புதிய பதிவுகள்2

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அவதானம்

4 days ago
இது தவறான பதிவு. “முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து அரசாங்கம் எப்படிப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற தொடர்பில் அரசாங்கம் அவதானம்”. இப்படித் தலைப்பில் பதிவு வருவதுதான் இலங்கைக்கு பொருந்தும்.🤣

எல்ஹெச்டி(LHT) மற்றும் ஆர்ஹெச்டி(RHT) என்றால் என்ன?

4 days 1 hour ago
கார் தயாரிப்பு இடதுகையா? வலதுகையா? அதனை எங்கு தயாரித்தாலும் எப்படித் தயாரித்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால் காரோட்டி எந்தக் கட்சியை சேர்ந்தவர் என்பது இந்தியாவில் மிக மிக முக்கியம்.🤪

தொண்டமானாறு உவர்நீர்த் தடுப்பணையால் வெள்ளப்பாதிப்பனை எதிர்கொள்வோருக்கு தீர்வு முன்வைக்கப்படவேண்டும் - ஆளுநரிடம் தவிசாளர் நிரோஷ் கோரிக்கை

4 days 1 hour ago
தொண்டமானாறு உவர்நீர்த் தடுப்பணையால் வெள்ளப்பாதிப்பனை எதிர்கொள்வோருக்கு தீர்வு முன்வைக்கப்படவேண்டும் - ஆளுநரிடம் தவிசாளர் நிரோஷ் கோரிக்கை புதன், 08 அக்டோபர் 2025 07:18 AM யாழ்ப்பாணம் தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச தாபனங்களின் ஒத்துழைப்புடனோ நிறைவேற்றமாறு வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகத்திடம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்றத் தலைவர்களுக்கும் ஆளுநர் நா. வேதநாயகம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பிலேயே வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அக்கோரிக்கையினை முன்வைத்தார். யாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான பெரும் அர்ப்பணிப்பினை வலிகாமம் கிழக்குப் பிரதேசமே மேற்கொள்கின்றது. தொண்டமானாறு மற்றும் செம்மணி நீரேரிகள் எமது ஆட்சிப் பகுதிக்கு உட்பட்டவை. நிலத்தடி நீரைப்பாதுகாப்பதற்கான உவர் நீர்த்தடுப்புத் திட்டம் இங்கு செயற்படுத்தப்படுவதனால் எமது மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வெள்ளப்பாதிப்பினை எதிர்கொள்கின்றார்கள். அவ்வாறாக மக்கள் பாதிக்கப்படும் போதும் மக்களை நாம் நிலத்தடி நீர்ப்பாதுகாப்புத் திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக பாதிப்புக்களை சகித்து வாழ பல அரச கட்டமைப்பு கோருகின்றது. நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டத்துடன் இணைந்த உப திட்டங்கள் வகுக்கப்பட்டு அதன் வாயிலாக மக்களை வெள்ளப்பாதிப்பில் இருந்து நாம் பாதுகாக்கவேண்டும். அவ்வாறான திட்டங்கள் நிலைத்தகு சிந்தனையுடன் நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் எதிர்கொண்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு தீர்வு காணலாம். ஒவ்வொரு வருடமும் அச்சுவேலி வடக்கு, அச்சுவேலி தெற்கு, ஆவரங்காலின் ஒருபகுதி, வாதரவத்தை, புத்தூர் கிழக்கு என வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் பல பகுதி வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளாகின்றது. இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடர் நிலையை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான நிலையில் மாகாண சபை கூட தனது குறித்தொதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் கீழ் மேற்படி மக்களுக்கு சிறந்த திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி மக்களின் பாதிப்புக்களைக் குறைக்கலாம். அதற்கு ஏனைய உள்ளுராட்சி மன்றங்களும் தமது பகுதிக்கும் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டம் நன்மையளிக்கின்றது என்ற அடிப்படையில் நிதிகள் மாகாண மட்டத்தில் பகிரப்படும் போது விட்டுக்கொடுப்புக்களைச் செய்யமுடியும். மேலும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச கொடையாளர்களிடம் மேற்படி உவர் நீர்த் தடுப்பணை நன்னீர்த்திட்டத்தினை பேணுவதனால் பாதிக்கப்படும் மக்களுக்கான பாதிப்பை நிவர்த்தி செய்யத்தக்க திட்டத்தினை மேற்கொள்ள நிதி கோரிக்கையினை ஆளுநர் முன்வைக்க வேண்டும் என தவிசாளர் நிரோஷ் கோரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து கருத்தரைத்த ஆளுநர் நா.வேதநாயகம் அவர்கள் சர்வதேசத்திட்டங்களில் வாயிலாக பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். . https://jaffnazone.com/news/51110

காசாவின் பேரழிவுகள் தொடர்பில் ஐ.நா. அறிக்கை வெளியீடு – மீட்டெடுக்க 25 ஆண்டுகள் செல்லும்

4 days 1 hour ago
காசாவின் பேரழிவுகள் தொடர்பில் ஐ.நா. அறிக்கை வெளியீடு – மீட்டெடுக்க 25 ஆண்டுகள் செல்லும் October 8, 2025 12:58 pm இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் (07) இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டொலர் கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும். போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம். குப்பைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களே மறுகட்டமைப்புக்கு நீண்ட காலம் எடுக்கக் காரணம். இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவில் உள்ள 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன. காசாவில், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 66,158 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐ.நா முன்னதாக தெரிவித்திருந்தது. ஐ.நாவின் சுயாதீன விசாரணை கமிஷன் காசாவில் இஸ்ரேல் செய்து வருவது இனப்படுகொலை என வரையறுத்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து எகிப்தில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/un-releases-report-on-gaza-disasters-recovery-will-take-25-years/

விந்தணு வங்கி ஊக்கமளிக்கும் பலன்களை அளித்துள்ளது; பத்து பெண்கள் கருத்தரிப்பு !

4 days 1 hour ago
விந்தணு வங்கி ஊக்கமளிக்கும் பலன்களை அளித்துள்ளது; பத்து பெண்கள் கருத்தரிப்பு ! By SRI October 8, 2025 கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஊக்கமளிக்கும் பலன்களை அளித்துள்ளது. இந்த விந்தணு வங்கி சேவை மூலம் பத்து பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் தம்பதிகள் மற்றும் தனிநபர்களிடையே மலட்டுத்தன்மையை நிவர்த்தி செய்வதில் விந்தணு வங்கி பாரிய திருப்புமுனையை எற்படுத்தியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் குமார தண்டநாராயண தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விந்தணு வங்கியில் 150க்கும் மேற்பட்ட ஆண்கள் விந்தணு தானம் செய்ய பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பத்து பெண்கள் கருத்தரித்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவைப் பெற்றுள்ளனர். மலட்டுத்தன்மையால் போராடும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை வழங்குவதே இந்த சேவையின் முதன்மை நோக்கம் ஆகும். “விந்தணு தானம் செய்ய விரும்பும் ஆண்கள், தானம் செய்வதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்,” விந்தணுவை தானம் செய்ய விரும்புபவர்கள் மற்றும் உதவி கோரும் தம்பதிகள் வைத்தியசாலையை தினமும் தொடர்பு கொள்கிறார்கள். “இந்தச் செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறோம். இதேவேளை, இலங்கையில் இளம் தம்பதிகளிடையே அதிகரித்து வரும் கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆண் மலட்டுத்தன்மை ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக மாறியுள்ளது என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதிதாக திருமணமான தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு கருவுறுதலில் சிக்கல்கள் காணப்படுகிறது. இதில் குறைந்த விந்தணு எண்ணிக்கை, விந்தணுவில் விந்தணு இல்லாதது அல்லது முட்டையை கருவுறச் செய்யும் திறனைக் கட்டுப்படுத்தும் பலவீனமான விந்தணு இயக்கம் ஆகியவை அடங்கும். https://www.battinews.com/2025/10/blog-post_814.html

பொன்சேகா மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டில்லை.... மஹிந்த தரப்பினர் கேள்வி

4 days 1 hour ago
பொன்சேகா மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டில்லை.... மஹிந்த தரப்பினர் கேள்வி சரத் பொன்சேகாவைத் தவிர ஏனைய படைத்தளபதிகளுக்கு போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பயணத் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் பொன்சேகாவுக்கு எதிராக ஏன் போர்க்குற்றச்சாட்டுகள் இல்லை? இது பற்றி நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதிப்போரை முடிப்பதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என சரத்பொன்சேகா கூறி வருகின்றார். இது பொய்யான அறிவிப்பாகும். இவ்வாறு போர் முடிவுக்கு வரப்போகின்றது என்பது தனக்குத் தெரிந்திருக்குமானால் முள்ளிவாய்க்கால் போர் நடக்கும் போது பொன்சேகா ஏன் சீனா சென்றார்? ஆயுதம் கொள்வனவு செய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார். போர் முடியப்போகின்றது என்பது உறுதியாக தெரிந்திருந்தால் நாட்டிலேயே இருந்திருக்கலாம் தானே? போர் முடியும் என அவர் நினைக்கவில்லை. அவ்வாறு எண்ணி இருந்தால் அவர் நாட்டில் இருக்கவேண்டும். ஏன் சீனா சென்றார் என்பது பற்றி அவர் தெளிவுபடுத்த வேண்டும். படையினரைக் காட்டிக்கொடுத்ததாலேயே பொன்சேகாவுக்கு ஐரோப்பிய நாடுகளால் பயணத்தடை விதிக்கவில்லை. போர்க்குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என்றார். https://newuthayan.com/article/பொன்சேகா_மீது_எதற்காக_போர்க்குற்றச்சாட்டில்லை...._மஹிந்த_தரப்பினர்_கேள்வி

சுதுமலை அம்மன் ஆலயத்தின் தொன்மையைப் பாதுகாக்கவும்; பிரதேச மக்கள் போராட்டம்!

4 days 1 hour ago
சுதுமலை அம்மன் ஆலயத்தின் தொன்மையைப் பாதுகாக்கவும்; பிரதேச மக்கள் போராட்டம்! சுதுமலை அம்மன் ஆலயத்தின் பழைமையான கட்டடம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய ஆதாரங்கள் இல்லாமற்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீரணி நாகபூஷணி கோவிலிலிருந்து பேரணியாகச் சென்ற மக்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் பிரதேச செயலக பதவிநிலை அதிகாரி ஒருவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர் . போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்; பழைமையான கட்டடம் ஆலயப் புனரமைப்புக்காக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய ஆதாரங்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. புனர்நிர்மாணத்தை நாங்கள் தடுக்கவில்லை தேவையான விடயத்தை புனர்நிர்மாணம் செய்துவிட்டு ஆலயத்தின் பழைமையைப் பேணிப்பாதுகாக்க வேண்டும். கட்டட நிர்மாணத்துக்காக ஊர் மக்களிடம் நிதி சேகரிக்கின்றனர். ஆனால் ஊர்மக்களிடம் அபிப்பிராயம் கேட்பதில்லை. நிர்வாகத்துக்குள் உள்ளவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டும் பட்சத்தில் அவர்கள் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்படுகின்றனர். பழைய கட்டடத்தை இடிக்கக்கூடாது என நாங்கள் ஏற்கனவே பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்திருந்தோம். பிரதேச செய்லகத்தின் துணையுடனேயே இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டது. எனவே இனி இடம்பெறுகின்ற நிர்மாணப் பணிகள் அரச திணைக்களம் ஒன்றின் கண்காணிப்பின் கீழேயே இடம்பெறவேண்டும் - என்றனர். https://newuthayan.com/article/சுதுமலை_அம்மன்_ஆலயத்தின்_தொன்மையைப்_பாதுகாக்கவும்;_பிரதேச_மக்கள்_போராட்டம்!

தங்கத்தின் விலையில் புதிய எழுச்சி; ஒரு பவுண் 320,000 ரூபா!

4 days 1 hour ago
உலக சந்தையில் $4,000 தாண்டிய தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 4,000 டொலரைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் ஸ்பொட் தங்கத்தின் விலை 4,011.18 டொலராக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், இலங்கையில் இன்று (08) தங்கத்தின் விலை 6,000 ரூபாய் அதிகரித்துள்ளதை சந்தைத் தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, நேற்று ரூ.290,500 ஆக இருந்த 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ரூ.296,000 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நேற்று (07) ரூ.314,000 ஆக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ரூ.320,000 ஆக அதிகரித்துள்ளது. உலகின் மிகவும் பிரபலமான கிரிப்டோ பரிமாற்றமான 1 பிட்கொயினின் பெறுமதி முதல் முறையாக $125,000 டொலரைத் தாண்டியது. தங்கத்தின் விலை தற்போது 1970 காலப்பகுதிக்கு பின்னர் தற்போது மிக வேகமான வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இதுவரையான காலப்பகுதி வரை தங்கத்தின் விலை சுமார் 50% அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பான முதலீட்டு கருவியாகக் கருதப்படும் தங்கத்தின் விலை, 2018 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து சுமார் 300% அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் வரிப் போருடன் உலகளவில் எழுந்துள்ள பொருளாதார நிச்சயமற்ற தன்மை இந்த நிலைமையை மேலும் மேம்படுத்தியுள்ளது. அமெரிக்க திறைசேரி உண்டியலின் எதிர்கால நம்பகத்தன்மை குறித்து மட்டுமல்லாமல், உலகின் இருப்பு நாணயமாக அமெரிக்க டொலர் குறித்தும் முதலீட்டாளர்கள் இப்போது சந்தேகங்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். உக்ரைனில் நடந்த போரும் காசாவில் நடந்த போரும் இந்த புவிசார் அரசியல் வெப்பத்தை மேலும் அதிகரித்துள்ளன என்பது இரகசியமல்ல. அமெரிக்க டொலருக்கு மாற்றாகக் கருதப்படும் தங்கம் மற்றும் பிட்கோயினின் மதிப்பு உயர வழிவகுத்த மிக உடனடி காரணியாக, செலவு சட்டமூலம் நிறைவேற்றப்படாமையால் அமெரிக்க அரசாங்க செயல்பாடுகளை கட்டுப்படுத்த வழிவகுத்தது, அவ்வாறு இல்லாவிடின் அமெரிக்க அரசாங்க Shutdown என்று அழைக்கப்படுகிறது. https://www.samakalam.com/உலக-சந்தையில்-4000-தாண்டிய-தங/

நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிராக ஏ-9 வீதியை மறித்து போராட்டம்!

4 days 1 hour ago
நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிராக ஏ-9 வீதியை மறித்து போராட்டம்! அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இன்றைய தினம் (08) அரியாலை கிழக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட இடத்திற்கு வரவேண்டும் எனக் கோரி வீதியை மறித்தனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் போராட்ட இடத்திற்கு வந்தார். இதன்போது மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். “குறித்த பகுதியில் இனிமேல் குப்பை கொட்டுவதற்கு வாகனங்கள் வந்தால், அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என எச்சரிக்கை விடுத்தனர். பின்னர், தவிசாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று ஆளுநர் செயலகத்தில் மற்றொரு மகஜரைக் கையளித்தனர். இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது: “உலகெங்கிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மக்கள் போராடி வருகின்றனர். அரியாலை மக்களாகிய நாமும் நமது ஊரைப் பாதுகாப்பதற்காக, நமது அழகிய ஊரின் நிலம், கடல், நீர்வளம், தூய காற்று போன்ற இயற்கையின் கொடைகளைக் காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நல்லூர் பிரதேச சபை, எமது ஊர் மக்களுடன் எவ்வித கலந்துரையாடலும் நடத்தாமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய குப்பைகளை எமது ஊரில் கொட்டும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது, எமது மக்களால் மட்டுமல்ல, இயற்கையையும் மனிதத்தையும் நேசிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும். ‘இயற்கைப் பசளை உற்பத்தி’ என்ற பெயரில், வகைப்படுத்தப்படாத, மக்காத குப்பைகளை எமது ஊரில் கொட்டி, எமது ஊரை குப்பை மேடாக மாற்றும் முயற்சியை நல்லூர் பிரதேச சபை உடனடியாகக் கைவிட வேண்டும். எமது இயற்கை வளங்கள் இன்றைய தலைமுறைக்கு மட்டுமானவை அல்ல, எதிர்கால தலைமுறைக்கும் உரிமையானவை. எமது ஊரின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உள்ளது. எனவே, மக்களுக்கும் இயற்கைக்கும் விரோதமான இந்த குப்பை மேடு திட்டத்தைக் கண்டித்து, அதனைக் கைவிடக் கோரி, எதிர்வரும் 8ஆம் திகதி மக்கள் அணிதிரள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.” https://www.samakalam.com/நல்லூர்-பிரதேச-சபையின்-த/

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

4 days 2 hours ago
வணக்கம் வாத்தியார் . ..........! பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல செவ்வரளி மொட்டப் போல வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி வெற்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே வச்சிக்கவா …வச்சிக்கவா பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் ஆண் : பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல வேண்டியதை நீ கேளம்மா பெண் : பொட்டுவச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு நாளு இது திருநாள் அய்யா ஆண் : பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி வச்சிக்கவா …வச்சிக்கவா ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா பெண் : தொட்டு விளையாடு நீ கட்டழகியோடு தங்கு தட யேதுமில்ல ஆண் : வெட்டி வெட்டிப் பேச ஏ..கொட்டுதடி ஆச நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல பெண் : கைராசி முகராசி எல்லாமே உன் ராசி உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி வச்சிக்கவா …வச்சிக்கவா ......! --- வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள ---

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்

4 days 2 hours ago
திருமலை 5 மாணவர்கள் கொலைக்குநீதி கோரிய தந்தை ஒருவர் உயிரிழப்பு 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். பிறந்த தினத்தில் சோகம்.. ரஜீகர் மனோகரன் என்ற மாணவனின் படுகொலைக்கு நீதி கோரிப் போராடி வந்த, அவரின் தந்தையான வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் (வயது 84) என்பவரே, எவ்வித நீதியும் கிடைக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். அரச பயங்கரவாதத்தில் கொல்லப்பட்ட ரஜீகர் மனோகரனின் பிறந்தநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமையாகும். மகனின் பிறந்த தினத்திலேயே, அவருக்கு நீதி கோரி வந்த தந்தை காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/trinco-5-students-killed-father-also-died-1758711615

இரான் ஏவுகணை, டிரோன் மூலம் இஸ்ரேலை தாக்கிய இரவில் என்ன நடந்தது? அமெரிக்க போர் விமானிகளின் அனுபவம்

4 days 2 hours ago
பட மூலாதாரம், US Air Force photo by Staff Sgt. Trevor T McBride படக்குறிப்பு, எரிபொருள் நிரப்பிய பிறகு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம். இந்த புகைப்படம் அமெரிக்க விமானப்படை ஆவண காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது. கட்டுரை தகவல் ரெஸா செஃபாரி பிபிசி பெர்ஷியன் சேவை 28 நிமிடங்களுக்கு முன்னர் அன்று ஏப்ரல் 13, 2024- இரவு நேரம். பல தசாப்தங்கள் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரான் முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தியது. அந்த ஆண்டு ஏப்ரலில் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியிருந்தது. இதில் இரான் புரட்சிகர காவலர் படையின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். டமாஸ்கஸ் தூதரக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏப்ரல் 13-ஆம் தேதி இஸ்ரேல் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக இரான் தெரிவித்தது. இரான் இந்த நடவடிக்கைக்கு "உண்மையான வாக்குறுதி" என்று பெயரிட்டதுடன், 'இஸ்ரேல் மீதான அதன் தாக்குதல் மக்களைக் கொல்லும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக பதிலடி கொடுக்கும் தனது திறனை நிரூபிப்பதற்கான சான்று' என்று எச்சரித்தது. சில இரானிய ஏவுகணைகள் இஸ்ரேலில் உள்ள தங்கள் இலக்குகளைத் தாக்குவதில் வெற்றி பெற்றன, ஆனால் ராணுவக் கண்ணோட்டத்தில் இந்த நடவடிக்கை மிகவும் வெற்றிகரமானதாக பார்க்கப்படவில்லை. இரானின் தாக்குதல்களை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மட்டுமே தடுக்கவில்லை. அன்றைய இரவில் அமெரிக்க விமானிகளும் இஸ்ரேலிய விமானிகளுடன் இணைந்து ஒரு முக்கிய பங்காற்றினர். அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகத்தின் (US Central command) கூற்றுப்படி, அமெரிக்கப் படைகள் அன்றிரவு 80 க்கும் மேற்பட்ட இரானிய டிரோன்களையும் ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்தன. அமெரிக்க விமானப்படை அதன் யூடியூப் சேனலில் 'டேஞ்சரஸ் கேம்' (ஆபத்தான விளையாட்டு) என்ற தலைப்பில் ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இது எஃப் -15 இ ஸ்ட்ரைக் ஈகிள் விமானிகளின் கண்ணோட்டத்தில் அந்த இரவின் கதையைச் சொல்கிறது. அந்த ஆவணப்படம் அமெரிக்க ராணுவத்தின் கண்ணோட்டத்தில் அந்த இரவில் நடந்த நிகழ்வுகளை சித்தரிக்கிறது. 36 நிமிட படம் சில பிரசார அம்சங்களையும் கொண்டுள்ளது. எனினும், இந்த ஆவணப்படம் இரான் தாக்குதலின் ராணுவ மற்றும் உளவியல் விளைவுகள் மற்றும் அன்றிரவு அமெரிக்கப் படைகள் எதிர்கொண்ட அழுத்தங்களையும் சிரமங்களையும் விவரிக்கிறது. ஜோர்டானில் 'டவர் 22' மீது தாக்குதல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டவர் 22 தளத்தில் இரானுடன் தொடர்புடைய குழுக்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 13, 2024 அன்று இஸ்ரேல் மீதான இரான் தாக்குதலைப் புரிந்துகொள்வதற்கு முன்பு, தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்வது முக்கியம். 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் காஸாவில் ஒரு போரைத் தூண்டியதுடன், மத்திய கிழக்கின் பிற பகுதிகளிலும் பதற்றங்களை அதிகரித்தது. ஹெஸ்புல்லா வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது. யேமனின் ஹூத்திகளும் ஏவுகணைகளை வீசினர். பின்னர், ஏப்ரல் 1, 2024 அன்று, டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் இரான் புரட்சிகர காவலர் படையின் மூத்த அதிகாரி முகமது ரேசா ஜாஹிதி உட்பட பலர் கொல்லப்பட்டனர். இரான் இதை அதன் இறையாண்மை மீதான தாக்குதல் என்று கண்டித்ததுடன், உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. 2024 ஜனவரியில், ஜோர்டானில் உள்ள 'டவர் 22' மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். "டவர் 22 மீதான தாக்குதலுக்குப் பிறகு, எங்களுக்கு இது தனிப்பட்ட (விவகாரம்) ஆகிவிட்டது" என்று 494 வது ஃபைட்டர் ஸ்குவாட்ரனின் மேஜர் பெஞ்சமின் 'டேஞ்சரஸ் கேம்' ஆவணப்படத்தில் கூறுகிறார். "அமெரிக்க வீரர்களின் மரணம் எங்களுக்கு ஒரு பெரிய அடியாக இருந்தது." என்கிறார். "எங்கள் தோழர்களைப் பாதுகாக்க நாங்கள் அனைவரும் விரைவில் அழைக்கப்படுவோம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்" என்றும் அவர் கூறினார். இரானிய டிரோன்கள் ஒரு 'பிரச்னையாக' மாறியபோது பட மூலாதாரம், US Air Force photo by Staff Sgt. William Rio Rosado படக்குறிப்பு, அமெரிக்காவின் F-15 E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்களால் வான் இலக்குகளையும் தரை இலக்குகளையும் தாக்க முடியும் இரானின் தாக்குதலில் ஷாஹித்-136 டிரோன் முக்கிய பங்கு வகித்தது. குறைந்த செலவில் தயாரித்து விடக் கூடிய அந்த டிரோன்கள் குறைவான உயரத்தில் பறக்கக் கூடியவை, மணிக்கு சுமார் 180 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியவை. அந்த ஆவணப்படத்தில், ஆயுத நிபுணர் என்று விவரிக்கப்படும் முன்னாள் கடற்படை வீரர் அலெக்ஸ் ஹோலிங்ஸ், "ஷாஹித் டிரோன்களின் மிகப்பெரிய சாதகமான அம்சம் என்னவென்றால், அவை மலிவானவை மற்றும் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும்" என்று கூறுகிறார். இந்த டிரோன்களால் எதிரி பாதுகாப்பு அமைப்புகளின் கண்ணில் படாமல் செயல்பட முடியும் என்று கூறிய அலெக்ஸ் அவை எதிரிக்கு ஒரு 'பிரச்னையாக' மாறக்கூடும் என்றும் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்த டிரோன்கள் எதிரி ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மின்னல் வேகத்தில் குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படத்தில் உள்ள நேர்காணல்களின்படி, இதுபோன்ற நேரங்களில் ஆயுத கட்டமைப்பு அதிகாரியின் பங்கு முக்கியமானது. விமானங்களில் ஒன்றில் இருந்த கேப்டன் செனிக், இரானிய டிரோன்களை இனம் காண தரையில் இருந்த அமைப்பை திறம்பட பயன்படுத்தினார். இது ஓர் அசாதாரண செயல்முறை என்றாலும், இந்த சூழ்நிலையில் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த சூழ்நிலையில் விமானிகள் மன அழுத்தத்தைக் குறைக்க தங்கள் வானொலி உரையாடல்களை மட்டுப்படுத்தினர். அந்த இரவு, ஒரே ஒரு வாக்கியம் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது: "அங்கு டிரோன் உள்ளது." பட மூலாதாரம், Reuters "டேஞ்சரஸ் கேம்" ஆவணப்படம் ஒரு சாதாரண இரவின் காட்சிகளுடன் தொடங்குகிறது. நேர்காணல் செய்யப்பட்டவர்களின் கூற்றுப்படி, ஏப்ரல் 13, 2024 இரவு மற்ற இரவுகளைப் போலவே இருந்தது. காலை பணி முடிந்து இரவு பணிக்கானவர்கள் தங்கள் பொறுப்புகளை ஏற்றனர். போர் விமானங்கள் தயார் நிலையில் இருந்தன. அது ஓர் அமைதியான சனிக்கிழமை இரவு. விமானிகள் இரவு உணவை முடித்துவிட்டு வராண்டாவில் அமர்ந்திருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய மோதலின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. 'மீண்டும் அப்படி செய்யாதே' - விமான தளபதி எச்சரிக்கை முதலில், "லைன் ஒன்று" என்று ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது, பின்னர், சில நிமிடங்களுக்குப் பிறகு, விமானிகளின் பெயர்கள் "லைன் இரண்டில்" அழைக்கப்பட்டன. அடுத்த ஒரு மணி நேரத்தில், அமைதியான விமான தளம் அவசர நிலைக்கு சென்றது. ஒரு எஃப் -15 ( F-15) விமானியான மேஜர் பெஞ்சமின், அவரது முந்தைய மதிப்பீடுகள் தவறானவை என்று கூறுகிறார்: "நாங்கள் கற்பனை செய்த அச்சுறுத்தல் உண்மையான தாக்குதலில் 10 முதல் 20 சதவீதம் மட்டுமே." விரைவில் எஃப் -15 களின் முதல் தொகுதி இருளில் பறக்கத் தொடங்கியது. ரேடார் திரைகளில் விரைவில் இரானிய டிரோன்கள் அடுத்தடுத்து தென்பட்டன. இதற்குப் பிறகு, ஏவுகணைகளை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 'ஃபோகஸ் த்ரீ' (Focus Three) அறிவிக்கப்பட்டது, அதாவது ஏவுகணை ஏவும் ரேடார்கள் செயல்பாட்டில் இருந்தன. "நான் ஏவுகணையை இலக்கு நோக்கி செலுத்தினேன்" என்று மேஜர் பெஞ்சமின் கூறுகிறார். "அது வானத்தை ஒளிரச் செய்தது. எனது இரவு நேர கேமரா திடீரென்று ஒளிர்ந்தது." "அது ஓர் ஆச்சரியமான காட்சி, ஏனென்றால் நான் ஓர் உண்மையான சூழ்நிலையில் ஒரு AMRAAM (வான் இலக்குகளை தாக்கக் கூடியது) ஏவுகணையை பயன்படுத்தியது இதுவே முதல் முறை" என்கிறார் அவர். மற்றொரு விமானி , "இந்த பணி எவ்வளவு ஆபத்தானது என்பதை என்னால் விவரிக்க முடியாது. ஒரு கட்டத்தில், நான் தரையில் இருந்து 1,000 அடி உயரத்தில் மட்டுமே பறந்தேன். பறப்பதற்கான பாதுகாப்பான உயரம் 4,000 அடியாக இருந்தது" என்று ஆவணப்படத்தில் கூறுகிறார். ஏவுகணைகள் தீர்ந்த போது, தங்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் லேசர் வழிகாட்டப்பட்ட ஏவுகணையால் இரானிய ஷாஹித் டிரோன்களை குறிவைக்க முயன்றார் என்று இந்த விமானிகள் கூறுகின்றனர். "நாங்கள் இரானிய டிரோன் மீது ஒரு வெடிகுண்டை வீசி லேசர் மூலம் வழிநடத்த முயற்சித்தோம். முதலில், அது வேலை செய்தது போல் தோன்றியது; ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது, நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் அடுத்த கணம், நாங்கள் மீண்டும் டிரோனைப் பார்த்தோம்." என்கின்றனர். "விமான தளபதி உடனடியாக எங்களுக்கு வானொலி மூலம் , 'மீண்டும் அதைச் செய்யாதீர்கள்' என்று எச்சரித்தார். 'என்னால் 13 வரை மட்டுமே எண்ண முடிந்தது' விமானிகள் தங்கள் கடைசி ஏவுகணைகளை ஏவியபோது, விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக தளத்திற்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது, மோதலின் மற்றொரு அம்சத்தை விமானிகள் கண்டனர் - இரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வானத்தில் பார்த்தனர். கிழக்கு திசையில், "வானம் ஆரஞ்சு நிற ஒளியில் பிரகாசித்தது. நான் உடனடியாக ஏவுகணைகளை எண்ணத் தொடங்கினேன். ஏவுகணைகள் மிக வேகமாக வந்து கொண்டிருந்ததால், 13 ஏவுகணைகளுக்கு பிறகு நான் எண்ணுவதை நிறுத்த வேண்டியிருந்தது." என்று ஒரு விமானி அந்த ஆவணப்படத்தில் விவரிக்கிறார். இந்த ஏவுகணைகள் வானிலேயே மிக உயரத்தில் அழிக்கப்பட்டன. அந்த காட்சிகள் விமானிகளுக்கு பயங்கரமானதாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தன. வானத்தில் அழிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்கள் தரையில் விழுந்தன. 'ஃபார்முலா ஒன் பந்தயம் போன்ற சூழல்' பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் வீழ்த்தப்பட்ட இரானிய ஏவுகணையின் ஒரு பகுதி அந்த நேரத்தில், விமானிகளின் தளத்தில் சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டது, அதாவது அனைவரும் பாதுகாப்பான இடத்தை அடைய வேண்டும் என்று அர்த்தம். ஆனால், 'வூடூ' என்ற விமான தளபதி வானொலி மூலம் "சிவப்பு எச்சரிக்கை என்பது விமானங்களில் ஏவுகணைகளை நிறுவி தயார் நிலையில் வைத்து, பின்னர் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்துவது" என்று அறிவித்தார். ஆவணப்படத்தில், பைலட் இந்த சூழ்நிலையை 'ஃபார்முலா ஒன் பந்தயம்' போன்று இருந்தது என்று விவரிக்கிறார். அந்த நேரத்தில், தொழில்நுட்பக் குழு விமானத்திற்கு எரிபொருளை நிரப்பியது, ஏவுகணைகளை பொருத்தியது, அசாதாரண சூழலுக்கு நடுவே இயந்திரங்களை அக்குழு ஆய்வு செய்தது. "அந்த இரவு தான் நான் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை முதல் முறையாக பார்த்தேன்" என்று குழு அதிகாரி ஒருவர் கூறினார். "இந்த முழு செயல்முறையும் வெறும் 32 நிமிடங்களில் முடிக்கப்பட்டது, வழக்கமாக விமானத்திற்கு எரிபொருள் நிரப்பவே இவ்வளவு நேரம் ஆகும்" என்று அவர் கூறினார். இந்த ஆவணப்படம் விமானிகள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தளத்திற்குத் திரும்புவதை காட்டுகிறது. ஒரு விமானி "கட்டுப்பாட்டு அறையிலிருந்து எந்த பதிலும் இல்லை, அவர்களை வழிநடத்த யாரும் இல்லை" என்று கூறினார். பின்னர் அவரும் அவரது சக விமானிகளும் அனுமதி பெறாமல் தங்கள் சொந்த பொறுப்பில் ஓடுபாதையில் தரையிறங்கினர். அந்த நேரத்தில், கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு குரல் , "தாக்குதலுக்கு இன்னும் ஒரு நிமிடம் உள்ளது. நாம் பேச முடியாது." என்று கூறியது. இதற்குப் பிறகு திடீரென்று அமைதி நிலவியது. அந்த விமானி, "இது நான் தயாராக இல்லாத ஒரு சூழல். நான் தாக்குதல் நடத்த தயாராக இருந்தேன், ஆனால் ஏற்கனவே தாக்குதலுக்குள்ளான ஒரு தளத்திற்கு, விமானத்தில் குறைவான எரிபொருளுடன் வர தயாராக இல்லை" என்றார். பின்னர் ஆபத்து தவிர்க்கப்பட்டு, விமானங்கள் தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கின. விமானிகள் வெளியே வந்தபோது, அவர்களின் மொபைல் போன்கள் குடும்பத்தினர் அனுப்பிய செய்திகளால் நிரப்பப்பட்டிருந்தன. அந்த நேரத்தில் ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் "இரான் இஸ்ரேல் மீது மிகப்பெரிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது" என்று வெளிவந்தன. 'டேஞ்சரஸ் கேம்' -ன் இறுதியில், ஒரு விமானி , "எங்களிடம் இருந்த எட்டு ஏவுகணைகளில், ஒன்று மட்டுமே எஞ்சியிருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதை ஏவ முடியவில்லை, அது எங்கள் தவறு அல்ல" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c24r0q77ldno

வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களை கண்காணிக்க நடவடிக்கை

4 days 2 hours ago
08 Oct, 2025 | 10:30 AM வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் சுகாதார வசதிகள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண ஆளுநர் அறிவுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றது. அதன் போதே ஆளுநர், தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய சுகாதார வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக அவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/227182

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

4 days 2 hours ago
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை! adminOctober 8, 2025 வடக்கு மாகாணம் முழுவதிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழை இலையைப் பயன்படுத்துவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக் கலந்துரையாடலில், வடக்கு மாகாணம் முழுவதிலும் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழையிலையைப் பயன்படுத்துவது மற்றும் உணவுத்தட்டுக்களை கொதிக்க வைப்பது ஆகியவற்றை பின்பற்றலாம் என்றும் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது . https://globaltamilnews.net/2025/221270/

வடமாகாணத்தில் இருந்து முதலீட்டாளர்கள் திரும்பி செல்கின்றனர்!

4 days 2 hours ago
வடமாகாணத்தில் இருந்து முதலீட்டாளர்கள் திரும்பி செல்கின்றனர்! adminOctober 8, 2025 வடமாகாணத்தில் முதலீட்டாளர்கள் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இழுபறிகள் காரணமாக திரும்பிச் செல்கின்றனர். எனவே உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்ளவேண்டும் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். பிரதேச சபைகளில் பணியாற்றுபவர்களின் எண்ணங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மக்கள் பல்வேறு அனுமதிகள் தாமதமடைவதாக சுட்டிக்காட்டுகின்றார்கள். மக்களுக்கான சேவைகளை துரிதமாக செய்து கொடுக்க வேண்டும். தவிசாளர்களும், செயலாளர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் ஊடாகவே அபிவிருத்தி சாத்தியமாகும். திண்மக் கழிவு அகற்றல் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சவாலாகி வருகின்றன. திண்மக் கழிகளை தரம்பிரிக்கும் நிலையங்களை ஒழுங்காக செயற்படுத்தாதன் காரணமாக மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றார்கள். எனவே அது தொடர்பில் சபைகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்தல், கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியனவற்றை செயற்படுத்தவேண்டும். இது தொடர்பில் பொலிஸாரின் ஒத்துழைப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பெற்றுத்தரப்படும். எதிர்வரும் மழை காலத்துக்கு முன்னர் சபைகளுக்கு உட்பட்ட அனைத்து வாய்க்கால்கள், மதகுகளை துப்புரவு செய்யுங்கள். சில சபைகள் ஏற்கனவே எங்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவான நடவடிக்கையை எடுத்துள்ளன. அதை ஏனைய சபைகளும் செய்ய வேண்டும். அதேநேரம், வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக அமைந்துள்ள சட்டமுரணான கட்டுமானங்களை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்டங்களுக்கான குடிபுகு சான்றிதழைப் பெற்றுக் கொள்வதை கட்டாயமாக்குவதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆரம்பிக்கவேண்டும். அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான கடைகள் பல உரிமம் மாற்றம் செய்யப்படாமல் நீண்ட காலமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு விரைவான பொறிமுறையைத் தயாரிக்கவேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு விதமான முதலீட்டாளர்களையும் ஈர்க்கவேண்டும். முதலீட்டாளர்கள் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இழுபறிகள் காரணமாக திரும்பிச் செல்கின்றனர். எனவே உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்ளவேண்டும். இதேநேரம், முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகையை வழங்குவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் சபைத் தீர்மானத்துடன் உரியவாறு அனுப்பி வைத்தால் அனுமதி வழங்க முடியும் சபைகள் தங்களின் வருமானங்களை உயர்த்தும் வகையில், மிக நீண்ட காலம் மேற்கொள்ளப்படாதுள்ள சோலை வரி மீளாய்வை துரிதமாகச் செய்து முடிக்க வேண்டும். சபைகள் தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட மயானங்களின் எல்லைகளை உரியமுறையில் அடையாளப்படுத்தி அவற்றை அழகுபடுத்தவேண்டும். வாகனப் பாதுகாப்பு தரிப்பிடங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படுவதுடன் அங்கு ரசீது வழங்குபவர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். https://globaltamilnews.net/2025/221273/

வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

4 days 3 hours ago
வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இளைஞன் கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகேநபர் குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டு , இளைஞனை கைது செய்தனர். அதன் போது வீட்டில் இருந்து கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் , ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையடக்க தொலைபேசி என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இன்று அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1449816

தங்கத்தின் விலையில் புதிய எழுச்சி; ஒரு பவுண் 320,000 ரூபா!

4 days 3 hours ago
தங்கத்தின் விலையில் புதிய எழுச்சி; ஒரு பவுண் 320,000 ரூபா! புதன்கிழமை (08) 4,000 அமெரிக்க டொலர்களைத் தாண்டி சாதனை அளவை எட்டியது. அதிகரித்து வரும் பொருளாதார, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் மேலும் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளே இதற்கு காரணம். GMT 0300 நிலவரப்படி ஸ்பாட் தங்கம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,011.18 ஆக இருந்தது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,033.40 ஆக இருந்தது. பாரம்பரியமாக, நிலையற்ற காலங்களில் தங்கம் ஒரு மதிப்புக் களஞ்சியமாகக் கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் 27 சதவீதம் விலை உயர்ந்த பின்னர், ஸ்பாட் தங்கம் இன்று வரை 53 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வர்த்தகத்தில் இப்போது மிகுந்த நம்பிக்கை இருப்பதால், தங்கத்தின் விலையானது எதிர்காலத்தில் 5,000 டொலர்களை எட்டக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்புகள், தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, உறுதியான மத்திய வங்கி கொள்முதல், தங்க பரிமாற்ற-வர்த்தக நிதிகளில் முதலீடு மற்றும் பலவீனமான அமெரிக்க டொலர் உள்ளிட்ட பல காரணிகளால் மஞ்சள் உலோகத்தின் ஏற்றம் உந்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஏனைய விலைமதிப்பற்ற உலோகச் சந்தைகளில், ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 1.3 சதவீதம் உயர்ந்து 48.42 அமெரிக்க டொர்களாகவும், பிளாட்டினம் 2.5 சதவீதம் உயர்ந்து 1,658.40 அமெரிக்க டொலர்களாகவும், பல்லேடியம் 1.8 சதவீதம் உயர்ந்து 1,361.89 அமெரிக்க டொலர்களாகவும் உள்ளது. இதனிடையே, அமெரிக்க அரசாங்க முடக்கம் செவ்வாயன்று (07) ஏழாவது நாளை எட்டியது. கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (08) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 320,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 296,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1449812
Checked
Sun, 10/12/2025 - 08:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed