புதிய பதிவுகள்2

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 39வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சாய் சுதர்சனின் 52 ஓட்டங்கள், சுப்மன் கில்லின் 90 ஓட்டங்கள், ஜொஸ் பட்லரின் 41 ஓட்டங்கள் என வேகமாக அடித்தாடியதால் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களில் அங்கியா ரகானேயின் 50 ஓட்டங்களைத் தவிர பிற வீரர்கள் ஓட்டங்களை எடுக்கத் திணறியதால் இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

பள்ளிக் கூடம் போகலாம்

3 months 2 weeks ago
அந்த வயதில் அநேகமானவர்கள் உங்களை, என்னைப் போலவே இருந்திருப்பார்கள். கடைக்கு பொருட்களை வாங்கி வரும்படி அனுப்பினால் அதிலும் ஏதாவது அமுக்குவதுண்டு. “இண்டைக்கு சந்தையிலே ஏதும் வாங்க வேணுமோ?” என்று கேட்டாலே போதும், “பெடியனுக்கு ஏதாவது காசு தேவைப் படுது” என்று அம்மாவுக்குப் புரிந்து விடும். என்ன ஒரு ஜம்பத்தைந்து சதம் இருந்தால் போதும். ஒரு மெட்னி ஷோ பாத்து விடலாம். அதுக்காக கீரையில் இரண்டு சதம் மீனில் பத்து சதம்… என்று கணக்குப் போட்டு எவ்வளவு சிரமத்தின் மத்தியில் காசு சேர்த்திருக்கிறேன். இப்போ எல்லாம் கணக்குப் போடுவதில்லை. அம்மா மாதிரி மனைவி இல்லை.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இதைத்தான் நான் நேற்றும் சொன்னேன். முன்னுக்கு இருக்கிற அணிகளில் RCBஜ மட்டும் தானே தெரிவு செய்திருக்கிறம். என்ன, எல்லாம் தோற்ற கவலைதான். எல்லாம் சீக்கிரம் ஆறிடும்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ரஹானே, ரஸ்ஸல்ஸ், வெங்கடேஷ் ஐயர்,ரிங்கு சிங்க் எல்லோருமே ஓவரேட்டட் பிளேயேர்ஸ்! ராகுவாங்சி மட்டும்தான் நல்ல போர்மில் உள்ள பேட்ஸ்மேன்! அவரை ஒன்பதாவதாக அனுப்புகிறார்கள்! அதை ரஹானேயும் நியாயப்படுத்துகிறார்! மொத்தமா கோச்சிங் ஆட்களையும், கேப்டனையும், வெங்கடேஷையும், ரஸ்ஸல்ஸையும், அனுப்பினால் KKR அடுத்தமுறையாவது உருப்பட சாத்தியம் இருக்கிது!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
சரி. எல்லாவற்றையும் மறந்திடுங்க. இப்போ ரசலும் ரிங்குவும் ஒன்றாக நிற்கினம். ரசலும் வந்த உடன ஒரு நாலும் ஒரு ஆறும் விட்டார். நம்பிக்கை துளிர்க்குதா

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
சிராஜ் - போட்ட 18 பந்துகளில் (ஒரு அகலப்பந்தையும் சேர்த்தா 19 பந்துகள்) 11 பந்துகளுக்கு ஓட்டமெதுவும் கொடுக்கவில்லை. எப்பிடி. அதுவும் T20ல்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
போற போக்கில என்ன நடக்கும் என்றே சொல்ல முடியேல. குஜராத்தின் கைதான் ஓங்கியிருக்கு. ஆனால் போட்டி முடியும் வரை அது முடியவில்லை என்பது உண்மையாகுமா.

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

3 months 2 weeks ago
எனக்கு யாழ்.களம் மிக மெதுவாக வேலை செய்கின்றது. ஒவ்வொரு திரியை திறக்கும் போதும் நீண்ட நேரம் (Loading) எடுக்கின்றது. மற்றவர்களுக்கும் இதே பிரச்சினை உள்ளதா.. அல்லது எனக்கு மட்டும்தானா என தெரியவில்லை.

அறிவியல் மாமேதை ஐன்ஸ்டீன் செய்த 3 'தவறுகள்' உலகையே மாற்றிய கதை

3 months 2 weeks ago
@ஏராளன் உங்கள் அதிர்ச்சி புரிகிறது, ஆனால் உள்ளக நேர்மை- integrity இன்னும் பெருமளவானோரில் எஞ்சியிருக்கும் துறையாக விஞ்ஞானத் துறை விளங்குகிறது. அண்மைக்காலத்தில் தனது விஞ்ஞானத் திரிப்பினால் உலகின் கவனத்தை ஈர்த்த ஒருவர் - துரதிர்ஷ்டவசமாக- ஒரு சிறிலங்கன் அமெரிக்கர். https://www.wsj.com/science/university-rochester-ranga-dias-superconductor-misconduct-aa2f9fd4 மிகைக் கடத்திகள் (super conductors) எனப்படும் மின்சாரக் கடத்திகள் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மின்சாரத்தைக் கடத்துவன. இதனாலேயே சாதாரண பயன்பாட்டிற்கு இன்னும் வராமல் இருக்கின்றன. ரங்கா டயஸ் என்ற இந்த பௌதீகவியலாளர், அறை வெப்ப நிலையில் வேலை செய்யும் மிகைக் கடத்தியை தாம் கண்டு பிடித்துள்ளதாக அறிவித்து, விருதுகள் சில பெற்றார். இன்னொரு விஞ்ஞானியுடன் சேர்ந்து ரங்கா டயஸ் செய்த "விஞ்ஞானத் திரிப்பு" சில மாதங்களிலேயே நியூசாகி, ஒரு வருடம் விசாரணையில் இருந்து, இப்போது முழுவதும் நிராகரிக்கப் பட்டிருக்கிறது. இவர் போன்றோரால், அல்லும் பகலும் உழைக்கும் பௌதீகவியலாளர்கள், விஞ்ஞானிகளுக்கும் அவமானம் நேர்ந்திருக்கிறது.
Checked
Fri, 08/08/2025 - 12:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed