3 months 2 weeks ago
யுவர் ஆர்னர் IPL கிரிக்கெட்டு ஒரு சூதாட்டம் அந்த விளையாட்டில் எல்லோராலும் வெற்றி தோல்வியைக் கணிக்க முடியாது ஒருவர் அல்லது இருவர் சரி அதையும் மீறிச் சென்றால் மூன்று அல்லது நான்கு பேரால்தான் எப்போதுமே சரியாகக் கணிக்க முடியும்🤣 . எப்போதும் எல்லோரும் கணிப்பிடும்படி விளையாடினால் சூதாட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடும்.😇 காசு பணம் துட்டு காசு பணம் துட்டு அப்ப டியே ரிப்பீட்டு.😂
3 months 2 weeks ago
துருப்புச் சீட்டாவது விளையாடி சந்தோசமாக இருக்கலாம்..😀
3 months 2 weeks ago
அதான் இன்னொரு திரியில் இந்த படபடப்பை பார்த்தோமே அண்ணை🤣. சீமான் தனித்து நின்று 2026 இல் எத்தனை வாக்கு வீதம் வாங்குவார் என ஒரு அருமை அண்ணனிடம் பந்தயம் கட்ட கோரினேன் - ஆள் எஸ்🤣. பிகு சீமான் கிடக்கட்டும், லா செஷப்பலுக்கு என்ன ஆயிற்று? கூட்டம், கூட்டமாக ஆபிரிக்க, அரேபிய இளைஞர்கள் மொய்த்து நிற்கிறார்கள். தமிழ் கடைகள் அருகில் பார்க்கிங் கிடைக்கவில்லை - கொஞ்சம் தள்ளி போய் பார்க் பண்ணலாம் என போனால் வீதியிலேயெ டெண்ட் அடித்து வாழ்கிறார்கள். காரை அங்கே பார்க் பண்ண பயத்தில் இறங்காமலே வந்து விட்டேன். நீங்களாவது பதட்டபடாமல் பந்தயம் கட்ட தயாரா? செய்வீர்களா? செய்வீர்களா?
3 months 2 weeks ago
பாடசாலை நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை . ......... இப்போதெல்லாம் மாணவர்களுக்கு அடிக்க முடியாது , அன்று நாங்கள் அடி வாங்காத நாளை எண்ணிவிடலாம் . ........ ! 😁 பகிர்வுக்கு நன்றி கவிஞரே ........!
3 months 2 weeks ago
இது நல்லாருக்கு "நாலு பேர்களாக சேர்ந்து போவது மனதுக்கு கொஞ்சமாவது ஆறுதல்"
3 months 2 weeks ago
அன்றைய நாளில் நல்ல பிரபலமான பாடல் .......... ஆனால் என்ன இப்பதான் ரசித்து அனுபவிக்க முடிகிறது . ....... ! 😁
3 months 2 weeks ago
நீங்கள் ஆன்மீகவாதியா? ஆன்மீகத்தவர்கள் தான் சகுனங்களை பார்ப்பார்கள்
3 months 2 weeks ago
இதெல்லாம் மூட நம்பிக்கைக்குள் வராதா?
3 months 2 weeks ago
நாங்கள் தெரிவு செய்யாத அணி தோக்குமென்டுதானே நாங்கள் சொல்ல வேணும் இல்லையா. அதுதானே உலக நியதி. அப்படித்தானே லோகமும் இந்தக் களமும் ஓடிக் கொண்டிருக்கு.😁 கேட்கும் போது நன்றாக இருக்கிறது. நீங்களும் எல்லாத்துக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறீங்கள் போல. ஒருத்தரையும் விடக்கூடாது. எல்லாரையும் ஓடவிடுவோம்.
3 months 2 weeks ago
தோனியின் பங்களிப்பு சிறப்பாக உள்ளதுதான். அவர் களம் இறங்க ஷோ காட்ட வேண்டும் என்பதற்காகவே மற்றவர்கள் சீக்கிரம் அவுட்டாகிறாகிறார்கள் போல்தெரிகிறது. அணிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்.
3 months 2 weeks ago
எப்ப பார்த்தாலும் என்னுடைய கொல்லைக்குள்ளேயே நின்று நந்தன் கும்மியடிக்கிறார் .காலாகாலத்திற்கும் அவர் பக்கத்தில் நின்று புகழ்பாடிப்பாடிப்பிழைப்பதே பிழைப்பாக இருக்கிறது. பொற்கிளி மட்டும்தான் தருகிறார். உள்னள பெரிதாக ஒன்றும் இல்லை.ஏதோ பூர்வஜென்ம பந்தம் போலுள்ளது. அவர்பின்னாலே இழுபடவேண்டி இருக்கிறது.
3 months 2 weeks ago
'சமூகம் என்றால் நாலு பேர்கள்...............' என்று சொல்லுகின்ற ஒரு வழக்கம் இருக்குது தானே......... இது தான் அந்தச் சமூகம்..................🤣. ஆழ்துளைக் கிணற்றுக்குள் தலைகீழாக விழுந்தது போல, அடி எங்கே என்று தெரியாமல் கீழே போய்க் கொண்டிருக்கும் போது நாலு பேர்களாக சேர்ந்து போவது மனதுக்கு கொஞ்சமாவது ஆறுதல்...........🤣. நந்தனும், புலவரும் நாசா ராக்கெட் மாதிரி மேலே மேலே போய்க் கொண்டிருக்கின்றார்கள்.............👍.
3 months 2 weeks ago
கொல்கத்தா அணியின் கடுமையான எதிர் போட்டியினை எதிர்பார்த்த இரசிகர்களுக்கு ஏமாற்றம்தான், அந்த போட்டி முடிந்து போன போட்டி, கொல்கொத்தா அணிக்கும் அது ஒரு முடிந்து போன போட்டியென்றே கருதுகிறேன். காணொளி
3 months 2 weeks ago
இதெல்லாம் தோற்கிற கவலை இல்லை! இவர்கள் விளையாடுவதை பார்த்தால் வேண்டுமென்றே தோற்பதுபோல் இருக்கிறது! வெங்கடேஷ் ஐயருக்கு தனக்கு கப்டன் பதவி தரவில்லையென்ற கோபம்! மற்றய வீரர்களுக்கும் ரஹானேயின் கேப்டன்சியில் அவ்வளவாக விருப்பம் இருப்பதாக தெரியவில்லை! ஒன்பது நல்ல பட்ஸ்மன்களை வைத்துக்கொண்டு இப்படியா 200 ஓட்டங்களை சேஸ் செய்வது!
3 months 2 weeks ago
4 கோடிக்கு தோனியின் பங்களிப்பு ஒரு அணியாக சிறப்பாகவே உள்ளது, சிறந்த விக்கெட் கீப்பர், சிரந்த அணித்தலைமை, இறுதி ஓவர்களில் அதிக ரன் ரேட்டில் துடுப்பாடுபவர் ( சென்னை அணியில் உள்ள வீரர்களில் அதிக ரன் ரேட் கொண்ட வீரராக இருப்பார் என கருதுகிறேன்). அந்த அணிகளிடம் அதற்கான ஆற்றல் இருந்தது (சிறந்த வீரர்கள்), அணியில் ஆற்றல் இல்லை 8 போட்டியில் 2 போட்டி மட்டும் வென்றவர்கள் 6 போட்டியில் 6 இனையும் வெல்வார்கள் என்பது சாத்தியமற்ற விடயம். லக்னோ அணியிடம் சிறந்த துடுப்பாட்டம் மட்டுமே உள்ளது டெல்லி அணி ஒரு சமனிலையான அணி, ஆனால் போட்டி லக்னோவில் நடைபெறுகிறது, உள்ளூர் போட்டிகளில் தோற்கும் அணியில் லக்னோவும் ஒரு அணிதான், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் கேமங் பதானி தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்.🤣
3 months 2 weeks ago
தேங்காய் சீனிவாசன் ஏழெட்டு திரைப்படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். சில படங்களில் வில்லனாகவும் வந்து போயிருக்கிறார். ஆனாலும் அவரது நகைச்சுவை நடிப்பு எனக்குப் பிடிக்கும். ‘மஞ்சள் பூசி தஞ்சம் பொண்ணட ராமா..’ என்ற இந்தப் பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. கோவை சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வர பாடியிருப்பார்கள்.
3 months 2 weeks ago
பெனாத்தல் என கருதினாலும் முழுமையாக எனது கருத்தினை வாசித்தும் பின் பெனாத்தல்தானே என வெறுமனே கடந்து போகாமல் அந்த பெனாத்தல் கருத்திற்கு நேரம் எடுத்து பதிலிட்டமைக்கும் நன்றி. அதிகார உணவுச்சங்கிலியில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் செய்யும் குறுங்கால சுயநல நடவடிக்கைகளும் அதே உணவுச்சங்கிலியில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் தொலைதூர நோக்கின்றி சுயநலனினால் தவறானவர்களை (50000 வாக்குகளால் வெற்றி அடைய செய்தவர்கள்) தெரிவு செய்தமையால் ஒரு சமூகத்திற்கு ஏற்படும் நீண்டகால பாதிப்பு பற்றி கட்டுரை மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளது, அதற்கு பதிலூட்டம் செய்த எனது கருத்தில் சமூகத்தில் அதிகார உயர்மட்டமும் அடிமட்டமும் மட்டும் சுயநலனிற்காக தவறிழைக்கவில்லை அனைத்து மட்டங்களிலும் தவறுள்ளது என்பதே இந்த கருத்தாடல்களின் இரத்தின சுருக்கம் ஆகும்.
3 months 2 weeks ago
இது எப்பிடி தானாச் சேர்ந்த கூட்டம். 19 பேர் LSG என்பது நம்ப முடியவில்லை. உண்மையிலேயே நம்ப முடியவில்லை. அந்த நால்வருக்கும்..... ஓம் சாந்தி சாந்தி!!
3 months 2 weeks ago
கொல்கத்தா அணியின் கதை முடிந்துவிட்டது.
3 months 2 weeks ago
GMT நேரப்படி நாளை செவ்வாய் 22 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 19 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவைப்பிரியன் கந்தப்பு ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
Checked
Fri, 08/08/2025 - 12:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed