புதிய பதிவுகள்2

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 21 hours ago
மன்னிப்புக் கேட்பது என்பது ஒன்றும் மனிதர்களுக்கு புதியது அல்ல . மனித மாண்புகளில் ஒன்று தான்.... விட்ட தவறை உணர்ந்து பாதிக்கப்பட்ட ..அல்லது பாதிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டு தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்....இன்னொருவரிடம் மன்னித்து விடுங்கள்... எதோ தவறுதலாகப் பேசிவிட்டேன் என்பது . விட்ட தவறுகளை ? கண்டும் காணாதது போல கடந்து செல்லும் மனிதர்களை விட இங்கே சீமான் பரவாயில்லை . மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை என்பது பலரது அரசியல் வாழ்க்கை யிலும் பெரிய திருப்பங்களையும் வெற்றிகளையும் கொடுத்திருக்கின்றது இப்போது சீமானிற்கு இன்னும் 4% வாக்குகள் அதிகரித்திருக்கும் தலைவர்யா அவர்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 22 hours ago
@ரசோதரன் இன்று அவுஸ்ரேலியா விளையாடுவ‌தை பார்த்து ர‌சோத‌ர‌ன் அண்ணாக்கு மெதுவான‌ ப‌ய‌ம் வ‌ந்து இருக்கும் ஹா ஹா ஜ‌க்க‌ம்மாவை அவுஸ்ரேலியா விர‌ட்டி அடிக்க‌ போகுது என‌ ஓவர் வில்டாப் விட்டார் ஹா ஹா😁................... இந்தியா கெத்து💪.........................

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

3 days 22 hours ago
நல்லதொரு விடயம். சுற்றச்சுற்றாடலுக்கு உகந்த விடயம். தாமரை இலையில்,வாழை இலையில் சாப்பிடும் போதெல்லாம் மனதிற்கு குளிர்ச்சியும் சந்தோசத்தையும் தரும். 💚 இது என் சொந்த அனுபவம் மட்டுமே☝. ஆதாரம் கேட்டு பூட்டை ஆட்ட வேண்டாம்.😎

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 22 hours ago
பிகு கனக விஜயனின் முடித்தலை மீது கல்லினை வைத்தான் தமிழன் சேரமகன்…. கங்கை கொண்டான் தமிழன் சோழன் மகன்…. இமய வரம்பில் மீன் கொடி ஏற்றினான் தமிழன் பாண்டியன்… இதை எல்லாம் போல்…. டெல்லி வரை சென்று மானத்தை கப்பல் ஏற்றினான்… சைமன் செபஸ்டியன் என்ற கேரளத்து மைந்தன் என நாளை சரிதிரம் பாடும் 🤣. அண்மைய இரு வாரங்களில் விஜைக்கு யாழ்களத்தில் வழங்கப்பட்ட பூரண கும்பம், முதல் மரியாதை இன்று நான் அண்ணன் சீமானுக்கு வழங்குகிறேன். த்…..தூ….. (தம்பிகள்: துப்பினா துடைச்சுகுவோம்🤣)

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 22 hours ago
"மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன்" என்பது, தவறு செய்த ஒருவர், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது மிகவும் உயர்வான பண்பு என்பதைக் குறிக்கிறது. இந்த பழமொழி, தவறு இழைத்தவர்கள் அனைவரும் மனிதர்கள் என்றாலும், அவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் கொண்டவர்களே மாமனிதர்கள் அல்லது பெரிய மனிதர்கள் என்பதை வலியுறுத்துகிறது. தவறு செய்வது இயல்பு, மனித இயல்பு அது. ஆனால், அந்த தவறை உணர்ந்து, அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது என்பது, ஒருவரின் பெருந்தன்மை மற்றும் மனிதநேயத்தைக் காட்டுகிறது. சீமான் அவர்கள் விஜயலச்சுமியுடன் தொடர்பில் இருக்கவில்லை என எங்கும் எப்போதும் மறுக்கவில்லை.மனைவி துணைவி என மக்களை பேய்க்காட்டவுமில்லை. எனவே மன்னிப்பு என்பதன் மூலம் சீமான் உயர்ந்து நிற்கிறார்.💪

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 days 22 hours ago
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம் Mani Singh SUpdated: Wednesday, October 8, 2025, 12:20 [IST] டெல்லி: நடிகை பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியது. இதேபோல் சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. Also Read இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி மீண்டும் விசாரித்தது. சீமான் தரப்பில் வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக்கோரி ஏற்கனவே கடிதம் வழங்கி இருந்த நிலையில், நடிகை சார்பில் வக்கீல் ஆஜராகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு இடமில்லை என்று கூறினார். இந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நடிகையிடம் சீமான் வரும் 24ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியது. இந்த நிலையில், சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியுள்ளது. சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-quashes-actress-harassment-case-after-ntk-chief-seeman-apology-741497.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards டிஸ்கி மண்டியிடாத மானம்… முழந்தாளிட்டு…ஊ…. ஊரறிய மன்னிப்பு கேட்ட தருணம்🤣. பிகு பாஜக அனுசரானையில் சுப்ரீம் கோர்ட் மாமா வேலை பார்திருக்காவிடின் சைமனுக்கு விளைவு இன்னும் மோசமாய் இருந்திருக்கும்.

வலிந்து காணாமல் போனோர் விசாரணை; இலங்கை தொடர்பில் ஐ.நா. குழு கவலை!

3 days 23 hours ago
வலிந்து காணாமல் போனோர் விசாரணை; இலங்கை தொடர்பில் ஐ.நா. குழு கவலை! காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை கையாள்வதில் இலங்கையின் முன்னேற்றம் இல்லாதது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழு கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) செயல்திறனும் இதில் அடங்கும். குறித்த அலுவலகம் காணாமல் போனோர் தொடர்பான 17,000 முறைப்பாடுகளில் ஒரு பகுதியை மட்டுமே கண்டறிந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் குழு சுட்டிக்காட்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை (07) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழு (UNCED), கட்டாயமாக காணாமல் போனதாகக் கூறப்படும் விசாரணை, வழக்குத் தொடுப்பதில் முன்னேற்றம் இல்லாதது அதிக அளவிலான தண்டனை விலக்கு செயல் என்றும் குறிப்பிட்டது. இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அதிகாரத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC) திங்களன்று நிறைவேற்றிய ஒரு நாளுக்குப் பின்னர் UNCEDவின் இந்த அறிக்கை வந்துள்ளது. https://athavannews.com/2025/1449855

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

3 days 23 hours ago
லஞ்ச் சீற் என்றால் சாப்பிடுகின்ற Plate தானே. வாழை இலையை திணிப்பதற்காக சாப்பிடுகின்ற Plate க்கு தடையா அடுத்த வருடம் யாழ்பாணம் வந்தால் வாழை இலையில் தான் சாப்பிட வேண்டுமா 😒

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

4 days ago
பல விஷயங்களை தொட்டுச் சென்ற பதிவு. உண்மையில் தமிழ் மக்கள் சித்திக்க வேண்டிய கால கட்டம் இது. இதுவரை செய்த தவறுகளை இனி செய்யாமல் இருந்தால்.... மீட்சி உண்டு. இல்லையேல், தந்தை செல்வா சொன்ன மாதிரி... தமிழ் மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். அந்த கடைசிப் பந்தி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. "தொப்பி" அளவானவர்கள் போட்டுக் கொள்ளலாம்.

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

4 days ago
விதூஷனி கிரிதாஸ் Scripted & edited என்று குற்றம்சாட்டப்படும், கிளிஷே டிராமாக்களாகவே இருக்கும் நீயாநானா நிகழ்ச்சியில் முதன்முறையாக ஒரு sensible ஆன விஷயத்தை பகுதி பார்க்க முடிந்தது. சண்முகத்தம்மாள். What a மாமியார்?!!! திருமணமான முதல்மகன் இறந்துவிட, அவரது மனைவியான (தன் மருமகளை) வீட்டைவிட்டு அனுப்பாமல், தானே படிக்க வைத்து, தனது இளையமகனுக்கு திருமணம் செய்துவைத்து, அந்தப்பெண்ணை ஒரு டீச்சராக்கி சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு உயர்த்தி இருக்கும் எழுபத்தியைந்து வயது மாமியார் சண்முகத்தம்மாளின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது. ரிதன்யாக்கள் வரதட்சணை மற்றும் இன்னப்பிற கொடுமைகளால் செத்துக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தில், சண்முகத்தம்மாளும் அவரது இளைய மகனும் ரோல்மாடலாக போற்றப்பட வேண்டியவர்கள்...பின்பற்றப்பட வேண்டியவர்கள்.. இளையமகன் ஏன்? இன்னமும் தனது மனைவியான அண்ணியை, "வாங்க போங்க" என்றே அழைக்கிறார். பாதுகாவலாக இருப்பது மட்டுமே வேலையன்று. பொட்டிழந்தவளுக்கு மரியாதையும் கொடுக்கும் ஆண்கள் ரொம்ப ரொம்ப குறைவு எல்லாம் இல்லை, அல்மோஸ்ட் ஸீரோ.! நவீனத்துவம் என்பது என்னவோ மாநகரங்களின் ஏகபோக குணம் என்பது போன்ற மாயபிம்பங்கள் சுக்குநூறாக உடைந்து போனது. தமிழகத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் சண்முகத்தம்மாளை போன்ற புரட்சி பெண்மணிகள் சத்தமில்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தான் உண்மையான வீரத்தமிழச்சிகள்...போலி திரைபிம்பங்களை , போலி புரட்சியாளர்களை கொண்டாடும் இளைய தலைமுறை இவர்களை பார்த்து ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும்.. எளிமையான மனிதர்களின் வாழ்வியல் முறை என்பது எப்போதுமே மனதால் நிரம்பிய உணர்வுகளால் உந்தப்பட்டிருக்கும். இவர்கள் செய்வதெல்லாம் மாபெரும் புரட்சி என்பதை கூட அறியாதவர்கள். காமிரா வெளிச்சம் இவர்களை மாற்றாதிருக்கட்டும்.. அதுசரி, பலூன் அக்காவையும் மெண்டல் டாக்டரையும் வைத்து பிக்பாஸ் நடத்தும் விஜய்டிவி, இதுபோல் சில அரிதான நிகழ்வுகளால் புண்ணியம் கட்டிக்கொள்ளட்டும்.......! Writer Charithraa's Voir la traduction
Checked
Sun, 10/12/2025 - 08:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed