புதிய பதிவுகள்2
சிரிக்கலாம் வாங்க
பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இறுதி ஆராதனைகள் இன்று!
பாப்பாண்டவர் பிரான்ஸ்சிஸ்சின் இறுதிச் சடங்கு / Pope Francis' funeral at St. Peter's Basilica
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது!
தேர்தல் வந்தால், இப்படி தலைகீழாக பேசி மக்களை ஏமாற்றுவார்கள், பின் தாம் என்ன சொன்னோம் என்பதையே மறந்து, ஏக்கய அரசியல் வரைபை வரைந்ததே நாம், ஏக்கய என்பதற்கு சரியான விளக்கம் இல்லை என்று விளக்கம் வேறு சொல்வார்கள். பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடனேயே அந்த ஏக்கய வரவின்படி பிரச்சனையை தீர்க்கப்படும் என்று வேறு சட்டாம்பி தெரிவித்திருந்தாரே, அப்போ இந்த சிவஞானம் எங்கே போயிருந்தார்? எதிர்த்து குரல் எழுப்பவில்லையே? தேர்தலில் வெல்வதற்காக சிவஞானம் எதை வேண்டுமானாலும் பிரட்டி சொல்வார். சுமந்திரனை தாக்கி அறிக்கை விட்ட சிவஞானம், மறுநாள் அதற்கு மாறாக அறிக்கை விட்டவர். அவரிடம் எந்த அதிகாரமுமில்லை, அவரை யாரும் நம்பிக்கைக்குரியவராக ஏற்றுக்கொள்வதுமில்லை சுமந்திரன் உட்பட. ஆனால் முடிந்தவரை அவரை தன் காரியங்களுக்காக பயன்படுத்திக்கொள்வார் அவ்வளவுதான்.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். கொஞ்சம் ஓவராத்தான் பண்ணி விட்டுடுவா.
ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம்! 500க்கும் மேற்பட்டோர் காயம்
ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம்! 500க்கும் மேற்பட்டோர் காயம். தெற்கு ஈரானின் பன்டார் அப்பாஸில்(Bandar Abbas) உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச் சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானில் உள்ள ஷாஹித் ராஜீ தெற்கு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெடித்தது இந்த சம்பவம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த துறைமுகம் முக்கியமாக கொள்கலன் போக்குவரத்தை கையாளுவதுடன், எண்ணெய் தாங்கிகள் மற்றும் பிற கனிய இரசாயன வசதிகளை வழங்கும் துறைமுகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பு சம்பவம் துறைமுகத்தை கடுமையாக சேதப்படுத்தியுள்ளதுடன், வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் வெடிப்புக்கான காரணம் ஆபத்தான பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் இருக்கலாம் என்று ஈரானிய சுங்க அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் துறைமுகத்தின் உள்ள படகு முனையத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், வெடிப்பால் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429636
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்! ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, நடுநிலையான விசாரணைக்குத் தாம் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது பஹல்காமில் நடந்த துயரச் சம்பவம் பழி சுமத்தும் மற்றொரு உதாரணமாகும் எனவும், இவ்வாறான விடயங்களுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும், எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜ் முகம்மது ஆசிஃப் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429615
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் @வாழ்த்துக்கள். ஆனபடியால் கேகேஆர் வெல்லும்.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனிய மாலை வணக்கம் அனைவருக்கும் ......... ! 😂 காவ்யாவின் மற்ற ரியாக்சன் படங்களைப் பார்க்க சகிக்கலை ......... கனவு கலைஞ்சிடும் . ....... ! 😂
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கோசான்... அருமை. சிரித்து வயிறு நோகுது. 😂 🤣 ரூம் போட்டு யோசிப்பீங்களா. 😃
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னங்க. காவியான்ர reaction படங்கள் போடுவீங்கள் என்று பார்த்தா.....
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் KKRக்கு எதிரா இரண்டு சாதனைகள் செய்திருக்கு. ஜபில் வரலாற்றில் அதிகூடிய ஓட்டத்தை துரத்தி அடித்தவை. 261 ஓட்டங்கள் ஜபில் வரலாற்றில் குறைந்த ஓட்டத்தை தடுத்து வென்றவை. 111 அடிச்சு KKRஜ 95க்க அமத்தினவை
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கேகேஆர் அணியில் இன்று Rovman Powell விளையாடுகிறார் .
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புரிகிறது. கிருபனின் போட்டிகளை நாங்கள் முதலே தெரிவு செய்வதால், என்ன நடந்தாலும், சிரிச்சுக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அணிகள் எப்படி விளையாடும் என்ற அறிவு இல்லாமல்தானே தெரிவு சேய்கிறோம்.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
2024 இல் கிருபன் நடாத்திய ஐபிஎல், t20 உலககோப்பை போட்டிகளில் எனக்கு பிடித்த சென்னை, அவுஸ்திரேலியாதான் வெல்லும் என விடையளித்தேன். இரண்டு போட்டிகளிலும் நான் 3 ம் இடம். இவ்வருடம் விருப்பு வேற போட்டி வேற என முடிவெடுத்து விடை எழுதினேன். சென்னை விளையாடும் 14 போட்டிகளில் 12 இல் சென்னை வெல்லும் என விடையளித்தேன் .(நேற்று 11 போட்டிகள் என்று குறிப்பிட்டிருந்தேன். இவ்வருடம் சென்னை SRH இடையிலான போட்டிகள் 2 என எழுதியிருந்தேன். உண்மையில் ஒரு போட்டிதான் ). சென்னை வெற்றி பெறமாட்டாது என்று எழுதிய 2 போட்டிகளுக்கும் புள்ளிகள் கிடைத்தன. நீங்கள் சொன்னது போல சுவாரஸ்யம் சற்று குறைந்து போலவே தென்பட்டது.
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அட இவ்வளவு விசேசமா? நைக்கியை தவற விட்டுவிட்டேன். புறிகட்டுவனையாவது வாங்கி போடாவிட்டாலும் அயன் பண்ணி வைப்போம்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது!
இது சுமந்திரனின் கூற்றுக்கு முரணாக உள்ளதே?
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதென்ன கொட்ட்டா பட்டி ஜட்டியா? கொடியில் இருந்து உருவி கசங்கலோடு அப்படியே போட🤣. லிமிடெட் எடிஷன் நைக் ஐயா… வாங்கும் போதே கறுப்பு வெள்ளை பெட்டியில் ஒரு ஐபோனை விட கியாதியாக பேக்கேஜ் செய்யப்பட்டிருக்கும். வாங்குவதற்கு மூன்று வருட வெயிட்டிங் லிஸ்ட். அப்போதும் எல்லாருக்கும் விற்க மாட்டார்கள் - வாங்குபவரின் profile எல்லாம் செக் பண்ணி, ஏற்புடையதாகின் மட்டுமே விற்பார்கள். கிட்டதட்ட ஒரு பெராரே கார் வாங்குவதற்கு சமன். இதை கையால், மிஷினில் எல்லாம் தோய்க்கப்படாது. டிரை கிளீந்தான். பிறகு அதை அப்படியே மடிப்பு கசங்காமல் அயன் மேசையில் எடுத்து வைத்து, பூப்போல எடுத்து அணிய வேண்டும். பிகு குறிகாட்டுவான் கம்பெனி கூட இதை போல - “நெடியகாடு” என்ற பெயரில் ஒரு லிமிடெட் எடிஷன் ஐட்டம் இறக்கவுள்ளார்களாம்.
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது!
ஏக்கிய ராஜ்ய தொடர்பாக சட்டத்தரணி சுமந்திரன் தொடர்ந்தும் பொய் கூறுகிறார்என் பி.பி ஒரு பாரிய அடியை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாங்க போகின்றது. சமஸ்டி தீர்வு பற்றி 9 ஆவது நிமிடத்தில். 12 ஆவது நிமிடத்தில் இருந்து ஏக்கிய ராட்சிய பற்றிய விளக்கம்.
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed