3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாள் எது ஓ ஹோ ஆண் : உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் இங்கு நீ இல்லாது வாழ்வில் ஏது வேணிற்க் காலம்தான் ஆண் : என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக் கோலம்தான் ஆண் : ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி ஆடும் நினைவுகள் நாளும் பாடும் உனதருள் தேடி இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும் எந்தன் உயிர் உனைச் சேரும் ஆண் : சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில் நின்றது உன் மயக்கம் இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம் ஆண் : உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம் ஆண் : பாதச் சுவடுகள் போகும் பாதை அறிந்திங்கு நானும் கூட வருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும் உள்ளக் கதவினை மெல்லத் திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேண்டும் ........ ! --- ஊரெல்லாம் உன் பாட்டுதான் ---
3 months 2 weeks ago
நாரதர் கலகம் நன்மையில் முடியும். 😂 கலியுக நாரதர்… ட்றம்பு. 🤣
3 months 2 weeks ago
இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ....... ! 😁 நீங்கள் ரொம்ப அழகு ....... சுவியும் கருப்புதான், சுவியைவிட நீங்கள் அழகு . ...... ! 😂 இன்று ஹைதராபாத் வெல்லுது ....... ஆலம்பனா நிஜாமின் அரண்மனையில் உங்களுக்கு விருந்து உண்டு ........ ! 👍
3 months 2 weeks ago
பிள்ளைகளுக்காக வீதிக்கு வந்த வாழ்க்கை ......... சே . ... என்ன உலகமடா இது .......! 😂
3 months 2 weeks ago
23 APR, 2025 | 11:17 AM கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கட்டுநாயக்க, ஆண்டியம்பலம பிரதேசத்திற்கு நேற்றைய தினம் காலை 10.00 மணியளவில் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரிகள் இருவர், வட்டிக்கு பணம் கோரும் போர்வையில் 33 வயதுடைய வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். வட்டிக்கு பணம் கோரி வந்த துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சந்தேகமடைந்த வர்த்தகர் அவர்களை வீட்டிற்குள் வைத்து கதவை மூடியுள்ளார். இதனை அறிந்துகொண்ட துப்பாக்கிதாரிகள் வர்த்தகரை சுட்டுக்கொல்ல முயன்றுள்ளனர். இதன்போது துப்பாக்கிதாரிகளிடம் இருந்த துப்பாக்கி செயலிழந்துள்ளது. பின்னர் வர்த்தகரும் இரு துப்பாக்கிதாரிகளும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, துப்பாக்கிதாரிகள் இருவரும் வர்த்தகரின் வீட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டின் மதிலிலிருந்து கீழே குதித்துள்ளனர். இதன்போது ஒரு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ள நிலையில் மற்றைய துப்பாக்கிதாரியின் கால் வீட்டின் மதிலில் மோதி காயமடைந்துள்ளது. பின்னர் காயமடைந்த துப்பாக்கிதாரி தனது கையிலிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொல்ல முயன்ற போது துப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த கட்டுநாயக்க பொலிஸார் காயமடைந்த துப்பாக்கிதாரியை கைது செய்துள்ளனர். அம்பாறை பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய துப்பாக்கிதாரியே கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் காயமடைந்த துப்பாக்கிதாரி சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/212706
3 months 2 weeks ago
ட்ரம்பின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தியதால் பெரும் நட்டத்தை சந்தித்த எலோன் மஸ்க் April 23, 2025 11:51 am அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து தனது பங்கைக் குறைத்துக் கொள்வதாக டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் நிறுவனத்தின் லாபமும் வருவாயும் சரிந்ததைத் தொடர்ந்து மஸ்க் இந்த முடிவை எடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் மஸ்க் ஒரு அரசியல் அங்கமாக மாறியதால் விற்பனை சரிந்ததாக கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வாகன வருவாயில் டெஸ்லா நிறுவனம் 20 வீத சரிவை சந்தித்துள்ளது. கடந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் லாபம் 70 வீதத்திற்கும் அதிகமான சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஸ்க்கின் அரசியல் ஈடுபாடு உலகம் முழுவதும் டெஸ்லாவுக்கு எதிர்ப்புகள் மற்றும் புறக்கணிப்புகளைத் தூண்டியுள்ளது. ட்ரம்பின் புதிய நிர்வாகத்தில் மஸ்க்கின் பங்கு குறித்த கூக்குரலுக்கு மத்தியில் நிறுவனத்தின் அண்மைய நட்டம், நிறுவத்தின் மீதான கவனத்தை குறைத்துள்ளதை மஸ்க் ஒப்புக்கொண்டுள்ளார். கூட்டாட்சி செலவினங்களைக் குறைப்பதற்கும் அரசாங்க பணியாளர்களைக் குறைப்பதற்கும் ட்ரம்பின் அரசாங்கத் துறை (டோஜ்) முயற்சியையும் அவர் மஸ்க் வழிநடத்துகிறார். அடுத்த மாதம் முதல் “டோஜுக்கு ஒதுக்கப்படும் நேரம்” கணிசமாகக் குறையும்” என்றும் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/musk-to-reduce-doge-role-after-tesla-profits-plunge/
3 months 2 weeks ago
இலங்கையிலுள்ள தீவிரவாதிகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். உடனான நேரடி தொடர்பு குறித்தம் முதல் எச்சரிக்கையை பாராளுமன்றம் ஏன் புறக்கணித்தது என்பதை கண்டறிய முயற்சியினை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் டாக்டர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை சூத்திரதாரிகளையும் பெரும் சதித்திட்டங்களையும் பற்றிப் பேசுபவர்கள், அந்தக் கூறப்படும் தொடர்பு நவம்பர் 18, 2016 அன்று பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டதை மறந்து விட்டார்கள், அப்போது நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சராக இருந்த நான், அந்தத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தினேன். ஒரு காலத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருந்தவர், அப்போதைய இராணுவ புலனாய்வு இயக்குநரகத்தின் (DMI) தலைவருடன் நிலைமையை உறுதிப்படுத்திய பின்னர் அந்த அறிவிப்பை அம்பலப்படுத்தினேன். உடனடியாக விசாரணையைத் தொடங்குவதற்குப் பதிலாக, யஹாபாலன அரசாங்கம் என்னை குறிவைத்தது. உண்மை என்னவென்றால், உயர்மட்ட யாகபாலனா தலைமை, குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விசாரணையைத் தொடர தைரியம் இல்லை. ஏனெனில், அனைத்து முஸ்லிம் எம்.பிக்களும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளைப் பொருட்படுத்தாமல், என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரினர். நான்கு பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த 32 முஸ்லிம்கள் குழு ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்தது குறித்து பாராளுமன்றத்தில் அவர் வெளியிட்ட தகவல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சீனாவிடம் ஒப்படைப்பதை எதிர்த்த பின்னர், 2017 ஆகஸ்ட் மாத இறுதியில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதற்கு பங்களித்தது. அத்துடன், தனக்கு எந்த எம்.பியின் ஆதரவும் கிடைக்கவில்லை. இருப்பினும், ஒரு கட்டத்தில், அரசியலமைப்பு சபையில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஜான் செனவிரத்ன, வளர்ந்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல் பூஜித் ஜெயசுந்தரவால் நிலைமையைக் கையாள முடியாத அளவுக்கு இருந்தது என்று அவருடன் ஒப்புக்கொண்டார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், ஏப்ரல் 2016இல் ஜெயசுந்தர ஐ.ஜி.பியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்ததாகக் கூறினார். ஆனால் பாராளுமன்றத்தில் அவர் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி அப்போதைய மாநில புலனாய்வு சேவை (SIS) இயக்குநர் (SIS) டிஐஜி நிலந்த ஜெயவர்தனவிடம் விளக்கம் கேட்டதாக ஜனாதிபதி வழக்கறிஞர் கூறினார். என் எச்சரிக்கைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று SIS தலைவர் அறிவித்தபோது, தேசிய பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். வெளிப்படையாக ஜனாதிபதியும் பிரதமரும் SIS தலைவரின் கூற்றை ஏற்றுக்கொண்டனர். 40க்கும் மேற்பட்ட ஈஸ்டர் ஞாயிறு வழக்குகள், அதிகாரத்தில் உள்ள பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்தால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படலாம். P CoI நடவடிக்கைகளின் போது, சஹ்ரான் ஹாஷிமின் நடவடிக்கைகள், குறிப்பாக கிழக்கில், ஜூன் 2017 இல் காவல்துறை சட்டமா அதிபர் துறையின் ஆலோசனையை கோரியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 2017இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு வரை இந்த வடயம் ஒருபோதும் கவனிக்கப்படவில்லை. நவம்பர் 2016இல் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து, ஊடக அறிக்கைகளை பொலிஸார் ஆராய்ந்திருந்தால், ISIS வெளிப்பாட்டை எதிர்த்தவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். அத்துடன், ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் இருவரின் தந்தை 2015 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தால் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான சூழ்நிலைகளை விளக்க முடியுமா? முன்னாள் ஏஜி டப்புல டி லிவேரா, பிசி, மே 24, 2021 அன்று ஓய்வு பெறுவதற்கு முன்னதாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை ஒரு பெரிய சதி என்று கூறிய பிறகு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) உடன் ஒத்துழைக்க மறுத்ததற்கான காரணத்தையும் விளக்க வேண்டும். அவரது கூற்று முழு விசாரணையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், காவல்துறை அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் தீவிரவாதத்திற்கு எதிரான பொதுவான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருந்தால் ஈஸ்டர் ஞாயிறு படுகொலையைத் தவிர்த்திருக்கலாம். 2019ஆம் ஆண்டு நடுப்பகுதியில், வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், யகாபாலன அரசாங்கம் தீவிரவாத சக்திகளை தொடர்ந்து பாதுகாத்து வருவதாக ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/317206
3 months 2 weeks ago
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்: அவசரமாக நாடு திரும்பிய பிரதமர் மோடி விமான நிலையத்திலேயே ஆலோசனை! April 23, 2025 ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்த நிலையில், சவுதி அரேபியாவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். இன்று (ஏப்.23) காலை சவுதியில் இருந்து புதுடெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, விமான நிலைய வளாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், பஹல்காம் பகுதியில் அப்பா மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தரை வழியாக இராணுவத்தினர் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், இத்தாலி பிரதமர் மெலோனி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். https://www.ilakku.org/காஷ்மீரில்-சுற்றுலா-பயணி/
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பள்ளிப்படிப்பையும் பாதியிலேயே நிறுத்திய அந்த பெண், தன் அம்மாவுடன் கூலி வேலைக்கு சென்றுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 22 ஏப்ரல் 2025 எச்சரிக்கை: இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை அளிக்கக்கூடும் 2015-ஆம் ஆண்டில், 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ஒருவர், 10 ஆண்டுகள் கழித்து இளம்பெண்ணாக, நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார். குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, 10 ஆண்டுகள் சொந்த குடும்பத்தில் இருந்து, வெளியேற்றப்பட்ட அந்த பெண் இந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈட்டை வழங்க நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தப்பட்டு, சொந்த பெயரை மாற்றிக் கொண்டு, வெளியூரில் சென்று வேறொரு அடையாளத்தில் வாழ்ந்த அந்த சிறுமி, 10 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது எப்படி? 10 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்தது எப்படி? காவல்துறையினர் எவ்வாறு அந்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்தனர்? வழக்கில் நடந்தது என்ன? 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த சிறுமியின் தாயார் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். ஆனால் புகார் அளித்து வெறும் இரண்டே நாளில் அந்த சிறுமி, அவருடைய அம்மா மற்றும் அப்பெண்ணின் உடன் பிறந்தோர் இரண்டு பேரும் எங்கே சென்றார்கள் என்று காவல்துறையினருக்கு தெரியவில்லை. 10 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரம், எம்.கே.பி. நகர் காவல்துறையினர் பாதுகாப்புடன் 22 வயது இளம்பெண்ணாக திரும்பி வந்த அந்த சிறுமி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான தகவலை முதன்முறையாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்தார். சென்னையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரின் மருமகனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையும், அதனைத் தொடர்ந்து அவர் திண்டுக்கல்லுக்கு கடத்திச் செல்லப்பட்டு மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும் அவர் நீதிமன்றத்தில் உறுதி செய்ததோடு, குற்றவாளியையும் அடையாளம் காட்டியுள்ளார். புகார் அளித்த சிறுமி காணாமல் போனது எப்படி? அப்போது வட சென்னையில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார் அந்த சிறுமி. 7-ஆம் வகுப்பு மாணவியான அவர் தொடர்ச்சியாக பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி அன்று அந்த சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். அவருடைய குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் அவர் கிடைக்கவில்லை என்பதால் அவரைக் காணவில்லை என்று எம்.கே.பி. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பிய அந்த சிறுமி, திண்டுக்கலுக்கு அவர் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அங்கே அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரின் அம்மா, அதே காவல்நிலையத்தில் அவர் வீட்டு உரிமையாளரின் மருமகன் மீது புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். "ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் அந்த பெண், அவரின் உடன்பிறந்தோர், மற்றும் அம்மா அனைவரும் சென்னையில் இருந்து வெளியேறிவிட்டனர். காவல்துறையினர் தரப்பில் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தியும் அந்த சிறுமியும் அவரின் குடும்பத்தினரும் எங்கே சென்றனர் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணின் தாயார் அளித்த புகார், போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது," என்று தெரிவிக்கிறார் தற்போது எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவல்துறை அதிகாரி. ராஜஸ்தான்: 18 வயதில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணின் 32 வருட சட்டப் போராட்டம்12 செப்டெம்பர் 2024 தமிழ் சினிமா: பாலியல் குற்றங்களை தடுக்க நடிகர் சங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கைகள் என்ன?12 செப்டெம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எம்.கே.பி.நகர் காவல் நிலைய அதிகாரிகள் அந்த பெண்ணை கண்டுபிடித்தனர் குடும்பத்தில் இருந்து விரட்டப்பட்ட சிறுமி இந்த வழக்கில், ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ். அனிதா, இது குறித்து பேசும் போது, "இங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அவர்களின் குடும்பத்தால் கைவிடப்படும் போது என்ன ஆகும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. கூட்டுக்குடும்பத்தில் வசித்த அந்த சிறுமிக்கு நடந்த குற்றத்தை வன்முறையாக அவரின் அப்பா காணவில்லை. மாறாக அவரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட களங்கமாக கருதினார். அதனால் சிறுமி, சிறுமியின் அம்மா, மற்றும் உடன் பிறந்தோர் ஆகியோரை சென்னையில் இருக்க வேண்டாம் என்று கூறி துரத்திவிட்டிருக்கிறார் அவருடைய அப்பா. பெண்ணை சரியாக வளர்க்கவில்லை என்று கூறி தன்னுடைய மனைவியிடம் இருந்து முற்றிலுமாக பிரிந்துவிட்டார் அவர். குடும்ப உறவுகள் இந்த ஒரு நிகழ்வால் முறிந்து போனது. சொந்த அடையாளங்களை மறைத்துக் கொண்டு அந்த சிறுமியும், அம்மாவும், உடன் பிறந்தவர்களும் தென் தமிழகத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் வசிக்க ஆரம்பித்தனர். மிகவும் வயதான சிறுமியின் பாட்டி தான், வேலைக்குச் சென்று அந்த நான்கு பேரையும் காப்பாற்றினார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பள்ளிப்படிப்பு, வறுமை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்த சிறுமியின் தாயார் மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தார்," என்று கூறுகிறார். இந்த 10 ஆண்டுகளில் அந்த சிறுமியின் அப்பாவும் இறந்து போக, சென்னையில் உள்ள உறவினர்கள் யாரும் அவர்களிடம் பேசுவதில்லை என்று தெரிவிக்கிறார் எம்.கே.பி. காவல்நிலைய அதிகாரி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரண்டு முறைக்கு விசாரணைக்காக அப்பெண் சென்னை அழைத்துவரப்பட்டார் (சித்தரிப்புப் படம்) காவல்துறையினர் அவரை கண்டுபிடித்தது எப்படி? "அந்த சிறுமி காணாமல் போய்விட்டார் என்று கூறி இந்த வழக்கு முடித்து வைக்கப்படவில்லை. ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணை வரும் போதும் எம்.கே.பி. காவல் துறையினர், அந்த சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை என்று கூறி வந்தனர். கடந்த ஆண்டு இறுதியில் நீதிமன்றம், காவல்துறை துணை ஆணையருக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது. இந்த சிறுமியை கட்டாயம் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று காவல்துறைக்கு அழுத்தம் தந்தது நீதிமன்றம்," என்கிறார் அனிதா. "இது எங்களுக்கு சவாலானதாக இருந்தது. ஏன் என்றால், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகரத்தை விட்டு வெளியே சென்றவர்களை எப்படி தேடி கண்டுபிடிப்பது? புகார் அளிக்கும் போது இருந்த ஒரே ஒரு செல்போன் எண்ணை வைத்து, எங்கள் காவல்நிலைய காவலர் தன்னுடைய தேடுதல் பணியை துவங்கினார். மூன்று வார கடும் தேடுதல் பணிக்குப் பிறகு அந்த பெண்ணின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது," என்கிறார் எம்.கே.பி. காவல்நிலைய அதிகாரி. "அவரை அவருடைய சிறிய வீட்டில் வைத்து பார்த்த போது, மிகவும் அச்சத்துடன் காணப்பட்டார் அந்த பெண். நீதிமன்றத்திற்கு வர மிகவும் தயக்கம் காட்டினார் அவர். அவரின் அச்சத்திற்கு காரணம் இருந்தது . ஆனால் அவருக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இரண்டு நாட்கள் அந்த பெண்ணுக்கு நம்பிக்கையை அளித்தோம். அதன் பிறகு அவர் பாதுகாப்பாக போக்சோ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பிறகு நீதிபதியிடம் நடந்த விபரங்களைத் தெரிவித்தார். குற்றவாளிக்கு எதிரான தன்னுடைய வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார்," என்று கூறுகிறார் அந்த அதிகாரி. இரண்டு முறைக்கு விசாரணைக்காக அப்பெண் சென்னை அழைத்துவரப்பட்டார். கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி அன்று, குற்றவாளிக்கு தண்டனையை உறுதி செய்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 15 லட்சம் நஷ்டஈட்டை அரசு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம். தற்போது குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரிதாகவே நடக்கும் நிகழ்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்சோ உள்ளிட்ட வழக்குகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் வி. அனுஷா இது குறித்து பேசும் போது, "போக்சோ வழக்குகளைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட நபர் தான் தனக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். அவர் காணாமல் போய்விட்டார் என்று வழக்கை முடித்துவைக்காமல், அந்த பெண் திரும்பி வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தது இந்த வழக்கில் தனித்துவமான ஒன்றாக இருக்கிறது," என்று கூறினார். "12 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காக அவர் நீதிக்காக போராட வேண்டாம் என்றில்லை. அவர் அந்த மனநிலையைப் பெறுவதற்கான கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம். அவரின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது," என்றும் அவர் குறிப்பிட்டார். "பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்வது இந்த அரசாங்கத்தின் கடமை. ஏற்கனவே அந்த சிறுமி கடத்தப்பட்டு மீண்டும் வீடு திரும்பி வந்த நிலையில், காவல்துறையினர் அப்போதே எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால், இந்த வழக்கில் இவ்வளவு தாமதமாக நீதி கிடைத்திருக்காது," என்றார் அனுஷா. மேற்கொண்டு பேசிய அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பு, மனநல ஆலோசனை, படிப்பை மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை உறுதி செய்ய தவறிவிட்டது மாநில அரசு என்றும் அவர் தெரிவித்தார். பெண்கள் மீது அதிகரிக்கும் டிஜிட்டல் வன்முறைகள் – தற்காத்துக்கொள்வது எப்படி?31 ஆகஸ்ட் 2024 மனைவியை கணவன் வல்லுறவு செய்வது குற்றமாகாதா? உயர் நீதிமன்ற தீர்ப்பால் எழும் கேள்விகள்6 மே 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES நம்பிக்கையுடன் இருங்கள் "இந்த குற்றச்சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்திருக்கலாம். இன்று உலகம் வெகுவாக மாறிவிட்டது. பெற்றோர்கள், இது போன்ற ஒரு சூழலில் குழந்தைக்கு உற்ற பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் தங்களுக்கு நடந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர இயலும். பாதிக்கப்பட்ட உடனே புகார் அளிப்பது சிறந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்ய சட்டம் வழி வகை செய்கிறது. வேகமாக விசாரணை நடத்தி, 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது, பாதிப்பின் தன்மையை பொறுத்து மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட இதர செலவுகளுக்கு சிறுமிக்கு தேவையான நிதியை வழங்குவது, பெண் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பெரும்பாலான வழக்குகளில் ஆஜர்படுத்துவது, மனநல ஆலோசனை வழங்குவது, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் பாதுகாப்பற்ற சூழ்நிலை கொண்டிருந்தால் அவருக்கு காப்பகங்களில் இடம் அளிப்பது போன்றவற்றையும் போக்சோ சட்டம் உறுதி செய்கிறது. எனவே பாதிக்கப்பட்ட சிறுமிகளோ, பெண்களோ அல்லது பெற்றோர்களோ தயக்கம் காட்டாமல் புகாரளிக்க முன்வர வேண்டும்," என்றும் தெரிவிக்கிறார் எஸ்.அனிதா. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9djv5djx9vo
3 months 2 weeks ago
மூக்கு புடைச்சிருக்கு எண்டாப்போல போய் சப்பை மூக்கோட உரசக்கூடாது .......... ஆனால் ஒன்று இனி அநேகமான நாடுகள் எல்லாவற்றிலும் தன்னிறைவு காண முயற்சிக்கும் ......... அதற்காக ஜனாதிபதி ட்ரம்பிற்கு நன்றி . ....... ! 😁
3 months 2 weeks ago
பல படுகொலைகளை அரங்கேற்றிய பிள்ளையானின் விசுவாசி Vhg ஏப்ரல் 22, 2025 கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய TMVP உறுப்பினர் அஜித் என்று சொல்லப்படுகின்ற குறித்த நபர் வாழைச்சேனை பிரதேசத்தில் நடந்த படு கொலைகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவர் என கூறப்படுகின்றது. அதோடு இவர் பிள்ளையானின் நெருங்கிய விசுவாசமாக செயல்பட்ட இவர் வாழைச்சேனை மக்களுக்கும் நன்கு அறிந்த ஒருவர் என்றும், இன்னும் பலர் இருக்கின்றார்கள் என்றும் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பல பொது மக்கள் படு கொலை தீவுச்சேனை பகுதியில் அமைந்திருந்த பிள்ளையான் குழுவின் முகாம்களில் கடந்த காலத்தில் பல பொது மக்கள் படு கொலை செய்யப்பட்டு மறைமுகமாக புதைக்கப்பட்டு மனித உடல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக சரியான விசாரனை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் பல உண்மைகள் கண்டறியப்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இவரரை போன்றி பலர் , பிள்ளையானுக்கு உறுதுணையாக இருந்த பலர் இன்னும் சமூகத்தில் நடமாடுவதாகவும் அவர்களையும் கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தவேண்டும் எனவும் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைதானமை குறிப்பிடதக்கது. https://www.battinatham.com/2025/04/blog-post_413.html
3 months 2 weeks ago
Published By: VISHNU 23 APR, 2025 | 03:45 AM நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் ஆரம்ப வேலைகள் வருகின்ற ஜீன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதற்கான முன்னாயத்த களவிஜயமாக இன்றையதினம் (22) பிற்பகல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் யொய்ஸ் குறுஸ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் முதலானோர் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/212692
3 months 2 weeks ago
'ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டனர்' - ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பஹல்காமில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப்படை வீரர் 22 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, சௌதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோதி அவசரஅவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் உடனடியாக முக்கிய ஆலோசனை நடத்தினார் என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளதாக, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் தகவலை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தது. இந்த தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில், டாக்டர் பரமேஸ்வரம் மற்றும் 83 வயது சந்துரு ஆகியோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர சம்பவ இடத்திலிருந்த 57 வயது பாலச்சந்திராவுக்கு மன அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,PTI உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் காயமடைந்தவர்களில் சிலர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரில் இருந்து தெரிவித்தார். திடீர் துப்பாக்கிச் சூடு காரணமாக, குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைவரும் அழுது கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர் என்று குஜராத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி பிபிசியிடம் தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷுபம் திவேதி, இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவர், தனது மனைவியுடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய ஷுபம் திவேதியின் உறவினர் சௌரப் திவேதி, "ஷுபமுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதிதான் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவியுடன் பஹல்காமில் இருந்தார். சம்பவத்திற்கு பிறகு, அவரது மனைவி என் மாமாவை தொலைபேசியில் அழைத்து ஷுபம் தலையில் சுடப்பட்டதாகக் கூறினார். தனிநபர்களின் பெயர்களைக் கேட்ட பிறகு துப்பாக்கிச் சூடு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. அனைத்து நடைமுறைகளும் முடிந்து 2-3 நாட்களுக்குப் பிறகு ஷுபமின் உடல் விடுவிக்கப்படும் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது" என்று கூறினார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சௌரப் திவேதி யார் வேந்தர்? - ஆளுநர் அழைப்பால் துணை வேந்தர்கள் குழப்பம் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன?22 ஏப்ரல் 2025 12 வயதில் பாலியல் வன்கொடுமை - 10 ஆண்டுக்குப் பின் திரும்பி வந்து நீதி பெற்ற பெண்22 ஏப்ரல் 2025 'ஆண்களை குறிவைத்து தாக்குதல்' 'ஆயுததாரிகள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது' என்று தாக்குதலை நேரில் கண்டவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். "தீவிரவாதிகள் எத்தனை பேர் என்று என்னால் சொல்ல முடியவில்லை, ஒரு ஒரு சிறிய புல்வெளிக்கு அருகில் உள்ள காட்டில் இருந்து வெளியே வந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்," என்று ஒரு பெண் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார். "அவர்கள் தெளிவாக பெண்களை விட்டுவிட்டு, ஆண்களை மட்டுமே குறிவைத்துச் சுட்டனர். சில ஆண்களை ஒரே தோட்டா மூலமும், சில ஆண்களை பல தோட்டாக்கள் மூலமும் கொன்றனர். அந்த இடமே ஒரு புயல் வீசியது போல இருந்தது," என்று அவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்காக பேசியுள்ள பல்லவி ராவ் என்ற மற்றொரு பெண் (சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் அவரது கணவரும் ஒருவர்) 'ஆண்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக்' கூறினார். படக்குறிப்பு,அனந்த்நாக் மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்திய பிரதமர் மோதி அவசர ஆலோசனை பிரதமர் மோதி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று (ஏப்ரல் 22) சௌதி அரேபியா சென்றிருந்தார். இன்றிரவு (ஏப்ரல் 23) அவர் டெல்லி திரும்புவதாக இருந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக தனது சௌதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, இன்று காலை டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோதி. அதன் பின்னர், ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் பிரதமர் மோதி கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோதி நடத்திய ஆலோசனை கூட்டம் பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சியில் உள்ள புல்வெளியான பைசரனில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பருவம் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. பஹல்காம் பகுதி, சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. அதன் பசுமையான புல்வெளிகள் மற்றும் ஏரிகள் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது "இந்தியாவின் சுவிட்சர்லாந்து" என்று பஹல்காம் அழைக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் 1989 ஆம் ஆண்டு முதல் நீண்டகாலமாக கிளர்ச்சி நடந்து வருகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் வன்முறை குறைந்துள்ளது. ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளில், தாக்குதல் நடந்த இடத்தை நோக்கி இந்திய படையினர் ஓடுவதைக் காட்டுகின்றன. வேறொரு வீடியோவில், துப்பாக்கி ஏந்தியவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மட்டும் குறிவைத்து தாக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை கேட்க முடிந்தது. டெல்லியிலும் பலத்த பாதுகாப்பு பட மூலாதாரம்,ANI ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி முகமையான பிடிஐ தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு டெல்லி போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். குறிப்பாக சுற்றுலா தலங்கள் மற்றும் நகர எல்லைகளில், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் உடனடியாகக் கண்டறியும் வகையில் கடுமையான சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மறுபுறம், ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு அதிகாரிகள், காவலர்கள் பல்வேறு இடங்களில் வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர், மேலும் சாலைகளில் விரிவான தடுப்புகள் போடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் இருந்து இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டங்களின் படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி வருகின்றன. பஹல்காமில் உள்ள சிலரும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்று, தாக்குதல் குறித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பிரதமர் மோதி என்ன சொன்னார்? இந்த சம்பவம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். "இந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்', என்று குறிப்பிட்ட அவர், "இந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நான் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க வழிவகை செய்யப்படும்", என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். டிரம்ப் கூறியது என்ன? அமெரிக்க அதிபர் டிரம்ப தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் மிகவும் கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மாவுக்காகவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோதிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு." என்று கூறியுள்ளார். புதின் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், "இந்த கொடூரமான குற்றத்தை நியாயப்படுத்த முடியாது. குற்றவாளிகள் தக்க தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தயார் நிலையில் உள்ளோம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்." என்று கூறியுள்ளார். 'காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்'- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மோதியுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (கோப்புப் படம்) ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டிருப்பது, காயமடைந்திருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். 'நான் அதிர்ச்சியடைந்தேன்' - முதல்வர் உமர் அப்துல்லா இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். "நான் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியாக தெரியவில்லை. அங்குள்ள நிலைமை பற்றி தெளிவாக தெரிய வந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது", என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 5,000 எறும்புகள் ரூ.6.5 லட்சம்: நூதன முறையில் எறும்புகளை கடத்தி இவர்கள் என்ன செய்கிறார்கள்?22 ஏப்ரல் 2025 'சோவியத் வீழ்ச்சிக்கு அவரும் ஒரு காரணம்' - சர்வதேச அரசியலில் போப் எந்த அளவு செல்வாக்கு செலுத்துகிறார்?22 ஏப்ரல் 2025 உள்துறை அமைச்சர் கூறியதென்ன? "பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் நான் வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்றும், முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமித் ஷா கூறியுள்ளார். "இந்த சம்பவம் குறித்து வீடியோ அழைப்பு மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோதி ஒரு கூட்டம் நடத்த இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் காசம்பட்டியில் என்ன இருக்கிறது?22 ஏப்ரல் 2025 சிறைச்சாலை முதல் ஈஸ்டர் வரை - மரணத்திற்கு முந்தைய ஒரு வாரத்தில் போப் என்னென்ன செய்தார்?22 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அனந்த்நாக்கில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் "பாதிக்கப்பட்டோரில் தமிழர்கள்" "அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், விலைமதிப்பற்ற பல உயிர்களை பலியாக்கியது. இது மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இது மிகவும் கடுமையான கண்டனத்திற்கு உரியது. பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு டெல்லியில் உள்ள உள்ளுறை ஆணையருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்", என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். தமிழர்களை பாதுகாக்கும் வகையில் முதற்கட்டமாக புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த உதவி மையத்தை தொடர்புகொள்ள தமிழ்நாடு அரசு சார்பாக 011-24193300, 9289516712 என்ற உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியரான அப்தாப் ரசூலை, ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்கு நேரடியாக சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது "பஹல்காமில் நடந்த இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த வகையான வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வரலாற்று ரீதியாக, காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றுள்ளது. ஆனால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன", என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி இந்த தாக்குதலை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் இறந்தது மற்றும் பலர் காயமடைந்தது பற்றிய செய்திகள் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மனதை உடைக்கிறது" என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார், - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c87przv5rx8o
3 months 2 weeks ago
கே.எல்.ராகுல் புதிய சாதனை: கடந்த சீசனில் தன்னை திட்டிய லக்னௌ உரிமையாளருக்கு களத்திலேயே பதிலடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லக்னௌ உரிமையாளர் கோயங்காவுடன் டெல்லி அணி வீரர் லோகேஷ் ராகுல் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 40-வது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடந்த சீசனில் மைதானத்திலேயே தன்னைத் திட்டிய லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளர் கோயங்காவுக்கு தனது சிறப்பான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் களத்திலேயே பதிலடி கொடுத்தார். அத்துடன், கே.எல்.ராகுல் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். சிறப்பான தொடக்கத்தை பயன்படுத்த தவறிய லக்னெள லக்னெள அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மிட்ஷெல் மார்ஷ், மார்க்ரம் இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்த சீசனில் 5வது முறையாக 50 ரன்களுக்கும் மேல்பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். 87 ரன்கள் சேர்த்த இந்த இணை 10-வது ஓவரில் தான் பிரிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES அதிரடியாக ஆடிய மார்க்ரம் 33 பந்துகளில் அரைசதம் அடித்து 53 ரன்களில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் இருந்து லக்னெளவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அக்ஸர் படேல் பந்துவீசினார், இதனால் பெரிய அளவுக்கு ஷாட்களை மார்க்ரம், மார்ஷால் ஆட முடியவில்லை. அருமையாகப் பந்துவீசிய அஸ்கர் படேல் 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 10 ஓவர்களுக்குள் தனது ஸ்பெல்லை முடித்துவிட்டார். 10 ஓவர்களுக்கு மேல் குல்தீப் யாதவ் 4 ஓவர்களை வீசி லக்னெள பேட்டர்களுக்கு நெருக்கடியளித்தார். இதனால் முதல் 10 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்த லக்னெள அணி அடுத்த 10 ஓவர்களில் 72 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது, 5 விக்கெட்டுகளையும் இழந்தது. கடந்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய நிகோலஸ் பூரன் 9 ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் போல்டாகினார். டி20 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் 5 முறையாக பூரனை ஸ்டார்க் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ரிஷப் பந்த் களமிறங்க வேண்டிய இடத்துக்கு வந்த அப்துல் சமது 2 ரன்னில் முகேஷிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மார்ஷ் 45 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் பந்துவீச்சில் 'க்ளீன் போல்டானார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மார்ஷ் 45 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் பந்துவீச்சில் 'க்ளீன் போல்டானார். 87 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த லக்னெள அணி, அடுத்த 23 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி இருவரும் ஓரளவுக்கு நிலைத்து ஸ்கோரை உயர்த்தினர். பதோனி 36 ரன்கள் சேர்த்த நிலையில் முகேஷ் ஓவரில் போல்டாகினார். கடைசி 2 பந்துகள் இருக்கும் போது களமிறங்கிய ரிஷப் பந்த் முகேஷ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தை பயன்படுத்த நடுவரிசை பேட்டர்கள் தவறவிட்டனர். வழக்கமாக 4வது இடத்தில் களமிறங்க வேண்டிய ரிஷப் பந்த் ஏன் கடைசி நேரத்தில் களமிறங்கினார் என்பதும் புரியவில்லை. முக்கியமான கட்டத்தில் பரிசோதனை முயற்சி செய்து லக்னெள அணி ஆபத்தில் சிக்கியது. டெல்லி அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஸ்டார்க், சமீரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். குல்தீப், அக்ஸர் படேல் இருவரும் விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும் லக்னெள ரன் ரேட்டை உயரவிடாமல் கட்டுப்படுத்தியதில் இருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு. வேகப்பந்துவீச்சாளர்களும் லக்னெள பேட்டர்களை எளிதாக சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்கவிடவில்லை. லக்னெள பேட்டர்கள் நேற்று 4 சிக்ஸர்களும், 14 பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர். வெற்றி - தோல்வி எதுவாக இருந்தாலும் தோனியை சிஎஸ்கே நம்புவது ஏன்?22 ஏப்ரல் 2025 சிஎஸ்கே ரசிகர்களை முதல் போட்டியிலேயே கவர்ந்த 'ஆயுஷ் மாத்ரே' அணியில் இடம் பிடித்த சுவாரஸ்ய பின்னணி21 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெல்லி அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், கே.எல்.ராகுலின் பதிலடியும் சாதனையும் கடந்த சீசனில் லக்னெள அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை, அணியின் உரிமையாளர் கோயங்கா மைதானத்திலேயே கடுமையாகப் பேசினார். கே.எல்.ராகுலுக்கு அணியின் உரிமையாளரிடம் இருந்தே கடும் நெருக்கடி வந்தது. ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுலை கழற்றிவிட்ட லக்னெள ரூ.24 கோடி கொடுத்து ரிஷப் பந்தை வாங்கி கேப்டனாக்கியது. ஆனால், கே.எல்.ராகுலை டெல்லி கேபிடல்ஸ் வாங்கி சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்கு சிறந்த நடுவரிசை, 3வது வீரராகவும் களமிறங்கி அருமையான ஃபினிஷிங் ரோலை கே.எல்.ராகுல் செய்து வருகிறார். இந்த சீசனில் 3வது அரைசதத்தையும் கே.எல்.ராகுல் நேற்று அடித்தார். கடந்த முறை லக்னெளவுக்கு எதிராக டெல்லி மோதிய போது தனக்கு குழந்தை பிறந்திருந்ததால் ராகுல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், தன்னை ஏலத்தில் நிராகரித்த லக்னெளவை நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தனது பேட்டிங்கால் பழிதீர்த்துவிட்டார். ஒன்டவுனில் களமிறங்கிய ராகுல் 40 பந்துகளில் அரைசதம் அடித்து 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் டெல்லி கேபிடல்ஸ் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அபிஷேக் போரெலுடன் சேர்ந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப், அக்ஸர் படேலுடன் சேர்ந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் டெல்லி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து லக்னெள உரிமையாளருக்கு பதிலடி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் கே.எல்.ராகுல் நேற்று 130 இன்னிங்ஸ்களில் 5 ஆயிரம் ரன்களை எட்டினார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் எந்த வீரரும் குறைந்த போட்டிகளில் இந்த அளவு ரன்களை எட்டியதில்லை. டேவிட் வார்னர் 135 போட்டிகளிலும் விராட் கோலி 165 போட்டிகளில் எட்டியதை ராகுல் விரைவாக எட்டி சாதனை படைத்தார். அது மட்டுமல்லாமல் இந்திய டி20 அணியில் தொடர்ந்து கே.எல்.ராகுல் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் அதிவிரைவு 5 ஆயிரம் ரன்கள் சாதனை நிச்சயம் தேர்வாளர்களுக்கு பெரிய கேள்வியாக இருக்கும். சிஎஸ்கே அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ள ஒரே வழி என்ன?21 ஏப்ரல் 2025 மும்பை ஹாட்ரிக் வெற்றி: தோல்வியிலும் சிஎஸ்கேவுக்கு கிடைத்த ஆறுதல் - தோனி கூறியது என்ன?21 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டம் முடிந்ததும் களத்திலிருந்து வெளியேறிய லோகேஷ் ராகுலை லக்னௌ அணி உரிமையாளர் கோயங்கா அங்கேயே சென்று பாராட்ட முயன்றார். கோயங்கா மற்றும் அவரது மகன் ஷஸ்வத்துக்கு அவசரஅவசரமாக கைகொடுத்த லோகேஷ் ராகுல், கோயங்கா பேசியதை காதில் வாங்காதது போல் அவசரஅவசரமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டார். லோகேஷ் ராகுலின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹனுமான் விஹாரி, லக்னௌ உரிமையாளருடன் அவர் கைகுலுக்கியதை 'Cold Hand Shake' என்று குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் லோகேஷ் ராகுல் கடந்த ஆண்டு லக்னௌ அணி கேப்டனாக இருந்த போது தோல்விக்காக அவரை கோயங்கா களத்திலேயே கடுமையாக திட்டியதையும், தற்போது அவரை பெரிதாக கண்டுகொள்ளாதது போல் ராகுல் சென்றதையும் ஒப்பிட்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். தோல்விக்கு காரணமான ரிஷப் பந்த் ரிஷப் பந்த்தின் தவறான கேப்டன்சி தான் லக்னெளவின் தோல்விக்கு மூலகாரணமானது. லக்னெள ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது, முதலில் பேட் செய்யும் அணி குறைந்தபட்சம் 180 ரன்களுக்கு மேல் அடிக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், லக்னெள அணி 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இதற்கு முக்கியக் காரணம், தொடக்க வரிசை பேட்டர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தை நடுவரிசை பேட்டர்கள் பயன்படுத்தாததும், நடுவரிசையை மாற்றி அப்துல் சமதை களமிறக்கி, கடைசி நேரத்தில் களமிறங்கிய ரிஷப் பந்தின் முடிவும் தான் காரணம். கடந்த 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் அறிமுகத்துக்குப்பின் ரிஷப் பந்த் 7வது வரிசையில் நேற்று தான் களமிறங்கியுள்ளார். சிஎஸ்கே அணியில் தோனியைப் போன்று கடைசி நேரத்தில் களமிறங்கி ஃபினிஷிங் டச் செய்ய நினைத்தாரா அல்லது, பரிசோதனை முயற்சியா எனத் தெரியவில்லை. இதற்கான ரிஷப் பந்த் விளக்கமும் தெளிவாக இல்லை. அவர் கூறுகையில் " நாங்கள் ஸ்கோரை விரைவாக அதிகரிக்க நினைத்து, அப்துல் சமதை களமிறக்கினோம், விக்கெட் அப்படித்தான் இருந்தது. மில்லர் களமிறங்கிய பின் தேக்கமடைந்துவிட்டோம். எங்களின் சிறந்த பேட்டர்கள் வரிசையை விரைவில் கண்டறிவோம்" என்று விளக்கம் அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அப்துல் சமதைவிட, ரிஷப் பந்த் மோசமான பேட்டரா, ரிஷப் பந்த் இந்த விக்கெட்டை பயன்படுத்தி அதிரடியாக ஸ்கோர் செய்யமாட்டாரா என்ற கேள்விகளை வர்ணனையாளர்கள் எழுப்பினர். அப்துல் சமது ஆட்டமிழந்த பின்பு கூட ரிஷப் பந்த் களமிறங்கியிருக்கலாம் ஆனால் அப்போது கூட அவர் களமிறங்காமல் மில்லரை அனுப்பியது மிகப்பெரிய தவறாக இருந்தது. தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தவுடன் அதை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள சரியான பேட்டர்களை களமிறக்க வேண்டும், பெரிய பார்ட்னர்ஷிப்களை உருவாக்கும் வீரர்களை அந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும். ரிஷப் பந்த் நேற்றைய ஆட்டம் முழுவதும் கடும் குழப்பத்துடனே இருந்தார். கேட்சை நழுவிட்ட பிரின்ஸ் யாதவ், அப்துல் சமது இருவரையும் களத்திலேயே கடுமையாகத் திட்டினார். டிஆர்எஸ் ரிவியூ செய்வதிலும் பந்த் தாமதமாக செயல்பட்டார். கடந்த 7 இன்னிங்ஸ்களில் ரிஷப் பந்த் 108 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து பேட்டிங்கிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. லக்னெள அணியின் பேட்டிங் வரிசையைக் குலைத்த டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். சென்னைக்கு மங்கும் பிளே ஆஃப் வாய்ப்பு - ஃபார்முக்கு வந்த ரோகித் சர்மாவால் மும்பை எளிதான வெற்றி20 ஏப்ரல் 2025 விராட் கோலி புதிய சாதனை - இரண்டே நாட்களில் பஞ்சாபை பழி தீர்த்த ஆர்சிபி20 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்கு ரிஷப் பந்த் கூறிய காரணம் லக்னெள அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பேசுகையில் "நாங்கள் 20 முதல் 30 ரன்கள் குறைவாக இந்த மைதானத்தில் சேர்த்துவிட்டோம். டாஸ் முக்கிய பங்கு வகித்தது. முதலில் பந்துவீசும் அணிக்கு இந்த மைதானம் நன்கு உதவும். லக்னெளவில் இதுபோன்று எப்போதும் நடக்கும், 2வது இன்னிங்ஸில் விக்கெட் பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். இந்த தவறுகளில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். ஆயுஷ் பதோனியை இம்பாக்ட் ப்ளேயராக பயன்படுத்தி, மயங்க் யாதவை கொண்டுவரத் திட்டமிட்டோம். அவரின் உடல்நிலை தேறி இப்போதுதான் வந்துள்ளார். நான் 7-வது வீரராகக் களமிறங்கியதற்கு காரணம், விக்கெட்டை சிறப்பாக பயன்படுத்தவே. அப்துல் சமதை அனுப்பினோம். மில்லர் வந்தபின் விக்கெட்டில் சிக்கிவிட்டோம். எங்களின் சிறந்த பேட்டர்கள் கலவையை அடுத்துவரும் போட்டிகளில் உருவாக்குவோம்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னெளவை நெருங்கும் ஆபத்து இந்த வெற்றி மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் போட்டியிடுகிறது, நிகர ரன்ரேட்டில் குஜராத் அணியைவிட 0.600 புள்ளிகள் பின்னடைவுடன் 2வது இடத்தில் டெல்லி அணி இருக்கிறது. அதேசமயம், லக்னெள அணி 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு சரிந்துள்ளது. 10 புள்ளிகளுடன் பஞ்சாப், ஆர்சிபி அணிகளுடன் லக்னெளவும் மல்லுக்கட்டுகிறது. ஆர்சிபி, பஞ்சாப் நிகர ரன்ரேட் பிளஸில் இருக்கும்போது, லக்னெளவின் ரன்ரேட் 10 புள்ளிகள் பெற்றாலும் மைனசில் இருப்பது ஆபத்தாகும். லக்னெளவுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் முன்னேறி வரும் மும்பை அணி 8 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது. இன்னும் ஒரு வெற்றியை மும்பை பெற்றால், 10 புள்ளிகளுடன் லக்னெளவை பின்னுக்குத் தள்ளி 4 அல்லது 3வது இடத்தை நோக்கி நகர்ந்துவிடும். ஆதலால், லக்னெள அணியின் நிலைமை அடுத்துவரும் போட்டிகளில் பெறும் வெற்றியைப் பொருத்து மாறும். இப்போது தங்கம் வாங்கலாமா? விலை உயர்வு தொடருமா?4 மணி நேரங்களுக்கு முன்னர் சௌதி அரேபியாவில் பிரதமர் மோதி - வக்ஃப் சட்டம் பற்றி விவாதிக்கப்படுமா?22 ஏப்ரல் 2025 ஐபிஎல் கூடுதல் விவரம் இன்றைய ஆட்டம் சன்ரைசர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் இடம்: ஹைதராபாத் நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் நாள் - ஏப்ரல் 25 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ் நாள் - ஏப்ரல் 24 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 3.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 417 ரன்கள் (8 போட்டிகள்) நிகோலஸ் பூரன் (லக்னெள)- 377 ரன்கள் (8 போட்டிகள்) ஜோஸ் பட்லர் (குஜராத்)- 356 ரன்கள் (8 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? பிரசித் கிருஷ்ணா (குஜராத்)- 16 விக்கெட்டுகள் (7 போட்டிகள்) குல்தீப் யாதவ் (டெல்லி)- 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) நூர் அகமது(சிஎஸ்கே)- 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn7x1gx7pnxo
3 months 2 weeks ago
23 APR, 2025 | 10:50 AM யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் மானிப்பாய் கிளை செயலாளருமான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈ தாக்கத்தால் பெருமளவான தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளது. அதே நேரம் குறிப்பாக வலிகாமம் தென் மேற்கு, சண்டிலிப்பாய் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சண்டிலிப்பாய் கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல தென்னைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெண் ஈ தாக்கம் பாரிய அழிவை நிரந்தரமாக ஏற்படுத்தியுள்ளது. பல மரங்கள் காய்கள் இல்லாமல், ஓலைகள் நிறம்மாறி காய்ந்தும், பட்டுபோன நிலையிலும், பல மரங்கள் உள்ளன. இவற்றைவிட அதன் எச்சங்களினால் தென்னை மரங்களின் பச்சயம் இல்லாமல் மறைக்கப்படுவதுடன் மட்டுமல்ல அருகிலுள்ள பல பயன் தரு மரங்களான மாமரங்கள், பலாமரங்கள், வாழைமரங்கள் என சகல மரங்களினதும் , பயிர்களினதும் இலைகளும் கறுமையாக மாற்றமடைந்துள்ளன. இதனால் எதிர்காலத்தில் பச்சயம் அற்று ஔித்தொகுப்பு நடைபெறாமல் ஏனைய பயிர்களும் மரங்களும் அதிகம் பாதிப்புள்ளாகி அழிவடையப் போகின்றன. இந்த தாக்கத்தை உரிய விவசாய திணைக்களமோ, மாவட்ட செயலகமோ, பிரதேசசெயலகங்களோ கணக்கில் கொண்டு விழிப்புணர்வு, பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகளை செய்வதாக தெரியவில்லை. பல பெண் தலைமைத்து குடும்பங்கள், பொருளாதார கஸ்டமுள்ள குடும்பங்கள் தமது வாழ்வாதாரங்களாக பயிரிட்டுள்ள தென்னை உட்பட ஏனைய பயன்தரு மரங்கள், பயிர்களும் வெண் ஈ தாக்கத்தால் பாதிக்கபட்டுள்ளதால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்வியாக மாறி வருகிறது. ஆகவே சண்டிலிப்பாய் பிரதேசெயலக பிரிவில் மட்டுமல்லாது முழு யாழ்ப்பாண மாவட்டத்திலும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய விவசாய அமைச்சு வடக்குமாகாண ஆளுநர், மாவட்ட செயலர் ஆகியோர் தலையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/212705
3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
3 months 2 weeks ago
ஊர்மனையை அண்மித்த இராமர் பாலத்தின் மணல் திட்டுகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வாய்ப்பு! தலைமன்னார் - ஊர்மனை பகுதியை அண்மித்துள்ள இராமர் பாலத்தின் 6 மணல் திட்டுகளை எதிர்வரும் மே மாதம் 15 திகதி முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றலாப் பணியகத்தின் தலைவர், மன்னார் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர், பிரதேச செயலாளர், கடற்படையினர், கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். இராமர் பாலத்தினை பார்வையிடுவதற்கான படகுப் போக்குவரத்தினை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு மற்றும் அது தொடர்பிலான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் முன்னதாகவே பாதுகாப்பு அமைச்சு அனுமதியினை வழங்கியிருந்தது. எனினும், அது நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாகச் சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.hirunews.lk/tamil/403575/ஊர்மனையை-அண்மித்த-இராமர்-பாலத்தின்-மணல்-திட்டுகளை-சுற்றுலாப்-பயணிகள்-பார்வையிட-வாய்ப்பு
3 months 2 weeks ago
எந்தவொரு சிங்களக் கட்சியுடனும் எங்களது உறவு இருக்க மாட்டாது செய்திகள் ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள் என ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்ன மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (22) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில்் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேவிபி இங்கு களமிறங்கியுள்ளது. அதன் வேட்பாளர்கள் தமிழர்களாகவுள்ளனர். அவர்களுடைய சிந்தனை என்னவென்றால் தாங்கள் சபைகளை கைப்பற்ற வேண்டும். வடக்கில் கூடுதலான ஆசனங்களைப் பெற வேண்டும் என்பது அவர்களது நோக்கம். பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் எவவாறு அதிக ஆசனங்களைப் பெற்றோமோ அதேபோல் சபைகளையும் கைப்பற்ற வேண்டும். அதன் மூலம் அடுத்து வரவிருக்கும் மாகாணசபை தேர்தலிலும் வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். வவுனியாவில் ஜேவிபி சார்பாக இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டார்கள். அதில் ஒருவர் வைத்தியர். மற்றவர் ஆசிரியர். ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர்கள் இருக்கின்ற போது உபாலி என்பவரை தேசியப் பட்டியலில் நியமனம் செய்து பிரதி அமைச்சராக்கி அபிவிருத்திக் குழுவின் தலைவராக போட்டுள்ளார்கள். இந்த ஜேவிபியின் சிந்தனை எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். தமிழர்கள் படித்தவர்களாக வென்றுள்ளார்கள். வன்னி மண்ணிலே வெற்றி பெற்ற அந்த தமிழர்களுக்கு பதவிகள் வழங்காது ஒரு சிங்கள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த உபாலிக்கு கொடுத்திருக்கின்றது என்றால் இந்த அரசாங்கத்தின் சிந்தனையும் எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். பிரதேச சபை, மாநகர சபை என்பவற்றை பிடித்து அடுத்த மாகாண சபையை பிடிக்கும் நிலை வரும். பிமல் ரத்நாயக்க ஜனாதிபதியின் பேச்சை விமர்சிக்க தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அருகதை இல்லை எனக் கூறுகின்றார். ஆகவே, ஒட்டுமொத்தமாக எல்லா சபைகளையும் பிடித்து விட்டால் தமிழர்களுக்கு இந்த நாட்டிலே அருகதை இல்லை என சொல்லி விடுவார்கள். அதனை இப்பவே ஆரம்பித்து விட்டார்கள். தையிட்டி புத்தர் கோவில் பிரச்சனை தீர்கப்பட வேண்டும் எனில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாதாம். அதன் அர்த்தம் என்ன. வன்னி மண்ணில் விலை கொடுக்கப்பட்டுள்ளது. உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த மண்ணில் இருக்கும் தமிழ் தலைவர்கள் ஜனாதிபதி உரையை விமர்சிக்க கூடாது எனக் கூறுவதற்கு பிமல் ரத்நாயக்கவுக்கு என்ன யோகியதை இருக்கிறது. வடக்கில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்று விட்டால் நீங்கள் எதுவும் பேச முடியுமா! ஜனாதிபதி தனது உரைகளில் சபைகைளை கைப்பற்றக் கூடிய கதைகளை சொல்லுகின்ற போது அதை விமர்சிக்கின்ற தமிழ் தலைவர்களை வாய் மூட வேண்டும் என கூற உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைவரும் இலங்கையர் என்று சொன்னார்கள். அந்த சிந்தனை இப்போது எங்கே? தமிழர்கள் எதற்கு போராடினார்கள். எங்களது உரிமை, மண், தேசம் பாதுக்கப்படும் எனப் போராடினார்கள். அப்படிப்பட்ட தமிழ் தரப்பை பார்த்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள். எமது வன்னி பிரதேசம் எத்தனையோ சிங்கள ஆட்சியாளர்களை ஆட வைத்தது. மறந்து விட வேண்டாம். அந்த வழி வந்த தமிழர்கள் உங்களுக்கும் சவாலாக மாறுவார்கள். ஆகவே பிரதேச சபை, நகரசபை, மாநகரசபை என்பவற்றை நாம் கைப்பற்றி ஆக வேண்டும். எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெற முடியாது. ஆனால் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள். சங்கு சின்னம் ஜனாதிபதி தேர்தலில் பொது சின்னமாக மாற்றம் பெறுகின்ற போது யாருமே சங்கு சின்னத் ஆதரிக்கவில்லை. இதில் இருக்கின்ற கட்சிகள் மட்டும் தான் அதனை ஆதரித்தன. தமிழரசுக் கட்சி பெரும்பான்மை தலைவர்களை ஆதரித்தார்கள். மக்களை வாக்களிக்க வேண்டாம் அமைதி காணுங்கள் என்றும் கூறியவர்கள் இருக்கிறார்கள். சங்கு சின்னத்தில் பொது வேட்பாளரை உருவாக்கி நாம் தான் செயற்பட்டோம் எனக் கூறுகின்றோம். ஆகவே ஒற்றுமையை கருதி எங்களுடைய ஆட்சி அமைக்கின்ற விதம் தமிழ் தரப்புடன் தான் இருக்கும். அற்ப சொற்றபத்திற்காக கண்டவர்களின் காலில் விழும் நிலை இல்லை என்பதை கூறுகின்றேன். அடுத்த மாகாண சபை தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் சேர்ந்து போட்டியிடும். அதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். எமது மக்கள் அதை தான் விரும்புகிறார்கள். அதற்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் தமிழ் கட்சிகள் மக்களால் புறக்கணிக்கப்படும். மாற்றம் வேண்டும் ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் சிங்கள தலைவர்களுக்கு ஒற்றுமை இல்லாத தமிழ கட்சிகளை மாற்றியமைக்க வேண்டும் என்பற்காக எங்களது மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஆனால் எமது மக்கள் எங்களோடு நிற்பார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப ஒரே அணியாக நிற்போம். ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் என்ன செய்தோம் என எங்களை பார்த்து கூக்கிரல் இடுகிறார்கள். நான் கேட்கின்றேன். ஒரு பிரதி அமைச்சரை எங்களிடம் தாருங்கள். இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். உபாலி எதற்கு? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவியை பெற வேண்டும் என விரும்புகின்றோம். நாங்கள் முதுகெலும்பு உள்ளதால் அரசாங்கத்துடன் இணையவில்லை. முதுகெலும்பு இருந்தால் நீங்கள் அமைச்சு பதவி கேளுங்கள். ஆனால், அரசாங்கத்துடன வால் பிடிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தின் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. அவ்வாறு பதவி பெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மக்களுக்கு வளமான கிராமங்களை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் அரசாங்கத்திற்கு வால்பிடிக்காது இருப்பதால் எமது மக்களின் தமிழ் கிராமங்கள் பலவற்றின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஆகவே, அபிவிருத்தி தேவை. கொண்டு செல்வதற்கான அடித்தளம் இந்த சபைகள் ஊடாக வரும். அதற்காக அந்த சபைகளை தமிழர் தரப்பு கைப்பற்ற வேண்டும். தமிழ் கட்சிகளை விமர்சிக்காதீர்கள். சபைகளை கைப்பற்ற முயற்சி செய்யுங்கள் எனத் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cm9th2a0t000do230838iokfx
3 months 2 weeks ago
ட்ரம்பின் கடும் வரிகள்; உலகளாவிய பொருளாதார உற்பத்தி தொடர்பில் IMF எச்சரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அனைத்து வர்த்தக பங்காளிகள் மீதும் விதிக்கப்பட்ட கடுமையான வரிகளால், வரவிருக்கும் மாதங்களில் உலகளாவிய பொருளாதார உற்பத்தி மெதுவாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF)செவ்வாயன்று (22) கூறியது. உலகளாவிய நிதித் தலைவர்கள் ட்ரம்பின் குழுவுடன் வரிகளைக் குறைக்க ஒப்பந்தங்களைக் கோரி செவ்வாயன்று வொஷிங்டனை முற்றுகையிட்டனர். உண்மையில், பேச்சுவார்த்தைகளின் வேகம் விறுவிறுப்பாக இருந்தது என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறினார். இதுவரை 18 வெவ்வேறு நாடுகள் திட்டங்களை வழங்கியுள்ளன. மேலும் ட்ரம்பின் வர்த்தக பேச்சுவார்த்தைக் குழு இந்த வாரம் 34 நாடுகளைச் சந்தித்து வரிகளைப் பற்றி விவாதிக்க உள்ளது. சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் “கணிசமாக” கட்டணங்களைக் குறைத்து, சந்தைகளை உயர்த்தும் என்று ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் பல நாடுகளுக்கு 10% அடிப்படை இறக்குமதி வரியை நிர்ணயித்த பின்னர், ட்ரம்ப் திடீரென கடுமையான வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இதேவேளை, உலகின் நம்பர் 1 பொருளாதார நாட்டில் பொருட்கள் மீதான வரிகள் ஒரு நூற்றாண்டில் மிக உயர்ந்த நிலையில் இருப்பதால், 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி 2.8% ஆகக் குறையும் என்று IMF கணித்துள்ளது. இது ஏனைய நாடுகளுக்கு ஏற்படும் ஒரு வேதனை மட்டுமல்ல: அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த ஆண்டு 2.8% ஆக இருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் முழு சதவீதப் புள்ளி குறைந்து வெறும் 1.8% ஆகக் குறையும் என்றும் IMF கணித்துள்ளது. இறக்குமதிகளின் விலை அதிகரிக்கும் போது பணவீக்கத்தில் “குறிப்பிடத்தக்க” மேல்நோக்கிய திருத்தங்கள் ஏற்படும். அமெரிக்காவின் பொருட்களுக்கு சீனா 125% வரிகளை விதித்து பதிலடி கொடுத்துள்ளது. இதன் விளைவாக இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகத் தடை ஏற்பட்டுள்ளளதாகவும் IMF கூறியுள்ளது. https://athavannews.com/2025/1429221
3 months 2 weeks ago
உள்ளூராட்சித் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை - மணிவண்ணன் குற்றச்சாட்டு ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டே, உள்ளூராட்சித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தவுள்ளது என்று சட்டத்தரணியும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் மேயருமான வி.மணிவண்ணன் விமர்சித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மீதான, மேன்முறையீடு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, சட்டத்தரணி வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதில் யாழ், மாநகரசபை உள்ளிட்ட நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பெண் வேட்பாளர் ஒருவரின் சத்தியப்பிரமாணத்தில், சத்தியப்பிரமான ஆணையாளரின் ஒப்பம் இல்லை, இளம் வேட்பாளர்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்பத்தாட்சிப் பத்திரங்களில் அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தரின் ஒப்பம் இல்லை உள்ளிட்ட காரணங்களுக்காகவே எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தோம். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு கூறப்பட்ட அதே காரணங்களுக்காக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வேறு தரப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பில், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே, நீதிமன்றத்தின் அந்தக் கட்டளையைக் காரணமாகக் காட்டி, எமது வேட்புமனுக்களையும் ஏற்றுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரினோம். எனினும், 'நீதிமன்றக் கட்டளை உள்ள வேட்புமனுக்களையே ஏற்றுக்கொள்வோம். நீங்கள் 20ஆம் திகதிக்கு முன்னர் வழக்கு தொடருங்கள்' என அறிவுறுத்தினார்கள். அதன் பிரகாரம் நாம் கடந்த 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தோம். குறித்த வழக்கு நேற்றுத் திங்கட்கிழமை (நேற்றுமுன்தினம்) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, காலதாமதம் எனக் காரணம்கூறி தேர்தல் ஆணைக்குழு மன்றில் எமது மனுக்களை விசாரணைக்கு எடுக்க ஆட்சேபனை தெரிவித்தமையால் எமது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒரு காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கினால், அதே காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடப்பாடு. நீதிமன்றக் கட்டளைகள் இருந்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்வோம் எனக்கூறி, எம்மை வழக்குத் தொடருமாறு அறிவுறுத்திய பின்னர், நாம் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த நிலையில் காலதாமதம் என கூறியுள்ளார்கள். இதனூடாக ஜனநாயகத்தைக் கேவலப்படுத்தி, அதனைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தவுள்ளது. இங்கே தேர்தல் ஆணைக்குழு, நீதியாக, நேர்மையாக, ஜனநாயக ரீதியாக சுயாதீனமாக செயற்படுகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடு, ஜே.பி.வியின் காட்டாட்சியை எடுத்துக்காட்டுகின்றது – என்றார். https://newuthayan.com/article/உள்ளூராட்சித்_தேர்தலில்_ஜனநாயகப்_படுகொலை_-_மணிவண்ணன்_குற்றச்சாட்டு
Checked
Fri, 08/08/2025 - 18:44
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed