புதிய பதிவுகள்2

தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

1 month ago
Published By: DIGITAL DESK 2 06 JUL, 2025 | 05:51 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களின் போது இடம்பெற்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கு எதிர்கால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்கால திட்டமிடல்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு அரசியலமைப்பினால் உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக செயற்படுகிறோம். 09 மாத காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் என்று மூன்று தேர்தல்களை சிறந்த முறையில் நடத்தி முடித்தோம். இந்த தேர்தல்களில் ஒருசில குறைபாடுகளை அவதானித்துள்ளோம். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள், மற்றும் அமைச்சரவை உப குழுக்களிடம் வலியுறுத்தி பல யோசனைகளை முன்வைத்துள்ளோம். நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம். தேர்தல் முறைமையில் நாட்டு மக்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நடக்கிறது. வாக்களித்து விட்டோம் என்ற நிலைப்பாட்டில் பெரும்பாலானவர்கள் உள்ளதை அவதானிக்க முடிகிறது. தேர்தல் முறைமையில் மக்கள் தொடர்ச்சியாக அவதானம் செலுத்த வேண்டும். அப்போது தான் சிறந்த பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும் என்றார். https://www.virakesari.lk/article/219336

கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது

1 month ago
திருக்கோவில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை : இனியபாரதி, தவசீலன் ஆகிய இருவர் சிஜடியினரால் கைது Published By: VISHNU 06 JUL, 2025 | 10:25 PM அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் திருக்கோவில் வைத்தும் அவரது சகாவான சசீதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும் இருவரையும் கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்று திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த 2007-6-28 ம் திகதி விநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருக்கோவிலுள்ள பிரதேச சபையை நோக்கி பிரயாணித்த போது அவரை விநாயகபுரம் கோரக்களப்பு வீதியில் வைத்து இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது மனைவியார் படுகொலை செய்யப்பட்ட தனது கணவருக்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த விசாரணை கடந்தகால அரசாங்கத்தினால் கிடப்பில் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இந்து முறைப்பாடு தொடர்பாக அவரது மனைவியர் சிஜடி யினரிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவர்கள் விசாரணையினை மேற்கொண்டுவந்த நிலையில் இதனுடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இனிய பாரதியை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (06) திருக்கோவில் அவரது வீட்டில் வைத்து கைது செய்ததுடன் அவருடைய சகாவான மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த சசீதரன் தவசீலன் சந்திவெளியில் அவரது வீட்டில் வைத்து சிஜடி மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றம் சாட்டிவருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219343

உலகில் முதல் நாடாக ஆப்கனில் தாலிபன் அரசுக்கு ரஷ்யா அங்கீகாரம் - இந்தியா என்ன செய்யப் போகிறது?

1 month ago
பட மூலாதாரம்,RUSSIAN FOREIGN MINISTRY/HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ராவ் மற்றும் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக செயல்படும் அமிர் கான் முட்டாகி கட்டுரை தகவல் அபே குமார் சிங் பிபிசி செய்தியாளர் 6 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசை அங்கீகரித்த முதல் நாடாகியுள்ளது ரஷ்யா தாலிபன் காபூலைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த பிறகான நான்கு வருடங்களில் இது அவர்களது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் நகர்வு, இதுவரை தாலிபன் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வரும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என நம்புவதாக ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி தெரிவித்தார். ரஷ்யாவின் முடிவை துணிச்சலான முடிவு என அவர் விவரித்தார். இந்த முடிவால், "எரிசக்தி, போக்குவரத்து, விவசாயம் மற்றும் கட்டமைப்பு" ஆகியவற்றில் ஆதாயம் இருப்பதாக கருதுவதாகவும். பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவும் எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. "இதைப் போன்ற நடவடிக்கை ஆப்கானிஸ்தானின் மக்களை மட்டுமல்லாது, மொத்த உலகின் பாதுகாப்பை அபாயத்திற்கு உள்ளாக்குகிறது," என ஆப்கானிஸ்தான் முன்னாள் எம்.பி. ஃபௌசியா கூஃபி தெரிவித்தார். அதே நேரம், 'இது சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஒரு அரசை அங்கீகரிக்கிறது. இந்த ஆட்சி பெண்களுக்கு எதிரானது மட்டுமல்லாது தொடர்ந்து பொது உரிமைகளை நீக்கிவருகிறது,' என ஆப்கான் வுமென் பொலிடிக்கல் பார்டிசிபேசன் நெட்வொர்க் தெரிவித்துள்ளது. பெண்கள் உரிமைகளை மதிப்பதாக தாலிபன் அரசு முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த உரிமைகள் ஆப்கான் பண்பாடு மற்றும் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றிய அவர்களது சொந்த விளக்கத்தை பொறுத்தது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தானில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதுடன், பெண்கள் பெரும்பாலான பணிகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை. கூடுதலாக பெண்கள் தனியாக தொலைதூரம் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள் உள்ளன; அவர்கள் ஒரு ஆண் உறவினர் இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. பட மூலாதாரம்,SEFA KARACAN/ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்ட பின்னர், மாஸ்கோவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் தாலிபன் இடைக்கால அரசின் கொடி பறந்தது. (ஜூலை 4, 2025) இப்போதுவரை சர்வதேச அரங்கில் தாலிபன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை சர்வதேச அளவில் உருவாகியிருக்கும் ஒத்த கருத்தில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஒரு பிரிவை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தாலிபனுக்கு முறைப்படியான அங்கீகாரம் அளிக்காமல், குறுகிய அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம் ஒருவருக்கு தேவையானவற்றை செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இதுவரை இருந்தது. ஆனால் நேரடி அங்கீகாரம் அளித்ததன் மூலம் ரஷ்யா இந்த சிந்தனைக்கு சவால் விடுத்துள்ளது. வாஷிங்டனை சேர்ந்த சிந்தனைக்குழுவான வில்சன் மையத்தைச் சேர்ந்த தெற்காசிய நிபுணர் மைக்கேல் கூகல்மேன், "ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா இருக்கிறது. சீனா அடுத்ததாக இருக்கலாம். இப்போது வரை நாடுகள் தங்களது சொந்த நலனுக்காக தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் ஒரு அதிகாரப்பூர்வ உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது சர்வதேச ஒருமித்த கருத்தாக இருந்தது. ஆனால் தற்போது இந்த கருத்து தற்போது உடைந்து வருவதாக தெரிகிறது." என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ரஷ்யாவின் முடிவை சீனா வரவேற்றுள்ளது. "ஆப்கானிஸ்தான் எங்களது அண்டை நாடு மற்றும் பாரம்பரிய நட்பு நாடு. ஆப்கானிஸ்தான் சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படக்கூடாது என்பதை சீனா எப்போதும் நம்பி வந்திருக்கிறது," என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இருக்கும் ராஜதந்திர சவால் பட மூலாதாரம்,WAKIL KOHSAR/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, 2021 முதல் ஆப்கானிஸ்தானில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் பல வேலைகளை செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ரஷ்யாவின் இந்த முடிவை புரிந்துகொள்ள நாம் முதலில் ரஷ்யா மற்றும் சீனா இடையேயான தொடர்பை பார்க்கவேண்டும் என்கிறார் சர்வதேச உறவுகள் விவகார நிபுணர் ஸ்வஸ்தி ராவ். "சீனா ஏற்கனவே தாலிபனுடன் நேரடித் தொடர்பில் உள்ளது. அதற்கு அங்கு பல முதலீடுகள் உள்ளன. இப்போது முறையான அங்கீகாரம் அளித்த முதல் நாடாக ரஷ்யா உள்ளது. இது ஒரு உத்தி மாற்றம் ஆகும்." என அவர் தெரிவித்தார். 1979ஆம் ஆண்டில், ரஷ்யா ராணுவ ரீதியாக ஆப்கானிஸ்தானில் தலையிட்டு, பல பத்தாண்டுகள் அந்த நாட்டை உள்நாட்டு போர் மற்றும் நிலையற்றதன்மையில் சிக்கவைத்தது. ஆனால் மூஜாஹிதீன் போராட்டக்காரர்களுடன் சோவியத் யூனியன் தொடர்ந்து போரிட வேண்டியிருந்தது. அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா போன்ற நாடுகள் இந்த போராட்டக்காரர்களுக்கு பெரிய அளவில் பொருளாதார மற்றும் ராணுவ உதவி அளித்தன. ஆனால் 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்கா அளித்த ஸ்டிங்கர் ஏவுகணைகள் காரணமாக சோவியத்தின் வான் ஆற்றல் பலவீனமடைந்து, ராணுவத்தை திரும்பப் பெறுவது கோர்பசேவின் தலைமையில் 1988ஆம் ஆண்டு தொடங்கியது. 2021ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறிய பின்னர், தாலிபன் ஆட்சியை மீண்டும் பிடித்தது. இந்த முறை சர்வதேச சூழல் மாறிவிட்டது. இப்போது ரஷ்யா தாலிபனை தனது 'பயங்கரவாத பட்டியலில்' இருந்து நீக்கிவிட்டது. இருநாடுகளிடையேயான வர்த்தக மற்றும் ராஜாங்க உறவுகளைத் தீவிரப்படுத்தியது. "ஐஎஸ் கோரசனை (சன்னி முஸ்லிம் கடும்போக்கு பிரிவு ) கட்டுப்பாட்டுக்குள் வைக்க ரஷ்யா பல்வேறு வகையான அழுத்தங்களை அளிக்கிறது, ஆனால் தாலிபனுடன் நேரடியாக பேசுவதும் அவசியம். இதில் பயங்கரவாத எதிர்ப்புக் கோணமும் உள்ளது." என்கிறார் ஸ்வஸ்தி ராவ். "காவ்கசஸில் (கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவை உள்ளடக்கிய பகுதியை குறிக்கும் சொல்) ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்துள்ளது. இரானும் பலவீனமாக உள்ளதுடன், சிரிய தளமும் அபாயத்தில் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் ரஷ்யாவுக்கு ஒரு வலுவான தளமாக மாறலாம்." யுக்ரேன் போர் காரணமாக ரஷ்யாவின் சர்வதேச அந்தஸ்து வலுவிழந்திருப்பதால், சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா புதிய தளங்களை பார்ப்பதாக அவர் நம்புகிறார். இதில் "யுக்ரேன் போருக்குப் பின் ரஷ்யா, சீனாவை விட சிறிய பங்காளியாகிவிட்டதால் ரஷ்யாவுக்கு சீனாவின் ஆதரவும் கிடைக்கும்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாலிபன் தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு என்கிறார் அனுராதா சினாய் ஜேஎன்யுவின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடிஸின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமானவர் அனுராதா சினாய், "தாலிபன் தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு" என்கிறார். மேலும் பேசிய அவர், "ரஷ்யா போன்ற நாடுகள் ஏன் அங்கீகாரம் அளிக்கின்றனர்? தாலிபன்தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு என அவர்களுக்கு தெரியும். உங்களால் அவர்களை வெளியிலிருந்து மாற்றமுடியாது. அது உள்ளேயிருந்து ஒரு விவாதம் அல்லது இயக்கம் ஏற்பட்டால்தான் மாறமுடியும்." என்றார் அவர் மேலும் அவர், "இதனால்தான் தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவரகளது உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடாமல் இருக்கவும் ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விரும்புகின்றன. இதுதான் அவர்களது கொள்கை" எனத் தெரிவித்தார். தாலிபனுடனான ரஷ்யாவின் நட்பு, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் ஏற்பட வாய்ப்புள்ள நிலையற்றதன்மையிலிருந்து ரஷ்யா தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி என அவர் நம்புகிறார். அதே போல் எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானுக்கு குறுக்கே குழாய் அமைப்பது அல்லது வேறு ஏதேனும் பிராந்திய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், அதில் தாங்கள் பங்கேற்பதை உறுதி செய்ய ரஷ்யர்கள் விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவிக்கிறார். இந்தியா தாலிபானுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கவில்லை. இதுவே இந்தியாவின் பாரம்பரிய கொள்கையாக இருந்துள்ளது என விவரிக்கிறார் ஸ்வஸ்தி ராவ். "இதுவே உலகம் முழுவதும் இந்தியாவின் பாணியாக எப்போதும் இருந்திருக்கிறது. எனவே அது எப்படி திடீரென தாலிபனுக்கு ராஜ்ஜிய அங்கீகாரத்தை வழங்கும்? அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது உறவைவும் பராமரிக்க விரும்புவதால் இந்தியா இதைச் செய்யாது," என அவர் தெரிவித்தார். இந்தியாவின் இந்த முன்னெச்சரிக்கையின் பின், மேற்கத்திய நாடுகளுடன் அதற்கு இருக்கும் விரிவான வர்த்தக மற்றும் ராஜாங்க நலன்கள் உள்ளன. "அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் அதன் உறவுகளை பராமரிக்க விரும்புவதால், இந்தியா சற்று தயங்குகிறது." என்கிறார் அனுராதா சினாய். இந்தியா அதிகாரப்பூர்வமாக தாலிபனை அங்கீகரிக்காவிட்டாலும், ஆப்கானிஸ்தானுடன் 'அங்கீகாரம் இல்லாமல் தொடர்பு கொள்வது' என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகியுடன் தொலைபேசியில் பேசினார். இந்திய வெளியுறவு அமைச்சர் தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் பேசி அது தொடர்பாக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதது இது முதல்முறை. அந்த தொலைபேசி அழைப்பின் போது, பஹல்காம் தாக்குதலுக்கு முட்டாகி கண்டனம் தெரிவித்ததை எஸ் ஜெய்சங்கர் பாராட்டினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின், இரு நாடுகளும் ஒரு அறிக்கையை வெளியிட்டன. " இந்தப் பேச்சுவார்த்தையில், ஆப்கான் மக்களுடனான எங்களது பாரம்பரிய நட்பு மற்றும் அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவைகளுக்கு எங்களுடைய தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை குறிப்பிடப்பட்டன. இந்த ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்து செல்வதற்கான வழிகள் மற்றும் ஆதாரங்கள் விவாதிக்கப்பட்டன." அதே நேரம், "ஆப்கானிஸ்தான் குடியரசின் வெளியுறவு அமைச்சர் மெளலவி அமிர் கான் முட்டாகி மற்றும் இந்திய குடியரசின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் ராஜாங்க உறவுகள் ஆகியவற்றின் மீது இந்த உரையாடல் கவனம் செலுத்தியது," என ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு உருவாக்கப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்தியா மற்றும் தாலிபன் இடையே தொடர்புகள் அண்மை மாதங்களில் அதிகரித்துள்ளது. ஜனவரியில் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அமிர் கான் முட்டாகியை துபையில் சந்தித்தார். "அங்கீகாரம் இல்லாமல் தொடர்பு வைத்துக்கொள்வது என்ற கொள்கையை எதிர்காலத்திலும் இந்தியா தொடர்ந்து பின்பற்றலாம். ஆம் இந்த தொடர்புகள் ஆழமாவதை அது நிச்சயம் உறுதிசெய்யும்." என்று இந்த முன்னேற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறார் ஸ்வஸ்தி ராவ். ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு ஏன் முக்கியமானது? 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தாலிபன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியபோது, அது ராஜாங்க மற்றும் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது இந்தியா, ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்த பல பில்லியன் டாலர்கள் அனைத்தும் வீணாகிவிடும் என தோன்றியது. சாலைகள், எரிசக்தி, அணைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட ஆப்கானிஸ்தானில் 500க்கும் மேற்பட்ட திட்டங்களில் இந்தியா கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்தியா, ஆப்கான் ராணுவ அதிகாரிகளுக்கு ராணுவ பயிற்சி அளித்தது, ஆயிரக்கணகான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளித்ததுடன், அங்கு ஒரு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டியது. ஆனால், "இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு சேவை அதிகாரி ஒருவர் மூலமாக தாலிபன்களுடனான தொடர்ப்பில் இருக்கிறது." என ஆப்கானிஸ்தானுக்கான இந்திய முன்னாள் தூதர் ஜெயந்த் பிரசாத் கடந்த ஆண்டு ஜனவரியில் பிபிசி செய்தியாளர் செளதிக் பிஸ்வாஸிடம் தெரிவித்திருந்தார். "ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு அதன் மூலோபாய ஆழம் தேவை. இந்தியா பல வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் இந்தியாவால் கட்டப்பட்டது. இந்தியாவின் இணை இணைப்புத் திட்டங்கள் பாகிஸ்தானை தவிர்த்துவிட்டுத்தான் முன்னோக்கி செல்லமுடியும் என்பதால் இந்தச் சூழ்நிலை முக்கியமானது," என விளக்குகிறார் ஸ்வஸ்தி ராவ். பல விவகாரங்களில் குறிப்பாக தெரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) விஷயத்தில் பாகிஸ்தானுடன் தாலிபன் ஒத்துப்போவதில்லை என்று கூறியவர், "இந்த பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இந்தியா முயற்சித்து வந்திருக்கிறது." என்றும் தெரிவித்தார். "ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவுக்கு எப்போதுமே நலன் சார்ந்த முரண் இருந்ததில்லை. பல வளர்ச்சி திட்டங்களில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியுள்ளது." என்று தெரிவிக்கிறார் அனுராதா சினாய். அவரின் கூற்றுப்படி, "தாலிபன் அரசும் ஒப்பீடு அளவில் இந்தியாவுடன் மென்மையாக இருந்திருக்கிறது. ஆப்கான் குடிமக்கள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவிற்கு வருகின்றனர். இதுவும் இரண்டு நாடுகளிலும் ஒரு நேர்மறையான தோற்றத்தைப் பராமரிக்கிறது." இதைப் போன்ற ஒரு சூழலில், ராஜாங்கம், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் என மூன்று கோணங்களிலும் ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு முக்கியமானது என நிபுணர்கள் நம்புகின்றனர். இப்போது என்ன? பட மூலாதாரம்,MONEY SHARMA/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை இந்தியாவின் யுக்தி மிகவும் யோசனையுடனும், மெதுவாகவும் நகரும் என நிபுணர்கள் நம்புகின்றனர் ரஷ்யா தாலிபனை அங்கீகரித்து, சீனாவும் ஏற்கனவே தாலிபனுடன் ஆழமான வணிக மற்றும் அரசியல் உறவுகளை கட்டமைத்து வரும் சூழ்நிலையில் இந்தியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். ஒன்று அங்கீகரிக்காமல் தொடர்பு கொள்ளும் கொள்கையை மேலும் சிறிது காலம் தொடரவேண்டும், அல்லது முறையான அங்கீகாரம் வழங்குவதை நோக்கி மெதுவாக நகரவேண்டும். ஸ்வஸ்தி ராவ் இதைப்பற்றி கூறுகையில், "முழுமையான தூதரக அங்கீகாரம் அளிக்கும் நாளில் இந்தியா தன்னையே ஒரு பெட்டியில் பூட்டிக்கொள்ளும்" எனத் தெரிவித்தார். அவரின் கூற்றுப்படி, அனைத்து வாய்ப்புகளையும் திறந்து வைத்திருப்பதுதான் இந்தியாவின் கொள்கையாக இருக்கும். "சமநிலைப்படுத்துவதுதான் இந்தியா எடுக்கக்கூடிய அடுத்த புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். அதாவது சீனாவும், பாகிஸ்தானும் அங்கு முழு ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக இந்தியா தாலிபனுடன் தனது தொடர்பை அதிகரிக்கும், ஆனால் அது உடனடியாக அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது," என்கிறார் ஸ்வஸ்தி ராவ். "இந்தியா தனது உத்தியை சார்பற்றதாக வைத்திருக்கவேண்டும். பாகிஸ்தான் இதைச் செய்தால் இந்தியா இதை செய்யவேண்டும் என்பதாகவோ, ஐரோப்பா அழுத்தம் தருவதால் இந்தியா இதைச் செய்யவேண்டும் என்பதாகவோ இருக்கக் கூடாது." என்கிறார் அனுராதா சினாய். இந்தியா தாலிபனுடன் பேச்சுவார்த்தையை படிப்படியாக அதிகரிக்கவேண்டும் என்பதுடன் அங்கு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் இந்தியா பெரிய பங்காற்றவேண்டும் என்றால் ஒருநாள் அது அங்கீகாரம் அளிக்கவேண்டியிருக்கும் என அவர் நம்புகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c36x48rzd8no

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month ago
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி: 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம். செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்- செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 11வது நாளாக நேற்றைய தினம் நடைபெற்றது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் இதுவரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 44 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1438254

குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!

1 month ago
குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்! ரஷ்யாவின் சில பகுதிகளில், பாடசாலை மாணவியர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைந்துவருகிறது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. ரஷ்யா — உக்ரைன் போரும், மக்கள் தொகை விகிதத்தை குறைத்துள்ளது. போரால், படித்த ரஷ்யர்களில் லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையிலேயே பல்வேறு வரி விலக்குகள், உதவித்தொகை போன்றவற்றை வழங்கி, மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1438224

அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி

1 month ago
டெக்சாஸில் தொடர் கனமழை; 78 பேர் உயிரிழப்பு! கடந்த வெள்ளிக்கிழமை (04) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மத்திய அமெரிக்காவின், டெக்சாஸில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த அனர்த்தத்தில் 41 பேர் காணாமல் போயுள்ளனர். இவற்றில் 28 சிறுவர்கள் உட்பட 68 இறப்புகள், கெர் கவுண்டியில் நிகழ்ந்தன. அங்கு ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ பெண்கள் முகாம் வெள்ளத்தில் மூழ்கியது. இறப்பு எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அடுத்த 24-48 மணி நேரத்தில் இப்பகுதியில் மேலும் புயல்கள் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், அண்மைய டெக்சாஸ் வரலாற்றில் மிகப்பெரிய தேடல் மற்றும் மீட்பு முயற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. https://athavannews.com/2025/1438246

மாவீரர் துயிலுமில்லங்கள் இன் படிமங்கள் | Maaveerar Thuyilumillam Images

1 month ago
மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் கல்லறை 08/02/2005 கருணாவின் தேசவஞ்சக குழுவால் லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட போராளிகளும் இவருடன் அற்றை நாளில் சுட்டுக்கொல்லப்பட்டு வீரச்சாவடைந்தனர்.

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்

1 month ago
உந்த தனிச் சிங்கள சுற்றறிக்கைகளை பாக்க எனக்கு விசர் தான் வாறது. அரச மொழி மூண்டு, இந்த யாழ்தேவியை அதிகம் பாவிப்பவர்கள் தமிழர்கள். மூன்று மொழியும் நன்கு தெரிந்த ஒருவரையாவது அரச வேலையில் இணைக்க முடியாத நிலையிலா சிறிலங்கா இருக்கிறது?

செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு

1 month ago
கேட்கிறன் என்று குறை நினைக்கவேண்டாம் ஒரு தமிழனாய் அவர் சொன்ன வார்த்தைகளில் என்ன பிழை உள்ளது ? இதே சிங்கள அரசியலவாதிகள் தமிழருக்கு எதிராக இனவாதம் கக்கும் போது உங்கள் a1 கார்டூன்கள் பெரிதாக வரவில்லையே என்ன காரணம் ?

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month ago
இங்கிலாந்தை படுதோல்வி அடையச் செய்து டெஸ்ட் தொடரை சமப்படுத்தியது இந்தியா; அந்நிய மண்ணில் இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றி 06 JUL, 2025 | 11:28 PM (நெவில் அன்தனி) பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 336 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என இந்தியா சமப்படுத்தியுள்ளது. அந்நிய மண்ணில் விளையாடப்பட்ட டெஸ்ட் போட்டி ஒன்றில் ஓட்டங்கள் ரீதியில் இந்தியா ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு நோர்த் சவுண்ட் விளையாட்டரங்கில் 318 ஓட்டங்களால் ஈட்டப்பட்ட வெற்றியே இதற்கு முன்னர் அந்நிய மண்ணில் ஓட்டங்கள் ரீதியாக இந்தியா ஈட்டிய மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களைக் கைப்பற்றிய ஆகாஷ் தீப் முதல் தடவையாக 10 விக்கெட் குவியலை டெஸ்ட் போட்டி ஒன்றில் பதிவுசெய்தார். சேத்தன் ஷர்மாவுக்குப் பின்னர் இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டி ஒன்றில் பதவுசெய்த இரண்டாவது 10 விக்கெட் குவியல் இதுவாகும். இதே மைதானத்தில் 39 வருடங்களுக்கு முன்னர் சேத்தன் ஷர்மா இங்கிலாந்துக்கு எதிராக 188 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார். ஆகாஷ் தீப் 99 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். மேலும் இந்திய அணியின் தலைவராக ஷுப்மான் கில் ஈட்டிய முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்தியாவின் இந்த வெற்றியில் ஆகாஷின் 10 விக்கெட் குவியல், மொஹமத் சிராஜ் முதல் இன்னிங்ஸில் பதிவுசெய்த 6 விக்கெட் குவியல், ஷுப்மான் கில் முதல் இன்னிங்ஸில் குவித்த இரட்டைச் சதம் (268) மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் பெற்ற சதம் (161), ரவிந்த்ர ஜடேஜா இரண்டு இன்னிங்ஸ்களிலும் பெற்ற அரைச் சதங்கள், யஷஸ்வி ஜய்ஸ்வால் முதல் இன்னிங்ஸிலும் கே.எல். ராகுல் மற்றும் ரிஷாப் பான்ட் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸிலும் பெற்ற அரைச் சதங்கள் என்பன முக்கிய பங்காற்றின. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட நினைத்துப்பார்க்க முடியாது 608 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் இருந்தது. போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றது. ஜெமி ஸ்மித் 88 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றார். எண்ணிக்கை சுருக்கம் இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 587 (ஷுப்மான் கில் 269, ரவிந்த்ர ஜடேஜா 89, யஷஸ்வி ஜய்ஸ்வால் 87, வொஷிங்டன் சுந்தர் 42, ஷொயெப் பஷிர் 167 - 3 விக்., கிறிஸ் வோக்ஸ் 81 - 2 விக்., ஜொஷ் டங் (119 - 2 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 407 (ஜெமி ஸ்மித் 184 ஆ.இ., ஹெரி ப்றூக் 158, மொஹமத் சிராஜ் 70 - 6 விக்., ஆகாஷ் தீன் 88 - 4 விக்.) இந்தியா 2ஆவது இன்: 426 - 6 விக். டிக்ளயார்ட் (ஷுப்மான் கில் 161, ரவிந்த்ர ஜடேஜா 69, ரிஷாப் பான்ட் 65, கே.எல். ராகுல் 55, ஜொஷ் டங் 93 - 2 விக்., ஷொயெப் பஷிர் 119 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: வெற்றி இலக்கு 608 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 271 (ஜெமி ஸ்மித்து 89, ப்றைடன் கார்ஸ் 38, பென் ஸ்டோக்ஸ் 33, பென் டக்கெட் 25, ஆகாஷ் தீப் 99 - 6 விக்.) ஆட்டநாயகன்: ஷுப்மான் கில். https://www.virakesari.lk/article/219344

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 month ago
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே… உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா… கண்ணதாசன் தன்னை வெளிக் காட்டிய வரிகள்

புதிய உள்ளூராட்சி சபைகள் பழைய சவால்கள் - நிலாந்தன்

1 month ago
பொதுவெளியில் ஒருவர் துப்புவது, அல்லது சிறுநீர் கழிப்பது போன்றவை, சிலருக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. இது சும்மா ஒரு நாள் வந்த பழக்கம் இல்லை. பல வருடங்களாகத் தொடரும் ஒரு வழக்கம்தான். 2009க்குப் பிறகு யேர்மனிக்குப் வந்த சிலர், வெற்றிலை போடுவதையும், பொதுவெளியில் துப்புவதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. ஒரு முறை, ஒருவர் நடைபாதையில் துப்புவதைக் கண்டேன். அவரிடம் நேராகப் போய், "தம்பி, தயவுசெய்து இப்படிச் செய்யாதீர்கள்." என்று சொன்னேன். உடனடியாக அவரிடம் இருந்து வந்த பதில் இப்படி இருந்தது,“நீ என்ன யேர்மனிய போலீஸா?” அத்தோடு போயிருந்தாலும் பரவாயில்லை. அவர் சண்டைக்குத் தயாராக நின்றார். சேர்ட்டின் கை மடிப்பை மேலே இழுத்துவிட்டு ‘வா ஒரு கை பார்க்கலாம்’ என்ற நிலையில் இருந்தார். இவ்விதமான விஷயங்களை சும்மா கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. அரசியலில் ஓர் நிலை ஏற்படுத்த முயற்சிக்கும் சிலர் – வேலை இல்லாமல் வேலன் சாமியாக இருக்கிறவர்களே இவற்றை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அது அவர்களுக்கே நல்ல பெயரைத் தரும். அதோடு நாட்டுக்கும் நல்லதாக இருக்கும்.

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்

1 month ago
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த அதிசொகுசு கடுகதி ரயில், நாளை (7) முதல் கல்கிஸ்ஸ மற்றும் காங்கேசன்துறை இடையே தினமும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு இணையாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு தினமும் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் யாழ்தேவி ரயில் புறப்படும் நேரமும் நாளை முதல் திருத்தப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து ரயில் புறப்படும் நேரம் காலை 6.40 மணியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்கு முன்பு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கான யாழ் தேவி ரயிலின் புதிதாக புறப்படும் நேரத்தை காலை 6.40 மணியாக மாற்றியமைக்க வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmcrj0vuv00tjqp4k7zqtg8ob

கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது

1 month ago
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி கைது பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) திருக்கோவிலில் வைத்து கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இந்த நிலையில் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்வழங்கிய வாக்கு மூலத்தின் பிரகாரம் இனியபாரதியை குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவதினமான இன்று காலை திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்து அம்பாறைக்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றஞ்சாட்டி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmcrhrjg100thqp4kfp26hu6f
Checked
Sat, 08/09/2025 - 06:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed