புதிய பதிவுகள்2

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

1 month 1 week ago
இவ‌ர் தூங்க‌ போகும் போது ம‌கிழ்ச்சியுட‌ன் தூங்கி இருப்பார் காலை எழுந்த‌தும் ஈரான் இஸ்ரேல் த‌லைந‌க‌ர‌த்தை தாக்கி அழித்த‌தை பார்த்து கிழ‌ட்டு கிறுக்க‌னுக்கு கோவ‌ம் வ‌ந்து இருக்கும்................இது ஆர‌ம்ப‌ம் இன்னும் நிறைய‌ இருக்கு அமெரிக்கா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு இப்ப‌ தான் உண்மையான‌ எதிரி கூட‌ மோதின‌ம் , ஈரான் இவ‌ர்க‌ளுக்கு அழிவை ஏற்ப‌டுத்துவின‌ம்........................... உல‌க‌ம் நின்ம‌தியா இருக்க‌னும் என்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த‌ உல‌கில் இருக்க‌ கூடாது....................இவ‌ர்க‌ளின் ராஜ்ஜிய‌த்தை முடித்து க‌ட்ட‌னும்............................

சிஸ்ட்டர் அன்ரா

1 month 1 week ago
கத்தோலிக்கப் பாடசாலைகள் கையை விரித்துவிட, மீதமாயிருந்த ஒரே ஆண்கள் தமிழ்ப் பாடசாலை பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மட்டும்தான். ஆனால் அங்கோ வடக்குக் கிழக்கில் இருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த பல தமிழ் மாணவர்கள் அண்மையில் இணைந்திருந்தமையினால், அங்கும் அனுமதி கிடைப்பது கடிணம் என்றே எமக்குத் தோன்றியது. ஆனாலும் மனம் தளராத அன்ரா, இன்னொரு காலைப்பொழுதில் என்னை அழைத்துக்கொண்டு அங்கு சென்றார். அங்கு அதிபராக இருந்தவர் மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்று நினைவு. அக்காலை வேளையில் மிகவும் சுருசுருப்பாக பாடசாலைப் பணிகள் நடந்துகொண்டிருக்க, அதிபர் தனது அறைக்கு வரும்வரை அமைதியாகக் காத்திருந்தோம். சிறிது நேரத்தின் பின்னர் அறைக்கு வந்த அதிபரை நாம் சந்தித்தோம். முதலில் என்னைப்பற்றி வினவிய அதிபர், கல்லூரியில் இணைவதற்கு எனக்குத் தகமை இருக்கின்றதா என்று பரிசோதித்தார். சாதாரணதரப் பெறுபேறுகள் முதற்கொண்டு பல விடயங்கள் குறித்துக் கேட்டார். இறுதியில், "சிஸ்ட்டர், எனது வகுப்புக்களில் மாணவர்கள் நிரம்பி வழிகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறோம், அப்படியிருக்க உங்கள் பெறாமகனை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது?" என்று உண்மையான வருத்தத்துடன் வினவினார். "அவனுக்கொரு மூலையில் இருக்கவிட்டாலும், இருப்பான், வாங்கு மேசை கூட வேண்டாம், அவன் சமாளிப்பான்" என்று கூறவும், "சரி, உங்கள் விருப்பம்" என்று ஒரு வகுப்பில் இணைத்துவிட்டார். ஆனாலும் நாமும் பணம் கட்டவேண்டி இருந்தது. ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்கள் என்று நினைவு. பீட்டர்ஸ் கல்லூரியில் கேட்ட 15,000 ரூபாய்களுடன் ஒப்பிடும்பொழுது மிகக்குறைவான பணம். சிஸ்ட்டர் அன்ரா கட்டினார், எங்கிருந்து பணம் வந்திருக்குமோ? எனக்குத் தெரியாது. சரி, பாடசாலை கிடைத்துவிட்டது. இனிமேல் என்னைத் தங்கவைக்க இடம் தேடவேண்டும். அதற்கும் பணம் வேண்டும். யார் தருவார்? இப்படி பல சிந்தனைகள் அன்ராவின் மனதில். அவுஸ்த்திரேலியாவில் வாழ்ந்துவந்த எனது மாமாக்கள் (அன்ராவின் இளைய சகோதரர்கள்) இருவரிடமும் உதவி கேட்டார். ஒருவர் உதவ முன்வந்தார். மற்றையவர் உதவும் நிலையில் இல்லை என்று கூறப்பட்டது.

இலங்கையில் இதுவரை 20 மனித புதைகுழிகள் : செம்மணி புதைகுழியின் மர்மம் துலங்குமா?

1 month 1 week ago
Published By: PRIYATHARSHAN 19 JUN, 2025 | 04:06 PM வீ. பிரியதர்சன் உங்கள் பிள்ளை, உடன்பிறந்தவர், கணவன், மனைவி அல்லது பெற்றோர் என ஒரு அன்புக்குரியவர் காணாமல்போனதை கற்பனை செய்து பாருங்கள், அவர்களை மீண்டும் கொண்டுவர அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள், அதற்குப் பதிலாக உங்கள் வேண்டுகோள்கள் செவிடர் காதுகளில் விழுகின்றன. அரசாங்கங்களும் புரட்சிகளும் வந்துபோயின. அனைத்தும் நீதியை உறுதியளித்தன. ஆனால் இறுதியில் அந்த நீதியை வழங்கத் தவறிவிட்டன. ஆயினும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் 3 மூவாயிரம் நாட்களுக்கு மேலாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர் நீதிக்காக. ஆம், இந்நிலையிலேயே 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பாரிய மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணத்தின் அரியாலைப் பகுதியிலுள்ள செம்மணி - சிந்துப்பாத்தி பகுதி அறிவிக்கப்பட்டது. அங்கு 19 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் அங்கு அகழ்வாராய்ச்சி தொடங்கும் போது மேலும் பல எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 எலும்புக்கூடுகளில் 3 பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள், மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம். செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள் மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ்சோமதேவ கூறுகிறார். 1996 ஆம் ஆண்டில் கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் தண்டனை பெற்ற ஒரு இராணுவ சிப்பாயால் 1998 ஆம் ஆண்டில் முதன் முதலில் அம்பலப்படுத்தப்பட்டது செம்மணி புதைகுழி. இதையடுத்து 1999 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற ஆகழ்வின்போது 15 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றில் சில எழும்புக்கூடுகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இருப்பினும் அந்தக்காலப்பகுதியில் நீதி நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் முக்கியமாக தாய்மார்கள் மற்றும் கணவனை தொலைத்த மனைவிமார்கள் தங்கள் காணாமல்போன அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தி நீதி கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அண்மையில் செம்மணியில் உள்ள சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் முன் போராட்டத்தை நடத்திய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர், சர்வதேச மேற்பார்வை மற்றும் சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வினை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதுடன் இது ஒரு தனியான சம்பவமல்ல. இது குறித்த விசாரணைகள் மற்றும் அகழ்வுகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய முழு உண்மையையும் வெளிக்கொணர உதவும்" என கூறினர். இந்நிலையில், “ செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறுவது அவசியம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கு நீதியையும் உண்மையையும் வழங்கும் நோக்கமாக அமைய வேண்டுமென்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம் (CHRD), காணாமல் போனவர்களின் குடும்பங்கள் (FoD), இலங்கை ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS), கொழும்பு சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் - இலங்கை (ITJP) ஆகியன இணைந்து கடந்த 2023 இல் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்களில், உடல்கள் புதைக்கப்பட்ட பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதாகவும் ஆனால் இதுவரை 20 இடங்களில் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இருந்து பகுதியளவில் மனித எச்சங்கள், எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இன்றுவரை தங்கள் அன்புக்குரியவர்களை தொலைத்த எந்தவொரு குடும்பமும் மனித எச்சங்களை பெறவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி குறித்து அரசாங்கமும் தென்னிலங்கை ஊடகங்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் மௌனமாக இருக்கின்றமை வலிகளை ஆழமாக்குவதுடன் இலங்கையின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான வாய்ப்பை அச்சுறுத்துவதாக அமைகின்றது. எனவே அரசாங்கம் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கி, சர்வதேச தடயவியல் தரங்களை உறுதிப்படுத்த வேண்டும். காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்ற நிறுவனங்களை இயங்க வைப்பதன் மூலம் உண்மைகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையை கட்டியெழுப்பி, கடந்த காலத்தில் விட்ட தவறுகளை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம். கடந்த 1971 மற்றும் 1987, 1989 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சிகளின் போது, தெற்கிலுள்ள சிங்களக் குடும்பங்கள் சூரியகந்த மற்றும் மாத்தளை புதைகுழிகளில் இழந்த அன்புக்குரியவர்களை நினைத்து வேதனையையை எதிர்கொண்டனர். அண்மையில் சர்வதேச தொலைக்காட்சி நேர்காணல் மூலம் வெளிச்சத்துக்கு வந்த படலந்த விவகாரம் பொதுமக்களின் சீற்றத்தை தூண்டியது. ஆனால் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு எந்தப்பொறுப்பும் அளிக்கப்படவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என நாம் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அழுதோம். அப்படியானால் நாம் ஏன் செம்மணியிலிருந்து விலகிச்செல்கின்றோம் ? கடந்த காலத்தை எதிர்கொள்வது பிரிவினை அல்ல, அது ஒற்றுமைக்கான பாதையாகும். நல்லிணக்கம் என்பது எமது கடந்த காலத்தின் கொடூரங்களை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான எமது கேடயம், மேலும் பொருளாதார மீட்சிக்கான பாதையும் கூட. நல்லிணக்கம் தான் முன்னோக்கிச் செல்லும் பாதை, அத்துடன் கடந்த கால தவறுகளுக்கு பொறுப்பேற்பது உண்மையைத் தேடுவதற்கும் உண்மையான குணப்படுத்தலுக்கும் இன்றியமையாதது. https://www.virakesari.lk/article/217915

சிஸ்ட்டர் அன்ரா

1 month 1 week ago
கொழும்பை வந்தடைந்ததும் பம்பலப்பிட்டி, லொறிஸ் வீதியில் அமைந்திருக்கும் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவுடன் தங்கியிருந்தோம்.எங்களை எப்படியாவது நல்ல பாடசாலைகளில் சேர்த்துவிடவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நான் 11 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போதே மட்டக்களப்பில் போர் ஆரம்பித்திருந்தது. அக்கா உயர்தரப் பரீட்சைக்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள். கன்னியாஸ்த்திரிகள் மடம் அமைந்திருந்த பகுதியில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலையான புனித மரியாள் மகாவித்தியாலயத்தில் அக்காவைச் சேர்த்துவிட்டார். எனக்குப் பாடசாலை கிடைப்பது கடிணமாகவிருந்தது. 1979 ஆம் ஆண்டில் இருந்து 1982 ஆம் ஆண்டுவரை நான் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியில் எனது சிறுபராயத்தைக் கழித்திருந்தேன். ஆகவே அங்கு சென்று, பழைய மாணவனான எனக்கு அனுமதி தருகிறார்களா என்று பார்க்கலாம் என்று ஒரு காலைப்பொழுதில் என்னையும் அழைத்துக்கொண்டு அக்கல்லூரிக்குச் சென்றார் சிஸ்ட்டர் அன்ரா. நான் படித்த காலத்தில் இருந்ததைக் காட்டிலும் கல்லூரி மிகவும் மாறிப்போயிருந்தது. விசாலமானதாகவும், நவீனமானதாகவும் காணப்பட்டதாக ஒரு பிரமை. கல்லூரி அதிபராகவிருந்த பாதிரியார் ஒருவருடன் என்னை கல்லூரியில் இணைக்க முடியுமா என்று இரைஞ்சுவது போலக் கேட்டுக்கொண்டு நின்றார் அன்ரா. ஆனால் அதிபருக்கோ அதில் சிறிது விருப்பமும் இருக்கவில்லை. கத்தோலிக்கப் பாடசாலையான அக்கல்லூரிக்கு இணையும் மாணவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள். ஆகவே இணையும்போது பாடசாலை வளர்ச்சி நிதிக்கென்று பாடசாலை நிர்வாகம் கேட்கும் பணத்திற்கு அதிகமாகக் கொடுத்து இணைந்துகொள்பவர்கள். அப்படியிருக்கும்போது கன்னியாஸ்த்திரி ஒருவர் கூட்டிவந்திருக்கும் ஏழ்மையான மாணவனை கல்லூரியில் ஏற்றுக்கொள்ள அவருக்கு மனம் வரவில்லை. "மன்னிக்க வேண்டும் சிஸ்ட்டர், தமிழ் மொழி வகுப்புக்களில் இடமில்லை, எல்லா வகுப்புக்களும் நிரம்பி வழிகின்றன, நீங்கள் வேறு பாடசாலை பாருங்கள்" என்று கூறினார். "பாதர், அவனுக்குத் தேவையான மேசையையும், கதிரையினையும் நானே வாங்கித் தருகிறேன், ஏதோ ஒரு மூலையில் அவனையும் இருக்க விடுங்கள்" என்று வேண்டத் தொடங்கினார். எனக்கு முன்னாலேயே எனது அன்ரா அப்பாதிரியாரிடம் இரைஞ்சிக் கேட்பதைப் பார்த்தபோது மிகுந்த கவலையாக இருந்தது. ஆனால் அந்தப் பாதிரியாரோ விடாப்பிடியாகவே மறுத்துவிட்டார். "உங்களுக்கென்று தனியான தமிழ்ப் பாடசாலைகள் இருக்கின்றனவே, அங்கு சென்று கேட்டுப்பாருங்கள்" என்று கையை விரிக்க மிகுந்த ஏமாற்றத்துடன் அன்ராவின் மடம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். சரி, இனி என்ன செய்யலாம்? கல்கிஸ்ஸையில் இருக்கும் தோமஸ் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் அல்லது ஜோசப் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் என்று தனக்குத் தெரிந்த கன்னியாஸ்த்திரிகள், பாதிரிகள் ஊடாக அவர் முயன்று பார்த்தார். இவை எல்லாமே பெருந்தொகைப் பணத்தை பெற்றுக்கொண்டே அனுமதியளிப்பார்கள், பணமின்றி எவருமே உள்ளே வர முடியாது, உங்களின் பெறாமகன் எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதே அனைவரினதும் பதிலாக இருந்தது.

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

1 month 1 week ago
இரானை தாக்கி டிரம்ப் கையில் எடுத்த பேராபத்து என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்டனி ஜுர்சர் பதவி, வட அமெரிக்க செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "அமைதியை நிலைநாட்டுபவராக" இருப்பேன் என்ற வாக்குறுதியுடன் ஜனவரி மாதம் வெள்ளை மாளிக்கைக்கு திரும்பிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் - இஸ்ரேல் இடையே நடைபெறும் இடர்கள் மிகுந்த மோதலில் அமெரிக்காவை திணிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது. இதன் முலம் பதவியேற்றது முதல் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மாறாக, பெரிய போரின் விளிம்பில் இந்த பிராந்தியத்தை டிரம்ப் அழைத்து சென்றுள்ளார். அமெரிக்க படைகள் இரானில் உள்ள மூன்று அணு ஆயுத நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்த இரண்டு மணி நேரத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப், அந்த தாக்குதல் "அற்புதமான வெற்றியை," பெற்றதாக தெரிவித்தார். இந்த நகர்வு, இரான் ஒரு அணு ஆயுத சக்தியாக வளரக்கூடிய வாய்ப்பு இல்லாத ஒரு நீடித்த அமைதிக்கான கதவைத் திறக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட தனது ஃபொர்டோ அணு ஆயுத நிலையத்திற்குச் சிறிய சேதங்கள்தான் ஏற்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது. எந்த தரப்பு சொல்வது உண்மை என்பதற்கு காலம் பதில் சொல்லும். அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடாவிட்டால், "மிகவும் மோசமான மற்றும் மிக எளிதான" தாக்குதல்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு செயலாளார் பீட் ஹெக்செத் ஆகியோர் புடைசூழ, டிரம்ப் இரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய கிழக்கு ஏற்கனவே "விளிம்பில்" இருப்பதாக குறிப்பிட்டார் ஐநா பொதுச் செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ் இன்னமும் "பல இலக்குகளில் எஞ்சியிருப்பதாக" கூறிய டிரம்ப், அமெரிக்கா அவற்றை "வேகம், துல்லியம் மற்றும் திறனுடன்," தாக்கும் எனக் கூறினார். டிரம்ப்பின் வீரவேசமாக பேச்சுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும். இரானில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டால் அது அமெரிக்கா, அந்தப் பிராந்தியம் மற்றும் மொத்த உலகுக்குமே மிக மோசமான சூழ்நிலையாக அமையக்கூடும். மத்திய கிழக்கு ஏற்கனவே "விளிம்பில்" இருப்பதாக குறிப்பிட்ட ஐநா பொதுச் செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ், மோதலைத் தீவிரப்படுத்தும் அமெரிக்காவின் முடிவால் ஒரு சுழற்சியான குழப்பநிலை ஏற்படும் என எச்சரித்தார். அமெரிக்கா தாக்கினால் பதிலடி தரப்படும் என ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்தது போல் இரான் பதிலடி தந்தால் – அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தை அமெரிக்க தரப்பு உணரக்கூடும். பி-2 போர் விமானம், ஜிபியூ- 57: இரானை தாக்க அமெரிக்கா இந்த ஆயுதங்களை இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - டிரம்ப் கூறியது என்ன? அமெரிக்க தாக்குதலில் இரான் அணுசக்தி தளங்களில் ஏற்பட்ட சேதம் என்ன? 5 கேள்வி-பதில்கள் காற்றில் பறந்த டிரம்ப்பின் இரண்டு வார எச்சரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப்பின் வழக்கத்திற்கு மாறான முடிவு, தனது கட்சிக்குள் ஒற்றுமை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாக இருக்கக்கூடும் இரான் "நிபந்தனையின்றி சரணடையவேண்டும்" என இந்த வாரத்தில் டிரம்ப் பேசியது அவர் மேலும் பின்வாங்குவதைக் கடினமாக்கும் ஒரு நிலைக்கு அவரைத் தள்ளக்கூடும். இரானும் தன் பங்குக்கு விடுத்த எச்சரிக்கைகள் காரணமாக அதே போன்றதொரு மூலையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இப்படித்தான் போர்கள் தொடங்கி அதோடு தொடர்புடையவர்களின் கற்பனையையும், கட்டுப்பாட்டையும் மீறி பெரிதாகின்றன. வியாழக்கிழமை, இரானியர்களுக்கு டிரம்ப் இரண்டு வாரம் அவகாசம் கொடுத்திருந்தார், ஆனால் அது எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலமாக- வெறும் இரண்டு நாட்களாக மாறிப் போனது. தான் நடவடிக்கை எடுத்துவிட்டதாக டிரம்ப் சனிக்கிழமை இரவு அறிவித்தார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு "இரண்டு வாரம் அவகாசம்" என்பது வெறும் ஏமாற்றுதானா? இரானியர்களுக்குப் போலியான ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்கும் முயற்சியா? அல்லது அமைதி பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட ஸ்டீவ் விட்காஃப் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததா? தாக்குதலுக்குப் பிந்தைய உடனடி தாக்கம் குறித்து அதிகம் தெரியவில்லை. ஆனால் தனது சமூக ஊடகப் பதிவு மற்றும் தனது தொலைக்காட்சி உரை மூலம் அமைதிக்கான கதவை திறக்க டிரம்ப் முயற்சி செய்தார். ஆனால் இது அதீத நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கலாம். இரானின் ராணுவ வலிமையைக் குறைக்க இஸ்ரேல் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், ஆயதுல்லாவிடம் இன்னமும் ஆயுதங்கள் உள்ளன. நிலைமை வேகமாக மோசமடையக் கூடும். இப்போது காத்திருப்பு தொடங்குகிறது. தனது அணு ஆயுத திட்ட மகுடத்தின் முத்தாக கருதப்படும் ஃபோர்டோ உட்பட மூன்று நிலைகள் மீதான தாக்குதல்களுக்கு இரான் எப்படி பதிலளிக்கப்போகிறது? அமெரிக்க தாக்குதல்கள் பேச்சுவார்த்தையில் இரான் மேலும் இறங்கிவர வழிவகுக்கும் என டிரம்ப் நம்புவதாக தோன்றுகிறது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலில் இருக்கும் போது பேச்சுவார்த்தை நடத்த விரும்பாத ஒரு நாடு, அமெரிக்கா குண்டுமழை பொழியும் போது பேசுவதற்கு தயாராக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். அமெரிக்காவின் தாக்குதல் தனித்துவமான வெற்றி பெற்றதாக டிரம்ப் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. அப்படி இல்லாவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான அழுத்தம் அதிகரிக்கும், மிகக் குறைந்த ராணுவ வெற்றிக்கு டிரம்ப் அதிக அரசியல் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும். டிரம்ப் சந்திக்கும் அரசியல் எதிர்வினைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் தனது நடவடிக்கையை எடுத்துவிட்டார். ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. உள்நாட்டு அரசியல் கவலைகளுடன் சர்வதேச பாதுகாப்பும் இந்த அபாயங்களில் அடங்கும். இரான் மீதான அமெரிக்க தாக்குதல் என்ற கருத்துக்கு ஜனநாயக கட்சியினர் மட்டுமல்லாது, டிரம்பின் "அமெரிக்கா முதலில் (America First)," இயக்கத்திற்குள்ளேயும் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. தனக்கு நெருக்கமான மூன்று ஆலோசகர்கள் உடன் தனது உரையை நிகழ்த்திய டிரம்ப்பின் வழக்கத்திற்கு மாறான முடிவு, தனது கட்சிக்குள் ஒற்றுமை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாக இருக்கக்கூடும். குறிப்பாக வெளியுறவு கொள்கையில் அமெரிக்கா மேலும் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கும் வான்ஸ், டிரம்ப் இன்னமும் பிற நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யாதவர்தான் எனவும் அவரது ஆதரவாளாவர்கள் அவரை நம்ப வேண்டும் எனவும் அண்மையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். இந்த தாக்குதல் ஒருமுறை நடவடிக்கையாக இருந்தால், தனது சொந்த முகாமில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சீர்படுத்த டிரம்பால் முடியலாம். ஆனால் இது அமெரிக்காவை இதைவிட பெரிய மோதல்களுக்குள் இழுத்தால், அதிபர் தனது சொந்த தளபதிகள் மத்தியில் கலகத்தை எதிர்கொள்ள நேரலாம். தனது முதல் பதவிக்காலத்தில் போர் எதையும் தொடங்கவில்லை என மார்தட்டிக்கொண்டவரும், கடந்த ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது வெளிநாட்டு யுத்தங்களில் அமெரிக்காவை ஈடுபடுத்திய முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பரப்புரை செய்தவருமான ஒரு அதிபருக்கு சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதல் ஒரு ஆக்ரோஷமான நடவடிக்கை. டிரம்ப் தனது நடவடிக்கையை எடுத்துவிட்டார். ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyq8550v4eo

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

1 month 1 week ago
ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்; இந்தியா ஒரு நட்பு நாடாக இருக்கும் - பிரதமர் மோடி Published By: VISHNU 22 JUN, 2025 | 08:42 PM ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (22) ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கோவுடன் தொலைபேசியில் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல்-ஈரானியப் போர் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்தும், நிலைமை மோசமடைவதைத் தடுக்க உரையாடல் மற்றும் ராஜதந்திரம் தேவை என்றும் இந்த அழைப்பு விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர தனது எக்ஸ் தளத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது; "ஈரான் ஜனாதிபதி பெசேகியுடன் பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்களுக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தோம். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான முன்னோக்கி செல்லும் வழியாக, உடனடியாக பதற்றத்தைக் குறைத்தல், உரையாடல் மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றுக்கான எங்கள் அழைப்பை மீண்டும் வலியுறுத்தினோம்." 45 நிமிட உரையாடலில், ஈரான் அதிபர் பெசேகி, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு நன்றி தெரிவித்ததோடு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் இந்தியா ஒரு நட்பு நாடாகவும் நண்பனாகவும் இருப்பதாகக் கூறினார். https://www.virakesari.lk/article/218166

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

1 month 1 week ago
நேற்றிரவு ஈரானை தாக்கிய B-2 விமானம் பற்றி உலகமே பேசுகின்றது, முழுமையாக தெரிந்துகொள்வோம்! அமெரிக்காவின் மிக நவீன மற்றும் மிக ரகசியமான போர் விமானங்களில் ஒன்றான B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் நார்த்ரப் கிரம்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த விமானம் 1989 ஜூலை 17-ல் முதல் முறையாக பறந்தது. குளிர் போர் காலத்தில் சோவியத் யூனியனின் ரேடார் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி செல்லும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், அதன் முக்கோண வடிவமும் சிறப்பு பூச்சுகளும் காரணமாக ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத தன்மையைக் கொண்டுள்ளது. B-2 ஸ்பிரிட் விமானத்தின் தொழில்நுட்ப விவரங்கள் அசாதாரணமானவை. இது 40,000 அடி உயரத்தில் மணிக்கு 1,010 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும். விமானத்தின் நீளம் 21 மீட்டர், அகலம் 52 மீட்டர், உயரம் 5.18 மீட்டர் ஆகும். இதன் எடை 1,52,000 கிலோகிராம் வரை இருக்கும். மிக முக்கியமாக, இந்த விமானம் 18,000 கிலோகிராம் வரை குண்டுகளை சுமக்கும் திறன் கொண்டது. இது மறு எரிபொருள் நிரப்பாமல் 11,100 கிலோமீட்டர் தூரம் பறக்க முடியும். B-2 விமானத்தின் சிறப்பம்சம் அது சுமக்கும் அழிவுகரமான ஆயுதங்கள். ஈரானின் அணு தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் மிகப்பெரிய பங்கர் பஸ்டர் குண்டுகளை இதனால் சுமக்க முடியும். இந்த குண்டுகள் 30,000 பவுண்ட் (13,600 கிலோகிராம்) எடையுள்ளவை மற்றும் 200 அடி ஆழம் வரை நிலத்தின் அடியில் உள்ள பங்கர்களை அழிக்கும் திறன் கொண்டவை (ஒவ்வொரு குண்டும் 2 மில்லியன் டொலர்கள்). மேலும் B83 அணுகுண்டுகள், JDAM குண்டுகள், மற்றும் பல்வேறு வகையான துல்லியமான தாக்குதல் ஆயுதங்களையும் இதனால் சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. B-2 விமானத்தின் இயக்க செலவு மிக அதிகம். ஒரு மணி நேர பறப்பிற்கு சுமார் $1,35,000 செலவாகிறது. இதில் எரிபொருள், பராமரிப்பு, மற்றும் பணியாளர் செலவுகள் அடங்கும். ஒரு தாக்குதலுக்கு சராசரியாக $2.2 மில்லியன் டொலர்கள் செலவாகும். B-2 விமானங்கள் பல முக்கிய போர்களில் இதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொசோவோ போரில் 1999-ல் முதல் முறையாக போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் போரில் 2001-ல், ஈராக் போரில் 2003-ல், லிபியா தாக்குதலில் 2011-ல், மற்றும் சிரியாவில் ISIS-க்கு எதிரான தாக்குதல்களில் 2017-ல் சொற்ப அளவிலும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. B-2 விமானம் ஒன்று இரண்டு பங்கர் பஸ்டர் குண்டுகளையே சுமந்து செல்ல முடியும், ஆறு குண்டுகள் ஈரான் மீது வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதால், இந்த தாக்குதலுக்கு 3 B-2 விமானங்கள் அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டுள்ளப்பட்டுள்ளதாக கருதலாம். மொத்தம் 21, B-2 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாக தகவல். ஆரம்பத்தில் 132 விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அதிக செலவு காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விமானத்தின் விலை $2.1 பில்லியன் டொலர்கள் என்பது இதை உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானமாக ஆக்குகிறது. அமெரிக்காவின் பலமாக பார்க்கப்படும் இந்த போர் விமானம், மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது, ரஷ்யாவிடம் T-60 விமானம் உள்ளது, இருப்பினும் அமெரிக்காவின் B-2 விமானமானது பலம்பொருந்தியதாக கருதப்படுகிறது. மேலும் சீனா H-20 என்கிற பலம்பொருந்திய ஸ்டீல் பம்பர் விமானத்தை தயாரித்து வருகிறது, இதன் கட்டமைப்பு 2030 அளவிலே முடிவடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, உலகின் பலம்பொருந்திய போர் விமானமாக B-2 தற்போதுவரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - ஸ ©️Vaanam.lk

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
நேற்றிரவு ஈரானை தாக்கிய B-2 விமானம் பற்றி உலகமே பேசுகின்றது, முழுமையாக தெரிந்துகொள்வோம்! அமெரிக்காவின் மிக நவீன மற்றும் மிக ரகசியமான போர் விமானங்களில் ஒன்றான B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் நார்த்ரப் கிரம்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த விமானம் 1989 ஜூலை 17-ல் முதல் முறையாக பறந்தது. குளிர் போர் காலத்தில் சோவியத் யூனியனின் ரேடார் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி செல்லும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், அதன் முக்கோண வடிவமும் சிறப்பு பூச்சுகளும் காரணமாக ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத தன்மையைக் கொண்டுள்ளது. B-2 ஸ்பிரிட் விமானத்தின் தொழில்நுட்ப விவரங்கள் அசாதாரணமானவை. இது 40,000 அடி உயரத்தில் மணிக்கு 1,010 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும். விமானத்தின் நீளம் 21 மீட்டர், அகலம் 52 மீட்டர், உயரம் 5.18 மீட்டர் ஆகும். இதன் எடை 1,52,000 கிலோகிராம் வரை இருக்கும். மிக முக்கியமாக, இந்த விமானம் 18,000 கிலோகிராம் வரை குண்டுகளை சுமக்கும் திறன் கொண்டது. இது மறு எரிபொருள் நிரப்பாமல் 11,100 கிலோமீட்டர் தூரம் பறக்க முடியும். B-2 விமானத்தின் சிறப்பம்சம் அது சுமக்கும் அழிவுகரமான ஆயுதங்கள். ஈரானின் அணு தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் மிகப்பெரிய பங்கர் பஸ்டர் குண்டுகளை இதனால் சுமக்க முடியும். இந்த குண்டுகள் 30,000 பவுண்ட் (13,600 கிலோகிராம்) எடையுள்ளவை மற்றும் 200 அடி ஆழம் வரை நிலத்தின் அடியில் உள்ள பங்கர்களை அழிக்கும் திறன் கொண்டவை (ஒவ்வொரு குண்டும் 2 மில்லியன் டொலர்கள்). மேலும் B83 அணுகுண்டுகள், JDAM குண்டுகள், மற்றும் பல்வேறு வகையான துல்லியமான தாக்குதல் ஆயுதங்களையும் இதனால் சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. B-2 விமானத்தின் இயக்க செலவு மிக அதிகம். ஒரு மணி நேர பறப்பிற்கு சுமார் $1,35,000 செலவாகிறது. இதில் எரிபொருள், பராமரிப்பு, மற்றும் பணியாளர் செலவுகள் அடங்கும். ஒரு தாக்குதலுக்கு சராசரியாக $2.2 மில்லியன் டொலர்கள் செலவாகும். B-2 விமானங்கள் பல முக்கிய போர்களில் இதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொசோவோ போரில் 1999-ல் முதல் முறையாக போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் போரில் 2001-ல், ஈராக் போரில் 2003-ல், லிபியா தாக்குதலில் 2011-ல், மற்றும் சிரியாவில் ISIS-க்கு எதிரான தாக்குதல்களில் 2017-ல் சொற்ப அளவிலும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. B-2 விமானம் ஒன்று இரண்டு பங்கர் பஸ்டர் குண்டுகளையே சுமந்து செல்ல முடியும், ஆறு குண்டுகள் ஈரான் மீது வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதால், இந்த தாக்குதலுக்கு 3 B-2 விமானங்கள் அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டுள்ளப்பட்டுள்ளதாக கருதலாம். மொத்தம் 21, B-2 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாக தகவல். ஆரம்பத்தில் 132 விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அதிக செலவு காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விமானத்தின் விலை $2.1 பில்லியன் டொலர்கள் என்பது இதை உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானமாக ஆக்குகிறது. அமெரிக்காவின் பலமாக பார்க்கப்படும் இந்த போர் விமானம், மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது, ரஷ்யாவிடம் T-60 விமானம் உள்ளது, இருப்பினும் அமெரிக்காவின் B-2 விமானமானது பலம்பொருந்தியதாக கருதப்படுகிறது. மேலும் சீனா H-20 என்கிற பலம்பொருந்திய ஸ்டீல் பம்பர் விமானத்தை தயாரித்து வருகிறது, இதன் கட்டமைப்பு 2030 அளவிலே முடிவடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, உலகின் பலம்பொருந்திய போர் விமானமாக B-2 தற்போதுவரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - ஸ ©️Vaanam.lk

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

1 month 1 week ago
அஞ்ச‌லோ ம‌த்தியூஸ் ஓய்வு இவ‌ரின் இட‌த்தை பிடிக்க‌ இல‌ங்கை அணியில் வீர‌ர்க‌ள் இல்லை........................அர‌சிய‌ல் த‌லையிட்டால் அழிந்து போன‌ அணி என்றால் அது இல‌ங்கை அணி தான்...............................

வவுனியா மாநகர சபை உறுப்பினரின் முன் மாதிரியான செயற்பாடு

1 month 1 week ago
பிறேமதாஸ் அவர்களின் செயல் பாரட்டிற்குரியது. வறட்சியான பகுதிகளில் வாழும் மக்கள் எவ்வாறு நீரைப் பாதுகாப்பாகச் சேமிக்கலாம் என்பது பற்றியும் அறிவுவுறுத்தப்பட வேண்டும்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
சீனா ஆயுத‌ம் கொடுத்த‌து என்று எழுத‌ ஆச்ச‌ரிய‌ ப‌ட்டிய‌ல் , இப்போது ஈரானுக்கு அணுகுண்டு கொடுக்க‌ மூன்று நாடுக‌ள் த‌யார் அதில் இர‌ண்டு நாடுக‌ள் வெளிப்ப‌டையாக‌ சொல்லி விட்டின‌ம் ஈரானுக்கு அணுகுண்டு தேவைப் ப‌ட்டால் கொடுக்க‌ நாடுக‌ள் இருக்கென‌......................ர‌ம் கோம‌ன‌த்தை இருக்கி க‌ட்டி கொண்டு வ‌ஸ்சின்ட‌னில் இருந்து வாயால் வ‌டை சுட‌ ச‌ரி...................ஈரானை சும்மா விட்டு இருந்தால் இவ‌ள‌வு பிர‌ச்ச‌னையும் வ‌ந்து இருக்காது........................வேலில போன ஓனான வேட்டிக்கை விட்ட‌ க‌தையா போய் விட்ட‌து......................அமெரிக்க‌ன்ட‌ சொல்லை சின்ன‌ நாடுக‌ள் கூட‌ செவி ம‌டுத்தி கேட்க்காது...............................

சிஸ்ட்டர் அன்ரா

1 month 1 week ago
ரஞ்சித், உங்கள் மனதிலுள்ள சுமை ஒன்றை இறக்க முயல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களது இலங்கைப் பயணக் கட்டுரையில் சித்தி பற்றி எழுதியவை நினைவுக்கு வருகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

சிஸ்ட்டர் அன்ரா

1 month 1 week ago
1990, பேச்சுக்கள் முறிவடைந்து புலிகளுடன் பிரேமதாசா யுத்தத்தினை ஆரம்பித்திருந்த காலம். மட்டக்களப்பின் பலவிடங்களிலும் படுகொலைகள். என்னுடன் கூடப்படித்த பல மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். அடிக்கடி நடந்த சுற்றிவளைப்புக்கள், தலையாட்டிகளுக்கு முன்னால் நடந்த அணிவகுப்புக்கள் என்று நகரே அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த கொடிய ஊழிக்காலம் அது. இரவுகளில் கேட்கும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள், மரண ஓலங்கள் என்று தூக்கமின்றி விடுதியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பொழுதுகள் கழித்த இரவுகள். எமது விடுதியை இராணுவம் சுற்றிவளைத்தபோது, பாதிரியர்களாக இருந்த விடுதி பராமரிப்பாளர்களுடன் பேசிக்கொண்டே மாணவர்களை நோட்டம் விட்ட சிங்கள இராணுவக் கப்டன். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த விடுதி மாணவர்களை அழைத்துச் செல்லப்போகிறேன் என்று அவன் அடம்பிடிக்க, பாதிரியார்களோ அவனிடம் கெஞ்சி மன்றாடி அம்மாணவர்களை விடுவித்துக்கொண்ட பொழுதுகள் என்று உயிர் வாழ்தலுக்கான நிச்சயம் இன்றி கடந்துபோன நாட்கள். சில மாதங்களாக மட்டக்களப்பு நகரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் வீதிகள் முற்றாக மூடப்பட்டு, அகோரமான படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்தன. மரணங்களை நாள்தோறும் கண்முன்னே கொண்டுவந்து காட்டிய மூன்று, நீண்ட, கொடிய மாதங்கள். ஒருவாறு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான புகையிரதச் சேவை வாழைச்சேனையிலிருந்து நடைபெறத் தொடங்கியது. ஆனால், வாழைச்சேனைவரை பஸ்ஸில்த்தான் பயணிக்கவேண்டும். மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்கும் இடையிலான வீதியின் பகுதியில் அமைந்திருக்கும் முஸ்லீம் பிரதேசங்களில் பஸ்ஸை மறித்து, ஆண்களை இறக்கி வெட்டத் தொடங்கியிருந்தார்கள் முஸ்லீம் ஊர்காவற்படையினர். என்னையும் அக்காவையும் எப்படியாவது பாதுகாப்பாக மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்குக் கூட்டிவந்துவிட வேண்டும் என்று சிஸ்ட்டர் அன்ரா உறுதி பூண்டார். இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து மட்டக்களப்பிற்கு அவர் வந்தார். அக்காவிற்கும் சிஸ்ட்டர் அன்ராவிற்கும் இருக்கக் கிடைத்த ஆசனத்தில், அவர்களின் கால்களுக்குக் கீழே நாள் ஒளிந்துகொள்ள , எங்களைப்போலவே இன்னும் பலரை ஏற்றிக்கொண்டு அந்தப் பஸ் தனது பயணத்தை ஆரம்பித்தது. முஸ்லீம்களால் நடத்தப்படும் படுகொலைகளில் இருந்து பயணிகளைக் காக்கவென செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது அதுபோன்றதொரு அமைப்போ பஸ்ஸின் முன்னால்ச் செல்ல, மெதுமெதுவாக பஸ் பின்னால் தொடர்ந்து சென்றது. சிலவிடங்கள் பஸ்ஸை மறித்து உள்ளே வர முயன்ற காடையர்களை முன்னால்ச் சென்ற வாகனத்தில் இருந்த அதிகாரிகள் தடுத்துவிட்டனர். வாழைச்சேனையில் புகையிரதத்தில் ஏறும்வரை பஸ்ஸில் இருந்த அனைவரும் உயிர் பிழைப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கவில்லை என்றே கூறலாம்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஜேர்ம‌னிய‌ர்கள் துவ‌ச‌ம் பிடித்த‌வ‌ர்க‌ள் என்று உல‌க‌த்துக்கு ந‌ல்லாக‌ தெரியும் ஹிட்ல‌ர் வ‌ள‌ப்பு அப்ப‌டி...................கால‌ம் க‌ட‌க்க‌ சில‌ர் திருந்தி இருக்க‌லாம் , ஜேர்ம‌னிய‌ர்க‌ளுக்கு த‌ங்க‌ட‌ மொழி தான் பெரிசு என‌ நினைப்பு , ஆங்கில‌ம் அதிக‌ம் தெரியாத‌ கூ முட்டைக‌ள் அதிக‌ம் வாழும் நாடு ஜேர்ம‌ன் , இங்கு வ‌ந்தாலும் அவ‌ர்க‌ளின் பாசையில் தான் க‌தைப்பின‌ம் , ஆங்கில‌த்தில் சொன்னால் புரியாது.................ஆசியா நாடுக‌ளுக்கு ஜேர்ம‌னியின‌ர் ப‌ய‌ண‌ம் செய்தால் சிர‌ம‌ப் ப‌ட‌ போவ‌து அவ‌ர்க‌ள் தான் , ஜேர்ம‌னியில் வ‌சிக்கும் த‌மிழ‌ர்க‌ளுக்கு அந்த‌ பிர‌ச்ச‌னை இல்லை , அவ‌ர்க‌ள் டொச் மொழியும் ஆங்கில‌மும் ந‌ல்லா க‌தைப்பின‌ம்👍.............................

சிஸ்ட்டர் அன்ரா

1 month 1 week ago
வாழ்க்கையில் சிலரை ம றக்க முடியாது ஆயுள் வரை அவர்களின் நினைவு இருக்கும் .அவர்கள் செய்த நன்மையை நெஞ்சார வாழ்த்தும். நல்லதோர் கையில் அடைக்கலமாகி இருக்கிறீர் . கதைப்பகிர்வுக்கு நன்றி. ( முன்பும் ஒரு தடவை இது பறறி சொன்னதாக ஞாபகம்) .

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 1 week ago
ஈரானிய‌ ம‌க்க‌ளோடு நான் அதிக‌ம் ப‌ழ‌கி இருக்கிறேன்................2000ம் ஆண்டு க‌ண‌னி ப‌ற்றி அவ‌ர்க‌ளிட‌த்தில் இருந்து நிறைய‌ க‌ற்றுக் கொண்டேன்.....................எதை வைத்து போலி செய்தி என‌ சொல்லுறீங்க‌ள் , ஆதார‌ம் த‌ர‌வும்😉....................... ஒரு ஈரானிய‌ன் கெட்ட‌வ‌னாக‌ இருந்தால் ஒட்டு மொத்த‌ ஈரானிய‌ர்க‌ளும் கெட்ட‌வ‌ர்க‌ள் என‌ சித்த‌ரிக்க‌ வேண்டாம்...................ந‌ல் ம‌ன‌தோடு ப‌ழ‌கினால் தான் ந‌ல்ல‌ அன்பு கிடைக்கும்🙏👍.........................

சிஸ்ட்டர் அன்ரா

1 month 1 week ago
பாடசாலையில் கணிதபாடம் எனக்குப் புரியவில்லை. சின்னையா டீச்சர் சொல்லித் தந்த கணிதம் எனது மூளைக்குள் இறங்கவில்லை. மிகவும் கடிணப்பட்டேன். ஒரு வார விடுமுறை நாளில் என்னைப் பார்க்க விடுதிக்கு வந்த சிஸ்ட்டர் அன்ராவிடம் இதுகுறித்துக் கூறினேன். சிசிலியா பெண்கள் பாடசாலையில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவர், எனக்கு உதவ முன்வந்தார். தாண்டவன்வெளியில் இருந்த அவரது மடத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை வரச்சொன்னார். தனது வேலைப்பழுவிற்கு நடுவிலும் எனக்குக் கணிதம் சொல்லித் தந்தார். காலையில் 8 மணிக்கு அங்கு சென்றுவிடும் எனக்கு காலையுணவு, மதிய உணவு என்றெல்லாம் தந்து கணிதம் படிப்பித்தார். எனக்கும் கணிதம் சிறிது சிறிதாகப் பிடிக்கத் தொடங்கியது. அவரிடம் கணிதம் கற்ற சில மாதங்களிலேயே பாடசால்யில் என்னால் ஓரளவிற்கு கணிதம் செய்ய முடிந்தது. கூடவே பேரின்பராஜா சேரும் வந்து சேர்ந்துவிட, கணித பாடம் பிடித்துப் போயிற்று. நான் மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கிய முதலாவது வருடத்தில் சிஸ்ட்டர் அன்ரா யாழ்ப்பாணத்திற்கு மாற்றாலாகிச் சென்றார். கவலை என்னை முழுமையாக ஆட்கொள்ள, அவரை வழியனுப்பி வைத்தேன். அக்கா அப்போதும் மட்டக்களப்பிலேயே படித்துவந்தாள். ஆனாலும் சிஸ்ட்டர் அன்ரா போனது மனதை வெகுவாக வாட்டியிருந்தது. சில நாட்கள் அழுதேன், ஆனாலும் வேறு வழியில்லை. வந்தாயிற்று, படித்தே ஆகவேண்டும்.
Checked
Tue, 08/05/2025 - 15:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed