புதிய பதிவுகள்2

வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்

3 months 1 week ago
வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன் Published By: DIGITAL DESK 3 03 JUL, 2025 | 10:15 AM தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள மாகாண ஆணையாளர், உதவிப் பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தில் புதிய பதவிநிலை ஆளணி உருவாக்கம், வெற்றிடமாகவுள்ள பதவிநிலைகள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்துடன் சிற்றூழியர்களுக்கான பதவி உயர்வுகள், சிற்றூழியர் வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இடமாற்றங்கள் தொடர்பிலும், நியமனம் பெறுகின்ற வைத்தியர்களுக்கான நிலையங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் கீழ் மாகாண மட்டத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்வதில்லை எனவும் ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்யவேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகவும் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது. இவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார். https://www.virakesari.lk/article/219063

சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

3 months 1 week ago
சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம் புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. து.திசாளன் (வயது-19), க.பிரவீன் (வயது-18) என்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். விபத்துத் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர். அதிவேக மோட்டார் சைக்கிளொன்றை நேற்றுமுன்தினம் கொள்வனவு செய்து விட்டு, அதில் நேற்றுப் பயணித்த நிலையிலேயே இந்தக் கோரவிபத்து சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/சுன்னாகத்தில்_கோர_விபத்து;_இரண்டு_இளைஞர்கள்_பலி!_முதல்நாள்_வாங்கிய_மோட்டார்_சைக்கிளில்_சென்றபோது_விபரீதம்

துணுக்காயில் இருந்தது இந்திய இலங்கை படைமுகாமே! மக்களின் வாக்குமூலம்

3 months 1 week ago
செம்மணி அகழ்வை திசைதிருப்பி, அங்கே இராணுவ உடல்கள் என ஆதாரப்படுத்த சில அடையாளங்களை புதைப்பதற்கும் அகழ்வை நிறுத்துவதற்கும் செய்யப்படும் தந்திரோபாயமாக இருக்கலாம். அங்கே ஒரு மர்மம் வாகனம் நோட்டமிடுவதாக செய்தி வருகிறது. துணுக்காயில் சடலங்கள் புதைக்கப்படிருந்தால் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் இலங்கை, இந்திய, மற்றும் துணை ஆயுதக்குழுக்களே பொறுப்பு. அவர்களை விசாரியுங்கள். தனது தந்தை என்ன தொழில் செய்து தன்னை படிக்க வைத்தார் என்று சொல்லும் அருண் சித்தார்த், தான் படித்தாரா என்று சொல்லவில்லை. பாவம் அந்த தந்தை! தன்னைப்போல் கஷ்ரப்படாமல் மகன் படித்து முன்னேற வேண்டுமென்று நினைத்திருப்பார், ஆனால் நடந்தது, தனது சமூகத்தாலேயே வெறுத்தொதுக்கும் வேலையை செய்து அந்த தந்தையின் கனவை சிதறடித்துள்ளார். தனது தந்தையையும் சமூகத்தையும் கேவலப்படுத்துகிறார்.

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!

3 months 1 week ago
இதை எல்லாம் நாங்கள் நம்ப வேணும் என்றால்….. பாஸ் போர்ட்டை அனுப்பி வைக்கவும். அதில் குத்தியுள்ள சீல்களை பார்த்துத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். 😂

'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?

3 months 1 week ago
ரித்தன்யாவின் தாய், தந்தையரின் வாக்கு முலத்தின் படி பார்க்கப் போனால் இந்த ஆண் மனோ ரீதியாக ஏதோ பாதிப்புடையவர் போல் உள்ளது..காரணம் நாட்கணக்காக குளிக்க மாட்டாராம், அறையைச் சாத்திக் கொண்டு வீட்டுக்குள்ளயே இருந்து பழக்க பட்ட ஒருவராம்..அது மட்டுமல்ல திருமணத்தின் பின் தான் இந்தியாவில் சில இடங்களையே சுற்றி பார்த்திருக்கிறார் அதுவும் பெண் வீட்டாரின் உதவியோடு.ஆக மொத்ததில் இவருக்கு ஏதோ மைல்டான உடல், உள பிரச்சனைகள் இருந்திருக்க வேண்டும்.சொல்லாமல் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

3 months 1 week ago
நான் தலையின் உரையை கேட்கவில்லை. விளங்க நினைப்பவனுக்கும் விளங்கியது எது என எனக்கு விளங்கவில்லை. ஆனால், கிருஷாந்தி குமாரசாமி பற்றிய தேடல் செய்தபோது அவரை காணவில்லை என்பதை அறிந்து காவலரண் சென்று விசாரித்த தாயார், சகோதரர், அயலவர் ஆகியோரும் கொலை செய்யப்பட்டார்கள் என தகவல் உள்ளது. In 1997, we were part of a campaign calling for action against soldiers who raped and killed a Tamil schoolgirl, Krishanti Kumaraswamy, while she was in custody. Her mother, brother and a neighbour who went looking for her were also murdered. https://web.archive.org/web/20070614032831/http://www.unesco.org/courier/1999_09/uk/dires/txt1.htm

'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?

3 months 1 week ago
ம் ....வரதட்ஷனை இல்லாதவர்களை யாரும் பெண் பார்ப்பதில்லை, காதலிப்பதில்லை. தன் பெண் வாழவேண்டுமென்பதற்காகவே எத்தனையோ பெற்றோர் கடன் வாங்கி கலியாணத்தை நடத்தி பின் கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார்கள். வரதட்ஷனை கொடுக்க மாட்டேன் என அடம்பிடிப்பவர்கள் வாழ்நாள் எல்லாம் வாழாக்குமரி எனும் பட்டம். தன் பெண்ணுக்கு திருமணமாகிவிட வேண்டுமென பல லட்ஷங்களை செலவிடும் பெற்றோர் மாப்பிள்ளையின் தொழில், குடும்ப பின்னணி ஆராய்வதில்லை, பின் பெண் திரும்பி பிறந்த வீட்டுக்கு வந்தால் குடும்ப கௌரவம் போய் விடும், ஏனைய பிள்ளைகளுக்கு வரன் வராமல் போய்விடுமென சமாதானம் செய்து புகுந்த வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார்கள், அல்லது தமது பெற்றோர் பட்ட கஷ்ரம், படும் கஸ்ரம் கண்டு மேலும் கஷ்ரப்படுத்தாமல் தவறான முடிவை எடுக்கிறார்கள். இதுவே ஆண் வீட்டடாருக்கு வசதியாக போய்விடுகிறது. கிடாய் வளர்ப்பது போல் சீதன சந்தையில் விற்று விட தீனி போட்டு வளர்க்கிறார்கள், நல்ல பண்பை, தன் மானத்தை சொல்லிக்கொடுப்பதில்லை. காதலித்து தந்தையாகிய பின்னும் சீதனம் என்றவுடன் வாயைப்பிளந்துகொண்டு இன்னொரு கலியாணத்திற்கு சம்மதிக்கிறார்கள். நம்பிய பெண்ணை கைவிட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். இதுவே பெண் செய்தால் ஏற்றுக்கொள்வதில்லை. பெற்றோர் பெண்குழந்தைகளை வெறுப்பதற்கும் சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதற்கும், சீதன தொகை உயர்வுக்கும் காரணமாகிறது. அதிக சீதனம் கொடுப்பதோடு வாழ்நாள் பிரச்சனைகளையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு நிச்சயம் செய்கிறார்கள் பின் வேறொரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் காரணம், சீதனச்சந்தையில் அதிக விலைகொடுத்து வாங்கிவிட்டார்கள். சீதனம் எனும் பிரச்சனையால் கரையேறாக் குமரிகளும் தன்மானம் கெட்ட கழுதைகளும் பெரும் சுமையாக உள்ளது. படித்த பெண்ணுக்கு அதிக வரதட்சனை. காரணம் பெண்ணை விட படித்த, மேலான வேலை பார்க்கும் மாப்பிளை என்பதால். படித்த மேலான வேலை பார்க்கும் ஆணுக்கு ஒரு பெண்ணை காப்பாற்ற முடியாதா? அப்படிப்பட்டவரை நம்பி எதற்கு பெண்ணை ஒப்படைகிறார்கள். இது சீதனமுமல்ல அந்தப்பெண்ணை பராமரிப்பதற்கு அளிக்கப்படும் தொகை, பிச்சை. அந்தப்பெண், பிள்ளை பெற மாட்டேன் என்றால் சம்மதிப்பார்களா? அல்லது அதற்கு பணம் கொடுப்பார்களா மாப்பிள்ளை வீட்டார்? சீதனத்தையும் கொடுத்து அந்த வீட்டுக்கு சம்பளமில்லாமல் மாடாய் உழைக்கிறாள் பெண். அதில் பெண் குழந்தை பிறந்தால் அது வேறு அவள்தான் தாக்கப்படுகிறாள். குழந்தை பெறாவிட்டாலும் வசை பாடுகிறார்கள், வேறு கலியாணம் செய்கிறார்கள். சீதனம் கொடுப்பது, பிள்ளை பெறுவதற்கு மட்டுமே பெண்ணை வாங்குகிறார்கள். அவளுக்கும் மனதுண்டு, ஆசை, விருப்பு வெறுப்பு உண்டு என்பதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆணிற்த் தான் குறைபாடு என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.

'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்' - திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?

3 months 1 week ago
இதில் முதல் குற்றவாளி வரதட்சணைதான் (A # 1), எமது சமூகத்திலும் வரதட்சணை வாங்குபவர்கள் உள்ளார்கள், ஆதிலும் பெரும்பாலானாவர்கள் படித்தவர்கள்தான் இந்த வரதட்சணை வாங்குபவர்களாக உள்ளார்கள். சிலர் வரதட்சணை கொடுப்பதினை பெருமையாக நினைப்பவர்களும் உள்ளார்கள். எமது சமூகத்தில் வரதட்சணையினை ஒரு பிற்போக்குத்தனமாக பார்க்கும் நிலை கூட இல்லை.

துணுக்காயில் இருந்தது இந்திய இலங்கை படைமுகாமே! மக்களின் வாக்குமூலம்

3 months 1 week ago
அரசின் மனித உரமை மீறல்கள் VS புலிகளின்மனித உரிமை மீறல்கள் – ஒன்றுக்கொன்று சமனாகுமா? நடராஜா_குருபரன் புலிகளின் துணுக்காய் முகாம் சமன் = செம்மணி மனிதப் புதைகுழி அல்ல! ஜே.வி.பியின் கொலைகள் சமன் = பட்டலந்தை வதை முகாம் அல்ல! 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெற்கின் குடிமக்கள் கொல்லப்பட்டதல்ல. அனுராதபுரம், காத்தாண்குடி படுகொலைகள் + தற்கொலைத் தாக்குதல்கள் சமன் = முள்ளிவாய்க்கால் அல்ல! அரசுகள் செய்த தவறுகளும், ஆயுத அமைப்புகள் செய்த தவறுகளும் ஒழுக்கம், பொறுப்பு, சட்டம் என்பவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. இரண்டையும் சமமாகக் மதிப்பிடுவதென்பது “திட்டமிட்டு மெதுவாக ஒழுங்குபடுத்தப்பட்ட துஷ்பிரயோகத்துக்கும்”, “தற்காப்பு அல்லது எதிர்ப்புச் செயல்களுக்குமான” வேறுபாட்டை நீர்த்துப் போகச் செய்துவிடும். அது நீதிக்கே விரோதமானது. குறிப்பாக “அரசுகள் செய்யும் மனித உரிமை மீறல்களை, யுத்தக் குற்றங்களை ஆயுத அமைப்புகள் செய்யும் மீறல்களுடன் ஒப்பிட்டு சமப்படுத்த முயலும் போது, மனித உரிமைகள், அதிகாரம் சார் ஒழுக்கநெறிகள், அரசியல் நியாயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்க வேண்டும். ஒரு நாடு அல்லது குடிமக்களின் அரசு என்பது சட்டத்தால், மக்களால், சர்வதேச ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு அதிகார அமைப்பு. மக்களின் பாதுகாப்பு, உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவை அரசின் அடிப்படை கடமைகளாக உள்ளன. அதனால், அரசு செய்த செய்யும் தவறுகள் "சாதாரணக் குற்றங்கள்" அல்ல அவை அதிகாரத்தையும், நம்பிக்கையையும் சிதைப்பது, சமூகத்திற்கே எதிரானது. அரசு மனித உரிமைகளை மீறும்போது, அது சட்ட ஒழுங்கின் மேல் தன்னுடைய உரிமையை இழக்கும். அவ்வாறு செய்யும் போது, அது அதிகாரத் தவறை மட்டுமல்லாமல், சமூக ஒழுங்கைப் பற்றிய புரிதலையும் பிழையாக்குகிறது. ஆனால் பெரும்பாலான ஆயுத அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்பெற்ற அமைப்புகள் அல்ல. அவை அரசுக்கு எதிராக, சட்டத்திற்கு பறம்பாக உருவாகின்றன. அவை பெரும்பாலும் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு முயற்சிகளாகவும் தோன்றுகின்றன. அரசிடம் அதிகாரமும் பொறுப்பும் இரண்டும் உள்ளன.ஆயுத அமைப்புகளிடம் குறிப்பட்ட அளவில் அதிகாரம் இருக்கலாம், ஆனால் பொறுப்புக்கட்டமைப்பு நிச்சயமற்றது. இதுவே அவற்றை அரசுகளுடன் ஒப்பீடு செய்ய முடியாத முக்கிய புள்ளியாகிறது. அரசும், அதற்கு சமமாக ஆயுதஅமைப்புகளும் தவறு செய்தார்கள் - தவறு செய்கிறார்கள் என்ற சமப்படுத்தல்கள் அரசியல் சீரழிவுக்கு வழிவகுக்கும். இது அதிகாரத்தின் தவறுகளையும், வன்முறையின் பிறழ்வுகளையும் சமமாக்கும் தோற்றத்தை உருவாக்குகிறது. இதனால், சமூகங்கள் வன்முறையின் காரணங்களை புரிந்துகொள்ளாமல், இருவரையும் ஒரே அளவில் நிராகரிக்கும் நிலையை அடைகின்றன. ஒருவேளை ஒரு ஆயுத இயக்கம் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை, பழிவாங்கல்களை, சித்திரவதைகளை, கொலைகளை செய்தது என்றால் அது தவறானதே. ஆனால் அதனைச் செய்வதற்கான சூழ்நிலைகளையும், அரசியல் ஒடுக்குமுறைகளையும், அடக்கு முறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சமூகவியல் பார்வையில், அது ஒரு வன்முறையின் வடிவக் குரல் (violence as political expression) என்ற கருத்து நிலவுகிறது. அதனைத் தவிர்த்து தவறுகளை மதிப்பீடு செய்வது, சமூகத்தின் அடிப்படை அமைப்பு ஏற்கும் வன்முறையை மறைக்கும் நிலையாகிவிடும். அரசுகள் உலகளாவிய ஒப்பந்தங்களுக்கு (UDHR, Geneva conventions, etc.) கையெழுத்திட்டுள்ளன. அதனால் அவர்களின் செயல்கள் ஒரு சர்வதேச நியாயக் கோட்பாட்டின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. மாறாக ஆயுத அமைப்புகள் பெரும்பாலும் அந்தப் பொறுப்புகளுக்கு உட்பட்டதாகவோ – உட்பட்டிருப்பதாகவோ இருப்பதில்லை. மக்கள் மீது ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும், தவறாக நடந்துகொள்ளும் கட்டமைக்கப்பட்ட அரசே, எதிர்ப்பு உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆக அரசின் தவறுகளை - சட்டவியல், ஒழுக்கநெறி, சர்வதேச ஒப்பந்தம் ஆகிய அனைத்தையும் மீறும் கட்டமைக்கப்பட்ட துஷ்பிரயோகமாக சர்வதேச சட்டங்கள் வரையறுக்கின்றன. ஆயுத அமைப்பின் தவறுகள், பொறுப்பு இன்மை, சட்டப்பூர்வ அடையாளம் இன்மை, அல்லது அரசியல் கோணத்தின் கீழ் எதிர்ப்பு வன்முறை என இவை அனைத்தையும் கொண்ட ஒரு குழப்பநிலையாக கருதப்படுகின்றன. அதனால் "அவர்கள் செய்தார்கள், நாமும் செய்தோம்" என்பது நீதியின் மொழியல்ல. ஒவ்வொரு செயலையும் அதன் அதிகார பின்புலத்தோடு, அரசியல் சூழலோடு, சமூகக் காரணங்களோடு மட்டுமே மதிப்பீடு செய்யவேண்டும். மனித உரிமை மீறல்கள் பற்றி நாம் பேசுகிறோம். அவை பெரும்பாலும் இரு திசைகளில் நிகழ்கின்றன. ஒரு பக்கம் அரசுகள் – சட்டமும் அதிகாரமும் கையில் கொண்ட அமைப்புகள் – மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்கின்றன. மறுபக்கம், ஆயுதங்களைத் தூக்கிய இயக்கங்கள், எதிர்ப்பின் அரச எதிர்ப்பின் பெயரால், சில வேளைகளில் அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன. இவை இரண்டுமே தவறுதான். ஆனால், இவை இரண்டையும் ஒரே தட்டில் – ஒரே தராசில் வைத்து எடையிட முடியாது. ஒரு அரசு என்பது தனிப்பட்ட ஒருவரின் செயல்கள் அல்ல. அது ஒரு கட்டமைப்பின் நிழல். அதனை சட்டம் ஒழுங்கு, பொறுப்புக் கூறல் பதிலளிக்கும் கடப்பாடு, அதிகாரம், உரிமை என அனைத்தும் சூழ்ந்திருக்கின்றன. அதனால் அரசுகள் செய்வது சாதாரண தவறு அல்ல – அது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கையை சிதைப்பதாக, துரோகிப்பதாக அடையாளப்படுத்தப்படும் போர்குற்றம் செய்கிற அரசும், சித்திரவதை செய்கிற அதிகாரியும், நீதியின் முன் கொண்டுவரப்பட வேண்டியவர்களே. ஆனால் விடுதலை இயக்கங்களும், ஆயுத குழுக்களும் பெரும்பாலும் ஒரு அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் பிறக்கின்றன. அவற்றின் வன்முறைகளையும், செயல்களையும் தயவுதாட்சன்யம் இன்றி விமர்சிக்க வேண்டும். வெளிப்படுத்த வேண்டும் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், அந்த வன்முறையின் பிறப்பிடமும், கண்ணீரோடு சேர்ந்த கோபமும், கவலையும் சரியாக மதிப்பீடு செய்யப்படுவது அவசியம். ஒரு அரசு, தன்னுடைய குடிமக்களை வஞ்சிக்கையில், அந்த வஞ்சனையில் ஏற்பட்ட பிளவு, சில சமயங்களில் பாறைகளை பிளக்கும் நதியாக ஆயுதப் போராட்டமாக உருவெடுக்கின்றன. அந்த நதி திசை தவறி ஓடினாலும், அதன் பிறப்பிடம் – அரசின் அநீதி என்பதை மறக்கக் கூடாது. அதனால், அவர்கள் சித்திரவதை செய்தார்கள், இவர்கள் செய்ததில் என்ன தவறு?” என்ற வாதம், நீதியின் வேரில் நைவேதியமிட்டுவிடும். இரு பக்கமும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக இருவரையும் ஒரே தரத்தில் சமப்படுத்துவது, அதிகாரமற்றவரின் அழுகையையும், அதிகாரத்துடன் செய்கிற அடக்குமுறையையும் ஒரே கோடில் வரைவது போல ஆகிவிடும் அது ஒரு தவறான ஒப்பீடாகிவிடும். அதிகாரத்தின் பெயரில் செய்யப்படும் வன்முறைக்கும், அதிகாரமற்றவரின் எதிர்ப்பின் வன்முறைக்கும் இடையே ஒழுக்கமும் சட்டமும் வரையக்கூடிய வரம்புகள் உள்ளன. அரசுகளுக்கு சட்டப் பிணையங்கள் உள்ளன. அவை சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அவை மனித உரிமைகளை காக்கவே ஏற்படுத்தப்பட்டவை. அந்த அரசுகளே அந்த உரிமைகளை மீறும்போது, அது வன்முறையைவிட மோசமான ஒரு துரோகமாகிவிடும். அரசியல், சமூகம், நீதிமுறை – இவை மூன்றும் அதிகாரத்தின் தரக்கோலாக இருக்க வேண்டும். ஆனால், அவை அதிகாரவந்தத்துக்கு பணிந்து விடும் பொழுது, ‘நீதி’ என்ற வார்த்தையே அர்த்தமற்றதாக மாறிவிடும். நம் பார்வை நுணுக்கமாக இருக்க வேண்டும். தவறுகள் இருதரப்பிலும் இருக்கலாம். ஆனால், அவற்றை சமப்படுத்துவதில் உள்ள குற்றவுணர்வின்மையான தன்னிலை நம்மை மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும். அரசுகள் நிழல்களை விழுங்கும்போது, அந்த நிழல்களில் அடியெடுத்துச் செல்லும் எச்சங்களும் கூட நாம் மறக்கக்கூடாத உண்மைகள். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை புலிகளின் துணுக்காய் முகாமோடு ஒப்பீடு செய்து அதனை நீர்த்துப்போகச் செய்ய முனைவோர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். #ஞாபகங்கள் #nadarajah_kuruparan #journalist # நடராஜா_குருபரன் https://www.facebook.com/share/p/1ZRkwXtxcE/

அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

3 months 1 week ago
அர்ச்சுனா இலங்கை பாராளுமன்றத்தில் கிறிசாந்தியைகொடூரமாக படுகொலை செய்து அவா அரை உயிராக இருக்கின்ற போது அவாவின் பிள்ளையையும் கொலை செய்து புதைத்தார்கள் என்று பேசி உள்ளார். கிறிசாந்தி ஒரு மாணவி அவாவிற்கு பிள்ளைகள் இல்லை

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

3 months 1 week ago
ஜேர்மனியில் இன்று அதியுச்ச வெப்ப நாளாக சொல்கிறார்கள். இதே நிலை தொடராது. அப்படி ஒரு மாதம் தொடர்ந்தால் ஜேர்மனியின் பாதி சனத்தொகை குறைந்து விடும் போல் உள்ளது.🤣 பல பாடசாலைகளை மூடியே விட்டார்கள்.😉

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

3 months 1 week ago
ஈரானில் இஸ்லாமிய புரட்சியின் போது மன்னர் ஷா அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பதுக்கி வைத்த சொத்துக்கள் சொல்லில் அடங்காதவை.அந்த பணத்தை(தங்கம்) கொடுத்துதான் அமெரிக்க தூதரக பயணக்கைதிகளை மீட்டனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அந்த பயணக்கைதிகள் அதிரடி மீட்பு விடயத்தில் அமெரிக்கா தோல்வியடைந்து சேறு பூசிக்கொண்ட விடயம் பெரிய அவமானம்.இன்று பழி தீர்த்து விட்டார்கள். அந்த அரச பரம்பரைகள் ஒழுங்காக இருந்திருந்தால் இஸ்லாமிய புரட்சிகள் வந்திருக்கவே மாட்டாது. அந்த மன்னர் பதுக்கி வைத்த சொத்துக்களை வைத்து தான் மன்னர் பரம்பரை மேற்கு நாடுகளில் இன்றும் உல்லாசமாக வாழ்கின்றார்கள்.
Checked
Mon, 10/13/2025 - 09:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed