புதிய பதிவுகள்2

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

4 days 21 hours ago
சிறு பிள்ளை தனமாய் கேட்டு கொண்டு இருக்க முடியாது இனி உங்களுக்கு பதில் அளிப்பதை நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை .

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்

4 days 21 hours ago
யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை சனி, 13 டிசம்பர் 2025 05:46 AM யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை புரிந்த குற்றத்தில் கைதான 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். https://jaffnazone.com/news/53156

மன்னாரிற்கு வரவுள்ள ஜனாதிபதி – வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கும் துரித நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

4 days 21 hours ago
இதே இடத்தில் சிங்கள மீனவர்களின் வலைகள் அறுக்க பட்டால் சிங்கள கடல்படை பொங்கி எழுந்து இருக்கும் .

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

4 days 21 hours ago
ஏற்கெனவே சோம்பேறிகள், அவர்களை அழைத்து வந்து மலை அட்டை உறிஞ்சியது போக மிஞ்சியதை உறிஞ்சி தாம் சுகமாக வாழ நினைக்கின்றனர். அவர்களும் வாழ வேண்டுமென்று நினைத்தால்; அவர்கள் வாழ்விடங்களிலேயே நிம்மதியாக, நிரந்தரமாக வாழ வழிசெய்ய வேண்டும். அதுதான் அவர்கள் விரும்பும் வாழ்க்கை. அதை விடுத்து அவர்களுக்கு என்ன தேவை, விருப்பம் என்று கேளாமல், நாம் நினைத்ததை திணிக்க முடியாது. மலையகத்தில் உள்ள அனைவரையும் வடக்கு கிழக்கில் குடியமர்த்தி வேலை வாய்ப்பு, வாழ்க்கை, வசதியளிக்க முடியுமா? வடக்கு கிழக்கிலே எத்தனையோ பேர் வேலையில்லாமல் அலைகிறார்கள். சும்மா ஜதார்த்ததை உணராமல் ஜாம்பவான் பேச்சு.

மன்னாரிற்கு வரவுள்ள ஜனாதிபதி – வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கும் துரித நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

4 days 21 hours ago
மன்னாரிற்கு வரவுள்ள ஜனாதிபதி – வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கும் துரித நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்களும் பாரிய பாதிப்புக்களை சந்தித்துள்ள போதும் மீனவர்கள் குறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலாம் தெரிவித்தார். மன்னாரிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் தீவை எடுத்துக்கொண்டால் அதிகளவான கிராமங்கள் மீனவ கிராமங்களாக காணப்படுகின்றன. மேலும் தேவன் பிட்டி தொடக்கம் முள்ளிக்குளம் வரை உள்ள மீனவர்களும் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மீனவர்களின் பாதிப்புக்கள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பேசப்படவில்லை என்ற முறைப்பாடுகள் கிராம மட்ட மீனவ அமைப்புக்கள் ஊடாக சமாசத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளரை சந்தித்து குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம். அரச அதிபரை சந்திக்கும் போது முழுமையான விடையங்களை அரச அதிபரிடம் தெரிவிப்பதாகவும், குறிப்பாக ஜனாதிபதியின் மன்னார் வருகையின் போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மீனவர்கள் பாதிப்பை தான் வெளிக் கொண்டு வருவதாகவும் பாதிப்புகளை முன்வைப்பதாகவும் தெரிவித்தார். இதுவரை மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் சார்பாக 578 முறைப்பாடுகள் கடற்றொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமாகியமை உள்ளடங்களாக குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 578 நபர்களின் முறைப்பாடுகளை தவிர ஏனையவர்களின் பாதிப்புக்களும் பதிவு செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எவ்வாறாக இருந்தாலும் பாதிக்கப்பட்டு பதியப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். எமக்கு ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் மாவட்டத்தில் திணைக்களம் சார்பாக தலைவர்கள் கலந்து கொள்வார்கள். மீனவர்கள் சார்பாக கடற்றொழில் உதவி பணிப்பாளர் கலந்து கொள்வார். முழுமையாக மீனவர்களின் விடயம் பேசப்பட வேண்டும். ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். உண்மையிலேயே மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 578 மீனவர்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்படுவதுடன், கடந்த மாதம் 27 ஆம் திகதியில் இருந்து இன்று வரை கடற்தொழில் செய்ய முடியாத சூழ்நிலை கடலில் காணப்படுகிறது. அனர்த்தம் என்றால் உடனடியாக உரிய திணைக்களங்கள் மீனவர்களுக்கு அறிவித்தல்களை வழங்குகின்றனர். மீனவர்களை தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என்று. ஆனால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லாது விட்டால் அவர்களுக்கு எந்த நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை. இதுவரை மீனவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட போதும் அரசினால் மீனவர்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. எனவே மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ள நிலையில் மீனவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மன்னார் மாவட்டம் மற்றும் வட மாகாணத்திற்குள்ளும் ஊடுருவும் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய விடையங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. தற்போது இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையும் அதிகரித்துள்ளது.எமது மீனவர்களின் மீன்பிடி வலைகள் கடும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம் தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 27 ஆம் திகதி சுமார் 15 இற்கும் மேற்பட்ட மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நண்டு வலைகள் இந்திய இழுவைப்படகுகளினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளது. எனவே வடக்கு மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்கும் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=352264

வெல்லாவெளி தொல்பொருள் பதாகை விவகாரம்: 56 பேருக்கு வழக்கு

4 days 21 hours ago
வெல்லாவெளி தொல்பொருள் பதாகை விவகாரம்: 56 பேருக்கு வழக்கு December 13, 2025 மட்டக்களப்பு வெல்லாவெளியில் தொல்பொருள் பதாதை வைக்கவிடாமல் தடுத்த 56 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்ன் வழிகாட்டல் பதாகை நடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை தடுத்து கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் 56பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான அழைப்பாணை வெல்லாவெளி பொலிஸ் ஊடாக 35ஆம் கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2025,நவம்பர்,25 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம்கிராமம் கண்ணன்புரம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் பெயர்ப்பலகையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது அதற்கு எதிராக பிரதேச மக்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெல்லாவெளி பொலிஸார் ஊடாக நீதிமன்றில் தொல்பொருள் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு (11 ) நேற்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிலையில் இவர்கள் அனைவருக்கும் சொந்தப் பிணை வழங்கப்பட்டு எதிர்வரும் 2026.01.09 ம் திகதிக்கு வழக்கு தவணை வழங்கப்பட்டது. இதில் ஒருவர் அண்மையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்திருந்த நிலையில் அவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதுடன், ஒரு குடும்பத்தில் பலருக்கு இவ்வாறு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/wellaveli-archaeological-banner-issue-56-people-charged/

லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை!

4 days 21 hours ago
சிங்களவன் ஊரிலேயே காமம் தலைக்கு ஏறி, பாலியல் வன்புணர்வு செய்து கொண்டு திரிகின்ற இனம். இவர்களின் மதத் தலைவர்களான பிக்குகள் தான்… இவர்களுக்கு வழிகாட்டி. இவனை தூக்கி 25 வருசமாவது மறியலில் போடுங்க சார்.

13ஆம் திருத்தம் சாத்தியமில்லை: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

4 days 21 hours ago
13ஆம் திருத்தம் சாத்தியமில்லை: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு December 13, 2025 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற பொய் வாக்குறுதிகள் வழங்க தாம் விரும்பவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யூரியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்த அவர், 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது நடக்காத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கமும் அதனை நடைமுறைபடுத்துவதாகக் கூறியே ஆட்சிக்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அதிகாரங்களை கொடுத்தால் தென்னிலங்கையில் அடிவாங்க வேண்டும். கொடுக்காவிட்டால் வடக்கில் அடிவாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. நாங்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையாக இருந்து உண்மையை கூற வேண்டும். இந்த நாட்டின் வரலாற்றில் அனைத்து தலைவர்களும் தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளனர் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் காலாசாரத்தில் பின்னிப்பிணைந்தவர்கள். இன்று சில தலைவர்கள் வடக்குக்கு சென்றால் சிங்கள கலாசாரத்தை மறுந்து விடுகின்றனர். தமிழ் – சிங்கள கலாசாரங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. கதிர்காமம் மற்றும் சிவனொளிபாத மலையில் இரு இனங்களும் ஒன்றாக இணைய முடியும் என்றால் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வைத் தேடி செல்லலாம் என்று அவர் கூறியுள்ளார். வடக்கில் அனைத்து அபிவிருத்தியும் மஹிந்த ராஜபக்ச காலத்தில் உருவாக்கியதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனோ. ஏனைய தலைவர்கள் உருவாக்கியதோ அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தென் பகுதிக்கு கிடைக்கும் அதிகாரங்கள் வடக்குக்கும் வழங்க வேண்டும். வடக்கில் அரசியல் ரீதியாக பல கோரிக்கைகள் இருக்கின்றன. அதற்கு எமது ஆட்சியில் தீர்வுகள் உண்டு என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் https://www.ilakku.org/13th-amendment-is-not-possible-namal-rajapaksa/

யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது

4 days 22 hours ago
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையோர் என்பும் உரியர் பிறர்க்கு." ராஜ்கிரணின் ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக!

லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை!

4 days 22 hours ago
லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை! 13 Dec, 2025 | 10:23 AM அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த ஒருவர், மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியைக் கடத்தி, துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக வெளியான தகவல்களுக்கு குறித்த இலங்கை பிரஜை மறுப்பு தெரிவித்துள்ளார். 20 வயதான குறித்த நபர், ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார். இதன்போது, சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியம் அளித்த அவர், கடத்தல், துஷ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடு உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் தாம் குற்றமற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த நவம்பர் முதலாம் திகதி மேற்கு லண்டனில் உள்ள ஃபெல்தாமில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புகலிடம் கோருபவர்களை தங்க வைக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் மூன்று நட்சத்திர செயிண்ட் கில்ஸ் விடுதியில்; வசித்து வரும் நிலையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை 2026 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதிக்கு, நீதிபதி ஒத்திவைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/233240 Asylum seeker charged with abducting and raping 15-year-old girl A migrant has been charged with abducting and raping a 15-year-old girl while living in a taxpayer-funded asylum hotel. Sri Lankan Yashin Himasara, 20, is accused of beating and strangling the teenage girl after he ‘carried her away against her will’ in Feltham, west London on November 1. He had been living in the three-star St Giles Hotel in Feltham, which is being used by the government to house asylum seekers. Himasara denied the charges as he appeared at Isleworth Crown Court via video-link from HMP Wormwood Scrubs. He spoke to confirm his name and date of birth, aided by a Sinhala interpreter. Himasara denied one count of kidnapping, one count of rape, one count of assault by penetration, and one count of assault by beating. He also denied one count of sexual activity with a child and two counts of intentional strangulation. Bozzie Sheffi, defending, said Himasara struggles to speak English and will need to be assisted by an interpreter at trial. Sri Lankan Yashin Himasara, 20, appeared at Isleworth Crown Court charged with abducting and raping a 15-year-old girl while living in a taxpayer-funded asylum hotel Judge Kwame Inyundo remanded the migrant into custody ahead of his trial on April 27 next year. The judge told him: ‘If you do not attend your trial, it will go ahead without you and you won’t be able to tell the jury your side of the story. ‘On top of that, you may be committing a separate offence.’ Judge Kwame Inyundo asked Himasara: ‘Do you understand the allegations?’ to which Himasara responded: ‘Yes.’ The Home Office refused to comment on Himasara’s asylum status. A government spokesperson said: ‘We are bearing down on foreign criminals and illegal migrants who exploit our laws by making vexatious human rights claims that ground flights. ‘As well as introducing the most significant reforms to tackle illegal migration in modern times, we are scaling up removals of people with no right to be here - with nearly 50,000 already removed. ‘This action will make our country and its citizens safer, bringing an end to abuse of our legal system and securing Britain’s borders.’ https://www.dailymail.co.uk/news/article-15373721/Asylum-seeker-charged-abducting-raping-girl-migrant-hotel.html

உக்ரைனில் எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் : 90 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவிப்பு

4 days 22 hours ago
உக்ரைனில் எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் : 90 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவிப்பு 13 Dec, 2025 | 10:10 AM தெற்கு உக்ரைனின் முக்கிய துறைமுகப் பகுதியாக உள்ள ஓடேசா பிராந்தியத்தில், எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக, உக்ரைனின் பல துறைமுக நகரங்களில் மின்சார விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சுமார் 90,000 பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, எரிபொருள் நிலையங்கள் மற்றும் மின்சார விநியோக அமைப்புகள் சேதமடைந்ததால், அத்தியாவசிய சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கான அவசர மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனின் துறைமுக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஓடேசா உள்ளிட்ட பகுதிகளில் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. https://www.virakesari.lk/article/233239

யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்..!

4 days 22 hours ago
யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்..! 13 Dec, 2025 | 12:15 PM ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலம் பக்‌ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கோலு யாதவ். இவர், அண்மையில் ரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். பயணிகளில் சிலர் அவரை தவறான நோக்கத்துடன் பார்த்துள்ளனர். சிலர், ஆபாசமான முறையில் பேசியுள்ளனர். இதனால், யாசகம் பெற்ற அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகி, கூனி குறுகியுள்ளார். இதைக் கண்ட கோலு யாதவ், அப்பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்தப் பெண்ணின் பரிதாபமான நிலை, அவரது பின்னணி மற்றும் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். மகனின் மனிதநேயச் செயலைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர், அந்த அனாதை பெண்ணுக்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்க சம்மதித்தனர். நாட்கள் செல்லச் செல்ல, பெண்ணின் நிலையை முழுமையாக புரிந்து கொண்ட கோலு யாதவ், தனது பெற்றோரின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. ‘மனிதநேயம், பச்சாதாபம் மற்றும் விதி ஒன்றாக வருவதற்கான அரிய எடுத்துக்காட்டு’ என்று, கோலு யாதவையும் அவரின் பெற்றோரையும் பலரும் பாராட்டி வருகின்றனர். https://www.virakesari.lk/article/233261

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

4 days 22 hours ago
அரசியல் விமர்சனம் என்பது , நடந்த அரசியல் செயற்பாடுகளில் இழைக்கப்பட்ட தவறுகளையும் அதனால் விளைந்த பாரிய அரசியல் பாதிப்புகளையும் விமர்சிப்பதும், எதிர்காலத்தில் அரசியல் செய்வோர் அதன்மூலம் அதை திருத்தி செப்பனிட்டுக் கொள்ள உதவுவதும் என்றே அரத்தமாகும். தமிழர் அரசியலில் எவரும் புனிதமானவர்கள் அல்ல. இதுவரை தமிழரின் அரசியலை தலைமையேற்று செய்தவர்களில் முக்கியமானவர்கள் அனைவருமே அதாவது பொன்னம்பலம், செல்வா அமிர், பிரபாகரன், சம்பந்தன் வரை அனைவருமே தவறு புரிந்து தமிழர் அரசியலை பலவீனப்படுத்துவதில் பங்காற்றியுள்ளார்கள் . ஆகவே, அவர்களின் செயற்பாட்டை விமர்சிப்பதில் தவறு இல்லை. இதில் எவரை விமர்சிகலாமர எவரை விமர்சிக்க கூடாது என்று எவரும் தடை போட முடியாது. 30. வருடங்களாக ஏக தலைமை என்று மற்றயவர்களை பலவந்தமாக முற்றாக தடை செய்து, தமிழரின் அரசியலை முழுமையாக எடுத்த தலைமை, அதிக வளங்களை தமிழரிடம் இருந்து எடுத்து அதிக பாதிப்புகளை தமிழருக்கு கொடுத்த தலைமையின் அரசியல் செயற்பாடுகள் (தனிபட்ட செயற்பாடுகளோ அவதூறுகளோ அல்ல) விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்று நீங்கள் கருதினால் சாதாரண அரசியல்வாதிகளும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று ஆகிவிடும். அது தவறானது. ஆனால், தனிப்பட்டட அவதூறுகளை யார் மீதும் செய்ய செய்யக் கூடாது . தனிபட்ட அவதூறுகளை எந்த ஆதாரமும் இன்றி தாராளமாக செய்யும் செய்யும் நீங்கள் இதைக் கூறலாமா?

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமையில்

4 days 22 hours ago
இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமையில் "இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது" என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற 'பிரஜா சக்தி' தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலங்களில் வறுமை ஒழிப்பு என்ற பெயரில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை தோல்வியடைந்த திட்டங்களாகவே அமைந்தன. அரசியல் நோக்கங்களுக்காக அந்தத் திட்டங்களைப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, கிராமிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, கிராம மட்ட அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்கில் 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமிய ரீதியில் வறுமையை ஒழித்து, சுபீட்சமான நாட்டை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது" என்றார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் தலைமையில் மாவட்டத்தில் பிரஜா சக்தி குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 48 கிராம சேவகர் பிரிவுகளுக்குமான பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், "கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலமே நாட்டின் அபிவிருத்தியைத் தன்னிறைவாகக் காண முடியும் என்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு அமைவாகவே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமமும் அடிப்படை அபிவிருத்தியைக் காணவுள்ளது. தலைவர்களாக நியமனம் பெறுபவர்கள் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாகப் பொறுப்புடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார். https://adaderanatamil.lk/news/cmj3oqo0s02oto29nwkyuh3y9

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கத் திட்டம்

4 days 22 hours ago
மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கத் திட்டம் 'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றிய பின்னர், அக்காணிகளை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும் எனக் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார். இதன்போது அபாய வலயங்களில் உள்ள காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றத் தீர்மானித்தால், அனுமதிப்பத்திரம் கொண்ட அக்காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்து நட்டஈடு அல்லது மாற்றுக் காணி ஒன்றை வழங்கக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தயாராக உள்ளது. இதற்கமைய, சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடமிருந்து கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சில குடியிருப்பாளர்கள் அரச காணிகளில் அத்துமீறித் தங்கியிருப்பதுடன், அவர்கள் தொடர்பாகவும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அத்திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. இது குறித்து ஏற்கனவே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள காணி அலுவலகங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகக் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmj3zfzrh02p4o29nkju8th5b
Checked
Thu, 12/18/2025 - 05:09
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed