3 months 2 weeks ago
(உங்களை போன்றோருக்கு சொல்வது தான் நேரம் வீண். (ஏனெனில்,உணர்வு அடிப்படையில் பார்ப்பது)) ஆயினும், மற்றவர்கள் இதை உணர்வு இன்றி, ஆய்வி நிலையில் பார்க்கப்பட வேண்டும், புரியப்பட்ட வேண்டும் என்பதால். நிச்சயமாக , திராவிட மாடல் தான் என்றால்,கேரளாவில், கம்யூனிஸ்ட் எவ்வாறு வளந்தார்கள்? வெளிப்டையான, எதிர்மாறு. திராவிடத்தை கைவிட்டா, அல்லது எதிர்க்கும் போக்கு கொண்ட, மற்ற தென்மாநிலங்கல் எவ்வாறு வளர்ந்தன? பொதுவாக, வடக்கு, மத்தி மாநிலங்களை விட, அபிவிருத்தி சுட்டி தென்மாநிலங்களில் கூட, ஏன்? ஆகவே, எதோ ஒரு பொதுவான சமூக,பொருளாதார அமைப்பு இழை ஓடி உள்ளது இந்த தென்மாநிலங்களிலும், வேறான (அமைப்பு பிரச்சனைகள்) வடக்கு, மத்தி மாநிலங்களில்,ஏனெனில்,ஒரே மத்திய கொள்கை கீழ் இருப்பதால். (எனவே திரவிட மாடல் என்பது காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை) பிகார் போன்ற வடக்கு, மத்தி மாநிலங்களில் இருப்பது, அமைப்பு அடிப்படையிலான பொருளாதார,சமூக அமைப்பு பிரச்சனை, முக்கியமாக காணி உரிமை பரம்பலில், மற்றும் கல்வியை மதிக்காமை (அதனால் கல்வி அறிவு வளராமையும்) போன்ற பிரச்சனைகளும். இதை தென்மாநினலன்கள் 60/ 70/ 80 ளில் சீரமைப்பு செய்தன. அதனால் தான் , 1991 தாராளமயா சாய்வு கொள்கைகள், பிகார் போன்ற மாநிலங்களில் அவ்வளவு மாற்றத்தை கொண்டுவரவில்லை, அரசியல் கட்சிகளும் (அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்), அப்படி முழுமையாக ஏற்றுக்கொண்டு இருந்தாலும் வளர்த்தியை கொண்டுவந்து இருக்க முடியாது. ஆயினும், பொருளாதார வளர்த்தியில் குறுக்கு பாதை இல்லை. இப்போது, பிகார் அந்த சீரமைப்பை கையில் எடுத்து இருக்கிறது. ஆயினும், இவை சந்ததிகள் காலம் செல்லும் விளைவு தெரிய. (ஆனால், மத்திய கொள்கை அளவில் ,அவற்றின் பிகார் போன்ற மாநிலங்களில் அமைப்பு சரி, ஏனெனில் புனல் போன்ற (பொருளாதார) கொள்கை அமைப்பு இருப்பதால், மத்தியில் தளர்வு, தாராள மய சாய்வு, மாநிலங்களில் அதை விட இறுக்கம்)
3 months 2 weeks ago
அந்தக் கிளி பெண் கிளியோ. அவருக்கு மட்டும் எடுக்குது. நாளைக்கும் சங்கு போலத்தான் கிடக்கு. RCBக்கும் வீட்டுச் சாப்பாடு பிடிக்குதில்லை. எல்லாம் சேர்ந்து, நமக்கு...... ஜயகோ.
3 months 2 weeks ago
இந்த கதை எல்லாம் வேணாம். சீமான் கட்சி வளர்வதால் அவரின் (நானுட்பட்ட) எதிர்பாளருக்கு படபடப்பு என்றீர்கள். சரி 2026 இல் சீமான் தனியே நிண்டு 12% எடுப்பாரா - இல்லையா? பந்தயம் கட்ட ரெடியா? இல்லை எண்டால் சீமான் கட்சி வளர்கிறது என்பதை நீங்களே நம்பவில்லை என்பதே அர்த்தம். பிகு மற்ற அண்ணன் இந்த திரியிலும் எஸ். ஒளிச்சு நிண்டு பச்சை அடிக்கிறார்🤣. அட லாசெப்பல் பற்றி மட்டும் கதைப்போம் வாங்கோ அண்ணை 🤣.
3 months 2 weeks ago
முதலமைச்சர் @நந்தன் க்கு வாழ்த்துக்கள். ஆஆஆஆஆஆஆஆ என்னது கிளி ராஜஸ்தான் சீட்டை தூக்கியிருக்கு. மட்டக்கிளப்பு மாந்திரீகர் நாலு பேரை விசிட்டர் விசாவில் எடுக்கப்போகின்றேன் ..வெயிட் பண்ணுங்க. யாரையாவது பிடித்து என்னென்றாலும் செய்யுங்க. இந்த கிளியையும் கொஞ்சம் கவனத்தில் எடுங்க. விசயம் முத்திக் கொண்டு போகுது.
3 months 2 weeks ago
மட்டக்கிளப்பு மாந்திரீகர் நாலு பேரை விசிட்டர் விசாவில் எடுக்கப்போகின்றேன் ..வெயிட் பண்ணுங்க..
3 months 2 weeks ago
இந்தப் பெயரை மாற்றா விட்டால் கனடாவுக்கு 2 டசன் ஜட்டி ஓடர்....எவ்வளவு அற்புதமான பெயர்...அத்துடன் கருத்தும் உண்மையானது....இந்த கம்பனிக்கு முதலீடு செய்யவும் தயாராக இருக்கின்றேன்
3 months 2 weeks ago
🤣 குறிகாட்டுவான் பெயர் பொருத்தம் அந்தமாதிரி. அது சரி குறிகாட்டுவான் புங்குடுதீவுதானே? முதலில் செய்யும் ஜட்டியை கதிர்காம கந்தனுக்கு காணிக்கையா அனுப்புங்கோடாப்பா. அந்தாள் வருச கணக்க்கா வெயிட்டிங்🤣🤣🤣
3 months 2 weeks ago
GMT நேரப்படி நாளை வியாழன் 24 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB எதிர் RR 16 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 07 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ ஏராளன் ரசோதரன் நுணாவிலான் நந்தன் புலவர் அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
3 months 2 weeks ago
@ரசோதரன் னின் கிளியை கூண்டோடு தூக்கடா.
3 months 2 weeks ago
என்ன அல்வாயன், உங்கள் ஏழரைச் சனிய எனக்குத் தள்ளி விட்டுட்டீங்கள். மாட்டிக்கிட்டேனா. வச்ச சூனியத்த எடுக்கிறது எப்பிடி என்று தெரியேலையே.
3 months 2 weeks ago
தலித் என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் - சிதைக்கப்பட்டவர்கள். இந்திய சாதிய அமைப்பில், சாதிகளின் பிரிவுக்கு வெளியே, அதாவது ஆக குறைந்ததாக கருதப்படும் சாதியிலும் குறைவாக, அதாவது சாதிய கட்டமைப்புக்கு வெளியே உள்ள மக்கள் தான் தலித் என விளிக்கப்பட்டனர். ஆங்கிலத்தில் out-cast என்றனர். இதன் மாற்று பெயர்களாக தீண்டதகாதவர் (untouchables) என்பது வழங்கியது. இதை மாற்றி இவர்கள் கடவுளின் பிள்ளைகள், எனவே இவர்களை ஹரிஜனம் என அழைக்க வேண்டும் என்றார் காந்தி. பழைய விகடன், குமுதத்தில் இந்த சொல் கையாளப்பட்டிருக்கும். ஆனால் இப்படி ஒரு பெயரை தமக்கு அளிப்பது தலையை தடவி இழிக்கும் போக்கு (patronizing) என கூறிய அம்பேத்கர் அதை மறுதலித்து, எதை இழிசொல்லாக கூறினரோ அதுவே எம் பெருமை மிகு அடையாளம் என தலித் என்ற சொல்லை முன்னிறுத்தினார். கூடவே அவர் சமைத்த அரசியல் ஆட்டம் இந்த சாதிகளை ஒரு பட்டியலில் இட்டதால் அவர்கள் பட்டியலினத்தவர் (schedule castes) என்றும் வழங்கப்படுகிறனர். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் எழுச்சி, அதை தொடர்ந்து வந்த விசிக, தேவேந்திர குல வேளாளர் சாதிய அமைப்புகளின் எழுச்சி இந்த சொல்லின் பாவனையை, தலித்-மக்கள் மைய அரசியலை அதிகரித்தது. நிற்க, இங்கே ஆரம்பத்தில் நான் கூறிய தலித் என்ற அடையாளத்துள், அதாவது சாதிய கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட மக்கள் கூட்டம் என இலங்கையின் வடக்கு-கிழக்கில், மூன்று மக்கள் கூட்டங்கள் மட்டுமே இருப்பதாக எனக்கு படுகிறது. அவையாவன, பறையர், நளவர், பள்ளர் (தமிழ் நாட்டில் தேவேந்திரகுல வேளாளர்). ஆகவே இவர்கள் மட்டுமே இலங்கையில் தலித் என்ற அடையாளத்துக்குள் அடங்க கூடியவர்கள். ஆனால் பிரிதானியர் கூட இவர்களை சாதிய கட்டமைபுக்கு அப்பாற்பட்டோர் என, பட்டியல் இடவில்லை என்பது நோக்கத்தக்கது. ஆகவே, இந்த மூன்று மக்கள் பிரிவினர் கூட, இலங்கையில் outcast ஆக நடத்தபட்டனரா, படுகிறனரா என்பது கேள்விக்குரியது. இலங்கை சாதிய கட்டமைப்பு இவர்கள் மூவரையும் சாதிய கட்டமைபுக்குள் உள்வாங்கியே உள்ளது என்போரும் உளர். அப்படியாயின் இவர்கள் கூட தலித் என்ற அடையாளத்துள் வரார். அதேபோல் இலங்கையில் நடந்த சாதிய எதிர்ப்பு போராட்டம் தனியே இவர்களை மையபடுத்தி மட்டும் அல்ல, அது வெள்ளாள சாதிய அடக்குமுறைக்கு எதிராக, முற்போக்கான ஒரு சில வெள்ளாளர் உட்பட வெள்ளாளர் அல்லாதோரின் உரிமை போராட்டமாகவே அமைந்தது. இலங்கையில் நடந்த, நடக்கின்ற சாதி எதிர்ப்பு அரசியல் - நீங்கள் சொன்ன சாதியினர் + தலித் என்ற அடையாளத்துள் வரும் சாதியினர் அனைவருக்குமான, வெள்ளாள ஆதிக்க எதிர் அரசியலே ஒழிய - அது தலித் மைய அரசியல் அல்ல. உதாரணம் மூலம் சொல்வதாயின், திருமாவளவன் தலித் மக்களின் நலனை முந்தள்ளும் தலித்திய அரசியல்வாதி. பெரியார் பிராமணர் அல்லாதோர் நலனை முந்தள்ளிய பிராமண ஆதிக்க எதிர்ப்பு அரசியல்வாதி. இலங்கையில் திருமாவின் அரசியல் நடக்கவில்லை. இலங்கையில் நடந்தது, நடப்பது வெள்ளாள ஆதிக்க எதிர்ப்பு அரசியல். வரும் காலத்தில் இலங்கையில் நளவர், பள்ளர், பறையர் சாதியிரனரை மட்டும் பிரதிநிதிதுவபடுத்தி ஒரு அரசியல் முன்னெடுக்கப்படின் - அதை தலித் அரசியல் எனலாம்.
3 months 2 weeks ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 41வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பப் போனதால் 13 ஓட்டங்களிலேயே 4 விக்கெட்டுகள் பறிபோயிருந்தது. பின்னர் ஹென்றிக் க்ளாஸனின் 71 ஓட்டங்களுடனும் அபிநவ் மனோகரின் 43 ஓட்டங்களுடன் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களையே எடுத்தது. ட்ரென்ட் போல்ற் 26 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் இலகுவான வெற்றி இலக்கை வேகமாக அடையும் நோக்கில் வேகமாக அடித்தாடினர். ரோஹித் ஷர்மாவின் 70 ஓட்டங்களுடனும், சூர்யகுமார் யாதவின் ஆட்டமிழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 40 ஓட்டங்களுடனும் 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 146 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை இலகுவாக அடடைந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: இறுதிப் படியில் நின்ற @நிலாமதி அக்கா மேலே முன்னேற @Ahasthiyan இறங்குமுகத்தில் கீழே வந்துள்ளார். கூடவே @Eppothum Thamizhan உம் நிற்கின்றார்!
3 months 2 weeks ago
அதிஸ்டக்காரப் புள்ளைங்க. நிகர ஓட்ட விகிதம் சென்னையை விட ஒரு சொட்டு கூட. அதனால் 9வது இடம். சென்னை அவ்வளவு மோசமாவா இருக்கினம்
3 months 2 weeks ago
23 APR, 2025 | 09:34 PM அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்ட எந்தவிதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "நாட்டில் இனி இனவாதமும் மதவாதமும் இல்லை" எனக் கூறும் தற்போதைய ஜனாதிபதி தையிட்டியில் பேரினவாத மேலாதிக்க மனப்பான்மையுடனும் ஆக்கிரமிப்பு சிந்தனையுடனும் சட்டத்துக்கு விரோதமாக மக்கள் காணிகளில் கட்டப்பட்டுள்ள கட்டட பிரச்சினையை பேரினவாத பிக்குகளின் கைகளில் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் காலடியில் விழவைப்பதற்கு நினைப்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த இரண்டு வருட காலமாக போராடும் அரசியல் சக்திகளை அகற்றிட திட்டமிடுவதும் இனவாதமே, மதவாதமே. தையிட்டியில் எழுந்துள்ள மக்களின் பிரச்சினை பேரினவாத அரசியலில் ஆணிவேரினால் தோற்றுவிக்கப்பட்டதே. அதனை மூடி மறைத்து அரசியல் பேசும் தற்போதைய ஜனாதிபதி, பண்டாரநாயக்க, ஜெயவர்தன, சந்திரிகா, ராஜபக்ஷ வழியில் வந்த தமிழர்களுக்கு எதிரான அரசியல்வாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனலாம். உள்ளூராட்சி மன்ற தேர்தல் அண்மித்து கொண்டிருக்கையில் கண்டி தலதா மாளிகையில் வைக்கப்படுள்ள புனித தந்தத்தினை பௌத்த மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தி அரசியல் செய்யும் ஜனாதிபதி வடக்கில் தையிட்டியில் அரசியல் நீதிக்காக போராடுபவர்களை குறுகிய அரசியல் நோக்கமும் கொண்ட அரசியல்வாதிகள் என அடையாளப்படுத்தி குறிப்பாக தெற்கின் மக்களுக்கு அவர்களை இனவாதிகள், மதவாதிகள் என காட்ட நினைப்பது அரசியல் வஞ்சக நோக்கத்துடனாகும். தமிழர்களின் குரலாக கொழும்பு தலைநகரில் ஓங்கி குரல் கொடுத்த குமார் பொன்னம்பலம் அவர்கள் பட்டப்பகலில் கொழும்பு நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கான நீதி இன்னும் கிட்டவில்லை. அதே அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்டும் என்பதற்கான எந்த விதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக் கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும். தையிட்டி சட்ட விரோத கட்டடத்துக்கு எதிராகவும் நில மீட்புக்காகவும் கடந்த இரண்டு வருட காலமாக போராடுபவர்களை கடந்த காலங்களில் பொலிஸார் அச்சுறுத்தி அடாவடித்தனம் புரிந்ததோடு, விசாரணை என பொலிஸ் நிலையங்களுக்கும் அழைத்ததுடன் நின்றுவிடாது நீதிமன்றத்திலும் நிறுத்தி போராட்டத்தை தொடருவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். எனினும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிரான உச்சக்கட்ட தொனியாகவே ஜனாதிபதியின் கூற்று அமைந்துள்ளது. இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படுகொலையோடு தமிழர் தாயக அரசியல் அழிந்து ஒழிந்துவிட்டது என நினைக்கும் பேரினவாதிகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் பேரினவாதத்துக்கு எதிராக நடக்கும் அரசியல் போராட்டங்களும் நீண்ட நாட்களாக தொடரும் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை முழுமையாக அடக்கி ஒடுக்குவதற்கு தையிட்டி போராட்டத்தில் தெரியும் அரசியல் தலைமைத்துவத்தையும், அது நாடாளுமன்றத்தில் எழுப்பும் குரலையும் பயங்கரவாத குரலாக சித்திரிக்க எடுக்கும் முயற்சிக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நன்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழர்களின் அரசியலை அழிக்க பல்வேறு வடிவங்களில் இன அழிப்பை தொடர்ந்து இறுதியில் இனப்படுகொலை புரிந்தவர்கள் தொடர்ந்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க படை தளங்களை விரிவாக்கி பலப்படுத்தியவர்கள் இறுதியில் தமது ஆக்கிரமிப்பு நோக்கத்தினை நிறைவேற்ற படையினரின் பாதுகாப்போடு பௌத்த சிங்கள அடையாளங்களை விதைக்கத் தொடங்கிவிட்டனர். இது விடயங்களில் கடந்த காலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகாரம் அளித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது தேசிய மக்கள் சக்தி முகத்தோடு வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியலை அழித்திடும் அரசியலை வேகப்படுத்திட முகாம் அமைத்து அரசியல் யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமது அரசியலுக்கு எதிரானவர்கள் என நினைப்பவர்களை அடக்குவதற்கு இனவாத சாயம் பூச முற்படுவதோடு இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தையும் பாவிக்க தயங்க மாட்டார்கள். இதன் மூலம் தமிழர்களை அரசியல் நீக்கம் செய்வதே இவர்களது நோக்கம் எனலாம். நீண்ட கால இன அழிப்புக்கும், இறுதி இனப்படுகொலைக்கும், நில ஆக்கிரமிப்புக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கும், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்வதற்கும், பேரினவாத மதவாதிகள் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் காரணமாக இருந்தவர்கள் தற்போது மேடை அமைத்து நீலிக்கண்ணீர் வடித்து எங்களுக்கு வாக்களித்தால் உங்களின் கண்ணீரை துடைப்போம் என்று கூறுவது மீண்டும் மீண்டும் தமிழர்களை அழிவுக்குள் தள்ளுவதற்கே. எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முதலை கண்ணீர் வடிப்பவர்களையும், தனது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் துரோகம் செய்பவர்களையும், அற்ப சலுகைகளுக்காக மறைமுகமாக தமிழர்களின் தேசியத்துக்கு எதிராகவும் செயல்படும் அரசியல் துரோகிகளையும் அடையாளம் கண்டு துடைத்தெறிந்து தமிழர் நிலம் காக்கவும் தேசியம் காக்கவும் துணிச்சலோடு குரல் எழுப்புவோர்க்கு எமது வாக்கு பலத்தை வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். தேசத்தின் ஒற்றுமையே தேசியத்தின் வலிமை என்பதை நினைவில் கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212759
3 months 2 weeks ago
23 APR, 2025 | 04:37 PM துருக்கியை தொடர்ச்சியாக பல பூகம்பங்கள் தாக்கியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒருசில நிமிடங்களில் மர்மரா கடலோர பகுதியில் பல பூகம்பங்கள் உணரப்பட்டுள்ளன என துருக்கியின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இஸ்தான்புலை தாக்கியுள்ள பூகம்பமே பெரியது ( 6.2) இதன் தாக்கம் பல பகுதிகளில் உணரப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்தான்புலின் புயுக்செக்மேஸ் மாவட்டத்தை மூன்று பூகம்பங்கள் தாக்கியுள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இணையத்தளம் செயல்இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சேதமடைந்த கட்டிடங்களிற்குள் செல்லவேண்டாம் என இஸ்தான்புல் அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/212747
3 months 2 weeks ago
RESULT 41st Match (N), Hyderabad, April 23, 2025, Indian Premier League Sunrisers Hyderabad 143/8 Mumbai Indians (15.4/20 ov, T:144) 146/3 MI won by 7 wickets (with 26 balls remaining)
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,ANI 23 ஏப்ரல் 2025, 16:14 GMT புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்துகொண்டனர். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின் பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார். "தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது" என அவர் கூறினார். பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை, நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாற்றம் இன்றியும் கைவிடும் வரை இது தொடரும் என விக்ரம் மிஸ்ரி கூறினார். "அட்டாரி ஒருங்கிணைந்த எல்லை சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படும். உரிய ஆவணங்களுடன் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வந்தவர்கள் மே1 ம் தேதிக்கு முன்னதாக திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்." "சில நிமிட தாமதத்தால் உயிர் தப்பினோம்" - பஹல்காமுக்கு சென்ற தமிழ்நாட்டு பயணிகள் கூறியது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் பஹல்காம்: தாக்குதலுக்குப் பிறகு எப்படி இருக்கிறது? - நிலைமையை விவரிக்கும் 15 புகைப்படங்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "பேல்பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என் கணவரை கொன்று விட்டனர்" - காஷ்மீர் தாக்குதலில் மனைவி கண்முன்னே கடற்படை அதிகாரி கொலை5 மணி நேரங்களுக்கு முன்னர் தூதரகங்களில் நடவடிக்கைகள் குறைப்பு பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,அமைச்சரவை கூட்ட முடிவுகள் குறித்து வெளியுறவு செயலாளர் விளக்கம் மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக விக்ரம் மிஸ்ரி விவரித்தார். "பாகிஸ்தான் குடிமக்கள் சார்க் விசா திட்டத்தின் கீழ் இனி இந்தியாவில் பயணிக்க முடியாது. இதற்கு முன்னதாக பெற்ற விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும். இந்த விசாவின் கீழ் இந்தியாவுக்குள் வந்த அனைவரும் உடனடியாக 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் நாட்டை விட்டு வெளியேற ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இந்த ஆலோசகர்களுக்கான உதவி அதிகாரிகள் பணியிடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மே 1ம் தேதி முதல் தூதரகங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 55 லிருந்து 30 ஆக குறைக்கப்படும். நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆலோசனைக்குப் பின், பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0453vxp17no
3 months 2 weeks ago
23 APR, 2025 | 04:02 PM “புத்தகங்களே மிகவும் அமைதியான மற்றும் நிலையான நண்பர்களாவார்கள். அதேபோல் அவை புத்திசாலியான ஆலோசகர்கள் மற்றும் பொருமையான ஆசிரியர்களும் கூட” - சார்ல்ஸ் வில்லியம் எலியட் (Charles William Eliot) இன்று, சர்வதேச புத்தக தினம் ஆகும். புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம், சர்வதேச புத்தக தினம் கொண்டாடப்படுகின்றது. வாசிப்பு ஒன்றே மனிதனை பூரணப்படுத்தும். நல்ல புத்தகங்களே நல்ல நண்பர்கள் என்பார்கள். ஆக…. மனிதன் பலதரப்பட்ட புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளவும், தன் மனநலனை மேம்படுத்துவதற்கும் உதவுவது நல்ல புத்தகங்களே என்றால் அது மிகையல்ல. இப்படி, மனிதனின் வாழ்வை ஒழுங்குபடுத்தக்கூடிய புத்தகங்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படுவதே சர்வதேச புத்தக தினம் ஆகும். அந்த வகையில், சர்வதேச புத்தக தினத்தின் ஆரம்பம் 1995ஆம் ஆண்டு ஆகும். புத்தகங்கள் பற்றி எடுத்துரைக்கும் பொருட்டு, உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் அந்த ஆண்டு தொடங்கிய நிலையில், ஏப்ரல் 23ஆம் திகதியை யுனெஸ்கோ அமைப்பு, உலகளவில் உள்ள எழுத்தாளர்களைக் கொண்டாடும் நாளாக அறிவித்தது. இந்த நாள் உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளை குறிக்கும் வகையிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகளவில் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்களான மாரிஸ் ட்ரூன், ஹால்டோர் கே.லக்ஸ்னஸ், விளாடிமிர் நபோகோவ் மற்றும் மெனுவல் மெஜியா வலேஜோ ஆகியோரின் பிறந்தநாளாகவும் இந்த நாள் அமைந்துள்ளது. இந்த புகழ் பெற்ற எழுத்தாளர்கள் உலகை விட்டு சென்றாலும், அவர்கள் இலக்கியத்திற்கு அளித்த மகத்தான பங்களிப்பு தலைமுறை தலைமுறையாக புத்தக வாசகர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்து வருகிறது. புத்தக வாசிப்பு என்பது, வாழ்க்கையை அழகாக மாற்றக்கூடியது. புதிய புதிய சொற்களை கற்க முடியும். இதனால் உங்களின் சொற்களஞ்சியம் கணிசமாக விரிவடையும். நாம், புதிய சொற்களை கற்கும் போது, அறிவு மேம்பட்டு மொழி பற்றிய தெளிவான புரிதல் கிடைக்கும். இதனால் எழுத்துத் திறனும் மேம்படும். ஞாபக சக்தியை மேம்படுத்தவும், மன அமைதியைப் பெறவும் கூட, புத்தக வாசிப்பே சிறந்த வழியாகும். எப்போது பார்த்தாலும், கணினியிலும், கைபேசியிலும் மூழ்கிக் கிடப்பவர்களும், மன அழுத்தத்தால் தவிப்பவர்களும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை, நல்ல புத்தகங்களை வாசிக்க ஒதுக்கினால், மனம் அமைதியாகி, புத்துணர்வு ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம். ஆகவே, புத்தகம் மனித குலத்தின் அறிவுச் சொத்து. அதனை உணர்ந்து வாசிப்புத் திறனை மேம்படுத்துவோம். வாழ்க்கையை, சிறப்புடனும், பயனுள்ள வகையிலும் கழிக்க, சுவாசிக்கும் வரை வாசிப்போம். https://www.virakesari.lk/article/212732
3 months 2 weeks ago
இலங்கையில் இன்றளவும் கூட இந்த சொல் பாவனையில் இல்லை. டொமினிக் ஜீவா போன்றோரிடம் நேரடியாக பழகிய போதும், சண்முகதாசன் போன்றோரை பற்றி வாசித்து, கேட்டறிந்ததிலும் இவர்கள் தம்மை தலித்கள் என்றோ, தலித்திய போராளிகள் என்றோ சுய அடையாளப்படுத்தவோ, சமூகம் அவ்வாறு அடையாளபடுத்தவோ இல்லை. தமிழ் நாட்டுக்கே அம்பேத்கருக்கு பின்பு வந்த சொல்தான் தலித். அதை கீழே விளக்குகிறேன். எதிலும் தமிழ் நாட்டை பார்த்து குறி சுட்டு கொள்வதில் சோபா சகதி, வரதராஜ பெருமாள் போன்றோருக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு. அதன் ஒரு வெளிப்பாடே இது. இன்றளவும் இலங்கையில் இருந்து, இலங்கைக்காக எழுதும் வடக்கு, கிழக்கு எழுத்தாளர்கள் இந்த சொல்லை அதிகம் பாவிப்பதில்லை. மலையக, மேலக எழுத்தாளரிடம் உண்டு - தமிழ்நாட்டு சாதிய அமைப்பு அப்படியே அவர்களிடம் தொடர்வதால் அது லொஜிக்கலானதும் கூட.
3 months 2 weeks ago
– நவீனன் (சிறிலங்காவில் இனப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் மொழி வெறி என்பது தான் அடிப்படைக் காரணம் என்றாலும், தற்போது ஆளும் அனுர அரசும் சிங்கள மொழிக்கே தொடர்ந்தும் முன்னுரிமை கொடுத்து வருகிறது) தமிழர் தாயகத்தில் உள்ள நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக தற்போதய அனுர அரசும் திட்டமிட்டு சிங்கள மயப்படுத்தி வருகின்றது. அதன் ஒரு வெளிப்பாடாகவே இந்தியப் பிரதமர் மோடியின் வருகையின் போது தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டது.1956 ம் ஆண்டில் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் தனிச்சிங்கள சட்டமே ஈழத்தில் நீண்ட காலமாக நடக்கும் இனப் போராட்டத்தின் மூல காரணி என்பதை இந்த அரசும் மறந்து போய்விட்டது போல தோன்றுகிறது. மோடிக்கு தமிழில் வரவேற்பு இல்லை: இந்தியப் பிரதமர் இலங்கைக்கு ஏப்ரல் 4 இல் வருகை தந்த வேளை தமிழ் வரவேற்பு பதாகைகள் எங்குமே வைக்கப்பட இல்லை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ இலங்கைப் பயணத்திற்காக கொழும்பில் வந்தடைந்த போது, தலைநகர் முழுவதும் பெரிய விளம்பரப் பலகைகள் மற்றும் வரவேற்புப் பதாகைகள் காணப்பட்டன. ஆனால் தமிழ் மொழி உள்ளடக்க வரவேற்பு பதாகைகள் இருக்கவே இல்லை. தமிழ் உலகின் பழமையான வாழும் மொழி, மற்றும் இந்திய பாரம்பரியத்தின் புதையல் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புகள் உட்பட, மோடி மீண்டும் மீண்டும் தமிழ் மொழியின் மீதான அபிமானத்தைப் பாராட்டிய போதிலும், இலங்கை அரசு அதன் செய்தியில் இந்த உணர்வுகளை முழுமையாக புறக்கணித்ததாகத் தோன்றியது. அத்துடன் மத்திய கொழும்பில் கட்டப்பட்ட முக்கிய பதாகைகள் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. சிறிலங்கா நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான தமிழை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருந்தது. இலங்கையில் இந்திய முதலீடு அதிகரித்து வரும் நிலையில் மோடியின் வருகை நிகழ்ந்துள்ளது. இதில் எரிசக்தித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை அடங்கும். அவற்றில் பல தமிழர் தாயகத்தில் மையப்படுத்திய நிலையில் உள்ளன. ஆயினும் இலங்கையின் வட-கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகமே என்பதனை புறக்கணிக்க இந்த அனுர அரசும் முயலுகின்றது. 1956 தனிச் சிங்களம் சட்டம் : ஈழத்திலும் நீண்ட காலமாக நடக்கும் இனப் போராட்டத்தின் மூல காரணியும் மொழியே ஆகும். தனிச் சிங்களம் மட்டும் சட்டம் (Sinhala Only Act) அதிகாரபூர்வமாக 1956 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழியாக (Official Language Act) அறிவிப்பின் பின்னரே தமிழ் மக்கள் கொடுமையாக அரசால் ஓடுக்கப்பட்டனர். தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. நீண்ட காலமாக பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. அரசுப் பதவிகளுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது.ஆயினும் 1936 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரிகளான என். எம். பெரேரா, பிலிப் குணவர்தனா போன்றவர்கள் ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களம், மற்றும் தமிழ் ஆகியவற்றை ஆட்சிமொழிகளாக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். நவம்பர் 1936 இல், ‘இலங்கைத் தீவு முழுவதும் உள்ளாட்சிகள் மற்றும் காவல்துறை நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளிலேயே வழக்குகள் நடத்தப்பட வேண்டும்’ மற்றும் ‘காவல் நிலையங்களில் சாட்சிகளின் மொழிகளிலேயே வழக்குகள் பதியப்பட வேண்டும்’ போன்ற சட்டமூலங்கள் அரசாங்க சபையில் கொண்டுவரப்பட்டு சட்டச் செயலாளருக்கு மேலதிக ஆணைக்காக அனுப்பப்பட்டடன. 1944 இல் ஜே. ஆரின் இனவாதம்: ஆனால் 1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்தனா ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை மட்டுமே அதிகாரபூர்வ மொழியாக்க வேண்டும் என அரசாங்க சபையில் கோரினார். இதனூடகவே இனவாதம் இலங்கையில் வேரூன்றியது. ஆனாலும் ஆங்கிலம் தொடர்ந்து 1956 வரை ஆட்சி மொழியாக இருந்து வந்தது. 1956இல் சிங்கள மொழி அரச கரும மொழியானது மட்டுமன்றி இந்த சட்ட மூலமே தீவெங்கினும் வாழ்ந்து வந்த சிங்கள –தமிழ் இனங்களிடையே முரண்பாடுகளை உருவாக்கக் காரணமாயிற்று. இதன் பின் தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்குள்ள அரச நிறுவனங்களில் பணிகள் முடக்கப்பட்டன. தந்தை செல்வா தலைமையில் போராட்டங்கள்: தனிச் சிங்கள சட்டமூலத்தின் காரணமாக அரசுப்பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இச்சட்டத்தினை தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் எதிர்த்தனர்.ஆயினும் தமிழர் தரப்பில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழர் பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன. இந்தப் போராட்டங்களையடுத்தே பண்டாரநாயக்கா 1958 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க திருத்தச் சட்டமொன்றை கொண்டு வந்ததுடன் தமிழ் மொழிக்கு சில விட்டுக்கொடுப்புகளை வேண்டா வெறுப்பாக ஏற்படுத்தினார். ஆயினும் இத்திருத்தங்கள் வெறும் கண்துடைப்பாகவே இருந்தன. அன்று தொடங்கிய ஈழத் தமிழரின் போராட்டம் இன்னமும் ஓயவில்லை. எத்தனையோ இனப்படுகொலைகள் தமிழர் தாயகம் மீது நிகழ்த்தப்பட்டும், சர்வதேசம் இன்னமும் கண்ணை மூடிக் கொண்டே உள்ளது. கிழக்கு பல்கலைகழத்தில் சிங்கள மயம்: இத்தனை ஆண்டுகளாக தமிழர்கள் வஞ்சிக்கப்பட்ட போதும் இன்னமும் சிங்கள அரசு அதனது நிலையை மாற்றவில்லை என்பது மிகவும் கவலைக்கிடமான விடயமாகும்.தற்போதைய கிழக்கு பல்கலைக்கழகத்தின் மேல் சபையான பேரவையின் (University Council) 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்கள உறுப்பினர்களை இந்த அரசால் நியமித்திருக்குகின்றார்கள்.கண்துடைப்புக்காக வெறும் 5 இடங்களுக்கு தமிழ் உறுப்பினர்களும் 3 இடங்களுக்கு முஸ்லிம் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எதிர் காலத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் தெரிவு, விரிவுரையாளர்களை அமர்த்தவும் நீக்கவும் அதிகாரமுள்ள பேரவையில் சிங்கள உறுப்பினர்கள் முதல் முறையாக ஆதிக்கம் செலுத்த இருக்கின்றார்கள்.இதன் தொடர்ச்சியாக கிழக்கு பல்கலை கழகத்திற்கு மிக விரைவில் சிங்கள துணைவேந்தர் ஒருவரை நியமிக்க இருக்கின்றார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.இது போதாதென்று வவுனியா பல்கலைக்கழக பேரவையின் 7 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்களும் 3 தமிழர்களும் 1 முஸ்லிம் பிரதிநிதியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். யாழ் பல்கலைகழக அவலம்: சிங்கள மயமாகி வரும் யாழ்ப்பாண பல்கலை கழக பேரவையின் 15 வெளிவாரி உறுப்பினர்களில் 3 சிங்கள உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இது தவிர கிழக்கு மாகாணத்தை குறி வைத்திருக்கும் ஜேவிபி சிங்கள ஆளுநருக்கு மேலதிகமாக அதன் பிரதம செயலாளராகவும் சிங்கள அதிகாரியை நியமித்துள்ளது. அத்துடன் கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழுவின் தலைவராகவும் சிங்கள அதிகாரியே நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர் காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் எந்தவொரு முதலமைச்சருக்கும் பொறுப்பு கூற வேண்டிய அவசியம் 13 ஆம் திருத்தத்தின் கீழ் இந்த அதிகாரிகளுக்கு இருக்க போவதில்லை. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கே பொறுப்பு கூற வேண்டிய கட்டாயம் இல்லாத நிர்வாக அலகை ஜேவிபி உருவாக்கி வருகின்றது. கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு வழமை போல சிங்கள அதிகாரிகளே அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்திற்கும் சிங்கள அதிகாரி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.சிங்கள ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டுள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கும் கல்கமூவ சாந்தபோதி தேரர் உட்பட்டவர்களுடன் தொடர்புடைய சிங்கள பிரதேச செயலாளர் ஒருவரே நியமிக்க பட இருக்கின்றார். வன்னி மாவட்டத்தில் ஜேவிபியில் போட்டியிட்டு இரு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையிலும் தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட சிங்கள உறுப்பினரே ஒருங்கிணைப்பு குழு தலைவராக்கப்பட்டள்ளார்.இவ் நியமனங்கள் ஊடக வவுனியா வடக்கு தமிழ் கிராமங்களின் எல்லைக்கோட்டின் வழி ஊடக நகர்ந்து மணலாறு சிங்கள குடியேற்றங்களை இணைத்து பரவும் பரந்த குடியேற்றத்தினை செறிவாக்க முயற்சிக்கின்றார்கள் போல் உள்ளது. இது போததென்று 27 பேர் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர் பட்டியலில் வெறும் இரண்டு தமிழ் அதிகாரிகளுக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது.அரசாங்கத்திற்கு சொந்தமான 52 அரச நிறுவனங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள தலைமை பதவி நியமனத்திலும் எந்தவொரு தமிழ் அதிகாரிகளுக்கும் இடம் வழங்கப்படவில்லை. அதே போல அரசாங்கத்தின் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உட்பட அரச கட்டமைப்புகளிலும் தமிழ் அதிகாரிகளுக்கு போதிய பிரதிநித்துவம் கிடைக்கவில்லை. 50 நாடுகளில் இயங்கும் இலங்கையின் வெளிநாட்டு தூதுவராலயங்களின் தலைமை பதவிகளுக்கும் வெளிநாட்டு சேவையிலுள்ள எந்த தமிழ் அதிகாரிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெளிநாட்டு சேவையுள்ள திறமையுள்ளோருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படும் என ஜே.வி.பி அறிவித்திருந்துள்ள நிலையில் அதற்கு மாறாக தங்கள் கூட்டாளிகளை நியமித்து வருகின்றது. ஆனால் இதிலும் ஜே.வி.பி யில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை விசேடமாக திரு அனுரா குமார திஸ்ஸநாயக்க நியமித்துள்ள ‘Clean Sri Lanka’ செயலணியிலும் தமிழ் அதிகாரிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுல்லா ஆலோசனை சபையிருக்கும் கூட தமிழ் பிரதிநித்துவம் முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசியல் நியமனங்கள் ஒன்றும் புதிய விடயமல்ல . ஆனால் இலங்கையராக ஒன்றிணைவோம் என பேசும் ஜேவிபி காலத்தில் தான் இது மோசமான நிலையை எட்டியுள்ளது.இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் திறமை அடிப்படையில் அரசியல் வேறுபாடு கடந்து Equality, Diversity, and Inclusion (EDI) தத்துவங்களை உள்வாங்கி வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்கும் அடிப்படை விடயத்தில் தவறிழைத்து விட்டு அபிவிருத்தி மற்றும் ஊழல் பற்றி பேச முடியாது. ஆனால் அபிவிருத்தி மற்றும் ஊழல் என வெறும் வாயால் பேசும் ஜேவிபி எல்லாவிதமான அசிங்கங்களையும் செய்கின்றது. இங்கு வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்கள் உட்பட அரச நிர்வாக கட்டமைப்பில் சிங்கள அதிகாரிகள் பணியாற்ற முடியாது என்று வாதிட முடியாது. போட்டி தேர்வு /நேர்முகம் மூலம் திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் யாரும் எங்கும் பணியாற்ற முடியும்.ஆனால் குறித்த இன /சமூக பிரிவை சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் வாய்ப்புகளை மறுப்பதும் திட்டமிட்ட ரீதியில் நிர்வாக கட்டமைப்புகளை சிங்கள மயப்படுத்துவதும் அருவருக்க தக்க செயல்களாகும். கடந்த 70 ஆண்டுகளாக தொடரும் இந்த அருவருக்க தக்க பாரம்பரியத்தை ஜே.வி.பி.யும் வெளிப்படையாக தொடருகின்றது. ஆனால் வெறும் வாயில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக ஜே.வி.பி அலம்புகின்றது. https://thinakkural.lk/article/317114
Checked
Fri, 08/08/2025 - 21:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed