பிக் கொடுத்தனர்.கோவை சரவணம்பட்டியில், ஜெயக்குமார் என்பவரை நான்கு நாள்கள் சட்டவிரோத கஸ்டடியில் வைத்து போலீஸார் தாக்கியதில், ஜெயக்குமாரின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. புகாரளித்தும், தாக்கிய போலீஸார்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. திருப்பூர் மாவட்டம், சேமலைக்கவுண்டம் பாளையத்தில், ஒரு கொலை வழக்கில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற அவிநாசி காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை, ஹரிதாஸை மூன்று நாள்கள் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கினார். அதில் அவருக்கு உடல்நலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இவையெல்லாம், கடந்த நான்கு ஆண்டு தி.மு.க ஆட்சியில் நடந்த கொடூரங்களின் மீச்சிறு துளிதான். பெரிய லிஸ்ட் நம்மிடமிருக்கிறது. ஹென்றி திபேன், ஆசீர்வாதம் முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை? இந்தப் பிரச்னைகள் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் அதிகாரிகள் சிலர், “முதல்வருக்குச் சரியான தகவல்களை உயரதிகாரிகள் தெரியப்படுத்துவதில்லை. ‘சரியான தகவல்களைத் தராத அதிகாரிகளை முதல்வர் ஏன் முக்கியப் பொறுப்பில் வைத்திருக்கிறார்... முதல்வர் கையில்தான் காவல்துறை இருக்கிறதா..?’ என்கிற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ஏனென்றால், துறையில் சில குறிப்பிட்ட அதிகாரிகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. சிலருக்கு அளவற்ற அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சமூகம், மாவட்ட அரசியல், கட்சிப் புள்ளிகளின் தொடர்புகள்; உறவுகள் எனக் காவல்துறைக்குள் முதல்வருக்குத் தெரியாத தனி ராஜாங்கமே நடக்கிறது. இதையெல்லாம் முதல்வர் கவனிப்பதே இல்லை. அஜித்குமாரின் மரணம் தந்த அதிர்வே அடங்காத நிலையில், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் நடத்திய போராட்டத்தில், ‘மரியாதையா போயிடுங்க, இல்லைன்னா வேற மாதிரி ஆகிடும்’ என ஓப்பன் மைக்கில் மிரட்டுகிறார் விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன். ராஜேஸ் தாஸ் விவகாரத்தில், ஒரு பெண் எஸ்.பி-யை மிரட்டி சஸ்பெண்டான கண்ணன், தற்போது பொதுமக்களை மிரட்டுகிறார். இந்த அளவுக்கு, அவருக்கு அதிகாரமும் தைரியமும் அளித்தது யார்..? தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய சைலேஷ் குமாருக்கு, பதவி உயர்வு வழங்க தன்னிடம் கோப்பு வந்தபோதே, அதை வீசி எறிந்திருக்க வேண்டும் முதல்வர். அந்தக் கோப்பை தயாரித்தவர்கள் அனைவரையும் பந்தாடியிருக்க வேண்டும். அதைச் செய்யாததன் விளைவு, காவல்துறையின் ராஜ்ஜியமாக தி.மு.க அரசாங்கம் மாறிப்போய்விட்டது. இனியும் முதல்வர் சுதாரிக்கவில்லை என்றால், ஆட்சிக்கு அவப்பெயர் கூடிக்கொண்டே தான் போகும்” என்றனர். காவல்துறை அதிகாரிகள், தன் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டிருப்பதை இப்போதாவது முதல்வர் உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. அஜித்குமாரின் தம்பிக்குக் கொடுக்கப்பட்ட ஆவின் வேலையும், அவர் அம்மாவுக்கு அளித்த இலவச வீட்டுமனைப் பட்டாவும் ஆட்சியின் பெயரைக் காப்பாற்றிவிடும் என நம்பிக்கொண்டிருக்கிறார் முதல்வர். ஆனால் மக்கள், காவல்துறையின் அராஜகத்தால் வெகுண்டு போயிருக்கிறார்கள். ‘முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை?’ எனக் கேட்கிறார்கள். அவர்களின் கோபமும், விமர்சனமும், வெறுப்பும் சரியான சமயத்தில்... இந்த ஆட்சிமீதும், முதல்வர் மீதும்தான் வெளிப்படும் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது!

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month ago
திரும்பவில்லை "அவர்கள் திரும்பி வருவார்கள்..." அந்த நம்பிக்கையில் தான் — தாய்கள் தூங்காமல் வாழ்ந்தனர், சகோதரிகள் கண்கள் சோர்ந்தது எதிர்பார்ப்பில், பிள்ளைகள் கதவுகள் ஓரம் கண்பார்த்து வளர்ந்தனர். ஒரு நாள் – ஒரு குரல் கேட்கும், ஒரு நிழல் திரும்பும், ஒரு நினைவாய் கதவு தட்டும்… என நம்பினோம். ஆனால் வந்தது அவர் இல்லை வந்தது ஒரு செய்தி. செம்மணியில் — அவர் பெயரற்ற எலும்பாக மண்ணடியில் கிடப்பதாக. அந்தக் குழியில் புதைந்தது — ஒரு உடலல்ல, ஒரு உறவின் கனவு, ஒரு இனத்தின் நம்பிக்கை. அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல காணப்படாமல் மறைக்கப்பட்டவர்கள். மண் இன்னும் உதிரும் உண்மை சொல்கிறது — "அவர்கள் திரும்பவில்லை… ஏனெனில் நீதி அவர்களுடன் இந்த நிலத்துக்குள் புதைக்கப்பட்டது." 🕯️ நாம் அவர்களை திரும்ப பெற முடியாது… ஆனால், நீதியை மட்டுமாவது திரும்ப பெற முடியாதா? "அவர்கள் திரும்பி வருவார்கள்…" அந்த நம்பிக்கையோடுதான் ஒரு இனத்தின் ஆயிரக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும், பிள்ளைகளும் தினமும் வாழ்ந்தனர். ஒரு நாளாவது – அவர் மீண்டும் வருவார், ஒரு குரல் கேட்கும், ஒரு நினைவாய் கதவை தட்டுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் வந்தது அவர் அல்ல வந்தது ஒரு தகவல். செம்மணியில்—அவர் பெயர் தெரியாத எலும்பாகக் கிடப்பதாக. அந்தக் குழியில்தான் புதைந்தது, அவர் மட்டும் அல்ல... ஒரு உறவின் எதிர்பார்ப்பு, ஒரு இனத்தின் நம்பிக்கையும். அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல காணப்படாமல் மறைக்கப்பட்டவர்கள். அந்த மண் இன்னும் சொல்கிறது – “அவர்கள் திரும்பவில்லை, ஏனெனில் அவர்களுடன் நீதி ஒரு நாட்டின் நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளது.” 🕯️ நாம் அவர்களை திரும்பப் பெற முடியாது. ஆனால் அவர்களுக்கான நீதியை மட்டுமாவது திரும்ப பெற முடியுமா? (முகநூலில் படித்த கவிதை.)

புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது

1 month ago
உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே உள்ள இந்த ரத்த வகையின் சிறப்பு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 5 ஜூலை 2025, 01:41 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் 'க்வாட நெகடிவ்' (Gwada Negative) என்றழைக்கப்படும் உலகின் 48வது ரத்தப் பிரிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தப்பிரிவு உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அவர் பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் க்வாடலூப் (Guadeloupe) என்ற தீவை பூர்வீகமாக கொண்டவர். அந்த இடத்தை குறிக்கும் வகையிலேயே இந்த ரத்தப்பிரிவுக்கு 'க்வாட' நெகடிவ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரத்தப்பிரிவை பிரான்ஸ் நாட்டின் தேசிய ரத்த முகமையான Établissement Français du Sang (French Blood Establishment) கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பை சர்வதேச குருதியேற்றல் அமைப்பு (International Society for Blood Transfusion) அங்கீகரித்து, PIG7 எனப்படும் உலகின் 48வது ரத்தப்பிரிவாக அடையாளப்படுத்தியுள்ளது. 2025 ஜூன் மாதம் வரையில் உலகில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே இந்த ரத்தவகை இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ரத்தம் எவ்வாறு அரிதான வகையாகிறது? குறிப்பிட்ட ஒரு ரத்த வகை அரிதானதா என்பதை தீர்மானிக்க, பொதுவாக எல்லோரிடமும் காணப்படும் ஆன்டிஜன் அந்த ரத்த வகையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆயிரத்தில் ஒருவருக்கும் குறைவாக அந்த ரத்த வகை இருந்தால் அது அரிய ரத்த வகை எனப்படும். இப்போது கண்டறியப்பட்டுள்ள ரத்தப் பிரிவின் அரிய அம்சம் இதில் EMM antigen இல்லை என்பதே ஆகும். EMM antigen கிட்டத்தட்ட எல்லா மனிதர்களிலும் காணப்படுவதாகும். EMM antigen என்பது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் காணப்படுவதாகும். இது சில புரதங்களை செல்கள் மீது பொருத்த உதவியாக இருக்கும். நமது உடல், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை தன்னுடைய செல்கள் தான் என்று கண்டறியும் 'குறியீடு'களாக EMM antigen செயல்படும். க்வாட நெகடிவ் எவ்வாறு கண்டறியப்பட்டது? 2011-ம் ஆண்டில், 54 வயதான குவாடலூப்பை சேர்ந்த அந்த பெண், தனது அறுவை சிகிச்சைக்கு முன்பாக சில ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரது ரத்தத்தில் சில வித்தியாசங்கள் இருப்பதை பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் கவனித்தனர். ஏற்கெனவே உள்ள ரத்த வகைகளுடன் அவரது ரத்தம் பொருந்தவில்லை. ஆனால் எதனால் அவருக்கு அப்படி உள்ளது என்று கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் இல்லை. பிரான்ஸ் தேசிய ரத்த முகமையை (EFS) சேர்ந்த ஆய்வாளர்கள் தியர்ரி பெய்ரார்ட் மற்றும் ஸ்லிம் அசௌசி உள்ளிடோர் கொண்ட குழு தொடர் ஆய்வுகள் நடத்தி வந்தனர். 2019ம் ஆண்டில், மரபணு வரிசைப்படுத்துதலில் நவீன வழிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. அதிக எண்ணிக்கையிலான மரபணுக்களை மிக வேகமாக வரிசைப்படுத்தும் தொழில்நுட்பங்கள் உருவாகியிருந்தன. அதன் பின்னரே புதிய ரத்த வகைக்கு காரணமான தனித்துவமான மரபணு திரிபினை கண்டறிய முடிந்ததாக ஆய்வாளர் தியரி பெய்ரார்ட் கூறியுள்ளார். இந்த மரபணு திரிபின் காரணமாகவே EMM antigen உற்பத்தியாவதில்லை. அரிய ரத்த வகை வந்தது எப்படி? க்வாட ரத்த வகை கண்டறியப்பட்ட பெண்ணின் பெற்றோர் இருவருமே மேற்சொன்ன மரபணு திரிபினை பெற்றிருந்தனர். எனவே, இருவரிடமும் இருந்து இந்த மரபணு திரிபினை அந்த பெண் பெற்றுள்ளார். தற்போது வரை உலகத்தில் இந்த வகை ரத்தம் கண்டறியப்பட்டுள்ள நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பதால், அவரால் வேறு யாரிடம் இருந்தும் ரத்த தானம் பெற முடியாது என்று தியரி பெய்ரார்ட் கூறியுள்ளார். உலகில் கிட்டத்த அனைவருமே EMM antigen பெற்றிருப்பதால் அவரால் வேறு ஒருவரிடமிருந்து ரத்தம் தானமாக பெற முடியாது. எனவே இதே ரத்த வகை கொண்ட வேறு நபர்கள் அவர் பிறந்த க்வாடலூப் தீவிலோ அதன் அருகில் உள்ள பகுதிகளிலோ வாழ்கிறார்களா என்று கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. அரிய ரத்த வகையால் ஏற்படும் சவால்கள் அரிய ரத்த வகை கொண்டவர்களுக்கு, அதே ரத்த வகையைத்தான் தானமாக பெற முடியும். ஒரு வேளை மாற்று ரத்தம் செலுத்தப்பட்டால், அவர்களிடம் இல்லாத ஆண்டிஜன் உடலுக்குள் சென்று விடும். அந்த ஆண்டிஜனை அவர்களின் உடல் ஏற்காது. அதனை உடல் தமக்கு அந்நியமாக கருதி தாக்கத் தொடங்கும். நுண் உயிரியலாளரான ஷண்முகப்பிரியா "ரத்த வகையை மாற்றி உள்ளே செலுத்துவது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும். பாம்பே குரூப் எனும் அரிய ரத்த வகையில் எச் ஆண்டிஜன் (H antigen) இருக்காது. அந்த ஆண்டிஜன் நம்மில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் உண்டு. எனவே பாம்பே ரத்த வகை கொண்டவர்களுக்கு ரத்தம் செலுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற அரிய வகை ரத்தம் கொண்டவர்களுக்கு தங்களுக்கு தாங்களே ரத்தம் செலுத்திக் கொள்ளும் முறை உள்ளது. அவர்களது ரத்தத்தை தாங்களே தானமாக அளித்து சேகரித்து வைத்துக் கொள்ள முடியும். ரத்தத்தின் வெவ்வேறு கூறுகளை தனித்தனியாக சேமித்து வைக்க முடியும். சில கூறுகளை ஓராண்டு காலம் வரை வைத்துக் கொள்ள முடியும். ஆண்டிஜன்கள் இல்லாத பிளாஸ்மா போன்ற கூறுகளை எந்த கொடையாளரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்" என்கிறார். உலகத்திலேயே 50 பேருக்கும் குறைவாக உள்ள ரத்த வகை எது? அரிதிலும் அரிதான ‘பாம்பே ஓ’ ரத்த வகை: ரத்த தானம் செய்யும் கொடையாளர்கள் உங்கள் ரத்த வகை மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்குமா? உடலில் வேறுவகை ரத்தத்தை ஏற்றினால் என்னவாகும்? அரிய வகை ரத்தம் கொண்ட கர்ப்பிணி பெண்களில் மாற்று ரத்தப்பிரிவு கொண்ட தங்கள் குழந்தையின் செல்களுக்கு எதிரான செல்களை தங்கள் உடல் உருவாக்கிவிடும் அபாயம் நிலவுகிறது. "O நெகடிவ் போன்ற ரத்தப்பிரிவு கொண்ட கர்ப்பிணிகளுக்கு, பேறு காலத்தின் இறுதிக் கட்டத்தில் சில ஆண்டிபாடிகள் வழங்கப்படும். வழக்கமாக ரத்த ஓட்டம் தாயிலிருந்து குழந்தைக்கு செல்வதாகவே இருக்கும். ஒரு வேளை குழந்தையிடமிருந்து தாய்க்கு ரத்தம் ஓட்டம் இருந்தால் அதனால் நேரும் விளைவுகளை தடுக்க இந்த ஆண்டிபாடிகள் வழங்கப்படும்." என்று ஷண்முகப்பிரியா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1k8wlern1ro

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

1 month ago
சாத்தான்... நான் கொண்டு வந்த பொருட்கள்.... மிளகாய்த்தூள், அரிசி மா, ஓடியல்மா, புழுக்கொடியல், பினாட்டு, வடகம், மோர்மிளகாய், மாசிக் கருவாடு, பாரைக் கருவாடு, இறால் கருவாடு, கட்டா சம்பல், இறால் சம்பல், பயத்தம் பணியாரம், பருத்துறை வடை, மிக்சர், காராசேவ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், பொரித்த கடலை, மில்க் ரொபி, கோகனட் ரொபி, கல்பணிஸ், எள்ளுருண்டை, பொரித்த கடலை, தொதல், மஸ்கற், குளுக்கோரச, தோடம்பழ இனிப்பு, பல்லி முட்டை இனிப்பு, இராசவள்ளிக் கிழங்கு, கரணை கிழங்கு, முருங்கக் காய், தாமரை கிழங்கு, கோகிலா தண்டு, லாவுளு பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், கருவேப்பிலை, திருநெல்வேலி சந்தையில் வாங்கிய சின்ன வெங்காயம் போன்றவையுடன் சில பருத்தி உடைகள் மட்டுமே. 😂

நான் மறுபிறவியெடுப்பேன் - தலாய்லாமா

1 month ago
தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி 03 JUL, 2025 | 04:02 PM புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அடுத்த தலாய் லாமா யார் என்பதை முடிவு செய்யும் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பம் ஆகியவற்றின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவைப் பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும், நடைமுறையில் உள்ள மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார். தலாய் லாமா அறிவிப்பும், சீனா தலையீடும்: இந்தியாவில் தஞ்சமடைந்து தரம்சாலாவில் வாழ்ந்து வரும் 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி வெளியிட்ட அறிவிப்பில், 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை (காடன் போட்ராங் அறக்கட்டளை) தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் உறுதி செய்தார். ஆனால், புத்த மதத் தலைவரான தலாய் லாமாவின் ‘வாரிசு’ குறித்து இந்த அறிவிப்பில் சீன அரசு முரண்பட்டுள்ளதுடன், புதிய தலாய் லாமாவை தேர்வு செய்வதில் தலையிடும் முனைப்பில் இருக்கிறது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும்போது, “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம். அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்தப் பின்னணியில்தான், 14-வது தலாய் லாமாவின் ‘வாரிசு’ குறித்த அறிவிப்புக்கு ஆதரவாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், பவுத்தருமான கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 14-வது தலாய் லாமாவின் 90-வது பிறந்த தின விழா வரும் 6-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இந்த பிறந்தநாள் நிகழ்வில், மத்திய அரசு சார்பில் கிரண் ரிஜிஜுவும், ராஜீவ் ரஞ்சன் சிங்கும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. https://www.virakesari.lk/article/219111

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

1 month ago
🤣கல்லுண்டாய் குப்பை மேட்டிலை குமாரசாமியின்ரை கோவணத்தையும் கிழிச்சு தொங்க விடுறதுக்கெண்டே ஒரு கும்பல் அலையுது😂

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

1 month ago
நல்ல பாம்பாக இருக்குமோ? அசையாமல் இருந்திருக்குது. எப்படி இந்த மலைப்பாம்புகளை உள்ளாடைக்குள் வைத்துக்கொண்டு இயல்பாக நடந்திருக்க முடியும்? ஒருவேளை பயணப்பெட்டியில் உள்ளாடைக்குள் சுற்றி மறைத்து வைத்திருந்திருந்திருப்பாரோ? வாசகர்களை குழப்பியடிக்கிற மாதிரியான செய்திகள்! நீங்கள் ஒன்றையும் மறைத்து கொண்டுவரவில்லைத்த்தானே சிறியர்? எனக்குத்தெரியும் நீங்கள் அப்படியெல்லாம் செய்யக்கூடியவரல்ல.

செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை

1 month ago
செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அழுத்தம் கொடுப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது! செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது. முன்னதாக செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அகழ்வுகள், தடயவியல் பகுப்பாய்வுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திய ஆலோசனைகள் என்பவற்றுக்காக, ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சுயாதீன விசாரணையை ஆதரிப்பது தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, அந்த நாட்டு நாடாளுமன்றில் எழுத்து மூல கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் கெத்தரின் வெஸ்ட் (Catherine West), இந்த பிரச்சினையில் பிரித்தானியாவின் தீவிர ஈடுபாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1438148

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month ago
பலர் தாறுமாறாக புதைக்கப்பட்டுள்ளதை செம்மணி மனித புதைகுழியில் காணக்கூடியதாக உள்ளது – சட்டத்தரணி மணிவண்ணன் 05 JUL, 2025 | 10:49 AM செம்மணி மனித புதைகுழியில் ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட பின்னர் வெள்ளிக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட மயானத்தில் அகழ்வாய்வு பணிகள் நடைபெறுகின்றன என்ற அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் சார்பிலும் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். செம்மணி சித்தப்பாத்தியிலே 11க்கு 11 என்ற விஸ்தீரணமான இடத்திலே அகழ்வு பணிகள் இடம்பெற்றாலும் சற்று அருகில் உள்ள ஏனைய பகுதியொன்றிலும் அகழ்வாய்வு பணி நடைபெறுகிறது. மேலதிகமான இடங்களிலும் அகழ்வாய்வு பணிகள் நடைபெறலாம் என்று அனுமானங்கள் காணப்படுகிறது. மனிதப் புதைகுழிக்குள் சடலங்கள் மீடகப்படும் விதத்தை பார்க்கும் போது ஐந்துக்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் ஒரே இடத்தில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. ஒரே தடவையில் ஏராளமானவர்கள் தாறுமாறாக புதைக்கப்பட்டிருப்பதை எங்கள் கண்ணால் பார்க்கக் கூடியதாக இருந்தது. நாற்பதை கடந்தும் மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருப்பது மிகப்பெரிய மனித புதைகுழி இந்த பிரதேசத்தில் இருப்பதற்கான அறிகுறிகளை தென்பட வைக்கிறது. உலகம் முழுவதிலும் பல்வேறுபட்ட மனித புதைகுழிகள் அகழப்பட்டிருந்தாலும் கூட அவை எல்லாவற்றிலும் இருந்து சற்று வித்தியாசமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இந்த மனிதப் புதைகுழி காணப்படுவதாக ஊகங்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த எலும்பு கூட்டுத் தொகுதியிலே எந்த ஒரு உடைகளும் கண்டெடுக்கப்படாமல் இருப்பதும் சில குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்படுவதும் திட்டமிட்ட கொலை ஒன்று திட்டமிட்ட ரீதியிலே நடைபெற்று புதைகுழிக்குள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன. தடயங்களை சரியாக கண்டுபிடிக்ககூடாதவாறு திசை திருப்பும் விதத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் சடலங்கள் புதைகுழிக்குள் புதைக்கப்பட்ட போது முன்னெடுக்கப்பட்டிருக்கலாமா என்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அகழ்வுப் பணிகளை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக சட்டத்தரணிகள் நாங்கள் தயாராக இருக்கிறோம். மிக முக்கியமாக இந்த அகழ்வு பணி ஊடாக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது. தற்போது கூட செம்மணி மற்றும் நாவற்குழி பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு எழுத்தானை மனு மீதான விசாரணை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அதற்கான கட்டளை எதிர்வரும் 11 ஆம் திகதி வழங்கப்பட இருக்கின்ற நிலையில் இவ்வாறான தடயங்கள் வெளிப்பட்டிருப்பது மிக முக்கியமான விடயமாகும். செம்மணி புதைகுழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கின்ற நிலையிலே ஆட்கொணர்வு மனுவிலே சம்பந்தப்பட்டவர்கள் எங்களுக்கு இப்போதும் சாட்சியாக இருக்கிறார்கள். அவர்களின் சாட்சியங்கள் இந்த எலும்பு கூட்டு பகுதியை அடையாளப்படுத்துவதற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என சந்தேகிக்கிறோம். அந்த வகையில் மிக நேர்மையாக அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் சர்வதே கண்காணிப்பின் கீழான ஒரு முழுமையான ஆராய்ச்சி இங்கு நடத்தப்பட வேண்டும். கொலைகள் மூடி மறைக்கப்பட முடியாதவை. இதன் பின்னணி உடனடியாக அடையாளம் காணப்பட வேண்டும். செம்மணியில் கிருசாந்தி குமாரசாமி படுகொலையில் தண்டிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் சாட்சியத்திலே 600 வரையான உடல்கள் இங்கு புதைக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார். இந்த அனைத்து பின்னணிகளும் ஆராயப்பட்டு இதிலே கொல்லப்பட்டவர்கள் மற்றும் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதுவரை சட்டத்தரணிகளாக நாங்கள் தொடர்ந்து அகழ்வாய்வு பணியின்போது சட்ட உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/219217

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

1 month ago
'44 காயங்கள், மூளையில் ரத்தக் கசிவு, காதுகளில் உலர்ந்த ரத்தம்' - மரணத்திற்கு காரணம் என்ன? படக்குறிப்பு, உடற்கூறாய்வு அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 வெளிப்புறக் காயங்களும் பல வகையான உள்புறக் காயங்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 4 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரின் உடற்கூறாய்வு அறிக்கையின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. உடலில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டாலும், மரணத்துக்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், ஒரே இடத்தில் தொடர்ச்சியாகத் தாக்கியதன் விளைவாக ஏற்பட்ட ரத்தக் கசிவால் மரணம் நேர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அஜித்குமாரின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தது எது? சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த நிகிதா என்பவரின் ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக புகார் எழுந்தது. புகார் அடிப்படையில், கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை திருப்புவனம் காவல் நிலையத்தில் கோவில் ஊழியர்கள் ஒப்படைத்தனர். படக்குறிப்பு, கோவிலின் பின்புறம், இங்கு வைத்துதான் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை தனிப்படை பிரிவுக்கு மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் மாற்றியுள்ளார். காவலாளி அஜித்குமாரிடம் தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மறுநாள் (28ஆம் தேதி) அவர் உயிரிழந்தார். கோவிலில் இருந்து அஜித்குமாரை ஆட்டோவில் கொண்டு செல்லும் போதே உயிரிழந்துவிட்டதாக, அவரது சகோதரர் நவீன்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் ஆனந்த், கண்ணன், ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன? மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 28ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் இறந்த நிலையில் அஜித்குமார் கொண்டு வரப்பட்டதாக, உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மறுநாள் காலை 5.45 மணியளவில் அஜித்குமாரின் உடலை மருத்துவர் சதாசிவம் மற்றும் மருத்துவர் ஏஞ்சல் தலைமையிலான குழுவினர் உடற்கூறாய்வு செய்துள்ளனர். சுமார் மூன்று மணிநேரம் 35 நிமிடங்கள் அது நடந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 வெளிப்புறக் காயங்களும் பல வகையான உள்புறக் காயங்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இதில் காயங்கள் பலவும் கன்றிப் போன நிலையில் இருந்துள்ளன. மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் இரு காதுகளிலும் உலர்ந்த நிலையில் ரத்தம் காணப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஜித்குமாரின் இதயம், நுரையீரல், கல்லீரல், மூளை ஆகியவை ரசாயனம் (chemical analysis) மற்றும் திசுப் பகுப்பாய்வுக்கு (histopathological) அனுப்பப்பட்டுள்ளது. 'ஒரே இடத்தில் பலமுறை அடிக்கப்பட்ட காயங்கள்' படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம் "மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படாத நிலையில், காவலர்கள் தாக்கியதால் காவலாளிக்கு மரணம் ஏற்பட்டிருக்குமா?" என்று மருத்துவரும் மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் துறையின் தலைவருமான டிகாலிடம் பிபிசி தமிழ் கேட்டது. "மொத்தமாக 44 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் 13 முதல் 16 வரை வகைப்படுத்தப்பட்டுள்ள காயங்கள் என்பது ஒரு காயம் மட்டும் அல்ல. இவை ஒரே இடத்தில் பலமுறை அடிக்கப்பட்ட காயங்களாக உள்ளன" என்கிறார். தொடர்ந்து ஒரே இடத்தில் அடித்ததால் ஏற்பட்ட காயம் எனக் கணக்கிட்டால் சுமார் 70க்கும் மேற்பட்ட புறக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பார்க்கலாம் எனக் கூறும் டிகால், "சுமார் 12 செ.மீ அளவில் தசைகள் வரை காயம் ஏற்பட்டுள்ளது" என்கிறார். மரணத்திற்கு காரணம் என்ன? படக்குறிப்பு, திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவில் "அதேநேரம், இதயம், நுரையீரல் உள்பட பிரதான உறுப்புகளில் எங்கும் அடிபடவில்லை. மூளையில் மட்டும் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அது உயிரிழப்பை உடனே ஏற்படுத்த வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார் டிகால். "அஜித்குமாரின் உடலில் எலும்பு முறிவு எதுவும் காணப்படவில்லை" எனக் கூறும் டிகால், "எல்லாம் கன்றிப் போன காயங்களாக உள்ளன. அஜித்குமார் இறந்து போவார் என காவலர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை" எனக் குறிப்பிட்டார். "பல்வேறு காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் ரத்தக் கசிவினால் இறப்பு ஏற்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறும் டிகால், "இது நியூரோ ஜெனிக் ஷாக் (neuro genic shock) எனக் கூறப்படுகிறது. அடிக்கும்போது ஒவ்வோர் இடத்தில் ஏற்படும் வலியும் மூளைக்குக் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்" என்கிறார். உடலில் மூன்று லிட்டருக்கும் குறைவாக ரத்த சுழற்சி ஏற்பட்டால் உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் இது ஹைப்போ வாலிமிக் ஷாக் (hypo volemic shock) என அழைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். உதாரணமாக, ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது நீரிழப்பு ஏற்படுவதை மேற்கோள் காட்டிய டிகால், "நீரிழப்பைச் சரிசெய்யாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். அதைப் போல ரத்தம் சுழற்சி அடைவதில் (blood circulation) பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும்" என்கிறார். "அடிக்கும்போது ஒவ்வொரு காயத்துக்கு உள்ளும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. மூளைக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரத்தக்கசிவு வேகமாக ஏற்பட்டிருந்தால் மரணமும் விரைவாக ஏற்பட்டிருக்கும்" எனக் கூறுகிறார் டிகால். காவலாளியின் உடலில் காயங்கள் பலவும் கன்றிப் போய் இருப்பதால், உடலில் உள்ள ரத்தம் மீண்டும் சுழற்சிக்கு வரவில்லை எனக் கூறும் டிகால், "அழுத்தம் குறையும்போது போதிய ஆக்சிஜனை மூளைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அதுவே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கலாம்" என்றார். மிளகாய்ப் பொடி போட்டதற்கான ஆதாரம் உள்ளதா? படக்குறிப்பு, மடப்புரம் கிராம மக்கள் கோவிலில் அஜித்குமாரை தாக்கும்போது அவர் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டபோது, அங்கிருந்த மிளகாய்ப் பொடியைக் கரைத்து அவர் வாயில் காவலர்கள் ஊற்றியதாக அவரது சகோதரர் நவீன்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ஆனால், இதுதொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படவில்லை. "பிரேத பரிசோதனையின்போது ஆடைகளையும் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் முடிவுகள் வரும்போது மிளகாய்த் துகள்கள் இருந்ததா எனத் தெரிய வரும். ஆனால், அவரது உடலில் மிளகாய்ப் பொடி இருந்ததாக விவரங்கள் இல்லை" எனக் கூறுகிறார் டிகால். "நாக்கு கடிபட்டுக் காயம் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அவர் கடித்திருக்கலாம். திசுப் பகுப்பாய்வு முடிவுகள் வருவதற்கு ஓரிரு மாதங்கள் தேவைப்படும். அதன் பிறகே இறுதி முடிவை வெளியிடுவார்கள்" எனக் கூறுகிறார் டிகால். அவரது கூற்றுப்படி, "அஜித்குமாருக்கு உடல்ரீதியாக எந்தப் பிரச்னைகளும் இல்லை. முதல்கட்ட அறிக்கை எனக் கூறப்பட்டாலும் இதை இறுதி அறிக்கையாகவும் பார்க்கலாம். இவ்வளவு காயங்களுடன் ஒரு மனிதர் உயிர் வாழ்வது கடினம்." அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. '24 மணிநேர சித்ரவதை' படக்குறிப்பு, அஜித் குமாரின் தம்பி நவீன்குமார் "மதியம் 1 மணியளவில் வேன் மூலமாக அஜித்குமாரை அழைத்துச் சென்ற தனிப்படைக் காவலர்கள், மறுநாள் மரணம் ஏற்படும் வரை அடித்துள்ளனர். அவர் அடி தாங்க முடியாமல் நகையை எடுத்ததாகப் பொய் கூறியிருக்கிறார்" என்கிறார் மதுரை 'எவிடென்ஸ்' அமைப்பின் கதிர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அஜித்குமார் உடன் பணியாற்றும் வினோத்குமார், அருண்குமார் உள்பட மூன்று பேர் முன்னிலையில் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது கோவிலில் நடந்த காவல் படுகொலையாகப் பார்க்க வேண்டும்" எனக் கூறுகிறார். சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கன்றிப் போன காயங்கள் உள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கை கூறுவதை மேற்கோள் காட்டிய கதிர், "24 மணிநேரமும் அஜித்குமாரின் உடல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கோபம் வரும் அளவுக்கு எதுவும் நடந்துவிடவில்லை" என்கிறார். "ஒன்பதரை சவரன் நகைத் திருட்டு என்பது கொடூரமான குற்றம் கிடையாது. இது கொள்ளை வழக்கு அல்ல திருட்டு வழக்கு" எனக் கூறும் கதிர், "அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. ஒரு சாதாரண காவலாளி என்ற எண்ணத்தில் திருட்டுப் புகார் கொடுத்துள்ளார்" என்கிறார். காவலாளி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதைக் குறிப்பிட்டுப் பேசிய கதிர், "சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல் மரண வழக்கின் விசாரணையை இன்னமும் சிபிஐ முடிக்கவில்லை. அஜித்குமார் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சிபிஐக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்" எனக் கூறினார். இதே கோரிக்கையை முன்வைக்கும் காவலாளி அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கணேஷ்குமார், "சிபிஐ விசாரணை நடந்தால் வழக்கின் விசாரணை தாமதமாகும். நீதிமன்ற மேற்பார்வையில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார். சாட்சியம் அளித்த கோவில் பணியாளர்கள் காவலாளி கொலை வழக்கை விசாரித்து அறிக்கை தருமாறு மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை, கடந்த ஜூலை 1 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நியமித்தது. திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் ஆய்வு மாளிகையில் தங்கி மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் எனக் கூறப்பட்டு இருப்பதால், அஜித்குமார் தாக்கப்பட்டதைப் பார்த்த நபர்கள் சாட்சியம் அளித்து வருகின்றனர். அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார் மற்றும் அவரது உறவினர்கள், காவலர்கள், கோவில் பணியாளர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். இதன் அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. அதற்குள் சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy5w0qn2pv7o

இந்தியா மீது அமெரிக்கா 500% வரியா? ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க புதிய முயற்சி

1 month ago
பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விவாதம் நீடிக்கிறது. குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இது நமது நலன்களை பாதிக்கக் கூடும் என்றும் செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தற்போது தெரிவித்துள்ளார். அமெரிக்க செய்திச் சேனல் ஏபிசி நியூஸிடம் பேசிய செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம், "எந்த நாடாவது ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு, அதே நேரம் யுக்ரேனுக்கு உதவி செய்யாமல் இருந்தால், அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 500% வரி விதிக்க வேண்டும், இந்தியாவும், சீனாவும் புதினின் 70 விழுக்காடு எண்ணெயை வாங்குகின்றன, அதுவே அவர் தொடர்ந்து போர் புரிய உதவுகிறது. எனது மசோதாவுக்கு இதுவரை 84 எம்.பி.களின் ஆதரவு கிடைத்துள்ளது, எனக் கூறினார். "இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் புதினின் யுத்த கொள்கையை ஆதரிப்பதை நிறுத்தி, அவர் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை உறுதி செய்யும் வகையில் இந்த நாடுகள் மீது வரி விதிக்க தேவையான அதிகாரத்தை இந்த மசோதா அதிபருக்கு வழங்கும்," என்றும் லிண்ட்ஸே கிரஹாம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என பைடன் நிர்வாகமும் விரும்பியது யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்தன. இந்த தடைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. இந்தியா ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என மேற்குலக நாடுகள் விரும்பின, ஆனால் போரின் போது ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் புதிய உச்சத்திற்கு சென்றது. ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் முதன்மையான மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யில் ரஷ்யாவின் பங்கு இரண்டு விழுக்காடுக்கு கீழ் இருந்தது, இப்போது கிட்டத்தட்ட 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ரஷ்ய தடைகள் சட்ட மசோதா 2025 (The Russia Sanctions Act, 2025) அமல்படுத்தப்பட்டால், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் அல்லது யுரேனியம் வாங்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 விழுக்காடு வரி விதிக்கப்படும். இது இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வில் இந்தியா உலகில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. இந்தியா தினமும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 51 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது சுத்திகரிப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம் மசோதாவில் என்ன இருக்கிறது? ரஷ்ய தடைகள் சட்டம் 2025 (The Russia Sanctions Act, 2025) என்பது அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ஒரு மசோதா. யுக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யாவின் மறுப்பு ஆகியவற்றுக்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நாடுகள் மீது பெரிய அளவிலான தடைகளை விதிப்பது இந்த மசோதாவின் நோக்கம். இது அமெரிக்க செனட்டில், செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாமால் ஏப்ரல் 2025ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தற்போது அமெரிக்க செனட் அவையின் பரிசீலனையில் உள்ளது. இது அமலுக்கு வர அவையில் பெரும்பான்மையும் பின்னர் அதிபரின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. இந்த மசோதாவை முன்மொழியும்படி அதிபர் டிரம்ப் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக கிரஹாம் சொல்கிறார். "டிரம்பிடம் தற்போது இல்லாத ஒரு ஆயுதத்தை தர விரும்புகிறோம். ஜூலை மாதத்திற்கு பிறகு நாங்கள் அந்த மசோதாவை நிறைவேற்றுவோம். அதிபர் அதில் கையெழுத்திடுவார். இந்த சட்டத்தில் விலக்கு அளிப்பதற்கான அம்சமும் உள்ளது. அதை அமல்படுத்துவது அதிபரின் கையில் இருக்கும்," என்கிறார் அவர். தங்களுடைய நோக்கம் புதினை பேச்சுவார்த்தைக்கு முன்வர கட்டாயப்படுத்துவதுதான் என்கிறார் கிரஹாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவுக்கு அடுத்து ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடு இந்தியா இந்தியா மீதான தாக்கம் என்னவாக இருக்கும்? ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிக்கும் மசோதா குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டபோது, "செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாமின் மசோதா பற்றி பேசும்போது, எங்களுடைய நலன்களை பாதிக்கக்கூடிய ஏதேனும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தால் அது எங்களுக்கும் முக்கியமானது. நாங்கள் தொடர்ந்து செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்பில் உள்ளோம். எங்களது தூதரகம் மற்றும் தூதரும் அவருடன் தொடர்பில் உள்ளனர். "எரிசக்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான எங்களது கவலைகளை அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளோம். இந்த விஷயம் எங்கள் முன்வந்தால் நாங்கள் அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்." 2022ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்ய எண்ணெயை வாங்கும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. 2025 மே மாதத்தில் இந்தியா தினமும் சுமார் 19.6 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது, இது கடந்த பத்து மாதங்களில் மிகவும் அதிக அளவாகும். இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் தினமும் 20 முதல் 22 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதாக சர்வதேச வர்த்தக ஆய்வு நிறுவனமான கெப்ளரின் முதல்கட்ட தரவுகள் காட்டுகின்றன. இது இரண்டு ஆண்டுகளில் மிக அதிக அளவாகும். அத்தோடு, இராக், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து வாங்கப்படும் மொத்த அளவைவிட அதிகமாகும். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், இதை ரஷ்யாவுக்கு அழுத்தம் தர அமெரிக்கா பயன்படுத்தும் உத்தியாக பார்க்கிறார். "சில நாட்களுக்கு முன் டிரம்ப் குறித்து புதின் நேர்மறை கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இரண்டு நாடுகளின் வெளியுறவுத் துறைகளும் பேசிக் கொண்டிருப்பதாகவும், சில பொருளாதார ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே திரைமறைவில் இருக்கும் நிலை இப்போது தோன்றுவது போல் அவ்வளவு மோசமாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் இன்னமும் பல "இருந்தால்" மற்றும் "ஆனால்" இருக்கின்றன. எனவே, பிரச்னைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம் என ஜெய்சங்கர் சொல்வது சரியானதுதான் என நினைக்கிறேன்," என்கிறார் கன்வல் சிபல். எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சிக்கான மையம் சிந்தனைக்குழுவின் தரவுகள்படி, தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு மே 2025 வரை, ரஷ்ய நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது. 2022 டிசம்பர் 5ஆம் தேதி முதல் 2025 மே மாதம் வரை, ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சீனா 47 விழுக்காட்டையும், இந்தியா 38 விழுக்காட்டையும் வாங்கின. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தடைகள் இருந்தாலும் ரஷ்யாவின் பொருளாதாரம் வளர்ந்துகொண்டிருப்பதாக புதின் சொல்கிறார் மேற்குலகின் தடைகளும், ரஷ்யாவின் பதிலடியும் யுக்ரேன் போர் தொடங்கிய பின்னர், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதிக்கத் தொடங்கின, அவை காலப்போக்கில் மேலும் கடுமையாயின. இந்த தடைகள் ரஷ்யாவின் நிதி, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை பாதிக்கின்றன. யுக்ரேனில் சமாதானம் செய்துகொள்ள தங்களது தடைகள் அதிபர் விளாடிமிர் புதினை கட்டாயப்படுத்தும் என நம்புவதாக மேற்கத்திய நாடுகள் சொல்கின்றன. ஆனால் தர்க்க ரீதியான நியாயங்கள் மட்டுமே ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் மீது கூடுதல் தடைகளை விதித்தால் அதனால் ஐரோப்பாதான் அதிகமாக நஷ்டங்களை சந்திக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தெரிவித்திருந்தார். 2024-ல் ரஷ்யாவின் பொருளாதாரம் 4.3% அளவு வளர்ச்சியடையும் என்றும் ஆனால் அதே நேரம் யூரோ மண்டலம் பொருளாதாரம் வெறும் 0.9% அளவுதான் வளர்ச்சியடையும் என அவர் தெரிவித்தார். இது இந்தியாவுக்கு சவாலான நேரம். இந்தியாவுக்கு மலிவான எரிசக்தி தேவை, அதே நேரம் மேற்குலகின் தடைகளையும் உதாசீனம் செய்துவிட முடியாது. இதைப் போன்ற ஒரு சூழலில் இதுவரை எச்சரிக்கையும், சமநிலையும் கொண்ட ஒரு அணுகுமுறையையே இந்தியா பின்பற்றி வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2d0nrpy159o

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

1 month ago
அவரின் உள்ளாடைக்குள் இருந்தது... உண்மையான பாம்பு தானா என்று வடிவாக பாருங்க ஆபீசர். வேறு எதுவாகாகவும் இருந்திடப் போகுது.
Checked
Sat, 08/09/2025 - 03:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed