புதிய பதிவுகள்2

ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி

3 months 2 weeks ago
22 APR, 2025 | 08:58 PM தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் இன்று (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் சில சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கிடைக்கப்பெற்ற தகவலின் படி, பஹல்காமில் உள்ள சாலைக்கு அப்பாற்பட்ட புல்வெளியான பைசரன் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். "பைசரானில் சுற்றுலாப் பயணிகள் மீது இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எங்கள் அறிக்கைகள் கூறுகின்றன" என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். பைசரன் பகுதிக்கு கால் நடையாக மட்டுமே செல்ல முடியும். இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். சுற்றுலாப் பருவத்தில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீஸ் குழு, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காயமடைந்த சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியிலும், தாக்குதல் நடத்தியவர்களை கண்டறியும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/212684

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

3 months 2 weeks ago
இப்படீயே நல்ல நாள் குறித்து ர் வருசம் முடிஞ்சிடும் ...இப்ப இன்னுமொரு நாடகம் குரங்கை இரண்டாம் முறைகணக்கெடுப்பாம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

3 months 2 weeks ago
ரணிலுக்கு நாள் குறித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்து குறித்து வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/317189

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 2 weeks ago
கொல்கத்தாவை சகலதுறைகளிலும் விஞ்சிய குஜராத் 39 ஓட்டங்களால் வெற்றிபெற்றது Published By: VISHNU 22 APR, 2025 | 12:30 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (21) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 39ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை சகலதுறைகளிலும் விஞ்சிய குஜராத் டைட்டன்ஸ் 39 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது. இந்த வெற்றியில் குஜராத் டைட்டன்ஸின் முன்வரிசை வீரர்களான அணித் தலைவர் ஷுப்மான் கில், சாய் சுதர்மன், ஜொஸ் பட்லர் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் சிறந்த களத்தடுப்புடன் கூடிய துல்லியமான பந்துவீச்சும் பிரதான பங்காற்றின. இதுவரை 8 போட்டிகளில் 6 வெற்றிகளை ஈட்டிய குஜராத் டைட்டன்ஸ் 12 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முன்னிலையில் இருக்கிறது. நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 7ஆம் இடத்தில் இருக்கிறது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைப் குவித்தது. சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் ஆகிய இருவரும் அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்து முதலாவது விக்கெட்டில் 74 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். முதலாவதாக ஆட்டம் இழந்த சாய் சுதர்மன் 36 பந்துகளில் 6 பவுண்டறிகள் ஒரு சிக்ஸுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து ஷுப்மான் கில், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷுப்மான் கில் 55 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 90 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அடுத்து களம் புகுந்த ராகுல் தெவாட்டியா ஓட்டம் பெறாமல் வந்த வழியே திரும்பிச் சென்றார். ஜொஸ் பட்லர் 23 பந்துகளில் 8 பவுண்டறிகள் உட்பட 41 ஓட்டங்களுடனும் ஷாருக் கான் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. கொல்கத்தாவின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்பித்திலிருந்து குஜராத் பந்துவீச்சாளர்களிடம் சவாலை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13ஆவது ஓவரில் 4ஆவது விக்கெட்டை இழந்தபோது 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அணித் தலைவர் அஜின்கியா ரஹானே மாத்திரம் சற்று தாக்குப் பிடித்து 36 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தார். அண்ட்றே ரசல் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் மேலும் 2 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. மத்திய வரிசையில் இம்ப்பெக்ட் வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ப்ராசித் கிரிஷ்ணா, ராஷித் கான் ஆகிய இருவரும் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்தனர். ஆட்டநாயகன்: ஷுப்மான் கில் https://www.virakesari.lk/article/212590

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
துருக்கி, ரஸ்சியன், உக்ரைன் காரியள் என்றாலும் ஓகேயா… ஓம் எண்டால், டக்கெண்டு சொல்லுங்கோ. 2’ம் கலியாணத்தை ஜாம்… ஜாம்… என்று நடத்தி விடலாம். 😂 ஆனால் ஒண்டு… சீதனத்தை, நீங்கள்தான் கொடுக்க வேண்டி வரும். 🤣

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நேற்றைய போட்டி மாதிரியே போய்க்கொண்டிருக்கு. நாமளும் அது கேள்வியைக் கேட்போம். 200 அடிப்பார்களா அல்லது டேல் ஸ்டெயின் விரும்பினமாதிரி 300ஆ 😁 9 பரிமாற்றங்களில் 82 ஓட்டங்கள். முக்கியமாக விக்கட் இழப்பின்றி. பூரான் இனித்தான் வரப்போறான் என்று நினைத்தாலே, ஜிகு ஜிகு என்று இருக்கு.

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
ஆமாம் உண்மை தான்,.நான் இலங்கையில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். பாடசாலைக்கு போக முன்னம். புகையிலை கண்டு மிளகாய். கன்றுகளுக்கு தண்ணீர் வரத்து விட்டு தான் ஓடி ஓடி பாடசாலைக்கு போவதுண்டு இங்கே திருமணத்தின் பின்னர் இருபது ஆண்டுகள் இரண்டு வேலை செய்தேன் எந்தவொரு பாதிப்புமில்லை நன்றாக தான் இருக்கிறேன் ...இன்னும் முப்பது வருடங்கள். இருபேன். என்று சொல்லுகிறார்கள் அது தான் எங்கேயும் அகப்பட்டால். ஒரே அமுக்கில் பிடிக்கும் எண்ணம் உண்டு” 😂😀

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அதுதானே. பிரித்தி கோவிச்சுக்கிட்டாவோ. டெல்லி களத்தடுப்பை தெரிவு செய்திருக்கினம். டெல்லி அணிக்கு, துஸ்மந்த சமீர விளையாடுகிறார்.

இந்திய உயர்ஸ்தானிகர் - ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சந்திப்பு

3 months 2 weeks ago
22 Apr, 2025 | 01:09 PM மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே.வி.பி. ) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் - ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சந்திப்பு | Virakesari.lk

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் சற்குணதேவிக்கு எதிரான பொலிஸாரின் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன காரணமின்றி மகன் கைது - கஜேந்திரகுமார்

3 months 2 weeks ago
22 Apr, 2025 | 04:39 PM தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் எந்த வித காரணமும் இன்றி அவரது இளைய மகனை கைதுசெய்துள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார் சற்குணதேவி தனது உறுதியான ஊழல் அற்ற செயற்பாட்டிற்காக பொலிஸாரின் துன்புறுத்தல்களை பல முறை எதிர்கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவி. பருத்திதுறை பிரதேச சபைக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் எனினும் அது நிராகரிக்கப்பட்டது. சில நாட்களிற்கு முன்னர் வேட்பாளருக்கான கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் மருதங்கேணி பொலிஸார் அவருக்கு உத்தரவிட்டிருந்தனர். எனினும் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர் அந்த கூட்டத்திற்கு செல்லவில்லை. இன்று அவரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் ஏன் அவர் அந்த கூட்டத்திற்கு வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.அவர் தான் தற்போது வேட்பாளர் இல்லை என பதிலளித்தவேளை பொலிஸார் அவரை நிந்தித்துள்ளனர் கூட்டத்திற்கு கட்டாயம் சமூகமளிக்கவேண்டு;ம் என தெரிவித்த அவர்கள் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் இளைய மகனை எந்த வித காரணமும் இன்றி கைதுசெய்துள்ளனர். சற்குணதேவி தனது உறுதியான ஊழல் அற்ற செயற்பாட்டிற்காக பொலிஸாரின் துன்புறுத்தல்களை பல முறை எதிர்கொண்டுள்ளார். அவரது கணவர் மகன் மற்றும் எங்கள் கட்சியின் ஏனைய உறுப்பினர்களிற்கு எதிராக பொலிஸார் பலமுறை பொய்வழக்குகளை தாக்கல் செய்த பின்னர் விடுதலை செய்துள்ளனர். தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் சற்குணதேவிக்கு எதிரான பொலிஸாரின் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன காரணமின்றி மகன் கைது - கஜேந்திரகுமார் | Virakesari.lk

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு

3 months 2 weeks ago
22 Apr, 2025 | 05:15 PM உலகளாவிய ரீதியில் நிலவும் வர்த்தக குழப்பங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை (22) நிலவரப்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,500 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், இன்றையதினம் ஒரு பவுண் 22 காரட் தங்கத்தின் விலை 255,000 ரூபாவாகும். ஒரு பவுண் 24 காரட் தங்கத்தின் விலை 277,000 ரூபாவாகும். நேற்று திங்கட்கிழமை (21) ஒரு பவுண் 22 காரட் தங்கத்தின் விலை 246,600 ரூபாவாகும். ஒரு பவுண் 24 காரட் தங்கத்தின் விலை 268,000 ரூபாவாகும். வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு | Virakesari.lk

திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
எந்த சமயத்தில் சேருவதென்றாலும் எப்போதோ முடிவு எடுத்திருக்க வேண்டும். முதியோர் என்ற அடைமொழியின் கீழ் என்ன தான் செய்ய முடியும்? உங்கட பெயர் போகும் பக்கத்து வீட்டுக்காரனின் உயிர் போகும் சம்மதமா?சம்மதமா?
Checked
Fri, 08/08/2025 - 15:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed