புதிய பதிவுகள்2

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
40 போட்டிகளில் 40 புள்ளிகள் நமக்கு. தொடக்கத்தில கணிச்சதெல்லாம் சரியாப் போச்சுது. யார் கண் பட்டுதோ. இப்ப எல்லாம் பின் பக்கமா ஓடுது. ஆரேன் சூனியம் கீனியம் வைச்சிட்டினமோ.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஆகா ....நிலாமதிக்கு கடைசி இடம். சோடியாக நிற்க பையனும் ஊரில் இல்லை. பார்க்கலாம் யாராவது வருவார்கள். கடைசியாய் நிற்கவும் (தாங்கி பிடிக்க )ஒரு ஆள் தேவை தானே.😃

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
GMT நேரப்படி நாளை புதன் 23 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH எதிர் MI 12 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 11 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஈழப்பிரியன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி குமாரசாமி கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

முதியவரின் மனைவிக்கு ஏற்பட்ட மறதி நோய்.

3 months 2 weeks ago
இதேபோல ஒருசிறு கதை .. ஒரு வயதான மூதாட்டியை ரிச்சர்ட் என்பவர் அன்னையர் தினத்தன்று அவரது தங்குமிடத்துக்கு சென்று, அழகான ஆடை அணிவித்து நம் வெளியே சென்று வரலாம் என்றான். நீண்டகாலமாக மகள் வராது இருந்ததால் மூதாட்டியும் ஆவலுடன் விரும்பி அவனுடன் வெளியே ஒரு காலையுணவு உண்ணும் கடைக்கு கூட்டிச் சென்றான். காபி sandwich அவருக்கு விரும்பிய அனைத்தும் ஓடர் செய்து உண்டனர் . இடையிடையே சிறிது மெளனமா இருப்பர் . எனக்கு இவை விருப்பமென்பது உமக்கு எப்படி தெரியும் ? என்றாள் திரும்ப திரும்ப அவன் பெயரையும் கேட்டுக் கொண்டாள். இவனுக்கு உள்ளூரக் கவலை, பெற்ற கடைசி மகனை மறந்து விடடார் என்று இவன் பெயரைச் சொன்னதும் ஓ எனக்கும் கடைசி மகன் விடுதியில் ஆறாம் வகுப்பு படிக்கின்றான். விடுமுறைக்குபண்ணைவீட்டுக்கு வருவான். நீர் நல்ல ஆடை அணிந்து கம்பீரமாய் இருக்கிறீர் .மீண்டும் .....உமது பெயர் என்ன ? அடுத்த தடவை வரும்போது எமக்கு ஊரின் எல்லையில் அழகான தோடடக் காணி, விடுமுறைக்கு ஏற்ற பங்களா வீடு அங்கே சென்று சில நாட்கள் களிக்கலாம்.நான் அமைத்து வைத்த றோசாக்கன்றுகளின் பூக்களையும் ரசிக்கலாம். அருகே உள்ள சிறு நீரோடையில் வாத்துக்கள் நீந்துவதை பார்க்கலாம். மிக்க நன்றி அடுத்த தடவையும் வருவீர் எனக் காத்திருப்பேன் என்றாள்.மீண்டும் Handsome Guy What is your nice name ? (அவரது கணவன் இறப்பின் பின் வீடு வளவு விற்று பங்கு போடப்பட்ட்து ஞாபகம் இல்லை , மூன்று மாதங்களின் பின் தலைசுற்றி விழுந்த பின், ஒரு வருடம் வைத்திய சிகிச்சையில் இருந்தபின் பலத்த அடிகாரணமாக மறதி நோய்க்கு ஆளாகி விடடார் முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார்..) இந்த முதிர் குழந்தைகளுக்காக வாவது அன்னையர் தினம் தந்தையர் தினம் வரவேணும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது - அமைச்சரவை பேச்சாளர்

3 months 2 weeks ago
அவர்களில் நொட்டினால்…. நாட்டில் குழப்பம் ஏற்பட்டு, அரசாங்கம் கவிழும் என்று அனுரவிற்கு தெரியும். அதனால்… ஐந்து வருடங்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டே இருப்பார்கள். வழக்கம் போல் மக்கள் தான் ஏமாளிகள்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 40வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் எய்டன் மார்க்கமும் (52 ஓட்டங்கள்) மிச்சல் மார்ஷும் (45 ஓட்டங்கள்) நிலைத்து ஆடி முதலாவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 87 ஓட்டங்களை எடுத்திருந்தனர். 200 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கக்கூடிய நிலையிருந்தும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் இறுதியில் வேகமாக அடித்தாடிய ஆயுஷ் படோனியின் 36 ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடினர். அபிஷேக் போரல் 51 ஓட்டங்களையும் கேஎல் ராஹுல் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும், அக்க்ஷர் பட்டேல் 4 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்களையும் எடுத்து 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை இலகுவாக அடடைந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நிலாமதி அக்கா கடைசி இடத்தில் வந்து நிற்கின்றார்!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
90களில் ஒரு படையே இருந்துதே. இப்போ மாதிரி தட்டின உடன படங்கள் வாறேல. ஏதோ ஆப்பிடுற படங்கள்தானே எப்பவும். இப்ப ஆறுதலா இருந்து இரசிக்கலாம் என்ன... கிருபனுக்கு 50 ஆச்சுதா.... இந்த நால்வரும் வாங்க. வந்து உங்கட கதையைச் சொல்லுங்க. உங்கட காட்டிலதான் மழை. நாம் ஒன்று நினைக்க.....

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது - அமைச்சரவை பேச்சாளர்

3 months 2 weeks ago
கோத்தபய, ரனிலின் குற்ற செயல்களுக்கு எந்த வித சாட்சியங்களும் இது வரை கிடைக்கப்பெறவில்லையா? அல்லது அவர்கள் குற்றவாளிகளே இல்லையா?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நாம 90களில் மனிஷா கொய்ராவில சொக்கிப்போய் இருந்ததால் ப்ரீத்தி ஸின்ராவைக் கவனிக்கவில்லை! இப்ப அவருக்கு 50 வயதாகிவிட்டது😱 இளமை ஊஞ்சலாடும் படங்கள்🥰

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இம்முறை, அக்சர் பட்டேலின் தலைமைத்துவம் சிறப்பாய் இருக்குது. பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதாகட்டும், துடுப்பாட்டம் ஆகட்டும், மிகவும் சிறப்பாகச் செயற்படுகிறார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது - அமைச்சரவை பேச்சாளர்

3 months 2 weeks ago
22 APR, 2025 | 05:23 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது எதிர்க்கட்சியிலிருப்பவர்களது ஆட்சியிலேயே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் இந்த விவகாரத்தில் அவர்கள் எதற்காக இந்தளவுக்கு கலவரமடைகின்றனர் என்பது எமக்கு புரியவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன. அவை தொடர்பில் எதிர்க்கட்சியினர் கலவரமடையத் தேவையில்லை. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இந்த விசாரணைகளை முறையாக முன்னெடுத்திருந்தால் தற்போது பிரதான சூத்திரதாரியை இனங்கண்டு கைது செய்திருக்கவும் முடியும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணைகளை மறைப்பதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. சில விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் நாட்டை விட்டுச் செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். பெரும்பாலான சாட்சிகள் மறைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில் கடந்த 6 மாதங்கள் மாத்திரமே விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சியினர் எதற்காக கலவரமடைகின்றர் என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியும். அண்மையில் கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பிள்ளையான் தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கடத்தப்பட்டமையை மாத்திரம் பெரும்பாலானோர் அறிந்திருந்தாலும், அவருக்கு எதிராக மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருகின்றன. அவை தொடர்பில் தற்போதும் மேலும் பல சாட்சியங்கள் கிடைக்கப் பெறுகின்றன. அவை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்கப்படும் போது கிடைக்கப் பெறும் தகவல்களில் பெரும்பாலானவை ஒன்றோடொன்று தொடர்புபட்டவையாகக் காணப்படுகின்றன. இவை தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகள் மிகவும் சிக்கலானவையாகும். கர்தினால் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடையக் கூடியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சூத்திரதாரி யார்? அவர் ஒருவரா பலரா? அது குறித்து எப்போது அறிவிப்பது என்ற பொறுப்புக்களை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்போம். எவ்வாறிருப்பினும் விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அதற்கான கால வரையறையை எம்மால் தற்போது கூற முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தில் எவ்வித தவறும் இல்லை. அவரால் கூறப்பட்டதைப்போன்று தற்போது ஒவ்வொரு காரணிகளாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் அடிப்படையிலேயே அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. விசாரணைகளுக்கு தேவையான உதவி, ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்கி வருகிறது. அதில் மாத்திரமே அரசாங்கத்தின் தலையீடு காணப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/212643

கடல்நீரில் இருந்து கார்பனை உறிஞ்சும் புதிய திட்டம் காலநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வாகுமா?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனா ஃபிஷர் பதவி, பிபிசி சூழலியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனின் தெற்கு எல்லையில் உள்ள கடற்கரையில் கடலில் இருந்து கார்பனை உறிஞ்சும் திட்டம் ஒன்று செயல்படத் தொடங்கியுள்ளது. சீக்யூர் (SeaCURE) என்று அறியப்படும் இந்தத் திட்டம் பிரிட்டிஷ் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்களின் ஒரு பகுதியாக இது உள்ளது. புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணியான பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என காலநிலை விஞ்ஞானிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உள்ளது. ஆனால் ஏற்கனவே வெளியேறிய வாயுக்களை உறிஞ்ச வேண்டும் என்பது இந்த பிரச்னைக்கான தீர்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் எனப் பல விஞ்ஞானிகளும் நம்புகின்றனர். 'கார்பன் பிடித்தல்' என அறியப்படும் இந்தத் திட்டம், உமிழ்வுகள் ஏற்படும் இடத்திலேயே பிடிக்கப்பட வேண்டும் அல்லது காற்றிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதில் தான் வழக்கமாக கவனம் செலுத்துகின்றன. கடலில் இருந்து புவியை வெப்பமடையச் செய்யும் கார்பனை எடுக்க முடியுமா என்பதைப் பரிசோதிப்பது தான் சீக்யூர் திட்டத்தை சுவாரஸ்யமாக்குகிறது. ஏனென்றால் காற்றை விடவும் தண்ணீரில் தான் கார்பன் அதிக அடர்த்தியில் இருக்கும். இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? இந்தத் திட்டம் செயல்படும் இடத்தின் நுழைவு வாயிலை அடைய நீங்கள் வெய்மௌத் கடலுயிர் மையத்தின் பின் செல்ல வேண்டும். அந்த வழியில் "கவனம்: மோரே மீன்கள் உங்களைக் கடிக்கலாம்" என்கிற அறிவிப்பை கடந்து செல்ல வேண்டும். இந்த மகத்தான திட்டத்தை இங்கு வைத்ததற்கு ஒரு காரணம் உள்ளது. பாறைகள் நிறைந்த கடலுக்கு அடியே சென்று, இங்கிலீஷ் கால்வாய் வழியே கடல் நீரை உறிஞ்சி கரைக்குக் கொண்டு வரும் குழாய் இது. தண்ணீரிலிருந்து கார்பனை நீக்குவதன் மூலம் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை குறைப்பது செலவு குறைந்த வழியாக இருக்குமா என்பதைக் கண்டுபிடிக்க இந்தத் திட்டம் முயற்சி செய்கிறது. சீக்யூர் திட்டத்தில் கடல்நீர் மீண்டும் கடலுக்கு அனுப்பபடுவதற்கு முன்பாக கார்பனை நீக்குவதற்கான செயல்பாடுகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் கடலுக்குச் செல்லும் நீர் மீண்டும் அதிக கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. பூமியில் முதல் உயிரினம் தோன்றியது எப்படி?20 ஏப்ரல் 2025 பூமி போலவே இன்னொரு கிரகத்தில் உயிர்கள் வாழும் அறிகுறி - நாசா ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு21 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,ப்ளைமௌத் கடல் ஆய்வகத்தின் பேராசிரியர் டாம் பெல் கடல் நீரின் அமிலத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் இது சாத்தியமாவது எப்படி? இங்கு வரும் முதல் காட்சி ஊடக செய்தியாளர்கள் பிபிசி செய்தியாளர்கள் தான். ப்ளைமௌத் கடல் ஆய்வகத்தின் பேராசிரியர் டாம் பெல் நமக்கு இந்த இடத்தைச் சுற்றிக் காட்ட வந்துள்ளார். கடல்நீரை மிகவும் அமிலத்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு சுத்திகரிப்பு செய்வதன் மூலம் இந்த செயல்முறை தொடங்குகிறது. இதன் மூலம் கடல்நீரில் கரைந்திருக்கும் கார்பன் மீண்டும் வாயு ஆகி கார்பன் டை ஆக்ஸைடாக வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது. "இது கடல்நீர் ஸ்ட்ரிப்பர்" எனச் சிரிப்புடன் சொல்கிறார் பேராசிரியர் பெல். இந்த 'ஸ்ட்ரிப்பர்' அமிலத்தன்மை கொண்ட கடல் நீர் மற்றும் காற்றுடனான தொடர்பை அதிகப்படுத்தும் பெரிய துருப்பிடிக்காத ஸ்டீல் தொட்டி ஆகும். "பாட்டிலில் அடைக்கப்பட்ட பானத்தை நீங்கள் திறக்கும்போது நுரை வரும். அது தான் கார்பன் டை ஆக்சைட்." என்கிறார் பெல். "நாங்கள் கடல் நீரை ஒரு பெரிய பரப்பளவில் சேகரிக்கிறோம். இது தரையில் பானத்தை ஊற்றுவது போன்றது தான். கடல் நீரிலிருந்து கார்பன் டை ஆக்சைடு விரைவாக வெளியேற உதவும்." என்றார் காற்றிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சப்பட்டு கருகிய தேங்காய் நார்கள் மூலம் செறிவூட்டப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது. கடல் நீரில் இருக்கும் அமிலத்தன்மையை மட்டுப்படுத்த ரசாயனம் சேர்க்கப்பட்டு மீண்டும் கடலுக்கு செல்லும் ஓடையில் தண்ணீர் விடப்படுகிறது. இந்த நீர் கடலுக்குச் சென்ற பிறகு மீண்டும் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க மிகச் சிறிய அளவில் பங்காற்றுகிறது. K2-18b கோளில் உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது எப்படி? - ஆய்வை வழிநடத்தும் நிக்கு மதுசூதன் யார்?18 ஏப்ரல் 2025 7 மீட்டர் நீளம், அரை டன் எடை - 100 ஆண்டுகளில் முதன்முறை தென்பட்ட பிரமாண்ட கணவாய் மீன்18 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,கடல் நீரில் இருக்கும் அமிலத்தன்மையை மட்டுப்படுத்த அல்கலி என்கிற ரசாயனம் சேர்க்கப்பட்டு மீண்டும் கடலுக்கு செல்லும் ஓடையில் தண்ணீர் விடப்படுகிறது நீரை பயன்படுத்துவதால் உள்ள நன்மைகள் என்ன? ஏற்கனவே காற்றிலிருந்து நேரடியாக கார்பனை உறிஞ்சும் நிறைய வளர்ந்த 'கார்பன் பிடித்தல்' தொழிநுட்பங்கள் உள்ளன. ஆனால் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு அதற்கே உரிய நன்மைகள் உள்ளதாகக் கூறுகிறார் சீக்யூர் திட்டத்தை வழிநடத்தும் முனைவர் பால் ஹலோரன். "கடல் நீரில் காற்றில் இருப்பதை விட 150 மடங்கு அதிக அளவிலான கார்பன் உள்ளது," என்கிறார் ஹலோரன். "ஆனால் இதில் வேறு விதமான சவால்கள் உள்ளன. கடல் நீரில் உள்ள கார்பனைக் குறைக்க நாம் செயல்படுத்தும் திட்டத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய அதிக ஆற்றல் தேவைப்படுகிறது." தற்சமயத்தில் இந்தத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் 100 மெட்ரிக் டன் கார்பன் அளவு கார்பனைக் குறைக்கிறது. ஆனால் இது மிகவும் குறைவு. அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து வரும் ஒரு வணிக விமானம் வெளியிடுகிற கார்பன் அளவு கூட இதை விட அதிகம். ஆனால் உலகப் பெருங்கடல்களின் அளவை வைத்துப் பார்க்கையில் இதில் திறன் உள்ளது சீக்யூர் திட்டத்தினர் நம்புகின்றனர். உலகத்தில் உள்ள கடல்நீரில் 1% சுத்திகரிப்பு செய்யப்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் 14 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைட் நீக்கப்படுவதற்கான திறன் உள்ளது என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சீக்யூர் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டுமென்றால், கார்பனை நீக்கும் இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். கடலில் மிதக்கும் சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம் இது சாத்தியப்படலாம். "ஜீரோ கார்பன் உமிழ்வை அடைய கார்பன் நீக்கம் என்பது அவசியமானது. மேற்கொண்டு வெப்பமடைவதைத் தடுக்க ஜீரோ உமிழ்வு என்பது தேவைப்படுகிறது." என்கிறார் கார்பன் பிடிப்பு தொழில்நுட்ப வல்லுனரும் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவின் உறுப்பினருமான முனைவர் ஒலிவர் ஜெடேன். "கடல் நீரிலிருந்து நேரடியாக உறிஞ்சுவது ஒரு வழி. காற்றிலிருந்து நேரடியாக உறிஞ்சுவது ஒரு வழி. அடிப்படையில் 15 முதல் 20 வாய்ப்புகள் வரை உள்ளன. இறுதியில் எதைப் பயன்படுத்த வேண்டும் என்கிற கேள்வி நிச்சயமாக அதன் செலவைப் பொறுத்து தான் இருக்கும்," என்றார் அவர். சீக்யூர் திட்டம் அரசிடமிருந்து 3 மில்லியன் யூரோ நிதியுதவி பெற்றுள்ளது. இது பசுமை இல்ல வாயுக்களை சேகரித்து, சேமித்து வைக்கும் தொழில்நுட்பங்களை வளர்க்கும் முயற்சியில் பிரிட்டிஷ் நிதியுதவி வழங்கும் 15 திட்டங்களில் ஒன்று ஆகும். "ஜீரோ உமிழ்வை அடைவதற்கு வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களை நீக்குவது அவசியமாகிறது," என்கிறார் ஆற்றல் துறை அமைச்சர் கெர்ரி மெக்காரத்தி. "எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் உள்ள சீக்யூர் போன்ற புதுமையான திட்டங்கள் இதைச் செயல்படுத்த தேவையான பசுமை தொழில்நுட்பங்களை உருவாக்கி, திறன் சார்ந்து வேலைகளை ஆதரிப்பது மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது." என்றார். கோடையில் சூட்டைத் தணிக்கும் இளநீரின் உள்ளே தண்ணீர் உற்பத்தி ஆவது எப்படி?17 ஏப்ரல் 2025 டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்15 ஏப்ரல் 2025 படக்குறிப்பு,உலகத்தில் உள்ள கடல்நீரில் 1% சுத்திகரிப்பு செய்யப்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் 14 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைட் நீக்கப்படுவதற்கான திறன் உள்ளது சுற்றுச்சூழல் மீதுள்ள சில தாக்கம் கார்பன் குறைந்த நீர் கடலில் அதிக அளவு இருக்கும் போது, அதில் வாழ்கிற உயிரினங்களின் நிலை என்னவாகும் என்கிற கேள்வியும் உள்ளது. வெய்மௌத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் இடத்திலிருந்து கடல் நீர் ஒரு குழாய் மூலம் மிகச் சிறிய அளவிலே வெளியேறுவதால் எந்த பாதிப்பும் இருக்க சாத்தியமில்லை. எக்ஸ்டர் பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர் கய் ஹுப்பர் இந்தத் திட்டத்தின் சாத்தியமான தாக்கங்களை ஆய்வு செய்து வருகிறார். அவர் ஆய்வக சூழலில் குறைந்த கார்பன் நீரில் கடல் உயிரினங்களை வைத்து பரிசோதித்து வருகிறார். "கடல் உயிரினங்கள் சில காரியங்களைச் செய்ய கார்பனைச் சார்ந்திருக்கின்றன," என்கிறார். "ஃபைட்டோபிளாங்க்டன் ஒளிச்சேர்க்கை செய்ய கார்பனைப் பயன்படுத்துகிறது. கடற்சிப்பி போன்ற உயிரினங்கள் தனது ஓடுகளை உருவாக்க கார்பனைப் பயன்படுத்துகின்றன. கார்பன் குறைந்த நீரின் அளவை அதிகரிப்பதால் சுற்றுச்சூழலில் சில தாக்கங்கள் இருக்கும்" என ஆரம்பக்கட்ட முடிவுகள் சொல்வதாக ஹுப்பர் தெரிவிக்கிறார். "இதனால் பாதிப்புகள் இருக்கும் என்றாலும் கார்பன் குறைந்த நீரை நீர்த்துப் போகச் செய்வது போல அதை தவிர்ப்பதற்கான வழிகளும் இருக்கலாம். இவை தொடக்கத்திலே விவாதத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது முக்கியமாகிறது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c793r10zxd9o

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான நிதியை நிறுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

3 months 2 weeks ago
உயர்கல்வியில் தலையிடுவதை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தவேண்டும் ; நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைகழங்கள் கல்லூரிகளின் தலைவர்கள் வேண்டுகோள் Published By: RAJEEBAN 22 APR, 2025 | 12:36 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முன்னர் ஒருபோதும் இல்லாதவகையில் உயர்கல்வியில் தலையிடுவதை அமெரிக்க பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தலைவர்கள் கூட்டாக கண்டித்துள்ளனர். பல்கலைகழகங்கள் கல்லூரிகளின் அமெரிக்க சங்கமே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாங்கள் ஒருகுரலில் பேசுகின்றோம் டிரம்ப் நிர்வாகத்துடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளிற்காக அழைப்பு விடுக்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை ஏற்க தயாராகயிருக்கின்றோம், நியாயபூர்வமான அரசாங்கத்தின் கண்காணிப்புகளை எதிர்க்கவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தலைவர்கள் இருப்பினும் எங்களின் கல்லூரிகளில் கற்பவர்கள், வாழ்பவர்கள் பணியாற்றுபவர்கள் மீதான அரசாங்கத்தின் தேவையற்ற தலையீட்டினை எதிர்க்கின்றோம் என தெரிவித்துள்ளனர். இது அமெரிக்க கல்விநிறுவனங்கள் தங்களின் சுதந்திரத்தை மீறும் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஒன்றிணைக்கின்றன என்பதை வெளிப்படுத்துகின்றது என கார்டியன் தெரிவித்துள்ளது. இதேவேளை ஹவார்ட் பல்கலைகழகம் கல்வி தொடர்பான முடிவெடுப்பதை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு டிரம்ப் நிர்வகாம் முயல்வதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளது. https://www.virakesari.lk/article/212625
Checked
Fri, 08/08/2025 - 15:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed