2 days 16 hours ago
"பெண்ணே புயலாகு”
இலங்கைத் தீவானது, தொன்மை வாய்ந்த இரு நாகரீகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்கின என்பது வரலாற்று உண்மையாகும். என்றாலும் சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் கைமாறியதை அடுத்து, சிங்களப் புத்த பேரினவாதம் மேலாண்மை பெற்றது. இதனால் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறை குரூரமான வன்முறை வடிவமாக, கொஞ்சம் கொஞ்சமாக 1956, 1958, 1966, 1977, 1981, 1983, 1985, கலவரமாக மாறத் தொடங்கி, அது 2009 உச்சகட்டத்தை அடைந்தது வரலாறு ஆகும்.
வன்னி அடிப்படையில் நீர் மேலாண்மைக் குடியிருப்பு ஆகும். ஆறுகளும், கடல்களும், குளங்களும், நீரிணைகளும், வாய்க்கால்களும், ஓடைகளும், நீரேரிகளும் அதனை வடிவமைத்தன. நீராலேயே அதன் ஊர்கள் பலவும் பெயரிடப் பட்டன. அதைவிட அங்கு வயல்கள், தோட்டங்கள், சதுப்புக்கள், சிறுகுன்றுகள், பெருமரங்கள், காடுகள் என்பனவற்றுடன் பறவைகள், விலங்குகள் முதலான அப்பிராந்தியத்திற்கே சிறப்பாகவுள்ள மரபுரிமைச் சொத்துக்களைக் கொண்டுள்ளன.
ஆனால் 2008 / 2009 ஆண்டில் அங்கு ஏற்பட்ட கொந்தளிப்பான சூழலில், போர் ஆழமான வடுக்களைச் செதுக்கி, அமைதி தொலைதூர கனவாக மாறிய அந்த தருணத்தில், 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கையில் 30 வருடங்கள் தொடர்ந்த ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட அந்த தருணத்தில், அன்னக்கொடி என்ற இளம் தாயும் அவளது மகள் மலர்மேனியும் முல்லைத்தீவில் வாழ்ந்து கொண்டு இருந்தனர்.
முல்லைத்தீவில் நடந்த மோதலில், இதயத்தை உலுக்கும் கடைசி நாட்களில், ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் தப்பிப் பிழைத்து உள்நாட்டு அகதிகளாக, தங்கள் வீட்டை மட்டும்மல்ல, தங்கள் குடும்பத்தின் தலைவன், அன்னக்கொடியின் கணவன் மற்றும் அவளது மகனையும் காணாமலாக்கப்பட்டதால், வன்முறை மற்றும் அவநம்பிக்கையின் எச்சங்கள் நிழல்கள் போல நீடித்திருக்கும் அந்த மண்ணில் இருந்து இருவரும், களப்பு வழியாக, சிறிய நீர்ப்பகுதி, சேற்றுப்பகுதி ஊருக்குள்ளாலும் காட்டு வழிகளினாலும் செத்தவர் போக மிஞ்சியவர்கள், காயப்பட்டவர்கள் என பல பேருடன் இடம் பெயர்ந்து தற்காலிக குடிகளில், வாழ அவர்களை விட்டுவிட்டது.
இடம் பெயர்ந்த மக்களாக, வன்னியில் அவர்களது வாழ்க்கை கடுமையானதாக, அவர்களுக்கு நிலையான தங்குமிடம் இல்லாமலும் எந்த நிரந்தர வருமானம் இல்லாமலும் இருந்தது. உணவைத் தேடுவதற்கும் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கும் அவர்களின் வாழ்க்கை முடிவில்லாத போராட்டங்களாக இருந்தன. அவர்களின் தற்காலிக குடியிருப்புக்கு அருகிலுள்ள இராணுவ முகாம் அவளுக்கு போரையும் அதன் பின்விளைவுகளையும் நினைவூட்டிக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு இரவும், அன்னக்கொடி ஒழுங்காக நித்திரை கொள்ளவில்லை. எந்த சத்தமும் அவளுக்கு ஒரு பயத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தது.
உடுத்த உடையைத் தவிர வேறு வேறெதுவும் எடுத்துச் செல்ல முடியாமல் வந்தவர்கள் இவர்கள். வெள்ளப் பாதிப்பினாலோ புயலின் தாக்கத்தினாலோ அகதியானவர்களல்ல. இரத்தம், தீ, காயம், வலி என்ற ஏராளமான வதைகளிலிருந்து, மரணப் பொறிகளிலிருந்து தப்பியவர்கள்; தப்ப முனைந்தவர்கள் தான் இவர்கள். யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது எதோ ஒரு வகையில் தொடர்வதாகவே இருந்தது. குண்டு வீச்சில்லை, துப்பாக்கி வேட்டுகள் இல்லை, மரணம் இல்லை, மற்றபடி அத்தனை துன்பங்களும் வலிகளும் துயரங்களும் அலைச்சல்களும் இன்னும் இருந்து கொண்டே அவர்களுக்கு இருந்தது. அதிலும், முல்லைத்தீவில் இத்தனை இடையூறுகளுக்கிடையிலும் அவர்கள் கண்டிராத கொடுமை இப்ப அவர்களுக்கு நேரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ நேரிடும் பாலியல் வன்கொடுமை தான்!
அன்னக்கொடிக்கு ஒரு நாற்பது அகவை தான் இருக்கும். அவளின் கண்கொள்ளா அழகும் இனிமை நிறைந்த வார்த்தைகளும், அதற்கு ஈடான, ஆனால் இளம் பருவத்தின் பூரிப்பில் தவழும் வஞ்சிக்கொடி போன்று மெல்லிய இடையினையும் மலர் போன்ற மென்மையான வண்ண மேனியையும் கொண்ட பதினெட்டு அகவை மலர்மேனிக்கும், அவர்களின் நிறமும் தோற்றமும் தான் எதிரியாகியது அங்கே. அவர்கள் வறுமையிலும் துன்பத்திலும் படும் வேதனையை சாதகமாக்கி, தங்கள் காம பசிக்கு அவர்களை இரையாக்குவதிலேயே சிலரின் கண்கள் மேய்ந்து கொண்டு இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
பாலியல் வன்முறைகள் என்பது வெறும் பாலியல் வன் புணர்வு அல்ல. அதற்கும் மேலாக, பாலியல் நோக்கத்துடன் கூடிய பேச்சுக்கள், சீண்டல்கள், பார்வைகள், அடக்குமுறைகள், மிரட்டல்கள் போன்ற எல்லாமே அடங்கும். எனவே எடுத்தவுடன் ஒருவனின் வெளிப்படையான நடவடிக்கைகளை வைத்து எடை போடுவது கடினம்.
அவளின் குடியிருப்புகளில் வாழும் பழக்கமான சில ஆண்கள், சில சமயங்களில், அவள் படும் கஷடங்களைப் பார்த்து கருணை என்ற போர்வையில் அவளை அணுகி உதவியும் செய்தார்கள். ஆனால், அதைச் சாட்டாக வைத்து நெருங்கிப் பழக முயன்றாலும், அன்னக்கொடி அதைச் சமாளித்து, தன்னைச் சுற்றியுள்ள கடுமையான யதார்த்தத்திலிருந்து பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வாழ்க்கையைச் நகர்த்தினாள்.
"பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே!"
என்ற பாரதிதாசன் அடிகளை நன்கு உணர்ந்த மலர்மேனி, கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவளாக, தன் தாயின் கனவுகளையும் தன் கனவுகளையும் சுமந்து இடம்பெயர்ந்த குடியிருப்பின் வரம்புகளுக்கு அப்பால், ஒரு வாழ்க்கையை செதுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், அறிவியல் பாடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு உட்கார வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ஆனால் அந்தக் குடியிருப்பில் தாயும் மகளுமாக இரு பெண்கள் தனிய வாழ்வது, இளம் பெண்ணான மலர்மேனிக்கு பெரும் சவாலாகவும் இருந்தது.
"தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்,
காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை,
தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே,"
ஒரு நாள் மாலை, குடியிருப்பின் மீது சூரியன் நீண்ட நிழல்களைப் பரவிய போது, மலர்மேனி மாலை வகுப்புகளில் இருந்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்தாள். அந்த குடியிருப்பை சேர்ந்த, ஆண்டில் முதிர்ந்த ஒருவன், அவளை ஒரு மூலையில் வழி மறித்தான். உச்சிக் குடுமி வைத்து மொட்டையடித்த தலையை உடையவன் அவன். தன் காதில் கடுக்கன் அணிந்திருந்தான். கிழிந்த கறை பட்ட ஆடை அணிந்திருந்தான். அவன் நம் தெருவை விட்டு எங்கும் செல்லாதவன். அவன் என்ன செய்தான் தெரியுமா?
"பாரா, குறழா, பணியா, ‘பொழுது அன்றி,
யார், இவண் நின்றீர்?’ எனக் கூறி, பையென,
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,
‘தையால்! தம்பலம் தின்றியோ?’ என்று, தன்
பக்கு அழித்து, ‘கொண்டீ’ எனத் தரலும் யாது ஒன்றும்"
அவன் அங்கே என்னைப் பார்த்தான். அவன் குள்ளன். பணிவில்லாமல் பேசினான். "பொழுதல்லாப் பொழுதில் இங்கே நிற்கிறாயே, நீ யார்" என்று கேட்டுக் கொண்டே மெதுவாக நெருங்கினான். வைக்கோலைக் கண்டு கிழட்டு எருது வருவது போல வந்தான். அங்குமிங்கும் ஒதுங்கவில்லை. "பெண்ணே! வெற்றிலைப் பாக்குப் போட்டுகொள்கிறாயா" என்று கேட்டான். (வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொள்கிறாயா என்றால் என்னுடன் கூடியிருக்க ஒப்புகிறாயா என்பது காமுகர் பேசும் பேச்சு) இருவருக்கும் இடையே இருக்கும் இடை வெளியைக் குறைத்துக் கொண்டு என் பக்கம் வந்து "வாங்கிக்கொள்" என்று வெற்றிலைப் பாக்கைக் கொடுத்தான்.
"வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி,
‘கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ' ‘மற்று யான்"
நான் வாய் திறந்து எதுவும் கூறவில்லை. சும்மா நின்று கொண்டிருந்தேன். சற்றே அகன்று நின்றான். "சிறுமியே, நீ என் கையில் அகப்பட்டுக் கொண்டாய்" என்றான். அவள் ஒருவாறு அங்கிருந்து தப்பி வீடு வந்தாள். அன்னக்கொடி தன் மகளின் கண்களில் இருந்த பயத்தைப் பார்த்தாள். அன்று இரவு, தாயும் மகளும் தங்கள் பயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினர்.
“காதலுக்கு நான்கு கண்கள்
கள்வனுக்கு இரண்டு கண்கள்
காமுகனின் உருவத்தில்
கண்ணுமில்லை காதுமில்லை”
அன்னக்கொடி முணுமுணுத்தாள். அவர்கள் போரில் தப்பிப்பிழைத்தாலும் தொந்தரவுகள் மட்டும் நின்றபாடில்லை. அவர்கள் இடம்பெயர்ந்தனர், வீடு மற்றும் குடும்பத்தை இழந்தனர், இந்த பலவீனமான இருப்பில், அன்னக்கொடி தனது மகளை அவர்களைச் சுற்றியுள்ள கடுமையான உலகத்திலிருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று கடுமையாக அன்று இரவு முழுவதும் சிந்தித்தாள்.
காம வெறியர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம், அறம், மனித நேயம், கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு, நல்லொழுக்கம் முதலிய மனிதப் பண்புகளில் நாட்ட மில்லை. இவர்களின் நோக்க மெல்லாம் உடல் மற்றும் உள்ள இச்சைகளைத் தணிப்பதேயாகும். இவர்களுக்கு அறம் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. அப்படி எனறால்,
"தீ என்னை வாட்டிடினும்
கையைத் தொடாதேயடா - இந்த
முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி
மூச்சுப் பெரிதில்லை காண்"
என்று வலிமையை நெஞ்சில் ஏற்றி "நான் ஒரு துர்கா.” என்று எழவேண்டும் என்று முடிவெடுத்து, அதை மகளிடம் தக்க தருணத்தில் சொல்ல முடிவெடுத்தாள்.
ஒரு நாள் மாலை, அன்னக்கொடி எண்ணெய் விளக்கின் மங்கலான ஒளியில் அமர்ந்து, மலர்மேனியின் ஒரே பள்ளி உடையில் கிழிந்த ஒரு பகுதியை தைத்துக் கொண்டு இருந்தாள். அவள் விரல்கள் கவனமாக நகர்ந்தன, ஆனாலும் அவளது அசைவுகளில் உறுதியான வலிமை இருந்தது. அருகில் வீட்டுப் பாடங்களை முடித்துக் கொண்டிருந்த மலர்மேனி, அம்மாவின் முகபாவத்தைக் கவனித்து அமைதியாகப் பேசினாள்.
"அம்மா, சில சமயங்களில் விட்டுக்கொடுக்கணும்னு தோணுது, இளைஞர்கள், நடுத்தர ஆண்கள் முறைத்துப் பார்க்கும் விதம் ... அவர்கள் சொல்லும் விடயங்கள் ... மற்றும் ராணுவ வீரர்கள்..." அவள் கொஞ்சம் நிறுத்தினாள், வலியால் அவள் கண்கள் இருண்டன. "நான் சிக்கிக் கொண்டது போல் உணர்கிறேன்." என்றாள்.
அன்னக்கொடி தைத்துக் கொண்டு இருந்த ஆடையைக் கீழே போட்டு விட்டு மகளின் கண்களை ஆழமாகப் பார்த்தாள். அவள் மலர்மேனியின் கையை இறுக்கிப் பிடித்தாள். "மலர்மேனி," தாயின் குரல் மென்மையாக ஆனால் உறுதியாக இருந்தது "புயல் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டாள். தாய் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் அவள் தலையை ஆட்டினாள்.
“என் மகளே, புயல் பயங்கரமானது, அது மலைகளை நகர்த்துகிறது, பூமியை அசைக்கிறது, அதன் பாதையில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது. மக்கள் அதைக் கட்டுப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் முடியாது. நாமும் புயல்களாக இருக்க வேண்டும். நாம் அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுவதால் அல்ல, ஆனால் நம்மை அசைக்க முடியாது என்பதை உலகுக்கும் அவர்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக." என்றாள். அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்துவிட்டு, "பெண்ணே புயலாகு” என்று மகளைக் தட்டிக்கொடுத்தாள்.
"வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று"
போல்
“இதை நினைவில் கொள் மலர்மேனி. எமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை இனிது என்று மகிழத் தேவையும் இல்லை அல்லது வெறுப்பில் ‘வாழ்க்கை துன்ப-மயம்’ என்றும் கூறத்தேவையும் இல்லை, நாங்கள் நதியைப் போன்றவர்களும் கூட , வானம் மின்னி மழை பொழிந்து கல்லை உருட்டிக்கொண்டு இரைச்சலுடன் பாயும் ஆறு போல், எந்தப் பாறையையும் அறுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தவர்கள். இந்த அவர்களின் அத்துமீறல்கள் ... நம்மைத் தடுக்க முயற்சி செய்யலாம், ஆனால் நாம் தொடர்ந்து பாய்ந்து கொண்டே இருப்போம். நாங்கள் பயப்படவோ அல்லது பதுங்கவோ இங்கு வரவில்லை. எங்கள் பாதையை செதுக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். இதை உணர் மலர்மேனி, என் அன்பு மகளே !, 'பெண்ணே புயலாகு', நீ துர்காவாக எழுந்து நில்!!, ஆறாக பாய் !!!" என்றாள்.
மறுநாள் காலை, மலர்மேனி பள்ளிக்குச் செல்லும்போது, அம்மாவின் வார்த்தைகளை கவசம் போல சுமந்தாள். இளைஞர்கள் மற்றும் நடுத்தர ஆண்கள் ஏளனம் செய்வார்கள், சிப்பாய்கள் ஏளனம் செய்வார்கள் என்று அவளுக்குத் தெரியும், ஆனால் அவள் இனி ஒரு புயல், அவள் ஒரு துர்கா! அவள் எதிர்பார்த்தது போலவே, உள்ளூர் கூட்டம் சாலையோரம் நின்றும் மதகில் குந்தி இருந்தும், அவள் அவர்களை கடந்து செல்லும் பொழுது அவளுக்கு பாலியல் சார்ந்த கேலி மற்றும் மிரட்டல்கள் செய்தார்கள். ஆனால் இந்த முறை அவள் பயந்து விரைவாக நடக்கவில்லை, முகத்தை மறைக்கவில்லை, ஆனால் "ஏன் என்னை முறைக்கிறாய்?" அவள் துணிந்து கேட்டாள், அவள் குரல் உறுதியாக, கடினமாக இருந்தது. அவளின் பார்வை, கண்ணகி போல, அவர்களை எரித்துவிடும் போல இருந்தது.
அந்த ஆண் கூட்டம் அதிர்ச்சியடைந்தனர். அவள் அவர்களைத் தவிர்ப்பாள், தங்கள் பார்வையில் குறுகிவிடுவாள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களில் ஒருவன், தங்கள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றான், மீண்டும் கேலி செய்தான்.
"எங்களிடம் அப்படிப் பேசும் நீங்கள், நாம் யார் என்று நினைக்கிறீர்கள்?" என்று மிரட்டலாக கேட்டான்.
மலர்மேனி தலை நிமிர்ந்து நின்றாள். “நான் அன்னக்கொடியின் மகள் மலர்மேனி. நான் இங்கு படிக்க வந்திருக்கிறேன், எதுக்கும் தகுதியற்ற, தெரு நாய்களிலும் கேவலமான உன்னுடைய பேச்சைக் கேட்க அல்ல." ஆணித்தரமாகச் சொன்னாள்.
“மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படு வார்”
"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உனக்கு வள்ளுவர் சொல்லியது . இதெல்லாம் உனக்கு எங்கே விளங்கப்போகுது?" என்றாள்.
அவளுடைய எதிர்ப்பானது அந்த கூட்டத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
"அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது,
ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே,
கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே,"
அவன் பயந்துவிட்டான். அதனை அறிந்து கொண்ட அவள், மேலும் ஒரு கை மண்ணை அள்ளி அவன் மேல் தூவினாள். அவன் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி வேகமாக கத்த ஆரம்பித்தான். அவள் புயலாக நடந்து செல்லும் போது அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு அமைதியாகிவிட்டனர். மலர்மேனி தனக்குள் சிரித்துக் கொண்டாள். இது ஒரு சிறிய வெற்றிதான், ஆனால் அது அவளுடைய கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும்.
அன்று மாலை அன்னக்கொடி தங்களின் எளிய உணவை தயார் செய்த போது மலர்மேனி தன் தாயிடம் நடந்த சம்பவத்தை கூறினாள். அன்னக்கொடியின் கண்கள் பெருமிதத்தாலும் சோகத்தாலும் நிறைந்தன. மலர்மேனியின் பயணம் எளிதானது அல்ல என்பதை அவள் அறிந்திருந்தாள், ஆனால் அவள் மகளின் இந்த உள் வலிமையை ஒரு ஆரம்ப வெற்றியாகக் கண்டு மகிழ்ந்து, அவளை அணைத்து தட்டிக்கொடுத்தாள்.
"பெண்ணே புயலாகு”
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"பெண்ணே புயலாகு” [சுருக்கம்]
இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தருணத்தில், அன்னக்கொடி என்ற இளம் தாய், தனது கணவன், மகன் இருவரும் முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டதால், மகள் மலர்மேனியுடன் தப்பிப் பிழைத்து உள்நாட்டு அகதிகளாக, அவர்களது வாழ்க்கை கடுமையானதாக, எந்த நிரந்தர வருமானம் இல்லாமலும் இருந்தது.
யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது எதோ ஒரு வகையில் தொடர்வதாகவே இருந்தது. அதிலும், முல்லைத்தீவில் இத்தனை இடையூறுகளுக்கிடையிலும் அவர்கள் கண்டிராத கொடுமை இப்ப அவர்களுக்கு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ நேரிடும் பாலியல் வன்கொடுமை தான்!
அன்னக்கொடிக்கு ஒரு நாற்பது அகவை தான் இருக்கும். அவளின் கண்கொள்ளா அழகும் இனிமை நிறைந்த வார்த்தைகளும், அதற்கு ஈடான, ஆனால், இளம் பருவத்தின் பூரிப்பில் தவழும் வஞ்சிக்கொடி போன்று, மெல்லிய இடையினையும் மலர் போன்ற மென்மையான வண்ண மேனியையும் கொண்ட, பதினெட்டு அகவை மலர்மேனிக்கும், அவர்களின் நிறமும் தோற்றமும் தான் எதிரியாகியது அங்கே. அவளின் குடியிருப்புகளில் வாழும் பழக்கமான சில ஆண்கள், சில சமயங்களில், அவள் படும் துன்பங்களைப் பார்த்து, கருணை என்ற போர்வையில், அவளை அணுகி, உதவியும் செய்தார்கள். ஆனால், அதைச் சாட்டாக வைத்து நெருங்கிப் பழக முயன்றாலும், அன்னக்கொடி அதைச் சமாளித்து, வாழ்க்கையை நகர்த்தினாள். மலர்மேனி, கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவளாக, ஒரு வளமான வாழ்க்கையைச் செதுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், உறுதியாக இருந்தாள். ஆனால் அந்தக் குடியிருப்பில் தாயும் மகளுமாக இரு பெண்கள் தனிய வாழ்வது, பெரும் சவாலாகவும் இருந்தது.
ஒரு நாள் மலர்மேனி மாலை வகுப்புகளில் இருந்து வீடு திரும்பி வந்துகொண்டிருந்தாள். ஆண்டில் முதிர்ந்த ஒருவன், "இருட்டில் போகிறேயே, துணைக்கு வரவா?" என்று கேட்டுக் கொண்டே மெதுவாக நெருங்கினான். "களைத்திருப்பாய், இதை வாங்கிக்கொள்" என்று எதோ ஒன்றைக் கொடுத்தான். என்றாலும், அவள் ஒருவாறு அங்கிருந்து தப்பி வீடு வந்தாள். அன்னக்கொடி தன் மகளின் கண்களில் இருந்த பயத்தைப் பார்த்தாள். அன்று இரவு, தாயும் மகளும் தங்கள் பயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினர்.
காம வெறியர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம், அறம், மனித நேயம், கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு, நல்லொழுக்கம் முதலிய மனிதப் பண்புகளில் நாட்ட மில்லை. இவர்களின் நோக்கமெல்லாம் உடல் மற்றும் இச்சைகளைத் தணிப்பதேயாகும். இவர்களுக்கு அறம் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. மகளே, வலிமையை நெஞ்சில் ஏற்றி "நான் துர்கா என எழுந்து, 'பெண்ணே புயலாகு' " என்றாள்.
"அம்மா, சில சமயங்களில் விட்டுக்கொடுக்கணும்னு தோணுது, இளைஞர்கள், நடுத்தர ஆண்கள் முறைத்துப் பார்க்கும் விதம் ... அவர்கள் சொல்லும் விடயங்கள் ... மற்றும் ராணுவ வீரர்கள்..." அவள் கொஞ்சம் நிறுத்தினாள், வலியால் அவள் கண்கள் இருண்டன. "நான் சிக்கிக்கொண்டது போல் உணர்கிறேன்." என்றாள்.
“என் மகளே, புயல் பயங்கரமானது, அது மலைகளை நகர்த்துகிறது, பூமியை அசைக்கிறது, அதன் பாதையில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது. மக்கள் அதைக் கட்டுப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் முடியாது. நாமும் புயல்களாக இருக்க வேண்டும். நாம் அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுவதால் அல்ல, ஆனால் நம்மை அசைக்க முடியாது என்பதை உலகுக்கும் அவர்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக." என்றாள். அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்துவிட்டு, "பெண்ணே புயலாகு” என்று மீண்டும் மகளைக் தட்டிக்கொடுத்தாள்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
2 days 16 hours ago
How you can help
Donate AU$ 50 per month to Mahalirillam to support a life change by empowering a female child with the gift of education.
TO DONATE PLEASE CLICK HERE -> Donation
Via Bank Direct Debit
"Fund for Mahalirillam” (ABN 47 467 887 194)
Commonwealth Bank of Australia, Hay Market Branch, Sydney, NSW 2000.
Account No: 06 2006 1103 3596
Via PayPal, using either a debit or credit card
Support Mahalirillam by visiting and engaging with us on following social media
https://www.facebook.com/pages/Mahalirillam/143589209051620
https://www.youtube.com/user/Mahalirillam/videos
Please circulate our newsletter with your family & friends while engaging with them in spreading our vision, inspiring them to join our Mahalirillam family.
If you have an enquiry or wish to provide you feedback
Please click here -> https://mahalirillam.org/au/ contact-us/
2 days 16 hours ago
ஐக்கியத்துள் இனங்களின் தனித்துவத்தை அழித்துவரும் உலகினது வாய்ப்பாட்டைக் கையிலெடுத்து குர்துகளின் அரசியல் விடுதலையை மறுதலிக்கும் நிலைப்பாடாகவே தோன்றுகிறது. ஆனால், சிரியா கடந்து செல்லவேண்டியவை கடினமான திசைநோக்கியாதாகவே இருக்கும்.
2 days 17 hours ago
பெரும்பாலும் மகனுக்காக மகிந்த தலையைக்குடுப்பார் என்று தான்நினைக்கிறன் அல்லது தலையைக்குடுக்க வைப்பினம்
2 days 17 hours ago
நான் சொன்னேன் அல்லவா இரத்த அல்லது தூர உறவு அக்கா - தம்பி அல்ல என்று.
2 உறவும், எரம்பு - எனது உறவின் அம்மா , மதிவதனி - எனது உறவு , அறிமுகமாகி, நட்பு வளர்ந்து, அக்கா - தம்பி என்ற நிலைக்கும், இணைபிரியா சகோதரிளுக்கு (உணர்திறன் மிக்க விடயங்களை சொல்லுவூ சரி அல்ல) இடையில் இருக்கும் நட்பான உறவாக உருமாறியது என்று.
இதில் அறிமுகம் என்பது முக்கியம்.
இப்படியான கருத்து வெளியில் வந்திருக்காவிட்டால் மன்னிக்கவும்.
அருணா மதிவதனியின் சகோதரியாக இருந்தால் - ஆம் அருணா மஹிவதானியின் சகோத்தாரி என்ற எல்லை வரைக்கும் . அதன் மேல் அன்னியோன்னியம் இல்லை.
2 days 17 hours ago
சுத்திச்சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள் தான் நிற்கிறார்.
2 days 17 hours ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
2 days 17 hours ago
பின்பு கதைக்கலாம் என்று தான் இருந்தேன். சுருக்கமாக சொல்கிறேன்
நான் பாவித்த வார்த்தைகள் நிலைமைக்கு வேண்டியதை விட கனதியாக இருக்கலாம், அனால் அது அடிப்படையை மாற்றாது.
(அசாத்தை கொண்டுவர வேண்டாம். அதை பின்பு கதைப்போம்.)
1. அப்போது tna இல் எந்த அடிப்படையில் மற்ற இயக்கங்கள் சேர்த்து கொள்ளப்பட்டது?
மற்ற இயக்கங்கள் , சிங்களத்தின் யாப்பை ஏற்று, சிங்கள பாதுகாப்பில் அல்லவா?
அது போராட்டத்தை ...
அனால், அநாத நிலையில் அவர்கள் புலிகளுக்கு இராணுவ அச்சுறுத்தல் இல்லை (அல்லது மிக குறைவு).
ஆக குறைந்தது, புலிகள் சொன்னதுக்கு முரண் அல்லவா?
2. அனால், பாலசிங்கம் சொன்னதில் கூட effect ஐ எடுத்து விட்டு, cause தவிர்த்து விட்டீர்கள்.
ஏன் என்று சிந்தித்து பார்க்கவும்.
மற்ற போராட்டங்களிலும் இப்படி நடந்து இருக்கிறது (big fish .. small fish விழுங்கி இருக்கிறது) என்பதும் விளைவே தவிர ....
வேறு எவரும் big fish ... ஏன் முழுங்க எத்தனிக்கிறது என்பதை அதில் பொதிந்து உள்ள அர்த்தத்தை விட மாட்டார்கள் (சுருக்கமாக 1. வெளிப்படையாக உணவு சங்கிலி 2. முன்பே சொன்னது, இரண்டுமே சுட்டுவது big fish இன் survival)
3. எத்தனையோ அரசியல் மற்றும் தத்துவ அறிஞர்கள் theoretical, மற்றும் practical ஆக அவதானித்து, ஆய்வு செய்து அடைந்த முடிவை (அதாவது இருப்பே அடிப்படை காரணம்), புலிகள் முறித்து உள்ளார்கள் என்றால், புலிகள் மனித வர்க்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று வரும் (இது நான் சொல்வது)
4. மாறாக, அப்படி புலிகள் செய்து இருந்தால், அது அது அரசு சாரா (ஆயுத மற்றும் ஆயுதம் அற்ற) ஒழுங்குபடுத்தப்ட்ட அமைப்பு அரசியலில் ஓர் paradigm shift. நிச்சயம் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
5. புலிகள் வெளியில் சொன்னது அவர்களுக்கு வசதி. (பொய் என்ற வார்த்தையை பாவிக்கவில்லை). புலிகள் அதை நம்பியும் இருக்கலாம்.
6. புலிகள் இதை சுகந்திரமாக ஆய்ந்து பார்க்கவில்லை.
7. புலிகள் செய்தது - பாட்டும் நானே, பாவமும் நானே, பாடும் உனை நான் பாடவைத்தானே ... நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற போக்கு.
8. இதனால் தான் ஆகக்குறைந்தது முரண்பாடு எழுகிறது.
உணர்ச்சிகளை தள்ளி வைத்து பார்க்கவும்.
இதனால் போராட்டம் மீது புலிகள் வைத்து இருந்த பற்றுறுதியை நான் மறுக்கவில்லை.
2 days 17 hours ago
மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது, அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடத்தில் 361மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக, இவ்வாறான மதுபான சாலை உரிமைப்பத்திரங்கள் வழங்குவதில் அரசியல் லஞ்சம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள்.
அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பலரது சிபாரிசின் அடிப்படியில் ஏராளமான மதுபானசாலைகளுக்கான உருமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என சொல்லியிருந்தார்கள்.
அந்த அரசியல் லஞ்சம் என்ற விவகாரத்தில் தங்கள் பதவிக்கு வந்து மூன்று நாள்களில் வெளிப்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார்கள்.
ஆனால், இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும் யார் யாருக்கு உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மாத்திரம்தான் வெளிப்படுத்தியுள்ளனர். இது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.
யாருடைய சிபாரிசில் இந்த உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தினால் தான், அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டமை என்பதை உறுதி செய்யமுடியும்.
ஆகவே, லஞ்சம், ஊழல் அனைத்தையும் முற்றுமுழுதாக ஒழித்துவிடுவோம் என்று கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம். மதுபானசாலை அனுமதிப்பத்திர விடயத்தில் சுற்றுப் பின்வாங்குவதாக தோன்றுகிறது.
ஒவ்வெரு மதுபானசாலைகளும் யாரோ ஒரு அரசியல்வாதியின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதை, அரசாங்க கட்சியே தேர்தலுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.
அப்படியானால், அந்த பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிடவேண்டும். இதுவொரு பாரதூரமான விடயம். இதனை நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம்.
முக்கிய முறைப்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன்னர் கூறிவிட்டு, அதாவது அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பான பாரிய சந்தேகம் ஒன்றை எழுப்புகின்றது. இவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து இந்த தகவல்கள் மறைக்கப்படுகின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன என்றார்.
https://thinakkural.lk/article/313974
2 days 17 hours ago
20 DEC, 2024 | 03:54 PM
எம்.எம்.பி.எல் - பாத்ஃபைன்டர் நிறுவனக்குழுமம் மற்றும் எச்.சி.எல் எட் டெக் இலங்கை தொழில்நுட்ப மற்றும் வர்த்தக நிறுவனத்துக்கும் இடையில் இலங்கையில் தொழில்நுட்பக்கல்வியை மேம்படுத்துவதில் ஒன்றிணைந்து பணியாற்றுவதை இலக்காகக்கொண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று வியாழக்கிழமை (19) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
https://www.virakesari.lk/article/201736
2 days 17 hours ago
பட மூலாதாரம்,HAYAT TAHRIR AL-SHAM
படக்குறிப்பு, சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அகமது அல்-ஷாராவிடம் பிபிசி பேசியது
கட்டுரை தகவல்
எழுதியவர், ஜெரேமி போவென்
பதவி, சர்வதேச ஆசிரியர், பிபிசி நியூஸ்
சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கத்திய நாடுகளுக்கோ, தங்கள் நாட்டால் அச்சுறுத்தல் இல்லை என்றும், சிரியாவின் தற்போதைய தலைவர் அகமது அல்-ஷாரா கூறியுள்ளார்.
சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸில் பிபிசிக்கு அளித்தப் பேட்டியில், சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். ஏனெனில், அவை முந்தைய ஆட்சியை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களையும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டவர்களையும் ஒரே மாதிரியாக நடத்தக்கூடாது," என்று அல்-ஷாரா கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், சிரிய முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத்தின் ஆட்சியைக் கவிழ்த்த திடீர் தாக்குதல்களுக்கு ஷாரா தலைமைத் தாங்கினார்.
அகமது அல்-ஷாரா, கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் (HTS) தலைவர். முன்பு அவர் அபு முகமது அல்-ஜொலானி எனும் பெயரால் அறியப்பட்டார்.
இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது?
சிரியா போர்: நாட்டின் எந்தெந்த பகுதிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? - விரிவான விளக்கம்
செட்னயா சிறை: சிரியாவின் ரகசிய 'மனிதப் படுகொலை கூடம்'
சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அகமது அல்-ஷாரா தெரிவித்தார்.
கடந்த 2016 இல் அல்-கொய்தாவிலிருந்து பிரிந்துவந்து தொடங்கப்பட்ட குழுவாக, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு அறியப்படுவதால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. உட்பட பல சர்வதேச அமைப்புகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஒரு பயங்கரவாத குழு அல்ல என்று ஷாரா கூறினார்.
அக்குழுவைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களையோ அல்லது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையோ குறிவைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். முந்தைய அசத் ஆட்சியில் நடந்த குற்றங்களால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக அக்குழுவினர் கருதுகின்றனர்.
பட மூலாதாரம்,AFP
படக்குறிப்பு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஒரு பயங்கரவாத குழு அல்ல என்று ஷாரா கூறினார்
பெண் கல்வி பற்றி கருத்து
மேலும், சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற அவர் விரும்புவதாகக் கூறப்படும் கருத்தையும் மறுத்தார்.
ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான கலாசாரங்களுடன் வித்தியாசமானவை என அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகமாக இருந்தது. சிரியாவில், வித்தியாசமான மனநிலை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை தான் நம்புவதாக அவர் கூறினார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப் பற்றி குறிப்பிடுகையில், "எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன," என்று ஷாரா கூறினார்.
அதுகுறித்து மேலும் பேசிய அவர், "பல்கலைக்கழகங்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்." என்றும் அவர் குறிப்பிட்டார்.
யுக்ரேன் உடனான போரில் ரஷ்யாவை தொடர்ந்து முன்னேற வைக்கும் ஒரு 'பயங்கர' உத்தி இதுதான்10 டிசம்பர் 2024
சிரியா: மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும்?11 டிசம்பர் 2024
சிரியா: பஷர் அல்-அசத்துக்கு புகலிடம் கொடுத்த ரஷ்யா9 டிசம்பர் 2024
பட மூலாதாரம்,HTS
படக்குறிப்பு, சிரிய மக்களுள் பலர் அகமது அல்-ஷாராவை நம்பவில்லை
மது அருந்துவது குறித்து என்ன கூறினார்?
மேலும், மது அருந்துவது அனுமதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, "பல விஷயங்கள் சட்ட ரீதியானவை என்பதால் அதைப் பற்றி பேச எனக்கு உரிமை இல்லை" என்று ஷாரா தெரிவித்தார்.
"அரசியலமைப்பை இயற்றுவதற்கு சிரிய சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று உள்ளது. இந்த குழு சட்ட ரீதியான பிரச்னைகள் குறித்து முடிவு செய்யும். எந்த ஆட்சியாளரோ அல்லது அதிபரோ, அந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
ஷாரா நேர்காணல் முழுவதும் நிதானமாக இருந்தார். குடிமக்கள் அணியும் உடைகளை அணிந்திருந்தார். மேலும், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு, அதன் கடந்த கால பயங்கரவாதத்திலிருந்து விலகவில்லை என நம்புபவர்களுக்கு, `அது உண்மையில்லை' என்று உறுதியளிக்க அவர் முயன்றார்.
சிரிய மக்களுள் பலர் அவரை நம்பவில்லை.
அடுத்த சில மாதங்களில், சிரியாவின் புதிய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், சிரியா எந்த மாதிரியான நாடாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்கள் எப்படி ஆட்சி செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
https://www.bbc.com/tamil/articles/cwyxwn49gpko
அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்த அகற்றிய சிரிய கிளர்ச்சியாளர்களின் எதிர்காலம் என்ன?
19 DEC, 2024 | 08:58 AM
சிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றிய கிளர்ச்சிக்குழு கலைக்கப்படும் என அந்த குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சிரிய கிளர்ச்சிகுழு கலைக்கப்படும் அதன் உறுப்பினர்கள் சிரிய இராணுவத்தில் இணைக்கப்படுவார்கள் என எச்டிஎஸ் அமைப்பின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார்.
அனைவரும் சட்டத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் பல்லின சமூகத்தை கொண்ட நாட்டில் ஐக்கியம் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிரியா ஐக்கிய தேசமாக தொடரவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சமூக நீதி நிலவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிரிய அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பவேண்டும் என்றால் சிரியா மீதான சர்வதேச தடைகள் நீங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
https://www.virakesari.lk/article/201616
2 days 17 hours ago
யாழில் விலங்குகளின் இரத்த மாதிரிகள் சேகரிப்பு
யாழ்ப்பாணம், வடமராட்சி கரவெட்டி மற்றும் பருத்தித்துறை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் (19) விலங்குகளிலிருந்து இரத்த மாதிரிகள் பெறப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அண்மைக் காலமாக எலிக் காச்சல் நோயால் பாதிக்கப்பட்ட பலர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். சிலர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், எலிக் காச்சல் விலங்குகளில் இருந்து பரவி இருக்கலாம் என்ற அச்சத்தில், தொற்றுநோயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய விலங்குகளிலிருந்து இரத்த மாதிரிகள் பெறப்பட்டன.
கண்டி பெரதேனியாவிலிருந்து வருகைதந்த விலங்கியல் பிரிவினர் எலிக் காச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, சுற்றுச் சூழல் பகுதிகளை ஆய்வு செய்ததுடன், அந்த பகுதிகளில் உள்ள விலங்குகளில் இருந்து இரத்த மாதிரிகளையும் பெற்றுக்கொண்டனர்.
https://thinakkural.lk/article/313971
2 days 17 hours ago
தங்கள் குடும்பத்தினுள் யாரைப் பலிக்கடா ஆக்கலாம் என்று ஆராய்ந்து முடிவு கண்டபின்பு சம்பவம் நடக்கும் என்று குருவி சொல்லுது.🧐
2 days 17 hours ago
20 DEC, 2024 | 02:58 PM
பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்து எனும் தொனிப்பொருளில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய போராட்டம் கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
(படப்பிடிப்பு – ஜே. சுஜீவ குமார்)
https://www.virakesari.lk/article/201730
2 days 17 hours ago
20 DEC, 2024 | 12:56 PM
(எம்.மனோசித்ரா)
பொதுமக்களுக்கு தற்பாதுகாப்பிற்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மட்டுமே வழங்கப்படும். மேலும் அது புலனாய்வவுத்துறை அறிக்கைகளுக்கமைய மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை தற்காலிகமாக மீளப்பெறுதல் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை கடந்த நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் அளவு மதிப்பாய்வுக்காக அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது. இவ்வறிவிப்புக்கு அமைய, அனுமதி பத்திரம் பெற்றவர்களில் 85 சதவீதமானோர் துப்பாக்கிகளை மீள ஒப்படைத்துள்ளனர்.
மேலும், அவர்கள் தொடர்ந்தும் துப்பாக்கிகளை வைத்திருக்க விரும்பினால், அதன் அவசியத்தை விளக்கி ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் மேல் முறையீடுகளை சமர்ப்பிக்கவும் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்நது. அந்த மேல் முறையீடுகளைச் சமர்ப்பித்த உரிமதாரர்களின் துப்பாக்கிகளை ஆய்வு செய்வதற்கும் மறுபரிசீலனை செய்வதற்கும் துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
தற்பாதுகாப்பிற்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மட்டுமே வழங்கப்படும் என்பது பாதுகாப்பு அமைச்சின் முடிவாகும், மேலும் அது புலனாய்வவுத்துறை அறிக்கைகளுக்கமைய மேட்கொள்ளப்படும். துப்பாக்கிகள் தொடர்பான அனைத்து மேல் முறையீடுகள் மற்றும் துப்பாக்கிச் தொடர்பான ஆய்வுகள் 2025 ஜனவரி 20 அன்று முடிவடையும் என்றும், மற்றும் அனுமதி பத்திரம் அந்தத் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஆய்வுக்காக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த காலங்களில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரும் குறிப்பிடத்தக்களவு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வழங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே, அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்படுகிறது. குறித்த திகதிக்கு முன்னர் துப்பாக்கிகள் கணக்கெடுப்பு/ஆய்வுக்கு உட்படாத உரிமதாரர்களுக்கு எதிராக 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தின்படி, சிவில் சமூகத்தில் துப்பாக்கிப் பாவனை மற்றும் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பான சமூகத்தை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கமைய, இதுவரைக்கும் ஒப்படைக்கப்படாத அனைத்து அனுமதி பத்திரம் பெற்ற துப்பாக்கிகளும் 2025 ஜனவரி 20 திகதிக்கு முன் ஆய்வுக்காக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
https://www.virakesari.lk/article/201722
2 days 17 hours ago
எலிக்காய்ச்சல் நோயால் இதுவரை 121 பேர் பாதிப்பு – 8300 பேருக்கு தடுப்பு மருந்துகள்
யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை.
எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
நேற்றுவரை ஏறத்தாழ 8300 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தது.
இக்குழு பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று கால்நடைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு குருதி மாதிரிகளை எடுத்துள்ளனர் என்றார்.
https://thinakkural.lk/article/313966
2 days 17 hours ago
பட மூலாதாரம்,GETTY IMAGES
நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை நிலைக்குழு, மானியங்களுக்கான கோரிக்கை மீதான அறிக்கையைச் சமர்பித்துள்ளது.
அதில் முப்படைகளின் முன்னாள் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அந்த விபத்து 'மனிதப் பிழை (விமானத்தை இயக்கியவர்களின் பிழை) காரணமாக ஏற்பட்டது' என்று பாதுகாப்புத்துறை நிலைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் – யார் இவர்?
பிபின் ராவத் மரணம்: இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தகவல்
பிபின் ராவத்: இந்தியாவில் வான் விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள்
மதுலிகா ராவத்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் மனைவி – யார் இவர்?
பிபின் ராவத் மரணம்
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இதர ராணுவ வீரர்கள் சூலூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக உதகையில் உள்ள வெலிங்டன் ராணுவ தளத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
பிபின் ராவத், வெலிங்டன் ராணுவத் தளத்தில் நடைபெற இருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வந்திருந்தார். 12 அதிகாரிகளைக் கொண்ட எம்.ஐ. 17 ரக ஹெலிஹாப்டர் வெலிங்டனை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக குன்னூரில் விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா மற்றும் 11 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டரை இயக்கிய க்ரூப் கேப்டன் வருண் சிங் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சைப் பலனின்றி ஒரு வாரத்திற்குள்ளாகவே உயிரிழந்தார்.
அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்து: பாஜகவுக்கு என்ன சிக்கல்? கட்சியின் 'தலித் அரசியலை' பாதிக்குமா?7 மணி நேரங்களுக்கு முன்னர்
அந்தரத்தில் தண்டவாளம், சுற்றி வெள்ளம் : 800 பேரின் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு உயரிய விருது43 நிமிடங்களுக்கு முன்னர்
ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு - 'கௌரவமாக கருதுவதாக' காங்கிரஸ் கூறியது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர்
நிலைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா மற்றும் 11 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த அறிக்கை, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2022 வரையிலான காலத்தில் 34 பாதுகாப்புப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கைப்படி, 2017-18 காலகட்டத்தில் 8 விபத்துகள் பதிவாகியுள்ளன. மேலும், அதிகபட்சமாக 2018-19 காலகட்டத்தில் 11 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து 2021-22 காலகட்டத்தில் 9 விபத்துகளும் பதிவாகியுள்ளன.
கடந்த 2019-20 மற்றும் 2020-21 காலகட்டத்தில் ஆண்டுக்கு தலா மூன்று விபத்துகள் என 6 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2017 முதல் 2011 வரை ஏற்பட்ட 34 விபத்துகளில் 19 விபத்துகள் மனிதப் பிழையால் (ஏர் க்ரூ) ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, பயணத்தின்போது விமானக் குழுவினரால் செய்யப்பட்ட தவறுகள் அல்லது தவறான மதிப்பீடுகள், விபத்துகளுக்கு வழிவகுப்பதைக் குறிக்கிறது.
இதுபோக, ஒன்பது விபத்துகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பறவை மோதி ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், மற்றொரு விபத்து இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில்5 மணி நேரங்களுக்கு முன்னர்
சாம்சங் இந்தியா: தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் - என்ன பிரச்னை? அரசு கூறுவது என்ன?19 டிசம்பர் 2024
எண்ணூர்: 'மனிதர்கள் வாழவே தகுதியற்ற பகுதியா?' - அனல் மின் நிலைய திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு19 டிசம்பர் 2024
குறைந்த விபத்துகள்
நிலைக்குழு கமிட்டியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இந்த 34 விபத்துகள் தொடர்பாக விபத்து நடந்த காலத்திலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.
அதோடு, இதுபோன்ற விபத்துகள் வருங்காலத்தில் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு விசாரணைக் குழுக்கள் முன்வைத்த பரிந்துரைகள் பற்றியும் நிலைக்குழுவிடம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் விபத்துகள் பெரும் அளவில் குறைக்கப்பட்டு இருப்பதையும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியிருப்பதாக நிலைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கைப்படி 2000 முதல் 2005 காலகட்டம் வரை 0.93% ஆக இருந்த விபத்துகள், 2017-22 காலகட்டத்தில் 0.27 ஆக குறைந்துள்ளது. மேலும், 2020 மற்றும் 2024 காலகட்டத்தில் விபத்துகள் 0.20% ஆகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சகம் அறிவித்ததாக பாதுகாப்புத்துறை நிலைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
https://www.bbc.com/tamil/articles/c5y8jy2zvjeo
2 days 17 hours ago
20 DEC, 2024 | 03:16 PM
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 05 கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்று சந்தேக நபர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 38, 25 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவார்.
சந்தேக நபர்களில் இருவர் இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மற்றைய சந்தேக நபர், இன்றைய தினம் காலை 09.45 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 309 கையடக்கத் தொலைபேசிகள் , 08 டெப்கள் , கையடக்கத் தொலைபேசிகளின் துணைக்கருவிகள்12 மடிக்கணினிகள், 20 ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் , 05 ரவுடர்கள் மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.virakesari.lk/article/201737
2 days 17 hours ago
எலான் மஸ்க் G-மெயிலுக்கு மாற்றாக எக்ஸ் மெயிலை கொண்டு வரப்போவதாகத் தகவல் வெளியாகிவுள்ளது.
விண்வெளியில் மார்ஸில் வீடு கட்டுவது தொடங்கி அரசியல் பரப்புரைகள் வரை எல்லாவற்றிலும் ஏதோவொரு பெரும் திட்டத்துடனே செயல்பட்டு வருகிறார் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சிகள், ஏவுகணைகளை ஏவுதல் என மும்முரமாக இருந்த அவர், டெஸ்லா என்ற நிறுவனத்தின் மூலம் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினார்.
தற்போது G-மெயில் மென்பொருளுக்கு மாற்றாக எக்ஸ் மெயில் மென்பொருளைப் புதிதாக அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக அண்மையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவும் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே அவர் ஐபோனுக்கு மாற்றாக புதிய மொபைலை கொண்டு வரப்போவதாகவும் கூறப்படுகிறது.
https://thinakkural.lk/article/313950
2 days 17 hours ago
கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை
பட மூலாதாரம்,EPA
19 டிசம்பர் 2024
எச்சரிக்கை: இக்கட்டுரையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரணைகள் உள்ளன. சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.
பிரான்ஸில் தன் முன்னாள் கணவர் உட்பட 51 ஆண்களால் கிசெல் பெலிகாட் எனும் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அவருடைய முன்னாள் கணவர் டொமினிக் பெலிகாட் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
தன் மனைவிக்கு டொமினிக் தூக்க மருந்து அளித்து, பல ஆண்களை வைத்து அவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தன் மகள் மற்றும் இரு மருமகள்களை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்ததாக கூறப்பட்ட வழக்கிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 50 பேருக்கான தீர்ப்பும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலான நபர்களும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான சிறைத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
கிசெல் பெலிகாட்: 60 வயது பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு
அமேசான்: சட்டவிரோத தங்க சுரங்கங்களில் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் உண்மை நிலை
திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்ட பின் அதை மீறுவது சட்டப்படி குற்றமா?
பெல்ஜியம்: உலகிலேயே முதன்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் ஓய்வூதியம்
மற்றவர்களுக்கு என்ன தண்டனை?
இவ்வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜீர்ன் பியர் எனும் நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இவர், டொமினிக் மூலம் தாக்கம் பெற்று தன் மனைவிக்கும் தூக்க மருந்து கொடுத்து ஐந்து ஆண்டுகள் பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இந்நபர் டொமினிக்கும் தன் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்ய வைத்துள்ளார்.
இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட 50 பேரில் பத்திரிகையாளர், டி.ஜே., தீயணைப்பு வீரர், லாரி ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள் என பலதரப்பட்ட நபர்கள் அடங்குவர்.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது.
பட மூலாதாரம்,BENOIT PEYRUCQ
படக்குறிப்பு, இன்றைய நீதிமன்ற நிகழ்வுக்கு பிறகு டொமினிக் பெலிகாட்டின் முதல் நீதிமன்ற ஓவியம் வெளியானது
72 வயதான கிசெல் பெலிகாட் இன்று பிரான்ஸின், பெண் உரிமைகளுக்காகப் போராடும் அடையாளமாக அறியப்படுகிறார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய முன்னாள் கணவர் டொமினிக்கால் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார்.
பெலிகாட்டிற்கு தொடர்ச்சியாக மயக்க மருந்து அளிக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இக்குற்றச்சாட்டை டொமினிக் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். பெலிகாட்டும், டொமினிக்கும் குடியிருந்த வீட்டின் சுற்றுவட்டாரத்தில் உள்ள பலதரப்பட்ட 51 ஆண்கள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
27 வயதில் இருந்து 74 வயது வரை உள்ள அந்த ஆண்களுக்கு இன்று (டிச. 19) பிரான்சில் உள்ள ஏவிக்னான் நகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
`விசாரணையை எண்ணி ஒருபோதும் வருத்தப்படவில்லை'
பட மூலாதாரம்,REUTERS
இன்றைய நீதிமன்ற நிகழ்வு முடிந்ததும் கிசெல் செய்தியாளர்களை சந்தித்தார்.
"எனது வழக்கறிஞர்களுக்கு எனது நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்க விரும்புகிறேன்." என்றார்.
இந்த விசாரணையை நினைத்து, "எப்போதும் வருத்தப்பட்டதே இல்லை, இந்த விசாரணை மூலமாக இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை சமூகம் பார்க்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
இதேபோல், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கூட்டமைப்புக்கும் நன்றி தெரிவித்த கிசெல், அவர்கள் தனக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இந்த வழக்கை மிகவும் பொறுப்புடன் கையாண்ட பத்திரிகையாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
பின்னணி என்ன?
கடந்த 2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் டொமினிக் தன்னுடைய மனைவி கிசெலுக்கு மயக்கு மருந்துகளை உணவு மற்றும் பானங்களில் கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார்.
பிறகு, ஆன்லைன் மூலமாக அறிமுகமான ஆண்களை வீட்டிற்கு அழைத்து வந்து, கிசெலை பாலியல் வன்புணர்வு சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளார் டொமினிக்.
தொடர்ச்சியாக மயக்க மருந்துகளை எடுத்துக் கொண்டதால் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளார் கிசெல்.
கிசெலுக்கு அப்போது வயது 58. 38 ஆண்டுகள் டொமினிக்குடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார் கிசெல். இருவருக்கும் கரோலின், டேவிட் மற்றும் ஃப்ளோரின் என்று மூன்று பிள்ளைகள். தற்போது அனைவரும் நன்கு வளர்ந்து இளைஞர்களாக உள்ளனர்.
தன்னுடைய ஓய்வு காலத்தை, பிரான்ஸின் தெற்கில் உள்ள மஸான் என்ற கிராமத்தில் செலவிட திட்டமிட்டிருந்தனர் அந்த தம்பதியினர்.
1970களில் இருவரும் முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர். நிதி பற்றாக்குறை போன்ற சிரமங்களை அவர்கள் சந்தித்து இருந்தாலும், அவர்களின் 38 ஆண்டுகால திருமண வாழ்க்கையை அதிர்ஷ்டம் கொண்டதாக நினைத்திருந்தார் கிசெல்.
ஆனால், 2011ம் ஆண்டு கிசெல் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி என்ன நடந்தது என்ன என்பதே அவருக்கு நினைவில் இல்லை.
இன்று மஸானுக்கு அருகே அமைந்துள்ள ஏவிக்னான் நீதிமன்றத்தில் கிசெலும் டொமினிக்கும் எதிரெதிராக அமர்ந்து உள்ளனர். டொமினிக் சிறை ஆடையை உடுத்தியுள்ளார். கிசெல் அவருடைய குழந்தைகள் மற்றும் வழக்கறிஞர்கள் சூழ அமர்ந்துள்ளார்.
பட மூலாதாரம்,AFP
படக்குறிப்பு, அந்த மாத்திரைகளை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொண்ட டொமினிக் அதனை கிசெலுக்கு அளித்து அவரை ஆழ்ந்த தூக்கத்திற்குக் கொண்டு சென்றார்
2014 வரை நடந்து என்ன?
டொமினிக் தன்னுடைய 50களின் தொடக்கத்தில் அதிகமாக ஆன்லைனில் நேரத்தை செலவிட்டார். பாலியல் தொடர்பான இணையங்களில் பலருடன் பேசுவது, பாலியல் தொடர்பான தகவல்களை பகிர்வது போன்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
2010-2011 ஆண்டுவாக்கில், செவிலியராக பணியாற்றும் ஓர் ஆண், டொமினிக்கிற்கு அந்த தளத்தின் வாயிலாக அவருடைய மனைவியின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும், அவருடைய மனைவிக்கு எவ்வாறு மயக்கமருந்து கொடுத்து நினைவிழக்க வைத்தார் என்பதையும் தகவல்களாக அவர் பகிர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் தயக்கம் அடைந்தாலும், டொமினிக் அதேபோன்று தன் மனைவிக்கு மயக்க மருந்தை கொடுத்தார்.
அந்த மாத்திரைகளை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொண்ட டொமினிக் அதனை கிசெலுக்கு அளித்து அவரை ஆழ்ந்த தூக்கத்திற்குக் கொண்டு சென்றார்.
சுய நினைவில் அணிய விரும்பியிருக்காத ஆடைகளை டொமினிக் கிசெலுக்கு அணிவித்தார். மேலும், பல பாலியல் நடவடிக்கைகளில் கிசெலின் நினைவின்றி அவரை ஈடுபடுத்தியுள்ளார் டொமினிக். மொத்த நிகழ்வுகளையும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்த குற்றங்களை அவர் மட்டுமே செய்து வந்தார். 2014ம் ஆண்டு அவர்கள் மஸானுக்கு குடி வந்த பிறகு இந்த திட்டத்தை பெரிதாக்கினார் டொமினிக்.
கேரளா: வக்ஃப் வாரியம் உரிமை கோரும் 404 ஏக்கர் நிலம், எதிர்த்து போராடும் மக்கள் - என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு19 டிசம்பர் 2024
சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி19 டிசம்பர் 2024
பட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு, ஓய்வு காலத்தை மஸானில் கழிக்கத் திட்டமிட்டார் கிசெல்
குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சந்தேகம்
பிறகு ஆன்லைன் சாட் ரூம் மூலமாக அனைத்து வயது ஆண்களையும் கிசெலை பாலியல் ரீதியாக துன்புறுத்த அழைத்துள்ளார் டொமினிக்.
அதை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார் டொமினிக். நீதிமன்ற விசாரணையின் போது, கிசெல் சுயநினைவின்றி இருக்கும் போது இந்த செயல்களில் ஈடுபட கடந்த 10 ஆண்டுகளில் 71 ஆண்கள் அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக பாலியல் சித்ரவதைக்கு ஆளான காரணத்தாலும் மயக்க மருந்துகள் கலந்த உணவை உட்கொண்டதாலும் சுகாதார பிரச்னைகளை எதிர்கொண்டார் கிசெல். உடல் எடை குறைந்தது. முடி கொட்டியது. அடிக்கடி மயக்கம் அடைந்தார். மன உளைச்சலுக்கு ஆளான அவர் இறக்கப் போவதாகவும் நம்பினார்.
அவரின் உடல் நிலையைக் கண்டு கவலை அடைந்தனர் அவரின் குடும்பத்தினர், எப்போது மொபைலில் அழைத்தாலும் டொமினிக்கே பேசி வந்தார்.
"அவர் எங்களிடம், பட்டப் பகலிலும் கிசெல் தூங்கிக் கொண்டிருப்பதாக கூறுவார். ஆனால், எங்களுடன் எங்கள் வீட்டில் இருக்கும் போது பேரக்குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடிய வண்ணம் இருப்பார் கிசெல்," என்று கூறுகிறார் அவரின் மருமகன் பியரி.
மும்பை: பயணிகள் படகு மீது மோதிய கடல் படை படகு - 13 பேர் கடலில் மூழ்கி பலி19 டிசம்பர் 2024
மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்19 டிசம்பர் 2024
பட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு,வழக்கறிஞருடன் டொமினிக் பெலிகாட் (வலது)
காவலர்களின் வருகையால் வெளிவந்த உண்மை
கிசெலுக்கு சந்தேகம் ஏற்பட தொடங்கியது. ஒரு சமயத்தில், நீ எனக்கு மயக்க மருந்து ஏதும் கொடுக்கவில்லையே என்று டொமினிக்கிடம் கேட்டுள்ளார் கிசெல். "என்னை எப்படி நீ இப்படி சந்தேகப்படுவாய்?" என்று கேட்டு அழுதுள்ளார் டொமினிக்.
அல்சைமர் அல்லது மூளையில் கட்டி போன்ற காரணங்களால் உடல் நிலை மோசமடைகிறதா என்று சந்தேகம் அடைந்தார் கிசெல். அதனால் மருத்துவ சிகிச்சைகளை அவர் மேற்கொண்டார். ஆனால், அவருக்கு அப்படியாக எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவுகள் வெளியாகின.
மஸான் பகுதியை விட்டு வெளியே வந்தால் மட்டுமே அவரால் நிம்மதியாக இருக்க முடிந்தது. அதுவும் சில தருணங்களில் மட்டுமே சாத்தியமானது.
கடந்த 2020ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய பிறகு, டொமினிக் அவரிடம்,"நான் ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்துவிட்டேன். பெண்களின் ஆடைகளை சூப்பர் மார்க்கெட்டில் படம் பிடித்த போது மாட்டிக் கொண்டேன்," என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு பெண்கள் குறித்துத் தவறாக ஒரு வார்த்தை கூட பேசாத காரணத்தால் டொமினிக் மீது எந்த வருத்தமும் கோபமும் கிசெலுக்கு ஏற்படவில்லை. அதனால் அவர் டொமினிக்கை மன்னித்துவிட்டார்.
ஆனால், சில காலம் கழித்து சூப்பர் மார்க்கெட்டில் வைத்து டொமினிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரண்டு போன்கள் மற்றும் லேப்டாப் கைப்பற்றப்பட்டது. அதில், 20 ஆயிரம் வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்தன. அதில், கிசெல் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
'36 நிமிட தியானம் குபேரன் ஆக்கும்' - ஜோதிடர் பேச்சால் நாமக்கல் கோவிலில் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்18 டிசம்பர் 2024
கிசெல் பெலிகாட்: 60 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு19 டிசம்பர் 2024
பட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு, அவர்கள் மூவரும் வந்து வீட்டில் பல இடங்களை சோதித்த போது, அவர்களின் மகள் கரோலினும் இதுபோன்று மயக்க மருந்து கொடுத்த புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன
தீவிரமான காவல்துறை விசாரணை
"அனைத்து வீடியோக்களையும் மணிக்கணக்கில் நான் பார்க்க நேரிட்டது. அது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அது நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று அந்த விசாரணையை நடத்திய இயக்குநர் ஜெரேமி பாஸ் ப்ளாடியர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
அவருடைய குழு, அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த ஆண்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்தது. 54 ஆண்களை அவர்கள் அடையாளம் கண்டனர். 21 நபர்களின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
நவம்பர் 2020, 2ம் தேதி அன்று டொமினிக்கும் கிசெலும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கே காவல்துறையினர் சூப்பர் மார்க்கெட் விவகாரத்தை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது காவலர் ஒருவர் கிசெலை அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது காவல்துறையினர், கிசெல் இரண்டு ஆண்களுடன் இருக்கும் புகைப்படம் அவரிடம் காட்டப்பட்டது. அதில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் கிசெல். பிறகு வீட்டிற்கு வந்த பிறகு தன்னுடைய மகன் மற்றும் மகள்களை அழைத்த கிசெல் காவல் நிலையத்தில் நடந்ததைக் கூறியுள்ளார். அவர்கள் மூவரும் வந்து வீட்டில் பல இடங்களை சோதித்த போது, அவர்களின் மகள் கரோலினும் இதுபோன்று மயக்க மருந்து கொடுத்த புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.
அனைத்து குடும்ப புகைப்படங்களையும் அழித்துவிட்டதாக கூறுகிறார் டேவிட். டொமினிக் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார். காவல் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக் கொண்ட பிறகு 2024ம் ஆண்டில் நீதிமன்றத்தில் தான் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.
அம்பேத்கர் பற்றி அமித் ஷா என்ன பேசினார்? எதிர்க்கட்சிகள் போராட்டம் ஏன்?18 டிசம்பர் 2024
மாஸ்கோவில் ரஷ்ய அணுஆயுதப் படைகளின் தலைவர் கொல்லப்பட்டது எப்படி?18 டிசம்பர் 2024
பட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு, தனக்கு ஏற்பட்ட அநீதியில் இருந்து மீண்டு வர தன்னுடைய வாழ்நாள் காலம் போதாது என்று கிசெல் கூறியுள்ளார்
வாழ்நாள் காலம் போதாது
இந்த வழக்கு, உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிசெல் தன்னுடைய அடையாளத்தை மறைத்து, இந்த வழக்கை எதிர்கொள்ளும் உரிமையை நிராகரித்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் எதிர்காலம் மற்றும் அவரின் அடையாளத்தைக் கருத்தில் கொண்டு இந்த உரிமை வழங்கப்படுகிறது.
மாறாக, கிசெல் இந்த விசாரணையில் தன் அடையாளத்தை வெளிக்காட்டினார். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த விசாரணையின் தன்மையை அறிந்துகொள்ள வழிவகை செய்தார்.
அவர் மயக்க நிலையில் இருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது என்று விசாரணையில் பல ஆண்கள் கூறியிருந்ததால் அது, 'தற்செயலாக நிகழ்ந்த பாலியல் வன்புணர்வு' (accidental rape) என்ற ஒரு பார்வை அதில் இருந்தது. ஆனால், கிசெலின் வழக்கறிஞர்கள் குழு, இதற்கு எதிராகப் போராடி, கிசெல் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களை நீதிமன்றத்தில் ஒளிபரப்பினர். எந்த நிலையில் கிசெல் இருந்தார் என்பதை அந்த வீடியோக்கள் வெளிப்படுத்தின.
தனக்கு நடந்த அநீதியில் இருந்து மீண்டு வர அவருடைய வாழ்நாள் காலம் போதாது என்று கிசெல் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
https://www.bbc.com/tamil/articles/cqx8zedrxvno
Checked
Mon, 12/23/2024 - 04:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed