4 days 15 hours ago
அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு யாழ் சிறையின் நிவாரண உதவி Dec 13, 2025 - 03:43 PM டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (13) கையளிக்கப்பட்டன. சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கி 180 பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அத்தியட்சகர் சீ.இந்திரகுமார், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து இந்த உதவிகளை கையளித்தமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmj45258202p8o29nr8beo4ne
4 days 15 hours ago
அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாய் Dec 13, 2025 - 07:05 PM 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக 1,809 பில்லியன் ரூபாவும், இலங்கை சுங்கம் ஊடாக 1,970 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களம் ஊடாக 192 பில்லியன் ரூபாவும் வரி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய வழிகளில் 62 பில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் தகவல்களின் படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 302 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் வாகன இறக்குமதி வரி வருமானம் 48 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்ததுடன், 2025 ஆம் ஆண்டில் 350 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் வரி வருமானத்திற்கு அதிகபட்ச பங்களிப்பு வற் (VAT) வரியின் ஊடாகக் கிடைத்துள்ளதுடன், அது 1,615 பில்லியன் ரூபாவாகும். இதற்கு மேலதிகமாக வருமான வரி மூலம் 1,167 பில்லியன் ரூபாவை 2025 ஜனவரி - ஒக்டோபர் காலப்பகுதிக்குள் பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmj4c9shv02pgo29nwy80r7y6
4 days 15 hours ago
19இன் கீழ் உலகக் கிண்ணம்: இலங்கையை எதிர்த்தாடவுள்ள இலங்கை வம்சாவளி ஆஸி. Published By: Digital Desk 3 12 Dec, 2025 | 03:12 PM (நெவில் அன்தனி) நமீபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறும் இலங்கை வம்சாவளி வீரர்கள் இருவர் இலங்கையை எதிர்த்தாடவுள்ளனர். சிட்னி பெரும்பாகத்தில் அமைந்துள்ள பராமட்டா மாவட்ட கிரிக்கெட் கழகத்திற்காகவும் நியூ சௌத் வேல்ஸ் மாநில அணிக்காகவும் விளையாடிவரும் நிட்டேஷ் சமுவேல், நேடென் குறே ஆகிய இரண்டு வீரர்களே அவுஸ்திரேலிய இளையோர் அணியில் இடம்பெறும் இலங்கை வம்சாவளி வீரர்களாவர். ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் ஒரே குழுவில் இடம்பெறுவதால் இந்த இரண்டு இலங்கை வம்சாவளி வீரர்களும் இலங்கையை எதிர்த்தாடுவார்கள் என பெரிதும் நம்பப்படுகிறது. பேர்த்தில் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் தேசிய சம்பின்ஷிப் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற நியூ சௌத் வேல்ஸ் மெட்ரே அணிக்காக விளையாடிய இவர்கள் இருவரும் மிகத் திறமையான ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் பலனாக அவுஸ்திரேலிய இளையோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் தேசிய சுற்றுப் போட்டியில் நிட்டேஷ் சமுவேல் 129 ஓட்டங்கள் என்ற அதிகூடிய எண்ணிக்கையுடன் 91.00 என்ற அதிசயிக்கத்தக்க சராசரியைப் பதிவுசெய்து மொத்தமாக 364 ஓட்டங்களைப் பெற்று சுற்றுப் போட்டியின் நாயகன் விருதை வென்றெடுத்தார். இவரை விட வேறு எவரும் இந்த சுற்றுப் போட்டியில் 200 ஓட்டங்களை எட்டவில்லை. இதேவேளை பந்துவீச்சில் நிட்டேஷ் சமுவேலின் சக அணி வீரர் நேடென் குறே 17.82 என்ற சராசரியுடன் 11 விக்கெட்களைக் கைப்பற்றி இந்த சுற்றுப் போட்டியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் வரிசையில் 5ஆவது இடத்தைப் பெற்றார். அவரது அதிசிறந்த பந்துவீச்சு பெறுதி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களாகும். அவர்கள் இருவரும் சுற்றுப் போட்டியின் சிறப்பு அணியிலும் பெயரிடப்பட்டமை விசேட அம்சமாகும். ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் ஏ குழுவில் இடம்பெறுகின்றன. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி நமீபியாவின் தலைநகர் விண்ட்ஹோக்கில் அமைந்துள்ள விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் சிட்னி மாநகரை அண்மித்த பராமட்டா மாவட்டத்தில் தமிழ், சிங்களம் பேசக்கூடிய இலங்கையர்கள் வாழ்ந்துவருகின்றனர். https://www.virakesari.lk/article/233182
4 days 15 hours ago
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி 2025-27 டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு செய்தது நியூஸிலாந்து 12 Dec, 2025 | 02:05 PM (நெவில் அன்தனி) வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (12) நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை 9 விக்கெட்களால் மிக இலகுவாக நியூஸிலாந்து வெற்றிகொண்டது. 2025- 27 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் நியூஸிலாந்து ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். இந்த வருடம் தனது 31ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய பின்னர் நியூஸிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜேக்கப் டவி, இந்தத் தொடரில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து மேற்கிந்தியத் தீவுகளை இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களுக்கு சுருட்ட உதவினார். முதலாவது இன்னிங்ஸிலும் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இருக்கவில்லை. கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் முதலாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்து அப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பிரகாசிக்கத் தவறி தோல்வியைத் தழுவியது. கடந்த புதன்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ப்ளயா டிக்னர், மைக்கல் ரே ஆகிய இருவரும் திறமையாகப் பந்துவீசி மேற்கிந்தியத் தீவுகளைக் கட்டுப்படுத்தினர். களத்தடுப்பின்போது உபாதைக்குள்ளான ப்ளயா டிக்னர் அதன் பின்னர் இந்தப் போட்டியில் பங்குபற்றவில்லை. ஷாய் ஹோப், ஜோன் கெம்பல், ப்றண்டன் கிங் ஆகிய மூவரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்று தனது முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. டெவன் கொன்வே, மிச்செல் ஹே ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள், இரண்டாவது இன்னங்ஸில் ஜெக்கப் டபியின் துல்லியமான பந்துவீச்சில் சின்னாபின்னமாகி 128 ஓட்டங்களுக்கு சுருண்டனது. மேற்கிந்தியத் தீவுகளின், இண்டாவது இன்னிங்ஸில் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். தொடர்ந்து 56 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து ஒரு விக்கெட்டை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. எண்ணிக்கை சுருக்கம் மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 205 (ஷாய் ஹோப் 47, ஜோன் கெம்பல் 44, ப்றண்டன் கிங் 33, ரொஸ்டன் சேஸ் 29, ப்ளயா டிக்னர் 32 - 4 விக்., மைக்கல் ரே 66 - 3 விக்.) நியூஸிலாந்து 1ஆவது இன்: 278 - 9 விக்;. டிக்ளயார்ட் (மிச்செல் ஹே 61, டெவன் கொன்வே 60, கேன் வில்லியம்சன் 37, அண்டர்சன் பிலிப் 70 - 3 விக்., கெமர் ரோச் 43 - 3 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 128 (கவெம் ஹொஜ் 35, ஜஸ்டின் க்றீவ்ஸ் 25, ப்றெண்டன் கிங் 22, ஜேக்கப் டவி 38 - 5 விக்., மைக்கல் ரே 45 - 3 விக்.) நியூஸிலாந்து - வெற்றி இலக்கு 56 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 57 - 1 விக். (டெவன் கொன்வே 26 ஆ.இ., கேன் வில்லியம்சன் 16 ஆ.இ.) ஆட்டநாயகன்: ஜேக்கப் டபி. https://www.virakesari.lk/article/233177
4 days 15 hours ago
இப்ப ஏன் சிங்களவன்களை ஏச வேண்டும்? எங்கோ ஒருவன் செய்த தவறிற்காக. ஊத்தைகள் எல்லா சமூகத்திலும் இருக்கின்றார்கள் தானே. பின்வரும் செய்தியை பாருங்கள் மூன்று வயதுப் பச்சிளம் குழந்தையின் காயத்தில் மிளகாய்த் தூள் பூசிக் கடும் சித்திரவதை: யாழ். பொன்னாலையில் கொடூரம்! மூன்று வயதுப் பச்சிளம் குழந்தையின் அடிகாயத்தில் மிளகாய்த் தூள் பூசிக் கடும் சித்திரவதை செய்த சம்பவமொன்று யாழ்.பொன்னாலைப் பகுதியில் பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தையின் தந்தை இரண்டு திருமணம் முடித்துள்ளார். அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்த மனைவியின் பிள்ளைக்கே இவ்வாறு சித்திரவதை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தையும், தாயும் இணைந்து அந்த குழந்தைக்குத் தொடர்ச்சியாகக் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வந்தனர். இதனால், குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்கள் மீது மிளகாய்த் தூள் இட்டதாகவும், பச்சை மிளகாயை உண்ணக் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் சங்கானைப் பிரதேச செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றனர். கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகச் சிறுவர்கள் தொடர்பான உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டுக்குச் சென்ற நிலையில் கணவனும், மனைவியும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://vampan.net/76166/
4 days 15 hours ago
புதுடெல்லியில் காற்று மாசு தீவிரம் 13 Dec, 2025 | 10:15 AM இந்தியத் தலைநகர் புதுடெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்றின் தரம் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுடெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 400–450 வரை பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனரக வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலை புகை, வீதிகளில் காணப்படும் தூசி, கட்டுமான பணிகளின் போது வெளியேறும் தூசி , நிலக்கரி எரித்தல் மற்றும் எரிபொருள்கள் போன்றிலிருந்து வெளியாகும் வாயுக்களால் புது டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீனா, குறிப்பாக பெய்ஜிங், கடந்த இருபது ஆண்டுகளில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பல நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளன. இதன்படி நிலக்கரி எரிக்கும் கொதிகலன்களை மூடுதல், பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்தல், புதிய ஆற்றல் வாகனங்களை அறிமுகப்படுத்தல், தொழிற்சாலைகளில் தொழில்நுட்ப சீர்திருத்தம், புதுமை மற்றும் பசுமை ஆற்றலை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. https://www.virakesari.lk/article/233244
4 days 15 hours ago
4 days 16 hours ago
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 2313 பேர் பாதிப்பு! Published By: Digital Desk 1 13 Dec, 2025 | 11:23 AM கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை மற்றும் கடும்காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 2313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் கடுமையான காற்று காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 472 குடும்பங்களைச் சேர்ந்த 1577 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 2 குடும்பங்களைச் சேர்ந்த ஆறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 07 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 105 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 137 குடும்பங்களைச் சேர்ந்த 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 7 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவில் சூறாவளியால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/233253
4 days 16 hours ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel Marketing (Pvt) Ltd நிதி நன்கொடை! 13 Dec, 2025 | 12:03 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel Marketing (Pvt) Ltd இனால் 05 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. குறித்த காசோலையை Asriel Marketing (Pvt) Ltd இன் தலைவர் சிரான் பீரிஸ் நேற்று வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். Asriel Marketing (Pvt) Ltd இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி, டீ.எல்.பீ. வீரசூரிய, சாகல மஹவெல கீர்த்திபால மற்றும் என்.ஆர்.பீ. விக்ரமரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/233259
4 days 16 hours ago
AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் மூலம் இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிராபத்துக்களை குறைக்கலாம் - அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் 13 Dec, 2025 | 11:03 AM (ஸ்டெப்னி கொட்பிறி) AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் தெரிவித்துள்ளார். Geo செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேலும் தெரிவிக்கையில், Geo செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டம் உருவாக்கப்பட்டது. இலங்கை அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் (Association of Natural Disaster Risk Management Professionals) சங்கமானது, அமெரிக்க தூதரகத்தின் ஆதரவுடன் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் ஏற்படும் அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியவும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், அவர்களை தயார்ப்படுத்தவும் முடியும். இதனால் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போதான உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும். இந்த திட்டமானது, இலங்கையின் தொழில்நுட்பம் சார்ந்த அனர்த்த தாங்கும் திறன் செயல்முறையை பிரதிபலிக்கிறது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பலர் உயிரிழந்ததுடன், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. எனவே தொழில்நுட்பங்களின் உதவியுடன் இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறிந்து உயிர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டமானது சிறந்ததொரு முயற்சியாகும். இந்த திட்டமானது இலங்கையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகவும் பங்களிப்பு வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. Geo செயற்கை நுண்ணறிவானது அனர்த்தங்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் பாரிய சவால்களை முறிப்பதற்கு இந்த திட்டம் மிகவும் உதவும் என்று நாம் நம்புகிறோம். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்க தூதரகம் வழங்கும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜேன் ஹொவெல், இலங்கை அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டம் சீரற்ற வானிலை, திட்டமிடப்படாத நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் சமூக பொருளாதார பாதிப்புகள் காரணமாக இலங்கை பல அனர்த்தங்களுக்கு முகங்கொடுகிறது. இலங்கையில், வெள்ளம், மண்சரிவு, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருவதால் பல உயிரிகள் சேதமடைகிறது மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பதற்கு முறையான செயல்முறைகள் இல்லாத காரணத்தினால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை மற்றும் கால தாமதமான தகவல்களுடன் செயற்படுகின்றனர். இதனால், Geo செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி “GeoAI for Disaster Resilience” எனும் தேசிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. Geo செயற்கை நுண்ணறிவு மூலம் வெள்ளம், மண்சரிவு மற்றும் வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களை துல்லியமாக கண்டறியந்து மதிப்பீடு செய்ய முடியும். புவியியல் தகவல் முறைமை (Geographic Information System - GIS) மூலம் வீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள், பாதுகாப்பற்ற பகுதிகள் மற்றும் அனர்த்தத்தினால் சேதமடைந்த பகுதிகளை வரைப்படமாக காட்சிப்படுத்த முடியும். எனவே, இந்த திட்டத்தின் மூலம் இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். https://www.virakesari.lk/article/233248
4 days 16 hours ago
மனிதர்களுக்கு பாதுகாப்பும் தேவை தான். வாழ்த்துகள்.
4 days 17 hours ago
கும்பல் சேர்ந்து கலவரம் நடக்கலனா இது கிந்தியா கிடையாது..
4 days 19 hours ago
இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்! ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இன்று காலை இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். இதன்போது மைதானதிற்கு வந்த மெஸ்ஸி வெகு சில நிமிடங்களே களத்தில் இருந்ததாகவும், அப்போதும் அவரை சரியாக பார்க்கக் கூட முடியாத வகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை முழுவதுமாக சூழ்ந்துகொண்டதாகவும் ரசிகர்கள் கூறினர். இந்நிலையில் மெஸ்ஸியை காண இந்திய மதிப்பில் 5,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை நுழைவு சீட்டு பெற்று ரசிகர்கள் வந்துள்ள நிலையில் மைதானத்திற்கு வருகைதந்த மெஸ்ஸி உடனே அங்கிருந்து வெளியேறியமையினால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் போத்தல்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் மெஸ்ஸி கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை பொலிஸார் கைது செய்த நிலையில் மேலும் டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பித் தருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1456260
4 days 20 hours ago
வாழ்த்துகள் கீர்த்தனா
4 days 21 hours ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21: ஆபாசமெனத் தள்ளப்பட்டு அருமையான தன்வரலாறாக ஏற்கப்பட்ட ‘கடக ரேகை’ தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21 | ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதிய ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) நாவல் ஆபாசமெனத் தள்ளப்பட்டு அருமையான தன்வரலாறாக ஏற்கப்பட்ட ‘கடக ரேகை’ – அ. குமரேசன் ஒன்று நாவலாக இருக்க வேண்டும், அல்லது தன் வரலாறாக இருக்க வேண்டும், அல்லது மற்றவர்கள் பற்றிய உண்மைக் கதையாக இருக்க வேண்டும் – இலக்கியத்தின் எந்த வகைப்பாட்டுக்குள்ளும் வரவில்லையே என்று தள்ளுபடி செய்யப்பட்டது ஒரு புத்தகம். ஆபாசம் என்றும் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. புத்தகத்தின் வெளியீட்டாளரும் விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத் தீர்ப்பில் அவர்கள் விடுதலையானதோடு, ஆபாசம் குறித்த ஆரோக்கியமான விவாதங்களுக்கும் புதிய புரிதல்களுக்கும் இட்டுச் சென்றது அந்தப் புத்தகம். நவீன இலக்கிய முத்துமணிகளில் ஒன்றாக மதிக்கப்படும் ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer)அந்த இடத்திற்கு வந்தது ஒரு சுவையான அனுபவப் பயணம்தான். ஹென்றி மில்லர் (Henry Miller)எழுதிய தன் வரலாறும் சமூக விமர்சனமும் கற்பனையும் கலந்த அந்தப் படைப்பு, தணிக்கை வரலாற்றிலும் இடம் பிடித்தது. 1891இல் பிறந்து 1980இல் விடைபெற்ற (90 ஆண்டுகள்) அமெரிக்கரான ஹென்றி மில்லர் (Henry Miller) இளமைக் காலத்தில் பிரான்ஸ் நாட்டில், குறிப்பாக பாரிஸ் நகரில் வாழ்ந்தார். வறுமை, புறக்கணிப்புகள், பலவகை மனிதர்களோடு தொடர்புகள் என வாழ்ந்த அந்த அனுபவங்களையும், பிற்காலத்தில் அமெரிக்க வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளையும்தான் புத்தகங்களாக எழுதினார். அவரே தன் எழுத்துகளைப் புனைவிலக்கியம் என்று சொல்லிக்கொண்டதில்லை. ஆயினும், உண்மைகளும் கற்பனைகளும் கலந்த வெளிப்பாட்டிற்கு நல்ல முன்மாதிரிகளாக அந்தப் புத்தகங்கள் இன்று எடுத்துக்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ‘டிராபிக் கேன்சர்’ தன்வரலாற்றுப் புனைவு என்ற புதிய வகை எழுத்துகளுக்கான ஒரு சான்றாக எடுத்துக்காட்டப்படுகிறது. படைப்பாளிகள் அரவணைப்பு ஆங்கிலத்தில் அவர் எழுதிய இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1934இல் பாரிஸ் நகரில் வெளியானது. அங்கே அது தடையையோ, கடும் நடவடிக்கைகளையோ சந்திக்கவில்லை என்றாலும், கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ளவே செய்தது. ஐக்கியப் பேரரசு (இங்கிலாந்து) தடை விதிக்க முடிவு செய்தது, ஆயினும் டி.எஸ். எலியட் உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்கள் அந்த எழுத்தாக்கத்தை அரவணைத்தார்கள். ஆகவே சட்டப்படி தடை விதிக்கப்படவில்லை. ஆனால், இறக்குமதி செய்வதில் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. கடத்தி வரப்பட்ட புத்தகப் படிகள்தான் வாசகர்கள் கைகளுக்குச் சென்றன. ஹென்றி மில்லர் (Henry Miller) கனடா சுங்கத் துறை புத்தகத்திற்குத் தடை விதித்தது. புத்தகக் கடைகளிலிருந்த படிகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தார்கள். ஆஸ்திரேலியாவில் 1970கள் வரையில் தடை செய்யப்பட்டிருந்தாலும், தொடர்ச்சியான விவாதங்களுக்குப் பிறகு, அச்சிடப்பட்ட நூல்களுக்கான தணிக்கை விதிகள் பெரிதும் தளர்த்தப்பட்டன. ஃபின்லாந்து நாட்டில் ஃபின்னிஷ் மொழிப் பதிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆங்கில, ஸ்வீடிஷ் மொழிப் பதிப்புகள் கிடைத்தன. பின்னர் அந்தத் தடையும் விலக்கப்பட்டது. பிற்காலத்தில் துருக்கி அரசு இந்தப் புத்தகத்திற்குத் தடை விதித்தது. கைதுகளும் வழக்குகளும் அமெரிக்காவில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. சமூக ஒழுங்கைச் சீர்குலைக்கும் ஆபாசம் என்ற குற்றச்சாட்டுடன், அதைப் பரப்பினார்கள் என்ற புகாரின் பேரில் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். 60க்கு மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. 1964இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் புத்தகத்தை விடுவித்தது. அந்தத் தீர்ப்பு, பாலியல் வக்கிரங்களைத் தூண்டாத, ஆனால் பாலியல் உண்மைகளையும் சிக்கல்களையும் சுரண்டல்களையும் சித்தரிப்பது எப்படி ஆபாசமாகும் என்ற விவாதங்களுக்கு வழியமைத்தது. “நான் இந்த வாழ்க்கையை எதற்காகக் கண்டறிந்தேன்? எதற்காக உண்மையை மறைக்க வேண்டும்? எப்படி உணர்கிறேனோ அதைத்தான் எழுத முடியும்” என்று மில்லர் கூறியது எழுத்துலகில் பரவலாக எதிரொலித்தது. வழக்கமான நாவல் கட்டமைப்பிலிருந்து விலகிய, நேரடிச் சித்தரிப்பும் கவிதையும் கலந்த அவரது மொழி நடை கவனத்திற்கு உள்ளானதாக இணையப் பதிவுகள் தெரிவிக்கின்றன. கடக ரேகைக் கதை ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) புத்தகம் புத்தகத்தின் ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) என்ற தலைப்புக்கு, பூமியின் “கடக ரேகை” என்று பொருள். வறுமையில் வாடும் எழுத்தாளர் ஹென்றி, 1930களில் பாரிஸ் நகரின் வெளிச்சமற்ற பகுதிகளில் தன் இளமைக் காலத்தைக் கடக்கிறார். அந்த வாழ்க்கையில் எதிர்கொள்கிற இன்பங்களும் துன்பங்களுமாக அத்தியாயங்கள் விரிகின்றன. அந்த அனுபவங்களையே தனது கற்பனை வளமும் கவித் திறனும் கலந்து விவரிக்கிறார். ஹென்றி தனது நண்பர்களுடன் நடத்தும் உரையாடல்கள், தேடிச் செல்லும் காதலிகள், பாலியல் உறவுகள், பாலியல் தொழிலாளர்களின் நிலைமைகள், பணத்திற்காக அலையும் அவலங்கள், எதையாவது செய்யத் தூண்டுகிற பசி, யாருமற்ற தனிமை உணர்வு என அவருடைய அன்றாடப் போராட்ட அனுபவங்களை வாசிப்பு அனுபவமாக மாற்றுகிறது இந்த நூல். அழகான ஆரம்பம், கதாபாத்திரங்கள் வருகை, அடுத்தடுத்து விறுவிறுப்பான நிகழ்வுகள், எதிர்பாராத திருப்பத்துடன் முடிவு என்று வழக்கமான நாவல் நடையில் புத்தகம் செல்லாது. பொதுவாக மனிதர்கள் சமகாலக் காட்சிகள், கடந்த கால நினைவுகள், எதிர்காலக் கனவுகன் என்று மாறிமாறிப் பயணிப்பது போலவே ஹென்றியின் வாழ்க்கை செல்கிறது. புத்தகமும் அதை அப்படியே பிரதிபலிக்கிறது. ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) திரைப்பட காட்சி இதில் அவரது மன ஓட்டங்கள், தத்துவச் சிந்தனைகள், சமூக நையாண்டி, அதிர்வூட்டும் உண்மை நிலவரங்கள் ஆகியவற்றின் கலவையாகப் புத்தகம் உருவாகியிருக்கிறது. அதில், சமூகத்தின் பாசாங்குத்தனம் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. மனிதர்களின் அருவருப்பான பக்கமும் திறந்துகாட்டப்படுகிறது. கெடுபிடிக் கலாச்சாரம் கூண்டில் நிறுத்தப்படுகிறது. கதையோட்டமோ, கதாபாத்திரங்களோ, நிகழ்ச்சித் திருப்பங்களோ, மர்ம முடிச்சுகளோ இல்லை என்பதால் புத்தக உள்ளடக்கத்திற்குள் இதற்கு மேல் செல்ல வேண்டியதில்லை. ஒரு தனிமனிதரின் சுய தேடலோடு இணைந்த, கயிறுகளால் கட்டிப் போடப்படாத வெளிப்பாட்டு முனைப்பாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறது. இலக்கியம் என்பதற்கான பாரம்பரிய விதிகளை உடைத்து, களித்துக் கடக்கப்படும் வாழ்கையில் கழித்துக் கடக்கப்பட்ட மனிதர்கள் இருப்பதைத் துணிச்சலாகக் காட்டுகிறது. பூமியை அளவிடவும், ஆராய்ந்திடவும் அதன் குறுக்கிலும் நெடுக்கிலும் நாம் கற்பனைக் கோடுகளை வரைந்து வைத்திருக்கிறோம். நில நடு ரேகைக்கு வடக்கே வரையப்பட்டிருப்பது கடக ரேகை. அது எப்படி கற்பனையானதோ அதே போல் மனித எதிர்பார்ப்பு கற்பனையாகிவிடுகிறது. சூரியனை பூமி சுற்றிவருகிறபோது, சூரியப் பாதை வடக்கே நகர்ந்து தெற்கே திரும்பும் எல்லையைக் கடக ரேகை என்று குறிப்பிடுகிறார்கள் புவியியலாளர்கள். மனிதர்களின் வாழ்க்கை அப்படி இருட்டாகிவிடுவதை கடக ரேகை புத்தகம் விவரிக்கிறது. கடக ரேகையின் மறுபகுதியில் ஒளி படர்வது போல, நம்பிக்கைகள் வெளிச்சம் பெறுகின்றன. இப்படிப்பட்ட உட்பொருள்கள் பொதிந்திருப்பதால் ‘‘டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) என்ற தலைப்பு பொருந்துகிறது. ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) திரைப்பட காட்சி கடினமான வேலிகளைத் தாண்டிய புத்தகத்திற்கு முக்கியமான இலக்கிய விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் சார்ந்த முக்கியமான சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்த எழுத்து, பதுங்கிக்கொள்ளாத வெளிப்படையான எழுத்தாக்கத்திற்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த எழுத்து, இவ்வகையான புத்தகமாக்கலுக்கு ஒரு வெற்றிகரமான இலக்கிய முன்னோடி என்ற பெயர்களைப் பெற்றது. டிராபிக் ஆஃக் கேப்ரிகான், பிளாக் ஸ்பிரிங், தி ரோஸி க்ரூசிஃபிகேஷன், தி கொலோசஸ் ஆஃப் மரூசி, கொயட் டேய்ஸ் இன் க்ளிச்சி, தி ஏர்கண்டிஷண்டு நைட்மேர் உள்ளிட்ட நூல்களையும் ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதியிருக்கிறார். அவையும் பல்வேறு கோணங்களில் சமூக விமர்சனம் செய்யும் படைப்புகளே.‘ முற்றிலும் புனைவு அல்லாத ஒரு படைப்புக்கு இலக்கியத் தகுதி அளிக்கப்படுவது அரிதான நிகழ்வு. அதைக் கடக ரேகை சாதித்திருக்கிறது. 1970 இல் இதே பெயரில் ஹாலிவுட் திரைப்படமாகவும் வந்து கவனம் பெற்றது. ‘மாடர்ன் லைப்ரரி’ அமைப்பும் ‘தி கார்டியன்’ பத்திரிகையும் வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆங்கில நாவல்கள் பட்டியல்களில் ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) இடம் பெற்றுள்ளது கவனிக்கத் தக்கது. ‘தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்’ என்ற நமது பட்டியலில் 21ஆவது புத்தகமாகக் கடக ரேகை இடம் பெற்றதோடு, தற்காலிகமாக விடைபெறுவோம். இந்தியாவிலும் இதர நாடுகளிலும் சவால்களைச் சந்தித்த புத்தகங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டு, ஓர் இடைவெளிக்குப் பின் சந்திப்போம். இடைவேளை……………………… https://bookday.in/a-kumaresans-books-beyond-obstacles-series-about-henry-millers-tropic-of-cancer-novel/
4 days 21 hours ago
சொந்த இடத்தைவிட்டு புலம்பெயர்வின் வலியை உணர்ந்த நாம், அந்த மக்களை அவர்களின் சொந்த இடத்தில் வாழ வசதிகள் அமைத்து கொடுப்பதே நல்லது
4 days 21 hours ago
சித்தாந்த வினா விடை- தொடர் 3 - அருணைவடிவேல் முதலியார் இன்மை அளவை அல்லது அபாவப்பிரமாணம் அல்லது அனுபலத்திப்பிரமாணம் : குடத்தைத் தேடிக் காணாத ஒருவன், 'இங்குக் குடம் இல்லை' என்று உணர்தல், குளிர் இல்லாமை கண்டு, 'பனி இல்லை' என்று உணர்தல் அனுபலத்திப்பிரமாணமாகும். இருத்தலை உணர்தல் காட்சியாகும், இல்லாமையை உணர்தல் காட்சியாகாது என்று கொண்டு இவை காட்சியளவையும், அதன் வழியதாகிய அனுமான அளவையோடு சேராமல் வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், இவையும் உண்மையில் காட்சியும் அதன் வழிதான அனுமானமுமேயாகும். பொருளளவை அல்லது அருத்தாபத்திப் பிரமாணம்: ஒருவன் இரவில் மறைந்து உண்டு, 'யான் உண்பதில்லை' என்று கூறினால், அவன் உடல் மெலியாதிருத்தல் கண்டு அவன் இரவில் மறைந்து உண்கின்றான் எனத் துணிதல் அருத்தாபத்திப் பிரமாணமாகும். இவ்வாறு இல்லையாயின் இஃது இயலாது என உணர்தல். இஃது உண்மையை எதிர்மறை முகத்தான் உணரும் அனுமானமேயாகும். உவமையளவை அல்லது உபமானப் பிரமாணம்: காட்டுப் பசு என்பது ஒன்று உண்டு என்று அறியாதவன், காட்டுக்குள் அதனைக் கண்ட பொழுது, நாட்டுப் பசுப்போல இருத்தலால் இது காட்டுப் பசுவாகும் என்று உணர்தல் உபமானப் பிரமாணமாகும். இது, கண்டமாத்திரத்தில் துணியப் படாமையால் காட்சியளவையுமல்ல, பொருளைக் கண்டே துணிதலால் அனுமானமும் அல்ல, வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், காட்சியால் பொதுத்தன்மையைக் கண்டு அதன் மூலம் 'காட்டுப் பசு' என்னும் சிறப்புப் பொருளைக் கருதி உணர்தலால் இதுவும் அனுமானமே ஆகும். ஒழிபளவை அல்லது பாரிசேடப் பிரமாணம்: மூவர் உள்ள இடத்தில் ஒரு பொருள் களவு செய்யப்படின், இருவர் கள்வர் அல்லர் என்பது தெளியப்பட்டால், மீதமுள்ள மற்றொருவனே கள்வன் எனத் துணிதல் பாரிசேடப் பிரமாணமாகும். இஃது ஒருவன் கள்வன் என்பதை அதற்கு உரிய சான்று கொண்டு துணியாது, இருவர் கள்வராகாமையால் அவன் கள்வன் என்பது அனுமானமன்று, வேறோர் அளவையாம் என்பர் சிலர். ஆயினும், மூவருள் ஒருவன் கள்வன் என்பது முன்னரே துணியப்பட்டமையாலும், இருவர் கள்வர் ஆகாமை பின்னர்த் துணியப்பட்டதாலும் இதுவும் அனுமானமேயாகும். உண்மையளவை அல்லது சம்பவப் பிரமாணம்: ஓரிடத்தில் நூறு இருக்கிறதென்றால் அவ்விடத்துப் பத்தும் உண்டென்று உணர்தல் சம்பவப் பிரமாணமாகும். நூறும் பத்தும் காட்சிப் பொருள் இல்லாததால் இது காட்சியளவையும் அதன் வழித்தாகிய அனுமானமும் இல்லை என்பர் சிலர். ஆனால் கருத்துப் பொருளைக் கருத்துப் பொருள் ஏதுவாக ( சான்றாக) உணரும் அனுமானமே இது. வழக்களவை அல்லது ஐதிகப்பிரமாணம்: ஒருமரத்திற் பேய் உண்டென்று வழிவழியாகச் சொல்லிவரும் வழக்குப் பற்றித் தானும் அவ்வாறே உணர்தல் ஐதிகப்பிரமாணமாகும். இது, நூலில் இல்லாததால் உரையளவையாகாது வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், அஃது உண்மை வழக்காயின் உரையளவையே. பொய் வழக்காயின் அளவை இல்லையென்றாகும். இயல்பளவை அல்லது சுபாவப்பிரமாணம் மரம் பூத்தது என்று ஒருவன் கூறக் கேட்டு, அச்சொல்லாலே அப்பொருளை உணர்தல் சுபாவப்பிரமாணம். சொற்கள் பொருளோடு பிரிப்பின்றி நிற்பதில்லை, எனவே அவைகளைக் கொண்டு பொருளை உணர்தல் அனுமானமாகாது, இது வேறோர் அளவை என்பர் சிலர். இருப்பினும் சொல்லுணர்வு பொருளுணர்வோடு இயல்பாய் உடன் நிகழ்வதால் இஃது அனுமானமேயாகும். இவ்வாறு பிறர் வேறு வேறு கூறும் பிற அளவைகளும் காட்சி, கருதல், உரை என்னும் மூன்று அளவைகளுள்ளே அடங்கிவிடும். 4. காட்சியளவையின் வகை மாணவன்: காட்சி முதலிய மூன்று அளவைகளின் இயல்பை பற்றி சுருக்கமாக கூறினீர்கள், அவைபற்றி அறிய வேண்டுவன அவ்வளவுதானா, வேறு எவையேனும் உள்ளதா? ஆசிரியர்: உள்ளது.. வாயிற் காட்சி (இந்திரியப் பிரத்தியட்சம்), மானதக் காட்சி (மானசப் பிரத்தியட்சம்), தன் வேதனைக் காட்சி (சுவவேதனாப் பிரத்தியட்சம்), யோகக் காட்சி (யோகப் பிரத்தியட்சம்) எனக் காட்சியளவை நான்கு வகைப்படும். வாயிற் காட்சி: கண் முதலிய பொறிகள் வாயிலாகப் பொருள்களைப் பொருந்தி உணர்வதே காட்சியளவை என்று முன்பு கூறினோம். அவ்வாறு நாம் உணருமிடத்து அக்காட்சி முதலில் பொதுவாகவும், பின்பு சிறப்பாகவும், அதன் பின்பு அனுபவமாகவும் நிகழும். பொதுவாக நிகழும் காட்சி, 'நிருவிகற்பக் காட்சி' என்று சொல்லப்படும். அஃதாவது, இஃது ஓர் உருவம், இஃது ஓர் ஓசை, இஃது ஒரு சுவை, இஃது ஒரு மணம், இஃது ஓர் உராய்வு என்று மட்டும் தோன்றுவது. இவ்வாறு கண் முதலிய பொறிகளால் பொதுவாக உணரும் உணர்வே, வாயிற் காட்சியாகும் (வாயில்-பொறி). மானதக் காட்சி: பொருள்களை வாயிற்காட்சியால் பொதுவாக உணர்ந்த பின்பு, சிறப்பாக உணர விரும்பினால், நாம் அந்தப் பொதுக்காட்சியை மறவாமல் பற்றி, மேலே மனம் முதலிய உட்கருவிகளைச் செலுத்தி, 'இஃது யாது?, என்று ஆராய்ந்து, 'இன்னது' என்று உணர்வோம்; இவ்வாறு உணர்வதே சிறப்புக் காட்சியாகும். இது, 'சவிகற்பக் காட்சி' எனப்படும். இது மனம் முதலிய உட்கருவிகளாலே உண்டாவதால், 'மானதக் காட்சி' எனப்படுகின்றது. கண் முதலிய பொறி அளவில் பொருள்களைப் பொதுவாக உணர்கின்ற வாயிற் காட்சியோடு நின்றுவிட்டால், அவை இன்னது எனத் தெரியாது, அதனால், அப்பொருள்களைப்பற்றிய நினைவும் பின்னர் உண்டாகாது. மனம் முதலிய கருவிகளைக் கொண்டு, பொருள்களை ஆராய்ந்து சிறப்பாக உணர்கின்ற மானதக் காட்சி நிகழ்ந்த பின்பே, அவை இன்னது என விளங்கும். அவ்வாறு விளங்க உணர்ந்த பொருள்களே பின்னர் நினைவுக்கு வரும். வாயிற் காட்சியால், 'இஃது ஒரு பொருள் தோன்றுகிறது' என்று தெரிந்த பின்பு, அதனை 'இன்னதென அறிதல் வேண்டும்' என்ற எண்ணம் உண்டாகுமாயின், 'இஃது யாது?" என்னும் ஆராய்ச்சி தோன்றும். எடுத்துக்காட்டாக, கண் வாயிலாக 'இஃது ஓர் உருவம் தோன்றுகிறது, என உணர்ந்த பின்பு 'அதனை இன்னதென உணர்தல் வேண்டும்' என்ற எண்ணம் தோன்றினால், 'இவ்வுருவம் யாது?' என்ற ஆராய்ச்சி உண்டாகும். அப்பொழுது, 'இது குற்றியோ? அல்லது மனிதனோ? என்ற ஐயப்பாடுகள் உண்டாகும். (குற்றி! என்பது பசுக்கள் நிற்குமிடத்தில் அவைகள் உராய்ந்து கொள்வதற்காக நடப்படும் மரம் அல்லது கல். அது சில வேளைகளில் ஆள் போலத் தோன்றும்). 'குற்றியோ' என உடன்பாட்டு வகையில் எண்ணுவது ‘சங்கற்பம்' என்றும், இல்லை என்று அதனை எதிர் மறுத்து எண்ணுவது 'விகற்பம்' என்றும் சொல்லப்படும். இச்சங்கற்ப விகற்பங்களாகிய ஐயப்பாடு ஐயக்காட்சியாகும். ஐயப்பாடு நிகழ்ந்த பின்னர், இதனை இன்னதெனத் துணிதல் வேண்டும் என்ற ஓர் எழுச்சி உண்டாகும். அப்பொழுது அப்பொருள் ஐந்து வகையில் வகுத்து உணரப்பட்டு, 'இஃது இன்னது' எனத் துணியப்படும். அவை ”பெயர், சாதி, குணம், தொழில், உடைமை” என்பன. அவ்வைந்து வகையில் வகுத்துணரப்பட்ட உருவம் மனிதனாயின், 'இவன் சாத்தன், மனிதன், கரியன், கடுநடையன் குழையினன்' என்றாற்போல உணர்தலாம். இவ்வாறு வேறு வேறு வகையில் பகுத்து உணர்தல் பற்றியே, இச்சிறப்புணர்வு, 'சவிகற்பக்காட்சி' என்றும், இவ்வாறு உணராத பொதுஉணர்வு ’நிருவிகற்பக்காட்சி' என்றும் சொல்லப்படுகின்றன. சவிகற்பம் வேறுபாட்டோடு கூடியது. நிருவிகற்பம்-வேறுபாடு இல்லாதது. (விகற்பம்- வேறுபாடு). சில சமயங்களில் வேறு பொருட்குரிய பெயர் முதலியவற்றை, காணப்பட்ட பொருட்குரியனவாகக் கருதுதலால், குற்றியை மனிதன் என்றும், மனிதனைக் குற்றியென்றும் மாறித் எண்ணக் கூடும். அது திரிவுக்காட்சி யாகும். ஐயக்காட்சியும், திரிவுக்காட்சியும் குற்றமுடையன. அதனால், அவை பிரமாணமாகாது. பொருள்களை அவ்வவற்றிற்குரிய பெயர் முதலியவற்றால் சவிகற்பமாக உள்ளவாறு உணர்தலே உண்மைக் காட்சி. அதுவே பிரமாணமாகும். தன் வேதனைக் காட்சி பொருள்களை, வாயிற்காட்சியால் நிருவிகற்பமாகவும், மானதக் காட்சியால் சவிகற்பமாகவும் உணர்ந்த பின்னர், அப்பொருளில் மீது உணர்வு உண்டாகுமாயின், இன்ப நுகர்ச்சியோ அல்லது துன்ப நுகர்ச்சியோ உண்டாகும். அந்த நுகர்ச்சி உணர்வே தன்வேதனைக் காட்சியாகும். 'வேதனை என்பதை நாம், 'துன்ப அனுபவம்' என்ற பொருளில் வழங்கினும் அது, துன்ப அனுபவம், இன்ப அனுபவம் இரண்டிற்கும் பொதுவேயாகும். யோகக்காட்சி மேற்கூறிய, வாயிற்காட்சி முதலிய மூன்றும் எல்லாருக்கும் நிகழ்வன. யோகக் காட்சி, அவ்வாறின்றிச் சிலர்க்குமட்டுமே நிகழும். அஃதாவது, யோக நெறியில் உள்ள 'இயமம், நியமம் முதலிய எண்வகை நிலைகளில் நின்று, அவற்றின் முடிந்த நிலையாகிய, 'சமாதி' என்னும் நிலை கைவரப்பெற்றவர்களுக்கே நிகழும் என்பதாம். இவர்கள் உயிர்களைப் பிணித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் கட்டுக்களை சிறிது நெகிழ்த்துக் கொள்ளுதலால், ஏகதேச உணர்வு சிறிது நீங்கி, வியாபக உணர்வு சிறிது உண்டாகும். அதனால் அவர்கள் ஒருகாலத்தில், ஓர் இடத்தில் இருந்தே, எக்காலத்திலும் எல்லா இடத்திலும் உள்ள பொருள்களை உணர வல்லவராவர். அவ்வாறு உணரும் உணர்வே யோகக் காட்சியாகும். நம்மால் உணர முடியாத பலவற்றை முனிவர்கள் தம் யோகக் காட்சியால் உணர்ந்து நமக்கு நூல்கள் வாயிலாகச் சொல்லியிருத்தல் போன்றாகும். இவையே வாயிற்காட்சி முதலிய நால்வகைக் காட்சியளவைகளின் இயல்பாகும். https://www.siddhantham.in/2025/05/3_90.html
4 days 21 hours ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
4 days 21 hours ago
யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது 13 Dec 2025, 11:15 AM பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினரை ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர். வழக்கு விபரம் ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன், சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அந்த வீடியோவை நீக்க 10 லட்சம் பணம் கேட்டதாகவும், இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினர் தயாரிப்பாளர் புருஷோத்தமனை அடித்து அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்து விட்டதாகவும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் விளக்கம் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சவுக்கு சங்கர், ” இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய் வழக்கு. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் புருஷோத்தமன் என்ற யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. இதை எனது விளக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று நவம்பர் 1 ம் தேதி பதில் கடிதம் அனுப்பிவிட்டேன். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று இரவு வெளியிட்டுள்ளதால் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். https://minnambalam.com/youtuber-savukku-shankar-arrested/
4 days 21 hours ago
தாராளமாக நிறுத்தலாம். எனக்கு பதிலளிக்குமாறு நான் உங்களை வற்புறுத்தினேனா? இல்லையே!
Checked
Thu, 12/18/2025 - 05:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed