புதிய பதிவுகள்2

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
இதைதான் ஒவ்வொரு கணவரும் இப்ப யோசிக்கினம்🤔🙆, காலம் தழ்த்திய செய்தி பிந்திக்கிடைத்த நீதி மாதிரி🥲

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
கந்தையா அண்ணை உங்கள் கதையைப் போல் உறவினர்களால் பலர் ஏமாற்றப்பட்டு மனம் வெறுத்த நிலையில் உள்ளார்கள். என்ன செய்வது... மற்றவனின் காணிக்கு ஆசைப்படுவது எமது இனத்தில் மிக அதிகம் போலுள்ளது. எல்லைச் சண்டைக்காக சொத்தையே அழித்தவர்கள் பலர் எம்மில் உள்ளார்கள். 😢

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
நான் மாறலாம் ஆனால் மனைவி ஒருபோதும் மாறமாட்டாள். அது வளர்ப்பு முறை எனது சமையல் சீனா இலங்கை மற்றும் இணையத்தில் பாரத்தும் செய்வேன் மகன் இத்தாலிய சமையல் செய்வன். நான் சமைபபதையாம் சாப்பிடுவன். மனைவி அனேகமாக பாண். 🤣 அல்லது மரக்கறி. சோறு பழையது எதுவுமே சாப்பிடுவதில்லை நான் இரண்டு மூன்று நாள் வைத்து சாப்பிடுவேன். சமையல் பெரிய வேலை இல்லை இந்த துறையில் இருபது வருடத்திற்கு மேல் அனுபவம் உண்டு” எனக்கு மூன்று பெண் சகோதரிகளுண்டு அவர்களுக்கு சீதனம். கொடுத்து தான் திருமணம் செயதது ...எனக்கும் நிறையவே சீதனம். தர முன் வந்தார்கள்.....சீதனம். தேவையில்லை வேலை செய்தால் சரி என்றேன் ஆனால் நான் விரும்பியது கிடைக்கவில்லை அதாவது 33 ஆண்டுகளில் ஒரு நாள் கூட வேலை செய்யவில்லை ஆனால் நாலு ஏக்கர் தென்னம். தோட்டம் ஏழு பரப்பளவு காணி இரண்டுயரை ஏக்கர் வயல் ஒட்டிசுட்டானில். பேசினார்கள் மனைவிக்கு ஒரு தங்கை உண்டு” 1993 தனக்கு தானே திருமணம் பேசி திருமணம் செய்து கொண்டாள். நானும் 3000 மார்க். அனுப்பி வைத்தேன் மனைவி சொன்னார் கொடுக்கக்கூடாது என்று மனைவியின் சகோதரி. எங்களுக்கு பேசிய ஏழு பரப்பளவு காணியையும். தனக்கு சீதனமாக எழுதிக் கொண்டாள் இதை 2003 இல் நாங்கள் குடும்பமாக போன போதும் செல்லவில்லை இடையில் நான் இரண்டு முறை போன போதும் சொல்லவில்லை இதற்க்கு இடையில் நீங்கள் ஊருக்கு போகமாட்டீர்கள் பிள்ளைகளும் போகாதுகள். என்று தென்னாம். தோட்டத்தை சுவிஸ் உள்ள தனது மாமாவுக்கு விற்க வேண்டும் என்று என்னுடன் மனைவி அடிக்கடி அடிபடுவாள் நான் கையெழுத்திட முடியாது என்றேன் அவளது தமையன் அவுஸ்திரேலியவில். இருக்கிறார் இலங்கையில் மூன்று மாதம் நின்று சட்டத்தரணி மூலம் எனது கையெழுத்து இன்றி விற்று விடடார்கள். பரப்பளவு 65 ஆயிரம் ருபாய் வீதம் 64 பரப்பளவு ஆனால் இன்று அந்த காணி பரப்பளவு 3 இலட்சம் ருபாய் நிற்க அந்த ஏழு பரப்பளவு காணியையும். மீண்டும் தனது பெயரில் அடிபட்டு எழுதி விட்டார் மனைவி அதையும் விற்க. தமையனுடன். கதைத்து பரப்பளவு 15 இலட்சத்துக்கு. எற்பாடு செய்து விட்டாள் தமையன் கூறியுள்ளார் நான் கையெழுத்து வைக்க விடடால். தன் சட்டத்தரணி மூலம் செயது தருவேன் எனறு ....எனது மகள் திருமணம் செய்து தனியாக இருக்கிறார் காதல் திருமணம் தான் 16. வயதில் காதலிக்க தொடங்கி விட்டாள். எங்கள் நகரில் பெரும் தெருக்கள் சபையில் பொறியியலாளர் ஆக வேலை செய்கிறாள் தான் இலங்கையில் வீடு கட்டபபோகிறேன. என்று காணி விற்பனையை நிறுத்தி விட்டாள். வயலும். பக்கத்து வயல்காரர். வரம்பை அரக்கி அரககி அது இரண்டு ஏக்கர் ஆகி விட்டது அது மொத்தம் 5 ஏக்கர் இரண்டு சகோதரிகளுக்கும். அரைவாசியாகப் பிரித்தது எங்கள் முன்னேர்கள் பெண்பார்ப்பது காணிகள் அளந்து எழுதிய பின். திருமணம் செய்வது… சரியாகும் நான் மச்சம். இல்லாமல் சாப்பிட மாட்டேன் உந்த. விரதங்கள். அர்ச்சனை எல்லாம் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நமபுகிறேன். ஒரு அர்ச்சகர் அர்ச்சனை செய்வதன் மூலம் எங்கள் கஸடஙகள். தீருமென்றால். ஆயிரக்கணக்கானா. ஐயார்மார. ஏன் வறுமையில் வட வேணடும். இதோ அர்ச்சனை செய்வதன். மூலம் தஙகளின். பிரச்சனைகளை தீர்ககலாம அல்லவா இது எல்லாம் மனிதர்களின் சுய விருப்பம் 🤣🙏

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
நானும் அநேகமான வீட்டு வேலைகளை விரும்பி செய்வேன். மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பது எமது கடமை. ஒரு வீட்டில், மூன்று சமையலா தலை சுத்துது. நீங்கள் சைவத்துக்கு மாறினால் அல்லது மனைவிக்கு... அசைவத்தை பழக்கினால் இரண்டு சமையல் ஆகி விடுமே. மகன் ஏன்... தனிய சமைக்கின்றார். ஜேர்மன் சமையலா.

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
சீலை தோய்க்கவில்லை மற்றது எல்லாம் நான் செய்து உள்ளேன் நான் தான் செய்வது… கிட்டதட்ட 25. வருடங்களுக்கு மேலாக செய்துள்ளேன் .....இன்றும் நான் தனி சமையல் மகன் தனிச் சமையல் மனைவியும் தனி சமையல் அவள் பிராமணர் மாதிரி சாப்பாடு 33 ஆண்டுகள் ஆகிறது வேலை தேடியது கிடையாது படிக்க விரும்பியதில்லை விருப்பம் இல்லை என்றால் எதுவும் செய்ய முடியாது முடியாது என்பது உலகில் எதுவும் இல்லை அதுவும் உந்த. வீட்டு வேலை மிகவும் சுகம் அது பழக்கத்தில் வரவேண்டும் எந்த பெரிய வேலையும் சுகமானது ஆகும் அல்லது சுகமாக மாறிவிடும்.

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை!

3 months 2 weeks ago
அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை! அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் பரஸ்பரம் என்ற பெயரில் அனைத்து வர்த்தக கூட்டாளிகள் மீதும் தான்தோன்றித்தனமாக வரிகளை விதித்து, ‘பரஸ்பர வரி’ பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், எளியோரை வலிமையானவர்கள் வேட்டையாடினால், அனைத்து நாடுகளுமே பாதிக்கப்படும் எனவும், அமெரிக்கா உடனான வர்த்தக மோதலை தீர்க்க முயற்சிக்கும் அனைத்து தரப்பினரையும் சீனா மதிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேச அளவில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட, அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது எனவும், அதே நேரத்தில், சீனாவுக்கு தன்னுடைய சட்டப்பூர்வமான உரிமை மற்றும் நலனை பாதுகாக்கும் திறனும் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் சீனாவின் நலன்களை பலி கொடுத்து, அமெரிக்காவும்,அதன் கூட்டாளி நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்வதை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும், அது போன்ற சூழல் ஏற்பட்டால், அதற்கேற்ற எதிர் நடவடிக்கைகளை சீனா உறுதியாக எடுக்கும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு சீனா பதிலடி கொடுக்கும் எனவும் சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429114

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் இல்லை என்றால்... நீங்களும் சமையல் செய்து, சீலை தோய்த்து, விட்டு வேலைகள் செய்து, குழந்தைக்கு "பம்பஸ்" மாத்தி, குளிக்க வார்க்கின்ற வேலைகளையும் நீங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும். டீல்... ஓகேயா. 😂

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 2 weeks ago
பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதை நிறுத்துவீர்களா? நிறுத்துவீர்களா? நிவாரண பொதி கொடுக்குறோம் எனும் பெயரில் கட்சி வளர்ப்பதை கண்டிப்பீர்களா? கண்டிப்பீர்களா?

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

3 months 2 weeks ago
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு! குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் இரண்டாம் கட்டமாக மீண்டும், குரங்குகள் உள்ளிட்ட விவசாய நிலங்களுக்கு பாதிப்பினை ஏற்டுத்தக் கூடிய வனவிலங்குகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். விலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பாக அமைச்சின் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் இக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முதல் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் ஊடாக தீர்மானங்களை எடுக்காது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பினையும் மேற்கொண்டு தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429115

“கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் விடுத்துள்ள வேண்டுகோள்!

3 months 2 weeks ago
“கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் விடுத்துள்ள வேண்டுகோள்! புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா மாளிகையைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் தூய்மையைப் பராமரிப்பதில் அதிகபட்ச கவனம் செலுத்துமாறும், குப்பைகூழங்களை உரிய இடங்களில் மாத்திரம் கொட்டுவது தொடர்பில் கூட்டாக தலையீடு செய்து பிரஜைகள் என்ற வகையில் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என “கிளீன் ஸ்ரீ லங்கா ” திட்டம் நினைவுகூர்ந்துள்ளது. நாட்டில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைசார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் பிரதான திட்டமாக “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குப்பைகூழங்கள் அற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கும், குப்பைகளை முறையாக அகற்றும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த திட்டத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சியுடன் இணைந்து, ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தை மையமாகக் கொண்டு “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1429143

எழுதுமட்டுவாழ், ஆனையிறவுச் சோதனைச் சாவடிகள் மீளவும் அகற்றம்

3 months 2 weeks ago
உள்ளுராட்சி தேர்தல் முடிந்த பின்... இந்தச் சோதனைச் சாவடிகள் மீண்டும் முளைக்கும். இப்பிடி எத்தினை சித்து விளையாட்டுக்களை பார்த்து விட்டோம். 😂 நமக்கே... விபூதி அடிக்கிறாங்கள். 🤣

போப் பிரான்சிஸ் காலமானார்!

3 months 2 weeks ago
பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி! பாப்பரசர் போப்பிரான்சிஸ் அவர்களிற்கு வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸ்சிஸ் வத்திகானில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலிநிகழ்கள் இடம்பெற்றுவருகிறது.அந்தவகையில் வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்கள் தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அன்னாரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. https://athavannews.com/2025/1429146

போப் பிரான்சிஸ் காலமானார்!

3 months 2 weeks ago
போப்பின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை! போப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26 சனிக்கிழமை அந் நாட்டு நேரப்படி காலை 10:00 மணிக்கு (BST 09:00) நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் கலந்துகொள்ளும் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கைத் திட்டமிடுவதற்காக செவ்வாயன்று (22) கார்டினல்கள் வத்திக்கானில் கூடினர். இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் நடைபெறும் ஒரு மாநாட்டிற்கு முன்னதாக இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதனிடையே, இன்று முதல் இறுதி மரியாதை செலுத்தத் தொடங்க அனுமதிக்கப்படும் வகையில் அவரது பூதவுடல் தாங்கிய சவப்பெட்டி செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு வரப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1429153

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
என் அண்ணன் தம்பிமார்கள் எவ்வளவு பேர் நொந்து நூலாகி கிடக்கிறார்கள் என்று இத்திரி மூலம் தெரிகிறது 😜

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
அதேதான்.. அதே போல் ஜீவனாம்ச காசுதா மயிர் மட்டை எண்டு கேக்ககுடாது.. அவன் உடல் அவன் உழைப்பு அவன் காசு அவனுக்கு சொந்தம்..
Checked
Fri, 08/08/2025 - 15:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed