புதிய பதிவுகள்2

அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதிக்கு சீன அரசு தடை!

3 months 2 weeks ago
அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதிக்கு சீன அரசு தடை! அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கு சீன அரசு தடைவிதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் உணவகங்களில் மிக பிரபல உணவாக இருந்த அமெரிக்க மாட்டிறைச்சி இனி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அத்துடன் இதற்குப் பதிலாக அவுஸ்திரேலியாவில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யவுள்ளதாக சீன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429214

பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்

3 months 2 weeks ago
பிள்ளையான் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் – மேலும் இருவா் கைது adminApril 22, 2025 தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் தொடா்பில் வைக்கப்பட்டுள்ள மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பில் மட்டும் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்து வருகின்ற நிலையில் அது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது எனத் தொிவித்துள்ளாா். . பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஊடாக பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாவதுடன், அவற்றில் சில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும் எனத் தொிவித்த அவா் சில குற்றச்சாட்டுகள் உயர்நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகும் எனவும் அவை தொடர்பில் விசாரிக்கப்படுவதுடன் அது தொடா்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளாா் . சில கொலை வழக்குகளில் அவர்கள் எந்தவிதத்தில் தொடர்பை கொண்டிருந்தார்கள் என காவல்துறை விசாரித்து வருகிறது எனவும் உயிா்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்பாலான திகதிகளில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவா் தொிவித்துள்ளாா். . சிறையிலிருந்த பிள்ளையான் இதில் தொடர்புபடவில்லை என மறுக்க முடியாது எனவும் கடந்த காலங்களில் பலர் சிறையிலிருந்து குற்றங்களை வழிநடத்திய வரலாறுகள் உள்ளன எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ , பிள்ளையான் இதன் பின்னணியில் உள்ளாரா? என்பது குறித்து விசாரணைகளில் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார் https://globaltamilnews.net/2025/214589/

துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!

3 months 2 weeks ago
துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்! வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சமூக ஆர்வலரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான டான் பிரியசாத் (Dan Priyasad) உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி, சாலமுல்ல பகுதியில் அமைந்துள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று (22) இரவு 9:10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 39 வயதான டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். அவரது தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுகளும், மார்பில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுகளும் பாய்ந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் மற்றொருவர் லேசான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1429188

அடுத்த 4 மாதங்களுக்கு போதுமான இன்சுலின் இருப்பு உள்ளது!

3 months 2 weeks ago
அடுத்த 4 மாதங்களுக்கு போதுமான இன்சுலின் இருப்பு உள்ளது! அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் இருப்பு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நாட்டில் தேவையான அளவு இன்சுலின் இருப்பு உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்து இருப்பை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் சில மருந்துகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், விநியோகஸ்தர்களின் பலவீனங்கள் இதற்கு ஒரு காரணமாக இருந்ததாகவும் அமைச்சர் கூறினார். இதை தவிர்க்க, பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429173

ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி

3 months 2 weeks ago
ஜம்மு காஷ்மீரில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்; 26 பேர் மரணம்! ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக பஹல்காமில் செவ்வாய்க்கிழமை (22) தீவிரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு அதிகாரியும், உளவுத்துறைப் பணியகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்காக இராணுவ ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. ஏனெனில் அந்தப் பகுதிக்கு கால்நடையாகவோ அல்லது குதிரையில் சென்றோ மட்டுமே செல்ல முடியும். தாக்குதலின் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை ஸ்ரீநகருக்கு விஜயம் மேற்கொண்டார். அங்கு ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் நளின் பிரபாத் அவருக்கு விளக்கம் அளித்தார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி – தனது இரண்டு நாள் சவுதி அரேபியா பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு திரும்பினார். அவருடன் பேசி தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டார். பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில், ஒரு மலையின் உச்சியில் உள்ள புல்வெளியில் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டன. தீவிரவாதிகள் காடுகளிலிருந்து வெளியேறி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியதாக சாட்சியங்கள் தெரிவித்தன. துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் வெளியான காட்சிகளில் பலர் அசையாமல் தரையில் கிடப்பதையும், பல பெண்கள் உதவிக்காக மன்றாடுவதையும் வெளிக்காட்டியுள்ளது. பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்து கொண்டிருந்த நேரத்திலும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த நேரத்திலும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இன்று அதிகாலை டெல்லி திரும்பிய பிரதமர், சவுதி அரேபியா நடத்திய அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் முதலில் புதன்கிழமை (23) இரவு இந்தியாவுக்குப் புறப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் தாக்குதலுக்குப் பின்னர் தனது பயணத்தை முடித்துக்கொண்டார். இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த அவர், “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் உறுதி அசைக்க முடியாதது, அது இன்னும் வலுவடையும்” என்றார். “அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றிபெறாது,” என்று அவர் மேலும் கூறினார். “பேரழிவு தரும் பயங்கரவாத தாக்குதலை” திரு. வான்ஸ் கண்டனம் செய்தார். “கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் அழகையும் அதன் மக்களையும் நாம் கண்டு வியந்து போயுள்ளோம். “ஆழ்ந்த தொந்தரவான” காஷ்மீர் தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்கா இந்தியாவுடன் “வலுவாக நிற்கிறது” என்றும் அவர் கூறினார். இதேவேளை,பஹல்காம் சுற்றுலாப் பயணிகளின் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பயங்கரவாதியின் பிரத்யேக முதல் படம் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் கிளையான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தற்போது முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். https://athavannews.com/2025/1429191

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

3 months 2 weeks ago
தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM. உலகின் முதல் தங்க ATM இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த ATM நிறுவனமானது ஷாங்காய் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும் எங்கும் கிடைக்காது என்பதால். தங்கத்தை விற்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இதனைத் தவிர்க்கும் வகையில் சீனாவின் ஷாங்காய் நகரில், ‘சைனா கோல்ட்’ என்ற நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தங்க ATM சீன மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த இயந்திரத்தில், நகையை வைத்தால், அதை எடை போட்டு, எவ்வளவு என்பதை திரையில் காட்டும். அதை ஏற்று ஒப்புதல் அளித்தால், தங்கம் உருக்கப்பட்டு, அதற்குரிய பணம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். சீன கிங்ஹுட் குழுமம் பராமரிக்கும் இந்த தங்க ATM தங்கத்தின் தரத்தை பரிசோதித்து, அதற்கு ஈடான பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும். மேலும் தினசரி தங்கத்தின் விலையை ATM, திரையில் அறிவிப்பதாகவும், தங்கத்தை விற்றால் எங்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்று மக்கள் அலையாமல், அன்றைய விலையில் தங்கத்தை இந்த ATM இமில் வைத்து, தங்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக பணத்தைப் பெறலாம் என்றும் சைனா கோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த ATM இல் தங்கள் தங்கத்தை விற்று பணம்பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429168

பிள்ளையான் ‍- பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி

3 months 2 weeks ago
இவனை விடுங்கள் ..இவனை வைத்து உசுப்பேத்தி கொலைகளை செய்ய சொன்ன நாட்டின் தலைவர்கள் இராணுவ புலனாய்வர்கள் அரசியல்வாதிகளை என்ன செய்வது ...சொந்த நாட்டு மக்களை அழித்து துவசம் பண்ண வேணும் என பல வ்ருடங்களாக செயல் படும் படித்த பட்டம் பெற்ற சீமான்களை என்ன என்று சொல்வது ... சிங்கப்பூரில் விரிவுரையாளராக பணியாற்றிய ரோகன் குனதிலக்கா போன்றவர்கள் எல்லாம் .

பிள்ளையான் ‍- பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி

3 months 2 weeks ago
நீங்கள் கூறுவது 100% உண்மை ...ஆனால் மனிதன் இன்னும் வளர்ச்சியடையவில்லை.. நீங்கள் நினைப்பது போல வாழ்வதற்கு..பலர் வந்தார்கள் உபதேசம் பண்ணினார்கள் மாற்ற முயன்றார்கள் ஆனால் அவர்களை வைத்தே பல குழப்பங்களை நிறந்தரமாக உருவாக்கி அந்த குழப்பத்தை நிரந்தரமாக மாற்றிவிட்டார்கள்..... அனுகூலம் அடைவதுதான் மனித இயல்பு என்ற நிலையில் தான் மனிதர்கள் செய்லபடுகின்றனர் ...அதை என்ன விலை கொடுத்தாவது பெற்று கொள்ளலாம் என மனிதர்கள் நினைக்கின்றனர் ...உலக கட்டமைப்பு அப்படித்தான் உள்ளது

பிள்ளையான் ‍- பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி

3 months 2 weeks ago
பிரதேசவாத சித்தாந்தம் போலத்தான் இடது சாரி சித்தாந்தமும் ...மக்கள் மாறிகொண்டே போவார்கள் .இந்த இடதுசாரி சித்தாந்தமும் நிலைத்து நிற்கப்போவதில்லை ..ஐயோ இந்த பழம் புளிக்கிறதே என சொல்லும் காலமும் வரும்...

ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!

3 months 2 weeks ago
தலித் எனும் பதம் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் எப்போது பிரயோகத்திற்கு வந்தது? இப்படியொரு பெண் முன்னோடி பற்றி இப்போதுதான் அறிகின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அப்பிடி ஒரு நினைப்பு இருக்கோ. ஹைதராபாத் மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும், ஆர் வந்தாலும் போட்டு அடிக்கிறது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. மும்பை பாவம். வந்து மாட்டுப்பட்டிருக்கு. ரோகித்து போன போட்டியில அரைச்சதம் அடிச்சதால, இன்னும் இரண்டு மூன்று போட்டிகள் சொதப்புவார். பிறகென்ன. அதோட நான் இந்தமுறை பெரியகை எல்லாம் இருக்கிற குழு. இந்தக் குழுவே, ஆர் வந்தாலும் அடிக்கும். பிறகென்ன கவலை நமக்கு: ஈழப்பிரியன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நாளைக்கும் அமோகம்தான்.🤣 கைதராபாத் அணி ஒரு தார் ரோடு ஏற்பாடு செய்கிறதாம், அதில மும்பாயினை போட்டு உருட்டுவதற்கு (கட்டாந்தரை ஆடுகளம்), எல்லோரும் எதிர்பார்க்கும் 300 எடுக்க வேணும் எனும் முனைப்பில் இருக்கிறார்களாம், ஆனால் மும்பாய் கைதராபாத்தினை அதே ரோட்டில போட்டு உருட்டி உருட்டி அடிக்க போகிறதோ தெரியவில்லை. நானும் மும்பாய்தான், செம்பாட்டானை போட்டு உருட்டி எடுப்போம்.🤣 அவர் இப்போது என்னை போல சான்விச் மசாஜினை அனுபவித்து கொண்டுள்ளார், மேலேயும் இல்லை கீழேயுமில்லை.🤣

பிள்ளையான் ‍- பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி

3 months 2 weeks ago
எது விலை போகிறதோ அதனை பயன்படுத்துகிறார்கள், இலங்கையில் மதம், பிரதேசவாதம் போல (தமிழ் தேசியம் கூட அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது) இந்தியாவில் சாதியம் பயன்படுத்தப்படுகிறது, இவை எல்லாவற்றிற்கு பொதுவான ஒற்றுமை சாதி, மதம், பிரதேசவாதம் என்பவை என்ன என்று உய்த்தறிந்து உணரமுடியாவிட்டாலும் அவற்றின் பேரால் மக்களை தம்பக்கம் இழுக்க முடிகிறது அதன் மூலம் அதிகாரத்தினை பெறமுடிகிறது, பின்னர் அதன் பெயரால் அவர்களையே அழிக்க முடிகிறது. சாதாரணமாக சிந்திக்க முடிந்த மனிதனால் இந்த மூட நம்பிக்கைகளில் வெளிவரமுடியாமல் இருக்கின்றமையால் அதனை அவர்கள் பயன்படுத்தி அனுகூலமடைகிறார்கள். இதனை புரிய வைக்க முயன்றால் அப்படி முயற்சிப்பவர்கள் மேல் கோபங்கொள்கிறார்கள், அடுத்த இரண்டு சந்ததிகளின் பின்னர் இவை காணாமல் போய்விடும், ஆனால் என்ன எமது சமூகம் அப்போது உலக ஓட்டத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருப்பார்கள். மக்களின் புலம் பெயர்வு புதிய சிந்தனைகளுக்கான அடித்தளமாக இருந்தாலும் புலம் பெயர்ந்தவர்களில் மிகவும் பின் தங்கியவர்கள் இந்த மாற்றத்தினை விரும்பாமல் அதற்கு எதிர்ப்பு கொடி தூக்குவதன் நோக்கம், மாற்றம் வந்தால் கால மாற்றத்திற்கேற்ப தம்மை உயர்த்த முடியாத இவர்கள், தாம் இந்த மாற்றங்களினால் காணாமல் போய்விடுவோம் என அஞ்சுகிறார்கள். அது தேவையற்ற பயம், ஊரார் பிள்ளையினை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்பார்கள், பொது நலனில் கூட நாங்கள் விரும்பும் சுயநலம் உள்ளது. மனிதனை சிந்திக்க தெரிந்த மிருகம் என கூறுகிறார்கள், எமது சமூகம் சிந்திக்க விரும்பாத சமூகம்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
14 போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றதால் ஒப்பாரி வைத்தேன். அதாவது முதல் 20 போட்டியில் 5 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றேன்.( முதல் 6 போட்டியில் 4 , அடுத்த 14 இல் ஒன்று) . மிகுதி 20 போட்டியில் 13 வெற்றிகள். பெங்களூர் அணி சொந்த மண்ணில் தோற்கும் என நினைத்து விடை எழுதியதும், ராஜஸ்தான் அணி பல போட்டிகளில் தோற்கும் என எழுதியதும், டெல்லி அணியின் பல வெற்றிகளும்தான் காரணம். சென்னை மும்பாய் இடையிலான போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாடும் அணிகள் வெற்றி பெறும் என்றும், பஞ்சாப் பங்களூர் இடையிலான போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாடும் அணிகள் தோற்கும் என நினைத்து எழுதிய விடைகள் புள்ளி பெற உதவின. எனினும் பெரிதாக நம்பிய SRH, CSK, MI, KKR அணிகளின் தோல்விகள் பல போட்டிகளில் புள்ளிகள் கிடைக்காததற்கு காரணங்கள்.
Checked
Fri, 08/08/2025 - 18:44
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed